Friday, July 12, 2013

ஸ்ரீ விஷ்ணுபாதாதி கேசாந்த ஸ்தோத்ரம்

ஸ்ரீ ஆதி சங்கர பகவத்பாதர் இயற்றிய ஸ்தோத்ரம்
ஸ்ரீ விஷ்ணுபாதாதி கேசாந்த ஸ்தோத்ரம்

(Source: www.kamakoti.org)


1.லக்ஷ்மீ பர்த்ருர்புஜாக்ரே க்ருதவஸதி ஸிதம்யஸ்ய ரூபம்விசாலம்
நீலாத்ரேஸ்துங்க ச்ருங்கஸ்திதவ ரஜநீ நாதபிம்பம்விபாதி
பாயாந்ந:பாஞ்சஜன்ய:ஸ திதிஸுத குலத்ராஸநை:பூரயன் ஸ்வை:
நித்வானை:நீரதௌகத்வனி பரிபவதை ரம்பரம் கம்புராஜ:
லக்ஷ்மீநாயகரான நாராயணனின் கையில் விளங்கும் விசாலமான வெண்சங்கு நம்மையெல்லாம் காப்பதாகுக. அந்த சங்கின் பெயர் பாஞ்சஜன்யம். அதன் ஒலி அசுர குலத்தை பயமுறுத்தி நடுங்கச் செய்வது மட்டுல்லை. மேகங்களின் இடியைவிட கம்பீரமானது. ஆகாயம் முழுவதும் அதந் ஒலி பரவியுள்ளது. நீலமலை மீது உதித்து வரும் சந்திரன் போன்று விளங்குகிறது. 


2.ஆஹ§ர்யஸ்ய ஸ்வரூபம் க்ஷணமுக மகிலம் ஸ¨ரய:காலமேதம்
த்வாந்தஸ்யை காந்தமந்தம் யதபிச பரமம் ஸர்வதாம்நாம் சதாம்
சக்ரம் தச்சக்ரபாணே:திதிஜ தனுகலத்ரக்த தாராக்ததாரம்
சச்வந்நோ விச்வவந்த்யம் விதரது விபுலம் சர்ம கர்மாம்சு சோபம்
சக்ரபாணியான விஷ்ணுவின் பார்புகழ் கொண்ட சக்ராயுதம் நமக்கு குந்த மங்கலம் கொடுக்கட்டும். சூரியன் போன்று சுழலும் அச்சக்ராயுதம் காலம் முழுவதையும் ஒரு நொடியாக்கவல்லது என சான்றோர் கூறுவர். இருளின் முழுமுடிவு என்று மட்டுல்லை ஒளிகளுக்கெல்லாம் மேலான ஒளியுடையதுமாகும். அதன் ஆரமுனைகளில் அசுரரின் ரத்தக்கரை படிந்துள்ளதால் அது அவரை அழித்து உலகைக் காத்துள்ளது தெரியவரும். 


3.அவ்யாத்நிர்காதகோரோ ஹரிபுஜ பவநாமர்ச மாத்மாத மூர்தே:
அஸ்மான் விஸ்மேர நேத்ரத்ரிதச நுதிவச:ஸாது காரை:ஸுதார:
ஸர்வம் ஸம்ஹர்துச்சோ:அரிகுலபுவனம் ஸ்பாரவிஸ்பார நாத:
ஸம்யத் கல்பாந்தஸிந்தௌ சரஸலில கடாவார் முச:கார்முகஸ்ய
பகைவர் கூட்டமாகிய உலகை முழுமையாக அழிக்க விரும்பியதும் ஆகவேதான் அம்புகளாகிய தண்ணீர் பொழியும் மேகமோவெனத் திகழும் வில்லின் பரக்க விர்ந்த ஒசை நம்மை காக்கட்டுமே. அம்பின் அடியால் கொடியதாயும், வியப்புற்ற வானவர் ஆமோதிக்கும் பேச்சுகளால் அவ்வோசை மேலும் வலுப்படுகிறது. 


4.ஜீமூதச்யாம பாஸாமுஹ§ரபி பகவத் பாஹ§நா மோஹ மந்தீ
யுத்தேஷ¨த்தூயமாநா ஜடிதி தடிதிவாலக்ஷ்யதே யஸ்ய மூர்நி:
ஸோsஸிஸ்த்ராஸாகுலாக்ஷத்ரிதசரிபுவபு:சோணிதாஸ்வாத த்ருப்தோ
நித்யானந்தாய பூயாத் மதுமதன மனோ நந்தநோ நந்த கோ ந:
எந்த வாளின் வடிவம், முகில் வண்ணம் படைத்த விஷ்ணுவின் கையினால் மோஹமுறச் செய்கிறதோ, யுத்த காலத்தில் சப்படும் பொழுது ன்னலெனத் தோன்றுகிறதோ, பயந்த அசுரர்களின் உடல் இரத்தம் பருகி திருப்தியடைகிறதோ அத்தகைய நந்தகம் எனப்படும் வாள் நம் நித்யானந்தத்தை தோற்றுவிக்கட்டும். அந்த வாள் கையில் இருப்பதால் விஷ்ணுவுக்கு மகிழ்ச்சியல்லவா?


5.கம்ராகாமுராரே:கரகமலதலேநா னுராக்தே க்ருஹீதா
ஸம்யக்வ்ருத்தா ஸ்திதாக்ரே ஸபதி நஸஹதே தர்சனம் யா பரேஷாம்
நாஜந்தீ தைத்ய ஜீவாஸவமத முதிதா லோஹிதாலேப நார்த்ரா
காமம் தீப்தாம்சுகாந்தா ப்ரதிசது தயிதேவாஸ்ய கௌமோதகீ ந:
முராரியின் நேசத்துடன் பற்றியுள்ள கௌமோதகீ என்ற கதை மனைவியைப்போல் விரும்பியதை நமக்கு அருள வேண்டுமே. அது பெருமான் கையில் கீழ் முகமாக இருந்து நுனியில் உருனையாகவும் உள்ளது. பகைவரது காட்சியை ஏற்காமல் விளங்குது அசுர உயிராகிய மது அருந்தி மகிழ்ச்சி கண்டு பிரகாசிப்பது (மனைவியான லக்ஷ்க்கும் பொருந்தும்) 


6.யோவித்வ ப்ராண பூத ஸ்தனுரபிசஹரேர்யான கேதுஸ்வரூப:
யம் ஸம்சிநத்யைவ ஸத்ய, ஸ்வய முரகவதூவர்ககர்பா:பதந்தி
சஞ்சத் சாண்டோரு துண்டத்ருடித பணிவஸா ரக்தபங்காங்கிதாஸ்யம்
வந்தே சந்தோமயயம் தம் ககபதிமமலம் ஸ்வர்ணவர்ணம்ஸுபர்ணர்
வேத வடிவான, தங்க நிற மொத்த கருடனை வணங்குகிறேன். அசையும் பயங்கர அலகினால் அவர் கிழிந்த நாகங்களின் வஸை ரத்தம் இவை படிந்த முகத்தையுடையவராயுள்ளார். அவர் சிறியவராயினும் உலக மூச்சுக்காற்றாகவும், நாராயணரின் வாஹனமாகவும் உள்ளார். அவரை நினைத்தவுடனேயே நாகங்களின் சிசுக்கள் மடிந்து ழ்கின்றன. 


7.விஷ்ணோர்விச்வேச்வரஸ்ய ப்ரவரசயன க்ருத்ஸ்ரவலோகைகதர்தா
ஸோsனந்த:ஸர்வபூத:ப்ருது விமலயசா:ஸர்வவேதைஸ்ச வேத்ய:
பாதா விச்வஸ்ய சச்வத் ஸகல ஸுரரிபு த்வம்ஸன:பாபஹந்தா
ஸர்வஜ்ஞ:ஸர்வஸாக்ஷீ லகல விஷபயாத் பாது போகீச்வரோந:
அகில உலகையும் தாங்கும் அனந்தநாகன் உலக நாயகனாக விஷ்ணுவுக்கு சயனமாகி புகழ்பெற்றவர். வேதம் மூலமே அறியத்தக்கவர். பாபங்களைப் போக்கி, அசுரர்களையும் அழித்து உலகைக் காப்பவர். எல்லாம் அறிந்தவர். 


8.வாக்பூ கௌர்யாதிபேதைர் விதுரிஹமுனயோ யாம் யதீயைஸ்ச பும்ஸாம்
காருண்யார்த்ரை:கடா¬க்ஷ:ஸக்ருதபி பதிதை:ஸம்புத:ஸ்யு:ஸமக்ரா:
குந்தேந்து ஸ்வச்ச மந்தஸ்தமதுர முகாம் போருஹாம் ஸுந்தராங்கீம்
வந்தே வந்த்யா மசேஷைரபி முரபிதுரோ மந்திரா ந்திராம்தாம்
அகில உலகங்களும் வணங்கி நிற்கும் நாராயணனின் திருமார்பை கோயில் கொண்டுள்ள லக்ஷ்மீ தேவியை வணங்குகிறேன். குந்தமலர், சந்திரன் நிகரான இனிய புன்முறுவல் தவழும் முக மலருடன் அழகியவள் தாயார். அவளது கருணை ததும்பும் கடாக்ஷம் ஒரு முறை கிடைத்தால் எல்லா செல்வங்களும் ஒருவனுக்கு கிடைத்துவிடும். முனிவர்கள் அந்த தாயாரை ஸரஸ்வதியாகவும், பூதேவியாகவும், பார்வதீ தேவியாகவும் வர்ணித்துள்ளனர். 


9.யா ஸ¨தே லத்வ ஜாலம் ஸகலமபி ஸதா ஸந்நிதாநேந பும்ஸ:
தத்தே யா தத்வ யோகரத் சாமசர தம் பூதயே பூதஜாதம்
தாத்ரீம் ஸ்தாத்ரீம் ஜநித்ரீம் ப்ரக்ருதிமவிக்ருதிம் விச்வசக்திம் விதாத்ரீம்
விஷ்ணோர் விச்வாத்மநஸ்தாம் விபுல குணமயீம் ப்ராணநாதாம் ப்ரணௌ
எப்பொழுதும் உடனிருக்கும் புருஷனின் துணைகொண்டு ப்ரக்ருதியாகியதாய் பிராணிவர்க்கம் அனைத்தையும் பிரஸவித்து, சரமும் அசரமுமான அந்த பிராணி வர்க்கத்தை தத்வங்கள் கூடியதால் அதை தாங்கி நிற்கிறாள். தாங்கியும், நிலைபெறச் செய்தும், பின்னும் பின்னும் உண்டாக்கியும், மாறாத உலக மக்தியை தோற்றுவித்தும் வருகிற விஷ்ணுவின் பிராண நாதையை நமஸ்கரிக்கிறேன்.


10.யேப்யோsஸ¨யத்பிருச்சை:ஸபதி பத முரு த்யஜ்யதே தைத்ய வர்கை:
யேப்யோ தர்தும் சமூர்த்நா ஸ்ப்ருஹயதி ஸததம் ஸர்வ கீர்வாண வர்க:
நித்யம் நிரமூலயேயு:நிசிததரமமீ பக்தி நிக்நாத்மநாம் ந:
பத்மாக்ஷஸ்யாங்க்ரி பத்மத்வய தல நிலயா:பாம்ஸவ:பாபபங்கம்
எவைகளை வெறுத்து அசுரர்கள் தங்களுக்கு வரும் பெரிய பதியைக்கூட இழக்கிறார்களோ, ஆனால் அவற்றை தலையால் தாங்கவும் தேவர்கள் ஸததமும் விழைகிறார்களோ அப்படிப்பட்ட தாமரைக் கண்ணனான விஷ்ணுவின் திருவடித்தாமரையிலுள்ள ரேணுக்கள் பக்திமான்களான எங்கள் பாபச் சகதியை முழுதும் போகும்படி செய்யட்டும். 


