Sunday, June 8, 2014

ஸ்ரீ நாராயணீயம் - தசகம் 100

ஸ்ரீ நாராயணீயம் - தசகம் 100, ஸ்ரீ நாராயணீயம் 100வது தசகம், ஸ்ரீமந் நாராயணீயம், ஸ்ரீ நாராயணீயம், ஸ்ரீமத் நாராயணீயம், நாராயணீயம், ஸ்ரீமன் நாராயணீயம், Narayaneeyam, Sree Narayaneeyam, Sriman narayaneeyam, Srimad Narayaneeyam

த³ஶகம் -100
கேசாதிபாத வர்ணனை

பட்டத்ரி இந்த அத்தியாயத்தை எழுதியபோது அவர் கண் முன்னால் குருவாயூரப்பனைப் பார்த்தபடி விவரிக்கிறார். ஸ்ரீ நாராயணீயம் "நீண்ட ஆயுள், ஆரோக்கியம், மகிழ்ச்சி" ஆகியவற்றை அளிக்கிறது. 


अग्रे पश्यामि तेजो निबिडतरकलायावलीलोभनीयं
पीयूषाप्लावितोऽहं तदनु तदुदरे दिव्यकैशोरवेषम् ।
तारुण्यारम्भरम्यं परमसुखरसास्वादरोमाञ्चिताङ्गै-
रावीतं नारदाद्यैर्विलसदुपनिषत्सुन्दरीमण्डलैश्च ॥१॥

அக்₃ரே பஶ்யாமி தேஜோ நிபி₃ட₃தரகலாயாவலீலோப₄நீயம்
பீயூஷாப்லாவிதோ(அ)ஹம் தத₃நு தது₃த₃ரே தி₃வ்யகைஶோரவேஷம் |
தாருண்யாரம்ப₄ரம்யம் பரமஸுக₂ரஸாஸ்வாத₃ரோமாஞ்சிதாங்கை₃-
ராவீதம் நாரதா₃த்₃யைர்விலஸது₃பநிஷத்ஸுந்த₃ரீமண்ட₃லைஶ்ச || 1||

1. காயாம்பூக் கொத்துபோல் அழகிய நீலநிற ஒளியை நான் எதிரில் காண்கின்றேன். அதனால் அம்ருத மழையால் நனைந்தவனாய் உணர்கின்றேன். அந்த ஒளியின் நடுவே அழகிய தெய்வீக பாலனின் உருவில், வாலிபத்தினால் மிக்க வசீகரமாய் இருக்கின்ற ஒரு வடிவத்தைப் பார்க்கின்றேன். பேரின்பப் பரவசத்தால் மெய்சிலிர்த்து நிற்கும் நாரதர் முதலியவர்களாலும், அழகிய பெண்களாக உருவம் கொண்டு நிற்கும் உபநிஷத்துக்களாலும் சூழப்பட்டு இருக்கும் தங்களை நான் நேரில் காண்கின்றேன்.

नीलाभं कुञ्चिताग्रं घनममलतरं संयतं चारुभङ्ग्या
रत्नोत्तंसाभिरामं वलयितमुदयच्चन्द्रकै: पिञ्छजालै: ।
मन्दारस्रङ्निवीतं तव पृथुकबरीभारमालोकयेऽहं
स्निग्धश्वेतोर्ध्वपुण्ड्रामपि च सुललितां फालबालेन्दुवीथीम् ॥२||

நீலாப₄ம் குஞ்சிதாக்₃ரம் க₄நமமலதரம் ஸம்யதம் சாருப₄ங்க்₃யா
ரத்நோத்தம்ஸாபி₄ராமம் வலயிதமுத₃யச்சந்த்₃ரகை: பிஞ்ச₂ஜாலை: |
மந்தா₃ரஸ்ரங்நிவீதம் தவ ப்ருது₂கப₃ரீபா₄ரமாலோகயே(அ)ஹம்
ஸ்நிக்₃த₄ஶ்வேதோர்த்₄வபுண்ட்₃ராமபி ச ஸுலலிதாம் பா₂லபா₃லேந்து₃வீதீ₂ம் || 2 ||

2. உமது தலைமுடி கருத்த நிறத்துடன், சுருண்டு, நெருக்கமாகவும், தூய்மையாகவும் விளங்குகின்றது. அழகான முறையில் கட்டப்பட்டிருக்கும் கொண்டையுடன் விளங்குகின்றது. ரத்தினங்களாலும், கண்கள் கொண்ட மயில் தோகைகளாலும் அலங்கரிக்கப்பட்டு, மந்தார புஷ்ப மாலை சுற்றப்பட்டிருக்கும் உமது கேசங்களைக் காண்கின்றேன். வெண்மையான, மேல்நோக்கி இடப்பட்ட அழகிய திலகத்தோடு கூடிய, பிறை நிலாவினைப் போன்ற, மனதிற்கு ரம்மியமான தங்கள் நெற்றியை நான் காண்கின்றேன்.

हृद्यं पूर्णानुकम्पार्णवमृदुलहरीचञ्चलभ्रूविलासै-
रानीलस्निग्धपक्ष्मावलिपरिलसितं नेत्रयुग्मं विभो ते ।
सान्द्रच्छायं विशालारुणकमलदलाकारमामुग्धतारं
कारुण्यालोकलीलाशिशिरितभुवनं क्षिप्यतां मय्यनाथे ॥३॥

ஹ்ருத்₃யம் பூர்ணாநுகம்பார்ணவம்ருது₃லஹரீசஞ்சலப்₄ரூவிலாஸை-
ராநீலஸ்நிக்₃த₄பக்ஷ்மாவலிபரிலஸிதம் நேத்ரயுக்₃மம் விபோ₄ தே |
ஸாந்த்₃ரச்சா₂யம் விஶாலாருணகமலத₃லாகாரமாமுக்₃த₄தாரம்
காருண்யாலோகலீலாஶிஶிரிதபு₄வநம் க்ஷிப்யதாம் மய்யநாதே₂ || 3||

3. உமது கண்கள், கடலின் அலைகளைப் போல் அசைகின்ற புருவங்களால் மனதைக் கவர்வதாய் இருக்கின்றது. இமை மயிர்கள் கருத்து அழகாய் விளங்குகின்றது. நீண்ட சிவந்த தாமரை மலரின் இதழ் போன்ற கருவிழிகளை உடைய தங்கள் பிரகாசிக்கும் இரு கண்கள், தன் கருணை நிரம்பிய பார்வையால் அகில உலகங்களையும் குளிரச் செய்கின்றது. அத்தகைய தங்கள் பார்வை ஆதரவற்ற என்மேல் விழ வேண்டும்.

उत्तुङ्गोल्लासिनासं हरिमणिमुकुरप्रोल्लसद्गण्डपाली-
व्यालोलत्कर्णपाशाञ्चितमकरमणीकुण्डलद्वन्द्वदीप्रम् ।
उन्मीलद्दन्तपङ्क्तिस्फुरदरुणतरच्छायबिम्बाधरान्त:-
प्रीतिप्रस्यन्दिमन्दस्मितमधुरतरं वक्त्रमुद्भासतां मे ॥४॥

உத்துங்கோ₃ல்லாஸிநாஸம் ஹரிமணிமுகுரப்ரோல்லஸத்₃க₃ண்ட₃பாலீ-
வ்யாலோலத்கர்ணபாஶாஞ்சிதமகரமணீகுண்ட₃லத்₃வந்த்₃வதீ₃ப்ரம் |
உந்மீலத்₃த₃ந்தபங்க்திஸ்பு₂ரத₃ருணதரச்சா₂யபி₃ம்பா₃த₄ராந்த:-
ப்ரீதிப்ரஸ்யந்தி₃மந்த₃ஸ்மிதமது₄ரதரம் வக்த்ரமுத்₃பா₄ஸதாம் மே || 4||

4. தங்கள் நாசி எடுப்பாக விளங்குகின்றது. தங்கள் காதுகளை ரத்னமயமான இரு மகர குண்டலங்கள் அலங்கரிக்கின்றது. அவை அசைந்து கன்னங்களில் பிரதிபலிப்பதால், கன்னங்கள் பச்சை மணியால் செய்யப்பட்ட கண்ணாடி போல் விளங்குகின்றது. சிவப்பான கோவைப்பழம் போல் இரு உதடுகள் பிரகாசிக்கின்றது. புன்முறுவல் பூத்த உதடுகளின் இடையே தெரியும் அழகிய வரிசையான பற்கள் மனதைக் கவர்கின்றது. அத்தகைய இனிமையான தங்கள் திருமுகம் என் உள்ளத்தில் தெளிவாகத் தோன்ற வேண்டும்.

बाहुद्वन्द्वेन रत्नोज्ज्वलवलयभृता शोणपाणिप्रवाले-
नोपात्तां वेणुनाली प्रसृतनखमयूखाङ्गुलीसङ्गशाराम् ।
कृत्वा वक्त्रारविन्दे सुमधुरविकसद्रागमुद्भाव्यमानै:
शब्दब्रह्मामृतैस्त्वं शिशिरितभुवनै: सिञ्च मे कर्णवीथीम् ॥५॥

பா₃ஹுத்₃வந்த்₃வேந ரத்நோஜ்ஜ்வலவலயப்₄ருதா ஶோணபாணிப்ரவாலே-
நோபாத்தாம் வேணுநாலீ ப்ரஸ்ருதநக₂மயூகா₂ங்கு₃லீஸங்க₃ஶாராம் |
க்ருத்வா வக்த்ராரவிந்தே₃ ஸுமது₄ரவிகஸத்₃ராக₃முத்₃பா₄வ்யமாநை:
ஶப்₃த₃ப்₃ரஹ்மாம்ருதைஸ்த்வம் ஶிஶிரிதபு₄வநை: ஸிஞ்ச மே கர்ணவீதீ₂ம் || 5||

5. உமது இரு திருக்கரங்களை ரத்தினங்கள் இழைத்த வளையல்கள் அலங்கரிக்கின்றன. உள்ளங்கைகள் சிவந்த தளிர் போன்று காட்சி அளிக்கின்றன. ஒளி வீசும் நகங்களை உடைய விரல்களால் புல்லாங்குழலை எடுத்து, தாமரை போன்ற தங்கள் முகத்தில் வைத்து, இனிமையான நாதத்தால் உலகம் முழுவதையும் குளிரச் செய்கின்றீர்கள். அந்த நாதமாகின்ற அம்ருதத்தால் என் காதுகளை நனைக்க வேண்டும்.

उत्सर्पत्कौस्तुभश्रीततिभिररुणितं कोमलं कण्ठदेशं
वक्ष: श्रीवत्सरम्यं तरलतरसमुद्दीप्रहारप्रतानम् ।
नानावर्णप्रसूनावलिकिसलयिनीं वन्यमालां विलोल-
ल्लोलम्बां लम्बमानामुरसि तव तथा भावये रत्नमालाम् ॥६॥

உத்ஸர்பத்கௌஸ்துப₄ஶ்ரீததிபி₄ரருணிதம் கோமலம் கண்ட₂தே₃ஶம்
வக்ஷ: ஶ்ரீவத்ஸரம்யம் தரலதரஸமுத்₃தீ₃ப்ரஹாரப்ரதாநம் |
நாநாவர்ணப்ரஸூநாவலிகிஸலயிநீம் வந்யமாலாம் விலோல-
ல்லோலம்பா₃ம் லம்ப₃மாநாமுரஸி தவ ததா₂ பா₄வயே ரத்நமாலாம் || 6||

6. மேல் நோக்கி வீசும் கௌஸ்துபம் என்ற மணியின் ஒளியால் உமது கழுத்து சிவந்த நிறத்துடன் அழகாக விளங்குகின்றது. மார்பில், அசையும் முத்து மாலைகளும், ஸ்ரீவத்ஸம் என்னும் மருவும் அழகாகப் பிரகாசிக்கின்றன. வண்டுகள் ரீங்காரம் செய்யும் பல்வகையான பூக்களும், தளிர்களும் கொண்டு கட்டப்பட்ட வனமாலையும், ரத்தின மாலைகளும் அலங்கரிக்கின்றன.

अङ्गे पञ्चाङ्गरागैरतिशयविकसत्सौरभाकृष्टलोकं
लीनानेकत्रिलोकीविततिमपि कृशां बिभ्रतं मध्यवल्लीम् ।
शक्राश्मन्यस्ततप्तोज्ज्वलकनकनिभं पीतचेलं दधानं
ध्यायामो दीप्तरश्मिस्फुटमणिरशनाकिङ्किणीमण्डितं त्वां ॥७॥

அங்கே₃ பஞ்சாங்க₃ராகை₃ரதிஶயவிகஸத்ஸௌரபா₄க்ருஷ்டலோகம்
லீநாநேகத்ரிலோகீவிததிமபி க்ருஶாம் பி₃ப்₄ரதம் மத்₄யவல்லீம் |
ஶக்ராஶ்மந்யஸ்ததப்தோஜ்ஜ்வலகநகநிப₄ம் பீதசேலம் த₃தா₄நம்
த்₄யாயாமோ தீ₃ப்தரஶ்மிஸ்பு₂டமணிரஶநாகிங்கிணீமண்டி₃தம் த்வாம் || 7||

7. உமது திருமேனியில் பூசப்பட்டுள்ள ஐந்து விதமான சந்தனப் பூச்சுக்களால் மக்களை ஈர்க்கின்றீர்கள். அண்டங்கள் யாவற்றையும் உள்ளடக்கி இருந்தாலும், தங்கள் இடை கொடிபோல் மெல்லியதாக இருக்கின்றது. இந்திர நீலக்கல்லைப் போன்ற தங்கள் மேனியில், உருக்கிய தங்கம் போன்ற பீதாம்பரம் ஒளிர்கின்றது. ஒளி வீசும் ரத்தினங்கள் பதித்த ஒட்டியாணத்தாலும், சிறிய மணிகளாலான அரைஞாணாலும் அலங்கரிக்கப்பட்ட தங்களை நாங்கள் தியானம் செய்கின்றோம்.

ऊरू चारू तवोरू घनमसृणरुचौ चित्तचोरौ रमाया:
विश्वक्षोभं विशङ्क्य ध्रुवमनिशमुभौ पीतचेलावृताङ्गौ ।
आनम्राणां पुरस्तान्न्यसनधृतसमस्तार्थपालीसमुद्ग-
च्छायं जानुद्वयं च क्रमपृथुलमनोज्ञे च जङ्घे निषेवे ॥८॥

ஊரூ சாரூ தவோரூ க₄நமஸ்ருணருசௌ சித்தசோரௌ ரமாயா:
விஶ்வக்ஷோப₄ம் விஶங்க்ய த்₄ருவமநிஶமுபௌ₄ பீதசேலாவ்ருதாங்கௌ₃ |
ஆநம்ராணாம் புரஸ்தாந்ந்யஸநத்₄ருதஸமஸ்தார்த₂பாலீஸமுத்₃க₃-
ச்சா₂யம் ஜாநுத்₃வயம் ச க்ரமப்ருது₂லமநோஜ்ஞே ச ஜங்கே₄ நிஷேவே || 8||

8. உமது தொடைகள் பருத்து, திடமாக, அலைமகளின் மனம் கவர்பவையாக, மினுமினுப்பாய் இருக்கின்றன. அதன் அழகினால் உலகம் கலங்கி விடுமோவென்று பீதாம்பரத்தால் மறைக்கப்பட்டவையாய் இருக்கின்றன. முழங்கால்கள், உமது பக்தர்களுக்குத் தேவையான பொருட்களை வைக்கும் சம்புடம் போன்று இருக்கின்றன. அதற்கேற்றாற்போல் பருத்த சதைப் பற்றுடன் கணைக்கால்கள் அழகாய் விளங்குகின்றன. அவற்றை நான் தியானிக்கிறேன்.

मञ्जीरं मञ्जुनादैरिव पदभजनं श्रेय इत्यालपन्तं
पादाग्रं भ्रान्तिमज्जत्प्रणतजनमनोमन्दरोद्धारकूर्मम् ।
उत्तुङ्गाताम्रराजन्नखरहिमकरज्योत्स्नया चाऽश्रितानां
सन्तापध्वान्तहन्त्रीं ततिमनुकलये मङ्गलामङ्गुलीनाम् ॥९॥

மஞ்ஜீரம் மஞ்ஜுநாதை₃ரிவ பத₃ப₄ஜநம் ஶ்ரேய இத்யாலபந்தம்
பாதா₃க்₃ரம் ப்₄ராந்திமஜ்ஜத்ப்ரணதஜநமநோமந்த₃ரோத்₃தா₄ரகூர்மம் |
உத்துங்கா₃தாம்ரராஜந்நக₂ரஹி மகரஜ்யோத்ஸ்நயா சா(அ)ஶ்ரிதாநாம்
ஸந்தாபத்₄வாந்தஹந்த்ரீம் ததிமநுகலயே மங்க₃லாமங்கு₃லீநாம் || 9||

9. உமது திருவடிகளை வணங்குவதே சிறந்த நன்மை பயக்கும் வழி என்று தன் சப்தங்களால் கூறுவது போன்ற கொலுசை நான் தியானிக்கிறேன். ஆசையென்னும் கடலில் மூழ்கிய பக்தர்களின் மனமாகிய மந்தர மலையைத் தூக்கிக் கரையேற்றும் ஆமையைப் போல உமது பாதத்தின் மேல்பாகம் இருக்கின்றது. சற்றே உயர்ந்து சிவந்திருக்கும் நகங்களுடன் கூடிய உமது கால்விரல்கள், நிலவொளி இருட்டைப் போக்குவது போல, உமது பக்தர்களின் துன்பங்களைப் போக்குகின்றன. அவற்றை நான் தியானிக்கிறேன்.

