Wednesday, December 31, 2014

கண்ணன் கதைகள் (19) - தயிர் சாதமும் வடுமாங்காயும்


கண்ணன் கதைகள் (19) -  தயிர் சாதமும் வடுமாங்காயும்,கண்ணன் கதைகள், குருவாயூரப்பன் கதைகள்,

முன்னொரு சமயம், குருவாயூர் கோவிலில் பூஜை செய்து வந்த நம்பூதிரி, அவசரமாக வெளியூர் செல்ல வேண்டியிருந்தது. கோவிலில் பூஜைகள் தடை  இல்லாமல்  நடக்க வேண்டும் என்பதால், சிறு  பாலகனான தனது மகனிடம் கோவிலைக் கவனித்துக் கொள்ளும்படியும்,  பூஜைகளைத் தடையின்றி செய்ய வேண்டும் என்றும், குறித்த நேரத்தில் நைவேத்யம் செய்யுமாறும் கூறிச் சென்றார். 

அவனும் அரிசியை சமைத்து அப்பனுக்கு  நைவேத்யம் செய்து, அப்பனிடம், " கண்ணா, சாப்பிடு" என்று கூறினான். கண்ணன் அசையவில்லை. உடனே அவன், வெறும் சாதத்தை எவ்வாறு கண்ணன் சாப்பிடுவான், என நினைத்து, அருகில் உள்ள வீட்டில் இருந்து கொஞ்சம் தயிரும், வடுமாங்காயும் வாங்கி வந்தான்.  தயிரை சாதத்தில் கலக்கி, உப்புமாங்காயை வைத்தான். அப்பொழுதும் கண்ணன் சாப்பிடவில்லை. சாப்பிடு கண்ணா என்று கெஞ்சினான். சாதம் அப்படியே இருந்தது. 

என்னுடைய  அப்பா வந்தால், உனக்கு சாப்பிட ஒன்றும் தரவில்லையென்று திட்டுவார், சாப்பிடு என்று சொல்லிக் கெஞ்சி அழுதான். குழந்தையின் அழுகையைப் பொறுக்க முடியாத கண்ணன், காட்சி தந்தான். அன்னத்தை உண்டான். குழந்தையும் ஸந்தோஷமாக, காலித் தட்டுடன் வெளியே வந்தான். பொதுவாக, நைவேத்யத்தை கோவிலுள்ள  பிஷாரடிக்குக் கொடுப்பது வழக்கம். காலித் தட்டுடன் வெளியே வந்த அவனைக் கண்ட அவருக்கு மிகுந்த  கோபம் வந்தது. "சாதம் எங்கே?" என்று கேட்டார். குழந்தையும், "கண்ணன் சாப்பிட்டுவிட்டான்" என்று சொன்னான்.  நம்பூதிரி வந்ததும், பிஷாரடி,"நைவேத்தியத்தை உங்கள் மகன் சாப்பிட்டுவிட்டு, கண்ணன் சாப்பிட்டதாகச் சொல்கிறான்" என்று சொன்னார். நம்பூதிரி, "நைவேத்தியத்தை என்ன செய்தாய்?" என்று கேட்டார். மறுபடியும் குழந்தை, "கண்ணன் நேரிலேயே வந்து சாப்பிட்டுவிட்டான்" என்று சொன்னான். அப்போது  அருகில் உள்ள வீட்டில்  இருந்தவர்கள், தங்கள் வீட்டிலிருந்து தயிரும், மாங்காயும் அவன் வாங்கிச் சென்றதைச் சொன்னார்கள். நம்பூதிரி மிகுந்த கோபத்துடன், "தினமும் பூஜை செய்யும் எனக்குக் காட்சி தராமல், கண்ணன் உனக்குக் காட்சி தந்து உணவை உண்டாரா? உன்னால் வெறும் சாதத்தைத் தின்ன முடியாது என்று தயிரும் மாங்காயும் வைத்து சாப்பிட்டுவிட்டு, கண்ணன் சாப்பிட்டுவிட்டான் என்று பொய் சொல்கிறாயா? " என்று அடித்தார்.  குழந்தை இடத்தைவிட்டு நகரவில்லை. குழந்தையை அடிப்பதைக் கண்ணனால் பொறுக்க முடியவில்லை. நம்பூதிரி மீண்டும் அடிக்கக் கையை  ஓங்கியபோது, "நான்தான் உண்டேன், குழந்தை குற்றமற்றவன்" என்று சன்னிதியிலிருந்து அசரீரி ஒலித்தது.  கூடியிருந்த அனைவரும் அதிசயித்தனர். 