11.ரேகா லேகாதிவந்த்யா:சரணதலகதாஸ்சக்ர மத்ஸ்யாதிரூபா:
ஸ்நிக்தா:ஸ¨க்ஷ்மா:ஸுஜாதா ம்ருதுலலித தரªக்ஷளம ஸ¨த்ரா யமாணா:
தத்யுர்நோ மங்கலாநி ப்ரமரபரஜுஷா கோமலே நாப்திஜாயா:
கம்ரேணாம்ரேட்யமாநா:கிஸலயம்ருதுநா பணிநா சக்ரபாணே:
சக்ரபாணியான விஷ்ணுவின் சக்ரங்களிலுள்ள கோடுகள் சக்ரம், மத்ஸ்யமென விளங்குவை க மெல்லிய பட்டுத்துணியின் நூல்கள் தானொவென்று னுனுப்பாய் இருப்பவை. ஸ்ரீ லக்ஷ்மீ தேவி தனது மெல்லிய துளிர் போன்ற கையினால் அவற்றை வருடுவாளே அந்த கோடுகள் எங்களுக்கு மங்களம் உண்டாக்கட்டுமே.


12.யஸ்மா தாக்ராமதோ த்யாம் கருடமணி சிலாகேதுதண்டாயமாநாத்
ஆஸ்ச்யோதந்தீபபாஸே ஸுரஸரிதமலா வைஜயந்தீவ காந்தா
பூஷ்டோ யஸ்ததான்யோ புவன க்ருஹ ப்ருஹத்ஸ்தம்ப சோபாம் ததௌ ந:
பாதாமேதௌ பயோஜோதர லலிததலௌ பங்கஜாக்ஷ்ஸ்ய பாதௌ
தாமரை புஷ்பத்தின் உட்புறம் போன்று கவும் ருதுவான திருவடிகள் எங்களைக் காப்பதாக அவற்றிலொன்று முன்பு (த்ரிவிக்ரமாவதார காலத்தில்) பச்சை மகரத மணிக்கொடித்தம்பம் போல் ஆகாயத்தில் பரவியதே அதிலிருந்து ஆகாச கங்கை பரவகித்தது. பூயில் இருந்த மற்றொரு கால் பூலோகமாகிய வீட்டின் நடுவீட்டுத் தூண் போல் இருக்கிறதே.


13.ஆக்ராமத்ப்யாம் த்ரிலோகீ மஸுரஸுரபதீ தத்க்ஷணாதேவ நீதௌ
யாப்யாம் வைரோ சநீந்த்ரௌ யுகபதபி விபத்ஸம்பதோ ரேகதாம
தாப்யாம் தாம்ரோதராப்யாம் முஹ§ரஹமஜிதஸ் யாஞ்சிதாப்யாமுபாப்யாம்
ப்ராஜ்யை ச்வர்ய ப்ரதாப்யாம் ப்ரணதிமுபகத:பாதபங்கேருஹாப்யாம்
மூவுலகையும் ஆக்ரத்த திருவடித்தாமரைகளால் அசுரத் தலைவரான வைரோசனியும் சுரபதியான இந்த்ரனும் ஒரே சமயத்தில் விபத்துக்களையும், ஸம்பத்துக்களையும் முறையே அடைவிக்கப்பட்டனர். திரிவிக்ரம மஹாவிஷ்ணுவின் அந்த திருவடிகள், சிவந்த தலத்தையுடையவனாயும், அளவற்ற ஐச்வர்யம் நல்குபவையாயும் மிளிர்கின்றன. அவற்றிற்கு நமஸ்காரம் செய்கிறேன். 


14.யேப்யோ வர்ண ஸ்சதுர்த:சரமத உதபூத் ஆதிஸர்கேப்ரஜாநாம்
ஸாஹஸ்ரீசாபிஸங்க்யா ப்ரகடமபிஹாதா ஸர்வவேதேஷ§ யேஷாம்
வ்யாப்தா விச்வம்பரா யை ரதிவிதததநோ:விச்வமூர்தேர்விரோஜோ
விஷ்ணோ ஸ்தேப்யோ மஹத்ப்ய:ஸததமபி நமோsஸ்வத்வங்க்ரி பங்கேரு ஹேப்ய:
ப்ரஜைகளை முதலில் சிருஷ்டிக்கத் தொடங்கியபோது நான்காவது வர்ணம் விஷ்ணுவின் எந்த திருவடிகளிருந்து தோன்றயதோ, எவை கணக்கில் ஆயிரம் என்று எல்லா வேதங்களிலும் கூறப்பட்டுள்ளதோ, விராட் புருஷனான விஷ்ணுவின் எந்த திருவடிகளால் பூலோகம் முழுதும் வியாபிக்கப் பட்டுள்ளதோ, அந்த திருவடிகளுக்கு நமஸ்காரம். 


15.விஷ்ணோ:பாதத்வயாக்ரே விமலநகமணி ப்ராஜிதா ராஜதேயா
ராஜீவஸ்யேவ ரம்யா ஹிமஜலகணிகா லங்க்ருதாக்ரா தலாலீ
அஸ்மாகம் விஸ்மயார்ஹாண்யகில ஜனமந:ப்ரார்த்தநீயா U ஸேயம்
தத்யா தாத்யா நவத்யா ததிரதிருசிரா மங்கலான்யங்குநாம்
விஷ்ணுவின் இரண்டு கால் நுனிகளிலும் தூய நகங்களுடன், பனித்துளியுடன் கூடிய தாமரையிதழ் போன்று விளங்கும் விரல் கூட்டம் நமக்கு வியக்கத் தகும்படி மங்களங்களை வழங்கட்டும். 


16.யஸ்யாம் த்ருஷ்ட்வாமலாயாம் ப்ரதிக்ருதி மமரா:ஸம்பவந்த்யா நமந்த:
ஸேந்த்ரா:ஸாந்த்ரீக்ருதேர்ஷ்யாஸ்த்வபரஸுர குலாசங்கயா தங்கவந்த:
ஸா ஸத்ய:ஸாதிரேகாம் ஸகல ஸுககரீம் ஸம்பதம் ஸாதயேந்ந:
சஞ்சச்சார்வம் சுசக்ரா சரண நலிநயோ:சக்ரபாணேர் நகாலீ
இந்திரன் முதலிய தேவர்கள் நமஸ்கரிக்கும்போது விஷ்ணுவின் நகங்களில் தங்களது உருவத்தைப் பார்த்து வேறு தேவர்களின் உருவமோ என சங்கித்து கவலை கொண்டவர்களாய் ஆகி விடுகிறார்கள். அப்படிப்பட்ட பளபளக்கும் காந்தி கிரணங்களைக்களையுடைய சக்ரபாணியின் நகஸமுகம் எங்களுக்கு செல்வத்தை சேர்ப்பதாக.

17.பாதாம்போஜன்ம ஸேவாஸமவநத ஸுரவ்ராத பாஸ்வத்கிரீட
ப்ரத்யுப்தோச்சாவசாச்மப்ரவர கரகணை:சித்ரிதம்யத்விபாதி
நம்ராங்காநாம் ஹரேர்நோ ஹரிதுபல மஹா கூர்ம ஸெளந்தர்யஹாரி
ச்சாயம் ச்ரேய :ப்ரதாயி ப்ரபதயுகதம் ப்ராபயேத் பாப மந்தம்
ஹரியின் புறங்கால்களிரண்டும் வணங்கியவர்களின் பாபத்தை நீக்கட்டும். அவை இயல்பாகவே ச்ரையஸை கொடுப்பன. பச்சைக்கற்களால் அமைக்கப்பட பெரும் ஆமை வடிவழகு கொண்டவை, காலில் விழுந்து வணங்கும் தேவர்களின் கிரீடத்திலுள்ள வைரக் கற்களின் நிறம் நிழல் படிந்து க அழகாகத் தோற்றமளிக்கின்றன இவை. 


18.ஸ்ரீமத்யௌ சாருவ்ருத்தே கரபரிலனாந்த ஹ்ருஷ்டே ரமாயா:
ஸெளல்தர்யாட் யேந்த்ர நீலோபல ரசிதமஹாதண்டயோ:காந்திசேளரே
ஸ¨ரீந்த்ரை:ஸ்தூயமாநேஸுர குலஸுகதே ஸ¨திதாராதிஸங்கே
ஜங்கே நாராயணீயே முஹ§ரபிஜயதா மஸ்மதம்ஹோ ஹரந்த்யௌ
பகைவரை அழித்து தேவர்க்கு ஸுகமளித்து காக்கும் நாராயணனது முழங்கால்கள் எங்கள் பாபத்தைப் போக்கி விளங்கட்டும். சான்றோர் போற்றுமளவு உருண்டு திரண்டவை:லக்ஷ்மீதேவியின் கை வருடல் காரணமாக ஸுகம் நேடியவை. நேர்த்தியான இந்தர நீலக்கல்லால் சமைத்த தண்டங்களின் அழகையும் கொண்டவை. 


19.ஸம்யக்ஸாஹ்யம் விதாதும் ஸமவஸததம் ஜங்கயோ:கிந்நயோர்யே
பாரீபூதோரு தண்டத்வய பரணக்ருதோத்தம்ப பாவம் பஜேதே
சித்தாதர்சம் நிதாதும் மஹிதவ ஸதாம் தே ஸமுத் காயமாநே
வ்ருத்தாகாரே விதத்தாம் ஹ்ருதி முத மஜித ஸ்யாநிசம் ஜனுநீந:
சோர்ந்து போன முழங்கால்களுக்கு சற்று நல்ல உதவி செய்ய எண்ணியும், பாரமாக இருக்கும் தொடைகளைத் தாங்க வேண்டியும் சற்று முன் தள்ளி அமைந்தவையும், நல்லோரின் தூய மனக்கண்ணாடியைவைக்கும் பேழை போன்றிருப் பவையும் உருண்டு இருப்பவையுமான விஷ்ணுவின் முட்டிக் கால்கள் எமக்கு மகிழ்ச்சி பொங்கச்செய்யட்டும். 


20.தேவோ பீதிம் விதாது:ஸபதிவிதததௌ கைடபாக்யம் மதும்சா
ப்யாரோப்யாரூடகர்வாவதி ஜலதி யயோரதி தைத்யௌ ஜகாந
வ்ருத்தாவன்யோன்ய துல்யௌ சதுரமுபசயம் பிப்ரதாவப்ரநீலௌ
ஊரூசாரூ ஹரேஸ்தௌ முதமதிசயிநீம் மானஸே நோ விதத்தாம்
ஹரி, முன்பு பிரம்மதேவனுக்கு பயம் காட்டிய மதுகைட பாஸுர்களைதன் தொடையின் மீது ஏற்றி சமுத்ரத்தில் வதைத்தார். அந்த தொடைகள் ஒன்றுக்கொன்று இணையானவை. அழகியவை, பருத்து உருண்டுருப்பவை. அவை எமக்கு வெகுவான மகிழ்ச்சியைத் தந்தருளட்டும். 


21.பீதேந த்யோததே யத் சதுரபரிஹிதே நாம்பரேணாத்யுதாரம்
ஜாதாலங்காரயோகம் சலவ ஜலதேர்வாட வாக்னி ப்ரபாபி:
ஏதத் பாதித்ய தாந்நோ ஜகந மதிக நாதேனஸோ மானனீயம்
ஸாதத்யேநைவ சே தோவிஷயமவதரத்பாது பீதாம்பரஸ்ய
பீதாம்பரனான விஷ்ணுவினுடைய போற்றத்தக்கதும் அடிக்கடி மனதிற்கொள்ளப்படுவதுமான குஹ்யப்ரதேசம் எங்களை பெரும்பாபத்தினின்று காத்தருளட்டும். அந்த ஜகன பிரதேசம் அழகாக அணியப்பட்ட மஞ்ஜள் பட்டினால் க நேர்த்தியாக உள்ளது. பாடவத்தீயின் ஒளிகளால் சமுத்ர ஜலம் போன்று ஒப்பனை கொண்டதாயுருக்கிறது. 


22.யஸ்யா தாம்நா த்ரிதாம்நோ ஜகநகலிதயா ப்ராஜதேsங்கம்யதா ப்தே:
மத்யஸ்தோ மந்தராத்ரி:புஜகபதி மஹாபோக ஸந்நத்த மத்ய:
காஞ்சீஸா காஞ்சநாபா மணிவரகிரணை ருல்லஸ்த்பி:ப்ரதீப்தா
கல்யாம் கல்யாண தாத்ரீமம மதிமநிசம் கம்ரரூபா கரோது
ஸ்ரீமந் நாராயணுடைய இடுப்பில் அணியப்பட்ட எந்த ஒட்டியாணப் பட்டையால், கடல் நடுவில் இருப்பதும், வாஸுகியின் நீண்ட உடல் சுற்றிய நடு பாகத்தையுடையதுமான மந்தர மலையோல் அவரது உடல் விளங்கிதோ, தங்கமயமானதும், பல நல்ல வைரங்கள் பதித்து அழகிய தோற்றமுடையதுமான அந்த ஒட்டியானம் என் புத்தியை யோக்ய மாணவராகச் செய்யட்டும். 


