Tuesday, July 24, 2012

தில்லையம்பூர் ஸ்ரீ வேணுகோபால ஸ்வாமி திருக்கோயில் / கண்ணுக்கினியன கண்டோம்-6

Photo courtesy: "THE HINDU"
தில்லையம்பூர் .....இந்த ஊர் வலங்கைமான் அருகே, கும்பகோணம் தாலுக்காவில் , தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ளது. 

இந்த ஊர் என் பிறந்த வீட்டின் பூர்வீகம். புகுந்த வீட்டின் பூர்வீகமான தென்சிறுவளூர் - ஸ்ரீதேவி பூதேவி ஸமேத அழகிய மணவாளப்பெருமாள் கோயில் பற்றி சில நாட்களுக்கு முன்பு ஒரு பதிவு அமைக்கப்பெற்றது எனது பாக்கியம். சமீபத்தில் என்னுடைய தம்பி தில்லையம்பூருக்குச் சென்று வந்து படங்கள் அனுப்பி இருந்தான். அதற்குப் பிறகு இந்த ஊரைப்பற்றி ஒரு பதிவு இட வேண்டும் என்ற அவாவில் இதை எழுதுகிறேன்.
இந்த ஊரின் வரலாறு:

சோழ மன்னர்கள் ஆட்சிக்கு உட்பட்டிருந்த சிற்றரசர்களில் , தில்லைராயன் என்ற சிற்றரசன் , இந்த ஊரை ஆண்டதாக வரலாறு சொல்கிறது. தில்லையை (தற்கால சிதம்பரம்) ராஜதானியாகக்கொண்டு அந்த சிற்றரசன் ஆண்ட ஊர்களில் இந்த ஊரும் ஒன்று என்று சொல்லப்படுகிறது . இது பற்றிய விவரங்கள் சோழர் காலக் கல்வெட்டுக்களில் உள்ளதாம்.

வேதங்களைக் கற்றுணர்ந்து, உயர்ந்த பெரியோர்கள் இங்கு வாழ்ந்து வந்ததாகவும் தெரிகிறது . தில்லையம்பூர் ஸ்ரீவேங்கடராம அய்யங்கார் , தில்லியம்பூர் ஸ்ரீ சக்ரவர்த்தி ஆச்சார்ய ஸ்வாமி, தில்லையம்பூர் சந்திரசேகர கவிராஜ பண்டிதர், போன்ற சிறந்த வித்வான்களும் பண்டிதர்களும் இந்த ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள் என்ற பெருமையும் இந்த ஊருக்கு உண்டு. அவர்கள் வாழ்ந்த காலத்தையும் , அந்த வரலாறுகளையும் முழுமையாக அறிந்து கொள்ள இயலவில்லை.

இதை படித்து, யாராவது மேலும் விவரங்கள் கொடுத்தால், மிகுந்த சந்தோஷப்படுவேன். விவரம் தெரிந்தவர்கள் மறுமொழி அனுப்புங்கள் அல்லது என் ஈ-மெயிலுக்கு setlur.shanu@gmail.com எழுதுங்கள்.

குடமுருட்டி ( காவிரியின் கிளை) ஆற்றின் தெற்குக் கரையில், தில்லையம்பூர் என்ற இந்த சிறிய, அழகிய கிராமம் அமைந்துள்ளது. இயற்கை அழகும் பசுமையும் கூடியதாக இருக்கிறது . சுற்றுப்பட்டு கிராமங்களில் பேச்சு வழக்கில் தில்லியம்பூர், தில்லிம்பூர்,என்று சொல்லப்படுகிறது.



அக்ரஹாரமும், பெருமாள் கோயிலும் அமைந்துள்ளன. அக்ரஹாரத்தில் நிறைய வீடுகள் உள்ளன. அதில் எங்கள் தாத்தா ராஜகோபால ஐயங்கார் அவர்களின் வீடும் சிதிலமடைந்த நிலையில் உள்ளது. 




இனி, எங்கள் பூர்வீகமான தில்லையம்பூரில் உள்ள, புராதனமான ஸ்ரீ வேணுகோபால ஸ்வாமி திருக்கோயில்  பற்றிய விவரங்கள்:


மூலவர்: ஸ்ரீ வேணுகோபாலன். பாதுகைகளுடன் கூடிய பொலிந்து நின்ற திருவடிகளுடன் காட்சி தருவது தனிச்சிறப்பு.

ஸ்ரீதேவி, பூதேவி ஸமேதராய்க் காட்சி தருகிறார். சதுர் புஜங்களுடன் சங்கு சக்ரம் ஏந்தி சேவை சாதிக்கிறார். உள்ளத்தை அள்ளும் புன்முறுவலுடன் கூடிய திருமுகம்.

யதாதாரம் விஶ்வம் கதிரபி ச யஸ்தஸ்ய பரமா
தமப்யேகா தத்ஸே திஶசி ச கதிம் தஸ்ய ருசிராம்
கதம் ஸா கம்ஸாரேர் த்ருஹிணஹர துர்போத மஹிமா
கவீநாம் க்ஷுத்ராணாம் த்வம் அஸி மணிபாது ஸ்துதிபதம் 

- ஸ்ரீ பாதுகா ஸஹஸ்ரம் - 1.9

“இந்த பிரபஞ்சம் / உலகம் முழுவதையும் தாங்கும் பெருமாளை, நீ ஒருவளாகத் தாங்குகிறாயே!” என்று ஸ்வாமி தேசிகன் வியந்தது போல் நம்மையும் வியக்க வைக்கும் பாதுகையுடன் கூடிய திருவடிகள் !!!!