நம்பூதிரி, கண்களில் நீர் வழிய, " என் மகனுக்குக் காட்சி தந்து, அவன் தந்த உணவையும் உண்டாயே!! என்னே உன் கருணை!! என் மகன் பாக்யசாலி!!" என்று கூறித் தன் மகனை வாரி அணைத்துக் கொண்டார்.  

Tuesday, December 30, 2014

கண்ணன் கதைகள் (18) - குரூரம்மாவின் கிருஷ்ண பக்தி

கண்ணன் கதைகள் (17) -  குரூரம்மாவின் கிருஷ்ண பக்தி, கண்ணன் கதைகள், குருவாயூரப்பன் கதைகள்,
வில்வமங்கலம் ஸ்வாமிள்  பூஜை செய்யும்போது கண்ணனை நேரிலே காண்பார் என்பது அனைவரும் அறிந்ததே. ஒரு சமயம், ஒரு பிராம்மணனுக்கு வயிற்று வலி வந்தது. எல்லா மருத்துவர்களிடம்  காண்பித்தும் வயிற்று வலி தீரவேயில்லை. நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே போனது. வில்வமங்கலம் ஸ்வாமிகளைப் பற்றிக் கேள்விப்பட்ட அவன், தனது வலி தீர வழி சொல்லும்படி அவரைக் கேட்டான். ஸ்வாமிகள்  கண்ணனைக் கேட்கிறேன் என்று சொல்லிவிட்டு அடுத்த நாள் பூஜையின் போது கண்ணனிடம் அது பற்றிக் கேட்டார். பகவானும் அது கர்ம வினையினால் என்று சொன்னார். வினை தீர வழி என்ன என்று அவன் கேட்க, ஸ்வாமிகளும், முற்பிறப்பில் செய்த தீமையால் வரும் இந்த வினை தீர வழியில்லை என்று சொன்னார்.அவனும்  தான் வினைப்பயனை நொந்துகொண்டு, வயிற்றைப் பிடித்துக் கொண்டு சென்றான். 

செல்லும்போது வயிற்று வலி அதிகமாகிவிடவே, அங்கு இருந்த வீட்டின் திண்ணையில் உட்கார்ந்தான். அது குரூரம்மாவின் வீடு. அவன் வயிற்றியப் பிடித்துக் கொண்டிருப்பதைக் கண்ட அவள், பசி என்று நினைத்து உணவளித்தால். அவன் மிகவும் வருந்தி, தனக்கு வயிற்று வலி இருப்பதால் ஒரு பருக்கை கூட சாப்பிட முடியாது என்று கூறினான். 

அதைக் கேட்ட அவள், சிறிதும் தயங்காமல்,"மகனே, ராமா, ராமா என்று ஜபிக்க ஆரம்பி, நம்பிக்கையோடு சொல், சரியாகிவிடும்" என்று சொன்னாள். அவனும் நம்பிக்கையோடு சொல்ல ஆரம்பித்தான். அவள் எப்போதும் ராமா, கிருஷ்ணா என்று நாம ஜபம் செய்வதால் அவளைவிட சிறந்த குரு வேறு யார் இருக்கமுடியும்?  சிறிது நேரத்திலேயே வலி சற்றே குறைந்தது போல் இருந்தது. இப்போது அவள், அவனிடம், "சரி, நீ அருகிலுள்ள  குலத்திற்குச் சென்று, கிருஷ்ண நாமத்தைச் சொல்லிக் கொண்டே முங்கிக் குளித்துவிட்டு வா, சாப்பிடலாம்" என்று சொன்னாள். அவனும் அவ்வாறே "கிருஷ்ணா, கிருஷ்ணா" என்று சொல்லிக்கொண்டு முங்கி எழுந்தான். என்ன ஆச்சர்யம்!!!! அவனது வயிற்று வலி  முற்றிலும் நீங்கிவிட்டது.  அவன் குரூரம்மாவின் வீட்டிற்கு சென்று மிக்க மகிழ்ச்சியுடன் உணவை உந்துவிட்டு நன்றி கூறிவிட்டுப் புறப்பட்டான். அதன்  பிறகு அவன் பக்தியுடன் எப்போதும் ராமநாமத்தையும் கிருஷ்ணநாமத்தையும் ஜபித்து வந்தான்.