23.உந்நம்ரம் கம்ரமுச்சை ருபசிதமுத பூத் யத்ர பத்ரைர் விசித்ரை:
பூர்வம் கீர்வாண பூஜ்யாம் கமலஜமது பஸ்யாஸ் பதம் தத் பயோஜம்
யஸ்ந் நீலாச்ம நீல ஸ்தரலருசிஜலை:பூரிதே கேலி புத்யா
நாலீகாக்ஷஸ்ய நாபீஸரஸி வஸது நஸ்சித்தஹம்ஸ:சிராய
தாமரைக் கண்ணனான நாராயணரின் நாபியாகிய வாவியில் நீலமேணி போல் நீலமான சலசலக்கும் தண்ணீர் நிரம்பி வழிகிறது. அந்த தாடகத்தில் எங்கள் மனமாகிய அன்னப்பறவை விளையாடும் எண்ணத்தில் வெகுநாட்கள் தங்கலாமேஅந்த நாபியில் தானே நெடிதுயர்ந்த அழகிய ஒரு தாமரை விசித்ரமான இலையுடன் பிரம்ம தேவனுக்கு இருப்பிடமாக வளர்ந்தது. 


24.பாதாலம் யஸ்யநாலம் வலயமபி திசாம் பத்ரபங்க்திம் நதேகந்த்ரான்
வித்வாம்ஸ:கேஸராலீ:விதுரிஹ விபுலாம் கர்ணிகாம் ஸ்வர்ணசைலம்
பூயாத்காயத் ஸ்வயம்பூ மதுகரபவனம் பூமயம் காமதம்நோ
நாலீகம் நாபிபத்மாகரபவமுரு தந்நாக சய்யஸ்ய சௌரே:
ஆதிசேஷனாகிய படுக்கையுடைய சௌரியின் நாபி தடாகத்தில் அமைந்த, ரீங்கார கானம் செய்யும் பிரம்மனாகிய வண்டின் தாமரை டு எங்கள் விருப்பங்களை அருளுவதாகட்டும். அந்த கட்டிடத்தின் அடித்தலம் பாதாலமென்றும், இதழ் வரிசைகள் திசைகளின் வட்டம் என்றும், கேஸரங்கள் மலைகள் என்றும், கர்ணிகை மேருமலை என்றும் அறிந்தவர் கூறுவர்.


25.ஆதௌ கல்பஸ்ய யஸ்மாத் ப்ரபவதி விததம் விச்வமேதத் விகல்பை:
கல்பாந்தே யஸ்ய சாந்த:ப்ரவிசதி ஸகலம் ஸ்தாவரம் ஜங்கமம்ச
அத்யந்தாசிந்த்யமூர்தே:சிரதர மஜித ஸ்யாந்தரிக்ஷஸ்வரூபே
தஸ்ன் அஸ்மாகமந்த:கரண மதிமுதா க்ரீடதாத் க்ரோடபாகே
யுக ஆரம்பத்தில் இந்த உலகம், பல பல வேறுபாடுகளோடு எந்த ஒரு அஃகுளிலிருந்து உண்டாகிறதோ, அதேபோல் யுகமுடிவில் எங்கு அனைத்து ஸ்தாவரஜங்கமங்களும் ஒடுங்குகின்றனவோ அதே அந்த அந்தரிக்ஷரூபமான பரமனின் அஃகுளில் நமது அந்த:கரணம் மகிழ்ச்சியுடன் விளையாடட்டும். 


26.காந்த்யம்ப:பூரபூர்ணே லஸதஸித வலீபங்க பாஸ்வத்தரங்கே
கம்பீராகார நாபீ சதுரதர மஹாவர்த சோபிந்யுதாரே
க்ரீடத்வா நத்த ஹேமோதரநஹன மஹோபாடவாக்னி ப்ரபாட்யே
காமம் தாமோதரீயோதரஸலில நிதௌ சித்தமத்ஸ்யஸ்சிரம் ந:
தாமோதரனின் உதரமாகிய கடலில் எங்கள் மனதாகிய மீன் இஷ்டப்படி விளையாடலாமே அந்த கடல் பளபளப்பு என்ற தண்ணீர் நிறம்பப் பெறுகிறது. கருநீல த்ரிவலீமடிப்பு என்ற அலைகள் அங்கு காண்கிண்றன. க ஆழமான நாபீ என்ற சூழல் அங்கு சிறந்த விளங்குகிறது. மேலும் தங்க வயிற்றுப் பட்டை என்ற வாடவத்தீயின் கொழுந்தும் இருக்கின்றதல்லவா?


27.நாபீ நாலீக மூலாத் அதிகபரிமலோன் மோ ஹிதாநா மலீநாம்
மாலா நீலேவ யாந்தீ ஸ்புரதி ருசிமதீ வக்த்ரபத்மோன் முகீ யா
ரம்யா ஸா ரோமராஜி:மஹிதருசிகரீ மத்யபாகஸ்ய விஷ்ணோ:
சித்தஸ்தா மா விரம்ஸீத் சிரதர முசிதாம் ஸாதயந்தீ ச்ரி யம் ந:
நாபீ என்ற தாமரையடியிலிருந்து வரும் குந்த வாசனையால் மயங்கிய வண்டுகளின் நீலநிற மலையவென மேலே சென்று, முகமாகிய தாமரையைத் தாவித் பிடிக்க முயலுகின்ற அந்த அழகிய ரோமவரிசை விஷ்ணுவின் இடைப்பாகத்திற்கு அழகு கூடுகிறதே அதை நினைக்கும் போதெல்லாம் நமக்கு செல்வச் செழிப்பு விரிவடைகிறது. ஆகவே அது மனதை விட்டு அகல வேண்டாமே.


28.ஸம்ஸ்தீர்ணம் கௌஸ்துபாம்சுப்ரஸர கிஸலயை:முக்த முக்தா பலாட்யம்
ஸ்ரீவாஸோல்லாஸி புல்லப் ரதிநவ வந மாலாங்கி ராஜத்புஜாந்தம்
வக்ஷ:ஸ்ரீவத்ஸ காந்தம் மதுகர நிகர ச்யாமலம் சார்ங்கபாணே:
ஸம்ஸாராத்வச்ரமார்தைருபவனவ யத்ஸேவிதம் தத்ப்ரபத்யே
கௌஸ்துபமணியின் காந்தி ச்சுத் துளிர்கள் பரப்பியதும் முத்து மணிகள் நிரம்பியதும், லக்ஷ்மீவாஸம் செய்வதால் மலர்ச்சி பெற்றவன மாலை துலங்க விளங்குவதும், ஸ்ரீவத்ஸம் அமைந்து அழகாயிருப்பதும், தேன் வண்டுக் கூட்டம் போல் நீலநிறமாய் இருப்பதுமான சாரங்கபாணியின் மார்யை-சம்ஸாரம் என்ற பெருவழியில் களைத்தவர் பூங்காவாக எண்ணி ஒய்வு பெற விழையும் அந்த மார்பை சரணடைகிறேன். 


29.காந்தம் விக்ஷே£ நிதாந்தம் விதததிவ கலம் காலிமாகாலசத்ரோ:
இந்தோர் பிம்பம் யதாங்கோ மதுப இவதரோர் மஞ்ஜரீம் ராஜதே ய:
ஸ்ரீமான் நித்யம் விதோயத் அவிரல லித:கௌஸ்துப ஸ்ரீப்ரதானை:
ஸ்ரீவத்ஸ:ஸ்ரீபதேஸ்ஸ ச்ரேயஇவ தயிதோ வத்ஸ உத்சை:ச்ரேயம் ந:
காலகாலனான பரமேச்வரனன் கழுத்தை ஆலகால கருமை அழகாகச் செய்வது போலவும், சந்த்ர பிம்பத்தை கலங்கமும், மரத்தின் பூங்கொத்தை தேன்வண்டு போலவும் அழகு சேர்ந்த வண்ணம் விளங்கும் ஸ்ரீவத்ஸம் எங்களுக்கு செல்வச் செழிப்பை நல்கட்டும். அது ஸ்ரீ தேவியின் செல்லப்பிள்ளையாயிற்றே.


30.ஸம்பூயாம் போதிமத்யாத் ஸபதி ஸஹஜயா ய:ச்ரியா ஸந்நிதத்தே
நீலேநாராயணோர:ஸ்தலககனதலே ஹாரதாரோ பஸேவ்யே
ஆசா:ஸர்வா:ப்ரகாசா:விதததபி ததத்சாத்ம பாஸாsன்ய-தேஜாம்ஸி
ஆஸ்சர்யஸ்யாகரோ நோ த்யுமணிரிவ மணி:கோஸ்துப:ஸோsஸ்து பூத்யை
பாற்கடலிலிருந்து உடன்பிறந்த லக்ஷ்யுடன் சேர்ந்தே, ஹாரங்களாகிய நக்ஷத்திரங்களுடன் விளங்கும் நாலமான நாராயணனின் மார்பு என்ற ஆகாயத்தில் சூர்யன் போல் ளிரும் கௌஸ்துபம் என்ற வியத்தகு மணி எங்களுக்கு ஐச்வரியத்தை விளைவிக்கட்டும். அந்த மணி, ஸகல திசைகளையும் பிரகாசமடையச் செய்யதோடு, இதர ஒளிகளை மழுங்கவும் செய்கிறது. 


31.யா வாயாவானுகூல்யாத்ஸரதிமணிருசா பாஸமாநாsஸமாநா
ஸாகம் ஸாகம்ப மம்ஸே வஸதி விதததீ வாஸுபத்ரம் ஸுபத்ரம்
ஸாரம் ஸாரங்கஸங்கைர் முகரிதகுஸுமா மேசகாந்தா சங்கர மடம் காந்தா
மாலா மாலாலிதா ஸ்மாந் நவிரமது ஸுகை:யோஜயந்தீ ஜயந்தீ
காற்று அனுகூலமாக சும்போது மணிமாலை போல் விளங்கும் ஜயந்தீ மாலை லக்ஷ்மீ தேவியால் போற்றப்பட்டு தளதளப்புடன் தோளில் இருந்துகொண்டு வாஸுதேவனை கல்யாணங்களுடன் இருக்கச் செய்கிறது. அதில் வண்டுகள் மொய்பதால் புஷ்பங்களே ஆரவாரிப்பதாகத் தோன்றுகிறது. அந்த மாலை எங்களுக்கு சுகங்களை அனவரதமும் உண்டாக்கட்டும். 


32.ஹாரஸ்யோருப்ரபாபி:ப்ரதிநவ வந மாலாம்சு:ப்ராம்சுரூபை:
ஸ்ரீபிஸ்சாங்கதாநாம் கபலிதருசி யந்நிஷ்க பாபிஸ்ச பாதி
பாகுல்யேநைவ பத்தாஞ்ஜலிபுட மஜிதஸ்யாபியாசாமஹே தத்
பந்தார்திம் பாததாம் நோ பகுவிஹதி க ரீம் பந்துரம் பாகுமூலம்
அஜிதனுடைய அடக்கமான பாஹ§மூலம் துன்பங்களைத் தரும் சம்சார பந்தத்தை நீக்கட்டும் என்று கைகூப்பி பல தடவை பிரார்த்திக்கிறோம். அந்த பாஹ§ மூலம் ஹாரங்களின் ஒளிகளாலும், புத்தம் புதிய வனமாலையின் அழகாலும் தோள் வளைகளின் காந்தியாலும், தங்க நகைகளின் சோபையாலும் ளிர்கிறது. 


