Monday, February 4, 2013

DISCLAIMER

கண்ணன் என் இஷ்ட தெய்வம். ஆகையால், நாராயணனான அவனைப் பற்றி எழுத வேண்டும் என்ற ஆவலாலும், அடியேனின் ஆத்ம த்ருப்திக்காகவும் எழுதுகிறேன். மேலும், பல உபன்யாசங்களில் கேட்டவைகளையும், பல்வேறு புத்தகங்களில் படித்தவைகளையும், மனதில் கொள்ள வேண்டும் என்ற ஆவலில் எனக்குத் தெரிந்த எளிய நடையில் பதிவிட்டுள்ளேன். தவறுகள்   இருப்பின் setlur.shanu@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு ஈமெயில் செய்யவும். திருத்திக்கொள்கிறேன். 

பன்னிரு ஆழ்வார்கள், மகாவிஷ்ணுவை ஸேவித்து(தரிசித்து), பெருமாளைப் பாடித்  துதித்த சிறப்பு மிக்க வைணவத் திருத்தலங்களை, "திவ்யதேசம்" எனக் கூறுவர்.  "கண்ணுக்கினியன கண்டோம்" என்ற தலைப்பில் திவ்ய தேசம் மற்றும் பெருமாள் கோவில்கள் சென்று வந்த எனது அனுபவங்களைப் பற்றிய கட்டுரைகள் எனது நினைவிலிருந்து நழுவாமல் இருக்கவே. வளமான வைணவ ஸம்ப்ரதாயங்களை வெளிப்படுத்தும் பயணக் கட்டுரைகள் படிப்பவர்களுக்கும் பயன்படும் என நம்புகிறேன். 

சிலவற்றைப் "படித்ததும் கேட்டதும்" என்று வகைப்படுத்தியிருக்கிறேன். என்னுடைய நண்பர் ஒருவர் வீடு காலி செய்யும் சமயத்தில் தன்னிடமுள்ள மிகப் பழைய நூல்களை, கிழிந்த நிலையில் இருந்த புத்தகங்களை, கடையில் போட்டுவிடப்போவதாயும் வேண்டுமானால் எடுத்துக்கொள்ளுங்கள் என்றும் சொன்னார். அதிலிருந்து படிக்கும் நிலையில் இருந்த சில புத்தகங்களை எடுத்து வந்தேன். நைந்து, கிழிந்த நிலையில் சில புத்தகங்கள் இருந்தன. அவற்றுள் படித்த சிலவற்றையும் பகிர்ந்திருக்கிறேன். ஆலோசனைகள் வரவேற்கப்படும். 

*ஓம் நமோ நாராயணாய*