ஒரு முறை, ஒரு  கதாகாலட்சேபத்தின்போது வில்வமங்கலம் ஸ்வாமிகளைக் கண்ட அவன், இந்த சம்பவத்தைக் கூறி, குரூரம்மாவால், தனது வயிற்று வலி தீர்ந்தது என்று சொன்னான்.

அடுத்த நாள் பூஜையின் போது, ஸ்வாமிகள் கண்ணனிடம், "கண்ணா, நீ இப்படிச் செய்யலாமா? நீ 'கர்மாவினை'என்று சொன்னாயே தவிர, நாமஜபத்தால் வலி சரியாகும் என்று சொல்லவேயில்லையே?" என்று கேட்டார். 

கண்ணன் சிரித்துக் கொண்டே, "ஆமாம் கர்மவினை என்று சொன்னேன், நாமஜபம் செய்தால் .தீரும் என்று சொல்லவில்லை. வில்வமங்கலத்திற்கு நாமஜபம் அனைத்துப் பாபங்களையும் போக்கும் என்று தெரியாதா என்ன? இந்த விஷயத்தில் குரூரம்மாவிற்கு இருக்கும் நம்பிக்கையில், துளி கூட உனக்கு இல்லையே!" என்று கூறினார். பகவானான  கண்ணனே இவ்வாறு சொல்வதைக் கேட்ட வில்வமங்கலம், குரூரம்மாவின் பக்திக்குத் தலை வணங்கினார்.

Monday, December 29, 2014

கண்ணன் கதைகள் (17) - பார்வையிலே சேவகனாய்

கண்ணன் கதைகள் (16) -  பார்வையிலே சேவகனாய், கண்ணன் கதைகள், குருவாயூரப்பன் கதைகள்

கௌரி என்ற நம்பூதிரிப் பெண் கண்ணனின் பக்தை. அவள் சிறு  குழந்தையாக இருந்தபோது அவளது மாமா அவளுக்கு  ஒரு  கண்ணன் விக்ரகத்தைக் கொடுத்தார். அவள் எப்போதும் அந்தக் கண்ணனுடனே விளையாடுவாள். 
அவள் வளர்ந்ததும்  குரூரில் உள்ள ஒரு பிராம்மணனுக்குத் திருமணம் செய்து கொடுத்தனர். குரூர் இல்லத்தில் வாழ்க்கைப்பட்டதால் அவளை குரூரம்மாள் என்று அழைத்தனர். திருமணத்திற்குப் பிறகு அவள்  கிருஷ்ண பக்தி இன்னும் அதிகரித்தது. திடீரென்று ஒரு நாள் அவள் கணவன் இறந்துவிட்டான். அப்போது அவளுக்கு வயது பதினாறு. குழந்தைகள் இல்லை.அதன் பிறகு அவள், முழுவதும் தன்னை கிருஷ்ண பக்தியிலேயே ஈடுபடுத்திக் கொண்டாள். பக்தி  பலவிதம். அவளது பக்தி யசோதையைப் போன்ற தாய்மை உணர்வுடன் கூடியதாக இருந்தது. கண்ணனுக்கு நைவேத்யம் செய்துவிட்டு அவன் வராவிட்டால் அழுவாள். அவள் அனைத்தையும் கண்ணனாகவே பாவித்தாள். 

காலம் கடந்தது. அவளது உறவினர்கள் ஒவ்வொருவராக இறந்தனர். அவள் தனித்து இருந்தாள்.  எப்போதும் கண்ணனின் நாம ஜபம் செய்து கொண்டிருப்பாள்.  ஒரு நாள் அவள், " கண்ணா நீதான் எனக்குத் துணையாக எப்போதும் இருக்க வேண்டும், யசோதையை விட்டுச் சென்றதுபோல் என்னைக் கைவிட்டுவிடாதே" என்று மனமுருகப் பிரார்த்தித்தாள். 