33.விச்வத்ரானைணதீக்ஷ£ஸ்ததனுகுண குணக்ஷத்ர நிர்மாணதாக்ஷ£:
கர்தாரோ துர்நிரூபா:ஸ்புடகுருயசஸாம் கர்மணாமத்புதாநாம்
சார்ங்கம் பாணம் க்ருபாணம் பலகமரிகதே பத்மசங்கௌ ஸஹஸ்ரம்
பிப்ராணா:சத்ஸ்ரஜாலம் மமத்தது ஹரே:பாஹவோ மோஹ ஹாநிம்
ஹரியின் கைகள் சார்ங்கம், பாணம், வாள், கேடயம், சக்ரம், கதை, பத்மம், சங்கவை போன்ற ஆயுதங்களை தாங்கியதாய் என்று மோஹத்தை நீக்கட்டும். அவை உலகைக் காப்பதற்கென்றே கருத்தாய் பல அற்புதச் செயல்களையும் செய்து, க்ஷத்ரியர்களையும் தோற்றச்செய்துள்ளனவே. 


34.கண்டாகல்போத்கதைர்ய:கநமகய லஸத்குண்ட லோத்தை ருதாரை:
உத்யோதை:கௌஸ்துபஸ்யா ப்யுருபிபசித:சித்ரவர்ணோ விபாதி
கண்டாச்லேஷே ரமாயா:கரவலய பதைர்முத்ரிதே பத்ரரூபே
வைகுண்டீயேsத்ர கண்டே வஸது மம மதி:குண்டபாவம் விஹாய
கழுத்தில் அணியும் ஆபரணங்கள், தங்கமயமான குண்டலங்கள், இவற்றின் பிரகாசங்களாலும், கௌஸ்துப மணியின் ஒளியும் சேர்ந்து பல நிறமுள்ளதாகச் செய்யப்படுகிறது ஸ்ரீ ஹரியின் கண்டம். அதோடு லக்ஷ்மீதேவியின் ஆலிங்கனத்தில் பதிந்த கைவளையல்களின் தழும்பும் அங்கு உள்ளன. அத்தகைய கழுத்தில் என் மனம் தடையின்றி நிலை பெறட்டும். 


35.பத்மானந்தப்ரதாதா பரிலஸதருண ஸ்ரீபரீதாக்ரபாக:
காலேகாலே ச கம்புப்ரவரசசதரா பூரணேய:ப்ரண:
வக்த்ராகாசாந்தரஸ்த ஸ்திரயதி நிதராம் தந்த தாரௌகசோபாம்
ஸ்ரீபர்து:தந்தவாஸோத்யுமணி ரகதமோ நாதனா யாஸ்து அஸெள ந:
லக்ஷ்மீபதியான நாராயணனது உதடாகிய சூரியன் எனது பாப இருட்டைப் போக்குவதாக அமையட்டும். அந்த சூர்யன் முகமாகிய பத்மத்திற்கு அழகு சேர்ப்பதாகவும் ஸ்ரீதேவிக்கு இன்ப மகிழ்ச்சியை கொடுப்பதாயும் முன்பாகத்தில் அருண (சிவப்பு) காந்தியுடையதாகவும், அவ்வப்போது கண்டமாகிய சந்திரனை முழுமையாக்கத் தேர்ந்ததாயும், முக்யமாக ஆகாயத்தில் இருந்தவாறு தந்தங்க (பற்களின்) ளாகிய நக்ஷத்திரங்களின் சோபையை மறப்பதாகவும் இருக்கிறது. 


36.நித்யம் ஸ்நேஹாதிரேகாத் நிஜகது ரலம் விப்ரயோகாக்ஷமா யா
வக்த்ரேந்தோ ரந்தராலே க்ருதவஸதிரிவா பாதி நக்ஷத்ரராஜி:
லக்ஷ்மீகாந்தஸ்ய காந்தாக்ருதி ரதிவிலஸன் முக்த முக்தாவலிஸ்ரீ:
தந்தாலீ ஸந்ததம் ஸா நதிநுதிநிரதான் அக்ஷதான் ரக்ஷதாத் ந:
பற்களின் வரிசையாகிய நக்ஷத்திரக் கூட்டம் தனது காதலனாகிய முக சந்திரர்களின் வியோகம் வேண்டாமே என்று தானோ முகத்தினுள்ளேயே வசிக்கிறது. அந்தந்த வரிசை அழகிய முத்துமணிகளின் வரிசை போல் உள்ளது. அத்தகைய பல்வரிசை லக்ஷ்மீகாந்தனின் பக்த்தர்களை குறையுறாவண்ணம் காக்கட்டும். 


37.ப்ரஹ்மன்ப்ரஹ்மண்ய ஜிஹ்மாம் மதிமபி குருஷேதேவஸ்யபாவ யேத்வாம்
சம்போ, சக்ர த்ரிலோகீ மவஸி கிமமரை:நாரதாத்யா:ஸுகம் வ:
இத்தம் ஸேவாநம்ரம் ஸுர முனிநிகரம் க்ஷ்ய விஷ்ணோ:ப்ரஸன்ன
ஸ்யாஸ்யேந்தோராஸ்ரவந்தீ வரவசன ஸுதா ஹ்லாதயேத் மானஸம் ந:
பிரம்மனே, கீழ்தரமான எண்ணுவதில்லையேஹே சம்போஉம்மை கௌரவிக்கிறேன். ஹே இந்த்ரனே உலகைக் காக்கிறாயல்லவாஏ நாரதர் முதலிய ரிஷிகளேஉங்களுக்கு சுகம்தானேஎன்றிவ்வாறு தேவர்களையும் முனிவர்களையும் பார்த்து அகமகிழ்ந்து கேட்கும் சீரிய பேச்சு (விஷ்ணுவின்) ஆகிய அம்ருதம் எங்களை மகிழ்விக்கட்டும். 


38.கர்ணஸ்தஸ்வர்ண கம்ரோஜ்வல மகர மஹாகுண்டலப்ரோத தீப்யத்
மாணிக்ய ஸ்ரீப்ரதாநை:பரிலித மலிச்யாமலம் கோமலம் யத்
ப்ரோத்யத்ஸ¨ர்யாம்சு ராஜன் மரகத முகுராகார சோரம் முராரே:
காடா மாகாநீம் ந:சமயது விபதம் கண்டயோர் மண்டலம் தத்
காதில் தொங்கும் தங்கமகர குண்டலங்களில் பதிந்துள்ள மாணிக்ய மணி காந்தியால் ஒளி பொருந்தியதும் அழகு கருநிறமுள்ளதும், சூர்யன் உதிக்கும்போது மகரதக் கண்ணாடியோவெனத் திகழும் நாராயணனின் கன்ன பிரதேசங்கள், எங்களை எதிர்நோக்கிய ஆபத்துக்களைப் போக்கட்டும். 


39.வக்த்ராம்போஜே லஸந்தம் முஹ§ரதரமணிம் பக்வபிம்பாபிராமம்
த்ருஷ்ட்வாதஷ்டும் சுகஸ்ய ஸ்புட மவதரத ஸ்துண்டதண்டாயதே ய:
கோண:சோணீக்ருதாத்மா ச்ரவணயுக லஸத்குண்டலோ ஸ்ரைர்முராரே:
ப்ராணாக்யஸ்யா நிலஸ்ய ப்ரஸரணஸரணி:ப்ரானதாநாய ந:ஸ்யாத்
பழுத்த கோவைப்பழம் போன்ற உதடு (கீழ்) ஆகிய மணியைப் பார்த்து அதைக் கடித்துச் சுவைக்க முற்படும் கிளிக்கு முகத்தின் தண்டெனத் திகழ்கிறது மூக்கு. அது மேலும் காதுகளில் குலுங்கும் குண்டலங்களினின்று விழும் கண்ணீரால் சிவப்பேறி இருக்கிறது. அத்தகைய ப்ராண வாயு போக்குவரத்துக்கு உதவியாக இருக்கும் ஸ்ரீ ஹரியின் மூக்கு எங்கள் உயிருக்கு உதவட்டும். 


40.திக்காலௌ வேதயந்தௌ ஜகதி முஹ§ரிமௌ ஸஞ்சரந்தௌ ரந்தூ
த்ரைலோக்யா லோகதீபாவபிதததி யயோரேவ ரூபம் முனீந்த்ரா:
அஸ்மாநப்ஜப்ரபே தே ப்ரசுரதர க்ருபா நிர்பரம் ப்ரேக்ஷமாணே
பாதா மாதாம்ர சுக்லாஸித ரு சிருசிரே பத்மநேத்ரஸ்ய நேத்ரே
சிவப்பு, வெள்ளை, கருப்பு ஆகிய நிறங்களால் அழகியவையும் தாமரையிதழ் ஒத்தவையும், க்கக் கருணையுடன் அனைவரையும் காண்பவையும் ஆன கமலக்கண்ணன் நாராயணனின் கண்கள் எங்களை காக்கட்டும். அவை சூர்ய சந்திரர்கள்தான் என்று முனிவர் கூறுவர். சூர்ய சந்திரர்கள் திசையையும் காலத்தையும் அறிய காரணமானவர். உலகை சுற்றி வருபவர்;மூவுலகுக்கும் பிரகாசமளிக்கும் தீபங்கள் போன்றவர். 


41.பதாத் பாதால பாதாத் பதிகபதிகதேர்ப்ரூயுகம் புக்நமத்யம்
யேநே ஷச்சாலிதேந ஸ்வபதநியதா:ஸாஸுராதேவஸங்கா:
ந்ருத்யல்லாலாட ரங்கே ரஜநிகரதநோ:அர்த கண்டாவதாதே
கால வ்யாலத்வயம் வா விலஸதி ஸமயா வாலிகா மாதரம் ந:
நடுவில் பள்ளமாயுள்ள நாராயணனின் எந்த புருவங்கள் சிறிதசைவாலேயே தேவாஸுரர்கள் அவரவர் நிலையில் நிறுத்தப்பட்டனரோ, நெற்றியரங்கில் நடனமாடும் அவை, கருவிழிக்கு அருகில் இருகால நாகமெனத் திகழும் அத்தகைய புருவங்கள் எங்களை கீழ்நிலைக்குப் போகாமல் பாதுகாக்கட்டும். 


42.லக்ஷ்மாகாரால காலிஸ்புரதலிக சசாங்கார்தமீல
ந்நேத்ராம் போஜப்ரபோதோத்ஸுக நிப்ருததராலீநப்ருங்கச்சடாபே
லக்ஷ்மீ நாதஸ்ய லக்ஷ்யீக்ருத விபுதகணாபாங்க பாணாஸ நார்த-
ச்சாயே நோ பூரிபூதி ப்ரஸவகுசலதே ப்ரூலதே பாலயேதாம்
அடையாளக் கறையோவெனத் திகழும் கேசத்தோடு அமைந்த நெற்றியாகிய அரைவட்டச் சந்திரன் தோன்றியுள்ளதால் மூடிய கண் தாமரையிதழ்கள் மலர்வதை எதிர்நோக்கி புடை சூழக் காத்திருக்கும் வண்டின் வரிசை போலிருக்கிறது லக்ஷ்மீநாதனது புருவ வரிசை. அது செல்வச் செழிப்பை தந்து எங்களை காக்க வேண்டும். 


43.ரூக்ஷஸ்மாரேக்ஷ§சாப ச்யுதசரநிகர க்ஷீணலக்ஷ்மீ கடாக்ஷ
ப்ரோத்புல்லத் பத்மமாலா விலஸித மஹித ஸ்பாடிகை சானலிங்கம்
பூயாத் பூயோ விபூத்யை மம புவனபதே:ப்ரூலதா த்வந்த்வமத்யாத்
உத்தம் தத்புண்ட்ர மூர்த்வம் ஜநிமரணதம:கண்டனம் மண்டனம்ச
உலக நாயகனான நாராயணனின் இருபுருவங்களிடையே மேனோக்கிய இருபுண்டங்கள் பிறப்பு இறப்பு ஆகிய இருளையழிப்பதாயும் அலங்காரமாயுருந்து என் ஐச்வர்யத்தை வளரச் செய்யட்டும். அந்த ஊர்த்வ புண்ட்ரம், கோபங் கொண்ட மன்மதனின் வில்லினின்று செல்லும் பாணங்களால் அடங்கிய லக்ஷ்யின் கடாக்ஷம்போல் மலர்ந்த செந்தாமரை மாலையுடன் விளங்கும் ஸ்படிக லிங்கம்போல் விளங்குகிறது. 


