Thursday, August 12, 2010

ஸ்ரீ பக்ஷிராஜன் பதிகம்


கவிக்கொண்டல் நரசிம்ஹாச்சாரியார் அந்தாதி போன்ற பிரபந்தங்கள் இயற்றுவதில் வல்லவர். அவர் இயற்றிய இந்தப்பதிகம் ( செய்யுள் வடிவம்) பக்ஷிராஜன் பெருமையைப் பற்றிக் கூறும் எளிய செய்யுட்கள் . " மனத்திற் *கவலை மகிழ்ந்தே யகற்ற விரும்பு" , "அகங்கொள் *கவலை யகற்று" என்பதன் பொருள்: *ஒருவர்க்குக் கவலை உண்டாவது கல்வியின்மை, செல்வம் இன்மை, பொருள் இன்மை, மக்கட்பேறின்மை, தன்நோய், சுற்றத்துநோய், தந்த பொருள் வாராமை, வழக்கு முதலியவைகளால் ஆகும் . அவைகளில் எது வந்திடினும் அகற்றாய் என்பதாம். அனைவரும் படித்து பயன் பெறுக. இன்புறுக.

ஸ்ரீ
பக்ஷிராஜன் பதிகம்
(
காப்பு நேரிசை வெண்பா)

மனதால்
நினைக்கவொணா மாவேகம் கொண்டாய்
வினதைதன்
மைந்த விமலா - உனதாம்
அரும்புகழைப்
பாட அருள்வாயே காப்பாய்
வருவழுக்க
ளின்றி வர.

(
அவைடக்கம்)

ஆழிநீர்
தன்னை அளப்பான் முயலுதல்போல்
தாழ்
மதியன் சற்றும் தயங்காமல் - ஏழ்பாரும்
போற்று
மிறையா மெழிற்பக்ஷி ராஜன்சீர்
தூற்ற
முயன்றேன் துணிந்து.

நூல்

1. சீரார் நறையூர் திகழ்புள் ளதிபதியே

பேரார் சுகமே பெருமா - ஓரா

மனத்திற் *கவலை மகிழ்ந்தே யகற்ற

வினதை சுதனே விரும்பு.


2. வினதை சுதனே விமலா வெளியேன்

மனதிற்குடிகொள் மகிபா- உனதாம்

அருளைத்தருவாய் அமலா புகழ்சேர்

பொருளே கருணை புரிந்து.


3. திருவார் திருமால் திகழ்வா கனமே

ஒருவா ஒளிசேர் உயர்வே -தருவாய்

மனதின் விருப்பை மகிழ்ந்தே விரைவில்

வினதா சுதனே மிக.


4. திருமாலமருந் திகழ்வா கனமே

ஒருமா முதலே உனதாம் - அருளைத்

தருவாயெனக்குத் தயை செய் வினதை

திருமா மகனே தினம்.


5. விககா விமலா மிகு வேகமுளாய்

சுகமே கவலை களிப்பாய் -தகவே

ஒழிப்பாய் எனதுள்ளுறைவாய் மனமே

கொழிக்கக் குதுகலம் யான் கொண்டு.


6. விகங்க அரசே விமலா எனதாம்

அகங்கொள் கவலை அகற்றாய் - மிகவே

தொழுதேன் உனையே துயர் தீர் எனக்கிப்

பொழுதே எனதன்பு பூண்டு.


7. அப்பனே புள்ளின் அரசனே உன்றனக்கே

தப்பாது சென்னிதனைத் தாழ்த்தினேன் - ஒப்பில்

விகங்கம மாலே வினதா சுதனே

அகங்கொள் *கவலை யகற்று.


8. பொற்சிறகார் வேகமிகு புள்ளரசே ஞாலத்தோர்

கற்கின்ற நாமக் ககமாலே - எற்கு

நலந்தருவா யென்றும் நவின்றிடுவேன்
உன்பேர்
வலந்தருவாய் என்பக்கல் வந்து.

9. பன்னக வைரி பலமார் சிறைகொண்ட

மின்வேக மேவும் விமலனே - பன்னு
பதத்திரி மாலே பரமா களிக்க
இதத்தினைச் செய்யின் றெனக்கு.


10. வலமார் சிறைகொண்ட மாலே யமுதக்

கலசம் கொணர்ந்த சுகமே - சலசம்
உறைதேவி மார்பன் உவக்கும் ஒருவா
குறை தவிர்ப்பாய் என்துதியைக் கொண்டு.


(நூற்பயன்)

பன்னு பக்ஷிராஜன் துதி பாடுவார் பக்தியுடன்
இன்னிலத்தில் நன்றே இருந்திடுவர்:- மன்னும்
உயர்செல்வம் பெற்றிடுவர் ஓங்குபுகழ் வாய்ந்தே
அயர்வில் அமரருமாவார்.