ஒரு நாள், 7,8 வயதுள்ள ஒரு பாலகன் அவள் வீட்டு வாசலில் வந்து, "பாட்டி, .நான் ஒரு அநாதை. எனக்கு ஏதாவது வேலை தாருங்கள்" என்றான். அவள், "நீ மிகவும் சிறியவனாக இருக்கிறாய், உன்னால் வேலை செய்ய முடியாதே?" என்றாள்.  அவனோ,"நான் எல்லா வேலையும் செய்வேன். தங்குவதற்கு இடமும், உணவும் அளித்தால் போதும்" என்று கூறினான். இயல்பாகவே கருணை உள்ளம்  கொண்ட அவள், மிக மகிழ்ந்து அவனைத் தன் மகனாகவே நினைத்து ஏற்றுக் கொண்டாள். அவனை' " உன்னி" என்று அன்புடன் அழைத்தாள்.

வில்வமங்கலம் ஸ்வாமிகள் என்பவர் பூஜை  செய்யும்போது கண்ணனை நேரிலேயே பார்ப்பார் என்று கேள்விப்பட்டாள். அவரைத் தன் வீட்டிற்கு வந்து பூஜைகள் செய்து உணவருந்திப் போகுமாறு அழைத்தாள். அவரும் சம்மதித்தார். 

குரூரம்மாவின் அடுத்த வீட்டில் 'செம்மங்காட்டம்மா' என்று ஒரு  பணக்காரப் பெண்மணி இருந்தாள்.  குரூரம்மாவிடம் ஊரிலுள்ள அனைவரும் மிகுந்த மரியாதையுடன் இருப்பதால் அந்தப் பெண்மணிக்கு எப்போதும் பொறாமை. குரூரம்மாவின் வீட்டிற்கு ஸ்வாமிகள் செல்லக் கூடாது என்று, அதே நாளில் தன் வீட்டிற்கு அவரை அழைத்தாள். குரூரம்மாவிற்கு இது பற்றித் தெரியாது.

பூஜையன்று காலை குரூரம்மா குளிக்க ஆற்றுக்குச் சென்றாள்.   குளித்துவிட்டு ஈரத் துணியைப் பிழியும்போது, அருகில் நீராடிக் கொண்டிருந்த 
செம்மங்காட்டம்மாவின் மீது சில நீர்த் துளிகள் தெறித்தது. உடனே அவள் குரூரம்மாவை திட்டிவிட்டு, மீண்டும் நீரில் முங்கி எழுந்து ,"ஸ்வாமிகள் என் வீட்டிற்கு வருகிறார், இப்போது நான் செல்ல வேண்டும்" என்று கூறினாள். அதைக் கேட்ட  குரூரம்மாவிற்கு அதிர்ச்சியாக இருந்தது. மனம்  நொந்தபடியே வீடு திரும்பி, 'உன்னி' யிடம் நடந்ததைக் கூறினாள். அவனும்,"கவலைப்படாதே பாட்டி, ஸ்வாமிகள் நிச்சயம் நம் வீட்டிற்கு வருவார்" என்று அவளைத் தேற்றினான். அவனை நம்பிய அவள், "அப்படியெனில், அதற்கான ஏற்பாடுகள் ஒன்றையும் நான் செய்யவில்லையே" என்றாள். அவனும்," நீ  ஓய்வெடு பாட்டி, நான் எல்லாவற்றையும் கவனித்துக் கொள்கிறேன்" என்று கூறி பூஜைக்கு வேண்டியவற்றையும், மற்ற எல்லா வேலைகளையும் விரைவாகச் செய்து முடித்தான். 

செம்மங்காட்டம்மாவின் வீட்டில் ஸ்வாமிகள் வருவதற்கான  எல்லா ஏற்பாடுகளும் நடந்தது. ஸ்வாமிகள் வந்துவிட்டதன் அறிகுறியாக அவருடைய சிஷ்யன் சங்கை முழங்கியபோது சங்கிலிருந்து நாதம் எழவில்லை. அதை ஒரு  துர்நிமித்தமாகக் கருதிய ஸ்வாமிகளுக்கு, உடனே குரூரம்மாவின் வீட்டிற்கு வருவதாக வாக்களித்தது  நினைவிற்கு வந்தது. அதனால் குரூரம்மாவின் வீட்டிற்கு சென்று. மீண்டும் சங்கை முழங்கியபோது அதிலிருந்து நாதம் எழுந்தது. இறைவனுடைய ஆணையாக  அதை ஏற்று அங்கே சென்றார். 'உன்னி' வரவேற்றான். கண்ணனை நேரிலே பார்த்திருந்தும்கூட, மாயையால் அவனை அவர் அறியவில்லை. 