44.பீடீபுதாலகாந்தம் க்ருத மகுடமஹாதேவ லிங்கப்திஷ்டே
லாலாடே நாட்யரங்கே விகடதரதடே கைடபாரேஸ்சிராய:
ப்ரோத்காட்யைவாத் மதந்த்ரீப்ரகட படகுடீம் ப்ரஸ்புரந்தீம் ஸ்புடாங்கம்
பட்யம் பாவநாக்யாம் சடுலமதிநடீ நாடிகாம் நாட யேத்ந:
கைடபனை வதைத்த விஷ்ணுவின் அலகத்தை பீடமாய்க் கொண்டிருக்கும்படி கிரீட மணிந்தாற்போன்ற மகாதேவலிங்கப் பிரதிஷ்டை கொண்ட நெற்றியாகிய நாடக மேடையில் வெகுகாலமாக தன்சோர்வாகிய பெரிய கூடாரத்தைப் போட்டு தெளிவாய்த் தெரியும் இந்த நுட்பமறியும் புத்தியாகிய நடிகை பாவனை என்ற நாடகத்தை நடிக்கட்டும். 


45.மாலாலீவாலிதாம்ந:குவலயகலிதா ஸ்ரீபதே:குந்லாலீ
காலிந்தீ ஆருஹ்ய மூர்த்நோ கலதி ஹரசிர:ஸ்வர்துநீஸ்பர்தயா நு
ராகுர்வா-ஆயாதி வக்த்ரம் ஸகல சசிகலாப்ராந்திலோ லாந்தராத்மா
லோகை ராலோக்யதே யா ப்ரதிசது ஸததம் ஸாகிலம் மங்கலம் ந:
கூட்டிலிருந்து கிளம்பிய வண்டுகள் கூட்டு வரிசையோ என நினைக்கத் தோன்றும் கருநெய்தல் நிரம்பிய ஸ்ரீபதியின் குந்தலக் கொத்து அது. ஆனால், அது பரமேச்வரன் தலையில் இருக்கும் கங்கையோடு போட்டி போட்டுக் கொண்டு யமுனைதானோ இங்கு ஸ்ரீபதியின் தலையிலிருந்து பொங்கி விழுகிறாள் என்று வியக்கத் தோன்றும். அல்லது சந்திரக் கலைகள் முழுதும் சேர்ந்துள்ளதே என்று பிரத்து ஸ்ரீபதியின் முகத்தை நோக்கி ராகுதான் வருகிறானோ என்றும் நினைக்கத் தோன்றும். அத்தகைய கேசக்கொத்து எங்களுக்கு எல்லா மங்களங்களையும் கொடுக்கட்டும். 


46.ஸுப்தாகாரா:ஸுப்தே பகவதி
விபுதைரப்ய த்ருஷ்ட ஸ்வரூபா:
வ்யாப்தவ்யோமாந்த ராலா:தரலமணிருசா
ரஞ்ஜிதா:ஸ்பஷ்டபாஸ:
தேஹச்சாயோத்கமாபா ரிபுவபு ரகரு
ப்லோஷரோஷாக்னி-தூம்யா:
கேசா:கேசி திவ்ஷோ நோ விததது
விபுலக்லேச பாசப்ரணா சம்
பகவான் உறங்கும்போது உறங்குவது போல் இருக்கும் கேசங்கள், தேவர்களே கண்டறியப்படாதவனாய் திசையந்தரங்களில் பரவி நின்று, உடலழகே வெளிப்பட்டு பரவுகின்றனவோ என்று மயக்கமுறச் செய்யும். எதிரிகளின் உடலாகிய அகருவைப் பொசுக்கும் காட்டுத்தீயின் புகைமண்டலமோ எனவும் நினைக்கத் தூண்டும். அத்தகையதான நாராயணன் கேசங்கள் எங்கள் கஷ்டங்களை நீக்கிக் களையட்டும். 


47.யத்ர ப்ரத்யுப் ரத்னப்ரவர பரிலஸத் பூரிரோ சிஷ்ப்ரதாந
ஸ்பூர்த்யா மூர்திர் முராரா:த்யுமணி சதசித வ்யோமவத் துர்நிர்க்ஷ்யா
குர்வத்பாரே பயோதி ஜ்வலதக்ருச சிகா பாஸ்வ தௌர்வாக்னி சங்காம்
சச்வத் ந:சர்ம திச்யாத் கலிகலுஷ தம:பாடனம் தத்கிரீடம்
பகவான் அணிந்துள்ள கிரீடம், கலியின் கக் கடிய அஜ்ஞான இருளைக் களையட்டும். அந்த கிரீடம் சமுத்திரத்தின் அக்கரையில் எரியும் வாடவத் தீயின் ஜாவாலையோ என நினைக்கத் தோன்றும். அதில் பதித்த பல அரிய ரத்னக் கற்களின் ஒளிக்கற்றைப் பரவுவதால் நாராயணனின் மூர்த்தி நூற்றுக்கனக்கான சூர்யர்கள் நிரம்பிய வானம் போல் கண்ணைக் கூசச்செய்யும். 


48.ப்ராந்த்வா ப்ராந்த்வா யதந்த ஸ்த்புரிபுவன குருரப்யப்தகோடீ ரநேகா:
கந்தும் நாந்தம் ஸமர்தோ ப்ரமரஇவ புநர்நாபி நாலீகநாலாத்
உன்மஜ்ஜன் ஊர்ஜித ஸ்ரீ ஸ்திரிபுவனமபரம் நிரமமே தத்ஸத்ருக்ஷம்
தேஹாம்போதி:ஸ தேயாத் நிரவதிரம்ருதம் தைத்யவித்வேஷிணோந:
பலகோடி வருஷங்கள் எதனுள்ளே அலைந்து அலைந்தும் த்ருபுவன குருவும் முடிவை எட்டவில்லை - நாபி கமலத்தின் தண்டில் பட்ட வண்டுபோல, வேறு வழியின்றி, அதே போன்ற வேறு ஒரு உலக மண்டலத்தை ஸ்ருஷ்டித்தாராம். அத்தகைய விஷ்ணுவின் கண்ணுக்கு எட்டாத தேகங்களின் கடல் அம்ருதத்தை எங்களுக்கு அளிக்கட்டும்.


49.மத்ஸ்ய:கூர்மோ வராஹோ நரஹரிண பதிர்வாமநோ ஜாமதக்ன்யை:
காகுத்ஸ்த:கம்ஸகாதீ மனஸிஜ விஜயீயஸ்ச கல்கீபவிஷ்யன்
விஷ்ணேரம்சா வதாரா:புவனஹிதகரா தர்மஸம்ஸ்தாப நார்தா:
பாயாஸுர்மாம் த ஏதே குருதர கருணாபார கிந்நாசயா யே
மத்ஸ்யம், கூர்மம், வராஹம், நரஸிம்மம், வாமநம், பரசுராமர், ராமன், கிருஷ்ணர், புத்தர், கல்கி ஆகிய விஷ்ணுவின் அம்சாவதாரங்கள் உலகத்தோர்க்கு நன்மையை உண்டாக்கவும், தர்ம நிலை நாட்டவும் எடுக்கப்பட்டன. கருணையின் எடுத்துக்காட்டுகள் கூட. அவை நம்மை காக்கட்டும். 


50.யஸ்மாத் வாசோ நிவ்ருத்தா:ஸமமபி மனஸா லக்ஷணாமீக்ஷமாணா:
ஸ்வார்த்தாலாபாத் பரார்த்தவ்யபகம கதக ச்லாகினோ வேதவாதா:
நித்யானந்தம் ஸ்வஸம் விந்நிரவதி விமல ஸ்வாந்த ஸங்க்ராந்தபிம்ப
ச்சாயாபத்யாபி நித்யம் ஸுகயதி யநோ யத்ததவ்யாத் மஹோந:
எந்த நித்யானந்தத்தைப் பற்றி பேச முற்பட்ட வேத வாதங்கள் அந்த பேச்சிலிருந்து மனதுட்பட திரும்ப வேண்டியதை உணர்ந்தணவோ, ஏனெனில் ஸ்வார்த்தம் சித்திக்காத பொழுது வேறும் பரார்த்தமும் கிடைக்காமற் போனதை வைத்து தங்களை தாங்களே மெச்சிக் கொண்டனவோ, அவ்வானந்த உணர்வின் தூயமனதிற்பட்ட படிவத்தை மட்டும் எண்ணியோகிகள் கூட மகிழ்ந்து விட்டனரோ அத்தகைய நித்யானந்த ஜ்யோதி எங்களை காக்கட்டும். 


51.ஆபாதாத் ஆச சீர்ஷாத்வபுரிதமநகம் வைஷ்ணவம் ய:ஸ்வசித்தே
தத்தே நித்யம் நிரஸ்தாகில கலிகலுஷே ஸந்ததாந்த:ப்ரமோத:
ஜுஹ்வத் ஜிஹ்வாக்ருசானௌ ஹரிசரித ஹவி:ஸ்தோத்ரமந்த்ரானுபாடை:
தத்பாதாம் போருஹாப்யாம் ஸததமபி நமஸ்குர்மஹே நிர்மலாப்யாம்
காலடி முதல் தலை முடி வரை புனிதமான இந்த விஷ்ணுவின் வடிவத்தை, கலிகல்மஷம் ஏதுல்லாத மனதில் மகிழ்ச்சியுடன் கொள்ளும் பொழுது, ஜிஹ்வா (நாக்கு) என்ற அக்னியில் ஸ்தோத்திரம், மந்த்ரம் இவற்றுடன் ஹரிசரிதம் என்ற இந்த ஹவிஸை ஹோமம் செய்வதற்காகவே கொள்ளலாம். அத்தகையவரது திருவடித் தாமரைகளுக்கு அனவரதமும் நமஸ்காரம் செய்கிறோம். 


52.மோதாத் பாதாதி கேச ஸ்துதிதி ரசிதாம் கீர்தயித்வா த்ரிதாம்ந:
பாதாப்ஜத்வந்த்வ ஸேவாஸமய நதமதி:மஸ்தகே நாநமேத்ய:
உன்முச்யைவாத்ம நைநோ நிசய கவசகம் பஞ்சதாமேத்ய பாநோ:
பிம்பாந்தர்கோசரம் ஸ ப்ரவிசதி பரமானந்த மாத்மஸ்வரூபம்
திரிவிக்ரமனின் பாதாதி கேசாந்த ஸ்தோத்திரம் என்ற இந்த பனுவலை சொல்லிக் கொண்டு, திருவடித் தாமரையை ஸேவிக்கும்போது மனதுடன் தலை வணங்கியவர். பாப கவசத்தை தானே கழற்றிவிட்டு சூர்ய பிம்பத்தினுள் பிரவேசித்து பரமானந்தமயமான ஆத்ம ஸ்வரூபத்தை எய்துவர். 


விஷ்ணுபாதாதி கேசாந்த ஸ்தோத்ரம் முற்றிற்று.

Monday, February 4, 2013

DISCLAIMER

கண்ணன் என் இஷ்ட தெய்வம். ஆகையால், நாராயணனான அவனைப் பற்றி எழுத வேண்டும் என்ற ஆவலாலும், அடியேனின் ஆத்ம த்ருப்திக்காகவும் எழுதுகிறேன். மேலும், பல உபன்யாசங்களில் கேட்டவைகளையும், பல்வேறு புத்தகங்களில் படித்தவைகளையும், மனதில் கொள்ள வேண்டும் என்ற ஆவலில் எனக்குத் தெரிந்த எளிய நடையில் பதிவிட்டுள்ளேன். தவறுகள்   இருப்பின் setlur.shanu@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு ஈமெயில் செய்யவும். திருத்திக்கொள்கிறேன். 

பன்னிரு ஆழ்வார்கள், மகாவிஷ்ணுவை ஸேவித்து(தரிசித்து), பெருமாளைப் பாடித்  துதித்த சிறப்பு மிக்க வைணவத் திருத்தலங்களை, "திவ்யதேசம்" எனக் கூறுவர்.  "கண்ணுக்கினியன கண்டோம்" என்ற தலைப்பில் திவ்ய தேசம் மற்றும் பெருமாள் கோவில்கள் சென்று வந்த எனது அனுபவங்களைப் பற்றிய கட்டுரைகள் எனது நினைவிலிருந்து நழுவாமல் இருக்கவே. வளமான வைணவ ஸம்ப்ரதாயங்களை வெளிப்படுத்தும் பயணக் கட்டுரைகள் படிப்பவர்களுக்கும் பயன்படும் என நம்புகிறேன். 