योगीन्द्राणां त्वदङ्गेष्वधिकसुमधुरं मुक्तिभाजां निवासो
भक्तानां कामवर्षद्युतरुकिसलयं नाथ ते पादमूलम् ।
नित्यं चित्तस्थितं मे पवनपुरपते कृष्ण कारुण्यसिन्धो
हृत्वा निश्शेषतापान् प्रदिशतु परमानन्दसन्दोहलक्ष्मीम् ॥१०॥

யோகீ₃ந்த்₃ராணாம் த்வத₃ங்கே₃ஷ்வதி₄கஸுமது₄ரம் முக்திபா₄ஜாம் நிவாஸோ
ப₄க்தாநாம் காமவர்ஷத்₃யுதருகிஸலயம் நாத₂ தே பாத₃மூலம் |
நித்யம் சித்தஸ்தி₂தம் மே பவநபுரபதே க்ருஷ்ண காருண்யஸிந்தோ₄
ஹ்ருத்வா நிஶ்ஶேஷதாபாந் ப்ரதி₃ஶது பரமாநந்த₃ஸந்தோ₃ஹலக்ஷ்மீம் || 10||

10. நாதா! குருவாயூரப்பா! உமது அங்கங்களுள், உம்முடைய பாதங்களே யோகிகளுக்கு மனோகரமானதாய் விளங்குகின்றது. மோக்ஷத்தை அடைந்தவர்களுக்கு இருப்பிடமாய் உள்ளது. பக்தர்களுக்கு வேண்டிய அனைத்தையும் அளிக்கும் கற்பக விருட்சத்தின் தளிர் போன்று அவை இருக்கின்றன. அவை எப்போதும் என் உள்ளத்தில் இருக்க வேண்டும். கருணைக் கடலே! கிருஷ்ணா! அந்தப் பாதங்களானது என் எல்லாத் தாபங்களையும் போக்கி, பேரின்ப வெள்ளமாகிற மோக்ஷத்தை அளிக்க வேண்டும்.

अज्ञात्वा ते महत्वं यदिह निगदितं विश्वनाथ क्षमेथा:
स्तोत्रं चैतत्सहस्रोत्तरमधिकतरं त्वत्प्रसादाय भूयात् ।
द्वेधा नारायणीयं श्रुतिषु च जनुषा स्तुत्यतावर्णनेन
स्फीतं लीलावतारैरिदमिह कुरुतामायुरारोग्यसौख्यम् ॥११॥

அஜ்ஞாத்வா தே மஹத்வம் யதி₃ஹ நிக₃தி₃தம் விஶ்வநாத₂ க்ஷமேதா₂:
ஸ்தோத்ரம் சைதத்ஸஹஸ்ரோத்தரமதி₄கதரம் த்வத்ப்ரஸாதா₃ய பூ₄யாத் |
த்₃வேதா₄ நாராயணீயம் ஶ்ருதிஷு ச ஜநுஷா ஸ்துத்யதாவர்ணநேந
ஸ்பீ₂தம் லீலாவதாரைரித₃மிஹ குருதாமாயுராரோக்₃யஸௌக்₂யம் || 11||

11. உலகிற்கு நாயகனே! உமது மகிமையை அறியாமல் இதில் கூறியவற்றைப் பொறுத்தருள வேண்டும். ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்த ஸ்தோத்திரங்கள் உமது அருளை அளிப்பவையாக இருக்க வேண்டும். ஸ்ரீமன் நாராயணனைப் போற்றிப் பாடியிருப்பதாலும், நாராயணன் என்பவரால் எழுதப்பட்டதாலும், இந்த ஸ்தோத்திரத்திற்கு நாராயணீயம் என்று பெயர். வேதங்களில் கூறப்பட்ட உமது அவதாரங்களையும், லீலைகளையும் வர்ணிக்கின்றது. இந்த ஸ்தோத்திரத்தைப் படிப்பவர்களுக்கும், கேட்பவர்களுக்கும், நீண்ட ஆயுளையும், ஆரோக்கியத்தையும், மகிழ்ச்சியையும் அளிக்க வேண்டும் என்று நம்பூதிரி வேண்ட ஸ்ரீ குருவாயூரப்பனும் தலையை ஆட்டி அங்கீகரித்தார்.


சுபமஸ்து.
ஸ்ரீ குருவாயூரப்பா ரணம்.
ஓம் நமோ நாராயணாய.

Saturday, June 7, 2014

ஸ்ரீ நாராயணீயம் - தசகம் 99

ஸ்ரீ நாராயணீயம் - தசகம் 99, ஸ்ரீ நாராயணீயம் 99வது தசகம், ஸ்ரீமந் நாராயணீயம், ஸ்ரீ நாராயணீயம், ஸ்ரீமத் நாராயணீயம், நாராயணீயம், ஸ்ரீமன் நாராயணீயம், Narayaneeyam, Sree Narayaneeyam, Sriman narayaneeyam, Srimad Narayaneeyam

த³ஶகம் -99
வேத ஸ்துதி 

विष्णोर्वीर्याणि को वा कथयतु धरणे: कश्च रेणून्मिमीते
यस्यैवाङ्घ्रित्रयेण त्रिजगदभिमितं मोदते पूर्णसम्पत्
योसौ विश्वानि धत्ते प्रियमिह परमं धाम तस्याभियायां
त्वद्भक्ता यत्र माद्यन्त्यमृतरसमरन्दस्य यत्र प्रवाह: ॥१॥

விஷ்ணோர்வீர்யாணி கோ வா கத₂யது த₄ரணே: கஶ்ச ரேணூந்மிமீதே
யஸ்யைவாங்க்₄ரித்ரயேண த்ரிஜக₃த₃பி₄மிதம் மோத₃தே பூர்ணஸம்பத்
யோஸௌ விஶ்வாநி த₄த்தே ப்ரியமிஹ பரமம் தா₄ம தஸ்யாபி₄யாயாம்
த்வத்₃ப₄க்தா யத்ர மாத்₃யந்த்யம்ருதரஸமரந்த₃ஸ்ய யத்ர ப்ரவாஹ: || 1||

1. மூவுலகங்களையும் மூன்றடிகளால் அளந்தீர். அதனால் அவை ஐஸ்வர்யங்கள் நிறைந்து விளங்குகின்றது. உலகங்களைத் தாங்கும் விஷ்ணுவான உமது பெருமையை யாரால் விவரிக்க முடியும்? பூமியில் உள்ள மணல் துகள்களை எண்ண முடியுமா? அம்ருத வெள்ளம் ஓடும் உமது இருப்பிடமான வைகுண்டத்தில், உம்முடைய பக்தர்கள் மிகுந்த இன்பத்துடன் வாழ்கிறார்கள். அந்த வைகுண்டத்தை நான் இந்த ஜன்மத்திலேயே அடைய வேண்டும்.

आद्यायाशेषकर्त्रे प्रतिनिमिषनवीनाय भर्त्रे विभूते-
र्भक्तात्मा विष्णवे य: प्रदिशति हविरादीनि यज्ञार्चनादौ ।
कृष्णाद्यं जन्म यो वा महदिह महतो वर्णयेत्सोऽयमेव
प्रीत: पूर्णो यशोभिस्त्वरितमभिसरेत् प्राप्यमन्ते पदं ते ॥२॥

ஆத்₃யாயாஶேஷகர்த்ரே ப்ரதிநிமிஷநவீநாய ப₄ர்த்ரே விபூ₄தே-
ர்ப₄க்தாத்மா விஷ்ணவே ய: ப்ரதி₃ஶதி ஹவிராதீ₃நி யஜ்ஞார்சநாதௌ₃ |
க்ருஷ்ணாத்₃யம் ஜந்ம யோ வா மஹதி₃ஹ மஹதோ வர்ணயேத்ஸோ(அ)யமேவ
ப்ரீத: பூர்ணோ யஶோபி₄ஸ்த்வரிதமபி₄ஸரேத் ப்ராப்யமந்தே பத₃ம் தே || 2||

2. விஷ்ணுவே! தாங்கள் எல்லாவற்றிற்கும் முதலானவர். படைப்பிற்குக் காரணமாய் இருப்பவர். ஒவ்வொரு நொடியும் புதிது புதிதாகத் தோற்றம் அளிப்பவர். யாகங்கள் மற்றும் பூஜைகளில் ஹவிஸ் முதலியவற்றை பக்தியுடன் அளிப்பவர்களும், உமது கிருஷ்ணாவதாரம் போன்ற அவதாரங்களை வர்ணிப்பவர்களும் விரைவிலேயே மகிழ்ச்சியையும், புகழையும் அடைகின்றார்கள். இறுதியில் உம்முடைய இருப்பிடமான வைகுண்டத்தையும் அடைகின்றனர்.

हे स्तोतार: कवीन्द्रास्तमिह खलु यथा चेतयध्वे तथैव
व्यक्तं वेदस्य सारं प्रणुवत जननोपात्तलीलाकथाभि: ।
जानन्तश्चास्य नामान्यखिलसुखकराणीति सङ्कीर्तयध्वं
हे विष्णो कीर्तनाद्यैस्तव खलु महतस्तत्त्वबोधं भजेयम् ॥३॥

ஹே ஸ்தோதார: கவீந்த்₃ராஸ்தமிஹ க₂லு யதா₂ சேதயத்₄வே ததை₂வ
வ்யக்தம் வேத₃ஸ்ய ஸாரம் ப்ரணுவத ஜநநோபாத்தலீலாகதா₂பி₄: |
ஜாநந்தஶ்சாஸ்ய நாமாந்யகி₂லஸுக₂கராணீதி ஸங்கீர்தயத்₄வம்
ஹே விஷ்ணோ கீர்தநாத்₃யைஸ்தவ க₂லு மஹதஸ்தத்த்வபோ₃த₄ம் ப₄ஜேயம் || 3||

3. கவிஞர்களே! நீங்கள் பகவானை எவ்வாறு அறிவீர்களோ, அதுபோல் வேதத்தின் சாரமாய் இருக்கும் அவரையும், பல்வேறு அவதாரங்களில் அவரது லீலைகளையும் போற்றித் துதியுங்கள். அறிஞர்களே! அனைத்து சுகங்ளையும் அளிக்கும் அவரது திருநாமங்களைப் பாடுங்கள். விஷ்ணுவே! நான் உம்மைப் போற்றிப் பாடி மெய்ஞ்ஞானத்தை அடைய வேண்டும்.

विष्णो: कर्माणि सम्पश्यत मनसि सदा यै: स धर्मानबध्नाद्
यानीन्द्रस्यैष भृत्य: प्रियसख इव च व्यातनोत् क्षेमकारी ।
वीक्षन्ते योगसिद्धा: परपदमनिशं यस्य सम्यक्प्रकाशं
विप्रेन्द्रा जागरूका: कृतबहुनुतयो यच्च निर्भासयन्ते ॥४॥

விஷ்ணோ: கர்மாணி ஸம்பஶ்யத மநஸி ஸதா₃ யை: ஸ த₄ர்மாநப₃த்₄நாத்₃
யாநீந்த்₃ரஸ்யைஷ ப்₄ருத்ய: ப்ரியஸக₂ இவ ச வ்யாதநோத் க்ஷேமகாரீ |
வீக்ஷந்தே யோக₃ஸித்₃தா₄: பரபத₃மநிஶம் யஸ்ய ஸம்யக்ப்ரகாஶம்
விப்ரேந்த்₃ரா ஜாக₃ரூகா: க்ருதப₃ஹுநுதயோ யச்ச நிர்பா₄ஸயந்தே || 4||

4. அந்த விஷ்ணுவானவர், தர்மங்களை நிறுவியவர். நண்பரைப் போல உபதேசம் செய்தும், வேலையாள் போல துஷ்டர்களை அழித்தும் இந்திரனுக்குப் பல நன்மைகளைச் செய்தவர். அவரது ஒளிவீசும் பரமபதமான வைகுண்டத்தை யோகசித்தி பெற்றவர்களால் காணமுடியும். சிறந்த பிராம்மணர்கள் பலவிதமாகப் போற்றிப் பாடித் துதித்து அவரது ஸ்தானமான வைகுண்டத்தை விளக்குகின்றனர். அந்த விஷ்ணுவினுடைய பெருமைகளை எப்போதும் மனதில் இருத்தித் தியானியுங்கள்.

नो जातो जायमानोऽपि च समधिगतस्त्वन्महिम्नोऽवसानं
देव श्रेयांसि विद्वान् प्रतिमुहुरपि ते नाम शंसामि विष्णो ।
तं त्वां संस्तौमि नानाविधनुतिवचनैरस्य लोकत्रयस्या-
प्यूर्ध्वं विभ्राजमाने विरचितवसतिं तत्र वैकुण्ठलोके ॥५॥

நோ ஜாதோ ஜாயமாநோ(அ)பி ச ஸமதி₄க₃தஸ்த்வந்மஹிம்நோ(அ)வஸாநம்
தே₃வ ஶ்ரேயாம்ஸி வித்₃வாந் ப்ரதிமுஹுரபி தே நாம ஶம்ஸாமி விஷ்ணோ |
தம் த்வாம் ஸம்ஸ்தௌமி நாநாவித₄நுதிவசநைரஸ்ய லோகத்ரயஸ்யா-
ப்யூர்த்₄வம் விப்₄ராஜமாநே விரசிதவஸதிம் தத்ர வைகுண்ட₂லோகே || 5||

5. தேவனே! வரம்பற்ற உமது மகிமையை அறிந்தவன் பிறந்ததுமில்லை. பிறக்கப் போவதுமில்லை. விஷ்ணுவே! உமது திருநாமங்கள் நன்மையை அளிக்கவல்லது என்றறிந்து அடிக்கடி உமது நாமங்களைச் சொல்லுவேன். மூவுலகிற்கும் மேலுள்ள வைகுண்டத்தில் வசிக்கும் உம்மைப் பலவிதமாகப் போற்றிப் பாடுகின்றேன்.

आप: सृष्ट्यादिजन्या: प्रथममयि विभो गर्भदेशे दधुस्त्वां
यत्र त्वय्येव जीवा जलशयन हरे सङ्गता ऐक्यमापन् ।
तस्याजस्य प्रभो ते विनिहितमभवत् पद्ममेकं हि नाभौ
दिक्पत्रं यत् किलाहु: कनकधरणिभृत् कर्णिकं लोकरूपम् ॥६॥

ஆப: ஸ்ருஷ்ட்யாதி₃ஜந்யா: ப்ரத₂மமயி விபோ₄ க₃ர்ப₄தே₃ஶே த₃து₄ஸ்த்வாம்
யத்ர த்வய்யேவ ஜீவா ஜலஶயந ஹரே ஸங்க₃தா ஐக்யமாபந் |
தஸ்யாஜஸ்ய ப்ரபோ₄ தே விநிஹிதமப₄வத் பத்₃மமேகம் ஹி நாபௌ₄
தி₃க்பத்ரம் யத் கிலாஹு: கநகத₄ரணிப்₄ருʼத் கர்ணிகம் லோகரூபம் || 6||

6. பிரபுவே! எல்லாவற்றிக்கும் முன்பு படைக்கப்பட்ட ஜலமானது, உம்மைத் தன்னுள் தாங்கிக் கொண்டது. பாற்கடலில் பள்ளி கொண்ட கிருஷ்ணா! நீரில் படுத்திருந்த தங்களிடம் எல்லா ஜீவன்களும் இணைந்தன. பிரபுவே! பிறப்பற்ற தங்களது நாபியிலிருந்து ஒரு தாமரை மலர் தோன்றியது. அந்தத் தாமரை மலரே உலகம், அந்த மலரின் இதழ்கள் திக்குகள், மொட்டு மேருமலை என்று முனிவர்கள் கூறுகின்றனர்.

हे लोका विष्णुरेतद्भुवनमजनयत्तन्न जानीथ यूयं
युष्माकं ह्यन्तरस्थं किमपि तदपरं विद्यते विष्णुरूपम् ।
नीहारप्रख्यमायापरिवृतमनसो मोहिता नामरूपै:
प्राणप्रीत्येकतृप्ताश्चरथ मखपरा हन्त नेच्छा मुकुन्दे ॥७॥

ஹே லோகா விஷ்ணுரேதத்₃பு₄வநமஜநயத்தந்ந ஜாநீத₂ யூயம்
யுஷ்மாகம் ஹ்யந்தரஸ்த₂ம் கிமபி தத₃பரம் வித்₃யதே விஷ்ணுரூபம் |
நீஹாரப்ரக்₂யமாயாபரிவ்ருதமநஸோ மோஹிதா நாமரூபை:
ப்ராணப்ரீத்யேகத்ருப்தாஶ்சரத₂ மக₂பரா ஹந்த நேச்சா₂ முகுந்தே₃ || 7||

7. ஜனங்களே! உலகைப் படைத்தது விஷ்ணு என்று நீங்கள் அறியவில்லை. விவரிக்க முடியாத, ஜீவனைக் காட்டிலும் வேறான விஷ்ணுவின் ரூபம் உங்கள் உள்ளத்தில் இருப்பதையும் நீங்கள் அறியவில்லை. மூடுபனி போன்ற மாயையால் மறைக்கப்பட்ட மனதுடன், பெயர்களாலும், உருவங்களாலும் மயங்கி, புலன்களை மகிழ்விக்க மட்டுமே செயல்களைச் செய்கிறீர்கள். அந்தோ! முகுந்தனான கிருஷ்ணனிடத்தில் நாட்டம் இருப்பதில்லை.