எப்போதும், ஸ்வாமிகளின் பூஜைக்கு வேண்டியவற்றை அவரது சிஷ்யர்கள்தான் செய்வது வழக்கம். வேறு எவருக்கும் எப்படி செய்ய வேண்டும் என்பது தெரியாது. இங்கோ, பூஜைக்கு வேண்டிய அனைத்தும் முறையாக செய்யப்பட்டு, தயாராக இருந்தது. சிஷ்யர்களுக்கு ஒரே ஆச்சர்யம்!

பூஜை ஆரம்பித்தது. ஸ்வாமிகள் கண்ணை மூடிக் கண்ணனைத் தியானித்தார். கண்களை மூடியதும் 'உன்னி' அவர் முன்னே சென்று நின்றான். சிஷ்யர்கள் திகைத்தனர். ஒருவரும் பேசாமல்  மௌனமாய் இருந்ததால், சிஷ்யர்களால் 'உன்னி'யைக் கூப்பிட முடியவில்லை. ஸ்வாமிகள், பூக்களால் அர்ச்சனை செய்ய ஆரம்பித்தார். கண்களைத் திறந்தபோது,. எல்லா பூக்களும் 'உன்னி'யின் காலருகே இருந்ததைப் பார்த்தார். அவனை நகர்ந்து அறையின் மூலைக்குச் சென்று நிற்கச் சொல்லிவிட்டு மீண்டும் கண்களை மூடித் தியானித்து அர்ச்சனை செய்தார்.  இப்போதும் பூக்கள் 'உன்னி'யின் பாதங்களில் விழுந்தன. ஸ்வாமிகளுக்கு, குரூரம்மாவிற்காக பகவானே 'உன்னியாக' வந்திருப்பது புரிந்தது. இப்போது அவர் கண் முன் மாயக் கண்ணன் நின்றான். 
அவர் மெய்சிலிர்த்து நமஸ்கரிக்க எழுந்தார். கண்ணன் தடுத்து  நிறுத்தினான். "நமக்குள் இது ரகசியமாக இருக்கட்டும், நான் குரூரம்மாவுடன் அவளது 'உன்னியாகவே' இருக்க விரும்புகிறேன்" என்று கண்ணன்  அவர் காதருகில் கூறுவது கேட்டது. 

பூஜையும் நல்லவிதமாக நடந்து முடிந்தது. ஸ்வாமிகளும் சிஷ்யர்களும் குரூரம்மாவிடம் விடைபெற்றுச் சென்றனர். குரூரம்மாவும் மிகுந்த மகிழ்ச்சியடைந்.தாள்.

குரூரம்மாவின் காலத்தில் நாமும் பிறந்திருந்தோமா என்று தெரியவில்லை. ஆனால் இந்தக் கதையைத் தட்டச்சு செய்யும்போது, பாரதியாரின்  
"நண்பனாய், மந்திரியாய், நல்லாசிரியனுமாய், பண்பிலே தெய்வமாய்., பார்வையிலே சேவகனாய், எங்கிருந்தோ வந்தான் இடைச்சாதியென்று சொன்னான்" என்ற வரிகள்  நினைவிற்கு வருகின்றது.  

"கண்ணா, மணிவண்ணா, உனை யாம் பெறவே என்ன தவம் செய்து விட்டோம்"!!!