சிலவற்றைப் "படித்ததும் கேட்டதும்" என்று வகைப்படுத்தியிருக்கிறேன். என்னுடைய நண்பர் ஒருவர் வீடு காலி செய்யும் சமயத்தில் தன்னிடமுள்ள மிகப் பழைய நூல்களை, கிழிந்த நிலையில் இருந்த புத்தகங்களை, கடையில் போட்டுவிடப்போவதாயும் வேண்டுமானால் எடுத்துக்கொள்ளுங்கள் என்றும் சொன்னார். அதிலிருந்து படிக்கும் நிலையில் இருந்த சில புத்தகங்களை எடுத்து வந்தேன். நைந்து, கிழிந்த நிலையில் சில புத்தகங்கள் இருந்தன. அவற்றுள் படித்த சிலவற்றையும் பகிர்ந்திருக்கிறேன். ஆலோசனைகள் வரவேற்கப்படும். 

*ஓம் நமோ நாராயணாய* 

Wednesday, August 29, 2012

திருவிண்ணகர் / ஒப்பிலியப்பனுடன் ஒப்பில்லா ஒரு நாள் / ஒப்பிலியப்பன் கோயில் / கண்ணுக்கினியன கண்டோம்-7


தொகுப்பு சுற்றுப்பயணம் (package tour) பற்றிக்கேள்விப்பட்டிருக்கிறோம். இது தொகுப்பு தரிசனம் (package of darshans).

அதென்ன தொகுப்பு தரிசனம்?

என் அம்மா, வெகு வருடங்களுக்கு முன்பு உப்பிலியப்பனுக்கு பெரிய திருமஞ்சனம் வேண்டிக் கொண்டிருந்தார். அவருக்குக் குடும்பத்தில் எல்லாரும் ஸேவிக்க வேண்டும் என்று ஆசை. ரொம்ப வருடங்கள் தள்ளிப்போட்டு, ஒரு வழியாக சென்ற வருடம் சித்திரை மாதம் சித்திரை நக்ஷத்திரத்தில், மதுரகவியாழ்வார் திரு நக்ஷத்திரத்தன்று ஏற்பாடாயிற்று.


வந்த உடனேயே பதிவிட நினைத்தேன். அனைத்தும் அவன் திருவுள்ளப்படி தானே நடக்கிறது? மிகவும் தாமதமாக இன்று பதிவிட்டதும் நல்லதற்குத் தான். ஸ்ரீஒப்பிலியப்பனுக்கு ஆவணி மாதத்தில் ‘பவித்ரோற்சவம்’ நடைபெறுகிறது.  இந்த விழா, திருவோண நட்சத்திரத்தன்று (ஓணம் பண்டிகை) முடிவடைகிறது. அன்று சூரிய உதயத்தின்போது கருட வாகனத்தில் எழுந்தருளுகிறார் பெருமாள். இதை ‘உதய கருட சேவை’ என்கிறார்கள். கருட வாகனத்தில் புறப்படும் பெருமாள் தட்சிண கங்கை எனப்படும் நாட்டாற்றில் தீர்த்தமாடி திரும்புகிறார். அதன்பின் திருவோண பூஜை நடக்கிறது.

ஒரு வருடம் கழித்து இந்தப் பதிவு இன்று, திருவோணம், ஓணம் பண்டிகையன்று அமைந்திருப்பதை நினைத்தால் ஆச்சர்யமாக இருக்கிறது.

மறுபடியும் ஒப்பிலியப்பனுடன் இருந்த அந்த ஒரு நாளை மனக்கண்ணில் கொண்டு வந்து எழுதியது, மறுபடியும் ஸேவித்தது போல் உள்ளது. என்னுடைய மனோரதமும் நிறைவேறியது.

எது நடக்க வேண்டுமோ அது அவன் திருவுள்ளப்படி தானே நடக்கும்! எல்லாரும் அவரவர்கள் இடங்களில் இருந்து ஒப்பிலியப்பன் கோயில் சென்றடைந்தோம்.

கம்பீரமாகக் கிழக்கு நோக்கிக் காட்சியளிக்கிறது ராஜ கோபுரம். 




முதல் நாள் - உப்பிலியப்பன் கல்யாண உற்சவம் , கருட ஸேவை, டோலை (ஊஞ்சல் ஸேவை



தன் மகளை ஒரு பொழுதும் பிரியக்கூடாது என மார்க்கண்டேயர் கேட்டுக்கொண்டதால், தாயாருடன் திருவீதி புறப்பாடு. 


இரண்டாம் நாள் - விஸ்வரூப தரிசனம் , பெரிய திருமஞ்சனம், பெருமாளுக்கு தங்க கவசம் சாற்றுதல், ஸ்வர்ண புஷ்ப அர்ச்சனை , வடை மாலை, பள்ளியறை சேவை. எல்லா ஸேவையும் ஸேவிக்கப்பெற்றது எங்கள் பாக்கியம் என்றுதான் சொல்லவேண்டும். 

இனி, இந்த திவ்யதேசம் பற்றி:

திருவிண்ணகரம் (ஒப்பிலியப்பன் கோயில்). மார்க்கண்டேய க்ஷேத்ரம் என்றும் அழைக்கப்படுகிறது.

மூலவர்: ஒப்பிலியப்பன்(ஒப்பில்லாதவன்), ஸ்ரீனிவாசன் என்ற திருநாமம். திருப்பதி வேங்கடாசலபதியைப் போன்ற தோற்றத்துடன் நின்ற திருக்கோலம்.

பெருமாளின் வலது ஹஸ்தத்தில் சரம ஸ்லோகத்தின் பகுதியான "மாம் ஏகம் சரணம் வ்ரஜ" என்பது வைரத்தால் பொறிக்கப்பட்டுள்ளது. வைணவ ஸம்பிரதாயத்தில் உயர்வாகப் பேசப்படும் சரணாகதி தத்துவத்தை உணர்த்தும் அழகிய ஹஸ்தம்." என்னையே சரணடை" என்று சரணாகதி மார்க்கத்தை உணர்த்தும் ஹஸ்தம்.

தாயார்: பூமி தேவி , பூமி நாச்சியார் என்று திருநாமம். பெருமாளுக்கு வலது புறம், கீழே மண்டியிட்டு வணங்கிக்கொண்டிருக்கும் திருக்கல்யாணக்கோலம். தனிச்சன்னிதி இல்லை.

பெருமாளுக்கு இடதுபுறம் மார்க்கண்டேயர் மண்டியிட்டு வணங்கிக் கொண்டிருக்கிறார்.

தீர்த்தம் - அஹோராத்ர புஷ்கரிணி, ஆர்த்தி புஷ்கரிணி, ஆர்த்தி புஷ்கரிணி, "பகலிராப்பொய்கை' என்றும் பெயருண்டு. 

விமானம் - விஷ்ணு விமானம், சுத்தானந்த விமானம்.


ப்ரத்யக்ஷம் - மார்க்கண்டேயர், பெரிய திருவடி, காவேரி, தர்மதேவதை.

ம்ருகண்டு முனிவரின் மகன் மார்க்கண்டேயர், மகாலக்ஷ்மி தனக்கு மகளாய் வர வேண்டும் எனத் தவம் செய்தார். திருத்துழாய் வனத்தில், பூமியில், தாயாரையே மகளாய்ப் பெற்றார். பூமியிலிருந்து கிடைத்ததால் பூமிதேவி என்று திருநாமம். அவள் திருமணப் பருவம் அடைந்தாள். திருமால் முதியவர் வேடமிட்டு மார்க்கண்டேயரிடம் சென்று பெண் கேட்டார். மார்க்கண்டேயர், ‘‘அவள் குழந்தை. மிகச் சிறியவள். உப்பு போட்டு சமைக்க வேண்டும் என்று கூட தெரியாது " என்று கூறினார். அப்போது முதியவர், அவருக்கு ஸ்ரீமந் நாராயணனாகக் காட்சி தந்தார். அதைக்கண்ட மார்க்கண்டேயர், மனம் மகிழ்ந்து, திருமணத்துக்குச் சம்மதித்தார். பெருமாள், "உங்கள் பெண் உப்பில்லாமல் சமைப்பதையே நாம் ஏற்றுக்கொள்வோம், மகாலக்ஷ்மியான இவளை மணம் புரியவே யாம் வந்தோம்" என்று கூறி பூமிதேவியை மணந்தார்.

அதனால் இக்கோயிலில் தளிகையில் உப்பு சேர்ப்பதில்லை. பெருமாளும் உப்பிலியப்பன் என்று அழைக்கப்படலானார். உப்பு இல்லாவிட்டாலும், பிரஸாதங்கள் மிகவும் ருசியாக உள்ளது.

பெருமாள் சந்நிதியை நோக்கியபடி கருடன் சந்நிதியும், மற்றும் கண்ணன், ஸ்ரீராமர், ஆஞ்சநேயர், பாஷ்யகாரர், ஸ்வாமி தேசிகன், ஆழ்வார்கள் சந்நிதிகளும் உள்ளன.

நம்மாழ்வாருக்கு , மூலவர் விண்ணகரப்பனாகவும், உற்சவர் பொன்னப்பனாகவும், போகமூர்த்தி முத்தப்பனாகவும், தனிச் சன்னதிகளில் என்னப்பனாகவும் மணியப்பனாகவும் காட்சி அளித்திருக்கின்றார். மணியப்பனது இரு புறமும் சங்கும் சக்கரமும் அமைந்துள்ளன. முத்தப்பனுக்கு மட்டும் சந்நிதி இல்லை.

இப்படி பெருமாளை ஐந்து வடிவங்களில் அர்ச்சாவதாரமாய்க் கண்ட நம்மாழ்வார்,

என்னப்பன் எனக்காயிகுளாய் என்னைப் பெற்றவளாய்,
பொன்னப்பன் மணியப்பன் முத்தப்பனென் அப்பனுமாய்,
மின்னப்பொன் மதிள்சூழ்திரு விண்ணகர்ச் சேர்ந்தவப்பன்,
தன்னொப்பாரில்லப்பன் தந்தனன்தன தாள்நிழலே.

(திருவாய்மொழி ஆறாம் பத்து 6-3-9,) 

என்று பாடியுள்ளார்.

தன்னொப்பாரில்லப்பன் என்று நம்மாழ்வார் அழைத்ததால் “ஒப்பிலியப்பன்” என்ற திருநாமம் பெருமாளுக்கு ஏற்பட்டது.

க்ஷேத்ர விசேஷம் : திருப்பதி பெருமாளுக்கு, உப்பிலியப்பன் அண்ணா என்று ஐதீகம். அதனால் , திருப்பதி போக முடியாதவர்கள், தங்கள் பிரார்த்தனைகளை இங்கே செலுத்துகிறார்கள்.

இரவில் புஷ்கரிணியில் நீராடுவது பாவம் என்று ஐதீகம். ஆனால், இந்த ஒரு திவ்ய க்ஷேத்ரத்தில் மட்டும் புஷ்கரிணியில் இரவிலும் நீராடலாம் என்பது சிறப்பம்சம்.  புஷ்கரிணியில் மீன்கள் நிறைய இருக்கின்றன. 





சென்ற, பார்த்த திருக்கோவில்களைப் பற்றிய நினைவுக்குறிப்புகள் அடியேனுக்குத் தேவையாய் இருந்ததால் "கண் படைத்த பயன்" என்ற இந்த தொடர் எழுத ஆரம்பித்தேன்.. இது எனக்கு சிறந்த வடிகாலாகவும் உள்ளது அதே சமயம் மிகுந்த மனநிறைவையும் தருகிறது. மனதுக்கு நிறைவான யாத்திரை.

இக்கோவிலுக்கு அருகில் திருநாகேஸ்வரம் நாகநாதர் கோயில் அமைந்துள்ளது. அதனால் இத்திருத்தலம் திருநாகேஸ்வரம் என்றே சொல்லப்படுகிறது.

Tuesday, July 24, 2012

தில்லையம்பூர் ஸ்ரீ வேணுகோபால ஸ்வாமி திருக்கோயில் / கண்ணுக்கினியன கண்டோம்-6

Photo courtesy: "THE HINDU"
தில்லையம்பூர் .....இந்த ஊர் வலங்கைமான் அருகே, கும்பகோணம் தாலுக்காவில் , தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ளது. 