பெருந்தேவித்தாயார்,ஆண்டாள், ஆஞ்சநேயர் தனிச்சந்நிதியில் எழுந்தருளி
அருள் பாலிக்கிறார்கள்.

"கண்டோம் கண்டோம் கண்டோம்
கண்ணுக் கினியன கண்டோம்"
என்று நம்மாழ்வாரைப் போலவே நாமும் பாடி, அவன் அருளால் அவன் தாள்
வணங்குவோம்.

அடியேனும் கூடிய சீக்கிரம் அவனை ஸேவிக்க, அந்த வேணுகோபாலனிடமே பிரார்த்திக்கிறேன்.

திருக்கோயில் முகவரி :

துவாரகா அக்ரஹாரம், தில்லையம்பூர் ,
வலங்கைமான் அருகில், தஞ்சாவூர்- 612 804
Dwaraka Agraharam, Thillaiambur (near Valangiman), Thanjavur - 612 804.

Tuesday, May 15, 2012

MALLESWARAM SRI LAKSHMINARASIMHA SWAMY TEMPLE/ கண்ணுக்கினியன கண்டோம்-5



Ugram Veeram Mahaa-Vishnum
Jwalantham Sarvatho Mukham
| 
Nrisimham Bheeshanam Bhadram
Mrityu-Mrityum Namaamyaham
| |

Malleswaram is one of the areas in Bangalore where there are many temples.

Venkoji Rao, brother of Chathrapathi Shivaji, had a divine dream wherein Lord Shiva told him to build a temple. While searching, he found a small hillock, where he saw the Udbhava Murthy of Lord Shiva and in that place he built a temple, which is today's Kaadu Malleswara Temple. It is from this temple the place got its name "Malleswaram".

There is another small hillock next to Kaadu Malleswara temple, and it was here the Udbhava Murthy of Lord Sri Narasimha Swamy was discovered.

Narasimha avatara has great significance and importance. It was an instant avatara, where the Lord appears in a very ferocious form. This avatara was taken to prove the words of His devotee, Prahlada, who said "THOONILUM IRUPPAAR THURUMBILUM IRUPPAAR" and proved His omnipresence. HE is the 'Great Protector' who defends and protects his devotees in times of need.

We were blessed by HIM to visit the Sri Lakshmi Narasimha temple on the Narasimha Jayanthi day this year (5.5.2012). It was a pleasurable experience. There was a long queue, 
outside the temple, and devotees were standing to have a glimpse of Lord Narasimha. The roads had a festive look. All sides of the temple walls were illuminated.   The street and roads were also illuminated. 


ILLUMINATED  LAKSHMINARASIMHA TEMPLE


 STHAMBAM OUTSIDE THE TEMPLE

 ELEPHANTS ON TEMPLE ENTRANCE
It took almost 45 minutes to reach the entrance.Climbing the steps near the sthambam, leads to the main entrance of the temple. Beautifully sculpted elephants are on both sides of the steps and sthambam. There is a main hall which leads us to the Garbagriha where we can worship Lord Narasimha, with Sri Lakshmi on his lap, tongue out, yet with a gentle look, and abhaya hastham, telling us "don't worry I am here for you". 

There is a belief that incurable diseases will be cured and the evil spirits will be driven out and all our desires will be fulfilled by the Lord AT ONCE and He doesn't say tomorrow if one surrenders to HIM. "நாளை என்பதே நரஸிம்மனிடத்தில் இல்லை".

We had a very good darshan and while coming out I felt like Nammazhwar.

Aadi Aadi Agam Karaindhu - Isai 
Paadi Paadi Kanneer Malghi - Yengum 
Naadi Naadi Narasinghaa Endru 
Vaadi Vaadum Iv Vaanudalae - Tiruvoimozhi - 2.4.1.

Coming out from the sanctum sanctorum, on the right side of the main hall is Anjaneyar sannidhi and adjacent to that is the Utsava moorthy with His consorts and azhwaars, acharyans sannidhi. Beautiful idols are sculpted on the outer prakaram. There is one Mandapam and madapalli also. The temple is cleanly maintained.


THE STREET WITH A FESTIVE LOOK




Some more captures of the temples nearby. Just opposite to Lakshminarasimha temple is another temple called Dakshina Mukhi Eswara Temple where water comes from Nandi's mouth and falls on the Shivalinga. It is said that no one knows the origin of this water. The holy water is carried home by the devotees and is believed to cure many diseases and ailments. 


DAKSHINA MUKHI ESWARA & NANDI TEMPLE

Just adjacent to the Narasimha temple is the Gangamma temple, The deity is Goddess Gangamma, Ganga matha (Ganges), is believed to be the living goddess in Hindu mythology. Ganga represents the inner purity and coolness.  Lakhs of people from all over India, come here during the Navarathri festival.