मूर्ध्नामक्ष्णां पदानां वहसि खलु सहस्राणि सम्पूर्य विश्वं
तत्प्रोत्क्रम्यापि तिष्ठन् परिमितविवरे भासि चित्तान्तरेऽपि ।
भूतं भव्यं च सर्वं परपुरुष भवान् किञ्च देहेन्द्रियादि-
ष्वाविष्टोऽप्युद्गतत्वादमृतसुखरसं चानुभुङ्क्षे त्वमेव ॥८॥

மூர்த்₄நாமக்ஷ்ணாம் பதா₃நாம் வஹஸி க₂லு ஸஹஸ்ராணி ஸம்பூர்ய விஶ்வம்
தத்ப்ரோத்க்ரம்யாபி திஷ்ட₂ந் பரிமிதவிவரே பா₄ஸி சித்தாந்தரே(அ)பி |
பூ₄தம் ப₄வ்யம் ச ஸர்வம் பரபுருஷ ப₄வாந் கிஞ்ச தே₃ஹேந்த்₃ரியாதி₃-
ஷ்வாவிஷ்டோ(அ)ப்யுத்₃க₃தத்வாத₃ம்ருதஸுக₂ரஸம் சாநுபு₄ங்க்ஷே த்வமேவ || 8||

8. பரமபுருஷா! தாங்கள் ஆயிரக்கணக்கான தலைகளையும், கண்களையும், பாதங்களையும் உடையவர். உலகம் முழுவதையும், அதைத் தாண்டியும் வியாபித்திருப்பவர். ஆனாலும், மிகச் சிறியதான மனதிற்குள்ளேயும் வசிக்கிறீர்கள். முன்பு இருந்தது, இப்போது இருப்பது, இருக்கப் போவது அனைத்தும் தாங்களே. உடல், புலன்கள் ஆகியவற்றில் பிரவேசித்தவராய் இருந்தாலும், அவற்றிலிருந்து விடுபட்டு, ஆனந்தமான பேரின்பத்தையும் தாங்களே அனுபவிக்கின்றீர்.

यत्तु त्रैलोक्यरूपं दधदपि च ततो निर्गतोऽनन्तशुद्ध-
ज्ञानात्मा वर्तसे त्वं तव खलु महिमा सोऽपि तावान् किमन्यत् ।
स्तोकस्ते भाग एवाखिलभुवनतया दृश्यते त्र्यंशकल्पं
भूयिष्ठं सान्द्रमोदात्मकमुपरि ततो भाति तस्मै नमस्ते ॥९॥

யத்து த்ரைலோக்யரூபம் த₃த₄த₃பி ச ததோ நிர்க₃தோ(அ)நந்தஶுத்₃த₄-
ஜ்ஞாநாத்மா வர்தஸே த்வம் தவ க₂லு மஹிமா ஸோ(அ)பி தாவாந் கிமந்யத் |
ஸ்தோகஸ்தே பா₄க₃ ஏவாகி₂லபு₄வநதயா த்₃ருஶ்யதே த்ர்யம்ஶகல்பம்
பூ₄யிஷ்ட₂ம் ஸாந்த்₃ரமோதா₃த்மகமுபரி ததோ பா₄தி தஸ்மை நமஸ்தே || 9||

9. தாங்கள் மூவுலங்களின் வடிவமாக இருக்கின்றீர். ஆயினும், அவற்றைக் கடந்து, தூய்மையான ஞானரூபியாய் விளங்குகின்றீர். உமது மகத்துவம் அளவற்றது. உம்முடைய வடிவத்தில் நான்கில் ஒரு பாகமே எல்லா உலகங்களாகவும் இருக்கின்றன. மற்ற மூன்று பாகங்களும் பேரின்பமயமாக ஜொலிக்கின்றது. அத்தகைய தங்களை நமஸ்கரிக்கின்றேன்.

अव्यक्तं ते स्वरूपं दुरधिगमतमं तत्तु शुद्धैकसत्त्वं
व्यक्तं चाप्येतदेव स्फुटममृतरसाम्भोधिकल्लोलतुल्यम् ।
सर्वोत्कृष्टामभीष्टां तदिह गुणरसेनैव चित्तं हरन्तीं
मूर्तिं ते संश्रयेऽहं पवनपुरपते पाहि मां कृष्ण रोगात् ॥१०॥

அவ்யக்தம் தே ஸ்வரூபம் து₃ரதி₄க₃மதமம் தத்து ஶுத்₃தை₄கஸத்த்வம்
வ்யக்தம் சாப்யேததே₃வ ஸ்பு₂டமம்ருதரஸாம்போ₄தி₄கல்லோலதுல்யம் |
ஸர்வோத்க்ருஷ்டாமபீ₄ஷ்டாம் ததி₃ஹ கு₃ணரஸேநைவ சித்தம் ஹரந்தீம்
மூர்திம் தே ஸம்ஶ்ரயே(அ)ஹம் பவநபுரபதே பாஹி மாம் க்ருஷ்ண ரோகா₃த் || 10||

10. கிருஷ்ணா! குணங்களற்ற தங்கள் வடிவமானது, அடைய முடியாததாய் இருக்கிறது. தூய்மையான இந்த ஸகுண (ஸத்வகுண) ரூபமானது தெளிவாகக் காணக் கூடியதாய் இருக்கிறது. கிருஷ்ணன் முதலிய இந்த ஸகுண ரூபமானது, பேரின்பக் கடலின் அலைகளுக்கு ஒப்பாக இருக்கிறது. எல்லாவற்றிலும் சிறந்ததாய் இருக்கிறது. கல்யாண குணங்களால் மனதைக் கவர்கின்றதாய் இருக்கும் அந்த மூர்த்தியையே நான் நாடி வணங்குகிறேன். குருவாயூரப்பா! அனைத்து நோய்களிலிருந்தும் என்னைக் காப்பாற்ற வேண்டுகிறேன்.

Friday, June 6, 2014

ஸ்ரீ நாராயணீயம் - தசகம் 98

ஸ்ரீ நாராயணீயம் - தசகம் 98, ஸ்ரீ நாராயணீயம் 98வது தசகம், ஸ்ரீமந் நாராயணீயம், ஸ்ரீ நாராயணீயம், ஸ்ரீமத் நாராயணீயம், நாராயணீயம், ஸ்ரீமன் நாராயணீயம், Narayaneeyam, Sree Narayaneeyam, Sriman narayaneeyam, Srimad Narayaneeyam

த³ஶகம் -98
நிஷ்கள பிரம்ம வழிபாடு

यस्मिन्नेतद्विभातं यत इदमभवद्येन चेदं य एत-
द्योऽस्मादुत्तीर्णरूप: खलु सकलमिदं भासितं यस्य भासा ।
यो वाचां दूरदूरे पुनरपि मनसां यस्य देवा मुनीन्द्रा:
नो विद्युस्तत्त्वरूपं किमु पुनरपरे कृष्ण तस्मै नमस्ते ॥१॥

யஸ்மிந்நேதத்₃விபா₄தம் யத இத₃மப₄வத்₃யேந சேத₃ம் ய ஏத-
த்₃யோ(அ)ஸ்மாது₃த்தீர்ணரூப: க₂லு ஸகலமித₃ம் பா₄ஸிதம் யஸ்ய பா₄ஸா |
யோ வாசாம் தூ₃ரதூ₃ரே புநரபி மநஸாம் யஸ்ய தே₃வா முநீந்த்₃ரா:
நோ வித்₃யுஸ்தத்த்வரூபம் கிமு புநரபரே க்ருஷ்ண தஸ்மை நமஸ்தே || 1||

1. இந்த உலகமானது உம்மிடத்திலிருந்து தோன்றி, உம்மால் காக்கப்படுகிறது. தாங்களே உலகவடிவாக இருக்கின்றீர். உம்முடைய ஒளியால் இந்த உலகம் பிரகாசிக்கிறது. மனதிற்கும், வாக்குக்கும் எட்டாத தூரத்தில் இருக்கின்றீர். உம்முடைய உண்மையான வடிவத்தைத் தேவர்களும், முனிவர்களும் கூட அறிய முடியவில்லை. மற்றவர்களால் எப்படி முடியும்? அத்தகைய சிறப்பு வாய்ந்த கிருஷ்ணா! உம்மை நான் நமஸ்கரிக்கிறேன்.

जन्माथो कर्म नाम स्फुटमिह गुणदोषादिकं वा न यस्मिन्
लोकानामूतये य: स्वयमनुभजते तानि मायानुसारी ।
विभ्रच्छक्तीररूपोऽपि च बहुतररूपोऽवभात्यद्भुतात्मा
तस्मै कैवल्यधाम्ने पररसपरिपूर्णाय विष्णो नमस्ते ॥२॥

ஜந்மாதோ₂ கர்ம நாம ஸ்பு₂டமிஹ கு₃ணதோ₃ஷாதி₃கம் வா ந யஸ்மிந்
லோகாநாமூதயே ய: ஸ்வயமநுப₄ஜதே தாநி மாயாநுஸாரீ |
விப்₄ரச்ச₂க்தீரரூபோ(அ)பி ச ப₃ஹுதரரூபோ(அ)வபா₄த்யத்₃பு₄தாத்மா
தஸ்மை கைவல்யதா₄ம்நே பரரஸபரிபூர்ணாய விஷ்ணோ நமஸ்தே || 2||

2. விஷ்ணுவே! உமக்கு பிறப்பு, பெயர், புண்ணியம், பாபம், ஆகிய கர்மங்கள் இல்லை. முக்குணங்கள் என்று ஒன்றும் இல்லை. உலகத்தைக் காக்க மாயையை ஏற்கின்றீர். நிற்குணராய் இருந்தும் வித்யை, அவித்யை முதலிய சக்திகளை உள்ளடக்கிக் கொண்டு, பல உருவங்களோடு விளங்குகின்றீர். ஆச்சர்யமான ரூபத்துடன் விளங்குகின்றீர். பேரின்பம் தரும் பூரணனே! உம்மை நமஸ்கரிக்கிறேன்.

नो तिर्यञ्चन्न मर्त्यं न च सुरमसुरं न स्त्रियं नो पुंमांसं
न द्रव्यं कर्म जातिं गुणमपि सदसद्वापि ते रूपमाहु: ।
शिष्टं यत् स्यान्निषेधे सति निगमशतैर्लक्षणावृत्तितस्तत्
कृच्छ्रेणावेद्यमानं परमसुखमयं भाति तस्मै नमस्ते ॥३॥

நோ திர்யஞ்சந்ந மர்த்யம் ந ச ஸுரமஸுரம் ந ஸ்த்ரியம் நோ பும்மாம்ஸம்
ந த்₃ரவ்யம் கர்ம ஜாதிம் கு₃ணமபி ஸத₃ஸத்₃வாபி தே ரூபமாஹு: |
ஶிஷ்டம் யத் ஸ்யாந்நிஷேதே₄ ஸதி நிக₃மஶதைர்லக்ஷணாவ்ருத்திதஸ்தத்
க்ருச்ச்₂ரேணாவேத்₃யமாநம் பரமஸுக₂மயம் பா₄தி தஸ்மை நமஸ்தே || 3||

3. பறவை, மிருகம், பசு, மனிதன், தேவன், அசுரன், பெண், ஆண், பஞ்சபூதங்கள், புண்ணிய பாபங்கள், ஜாதி, முக்குணங்கள், சேதனம், அசேதனம் ஆகிய இவை எதுவும் தங்கள் ரூபமில்லை என்று அறிந்தோர் கூறுகின்றனர். இவைகளைக் காட்டிலும் எஞ்சி இருக்கின்றீர். உபநிஷத்துக்கள் மிகுந்த சிரமத்துடன் உம்மைத் தெரிவிக்க முயற்சி செய்கின்றது. உம்மைப் பேரின்ப வடிவமாக விளக்குகிறது. அத்தகைய உம்மை நமஸ்காரம் செய்கிறேன்.

मायायां बिम्बितस्त्वं सृजसि महदहङ्कारतन्मात्रभेदै-
र्भूतग्रामेन्द्रियाद्यैरपि सकलजगत्स्वप्नसङ्कल्पकल्पम् ।
भूय: संहृत्य सर्वं कमठ इव पदान्यात्मना कालशक्त्या
गम्भीरे जायमाने तमसि वितिमिरो भासि तस्मै नमस्ते ॥४॥

மாயாயாம் பி₃ம்பி₃தஸ்த்வம் ஸ்ருஜஸி மஹத₃ஹங்காரதந்மாத்ரபே₄தை₃-
ர்பூ₄தக்₃ராமேந்த்₃ரியாத்₃யைரபி ஸகலஜக₃த்ஸ்வப்நஸங்கல்பகல்பம் |
பூ₄ய: ஸம்ஹ்ருத்ய ஸர்வம் கமட₂ இவ பதா₃ந்யாத்மநா காலஶக்த்யா
க₃ம்பீ₄ரே ஜாயமாநே தமஸி விதிமிரோ பா₄ஸி தஸ்மை நமஸ்தே || 4||

4. தாங்கள் மாயையின் பிரதிபலிப்பாய் இருக்கிறீர்கள். மகத், அகங்காரம், ஐந்து தன்மாத்திரைகள், பஞ்சபூதங்கள், பஞ்சேந்திரியங்கள் ஆகியவற்றைக் கொண்டு உலகங்களைப் படைத்தீர்கள். ஆமை தன் கைகால்களை ஓட்டிற்குள் இழுத்துக் கொள்வதுபோல், காலசக்தியால் அந்த உலகங்களை உம்முள்ளே அடக்கிக் கொள்கிறீர்கள். அளவற்ற இருள் உண்டாகும்போது அந்த இருளால் பாதிக்கப்படாமல் பிரகாசிக்கிறீர். அத்தகைய உமக்கு நமஸ்காரம்.

शब्दब्रह्मेति कर्मेत्यणुरिति भगवन् काल इत्यालपन्ति
त्वामेकं विश्वहेतुं सकलमयतया सर्वथा कल्प्यमानम् ।
वेदान्तैर्यत्तु गीतं पुरुषपरचिदात्माभिधं तत्तु तत्त्वं
प्रेक्षामात्रेण मूलप्रकृतिविकृतिकृत् कृष्ण तस्मै नमस्ते ॥५॥

ஶப்₃த₃ப்₃ரஹ்மேதி கர்மேத்யணுரிதி ப₄க₃வந் கால இத்யாலபந்தி
த்வாமேகம் விஶ்வஹேதும் ஸகலமயதயா ஸர்வதா₂ கல்ப்யமாநம் |
வேதா₃ந்தைர்யத்து கீ₃தம் புருஷபரசிதா₃த்மாபி₄த₄ம் தத்து தத்த்வம்
ப்ரேக்ஷாமாத்ரேண மூலப்ரக்ருதிவிக்ருதிக்ருத் க்ருஷ்ண தஸ்மை நமஸ்தே || 5||

5. பிரபஞ்சத்திற்குக் காரணம் நாதம் என்று சிலரும், கர்மம் என்று சிலரும், அணு என்று சிலரும் கூறுகின்றனர். தாங்கள் யாவுமாகி இருப்பதால் அவ்வாறு கூறுகின்றனர். வேதாந்தம், தத்வரூபமான தங்களை, புருஷன் என்றும், பரன் என்றும், சித் என்றும், அசித் என்றும் கூறுகின்றது. அந்த தத்வத்தின் பார்வையே மாயையை உண்டாக்கி, பிரபஞ்சத்தையும் உண்டாக்குகிறது. அத்தகைய உம்மை நமஸ்கரிக்கிறேன்.

सत्त्वेनासत्तया वा न च खलु सदसत्त्वेन निर्वाच्यरूपा
धत्ते यासावविद्या गुणफणिमतिवद्विश्वदृश्यावभासम् ।
विद्यात्वं सैव याता श्रुतिवचनलवैर्यत्कृपास्यन्दलाभे
संसारारण्यसद्यस्त्रुटनपरशुतामेति तस्मै नमस्ते ॥६॥

ஸத்த்வேநாஸத்தயா வா ந ச க₂லு ஸத₃ஸத்த்வேந நிர்வாச்யரூபா
த₄த்தே யாஸாவவித்₃யா கு₃ணப₂ணிமதிவத்₃விஶ்வத்₃ருஶ்யாவபா₄ஸம் |
வித்₃யாத்வம் ஸைவ யாதா ஶ்ருதிவசநலவைர்யத்க்ருபாஸ்யந்த₃லாபே₄
ஸம்ஸாராரண்யஸத்₃யஸ்த்ருடநபரஶுதாமேதி தஸ்மை நமஸ்தே || 6||

6. இருப்பது என்றோ, இல்லாதது என்றோ, அவ்விரண்டும் சேர்ந்தது என்றோ விவரிக்க முடியாத மாயத்தோற்றம் உலகில் காணப்படும் எல்லா பொருட்களிலும் உள்ளது. அது, கயிற்றைப் பாம்பு என்று எண்ணுவது போன்ற அறியாமையே ஆகும். உம்முடைய கருணைப்ரவாகம் கிடைத்ததும், அந்த அறியாமையானது, உபநிஷத்துக்களின் வாக்கியங்களால் தெளிவை அடைந்து, சம்சாரம் என்னும் காட்டை அழிக்கும் கோடரியாக ஆகிறது. அத்தகைய கருணாநிதியான உமக்கு நமஸ்காரம்.