இந்த ஊர் என் பிறந்த வீட்டின் பூர்வீகம். புகுந்த வீட்டின் பூர்வீகமான தென்சிறுவளூர் - ஸ்ரீதேவி பூதேவி ஸமேத அழகிய மணவாளப்பெருமாள் கோயில் பற்றி சில நாட்களுக்கு முன்பு ஒரு பதிவு அமைக்கப்பெற்றது எனது பாக்கியம். சமீபத்தில் என்னுடைய தம்பி தில்லையம்பூருக்குச் சென்று வந்து படங்கள் அனுப்பி இருந்தான். அதற்குப் பிறகு இந்த ஊரைப்பற்றி ஒரு பதிவு இட வேண்டும் என்ற அவாவில் இதை எழுதுகிறேன்.
இந்த ஊரின் வரலாறு:

சோழ மன்னர்கள் ஆட்சிக்கு உட்பட்டிருந்த சிற்றரசர்களில் , தில்லைராயன் என்ற சிற்றரசன் , இந்த ஊரை ஆண்டதாக வரலாறு சொல்கிறது. தில்லையை (தற்கால சிதம்பரம்) ராஜதானியாகக்கொண்டு அந்த சிற்றரசன் ஆண்ட ஊர்களில் இந்த ஊரும் ஒன்று என்று சொல்லப்படுகிறது . இது பற்றிய விவரங்கள் சோழர் காலக் கல்வெட்டுக்களில் உள்ளதாம்.

வேதங்களைக் கற்றுணர்ந்து, உயர்ந்த பெரியோர்கள் இங்கு வாழ்ந்து வந்ததாகவும் தெரிகிறது . தில்லையம்பூர் ஸ்ரீவேங்கடராம அய்யங்கார் , தில்லியம்பூர் ஸ்ரீ சக்ரவர்த்தி ஆச்சார்ய ஸ்வாமி, தில்லையம்பூர் சந்திரசேகர கவிராஜ பண்டிதர், போன்ற சிறந்த வித்வான்களும் பண்டிதர்களும் இந்த ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள் என்ற பெருமையும் இந்த ஊருக்கு உண்டு. அவர்கள் வாழ்ந்த காலத்தையும் , அந்த வரலாறுகளையும் முழுமையாக அறிந்து கொள்ள இயலவில்லை.

இதை படித்து, யாராவது மேலும் விவரங்கள் கொடுத்தால், மிகுந்த சந்தோஷப்படுவேன். விவரம் தெரிந்தவர்கள் மறுமொழி அனுப்புங்கள் அல்லது என் ஈ-மெயிலுக்கு setlur.shanu@gmail.com எழுதுங்கள்.

குடமுருட்டி ( காவிரியின் கிளை) ஆற்றின் தெற்குக் கரையில், தில்லையம்பூர் என்ற இந்த சிறிய, அழகிய கிராமம் அமைந்துள்ளது. இயற்கை அழகும் பசுமையும் கூடியதாக இருக்கிறது . சுற்றுப்பட்டு கிராமங்களில் பேச்சு வழக்கில் தில்லியம்பூர், தில்லிம்பூர்,என்று சொல்லப்படுகிறது.



அக்ரஹாரமும், பெருமாள் கோயிலும் அமைந்துள்ளன. அக்ரஹாரத்தில் நிறைய வீடுகள் உள்ளன. அதில் எங்கள் தாத்தா ராஜகோபால ஐயங்கார் அவர்களின் வீடும் சிதிலமடைந்த நிலையில் உள்ளது. 




இனி, எங்கள் பூர்வீகமான தில்லையம்பூரில் உள்ள, புராதனமான ஸ்ரீ வேணுகோபால ஸ்வாமி திருக்கோயில்  பற்றிய விவரங்கள்:


மூலவர்: ஸ்ரீ வேணுகோபாலன். பாதுகைகளுடன் கூடிய பொலிந்து நின்ற திருவடிகளுடன் காட்சி தருவது தனிச்சிறப்பு.

ஸ்ரீதேவி, பூதேவி ஸமேதராய்க் காட்சி தருகிறார். சதுர் புஜங்களுடன் சங்கு சக்ரம் ஏந்தி சேவை சாதிக்கிறார். உள்ளத்தை அள்ளும் புன்முறுவலுடன் கூடிய திருமுகம்.

யதாதாரம் விஶ்வம் கதிரபி ச யஸ்தஸ்ய பரமா
தமப்யேகா தத்ஸே திஶசி ச கதிம் தஸ்ய ருசிராம்
கதம் ஸா கம்ஸாரேர் த்ருஹிணஹர துர்போத மஹிமா
கவீநாம் க்ஷுத்ராணாம் த்வம் அஸி மணிபாது ஸ்துதிபதம் 

- ஸ்ரீ பாதுகா ஸஹஸ்ரம் - 1.9

“இந்த பிரபஞ்சம் / உலகம் முழுவதையும் தாங்கும் பெருமாளை, நீ ஒருவளாகத் தாங்குகிறாயே!” என்று ஸ்வாமி தேசிகன் வியந்தது போல் நம்மையும் வியக்க வைக்கும் பாதுகையுடன் கூடிய திருவடிகள் !!!!

பெருந்தேவித்தாயார்,ஆண்டாள், ஆஞ்சநேயர் தனிச்சந்நிதியில் எழுந்தருளி
அருள் பாலிக்கிறார்கள்.

"கண்டோம் கண்டோம் கண்டோம்
கண்ணுக் கினியன கண்டோம்"
என்று நம்மாழ்வாரைப் போலவே நாமும் பாடி, அவன் அருளால் அவன் தாள்
வணங்குவோம்.

அடியேனும் கூடிய சீக்கிரம் அவனை ஸேவிக்க, அந்த வேணுகோபாலனிடமே பிரார்த்திக்கிறேன்.

திருக்கோயில் முகவரி :

துவாரகா அக்ரஹாரம், தில்லையம்பூர் ,
வலங்கைமான் அருகில், தஞ்சாவூர்- 612 804
Dwaraka Agraharam, Thillaiambur (near Valangiman), Thanjavur - 612 804.

Tuesday, May 15, 2012

MALLESWARAM SRI LAKSHMINARASIMHA SWAMY TEMPLE/ கண்ணுக்கினியன கண்டோம்-5



Ugram Veeram Mahaa-Vishnum
Jwalantham Sarvatho Mukham
| 
Nrisimham Bheeshanam Bhadram
Mrityu-Mrityum Namaamyaham
| |

Malleswaram is one of the areas in Bangalore where there are many temples.

Venkoji Rao, brother of Chathrapathi Shivaji, had a divine dream wherein Lord Shiva told him to build a temple. While searching, he found a small hillock, where he saw the Udbhava Murthy of Lord Shiva and in that place he built a temple, which is today's Kaadu Malleswara Temple. It is from this temple the place got its name "Malleswaram".

There is another small hillock next to Kaadu Malleswara temple, and it was here the Udbhava Murthy of Lord Sri Narasimha Swamy was discovered.

Narasimha avatara has great significance and importance. It was an instant avatara, where the Lord appears in a very ferocious form. This avatara was taken to prove the words of His devotee, Prahlada, who said "THOONILUM IRUPPAAR THURUMBILUM IRUPPAAR" and proved His omnipresence. HE is the 'Great Protector' who defends and protects his devotees in times of need.

We were blessed by HIM to visit the Sri Lakshmi Narasimha temple on the Narasimha Jayanthi day this year (5.5.2012). It was a pleasurable experience. There was a long queue, 
outside the temple, and devotees were standing to have a glimpse of Lord Narasimha. The roads had a festive look. All sides of the temple walls were illuminated.   The street and roads were also illuminated. 


ILLUMINATED  LAKSHMINARASIMHA TEMPLE


 STHAMBAM OUTSIDE THE TEMPLE

 ELEPHANTS ON TEMPLE ENTRANCE
It took almost 45 minutes to reach the entrance.Climbing the steps near the sthambam, leads to the main entrance of the temple. Beautifully sculpted elephants are on both sides of the steps and sthambam. There is a main hall which leads us to the Garbagriha where we can worship Lord Narasimha, with Sri Lakshmi on his lap, tongue out, yet with a gentle look, and abhaya hastham, telling us "don't worry I am here for you". 

There is a belief that incurable diseases will be cured and the evil spirits will be driven out and all our desires will be fulfilled by the Lord AT ONCE and He doesn't say tomorrow if one surrenders to HIM. "நாளை என்பதே நரஸிம்மனிடத்தில் இல்லை".

We had a very good darshan and while coming out I felt like Nammazhwar.

Aadi Aadi Agam Karaindhu - Isai 
Paadi Paadi Kanneer Malghi - Yengum 
Naadi Naadi Narasinghaa Endru 
Vaadi Vaadum Iv Vaanudalae - Tiruvoimozhi - 2.4.1.

Coming out from the sanctum sanctorum, on the right side of the main hall is Anjaneyar sannidhi and adjacent to that is the Utsava moorthy with His consorts and azhwaars, acharyans sannidhi. Beautiful idols are sculpted on the outer prakaram. There is one Mandapam and madapalli also. The temple is cleanly maintained.


THE STREET WITH A FESTIVE LOOK




Some more captures of the temples nearby. Just opposite to Lakshminarasimha temple is another temple called Dakshina Mukhi Eswara Temple where water comes from Nandi's mouth and falls on the Shivalinga. It is said that no one knows the origin of this water. The holy water is carried home by the devotees and is believed to cure many diseases and ailments. 


DAKSHINA MUKHI ESWARA & NANDI TEMPLE

Just adjacent to the Narasimha temple is the Gangamma temple, The deity is Goddess Gangamma, Ganga matha (Ganges), is believed to be the living goddess in Hindu mythology. Ganga represents the inner purity and coolness.  Lakhs of people from all over India, come here during the Navarathri festival.


GANGAMMA TEMPLE


IDOLS OUTSIDE GANGAMMA TEMPLE

Malleswaram Narasimhar Temple Address and contact details:
Postal Address: Sri Lakshmi Narasimhaswamy Temple,
15th Cross, Malleswaram,
Bangalore – 560 003

Friday, May 4, 2012

ப்ரபத்தி சகல பலனையும் தரும்

ப்ரபத்தி சகல பலனையும் தரும்

உமதடிகள் அடைகின்றேனென்று ஒருகாலுரைத்தவரை
அமையுமினி என்பவர்போல் அஞ்சலெனக் கரம்வைத்து
தமதனைத்தும் அவர்தமக்கு வழங்கியுந்தான் மிகவிளங்கும்
அமைவுடைய அருளாளர் அடியிணையை அடைந்தேனே - அடைக்கலப் பத்து.

சரணாகதி என்பது, தன்னை ஒருவரிடம் அர்ப்பணித்துவிடுவது  விடுவது.

பரமாத்வாவிடம் நம்மை அர்ப்பணித்து,  நம்மால் முடிந்தது ஒன்றும் இல்லை "எல்லாம் அவனே" என்றும் , நம்முடைய செயல்கள், மற்றும்  அதனால் உண்டாகும் பலன்களையும்  அவரிடமே அர்ப்பணித்துபரமாத்மாவின்  திருவடிகளைப் பற்றியிருப்பது    ப்ரபத்தி / சரணாகதி   எனப்படும்.

நான் செய்தேன், என்னால் எல்லாம்  முடியும் ,  நானே செய்து விடுவேன்.’ என்று சொல்பவர்களிடம் பகவான் போவதில்லை; அவனே செய்து கொள்ளட்டும் என்று விட்டு விடுகிறார். "பகவானே, நீ தான் கதி, நீ விட்ட வழிஎன்று பொறுப்பை அவனிடம் விட்டு விட்டால், பொறுப்பு பகவானுடையதாகி விடுகிறது. திரௌபதி கதை இதற்கு எடுத்துக்காட்டு . சங்க சக்ர கதா பாணே த்வாரகா நிலயாச்சுதா -கோவிந்தா  புண்டரீகாக்ஷா  ரக்ஷமாம்  சரணாகதம் " என்று கூப்பிட்டவுடன்  ஓடி வந்து உதவினான் .

குலசேகர ஆழ்வார்
தருதுயரம் தடாயேல் உன் சரணல்லால் சரணில்லை
விரைகுழுவும் மலர்பொழில் சூழ் வித்துவக் கோட்டம்மானே!
அரிசினத்தால் ஈன்றதாய் அகற்றிடினும் மற்றவள்தன்
அருள்நினைந்தே அழுங்குழவி அதுவே போல் இருந்தேனே!
என்று பாடியுள்ளார்.