GANGAMMA TEMPLE


IDOLS OUTSIDE GANGAMMA TEMPLE

Malleswaram Narasimhar Temple Address and contact details:
Postal Address: Sri Lakshmi Narasimhaswamy Temple,
15th Cross, Malleswaram,
Bangalore – 560 003

Friday, May 4, 2012

ப்ரபத்தி சகல பலனையும் தரும்

ப்ரபத்தி சகல பலனையும் தரும்

உமதடிகள் அடைகின்றேனென்று ஒருகாலுரைத்தவரை
அமையுமினி என்பவர்போல் அஞ்சலெனக் கரம்வைத்து
தமதனைத்தும் அவர்தமக்கு வழங்கியுந்தான் மிகவிளங்கும்
அமைவுடைய அருளாளர் அடியிணையை அடைந்தேனே - அடைக்கலப் பத்து.

சரணாகதி என்பது, தன்னை ஒருவரிடம் அர்ப்பணித்துவிடுவது  விடுவது.

பரமாத்வாவிடம் நம்மை அர்ப்பணித்து,  நம்மால் முடிந்தது ஒன்றும் இல்லை "எல்லாம் அவனே" என்றும் , நம்முடைய செயல்கள், மற்றும்  அதனால் உண்டாகும் பலன்களையும்  அவரிடமே அர்ப்பணித்துபரமாத்மாவின்  திருவடிகளைப் பற்றியிருப்பது    ப்ரபத்தி / சரணாகதி   எனப்படும்.

நான் செய்தேன், என்னால் எல்லாம்  முடியும் ,  நானே செய்து விடுவேன்.’ என்று சொல்பவர்களிடம் பகவான் போவதில்லை; அவனே செய்து கொள்ளட்டும் என்று விட்டு விடுகிறார். "பகவானே, நீ தான் கதி, நீ விட்ட வழிஎன்று பொறுப்பை அவனிடம் விட்டு விட்டால், பொறுப்பு பகவானுடையதாகி விடுகிறது. திரௌபதி கதை இதற்கு எடுத்துக்காட்டு . சங்க சக்ர கதா பாணே த்வாரகா நிலயாச்சுதா -கோவிந்தா  புண்டரீகாக்ஷா  ரக்ஷமாம்  சரணாகதம் " என்று கூப்பிட்டவுடன்  ஓடி வந்து உதவினான் .

குலசேகர ஆழ்வார்
தருதுயரம் தடாயேல் உன் சரணல்லால் சரணில்லை
விரைகுழுவும் மலர்பொழில் சூழ் வித்துவக் கோட்டம்மானே!
அரிசினத்தால் ஈன்றதாய் அகற்றிடினும் மற்றவள்தன்
அருள்நினைந்தே அழுங்குழவி அதுவே போல் இருந்தேனே!
என்று பாடியுள்ளார்.

ஒரு தாய் தன் குழந்தையை விட்டுவிட்டாலும்,  அந்தக் குழந்தை, தாயின் அன்புக்காக ஏங்கி அழுவது  போன்று , தனக்குத் துயரம் வந்தபோதும், தான் அந்தப் பெருமாளின் அருளையே  வேண்டியிருப்பதாகக்  கூறுகிறார். கஷ்டங்களோ, துன்பமோ வந்தாலும் அவற்றைப் போக்குபவனும் அவனே என்கிறார்.

என்னைக் காத்தருள வேண்டிய  பொறுப்பு உன்னுடையது   உன்னாலன்றி  என்னால் ஆவது ஒன்றுமில்லைஎன்னும் திடமான எண்ணத்துடன் அவன் திருவடியைப் பற்றிக்கொள்ளுவதே  ப்ரபத்தி ஆகும்.

தன்னைச் சரணடைந்தவர்களின் துயரை  நீக்குபவர் பகவான். தன்  பக்தர்களுக்கு உண்டான துன்பத்தைத் தன் துன்பமாகக்கருதி பக்தர்களைக் காப்பாற்றுகிறார்.

தாய்ப்பூனை எங்கு சென்றாலும், குட்டியைத் தன் வாயால் கவ்விக் கொண்டு பாதுகாப்பான இடத்திற்குக் கொண்டு செல்லும். குட்டிப்பூனை இதற்காக எந்த முயற்சியும் செய்வதில்லை. அதாவது தன்னை முழுமையாக தாயிடம் ஒப்படைத்து விட்டது.  இதே போல் அந்தப் பரமாத்மாவைப் பற்றும் நிலையே ப்ரபத்தி .

"பகவானே, நீ தான் கதி,  நீ விட்ட வழிஎன்று பொறுப்பை அவனிடம் விட்டு விட்டால், பொறுப்பு பகவானுடையதாகி விடுகிறது. அப்போது பகவான் நம்மைக் காப்பாற்றுகிறான், நம்மை வழி நடத்துகிறான்நற்கதியடையச் செய்து  மோக்ஷத்தையும் அளிக்கிறான்.