भूषासु स्वर्णवद्वा जगति घटशरावादिके मृत्तिकाव-
त्तत्त्वे सञ्चिन्त्यमाने स्फुरति तदधुनाप्यद्वितीयं वपुस्ते ।
स्वप्नद्रष्टु: प्रबोधे तिमिरलयविधौ जीर्णरज्जोश्च यद्व-
द्विद्यालाभे तथैव स्फुटमपि विकसेत् कृष्ण तस्मै नमस्ते ॥७॥

பூ₄ஷாஸு ஸ்வர்ணவத்₃வா ஜக₃தி க₄டஶராவாதி₃கே ம்ருத்திகாவ-
த்தத்த்வே ஸஞ்சிந்த்யமாநே ஸ்பு₂ரதி தத₃து₄நாப்யத்₃விதீயம் வபுஸ்தே |
ஸ்வப்நத்₃ரஷ்டு: ப்ரபோ₃தே₄ திமிரலயவிதௌ₄ ஜீர்ணரஜ்ஜோஶ்ச யத்₃வ-
த்₃வித்₃யாலாபே₄ ததை₂வ ஸ்பு₂டமபி விகஸேத் க்ருஷ்ண தஸ்மை நமஸ்தே || 7||

7. ஆபரணங்களில் தங்கம் இருப்பதுபோல், பானை, மடக்கு ஆகியவற்றில் மண் இருப்பதுபோல், உண்மை ரூபத்தைப் பற்றி நினைக்கும்போது உம்முடைய இரண்டற்ற ரூபமே விளங்குகிறது. எவ்வாறு கனவில் காணும் பொருட்களை விழித்ததும் காணமுடியாதோ, இருளில் பாம்பாகத் தோன்றியது வெளிச்சத்தில் கயிராய் இருக்கிறதோ, அதேபோல், ஞானம் ஏற்பட்டதும் தங்கள் ரூபம் தெளிவாய் விளங்குகிறது. அத்தகைய தங்களை நமஸ்கரிக்கிறேன்.

यद्भीत्योदेति सूर्यो दहति च दहनो वाति वायुस्तथान्ये
यद्भीता: पद्मजाद्या: पुनरुचितबलीनाहरन्तेऽनुकालम् ।
येनैवारोपिता: प्राङ्निजपदमपि ते च्यावितारश्च पश्चात्
तस्मै विश्वं नियन्त्रे वयमपि भवते कृष्ण कुर्म: प्रणामम् ॥८॥

யத்₃பீ₄த்யோதே₃தி ஸூர்யோ த₃ஹதி ச த₃ஹநோ வாதி வாயுஸ்ததா₂ந்யே
யத்₃பீ₄தா: பத்₃மஜாத்₃யா: புநருசிதப₃லீநாஹரந்தே(அ)நுகாலம் |
யேநைவாரோபிதா: ப்ராங்நிஜபத₃மபி தே ச்யாவிதாரஶ்ச பஶ்சாத்
தஸ்மை விஶ்வம் நியந்த்ரே வயமபி ப₄வதே க்ருஷ்ண குர்ம: ப்ரணாமம் || 8||

8. சூரியன், அக்னி, வாயு ஆகியவை உம்மிடம் பயந்து செயல்படுகின்றன. உம்முடைய அருளால், பிரமன் முதலிய தேவர்கள் சரியான நேரத்தில் ஹவிர்பாகம் பெறுகிறார்கள். மேலும் அவர்கள், படைப்பின் துவக்கத்தில் பதவிகளைப் பெற்று, தமது இருப்பிடங்களை அடைந்து, பின் நீக்கப்படுகிறார்கள். உலகங்களை அடக்குபவரே! கிருஷ்ணா! உம்மை நாங்கள் நமஸ்கரிக்கின்றோம்.

त्रैलोक्यं भावयन्तं त्रिगुणमयमिदं त्र्यक्षरस्यैकवाच्यं
त्रीशानामैक्यरूपं त्रिभिरपि निगमैर्गीयमानस्वरूपम् ।
तिस्रोवस्था विदन्तं त्रियुगजनिजुषं त्रिक्रमाक्रान्तविश्वं
त्रैकाल्ये भेदहीनं त्रिभिरहमनिशं योगभेदैर्भजे त्वाम् ॥९॥

த்ரைலோக்யம் பா₄வயந்தம் த்ரிகு₃ணமயமித₃ம் த்ர்யக்ஷரஸ்யைகவாச்யம்
த்ரீஶாநாமைக்யரூபம் த்ரிபி₄ரபி நிக₃மைர்கீ₃யமாநஸ்வரூபம் |
திஸ்ரோவஸ்தா₂ வித₃ந்தம் த்ரியுக₃ஜநிஜுஷம் த்ரிக்ரமாக்ராந்தவிஶ்வம்
த்ரைகால்யே பே₄த₃ஹீநம் த்ரிபி₄ரஹமநிஶம் யோக₃பே₄தை₃ர்ப₄ஜே த்வாம் || 9||

9. தாங்கள், ஸத்வம், ராஜஸம், தாமஸம் என்ற மூன்று குணங்களால் மூவுலகங்களையும் படைத்தீர்கள். மூன்று அக்ஷரங்களால் (அ,உ,ம)ஆன பிரணவத்தின் (ஓம்) பொருளாய் உள்ளீர். பிரம்மா, விஷ்ணு, சிவன் என்ற மும்மூர்த்திகளின் ஒன்றுபட்ட உருவமாக இருக்கின்றீர். உம்மை ரிக், யஜுர், சாமம் என்ற மூன்று வேதங்களும் புகழ்ந்து போற்றுகின்றன. விழிப்பு, கனவு, தூக்கம் என்ற மூன்று நிலைகளை அறிந்தவர். மூன்று யுகங்களிலும் அவதாரம் செய்தவர். மூன்று அடிகளால் அனைத்து உலகங்களையும் அளந்தவர். இறந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் என்ற மூன்று காலங்களிலும் மாறுதல் இல்லாமல் இருப்பவர். அத்தகைய தங்களை நான் கர்மம், ஞானம், பக்தி என்ற மூன்று யோகங்களால் எப்பொழுதும் வணங்குகின்றேன்.

सत्यं शुद्धं विबुद्धं जयति तव वपुर्नित्यमुक्तं निरीहं
निर्द्वन्द्वं निर्विकारं निखिलगुणगणव्यञ्जनाधारभूतम् ।
निर्मूलं निर्मलं तन्निरवधिमहिमोल्लासि निर्लीनमन्त-
र्निस्सङ्गानां मुनीनां निरुपमपरमानन्दसान्द्रप्रकाशम् ॥१०॥

ஸத்யம் ஶுத்₃த₄ம் விபு₃த்₃த₄ம் ஜயதி தவ வபுர்நித்யமுக்தம் நிரீஹம்
நிர்த்₃வந்த்₃வம் நிர்விகாரம் நிகி₂லகு₃ணக₃ணவ்யஞ்ஜநாதா₄ரபூ₄தம் |
நிர்மூலம் நிர்மலம் தந்நிரவதி₄மஹிமோல்லாஸி நிர்லீநமந்த-
ர்நிஸ்ஸங்கா₃நாம் முநீநாம் நிருபமபரமாநந்த₃ஸாந்த்₃ரப்ரகாஶம் || 10||

10.  தங்களுடைய ரூபமானது ஸத்வமயமானது. பந்தங்களும், செய்கைகளும், மாற்றங்களும், விகாரங்களும் இல்லாதது. எல்லா குணங்களுக்கும் மூலமாகவும், காரணமற்றதாகவும், தோஷமற்றதாகவும் அளவற்ற மகிமையுடன் விளங்குகிறது. பற்றற்ற முனிவர்களின் மனதில் உறைந்திருக்கிறது. ஒப்பற்ற பேரின்ப ஒளியால் சிறப்புடன் பிரகாசிக்கிறது.

दुर्वारं द्वादशारं त्रिशतपरिमिलत्षष्टिपर्वाभिवीतं
सम्भ्राम्यत् क्रूरवेगं क्षणमनु जगदाच्छिद्य सन्धावमानम् ।
चक्रं ते कालरूपं व्यथयतु न तु मां त्वत्पदैकावलम्बं
विष्णो कारुण्यसिन्धो पवनपुरपते पाहि सर्वामयौघात् ॥११॥

(இந்த ஸ்லோகத்தைப் படிப்பதால் துக்கம் நீங்கி ஆயுள் வளரும்)
து₃ர்வாரம் த்₃வாத₃ஶாரம் த்ரிஶதபரிமிலத்ஷஷ்டிபர்வாபி₄வீதம்
ஸம்ப்₄ராம்யத் க்ரூரவேக₃ம் க்ஷணமநு ஜக₃தா₃ச்சி₂த்₃ய ஸந்தா₄வமாநம் |
சக்ரம் தே காலரூபம் வ்யத₂யது ந து மாம் த்வத்பதை₃காவலம்ப₃ம்
விஷ்ணோ காருண்யஸிந்தோ₄ பவநபுரபதே பாஹி ஸர்வாமயௌகா₄த் || 11||

11. விஷ்ணுவே! உம்முடைய கால வடிவமான சக்கரம் ஒருவராலும் தடுக்க முடியாதது. பன்னிரண்டு மாதங்கள் என்ற ஆரக்கால்கள் கொண்டது. முன்னூற்று அறுபது நாட்கள் என்ற கூரிய வட்டாக்களை(முனைகள்) உடையது. கடுமையான வேகத்தில் எப்பொழுதும் சுழல்கின்றது. நொடிப்பொழுதில் உலகத்தைக் குறைத்து, மிக வேகமாக ஓடுகிறது. அந்த சக்கரமானது, உமது பாதத்தையே நம்பியிருக்கும் என்னைத் துன்புறுத்தாமல் இருக்கவேண்டும். கருணைக் கடலே! கிருஷ்ணா! எல்லா நோய்களிலிருந்தும் என்னை காக்க வேண்டும்.

Thursday, June 5, 2014

ஸ்ரீ நாராயணீயம் - தசகம் 97

ஸ்ரீ நாராயணீயம் - தசகம் 97, ஸ்ரீ நாராயணீயம் 97வது தசகம், ஸ்ரீமந் நாராயணீயம், ஸ்ரீ நாராயணீயம், ஸ்ரீமத் நாராயணீயம், நாராயணீயம், ஸ்ரீமன் நாராயணீயம், Narayaneeyam, Sree Narayaneeyam, Sriman narayaneeyam, Srimad Narayaneeyam

த³ஶகம் -97
மார்க்கண்டேயர் கதை

त्रैगुण्याद्भिन्नरूपं भवति हि भुवने हीनमध्योत्तमं यत्
ज्ञानं श्रद्धा च कर्ता वसतिरपि सुखं कर्म चाहारभेदा: ।
त्वत्क्षेत्रत्वन्निषेवादि तु यदिह पुनस्त्वत्परं तत्तु सर्वं
प्राहुर्नैगुण्यनिष्ठं तदनुभजनतो मङ्क्षु सिद्धो भवेयम् ॥१॥

த்ரைகு₃ண்யாத்₃பி₄ந்நரூபம் ப₄வதி ஹி பு₄வநே ஹீநமத்₄யோத்தமம் யத்
ஜ்ஞாநம் ஶ்ரத்₃தா₄ ச கர்தா வஸதிரபி ஸுக₂ம் கர்ம சாஹாரபே₄தா₃: |
த்வத்க்ஷேத்ரத்வந்நிஷேவாதி₃ து யதி₃ஹ புநஸ்த்வத்பரம் தத்து ஸர்வம்
ப்ராஹுர்நைகு₃ண்யநிஷ்ட₂ம் தத₃நுப₄ஜநதோ மங்க்ஷு ஸித்₃தோ₄ ப₄வேயம் || 1||

1. இவ்வுலகில் உள்ள பொருட்கள் அனைத்தும் முக்குணங்களால் உண்டு பண்ணப்பட்டு வேறுபட்டு விளங்குகிறது. அதனால் உத்தமம், மத்யமம், அதமம் என்ற நிலைகளில் விளங்குகிறது. இவ்வுலகில் பலனை எதிர்பார்க்காமல் தங்களை வணங்குவது, தங்கள் கோவில்களுக்குச் செல்வது போன்றவற்றை முக்குணமற்றது என்று முனிவர்கள் கூறுகின்றனர். முக்குணங்களால் உண்டு பண்ணப்படாத தங்களை சேவித்து நான் ஜீவன் முக்தனாக ஆகவேண்டும்.

त्वय्येव न्यस्तचित्त: सुखमयि विचरन् सर्वचेष्टास्त्वदर्थं
त्वद्भक्तै: सेव्यमानानपि चरितचरानाश्रयन् पुण्यदेशान् ।
दस्यौ विप्रे मृगादिष्वपि च सममतिर्मुच्यमानावमान-
स्पर्धासूयादिदोष: सततमखिलभूतेषु संपूजये त्वाम् ॥२॥

த்வய்யேவ ந்யஸ்தசித்த: ஸுக₂மயி விசரந் ஸர்வசேஷ்டாஸ்த்வத₃ர்த₂ம்
த்வத்₃ப₄க்தை: ஸேவ்யமாநாநபி சரிதசராநாஶ்ரயந் புண்யதே₃ஶாந் |
த₃ஸ்யௌ விப்ரே ம்ருகா₃தி₃ஷ்வபி ச ஸமமதிர்முச்யமாநாவமாந-
ஸ்பர்தா₄ஸூயாதி₃தோ₃ஷ: ஸததமகி₂லபூ₄தேஷு ஸம்பூஜயே த்வாம் || 2||

2. உம்மிடமே மனதைச் செலுத்தி, என் எல்லா செய்கைகளையும் உம்மிடமே அர்ப்பணம் செய்வேன். உமது பக்தர்கள் முன்பு சென்ற இடங்களுக்குச் செல்வேன். திருடன், பிராமணன், விலங்குகள் போன்ற எல்லாவற்றிலும் பேதம் பாராமல் இருப்பேன். அவமானம், துவேஷம், அசூயை முதலியவற்றை விட்டு எல்லா உயிர்களிடத்திலும் உம்மையே காண்பேன்.

त्वद्भावो यावदेषु स्फुरति न विशदं तावदेवं ह्युपास्तिं
कुर्वन्नैकात्म्यबोधे झटिति विकसति त्वन्मयोऽहं चरेयम् ।
त्वद्धर्मस्यास्य तावत् किमपि न भगवन् प्रस्तुतस्य प्रणाश-
स्तस्मात्सर्वात्मनैव प्रदिश मम विभो भक्तिमार्गं मनोज्ञम् ॥३॥

த்வத்₃பா₄வோ யாவதே₃ஷு ஸ்பு₂ரதி ந விஶத₃ம் தாவதே₃வம் ஹ்யுபாஸ்திம்
குர்வந்நைகாத்ம்யபோ₃தே₄ ஜ₂டிதி விகஸதி த்வந்மயோ(அ)ஹம் சரேயம் |
த்வத்₃த₄ர்மஸ்யாஸ்ய தாவத் கிமபி ந ப₄க₃வந் ப்ரஸ்துதஸ்ய ப்ரணாஶ-
ஸ்தஸ்மாத்ஸர்வாத்மநைவ ப்ரதி₃ஶ மம விபோ₄ ப₄க்திமார்க₃ம் மநோஜ்ஞம் || 3||

3. முன்பு கூறிய திருடன் முதலியவர்களிடத்தில் தாங்கள் இருப்பது எனக்கு விளங்கும் வரை இவ்விதமாக வழிபடுவேன். ஞானம் பெற்ற பிறகு தாங்களாகவே ஆகி வாழ்வேன். பகவானே! அவ்வாறு செய்யத் தொடங்கிய பாகவத தர்மத்திற்கு சிறிதும் அழிவு ஏற்படாது. பிரபோ! அதனால் எனக்கு மனங்கவரும் பக்தி மார்க்கத்தை அளிக்க வேண்டும்.

तं चैनं भक्तियोगं द्रढयितुमयि मे साध्यमारोग्यमायु-
र्दिष्ट्या तत्रापि सेव्यं तव चरणमहो भेषजायेव दुग्धम् ।
मार्कण्डेयो हि पूर्वं गणकनिगदितद्वादशाब्दायुरुच्चै:
सेवित्वा वत्सरं त्वां तव भटनिवहैर्द्रावयामास मृत्युम् ॥४॥

தம் சைநம் ப₄க்தியோக₃ம் த்₃ரட₄யிதுமயி மே ஸாத்₄யமாரோக்₃யமாயு-
ர்தி₃ஷ்ட்யா தத்ராபி ஸேவ்யம் தவ சரணமஹோ பே₄ஷஜாயேவ து₃க்₃த₄ம் |
மார்கண்டே₃யோ ஹி பூர்வம் க₃ணகநிக₃தி₃தத்₃வாத₃ஶாப்₃தா₃யுருச்சை:
ஸேவித்வா வத்ஸரம் த்வாம் தவ ப₄டநிவஹைர்த்₃ராவயாமாஸ ம்ருத்யும் || 4||

4. இந்த பக்தி யோகம் உறுதியாக இருக்க ஆரோக்யமும் ஆயுளும் வேண்டும். அதை அடைய தெய்வாதீனமாக உம்முடைய பாதத்தையே சரணடைய வேண்டும். நோய் தீர பாலைக் குடிப்பதுபோல், உம்முடைய காலடியில் சேவை செய்ய வேண்டும். வெகு நாட்களுக்கு முன்பு, மார்க்கண்டேயனுக்கு வாழ்நாள் பன்னிரண்டு ஆண்டுகள்தான் என்று ஒரு ஜோதிடர் கூறினார். ஒரு வருடகாலம் உன் காலடியில் தீவிர வழிபாடு செய்த மார்க்கண்டேயனுக்கு மரணம் நெருங்கிய போது, உம்முடைய தூதர்கள் யமனை விரட்டினர்.