ஒரு தாய் தன் குழந்தையை விட்டுவிட்டாலும்,  அந்தக் குழந்தை, தாயின் அன்புக்காக ஏங்கி அழுவது  போன்று , தனக்குத் துயரம் வந்தபோதும், தான் அந்தப் பெருமாளின் அருளையே  வேண்டியிருப்பதாகக்  கூறுகிறார். கஷ்டங்களோ, துன்பமோ வந்தாலும் அவற்றைப் போக்குபவனும் அவனே என்கிறார்.

என்னைக் காத்தருள வேண்டிய  பொறுப்பு உன்னுடையது   உன்னாலன்றி  என்னால் ஆவது ஒன்றுமில்லைஎன்னும் திடமான எண்ணத்துடன் அவன் திருவடியைப் பற்றிக்கொள்ளுவதே  ப்ரபத்தி ஆகும்.

தன்னைச் சரணடைந்தவர்களின் துயரை  நீக்குபவர் பகவான். தன்  பக்தர்களுக்கு உண்டான துன்பத்தைத் தன் துன்பமாகக்கருதி பக்தர்களைக் காப்பாற்றுகிறார்.

தாய்ப்பூனை எங்கு சென்றாலும், குட்டியைத் தன் வாயால் கவ்விக் கொண்டு பாதுகாப்பான இடத்திற்குக் கொண்டு செல்லும். குட்டிப்பூனை இதற்காக எந்த முயற்சியும் செய்வதில்லை. அதாவது தன்னை முழுமையாக தாயிடம் ஒப்படைத்து விட்டது.  இதே போல் அந்தப் பரமாத்மாவைப் பற்றும் நிலையே ப்ரபத்தி .

"பகவானே, நீ தான் கதி,  நீ விட்ட வழிஎன்று பொறுப்பை அவனிடம் விட்டு விட்டால், பொறுப்பு பகவானுடையதாகி விடுகிறது. அப்போது பகவான் நம்மைக் காப்பாற்றுகிறான், நம்மை வழி நடத்துகிறான்நற்கதியடையச் செய்து  மோக்ஷத்தையும் அளிக்கிறான்.

Wednesday, April 25, 2012

ஸ்ரீ கிருஷ்ண கவசம்


ஸ்ரீ கிருஷ்ண கவசம் - கவிஞர் கண்ணதாசன்

கண்ணதாசனின் "ஸ்ரீ கிருஷ்ண கவசம்' என்ற சிறிய புத்தகத்தில் உள்ளபடி:

துன்பங்களில் இருந்து விடுதலை பெற, குடும்பத்துக்கு நிம்மதி கிடைக்க, நோய் நொடிகள் வருமுன்னே தடுக்க, நீண்ட ஆயுளை இறைவனிடம் வேண்ட, ஆன்மாவைச் சுற்றி ஒரு வேலி அமைத்துக்கொள்ள இந்த கவசத்தைத் தினமும் பாராயணம் செய்ய வேண்டும் என்று இப்புத்தகத்தின் முன்னுரையில் கவிஞர் கண்ணதாசன் குறிப்பிட்டுள்ளார்.


அகரம் முதலே அழியாப் பொருளே
ஆயர் குலமே நேயர் கரமே
இகமும் பரமும் இணையும் இடமே
ஈதல் பரமாம் இதயத் தவமே
உலகக் குடையே உயிரின் கலையே
ஊதும் குழலுள் வேதப் பொருளே
எரியும் கனலில் தெரியும் புனலே
ஏழை மனதில் வாழும் அருளே !

ஐயம் தீர்க்கும் அறிவுக் கதிரே
ஐவர் துணையே அன்புச் சிலையே
ஒளியே விழியே உயிரே வழியே
ஓடும் நதியில் பாடும் அலையே
அவ்வவ் உலகை ஆக்கும் நிலையே
அடியேன் சரணம் சரணம் சரணம் !
அறமே அறமே அறமே அறமே
திறமே திறமே திறமே திறமே

தவமே தவமே தவமே தவமே
வரமே வரமே வரமே வரமே
வேதம் விளையும் வித்தே விளையவே
நாதம் பொழியும் நலமே நிலமே
ஓதும் பொழுதே உடனே வருவாய்
உள்ளம் கேட்கும் வெள்ளம் தருவாய்
அறியாக் கவலை அதிகம் அதிகம்
அருள்வாய் அருள்வாய் கவசம்! கவசம்!

பொய்யா மொழியே பொங்கும் நிலவே
பூமிக் குடையின் காவற் பொருளே
பார்த்தன் பணியும் பாதம் காக்க
பாஞ்சஜன்யம் பக்தனை காக்க
மூடர்கள் தமையும் மோகனன் காக்க
முள்ளில் மலராய் முளைத்தோன் காக்க
வாடும் உயிரை மன்னவன் காக்க
தேடும் விழியைத் திருமால் காக்க

கேலிப் பொருளை கிருஷ்ணன் காக்க
கண்ணீர் நதியைக் கண்ணன் காக்க
துன்பம் என்றொரு சுமையைத் தீர்க்க
தூயோன் வருக ! துணையே தருக !
மாதர் கற்பும் மடவார் நோன்பும்
மாயோன் காக்க மலைபோல் வருக !
தகிடத் தகிடத் தகிடத் தகவென
தறிபடு துன்பம் தறிகெட ஓட

திகிடத் திகிடத் திகிடத் திகிடத்
திசைவரு கவலை பசைஇல தாக !
துருவத் துருவத் துருவத் துருவிடத்
தொலையாப் பொருளே அலையாய் வருக !
நிஷ்கா மத்தில் நிறைவோன் வருக
கர்மசந் யாசக் களமே வருக !
ஞானம் யோகம் நல்குவன் வருக !
நல்லோர் வாழ்வில் நலமே நிறைக !

அடியேன் துயரம் அதிகம் அதிகம்
அருள்வாய் அருள்வாய் கவசம் கவசம் !
பொங்கும் வேலும் புண்ணாக் காது
பொருந்தும் துயரம் பொடிபடு மாறு
தாங்கும் தலைவன் தாமரைக் கண்ணன்
தாளில் விழுந்தேன் சரணம் சரணம் !
மதுசூதனனே மனிதன் சரணம் !
இருடீ கேச இயலான் சரணம் !

கீதா சாரிய கிருஷ்ணா சரணம் !
வேதா சாரிய வேந்தே சரணம் !
தேவகி மைந்தா சிறியேன் சரணம் !
யசோதா குமரா அடியேன் சரணம் !
உன்னை விட்டொரு உறவுகளில்லை
என்னை விட்டொரு இனியவனில்லை
நம்மை விட்டொரு நண்பர்களில்லை
நன்மையில் உன்போல் நாயகனில்லை

எங்கெங்கே நான் இருந்திடும் போதும் ,
அங்கங்கே நீ அருள் செய வருக !
கோசலை ஈன்ற குமரா வருக !
கோதையின் மாலை கொண்டவன் வருக !
ரகுவம் சத்தின் நாயகன் வருக !
யதுவம் சத்தின் யாதவன் வருக !
மதுவை வென்ற மாதவன் வருக !
மலைக்குடி கொண்ட மாலவன் வருக !

திருப்பதி யாளும் திருமால் வருக !
திருவரங் கத்துப் பெருமாள் வருக !
இராவணன் கொடுமை தீர்த்தாய் ; துன்பம்
இராவணம் எமக்கும் இன்னருள் புரிக !
கம்சன் கொடுமை களைந்தோய் வருக !
காலனை வெல்லக் கைவலி தருக !
நெற்றியில் திருமண் நெஞ்சில் வைரம்
காதில் குண்டலம் கையில் வில்லொடு

தண்டைக் காலில் சலங்கை குலுங்க
அண்டையில் வந்து அருளே புரிக !
கௌரவர் தம்மை களத்தில் வென்றாய்
கெளரவம் காக்க கண்ணா வருக !
பார்த்தன் மகிழப் பாடம் சொன்னாய்
படித்தவன் மகிழப் பரமே வருக !
மூன்று குணங்கள் முறையாய்க் கூறிய
சான்றோன் பாதம் தாவி யனைத்தேன்

சிக்கென உன்னைச் சேர்த்துப் பிடித்தேன்
பக்கென உந்தன் பாதம் பற்றினேன்
கொக்கென நின்று குறிவைத் திருந்தேன்
அக்கணம் வந்தாய் அடியில் விழுந்தேன் ;
இக்கணம் என்னை ஏங்க விடாமல்
தக்கவனே நீ தயவுடன் அருள்க !
கல்லாய்ப் போனவள் காலடி பட்டு
பெண்ணாய் ஆனது பிழையே யன்று !

உன்னால் தானே உலகம் இயக்கம் !
கண்ணனி லாமல் கடல்வான் ஏது ?
கண்ணனி லாமல் கடவுளுமில்லை
கண்ணனி லாமல் கவிதையுமில்லை
கண்ணனி லாமல் காலமுமில்லை
கண்ணனி லாவிடில் காற்றே இல்லை !
எத்தனை பிறவி எத்தனை பிறவி
அத்தனை பிறவியும் அடியேன் கொண்டால்

சத்திய நாதன் தாள்களை மறவேன்
தத்துவக் கண்ணன் தனிமுகம் மறவேன்
உன்னை நம்பி உனையே சேர்ந்தால்
பிறவிகளில்லை ; நீ பேசிய பேச்சு
உலகில் போதும் ஒருமுறை மூச்சு !
உன்னிடம் சேர்த்து உன்வடி வாக்கு !
இங்கே நாங்கள் இருக்கும் வரையில்
சங்கு முழங்கு தர்மம் நிலைக்க !

பிள்ளைகள் வாழ்க்கை பிழையா காமல்
மனையவள் வாழ்க்கை மாண்பு கெடாமல்
இல்லை என்றொரு நாளில் லாமல்
இன்னும் என்னும் ஆசை வராமல்
தொல்லை என்பது துளியுமில்லாமல்
தோற்றும் நோய்கள் பற்றி விடாமல்
முதுமைத் துயரம் மூண்டு விடாமல்
படுக்கையில் விழுந்து பரிதவிக் காமல்

சிந்தனை கெட்டுத் திறமையும் கெட்டு
நிந்தனை பெற்று நீங்கி விடாமல்
என்றும் பதினா றிளமை வழங்கு !
இப்பணி தொடர அற்புதம் காட்டு !
தளரா மேனியில் சக்தியைக் கூட்டு
தாய்போ லிருந்து சாதம் ஊட்டு !
வாழ்ந்தால் இப்படி வாழ்வது நன்றென
ஊரார்க் கென்னை உதாரணம் காட்டு !

உலகில் ஒருவன் உத்தமன் இவனென
உயிர்கள் பேசிடும் ஒருநிலை கூட்டு !
சிறியவர் பெரியவர் வறியவர் செல்வர்
சரிசரி சரியெனத் தலையை யசைக்க
பொலி பொலி பொலியெனப் புகழும்விளங்க
மளமள மளவென மனையிருள் நீங்க
கலகல கலவென காசுகள் சேர
தளதள தளவென தர்மம் தழைக்க

வரவர வரவர வாய்ப்புகள் வாய்க்க
ரகுபதி பசுபதி நன்மைகள் அருள்க
ஐயா சரணம் சரணம் சரணம் !
அடியேன் வாழ்வில் நீயே கவசம் !
கவசம் கவசம் கவசம் கவசம் !
வந்தது வாழ்வில் மன்னவன் கவசம் !
கவசம் கவசம் கவசம் கவசம் !
வாழ்க்கை என்னும் கோபுரக் கலசம் !

அரிஓம் அரிஓம் அரிஓம் அரிஓம்
அவனே துணையென அறிவோம் ! அறிவோம்!
அரிஓம் அரிஓம் அரிஓம் அரிஓம்
அவனிடம் எதையும் தருவோம் தருவோம்
ஜெயஜெய ராமா ஜெயஜெய கிருஷ்ணா ...
ஜெயஜெய ஜெயஜெய
ஜெயஜெய ஜெயஜெய
ஜெயஜெய ஜெயஜெய
ஜெயஜெய ஜெயஜெய...