Wednesday, April 25, 2012

ஸ்ரீ கிருஷ்ண கவசம்


ஸ்ரீ கிருஷ்ண கவசம் - கவிஞர் கண்ணதாசன்

கண்ணதாசனின் "ஸ்ரீ கிருஷ்ண கவசம்' என்ற சிறிய புத்தகத்தில் உள்ளபடி:

துன்பங்களில் இருந்து விடுதலை பெற, குடும்பத்துக்கு நிம்மதி கிடைக்க, நோய் நொடிகள் வருமுன்னே தடுக்க, நீண்ட ஆயுளை இறைவனிடம் வேண்ட, ஆன்மாவைச் சுற்றி ஒரு வேலி அமைத்துக்கொள்ள இந்த கவசத்தைத் தினமும் பாராயணம் செய்ய வேண்டும் என்று இப்புத்தகத்தின் முன்னுரையில் கவிஞர் கண்ணதாசன் குறிப்பிட்டுள்ளார்.


அகரம் முதலே அழியாப் பொருளே
ஆயர் குலமே நேயர் கரமே
இகமும் பரமும் இணையும் இடமே
ஈதல் பரமாம் இதயத் தவமே
உலகக் குடையே உயிரின் கலையே
ஊதும் குழலுள் வேதப் பொருளே
எரியும் கனலில் தெரியும் புனலே
ஏழை மனதில் வாழும் அருளே !

ஐயம் தீர்க்கும் அறிவுக் கதிரே
ஐவர் துணையே அன்புச் சிலையே
ஒளியே விழியே உயிரே வழியே
ஓடும் நதியில் பாடும் அலையே
அவ்வவ் உலகை ஆக்கும் நிலையே
அடியேன் சரணம் சரணம் சரணம் !
அறமே அறமே அறமே அறமே
திறமே திறமே திறமே திறமே

தவமே தவமே தவமே தவமே
வரமே வரமே வரமே வரமே
வேதம் விளையும் வித்தே விளையவே
நாதம் பொழியும் நலமே நிலமே
ஓதும் பொழுதே உடனே வருவாய்
உள்ளம் கேட்கும் வெள்ளம் தருவாய்
அறியாக் கவலை அதிகம் அதிகம்
அருள்வாய் அருள்வாய் கவசம்! கவசம்!

பொய்யா மொழியே பொங்கும் நிலவே
பூமிக் குடையின் காவற் பொருளே
பார்த்தன் பணியும் பாதம் காக்க
பாஞ்சஜன்யம் பக்தனை காக்க
மூடர்கள் தமையும் மோகனன் காக்க
முள்ளில் மலராய் முளைத்தோன் காக்க
வாடும் உயிரை மன்னவன் காக்க
தேடும் விழியைத் திருமால் காக்க

கேலிப் பொருளை கிருஷ்ணன் காக்க
கண்ணீர் நதியைக் கண்ணன் காக்க
துன்பம் என்றொரு சுமையைத் தீர்க்க
தூயோன் வருக ! துணையே தருக !
மாதர் கற்பும் மடவார் நோன்பும்
மாயோன் காக்க மலைபோல் வருக !
தகிடத் தகிடத் தகிடத் தகவென
தறிபடு துன்பம் தறிகெட ஓட

திகிடத் திகிடத் திகிடத் திகிடத்
திசைவரு கவலை பசைஇல தாக !
துருவத் துருவத் துருவத் துருவிடத்
தொலையாப் பொருளே அலையாய் வருக !
நிஷ்கா மத்தில் நிறைவோன் வருக
கர்மசந் யாசக் களமே வருக !
ஞானம் யோகம் நல்குவன் வருக !
நல்லோர் வாழ்வில் நலமே நிறைக !

அடியேன் துயரம் அதிகம் அதிகம்
அருள்வாய் அருள்வாய் கவசம் கவசம் !
பொங்கும் வேலும் புண்ணாக் காது
பொருந்தும் துயரம் பொடிபடு மாறு
தாங்கும் தலைவன் தாமரைக் கண்ணன்
தாளில் விழுந்தேன் சரணம் சரணம் !
மதுசூதனனே மனிதன் சரணம் !
இருடீ கேச இயலான் சரணம் !

கீதா சாரிய கிருஷ்ணா சரணம் !
வேதா சாரிய வேந்தே சரணம் !
தேவகி மைந்தா சிறியேன் சரணம் !
யசோதா குமரா அடியேன் சரணம் !
உன்னை விட்டொரு உறவுகளில்லை
என்னை விட்டொரு இனியவனில்லை
நம்மை விட்டொரு நண்பர்களில்லை
நன்மையில் உன்போல் நாயகனில்லை

எங்கெங்கே நான் இருந்திடும் போதும் ,
அங்கங்கே நீ அருள் செய வருக !
கோசலை ஈன்ற குமரா வருக !
கோதையின் மாலை கொண்டவன் வருக !
ரகுவம் சத்தின் நாயகன் வருக !
யதுவம் சத்தின் யாதவன் வருக !
மதுவை வென்ற மாதவன் வருக !
மலைக்குடி கொண்ட மாலவன் வருக !