मार्कण्डेयश्चिरायु: स खलु पुनरपि त्वत्पर: पुष्पभद्रा-
तीरे निन्ये तपस्यन्नतुलसुखरति: षट् तु मन्वन्तराणि ।
देवेन्द्र: सप्तमस्तं सुरयुवतिमरुन्मन्मथैर्मोहयिष्यन्
योगोष्मप्लुष्यमाणैर्न तु पुनरशकत्त्वज्जनं निर्जयेत् क: ॥५॥

மார்கண்டே₃யஶ்சிராயு: ஸ க₂லு புநரபி த்வத்பர: புஷ்பப₄த்₃ரா-
தீரே நிந்யே தபஸ்யந்நதுலஸுக₂ரதி: ஷட் து மந்வந்தராணி |
தே₃வேந்த்₃ர: ஸப்தமஸ்தம் ஸுரயுவதிமருந்மந்மதை₂ர்மோஹயிஷ்யந்
யோகோ₃ஷ்மப்லுஷ்யமாணைர்ந து புநரஶகத்த்வஜ்ஜநம் நிர்ஜயேத் க: || 5||

5. நீண்ட ஆயுள் பெற்ற மார்க்கண்டேயர், உம்மையே வணங்கி, நிகரற்ற பேரின்பத்தில் பற்றுக் கொண்டு, புஷ்பபத்ரா நதியின் கரையில் தவம் செய்து ஆறு மன்வந்தரங்களைக் கழித்தார். ஏழாவது மன்வந்தரத்தில், தேவேந்திரன் அவரது தவத்தைக் குலைக்க, தேவலோகப் பெண்களையும், தென்றலையும், மன்மதனையும் அனுப்பினான். அவரது தவத்தின் வெப்பத்தால், அவர்களால் அவரை மயக்க முடியவில்லை. உமது பக்தர்களை யாரால் வெல்ல முடியும்?

प्रीत्या नारायणाख्यस्त्वमथ नरसख: प्राप्तवानस्य पार्श्वं
तुष्ट्या तोष्टूयमान: स तु विविधवरैर्लोभितो नानुमेने ।
द्रष्टुं माय़ां त्वदीयां किल पुनरवृणोद्भक्तितृप्तान्तरात्मा
मायादु:खानभिज्ञस्तदपि मृगयते नूनमाश्चर्यहेतो: ॥६॥

ப்ரீத்யா நாராயணாக்₂யஸ்த்வமத₂ நரஸக₂: ப்ராப்தவாநஸ்ய பார்ஶ்வம்
துஷ்ட்யா தோஷ்டூயமாந: ஸ து விவித₄வரைர்லோபி₄தோ நாநுமேநே |
த்₃ரஷ்டும் மாஃயாம் த்வதீ₃யாம் கில புநரவ்ருணோத்₃ப₄க்தித்ருப்தாந்தராத்மா
மாயாது₃:கா₂நபி₄ஜ்ஞஸ்தத₃பி ம்ருக₃யதே நூநமாஶ்சர்யஹேதோ: || 6||

6. நரனாகவும், நாராயணனாகவும் தாங்கள் மார்க்கண்டேயரின் அருகில் சென்றீர்கள். மனம் மகிழ்ந்த அவர் தங்களைத் துதித்தார். தாங்கள் பல்வேறு வரங்களை அளித்தும் அவர் ஒன்றையும் விரும்பவில்லை. ஆனால் தங்கள் மாயையைக் காண விரும்பினார். அதனால் உண்டாகும் துன்பங்களை அறியாமல், பக்தியின் மிகுதியாலும், ஆர்வத்தாலும் இவ்வாறு வேண்டினார்.

याते त्वय्याशु वाताकुलजलदगलत्तोयपूर्णातिघूर्णत्-
सप्तार्णोराशिमग्ने जगति स तु जले सम्भ्रमन् वर्षकोटी: ।
दीन: प्रैक्षिष्ट दूरे वटदलशयनं कञ्चिदाश्चर्यबालं
त्वामेव श्यामलाङ्गं वदनसरसिजन्यस्तपादाङ्गुलीकम् ॥७॥

யாதே த்வய்யாஶு வாதாகுலஜலத₃க₃லத்தோயபூர்ணாதிகூ₄ர்ணத்-
ஸப்தார்ணோராஶிமக்₃நே ஜக₃தி ஸ து ஜலே ஸம்ப்₄ரமந் வர்ஷகோடீ: |
தீ₃ந: ப்ரைக்ஷிஷ்ட தூ₃ரே வடத₃லஶயநம் கஞ்சிதா₃ஶ்சர்யபா₃லம்
த்வாமேவ ஶ்யாமலாங்க₃ம் வத₃நஸரஸிஜந்யஸ்தபாதா₃ங்கு₃லீகம் || 7||

7. அவ்வாறே வரமளித்துத் தாங்கள் மறைந்தீர். உடனே பலத்த காற்றுடன் மேகங்கள் மழையைப் பொழிந்தன. ஏழு கடல்களும் நிரம்பி உலகத்தை மூழ்கடித்தது. பல கோடி ஆண்டுகள் மார்க்கண்டேயர் அந்தக் கடலில் சுழன்று வருந்தினார். தொலைவில் கருநீல மேனியுடன், ஆலிலையின் மேல் சிறு குழந்தையாகப் பள்ளி கொண்டு, கால் கட்டை விரலை வாயில் வைத்துச் சுவைத்துக் கொண்டு, அதிசயமான ரூபத்தில் இருக்கும் தங்களைக் கண்டார்.

दृष्ट्वा त्वां हृष्टरोमा त्वरितमुपगत: स्प्रष्टुकामो मुनीन्द्र:
श्वासेनान्तर्निविष्ट: पुनरिह सकलं दृष्टवान् विष्टपौघम् ।
भूयोऽपि श्वासवातैर्बहिरनुपतितो वीक्षितस्त्वत्कटाक्षै-
र्मोदादाश्लेष्टुकामस्त्वयि पिहिततनौ स्वाश्रमे प्राग्वदासीत् ॥८॥

த்₃ருஷ்ட்வா த்வாம் ஹ்ருஷ்டரோமா த்வரிதமுபக₃த: ஸ்ப்ரஷ்டுகாமோ முநீந்த்₃ர:
ஶ்வாஸேநாந்தர்நிவிஷ்ட: புநரிஹ ஸகலம் த்₃ருஷ்டவாந் விஷ்டபௌக₄ம் |
பூ₄யோ(அ)பி ஶ்வாஸவாதைர்ப₃ஹிரநுபதிதோ வீக்ஷிதஸ்த்வத்கடாக்ஷை-
ர்மோதா₃தா₃ஶ்லேஷ்டுகாமஸ்த்வயி பிஹிததநௌ ஸ்வாஶ்ரமே ப்ராக்₃வதா₃ஸீத் || 8||

8. உம்மைக் கண்டதும் உடல் புல்லரிக்க, உம்மைத் தொடுவதற்காக வேகமாய்த் தங்கள் அருகே வந்தார். உம்முடைய மூச்சுக் காற்றால் உள்ளே இழுக்கப்பட்டு, குழந்தையான தங்கள் வயிற்றின் உள்ளே அண்டசராசரங்களைக் கண்டார். மீண்டும் உம்முடைய மூச்சுக் காற்றால் வெளியே வந்தார். உமது கடைக்கண் பார்வையைக் கண்ட மார்க்கண்டேயர், உம்மைத் தழுவ விரும்பினார். அப்போது உமது உருவத்தை மறைத்துக் கொண்டீர். உம்மைக் காணாமல், முன்போல் தான்மட்டும் தனியே தனது ஆசிரமத்தில் இருக்கக் கண்டார்.

गौर्या सार्धं तदग्रे पुरभिदथ गतस्त्वत्प्रियप्रेक्षणार्थी
सिद्धानेवास्य दत्वा स्वयमयमजरामृत्युतादीन् गतोऽभूत् ।
एवं त्वत्सेवयैव स्मररिपुरपि स प्रीयते येन तस्मा-
न्मूर्तित्रय्यात्मकस्त्वं ननु सकलनियन्तेति सुव्यक्तमासीत् ॥९॥

கௌ₃ர்யா ஸார்த₄ம் தத₃க்₃ரே புரபி₄த₃த₂ க₃தஸ்த்வத்ப்ரியப்ரேக்ஷணார்தீ₂
ஸித்₃தா₄நேவாஸ்ய த₃த்வா ஸ்வயமயமஜராம்ருத்யுதாதீ₃ந் க₃தோ(அ)பூ₄த் |
ஏவம் த்வத்ஸேவயைவ ஸ்மரரிபுரபி ஸ ப்ரீயதே யேந தஸ்மா-
ந்மூர்தித்ரய்யாத்மகஸ்த்வம் நநு ஸகலநியந்தேதி ஸுவ்யக்தமாஸீத் || 9||

9. அப்போது, உமது பக்தரான மார்க்கண்டேயரைப் பார்க்க பரமசிவன் பார்வதியுடன் அவரருகே சென்றார். முதுமை, இறப்பு இல்லாத வரங்களை மார்க்கண்டேயருக்கு அளித்துச் சென்றார். உம்மை வழிபடுவதால் சிவனும் மகிழ்கிறார். இவ்வாறு, மும்மூர்த்திகளின் ரூபமான தாங்கள், அனைவரையும் ஆள்பவர் என்பது தெளிவாகிறது.

त्र्यंशेस्मिन् सत्यलोके विधिहरिपुरभिन्मन्दिराण्यूर्ध्वमूर्ध्वं
तेभोऽप्यूर्ध्वं तु मायाविकृतिविरहितो भाति वैकुण्ठलोक: ।
तत्र त्वं कारणाम्भस्यपि पशुपकुले शुद्धसत्त्वैकरूपी
सच्चित्ब्रह्माद्वयात्मा पवनपुरपते पाहि मां सर्वरोगात् ॥१०॥

த்ர்யம்ஶேஸ்மிந் ஸத்யலோகே விதி₄ஹரிபுரபி₄ந்மந்தி₃ராண்யூர்த்₄வமூர்த்₄வம்
தேபோ₄(அ)ப்யூர்த்₄வம் து மாயாவிக்ருʼதிவிரஹிதோ பா₄தி வைகுண்ட₂லோக: |
தத்ர த்வம் காரணாம்ப₄ஸ்யபி பஶுபகுலே ஶுத்₃த₄ஸத்த்வைகரூபீ
ஸச்சித்ப்₃ரஹ்மாத்₃வயாத்மா பவநபுரபதே பாஹி மாம் ஸர்வரோகா₃த் || 10||

10. பிரம்மலோகம், விஷ்ணுலோகம், சிவலோகம் என்ற மூன்று பகுதிகளையுடைய ஸத்யலோகத்தில், பிரம்மா, விஷ்ணு, மற்றும் சிவனின் வீடுகள் ஒன்றன்மேல் ஒன்றாய் இருக்கின்றது. அம்மூன்றிக்கும் மேல், மாயையாலும் அதன் விகாரங்களாலும் பாதிக்கப்படாத வைகுண்டம் இருக்கிறது. வைகுண்டத்திலும், காரண ஜலத்திலும், இடைச்சேரியிலும் தூய ஸாத்வீக வடிவில், சச்சிதானந்த வடிவிலிருந்து வேறுபடாதவராய்த் தாங்கள் பிரகாசிக்கிறீர்கள். குருவாயூரப்பனே! அனைத்து நோய்களிலிருந்தும் என்னைக் காப்பாற்ற வேண்டும்.

Wednesday, June 4, 2014

ஸ்ரீ நாராயணீயம் - தசகம் 96

ஸ்ரீ நாராயணீயம் - தசகம் 96, ஸ்ரீ நாராயணீயம் 96வது தசகம், ஸ்ரீமந் நாராயணீயம், ஸ்ரீ நாராயணீயம், ஸ்ரீமத் நாராயணீயம், நாராயணீயம், ஸ்ரீமன் நாராயணீயம், Narayaneeyam, Sree Narayaneeyam, Sriman narayaneeyam, Srimad Narayaneeyam

த³ஶகம் -96
பகவானின் பெருமை மற்றும் ஞான, கர்ம, பக்தி யோகம்

 त्वं हि ब्रह्मैव साक्षात् परमुरुमहिमन्नक्षराणामकार-
स्तारो मन्त्रेषु राज्ञां मनुरसि मुनिषु त्वं भृगुर्नारदोऽपि ।
प्रह्लादो दानवानां पशुषु च सुरभि: पक्षिणां वैनतेयो
नागानामस्यनन्तस्सुरसरिदपि च स्रोतसां विश्वमूर्ते ॥१॥

த்வம் ஹி ப்₃ரஹ்மைவ ஸாக்ஷாத் பரமுருமஹிமந்நக்ஷராணாமகார-
ஸ்தாரோ மந்த்ரேஷு ராஜ்ஞாம் மநுரஸி முநிஷு த்வம் ப்₄ருகு₃ர்நாரதோ₃(அ)பி |
ப்ரஹ்லாதோ₃ தா₃நவாநாம் பஶுஷு ச ஸுரபி₄: பக்ஷிணாம் வைநதேயோ
நாகா₃நாமஸ்யநந்தஸ்ஸுரஸரித₃பி ச ஸ்ரோதஸாம் விஶ்வமூர்தே || 1||

1. மிகுந்த பெருமை வாய்ந்தவனே! உலக நாயகனே! தாங்களே உயர்ந்த பரப்ரம்மம். எழுத்துக்களில் அகாரமாகவும், மந்திரங்களில் பிரணவமாகவும், மன்னர்களில் மனுவாகவும், ரிஷிகளில் பிருகுவாகவும், நாரதராகவும், அசுரர்களில் பிரஹ்லாதனாகவும், மிருகங்களில் காமதேனு என்ற தெய்வீகப் பசுவாகவும், பறவைகளில் கருடனாகவும், பாம்புகளில் அனந்தனாகவும், நதிகளில் கங்கையாகவும் இருக்கிறீர்.

ब्रह्मण्यानां बलिस्त्वं क्रतुषु च जपयज्ञोऽसि वीरेषु पार्थो
भक्तानामुद्धवस्त्वं बलमसि बलिनां धाम तेजस्विनां त्वम् ।
नास्त्यन्तस्त्वद्विभूतेर्विकसदतिशयं वस्तु सर्वं त्वमेव
त्वं जीवस्त्वं प्रधानं यदिह भवदृते तन्न किञ्चित् प्रपञ्चे ॥२॥

ப்₃ரஹ்மண்யாநாம் ப₃லிஸ்த்வம் க்ரதுஷு ச ஜபயஜ்ஞோ(அ)ஸி வீரேஷு பார்தோ₂
ப₄க்தாநாமுத்₃த₄வஸ்த்வம் ப₃லமஸி ப₃லிநாம் தா₄ம தேஜஸ்விநாம் த்வம் |
நாஸ்த்யந்தஸ்த்வத்₃விபூ₄தேர்விகஸத₃திஶயம் வஸ்து ஸர்வம் த்வமேவ
த்வம் ஜீவஸ்த்வம் ப்ரதா₄நம் யதி₃ஹ ப₄வத்₃ருதே தந்ந கிஞ்சித் ப்ரபஞ்சே || 2||

2. பிராம்மண பக்தர்களில் மகாபலியாகவும், யக்ஞங்களில் ஜபயக்ஞமாகவும், வீரர்களில் அர்ஜுனனாகவும், பக்தர்களில் உத்தவராகவும், வல்லவர்களின் பலமாகவும், ஒளி பொருந்தியவர்களின் ஒளியாகவும் இருக்கிறீர். உம்முடைய பெருமைக்கு முடிவே இல்லை. உலகில் உள்ள ஆச்சரியமான பொருட்கள் அனைத்தும் தாங்களே. நீரே ஜீவன், நீரே பிரக்ருதி. இந்த அகிலத்தில் தாங்கள் இல்லாதது என்று எதுவுமே இல்லை.

धर्मं वर्णाश्रमाणां श्रुतिपथविहितं त्वत्परत्वेन भक्त्या
कुर्वन्तोऽन्तर्विरागे विकसति शनकै: सन्त्यजन्तो लभन्ते ।
सत्तास्फूर्तिप्रियत्वात्मकमखिलपदार्थेषु भिन्नेष्वभिन्नं
निर्मूलं विश्वमूलं परममहमिति त्वद्विबोधं विशुद्धम् ॥३॥

த₄ர்மம் வர்ணாஶ்ரமாணாம் ஶ்ருதிபத₂விஹிதம் த்வத்பரத்வேந ப₄க்த்யா
குர்வந்தோ(அ)ந்தர்விராகே₃ விகஸதி ஶநகை: ஸந்த்யஜந்தோ லப₄ந்தே |
ஸத்தாஸ்பூ₂ர்திப்ரியத்வாத்மகமகி₂லபதா₃ர்தே₂ஷு பி₄ந்நேஷ்வபி₄ந்நம்
நிர்மூலம் விஶ்வமூலம் பரமமஹமிதி த்வத்₃விபோ₃த₄ம் விஶுத்₃த₄ம் || 3||

3. நான்கு வர்ணங்கள், நான்கு ஆச்ரமங்கள் ஆகியவற்றில் ஈடுபட்டவர்கள், வேதத்தில் சொல்லப்பட்ட தர்ம வழியில் செயல்பட்டு, பக்தியோடு அனைத்தையும் உம்மிடமே அர்ப்பணிக்கின்றனர். வைராக்கியம் தோன்றியதும் முறைப்படி அக்கர்மங்களை விடுகின்றனர். பிறகு, உண்மையான அறிவை அடைந்து, சச்சிதானந்த வடிவானவரும், எல்லாவற்றிலும் காணப்படுகிறவரும், பிறப்பு, இறப்பு முதலியவற்றுக்குக் காரணமாய் இருப்பவரும், தனக்கென காரணம் ஒன்றுமில்லாதவரும், பரிசுத்தமானவருமான உம்மை அறிந்து, பேரின்ப ஞானத்தை அடைகிறார்கள்.

