Monday, July 5, 2010

ஸ்ரீமத்ஆண்டவன் அமுத மொழிகள்


பீமே நித்யம் பவ ஜலநிதௌ மஜ்ஜதாம் மாநவாநாம்
ஆலம்பார்த்தம் வ்ருஷகிரிபதி: த்வத் நிதேசாத் ப்ரயுங்க்தே
ப்ரஜ்ஞா ஸாரம் ப்ரக்ருதி மஹதா மூல பாகேந ஜூஷ்டம்
சாகா பேதை: ஸுபகம் அநகம் சாச்வதம் சாஸ்த்ர பாணிம்

விளக்கம் – தயா தேவியே! சேதனர்கள் (மனிதர்கள்) சம்ஸாரம் என்னும் சமுத்திரத்தில் மூழ்கியுள்ளனர். உன்னுடைய நாதன் ஸ்ரீனிவாசன், உனது கட்டளைக்கு ஏற்ப, சாஸ்த்ரம் என்னும் தனது அழகான திருக்கரத்தை, இந்த உலகில் உள்ள சேதனர்கள் உய்யும்பொருட்டும், அவர்களைக் கரையேற்றும்பொருட்டும் நீட்டுகிறான். அந்த திருக்கரம் மிகவும் பெருமை உடையது. தோஷமற்றது. அதுவே வேதத்தின் சாரம். ஓம்காரத்தின்( ப்ரணவத்தின்) வடிவம். அனைத்து சாகைகளின் மந்த்ரமாக அது விளங்குகிறது. எவன் ஒருவன் அந்தத் திருக்கரத்தைப்பிடித்துக்கொள்கிறானோ, அவன் சம்ஸாரத்திலிருந்து விடுதலை கிடைத்து மோக்ஷத்தை அடைகிறான். - ஸ்ரீமத்ஆண்டவன் அனுக்ரஹ பாஷணம் (76-வது திருநக்ஷத்ர தினம்)

1 comment:

  1. if possible can you give me Explanation for Madhurastagam in tamil?

    ReplyDelete