திருப்பதி யாளும் திருமால் வருக !
திருவரங் கத்துப் பெருமாள் வருக !
இராவணன் கொடுமை தீர்த்தாய் ; துன்பம்
இராவணம் எமக்கும் இன்னருள் புரிக !
கம்சன் கொடுமை களைந்தோய் வருக !
காலனை வெல்லக் கைவலி தருக !
நெற்றியில் திருமண் நெஞ்சில் வைரம்
காதில் குண்டலம் கையில் வில்லொடு

தண்டைக் காலில் சலங்கை குலுங்க
அண்டையில் வந்து அருளே புரிக !
கௌரவர் தம்மை களத்தில் வென்றாய்
கெளரவம் காக்க கண்ணா வருக !
பார்த்தன் மகிழப் பாடம் சொன்னாய்
படித்தவன் மகிழப் பரமே வருக !
மூன்று குணங்கள் முறையாய்க் கூறிய
சான்றோன் பாதம் தாவி யனைத்தேன்

சிக்கென உன்னைச் சேர்த்துப் பிடித்தேன்
பக்கென உந்தன் பாதம் பற்றினேன்
கொக்கென நின்று குறிவைத் திருந்தேன்
அக்கணம் வந்தாய் அடியில் விழுந்தேன் ;
இக்கணம் என்னை ஏங்க விடாமல்
தக்கவனே நீ தயவுடன் அருள்க !
கல்லாய்ப் போனவள் காலடி பட்டு
பெண்ணாய் ஆனது பிழையே யன்று !

உன்னால் தானே உலகம் இயக்கம் !
கண்ணனி லாமல் கடல்வான் ஏது ?
கண்ணனி லாமல் கடவுளுமில்லை
கண்ணனி லாமல் கவிதையுமில்லை
கண்ணனி லாமல் காலமுமில்லை
கண்ணனி லாவிடில் காற்றே இல்லை !
எத்தனை பிறவி எத்தனை பிறவி
அத்தனை பிறவியும் அடியேன் கொண்டால்

சத்திய நாதன் தாள்களை மறவேன்
தத்துவக் கண்ணன் தனிமுகம் மறவேன்
உன்னை நம்பி உனையே சேர்ந்தால்
பிறவிகளில்லை ; நீ பேசிய பேச்சு
உலகில் போதும் ஒருமுறை மூச்சு !
உன்னிடம் சேர்த்து உன்வடி வாக்கு !
இங்கே நாங்கள் இருக்கும் வரையில்
சங்கு முழங்கு தர்மம் நிலைக்க !

பிள்ளைகள் வாழ்க்கை பிழையா காமல்
மனையவள் வாழ்க்கை மாண்பு கெடாமல்
இல்லை என்றொரு நாளில் லாமல்
இன்னும் என்னும் ஆசை வராமல்
தொல்லை என்பது துளியுமில்லாமல்
தோற்றும் நோய்கள் பற்றி விடாமல்
முதுமைத் துயரம் மூண்டு விடாமல்
படுக்கையில் விழுந்து பரிதவிக் காமல்

சிந்தனை கெட்டுத் திறமையும் கெட்டு
நிந்தனை பெற்று நீங்கி விடாமல்
என்றும் பதினா றிளமை வழங்கு !
இப்பணி தொடர அற்புதம் காட்டு !
தளரா மேனியில் சக்தியைக் கூட்டு
தாய்போ லிருந்து சாதம் ஊட்டு !
வாழ்ந்தால் இப்படி வாழ்வது நன்றென
ஊரார்க் கென்னை உதாரணம் காட்டு !

உலகில் ஒருவன் உத்தமன் இவனென
உயிர்கள் பேசிடும் ஒருநிலை கூட்டு !
சிறியவர் பெரியவர் வறியவர் செல்வர்
சரிசரி சரியெனத் தலையை யசைக்க
பொலி பொலி பொலியெனப் புகழும்விளங்க
மளமள மளவென மனையிருள் நீங்க
கலகல கலவென காசுகள் சேர
தளதள தளவென தர்மம் தழைக்க

வரவர வரவர வாய்ப்புகள் வாய்க்க
ரகுபதி பசுபதி நன்மைகள் அருள்க
ஐயா சரணம் சரணம் சரணம் !
அடியேன் வாழ்வில் நீயே கவசம் !
கவசம் கவசம் கவசம் கவசம் !
வந்தது வாழ்வில் மன்னவன் கவசம் !
கவசம் கவசம் கவசம் கவசம் !
வாழ்க்கை என்னும் கோபுரக் கலசம் !

அரிஓம் அரிஓம் அரிஓம் அரிஓம்
அவனே துணையென அறிவோம் ! அறிவோம்!
அரிஓம் அரிஓம் அரிஓம் அரிஓம்
அவனிடம் எதையும் தருவோம் தருவோம்
ஜெயஜெய ராமா ஜெயஜெய கிருஷ்ணா ...
ஜெயஜெய ஜெயஜெய
ஜெயஜெய ஜெயஜெய
ஜெயஜெய ஜெயஜெய
ஜெயஜெய ஜெயஜெய...

Wednesday, January 4, 2012

ஸ்ரீ கிருஷ்ணன் கோயில், சென்னை / கண்ணுக்கினியன கண்டோம்-4



ஸ்ரீ கிருஷ்ணன் கோயில்.

இத்திருக்கோயில், வடசென்னையில், முத்தியாலுப்பேட்டையில், பவளக்காரத் தெருவில் உள்ளது.