ज्ञानं कर्मापि भक्तिस्त्रितयमिह भवत्प्रापकं तत्र ताव-
न्निर्विण्णानामशेषे विषय इह भवेत् ज्ञानयोगेऽधिकार: ।
सक्तानां कर्मयोगस्त्वयि हि विनिहितो ये तु नात्यन्तसक्ता:
नाप्यत्यन्तं विरक्तास्त्वयि च धृतरसा भक्तियोगो ह्यमीषाम् ॥४॥

ஜ்ஞாநம் கர்மாபி ப₄க்திஸ்த்ரிதயமிஹ ப₄வத்ப்ராபகம் தத்ர தாவ-
ந்நிர்விண்ணாநாமஶேஷே விஷய இஹ ப₄வேத் ஜ்ஞாநயோகே₃(அ)தி₄கார: |
ஸக்தாநாம் கர்மயோக₃ஸ்த்வயி ஹி விநிஹிதோ யே து நாத்யந்தஸக்தா:
நாப்யத்யந்தம் விரக்தாஸ்த்வயி ச த்₄ருதரஸா ப₄க்தியோகோ₃ ஹ்யமீஷாம் || 4||

4. இவ்வுலகில், ஞானம், கர்மம், பக்தி என்ற மூன்று மார்க்கங்களால் உம்மை அடைய முடியும். விஷயங்களில் பற்றற்றிருப்பவருக்கு ஞானயோகம் தகுந்தது. விஷய சுகங்களில் ஆசை உள்ளவர்களுக்குக் கர்ம யோகம் சிறந்தது. விஷய சுகங்களில் அதிகம் பற்றில்லாமல், அதனைத் துறக்கவும் முடியாமல், தங்கள் லீலைகளைக் கேட்டு மகிழ்பவர்களுக்குப் பக்தி யோகமே சிறந்தது.

ज्ञानं त्वद्भक्ततां वा लघु सुकृतवशान्मर्त्यलोके लभन्ते
तस्मात्तत्रैव जन्म स्पृहयति भगवन् नाकगो नारको वा ।
आविष्टं मां तु दैवाद्भवजलनिधिपोतायिते मर्त्यदेहे
त्वं कृत्वा कर्णधारं गुरुमनुगुणवातायितस्तारयेथा: ॥५॥

ஜ்ஞாநம் த்வத்₃ப₄க்ததாம் வா லகு₄ ஸுக்ருதவஶாந்மர்த்யலோகே லப₄ந்தே
தஸ்மாத்தத்ரைவ ஜந்ம ஸ்ப்ருஹயதி ப₄க₃வந் நாககோ₃ நாரகோ வா |
ஆவிஷ்டம் மாம் து தை₃வாத்₃ப₄வஜலநிதி₄போதாயிதே மர்த்யதே₃ஹே
த்வம் க்ருத்வா கர்ணதா₄ரம் கு₃ருமநுகு₃ணவாதாயிதஸ்தாரயேதா₂: || 5||

5. இவ்வுலகில் நற்பலன்களால் ஞானம் அல்லது பக்தியை அடைகிறார்கள். ஸ்வர்க்கம் மற்றும் நரகத்திலுள்ளவர்கள் கூட மனிதப் பிறப்பை விரும்புகின்றார்கள். ஸம்ஸாரம் என்னும் கடலைக் கடக்க இந்த உடல் படகாக இருக்கிறது. நல்வினையால் இந்த உடலில் பிரவேசித்த எனக்கு, குரு என்னும் ஓடக்காரனை அளித்து, தாங்கள் சாதகமான காற்றாக இருந்து கரையேற்ற வேண்டுகிறேன்.

अव्यक्तं मार्गयन्त: श्रुतिभिरपि नयै: केवलज्ञानलुब्धा:
क्लिश्यन्तेऽतीव सिद्धिं बहुतरजनुषामन्त एवाप्नुवन्ति ।
दूरस्थ: कर्मयोगोऽपि च परमफले नन्वयं भक्तियोग-
स्त्वामूलादेव हृद्यस्त्वरितमयि भवत्प्रापको वर्धतां मे ॥६॥

அவ்யக்தம் மார்க₃யந்த: ஶ்ருதிபி₄ரபி நயை: கேவலஜ்ஞாநலுப்₃தா₄:
க்லிஶ்யந்தே(அ)தீவ ஸித்₃தி₄ம் ப₃ஹுதரஜநுஷாமந்த ஏவாப்நுவந்தி |
தூ₃ரஸ்த₂: கர்மயோகோ₃(அ)பி ச பரமப₂லே நந்வயம் ப₄க்தியோக₃-
ஸ்த்வாமூலாதே₃வ ஹ்ருத்₃யஸ்த்வரிதமயி ப₄வத்ப்ராபகோ வர்த₄தாம் மே || 6||

6. ஞானத்தை விரும்புபவர்கள், உபநிஷத்துக்களும், சாத்திரங்களும் கூறிய வழிகளில், வெளிப்படையாகப் புலப்படாத பிரம்மத்தைத் தேடிக் கஷ்டத்தை அடைகிறார்கள். பல பிறவிகளுக்குப் பிறகு சித்தியடைகிறார்கள். கர்ம யோகமும் மோக்ஷத்திற்கு வெகு தொலைவில் இருக்கிறது. ஆனால் பக்தி யோகமானது, ஆரம்பத்திலிருந்தே மனதைக் கவர்ந்து, தங்களை அடைய விரைவில் வழிவகுக்கிறது. அந்த பக்தியானது எனக்கு மேன்மேலும் வளர வேண்டும்.

ज्ञानायैवातियत्नं मुनिरपवदते ब्रह्मतत्त्वं तु शृण्वन्
गाढं त्वत्पादभक्तिं शरणमयति यस्तस्य मुक्ति: कराग्रे ।
त्वद्ध्यानेऽपीह तुल्या पुनरसुकरता चित्तचाञ्चल्यहेतो-
रभ्यासादाशु शक्यं तदपि वशयितुं त्वत्कृपाचारुताभ्याम् ॥७॥

ஜ்ஞாநாயைவாதியத்நம் முநிரபவத₃தே ப்₃ரஹ்மதத்த்வம் து ஶ்ருண்வந்
கா₃ட₄ம் த்வத்பாத₃ப₄க்திம் ஶரணமயதி யஸ்தஸ்ய முக்தி: கராக்₃ரே |
த்வத்₃த்₄யாநே(அ)பீஹ துல்யா புநரஸுகரதா சித்தசாஞ்சல்யஹேதோ-
ரப்₄யாஸாதா₃ஶு ஶக்யம் தத₃பி வஶயிதும் த்வத்க்ருபாசாருதாப்₄யாம் || 7||

7. ஞானத்திற்காக அதிக முயற்சி செய்வதை வியாஸர் புராணங்களில் அதிருப்தியுடன் கூறியிருக்கிறார். பிரம்மதத்வத்தைக் கேட்டு, தங்கள் திருவடிகளில் உறுதியான பக்தியுடன் சரணடைகின்றவனுக்கு கையிலேயே மோக்ஷம் இருக்கிறது. மனம் அலைபாய்வதால் தியான யோகமும் ஞானயோகத்தை போலவே கஷ்டமாய் இருக்கிறது. ஆனால் பயிற்சியினாலும், உம்முடைய கருணையாலும், அழகினாலும் விரைவிலேயே தியானத்தை நடைமுறைப்படுத்த முடியும்.

निर्विण्ण: कर्ममार्गे खलु विषमतमे त्वत्कथादौ च गाढं
जातश्रद्धोऽपि कामानयि भुवनपते नैव शक्नोमि हातुम् ।
तद्भूयो निश्चयेन त्वयि निहितमना दोषबुद्ध्या भजंस्तान्
पुष्णीयां भक्तिमेव त्वयि हृदयगते मङ्क्षु नङ्क्ष्यन्ति सङ्गा: ॥८॥

நிர்விண்ண: கர்மமார்கே₃ க₂லு விஷமதமே த்வத்கதா₂தௌ₃ ச கா₃ட₄ம்
ஜாதஶ்ரத்₃தோ₄(அ)பி காமாநயி பு₄வநபதே நைவ ஶக்நோமி ஹாதும் |
தத்₃பூ₄யோ நிஶ்சயேந த்வயி நிஹிதமநா தோ₃ஷபு₃த்₃த்₄யா ப₄ஜம்ஸ்தாந்
புஷ்ணீயாம் ப₄க்திமேவ த்வயி ஹ்ருத₃யக₃தே மங்க்ஷு நங்க்ஷ்யந்தி ஸங்கா₃: || 8||

8. லோகநாதா! கர்ம யோகத்தில் நாட்டமில்லாமல், தங்கள் கதைகளிலே உறுதியான நம்பிக்கையுடன் இருந்தும், என்னால் ஆசைகளைத் துறக்க முடியவில்லை. அதனால், ஆசைகளைப் பற்றிய விழிப்புணர்வுடன், உறுதியாக மீண்டும் தங்களிடத்திலேயே மனதை நிறுத்தி பக்தி செலுத்துகின்றேன். என் இதயத்தில் தாங்கள் புகுந்தவுடன், பற்றுக்களும் அழிந்துவிடுகின்றன.

कश्चित् क्लेशार्जितार्थक्षयविमलमतिर्नुद्यमानो जनौघै:
प्रागेवं प्राह विप्रो न खलु मम जन: कालकर्मग्रहा वा।
चेतो मे दु:खहेतुस्तदिह गुणगणं भावयत्सर्वकारी-
त्युक्त्वा शान्तो गतस्त्वां मम च कुरु विभो तादृशी चित्तशान्तिम् ॥९॥

கஶ்சித் க்லேஶார்ஜிதார்த₂க்ஷயவிமலமதிர்நுத்₃யமாநோ ஜநௌகை₄:
ப்ராகே₃வம் ப்ராஹ விப்ரோ ந க₂லு மம ஜந: காலகர்மக்₃ரஹா வா|
சேதோ மே து₃:க₂ஹேதுஸ்ததி₃ஹ கு₃ணக₃ணம் பா₄வயத்ஸர்வகாரீ-
த்யுக்த்வா ஶாந்தோ க₃தஸ்த்வாம் மம ச குரு விபோ₄ தாத்₃ருஶீ சித்தஶாந்திம் || 9||

9. முன்னொரு சமயம், ஒரு அந்தணன் மிகவும் கடினமாக தர்மமின்றி பொருள் சேர்த்து, பின் அனைத்து செல்வங்களையும் இழந்தான். மனம் வெறுத்து சன்யாசியானான். கபட சன்யாசி என்று மக்கள் துன்புறுத்தினர். அப்போது அவன், “ துன்பத்திற்கு என் மனமே காரணம். மக்களோ, காலநேரமோ, கர்மமோ, கிரகங்களோ அல்ல. மனம்தான் எல்லாவற்றையும் செய்கிறது” என்று கூறிக் கொண்டு மன அமைதி பெற்று உம்மை அடைந்தான். பிரபோ! அவ்வாறான மன அமைதியை எனக்கு அளிக்க வேண்டும்.

ऐल: प्रागुर्वशीं प्रत्यतिविवशमना: सेवमानश्चिरं तां
गाढं निर्विद्य भूयो युवतिसुखमिदं क्षुद्रमेवेति गायन् ।
त्वद्भक्तिं प्राप्य पूर्ण: सुखतरमचरत्तद्वदुद्धूतसङ्गं
भक्तोत्तंसं क्रिया मां पवनपुरपते हन्त मे रुन्धि रोगान् ॥१०॥

ஐல: ப்ராகு₃ர்வஶீம் ப்ரத்யதிவிவஶமநா: ஸேவமாநஶ்சிரம் தாம்
கா₃ட₄ம் நிர்வித்₃ய பூ₄யோ யுவதிஸுக₂மித₃ம் க்ஷுத்₃ரமேவேதி கா₃யந் |
த்வத்₃ப₄க்திம் ப்ராப்ய பூர்ண: ஸுக₂தரமசரத்தத்₃வது₃த்₃தூ₄தஸங்க₃ம்
ப₄க்தோத்தம்ஸம் க்ரியா மாம் பவநபுரபதே ஹந்த மே ருந்தி₄ ரோகா₃ந் || 10||

10. புரூரவஸ் என்ற அரசன் ஊர்வசியிடம் ஆசை கொண்டு அவளுடன் நீண்ட காலம் வாழ்ந்து வந்தான். பிறகு வைராக்கியத்தை அடைந்து, பெண்ணாசை மிகவும் அற்பமானது என்று கூறிக்கொண்டு, உம்மிடம் பக்தி கொண்டு ஆனந்தம் அடைந்தான். குருவாயூரப்பா! அவ்வாறே என் ஆசைகளை அகற்றி, என்னை உமது சிறந்த பக்தனாக ஆக்கி, என் வியாதிகளையும் போக்க வேண்டும்.

Tuesday, June 3, 2014

ஸ்ரீ நாராயணீயம் - தசகம் 95

ஸ்ரீ நாராயணீயம் - தசகம் 95, ஸ்ரீ நாராயணீயம் 95வது தசகம், ஸ்ரீமந் நாராயணீயம், ஸ்ரீ நாராயணீயம், ஸ்ரீமத் நாராயணீயம், நாராயணீயம், ஸ்ரீமன் நாராயணீயம், Narayaneeyam, Sree Narayaneeyam, Sriman narayaneeyam,Srimad Narayaneeyam

த³ஶகம் -95
த்யான யோகம் 

आदौ हैरण्यगर्भीं तनुमविकलजीवात्मिकामास्थितस्त्वं
जीवत्वं प्राप्य मायागुणगणखचितो वर्तसे विश्वयोने ।
तत्रोद्वृद्धेन सत्त्वेन तु गुणयुगलं भक्तिभावं गतेन
छित्वा सत्त्वं च हित्वा पुनरनुपहितो वर्तिताहे त्वमेव ॥१॥

ஆதௌ₃ ஹைரண்யக₃ர்பீ₄ம் தநுமவிகலஜீவாத்மிகாமாஸ்தி₂தஸ்த்வம்
ஜீவத்வம் ப்ராப்ய மாயாகு₃ணக₃ணக₂சிதோ வர்தஸே விஶ்வயோநே |
தத்ரோத்₃வ்ருத்₃தே₄ந ஸத்த்வேந து கு₃ணயுக₃லம் ப₄க்திபா₄வம் க₃தேந
சி₂த்வா ஸத்த்வம் ச ஹித்வா புநரநுபஹிதோ வர்திதாஹே த்வமேவ || 1||

1. உலகிற்குக் காரணமானவனே! பிரளயத்திற்குப் பிறகு ஸ்ருஷ்டியின்போது, அனைத்து உயிர்களின் வடிவத்தில் ஹிரண்யகர்ப்பருடைய சரீரத்தை அடைந்தீர். பிறகு ஜீவன்களாக ஆகி, மாயையோடு சம்பந்தப்பட்டவராக இருக்கின்றீர். அப்போது பக்தியினால் உண்டான ஸத்வ குணத்தினால், ரஜோ குணம், தமோ குணம் ஆகிய இரண்டிலிருந்தும் விடுபட்டு, இறுதியில் ஸத்வகுணத்தையும் விட்டுவிட்டு, ஜீவனாகிய நான் மீண்டும் நிர்க்குணரான தாங்களாகவே இருக்க வேண்டும்.

सत्त्वोन्मेषात् कदाचित् खलु विषयरसे दोषबोधेऽपि भूमन्
भूयोऽप्येषु प्रवृत्तिस्सतमसि रजसि प्रोद्धते दुर्निवारा ।
चित्तं तावद्गुणाश्च ग्रथितमिह मिथस्तानि सर्वाणि रोद्धुं
तुर्ये त्वय्येकभक्तिश्शरणमिति भवान् हंसरूपी न्यगादीत् ॥२॥

ஸத்த்வோந்மேஷாத் கதா₃சித் க₂லு விஷயரஸே தோ₃ஷபோ₃தே₄(அ)பி பூ₄மந்
பூ₄யோ(அ)ப்யேஷு ப்ரவ்ருத்திஸ்ஸதமஸி ரஜஸி ப்ரோத்₃த₄தே து₃ர்நிவாரா |
சித்தம் தாவத்₃கு₃ணாஶ்ச க்₃ரதி₂தமிஹ மித₂ஸ்தாநி ஸர்வாணி ரோத்₃து₄ம்
துர்யே த்வய்யேகப₄க்திஶ்ஶரணமிதி ப₄வாந் ஹம்ஸரூபீ ந்யகா₃தீ₃த் || 2||

2. முழுமுதற்கடவுளே! ஸத்வ குணம் வளர்ந்தால் விஷய சுகங்களில் ஈடுபாடு குறைகிறது. தமோ குணமும், ரஜோ குணமும் வளர்ந்தால் விஷய சுகங்களில் மீண்டும் ஈடுபாடு ஏற்படுகிறது. இங்கு மனமும், விஷயங்களில் பற்றும் இணைந்து விடுகிறது. முக்தியடைய இடையூறாய் இருக்கும் இந்த மனதையும், குணங்களையும் தடுக்க பக்தி ஒன்றே துணையாய் இருக்கும் என்று ஹம்ஸ ரூபமெடுத்து நீர் உபதேசித்தீர்.