சுமார் 800 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட கோயில். திருமழிசையாழ்வாரின் அபிமான ஸ்தலம் என்று சொல்லப்படுகிறது.


மூலவர் - ருக்மிணி பாமா ஸமேத ஸ்ரீ வேணுகோபாலன்.
புல்லாங்குழல் ஊதிக்கொண்டு, மிக அழகாய் காட்சி தருகிறார்.

தனி ஸன்னிதியில் ராமர், ஸ்ரீனிவாசர், ஆண்டாள், ஸுதர்சனர், ஆஞ்சநேயர் எழுந்தருளி அருள்கின்றனர். உற்சவ மூர்த்திகளும் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் அழகு.

திருமழிசையாழ்வார், இங்கு சில காலம் தங்கி, பெருமாளை மங்களாஶாஸனம் செய்திருக்கிறாராம். திருமழிசையாழ்வாரின் திருவுருவம், சில பாதுகாப்புக் காரணங்களுக்காக சில காலம் இக்கோயிலில் வைக்கப்பட்டிருந்தது என்றும் சொல்கிறார்கள். இன்றளவும் இத்திருக்கோயிலில் திருமழிசையாழ்வாரின் "வாழித்திருநாமம்' தினசரி சாற்றுமுறையில் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.


ஆலிலைக்கண்ணன் அலங்காரத்தில் பெருமாள் 
"ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி" மிக விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. மார்கழி மாதம் பகல்பத்து, ராப்பத்து உற்சவங்களும் மிக சிறப்பாக நடைபெறுகிறது. அலங்காரங்கள் மிக நேர்த்தியாய் செய்யப்பட்டு, உற்சவங்கள் கண்டருளும் பெருமாளைக் காணக் கண் கோடி வேண்டும். ராப்பத்து உற்சவத்தில் ஆலிலைக்கண்ணன் அலங்காரத்தில் பெருமாள் மிகவும் அழகு.




இக்கோயில் ஹிந்து சமய அறநிலையத்துறையின் நிர்வாகத்தில் உள்ளது. தற்சமயம், இத் திருக்கோயிலைச் சீரமைப்பதற்கான திருப்பணிகள் நடந்து வருகின்றன. பெருமாள், புனர் நிர்மாணப் பணிகளுக்காக பாலாலயத்தில் இருக்கிறார். இத்திருப்பணி, விரைவாக முடிந்து, ஸம்ப்ரோக்ஷணம் நடைபெற வேணுகோபாலனையே வேண்டி நம்மால் முடிந்த உதவியையும் செய்வோமே!

Tuesday, September 13, 2011

தென்சிறுவளூர் - ஸ்ரீதேவி பூதேவி ஸமேத அழகிய மணவாளப்பெருமாள் கோயில் (Thensiruvalur azhagiya manavala perumal koil) /கண்ணுக்கினியன கண்டோம்-3

“யாதும் ஊரே யாவரும் கேளீர்” என்று ஆகிவிட்ட பின்பும், சொந்த ஊருக்குச் செல்லும்போது கிடைக்கும் பரவசத்திற்கு நிகர் இல்லை.

சில பெரியோர்கள் "உங்க பூர்வீகம் என்ன?" என்று கேட்பதைப் பார்த்திருப்போம். ஒருவர் தாய்நாடு, சொந்த மண், சொந்த ஊர், பூர்வீகம்.. என்று சொல்லும்போது அதில்தான் எத்தனை பற்றுதல்? அந்த வார்த்தைகளில் அவர்களது பற்றுதல் வெளிப்படுகிறது. அது ஏன்? உங்க பூர்வீகம் எந்த ஊர் ? என்ன பெருமாள்? என்று யாராவது கேட்கும்பொழுது, "எங்க பூர்வீகம் ... ஊர் .... பெருமாள் " என்று சொல்லும்போதுதான் எவ்வளவு பெருமிதம்?


ஏன் இந்த இன்பப் பெருமிதம்? யோசித்துப் பார்த்தபொழுது , நமது முன்னோர்கள், முப்பாட்டனார், பாட்டனார், தந்தை, தாய் என்று அனைவரும் வாழ்ந்த ஊர், வணங்கிய பெருமாள் என்ற உணர்வு நம்மை அறியாமலே வருவதால்தான் என்று தோன்றுகிறது.

இனி, எங்கள் பூர்வீகம், தென்சிறுவளூர் - ஸ்ரீதேவி பூதேவி ஸமேத ழகிய மணவாளப்பெருமாள் கோயில் பற்றிய விவரங்கள்:

தென்சிறுவளூர் - ஸ்ரோதபுரி என்றும், நவமால் சிறுவளூர் என்றும் அழைக்கப்படுகிறது.
மூலவர் : ஸ்ரீ அழகியமணவாளப்பெருமாள் ஸ்ரீதேவி பூதேவி ஸமேதராய் எழுந்தருளியிருக்கிறார்.
உற்சவர் :புஷ்பவல்லி தாயார் ஸமேத தேஹளீச பெருமாள்.

இந்த கிராமம் விழுப்புரம் மாவட்டத்தில் வானூர் வட்டத்தில் உள்ளது.
சுற்றுப்பட்டு கிராமங்களில் சிறுவளூர், சுறுளூர் என்றே மக்கள் சொல்கிறார்கள்.

இந்த கிராமம் மிகவும் புராதனமானது. சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சாஸ்திரிய முறைப்படி அமைக்கப்பட்டது. ராஜராஜ சோழன் காலத்தில் கட்டப்பட்ட மண்டலாடீஸ்வரர் என்ற சிவன் கோயிலும், சிவன் கோயிலுக்குச் செல்லும் வழியில் காளி கோயிலும், சிவன் கோயிலுக்கு மேற்கே பெரிய நல்ல தண்ணீர் குளமும், அதற்கும் மேற்கே வைஷ்ணவ அக்ரஹாரமும், பெருமாள் கோயிலும் அமைந்துள்ளன. இது தவிர எல்லை தேவதைகள், எல்லையம்மன், அதிஉக்ரகாளியம்மன் ஆலயங்களும் அமைக்கப்பட்டுள்ளது.

பல நூற்றாண்டுகளுக்கு முன்பு , துருக்கிய முகமதியர்கள் கோயில்களை சேதப்படுத்தியும், கோயில் சொத்துக்களை அபகரித்தும் படையெடுத்த சமயத்தில், பெரியோர்களும், அரசர்களும் மிகுந்த முன்னெச்சரிக்கையோடு, கோயில்களில் உள்ள மூலவருக்கு கற்சுவர் எழுப்பி, பின் உற்சவ மூர்த்திகளை வேறு வேறு இடங்களுக்கு எடுத்துச்சென்று மறைத்து வைத்தார்கள். ஸ்ரீ வேதாந்த தேசிகனே ரங்கநாதருக்கு ஆபத்து வந்துவிடுமோ என்று பயந்தபடியால்தான் நமக்கு இன்று "ஸ்ரீ அபீதி ஸ்தவம்" என்ற ஸ்தோத்ர பொக்கிஷம் கிடைத்துள்ளது. அதே போல, திருக்கோவிலூரில் உள்ள உற்சவ மூர்த்திகளை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு சென்ற பெரியோர்கள், அங்கு இருந்த உற்சவ மூர்த்தியான தேஹளீச பெருமாளை, ஸ்ரோதபுரி என்று அழைக்கப்பட்ட நம் தென்சிறுவளூரில் எழுந்தருளப் பண்ணினார்கள்.

அங்கிருந்த தேசிக சம்பிரதாய வைஷ்ணவர்கள், ஸ்ரீதேவி பூதேவி ஸமேத
ழகிய மணவாளப்பெருமாளையும், உற்சவர், ஸ்ரீ தேஹளீசரையும் மிகுந்த பக்தி ஸ்ரத்தையோடு ஆராதித்து வந்தார்கள். அதைப்பார்த்து மகிழ்ந்த, சிறந்த விஷ்ணு பக்தரும், ஸ்ரீ வேதாந்த தேசிகனின் சிஷ்யரும், செஞ்சியை ஆண்டவருமான கோபண்ணா, அந்த கிராமத்தை அவர்களுக்கே இனாமாக வழங்கினார்.

அக்ரஹாரத்தில் நிறைய வீடுகள் இருந்ததற்கான தடயங்கள் உள்ளன. அதில் எங்கள் தாத்தா தேசிகாச்சாரியார் அவர்களின் வீடும் சிதிலமடைந்த நிலையில் உள்ளது.



கோயிலின் முன்பாக கல்தூண், அதாவது கல்லினால் செய்யப்பட்ட ஸ்தம்பம் ஒன்று உள்ளது. அதில் மிக நேர்த்தியாக கருடனும், ஆஞ்சநேயரும் வீற்றிருக்கிறார்கள். முன்பக்கத்தில் ஆஞ்சநேயரும், பெருமாளைப்பார்த்தபடி கருடனும் மிகுந்த அழகோடு விளங்குகிறார்கள். திருக்கார்த்திகையன்று சொக்கப்பானை ஏற்றியிருப்பார்கள் போலும்!!!

கோயிலின்உள்ளே கருடன், அனைத்து பெருமாள் கோயில்களிலும் உள்ளபடியே, பெருமாளைப்பார்த்தபடி கைகூப்பியவாறு இருக்கிறார். பெருமாள் ஸன்னிதிக்கு முன்னால் இருபுறமும் துவாரபாலகர்கள் ஜெயன், விஜயன் இருவரும் நிற்கின்றனர். அதையொட்டி, பக்கத்தில் ஆழ்வார்கள் ஆச்சார்யர்கள் ஸன்னிதி உள்ளது.

கர்ப்பக்ருஹத்தில், பெருமாள் பெயருக்கு ஏற்றாற்போல் நின்ற திருக்கோலத்தில் சிரித்த முகத்துடன் ஸ்ரீதேவி பூதேவி ஸமேதராய், மிக அழகாக, இருக்கிறார். ஹேமாம்புஜ நாயகி ஸமேத வரதராஜ பெருமாள் உற்சவமுர்த்தியாக திருவீதி புறப்பாடு, மற்றும் உற்சவங்கள் கண்டருளுகிறார். புஷ்பாலயா ஸமேத தேஹளீஸ பெருமாளும், கையில் நவநீதத்துடன் நவநீத கிருஷ்ணரும், ஹாலக்ஷ்மியும், ஸ்வாமி தேசிகனும், உற்சவமூர்த்திகளாக அழகாக அலங்காரம் செய்யப்பட்டு, அதிசுந்தரமாகக் காக்ஷி கொடுக்கிறார்கள்.