सन्ति श्रेयांसि भूयांस्यपि रुचिभिदया कर्मिणां निर्मितानि
क्षुद्रानन्दाश्च सान्ता बहुविधगतय: कृष्ण तेभ्यो भवेयु: ।
त्वं चाचख्याथ सख्ये ननु महिततमां श्रेयसां भक्तिमेकां
त्वद्भक्त्यानन्दतुल्य: खलु विषयजुषां सम्मद: केन वा स्यात् ॥३॥

ஸந்தி ஶ்ரேயாம்ஸி பூ₄யாம்ஸ்யபி ருசிபி₄த₃யா கர்மிணாம் நிர்மிதாநி
க்ஷுத்₃ராநந்தா₃ஶ்ச ஸாந்தா ப₃ஹுவித₄க₃தய: க்ருஷ்ண தேப்₄யோ ப₄வேயு: |
த்வம் சாசக்₂யாத₂ ஸக்₂யே நநு மஹிததமாம் ஶ்ரேயஸாம் ப₄க்திமேகாம்
த்வத்₃ப₄க்த்யாநந்த₃துல்ய: க₂லு விஷயஜுஷாம் ஸம்மத₃: கேந வா ஸ்யாத் || 3||

3. கர்மங்களைச் செய்ய அவரவர்களுக்கேற்பப் பல வழிகள் கூறப் பட்டிருக்கிறது. அவை நிலையில்லாத அற்ப சுகங்களை அளிக்கிறது. உயர்ந்ததான போற்றத் தகுந்த வழி பக்தி ஒன்றே என்று தாங்கள் உத்தவரிடம் கூறினீர்கள். பக்தியால் அடையும் ஆனந்தத்தை, விஷய சுகங்களில் ஈடுபடுவோர் எவ்வாறு அடைய முடியும்?

त्वत्भक्त्या तुष्टबुद्धे: सुखमिह चरतो विच्युताशस्य चाशा:
सर्वा: स्यु: सौख्यमय्य: सलिलकुहरगस्येव तोयैकमय्य: ।
सोऽयं खल्विन्द्रलोकं कमलजभवनं योगसिद्धीश्च हृद्या:
नाकाङ्क्षत्येतदास्तां स्वयमनुपतिते मोक्षसौख्येऽप्यनीह: ॥४॥

த்வத்ப₄க்த்யா துஷ்டபு₃த்₃தே₄: ஸுக₂மிஹ சரதோ விச்யுதாஶஸ்ய சாஶா:
ஸர்வா: ஸ்யு: ஸௌக்₂யமய்ய: ஸலிலகுஹரக₃ஸ்யேவ தோயைகமய்ய: |
ஸோ(அ)யம் க₂ல்விந்த்₃ரலோகம் கமலஜப₄வநம் யோக₃ஸித்₃தீ₄ஶ்ச ஹ்ருத்₃யா:
நாகாங்க்ஷத்யேததா₃ஸ்தாம் ஸ்வயமநுபதிதே மோக்ஷஸௌக்₂யே(அ)ப்யநீஹ: || 4||

4. உம்மிடம் கொண்ட பக்தியால் ஆனந்தித்திருப்பவன், உலகில் உள்ள எல்லா ஆசைகளையும் விட்டு சுகமாக இருக்கிறான். எல்லாத் திசைகளும் அவனுக்குச் சுகமானதாக இருக்கும். நீரில் மூழ்கிய குடத்தின் உள்ளேயும் வெளியேயும் நீர் இருப்பதுபோல், அவன் எங்கும், எதிலும் சந்தோஷமடைந்தவனாக இருக்கின்றான். அவன் இந்திரலோகத்தையோ, ஸத்யலோகத்தையோ, சித்திகளையோ விரும்புவதில்லை. அது மட்டுமில்லாமல், தானாகவே மோக்ஷம் கிடைத்தாலும் கூட அவன் விரும்புவதில்லை.

त्वद्भक्तो बाध्यमानोऽपि च विषयरसैरिन्द्रियाशान्तिहेतो-
र्भक्त्यैवाक्रम्यमाणै: पुनरपि खलु तैर्दुर्बलैर्नाभिजय्य: ।
सप्तार्चिर्दीपितार्चिर्दहति किल यथा भूरिदारुप्रपञ्चं
त्वद्भक्त्योघे तथैव प्रदहति दुरितं दुर्मद: क्वेन्द्रियाणाम् ॥५॥

த்வத்₃ப₄க்தோ பா₃த்₄யமாநோ(அ)பி ச விஷயரஸைரிந்த்₃ரியாஶாந்திஹேதோ-
ர்ப₄க்த்யைவாக்ரம்யமாணை: புநரபி க₂லு தைர்து₃ர்ப₃லைர்நாபி₄ஜய்ய: |
ஸப்தார்சிர்தீ₃பிதார்சிர்த₃ஹதி கில யதா₂ பூ₄ரிதா₃ருப்ரபஞ்சம்
த்வத்₃ப₄க்த்யோகே₄ ததை₂வ ப்ரத₃ஹதி து₃ரிதம் து₃ர்மத₃: க்வேந்த்₃ரியாணாம் || 5||

5. உம்முடைய பக்தன் புலன்களை முழுமையாகக் கட்டுப்படுத்த முடியாமல் துன்பப்படுகிறான். ஆயினும் அவனுடைய பக்தியால் இந்திரியங்களை அவன் வெல்கிறான். கொழுந்து விட்டு எரியும் நெருப்பு அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் மரக்கட்டைகளை எவ்வாறு எரிக்கிறதோ, அதே போலத் தங்களிடம் வைத்த பக்தியானது பாபங்கள் அனைத்தையும் அழிக்கிறது. அப்போது புலன்கள் கட்டுப்பட்டு அடங்குகிறது.

चित्तार्द्रीभावमुच्चैर्वपुषि च पुलकं हर्षवाष्पं च हित्वा
चित्तं शुद्ध्येत्कथं वा किमु बहुतपसा विद्यया वीतभक्ते: ।
त्वद्गाथास्वादसिद्धाञ्जनसततमरीमृज्यमानोऽयमात्मा
चक्षुर्वत्तत्त्वसूक्ष्मं भजति न तु तथाऽभ्यस्तया तर्ककोट्या॥६॥

சித்தார்த்₃ரீபா₄வமுச்சைர்வபுஷி ச புலகம் ஹர்ஷவாஷ்பம் ச ஹித்வா
சித்தம் ஶுத்₃த்₄யேத்கத₂ம் வா கிமு ப₃ஹுதபஸா வித்₃யயா வீதப₄க்தே: |
த்வத்₃கா₃தா₂ஸ்வாத₃ஸித்₃தா₄ஞ்ஜநஸததமரீம்ருஜ்யமாநோ(அ)யமாத்மா
சக்ஷுர்வத்தத்த்வஸூக்ஷ்மம் ப₄ஜதி ந து ததா₂(அ)ப்₄யஸ்தயா தர்ககோட்யா|| 6||

6. உள்ளத்தில் அன்பும், உடலில் மயிர்க்கூச்சலும், கண்களில் ஆனந்தக் கண்ணீரும் இல்லாவிட்டால் மனத்தூய்மை எவ்வாறு ஏற்படும்? பக்தியில்லாதவனுக்குத் தவத்தாலும், ஞானத்தாலும் பயனில்லை. உம்முடைய சரித்திரங்களைக் கேட்டு அனுபவிப்பதால், மனம் பரிசுத்தம் அடைந்து, உண்மையான தத்வக்ஞானத்தை அடைகிறது. தர்க்க வாதங்களைப் படிப்பதால் தத்வக்ஞானத்தை அடைய முடிவதில்லை.

ध्यानं ते शीलयेयं समतनुसुखबद्धासनो नासिकाग्र-
न्यस्ताक्ष: पूरकाद्यैर्जितपवनपथश्चित्तपद्मं त्ववाञ्चम्।
ऊर्ध्वाग्रं भावयित्वा रविविधुशिखिन: संविचिन्त्योपरिष्टात्
तत्रस्थं भावये त्वां सजलजलधरश्यामलं कोमलाङ्गम् ॥७॥

த்₄யாநம் தே ஶீலயேயம் ஸமதநுஸுக₂ப₃த்₃தா₄ஸநோ நாஸிகாக்₃ர-
ந்யஸ்தாக்ஷ: பூரகாத்₃யைர்ஜிதபவநபத₂ஶ்சித்தபத்₃மம் த்வவாஞ்சம்|
ஊர்த்₄வாக்₃ரம் பா₄வயித்வா ரவிவிது₄ஶிகி₂ந: ஸம்விசிந்த்யோபரிஷ்டாத்
தத்ரஸ்த₂ம் பா₄வயே த்வாம் ஸஜலஜலத₄ரஶ்யாமலம் கோமலாங்க₃ம் || 7||

7. உம்மைத் தியானம் செய்யும் முறையைக் கற்க வேண்டும். உடல் வளையாமல் நிமிர்ந்து, சுகாசனத்தில் அமர்ந்து, புருவங்களின் மத்தியில் உள்ள மூக்கின் நுனியைப் பார்த்துக் கொண்டு, பூரகம் முதலியவற்றால் மூச்சைக் கட்டுப்படுத்தி, கீழ்நோக்கிய இதயத்தாமரையை மேல்நோக்கி இருப்பதாய்ப் பாவித்து, அதன் மேல் சூரியன், சந்திரன், அக்னி மண்டலங்களை வரிசையாய்க் கற்பனை செய்து தியானிப்பேன். கடைசியில், அக்னி மண்டலத்தின்மேல் நீருண்ட மேகம் போல் ஸ்யாமள வர்ணனாய், மிக்க அழகிய வடிவத்தை உடையவராகத் தங்களைத் தியானிப்பேன்.

आनीलश्लक्ष्णकेशं ज्वलितमकरसत्कुण्डलं मन्दहास-
स्यन्दार्द्रं कौस्तुभश्रीपरिगतवनमालोरुहाराभिरामम् ।
श्रीवत्साङ्कं सुबाहुं मृदुलसदुदरं काञ्चनच्छायचेलं
चारुस्निग्धोरुमम्भोरुहललितपदं भावयेऽहं भवन्तम् ॥८॥

ஆநீலஶ்லக்ஷ்ணகேஶம் ஜ்வலிதமகரஸத்குண்ட₃லம் மந்த₃ஹாஸ-
ஸ்யந்தா₃ர்த்₃ரம் கௌஸ்துப₄ஶ்ரீபரிக₃தவநமாலோருஹாராபி₄ராமம் |
ஶ்ரீவத்ஸாங்கம் ஸுபா₃ஹும் ம்ருது₃லஸது₃த₃ரம் காஞ்சநச்சா₂யசேலம்
சாருஸ்நிக்₃தோ₄ருமம்போ₄ருஹலலிதபத₃ம் பா₄வயே(அ)ஹம் ப₄வந்தம் || 8||

8. கருத்த மிருதுவான கேசங்கள், காதுகளில் பிரகாசிக்கும் மீன்வடிவ குண்டலங்கள், அழகிய புன்முறுவல், பிரகாசிக்கும் கௌஸ்துபமென்ற மணி, வனமாலை, முத்துமாலை இவைகளால் மிகுந்த மனோகரமாய் இருக்கும் தங்களைத் தியானிக்கிறேன். ஸ்ரீவத்ஸம் என்னும் மரு, அழகிய திருக்கரங்கள், மிருதுவான வயிறு, தங்கத்தைப் போல் பிரகாசிக்கும் பீதாம்பரம், வனப்பான இரு தொடைகள், தாமரை போன்ற பாதங்கள் இவைகளுடன் விளங்கும் தங்களுடைய ரூபத்தைத் தியானிக்கிறேன்.

सर्वाङ्गेष्वङ्ग रङ्गत्कुतुकमिति मुहुर्धारयन्नीश चित्तं
तत्राप्येकत्र युञ्जे वदनसरसिजे सुन्दरे मन्दहासे
तत्रालीनं तु चेत: परमसुखचिदद्वैतरूपे वितन्व-
न्नन्यन्नो चिन्तयेयं मुहुरिति समुपारूढयोगो भवेयम् ॥९॥

ஸர்வாங்கே₃ஷ்வங்க₃ ரங்க₃த்குதுகமிதி முஹுர்தா₄ரயந்நீஶ சித்தம்
தத்ராப்யேகத்ர யுஞ்ஜே வத₃நஸரஸிஜே ஸுந்த₃ரே மந்த₃ஹாஸே
தத்ராலீநம் து சேத: பரமஸுக₂சித₃த்₃வைதரூபே விதந்வ-
ந்நந்யந்நோ சிந்தயேயம் முஹுரிதி ஸமுபாரூட₄யோகோ₃ ப₄வேயம் || 9||

9. ஈசனே! தங்களுடைய எல்லா அங்கங்களிலும் மீண்டும் மீண்டும் என் மனதைச் செலுத்துவேன். புன்முறுவலுடன் கூடிய அழகிய தாமரையைப் போன்ற தங்கள் முகத்தில் என் மனதை லயிக்கச் செய்வேன். அவ்வாறு ஒன்றிய மனதை பரமானந்தமான, சச்சிதானந்த வடிவத்தில் நிலைநிறுத்தி வேறு ஒன்றையும் நினைக்காமல் இருப்பேன். இவ்வாறு அடிக்கடி செய்து தியான யோகத்தில் முன்னேறுவேன்.

इत्थं त्वद्ध्यानयोगे सति पुनरणिमाद्यष्टसंसिद्धयस्ता:
दूरश्रुत्यादयोऽपि ह्यहमहमिकया सम्पतेयुर्मुरारे ।
त्वत्सम्प्राप्तौ विलम्बावहमखिलमिदं नाद्रिये कामयेऽहं
त्वामेवानन्दपूर्णं पवनपुरपते पाहि मां सर्वतापात् ॥१०॥

இத்த₂ம் த்வத்₃த்₄யாநயோகே₃ ஸதி புநரணிமாத்₃யஷ்டஸம்ஸித்₃த₄யஸ்தா:
தூ₃ரஶ்ருத்யாத₃யோ(அ)பி ஹ்யஹமஹமிகயா ஸம்பதேயுர்முராரே |
த்வத்ஸம்ப்ராப்தௌ விலம்பா₃வஹமகி₂லமித₃ம் நாத்₃ரியே காமயே(அ)ஹம்
த்வாமேவாநந்த₃பூர்ணம் பவநபுரபதே பாஹி மாம் ஸர்வதாபாத் || 10||

10. முரனைக் கொன்றவனே! இவ்வாறு செய்யும்போது அஷ்டசித்திகளும், வெகு தொலைவில் பேசுவதைக் கேட்கும் சக்தி, வெகு தொலைவில் நடப்பதைப் பார்க்கும் சக்தி ஆகிய சித்திகளும் ஒன்றையொன்று முந்திக்கொண்டு என்னை அடையும். தங்களை அடைவதற்கு அவை இடையூறாக இருப்பதால் அவற்றை நான் விரும்பமாட்டேன். ஆனந்தமயமான தங்களையே விரும்புகிறேன். குருவாயூரப்பா! அனைத்துத் துன்பங்களிலிருந்தும் என்னைக் காக்க வேண்டும்.

Monday, June 2, 2014

ஸ்ரீ நாராயணீயம் - தசகம் 94

ஸ்ரீ நாராயணீயம் - தசகம் 94, ஸ்ரீ நாராயணீயம் 94வது தசகம், ஸ்ரீமந் நாராயணீயம், ஸ்ரீ நாராயணீயம், ஸ்ரீமத் நாராயணீயம், நாராயணீயம், ஸ்ரீமன் நாராயணீயம், Narayaneeyam, Sree Narayaneeyam, Sriman narayaneeyam,Srimad Narayaneeyam

த³ஶகம் -94
தத்வக்ஞான உற்பத்தி

शुद्धा निष्कामधर्मै: प्रवरगुरुगिरा तत्स्वरूपं परं ते
शुद्धं देहेन्द्रियादिव्यपगतमखिलव्याप्तमावेदयन्ते ।
नानात्वस्थौल्यकार्श्यादि तु गुणजवपुस्सङ्गतोऽध्यासितं ते
वह्नेर्दारुप्रभेदेष्विव महदणुतादीप्तताशान्ततादि ॥१॥

ஶுத்₃தா₄ நிஷ்காமத₄ர்மை: ப்ரவரகு₃ருகி₃ரா தத்ஸ்வரூபம் பரம் தே
ஶுத்₃த₄ம் தே₃ஹேந்த்₃ரியாதி₃வ்யபக₃தமகி₂லவ்யாப்தமாவேத₃யந்தே |
நாநாத்வஸ்தௌ₂ல்யகார்ஶ்யாதி₃ து கு₃ணஜவபுஸ்ஸங்க₃தோ(அ)த்₄யாஸிதம் தே
வஹ்நேர்தா₃ருப்ரபே₄தே₃ஷ்விவ மஹத₃ணுதாதீ₃ப்ததாஶாந்ததாதி₃ || 1||

1. பலனை விரும்பாமல் தர்மங்களைச் செய்பவர்கள், நல்ல குருவின் மூலம், ஐம்புலன்களில் இருந்து வேறுபட்டதும், எங்கும் வியாபித்திருப்பதுமான உம்முடைய வடிவத்தை அறிகிறார்கள். பலவகை மரக்கட்டைகளில் தொடர்பு கொண்ட அக்னி எவ்வாறு சிறியது, பெரியது எனப் பலவகையாகத் தோன்றுகிறதோ, அவ்வாறே பலவகைக் குணங்களால் செய்யப்பட்ட உடல்களின் சம்பந்தத்தால் பலவிதமாய்த் தோன்றுகின்றீர்.