தென்சிறுவளூர் பெருமாள் அபரிமிதமான சக்தி படைத்தவர். தெய்வ குற்றம் நீங்கவும், முன்னோர்கள் சாபம் விலகவும், திருமண தடை விலகி விவாஹம் நடைபெறவும் , நல்ல படிப்பு கிடைக்கவும், சகல தொல்லைகளும் நீங்கவும், கடன் தொல்லை, வியாதி நீங்கவும், பெருமாளிடம் பிரார்த்தித்து பலனடைந்தோர் ஏராளம். தென்சிறுவளூரைப் பூர்வீகமாகக் கொண்ட நல்ல உள்ளம் படைத்த சிலரால் இத்திருக்கோயில் நல்ல முறையில் சீர்திருத்தப்பட்டு, 26 -8 -2007 அன்று ம்ப்ரோக்ஷணம் செய்யப்பட்டு, ஒரு மண்டபமும், திரு மடப்பள்ளியும் புதிதாகக் கட்டப்பட்டுள்ளது. நல்ல தண்ணீர் வசதியுடன் கூடிய ஒரு கிணறும் உள்ளது. அது தவிர, தங்கியிருந்து ஸேவிக்க விரும்புபவர்கள் சௌகர்யத்துக்கென ஒரு சிறிய ஹாலும் கட்டிவிடப்பட்டுள்ளது.

ப்ரக்ருதம் ஸ்ரீமத் ஆண்டவன் மங்களாஶாஸனம் செய்து அனுக்ரஹித்தாயிற்று.

தென்சிறுவளூர் பெருமாளை 
 ஸேவித்து பிரார்த்திக்கும் அனைவரும்   நீங்காத செல்வம் நிறைந்து, எங்கும் திருவருள் பெற்று  இன்புறுவர்  என்பது திண்ணம். 


திருக்கோயில் முகவரி :

தென்சிறுவளூர் அக்ரஹாரம்,
தென்சிறுவளூர்(V&P),
வானூர் வட்டம் - 604 102.

இத்திருக்கோயிலுக்குச் செல்லும் வழி விவரம் :

சுற்றுப்பட்டு கிராமங்களில் சிறுவளூர், சுறுளூர் என்றே மக்கள் சொல்கிறார்கள். தென்சிறுவளூர் என்று யாரும் சொல்வதில்லை.

திண்டிவனத்தில் இருந்து கிளியனூர் வழியாக பாண்டிச்சேரி செல்லும் சாலையில், கொந்தமூர் என்ற இடத்தில் இறங்கி, குன்னம் செல்லும் பாதையில் மூன்று கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. திண்டிவனம்-குன்னம் மார்க்கத்தில் டவுன் பஸ் எண் 14 மற்றும் பாண்டி - குன்னம் மார்க்கத்தில் பஸ் எண் 226 , இந்த ஊர் வழியாகக் குன்னம் செல்கிறது. தென்சிறுவளூரில் இறங்க வேண்டும்.

Tuesday, August 30, 2011

RANGANATHA PANCHAKAM



sveeyatara bhaasakara chandamaniyukta phanamandita bhujanga shayanam
megha vara vaasaka suvarnagiri saubhaga paraabhavam ananta ruchiram
leenakara chchanda bhuvanathraya mudaakara shuchim adhika bhooshana karam
naumi bhagavanta mukha mandahasanam tam ati sundaram anantha shayanam

roopamava bodhamati nootana manognya madanam bhuvana mangalakaram
vaaridhi sudhaakara sutaakara sukhaatura sumaadhura susheelana padam
bhoota mahadaadayam alankrta kalebaram akhanta karunaalaya mukam
naumi bhagavanta mukha mandahasanam tam ati sundaram anantha shayanam

raachara charaachara paraadhika durakrti muraadi patu bheekaratanum
naarada varaadinutha neerada nibhaakara manoratha sumaadhura padam
naadayuta geeta paraveda ninadanagha sanaatana janaadhikavrutam
naumi bhagavanta mukha mandahasanam tam ati sundaram anantha shayanam

sidhdha sura chaarana Sananda Sanakaadaya muneendra gana ghoshana param
nithya rachaneeya vachaneeya rasaneeya ramaneeya kamaneeyataparam
padmadala bhaasa makaranda parihaasa nijabhakta bhava mochana karam
naumi bhagavanta mukha mandahasanam tam ati sundaram anantha shayanam

hema makutaadi katakaabarana kankana samujwala manoharatanum
geeta natanaadaya kalaavruta sudhaamrta niranjana sumangalakaram
bhaagavata Raama charitaamala dhureena vachanaadi paripooritakaram
naumi bhagavanta mukha mandahasanam tam ati sundaram anantha shayanam