आचार्याख्याधरस्थारणिसमनुमिलच्छिष्यरूपोत्तरार-
ण्यावेधोद्भासितेन स्फुटतरपरिबोधाग्निना दह्यमाने ।
कर्मालीवासनातत्कृततनुभुवनभ्रान्तिकान्तारपूरे
दाह्याभावेन विद्याशिखिनि च विरते त्वन्मयी खल्ववस्था ॥२॥

ஆசார்யாக்₂யாத₄ரஸ்தா₂ரணிஸமநுமிலச்சி₂ஷ்யரூபோத்தரார-
ண்யாவேதோ₄த்₃பா₄ஸிதேந ஸ்பு₂டதரபரிபோ₃தா₄க்₃நிநா த₃ஹ்யமாநே |
கர்மாலீவாஸநாதத்க்ருததநுபு₄வநப்₄ராந்திகாந்தாரபூரே
தா₃ஹ்யாபா₄வேந வித்₃யாஶிகி₂நி ச விரதே த்வந்மயீ க₂ல்வவஸ்தா₂ || 2||

2. குரு என்கிற அடி அரணிக்கட்டையும், சிஷ்யன் என்கிற மேல் அரணிக்கட்டையும் உரசுவதால், மிகத் தெளிவான ஞானம் என்னும் தீப்பொறி உண்டாகிறது. அந்தத் தீயால், கர்மங்களின் கூட்டம், அதனால் உண்டான இந்த உடல், உலகம் என்னும் காடுகள் எரிக்கப்படுகிறது. எரிக்கப் பொருள் இல்லையெனில் ஞானமாகிற அந்தத் தீ அமைதியாய் அடங்குகின்றது. எஞ்சியுள்ள ஓர் நிலை தங்கள் வடிவமாக இருக்கின்றது.

एवं त्वत्प्राप्तितोऽन्यो नहि खलु निखिलक्लेशहानेरुपायो
नैकान्तात्यन्तिकास्ते कृषिवदगदषाड्गुण्यषट्कर्मयोगा: ।
दुर्वैकल्यैरकल्या अपि निगमपथास्तत्फलान्यप्यवाप्ता
मत्तास्त्वां विस्मरन्त: प्रसजति पतने यान्त्यनन्तान् विषादान्॥३॥

ஏவம் த்வத்ப்ராப்திதோ(அ)ந்யோ நஹி க₂லு நிகி₂லக்லேஶஹாநேருபாயோ
நைகாந்தாத்யந்திகாஸ்தே க்ருஷிவத₃க₃த₃ஷாட்₃கு₃ண்யஷட்கர்மயோகா₃: |
து₃ர்வைகல்யைரகல்யா அபி நிக₃மபதா₂ஸ்தத்ப₂லாந்யப்யவாப்தா
மத்தாஸ்த்வாம் விஸ்மரந்த: ப்ரஸஜதி பதநே யாந்த்யநந்தாந் விஷாதா₃ந்|| 3||

3. அனைத்து துக்கங்களையும் போக்கும் ஒரே வழி உம்மை அடைவதுதான். ஆயுர்வேதத்தில் சொல்லப்பட்ட மருந்துகளோ, ராஜநீதியில் சொல்லப்பட்ட வழிமுறைகளோ, தர்மநூல்களில் சொல்லப்பட்ட கர்மங்களோ, வேதத்தில் கூறப்பட்ட யோகங்களோ துன்பத்தைப் போக்கி மீண்டும் வராமல் தடுக்கும் சக்தியற்றவை. மற்ற வழிகளும் கடினமானவை. ஆயினும், அந்த வழிகளைப் பின்பற்றிப் பலனை அடைந்து, அதனால் செருக்கடைந்து, தங்களை மறந்து விடுகின்றனர். வீழ்ச்சி ஏற்படும்போது அளவற்ற துன்பங்களை அடைகின்றனர்.

त्वल्लोकादन्यलोक: क्वनु भयरहितो यत् परार्धद्वयान्ते
त्वद्भीतस्सत्यलोकेऽपि न सुखवसति: पद्मभू: पद्मनाभ ।
एवं भावे त्वधर्मार्जितबहुतमसां का कथा नारकाणां
तन्मे त्वं छिन्धि बन्धं वरद् कृपणबन्धो कृपापूरसिन्धो ॥४॥

த்வல்லோகாத₃ந்யலோக: க்வநு ப₄யரஹிதோ யத் பரார்த₄த்₃வயாந்தே
த்வத்₃பீ₄தஸ்ஸத்யலோகே(அ)பி ந ஸுக₂வஸதி: பத்₃மபூ₄: பத்₃மநாப₄ |
ஏவம் பா₄வே த்வத₄ர்மார்ஜிதப₃ஹுதமஸாம் கா கதா₂ நாரகாணாம்
தந்மே த்வம் சி₂ந்தி₄ ப₃ந்த₄ம் வரத்₃ க்ருபணப₃ந்தோ₄ க்ருபாபூரஸிந்தோ₄ || 4||

4. பத்மநாபா! தங்கள் இருப்பிடமான வைகுண்டத்தைத் தவிர பயமற்ற உலகம் வேறில்லை. ஏனெனில், இரு பரார்த்தங்கள் முடிந்த பின்னும், பிரும்மன் பயத்தினால் ஸத்யலோகத்தில் சுகமாய் வாழவில்லை. இவ்வாறிருக்க, அதர்மங்களைச் செய்து நரகத்தில் இருப்பவர்களைப் பற்றி என்ன சொல்வது? வரதனே! துன்பமடைந்தவர்களைக் காப்பவனே! கருணைக் கடலே! எனது பந்தங்களை அறுக்க வேண்டும்.

याथार्थ्यात्त्वन्मयस्यैव हि मम न विभो वस्तुतो बन्धमोक्षौ
मायाविद्यातनुभ्यां तव तु विरचितौ स्वप्नबोधोपमौ तौ ।
बद्धे जीवद्विमुक्तिं गतवति च भिदा तावती तावदेको
भुङ्क्ते देहद्रुमस्थो विषयफलरसान्नापरो निर्व्यथात्मा ॥५॥

யாதா₂ர்த்₂யாத்த்வந்மயஸ்யைவ ஹி மம ந விபோ₄ வஸ்துதோ ப₃ந்த₄மோக்ஷௌ
மாயாவித்₃யாதநுப்₄யாம் தவ து விரசிதௌ ஸ்வப்நபோ₃தோ₄பமௌ தௌ |
ப₃த்₃தே₄ ஜீவத்₃விமுக்திம் க₃தவதி ச பி₄தா₃ தாவதீ தாவதே₃கோ
பு₄ங்க்தே தே₃ஹத்₃ருமஸ்தோ₂ விஷயப₂லரஸாந்நாபரோ நிர்வ்யதா₂த்மா || 5||

5. உண்மையில் உம்மிடத்தில் ஒன்றிவிட்டதால் எனக்கு பந்தமோ, மோக்ஷமோ கிடையாது. அவை உன் மாயையின் அம்சங்கள். கனவும், விழிப்பும் போன்றது. பந்தமுள்ளவனுக்கும், ஜீவன்முக்தனுக்கும் உள்ள வேற்றுமை அவ்விதமானதுதான். பந்தமுள்ளவன், சரீரமென்னும் மரத்தில் இருந்துகொண்டு விஷய சுகங்களாகிற பழங்களை அனுபவிக்கிறான். ஜீவன்முக்தன் அவற்றில் ஈடுபடாமல் துக்கமற்றவனாய் இருக்கிறான்.

जीवन्मुक्तत्वमेवंविधमिति वचसा किं फलं दूरदूरे
तन्नामाशुद्धबुद्धेर्न च लघु मनसश्शोधनं भक्तितोऽन्यत् ।
तन्मे विष्णो कृषीष्ठास्त्वयि कृतसकलप्रार्पणं भक्तिभारं
येन स्यां मङ्क्षु किञ्चिद् गुरुवचनमिलत्त्वत्प्रबोधस्त्वदात्मा ॥६॥

ஜீவந்முக்தத்வமேவம்வித₄மிதி வசஸா கிம் ப₂லம் தூ₃ரதூ₃ரே
தந்நாமாஶுத்₃த₄பு₃த்₃தே₄ர்ந ச லகு₄ மநஸஶ்ஶோத₄நம் ப₄க்திதோ(அ)ந்யத் |
தந்மே விஷ்ணோ க்ருʼஷீஷ்டா₂ஸ்த்வயி க்ருதஸகலப்ரார்பணம் ப₄க்திபா₄ரம்
யேந ஸ்யாம் மங்க்ஷு கிஞ்சித்₃ கு₃ருவசநமிலத்த்வத்ப்ரபோ₃த₄ஸ்த்வதா₃த்மா || 6||

6. ஜீவன்முக்தனின் நிலை இதுதான் என்று கூறுவதால் என்ன பயன்? மனத்தூய்மை இல்லாதவனுக்கு அந்நிலை கிடைக்காது. மனதை சுலபமாகத் தூய்மைப்படுத்துவது பக்தி ஒன்றே. விஷ்ணுவே! உம்மிடம் அனைத்தையும் அர்ப்பணிக்கும் திடமான பக்தியை அளிக்க வேண்டும். அந்தப் பக்தியால் குருவின் உபதேசம் பெற்று, தத்வக்ஞானத்தை அடைந்து, விரைவில் உம்மிடமே ஒன்றிவிடுவேன்.

शब्द्ब्रह्मण्यपीह प्रयतितमनसस्त्वां न जानन्ति केचित्
कष्टं वन्ध्यश्रमास्ते चिरतरमिह गां बिभ्रते निष्प्रसूतिम् ।
यस्यां विश्वाभिरामास्सकलमलहरा दिव्यलीलावतारा:
सच्चित्सान्द्रं च रूपं तव न निगदितं तां न वाचं भ्रियासम् ॥७॥

ஶப்₃த்₃ப்₃ரஹ்மண்யபீஹ ப்ரயதிதமநஸஸ்த்வாம் ந ஜாநந்தி கேசித்
கஷ்டம் வந்த்₄யஶ்ரமாஸ்தே சிரதரமிஹ கா₃ம் பி₃ப்₄ரதே நிஷ்ப்ரஸூதிம் |
யஸ்யாம் விஶ்வாபி₄ராமாஸ்ஸகலமலஹரா தி₃வ்யலீலாவதாரா:
ஸச்சித்ஸாந்த்₃ரம் ச ரூபம் தவ ந நிக₃தி₃தம் தாம் ந வாசம் ப்₄ரியாஸம் || 7||

7. சிலர் வேதத்தைக் கற்று அதிலேயே மூழ்கிய மனம் உடையவர்களாய் இருந்தாலும் உம்மை அறிவதில்லை. அவர்கள் கன்று போடாத மலட்டுப் பசுவைப் போல், வீண் முயற்சி செய்பவர்கள். கிருஷ்ணா! மனதைக் கவர்ந்து பாபங்களைப் போக்கும் உமது லீலைகளையும், சச்சிதானந்த ஸ்வரூபமான தங்களையும், தங்கள் அவதாரங்களையும் பற்றிக் கூறாத அந்த வார்த்தைகளின் பின்னால் நான் செல்லாமல் இருக்க வேண்டும்.

यो यावान् यादृशो वा त्वमिति किमपि नैवावगच्छामि भूम्-
न्नेवञ्चानन्यभावस्त्वदनुभजनमेवाद्रिये चैद्यवैरिन् ।
त्वल्लिङ्गानां त्वदङ्घ्रिप्रियजनसदसां दर्शनस्पर्शनादि-
र्भूयान्मे त्वत्प्रपूजानतिनुतिगुणकर्मानुकीर्त्यादरोऽपि ॥८॥

யோ யாவாந் யாத்₃ருஶோ வா த்வமிதி கிமபி நைவாவக₃ச்சா₂மி பூ₄ம்-
ந்நேவஞ்சாநந்யபா₄வஸ்த்வத₃நுப₄ஜநமேவாத்₃ரியே சைத்₃யவைரிந் |
த்வல்லிங்கா₃நாம் த்வத₃ங்க்₄ரிப்ரியஜநஸத₃ஸாம் த₃ர்ஶநஸ்பர்ஶநாதி₃-
ர்பூ₄யாந்மே த்வத்ப்ரபூஜாநதிநுதிகு₃ணகர்மாநுகீர்த்யாத₃ரோ(அ)பி || 8||

8. பரிபூரணனே! உம்முடைய் வடிவம் என்ன? மகிமை எவ்வளவு? என்பதை நான் அறியேன். ஆனால் வேறொன்றையும் விரும்பாமல் உம்மையே பஜிக்கிறேன். சிசுபாலனின் எதிரியான கிருஷ்ணா! உம்முடைய அழகிய ரூபங்களையும், உம்முடைய பாதங்களையே அண்டியிருக்கும் பக்தர்களையும் தரிசித்து, அவர்களோடு சேர வேண்டும். உம்மைப் போற்றிப் பாடி, நமஸ்கரித்து, உமது குணங்களையும் திருவிளையாடல்களையும் பேசிக் கொண்டு, உம்மிடத்தில் பற்றுள்ளவனாக நான் இருக்க வேண்டும்.

यद्यल्लभ्येत तत्तत्तव समुपहृतं देव दासोऽस्मि तेऽहं
त्वद्गेहोन्मार्जनाद्यं भवतु मम मुहु: कर्म निर्मायमेव ।
सूर्याग्निब्राह्मणात्मादिषु लसितचतुर्बाहुमाराधये त्वां
त्वत्प्रेमार्द्रत्वरूपो मम सततमभिष्यन्दतां भक्तियोग: ॥९॥

யத்₃யல்லப்₄யேத தத்தத்தவ ஸமுபஹ்ருதம் தே₃வ தா₃ஸோ(அ)ஸ்மி தே(அ)ஹம்
த்வத்₃கே₃ஹோந்மார்ஜநாத்₃யம் ப₄வது மம முஹு: கர்ம நிர்மாயமேவ |
ஸூர்யாக்₃நிப்₃ராஹ்மணாத்மாதி₃ஷு லஸிதசதுர்பா₃ஹுமாராத₄யே த்வாம்
த்வத்ப்ரேமார்த்₃ரத்வரூபோ மம ஸததமபி₄ஷ்யந்த₃தாம் ப₄க்தியோக₃: || 9||

9. என்னுடைய அனைத்துப் பொருட்களையும் தங்களிடமே அர்ப்பணிக்கிறேன். தங்களுக்கே அடிமையாக இருப்பேன். உம்முடைய ஆலயத்தை சுத்தம் செய்வது போன்ற தொண்டுகள் செய்வேன். சூரியன், அக்னி, பிராமணன், தன் ஹ்ருதயம், பசு ஆகியவற்றில் நான்கு கைகளுடன் விளங்கும் தங்களை ஆராதிப்பேன். அன்பினால் நனைந்த என் இதயம் இடைவிடாமல் பக்தி யோகத்தில் ஈடுபட வேண்டும்.

ऐक्यं ते दानहोमव्रतनियमतपस्सांख्ययोगैर्दुरापं
त्वत्सङ्गेनैव गोप्य: किल सुकृतितमा प्रापुरानन्दसान्द्रम् ।
भक्तेष्वन्येषु भूयस्स्वपि बहुमनुषे भक्तिमेव त्वमासां
तन्मे त्वद्भक्तिमेव द्रढय हर गदान् कृष्ण वातालयेश ॥१०॥

ஐக்யம் தே தா₃நஹோமவ்ரதநியமதபஸ்ஸாம்க்₂யயோகை₃ர்து₃ராபம்
த்வத்ஸங்கே₃நைவ கோ₃ப்ய: கில ஸுக்ருதிதமா ப்ராபுராநந்த₃ஸாந்த்₃ரம் |
ப₄க்தேஷ்வந்யேஷு பூ₄யஸ்ஸ்வபி ப₃ஹுமநுஷே ப₄க்திமேவ த்வமாஸாம்
தந்மே த்வத்₃ப₄க்திமேவ த்₃ரட₄ய ஹர க₃தா₃ந் க்ருஷ்ண வாதாலயேஶ || 10||

10. ஹே குருவாயூரப்பா! தங்களுடனான ஐக்கியம், தானம், ஹோமம்,
தவம், யோகம் முதலியவற்றால் அடைய முடியாதது. புண்ணியசாலிகளான கோபிகைகள் உம்முடன் ஐக்கியத்தை அடைந்தார்கள். பலர் தங்களிடம் பக்தியுடன் இருந்தும், கோபிகைகளின் பக்தியையே மிகவும் விரும்புகின்றீர். ஆகையால், உம்மிடம் உள்ள எனது பக்தியானது உறுதியாக இருக்க அருள வேண்டும். கிருஷ்ணா! என் நோய்களைப் போக்க வேண்டும்.