Sunday, December 28, 2014

கண்ணன் கதைகள் (16) - மானவேடன்

கண்ணன் கதைகள் (16) -  மானவேடன், கண்ணன் கதைகள், குருவாயூரப்பன் கதைகள்,

வில்வமங்கலம் ஸ்வாமிகள் கண்ணனை நேரிலேயே பிரத்யக்ஷமாகக் கண்டவர். அவர் காலத்தில் மானவேடன் என்று ஒரு ராஜா இருந்தார். அவர் கவிஞர். சிறந்த பக்தரும் ஆவார். ஒரு முறை ராஜா குருவாயூருக்கு தரிசனம் செய்யச் சென்றார். அங்கே வில்வமங்கலம் ஸ்வாமிகளைக் கண்டார். அவரிடம் சென்று வணங்கி, ஸ்வாமிகளே! குருவாயூரப்பனை நேரில் காண எனக்கு வழிகாட்டுங்கள்" என்று வேண்டினார். ஸ்வாமிகள், "மிகுந்த பிரயத்தனத்துடன் முனிவர்கள் அடையும் அந்த மகாபாக்கியத்தை இவ்வளவு சுலபமாகக் கேட்கிறாயே! அது மிகவும் கடினம்" என்று சொன்னார். ராஜா மிகவும் வருந்தி, அழுது,"தாங்கள் எப்படியாவது பகவானைக் காண, அவனை அடைய வழி சொல்ல வேண்டும்" என்று கேட்டார்.

ஸ்வாமிகளும் அவனிடம் கருணை கொண்டு, கண்ணனிடம் கேட்டுவிட்டுச் சொல்கிறேன் என்று சொன்னார். பிறகு, கண்ணனிடம் கேட்டுவிட்டதாகவும், கண்ணனை அதிகாலையில் மகிழ மரத்தடியில் விளையாடும்போது பார்க்கலாம் என்றும் கூறினார். அதன்படி, மானவேடன் கண்ணனைக் கண்டான். அப்பொழுது கண்ணன், தலையில் மயில்தோகையுடனும், வனமாலை, கங்கணங்கள், கிண்கிணிகளால் ஆன அரைஞாண், பீதாம்பரம், தாமரை போன்ற திருவடிகள், மேகத்திற்கு ஒப்பான நிறமுடைய திருமேனியுடன், மயக்கும் அழகுடன் விளையாடுவதைக் கண்டான். உடல் புல்லரிக்க, தன்னை மறந்து ஓடி அப்பனைத் தழுவச் சென்றான். உடனே குருவாயூரப்பன், " வில்வமங்கலம் உன்னிடம் பார்க்கத்தான் சொன்னார், தூக்கச் சொல்லவில்லை" என்று கூறி மறைந்தார். கண்ணனைத் தொட முடியவில்லையே என்று அரசனுக்கு ஏக்கமாக இருந்தது. அப்போது அரசன், தன் கையில் ஒரு மயில்தோகை இருக்கக் கண்டான். அதைக் கண்டு மகிழ்ந்து ஸ்வாமிகளிடம் சென்று நடந்ததைக் கூறினான். ஸ்வாமிகள் கூறியதன்பேரில் அந்தத் தோகையை ஒரு ரத்தினக் கிரீடத்தில் பதித்து, பூஜித்து வந்தான். மேலும், மகிழ மரத்தால் செய்யப்பட்ட கண்ணன் விக்ரகத்தைச் செய்து, அதைக் கோவிலின் தென்கிழக்குப் பகுதியில் வைத்து, அதன்முன் அமர்ந்து, பாகவதத்தின் தசம, ஏகாதசி ஸ்காந்தத்தைத் தழுவி, "கிருஷ்ணகீதி" என்ற நாட்டிய நாடகத்தை இயற்றி, அதை பகவானுக்கு அர்ப்பணித்தான்.

துலா மாதம் கடைசி தினத்தன்று அர்ப்பணித்ததால், கோவிலில் இன்றும் அந்த நாளை 'கிருஷ்ணகீதி தினம்' என்று கொண்டாடுகின்றனர். அன்றைய தினம் கிருஷ்ணகீதியை நாட்டிய நாடகமாக நடித்து ஆடுவார்கள், கிருஷ்ணராக நடிப்பவர் அந்த மயில்தோகை பதித்த கிரீடத்தைத் தரித்திருப்பார். ஸ்ரீ அப்பனை வழிபட்டால் யோகமும் க்ஷேமமும் தேடி வரும் என்பதைக் கண்கூடாக இன்றும் காணலாம்.

Saturday, December 27, 2014

கண்ணன் கதைகள் (15) - இரு கண்கள்

கண்ணன் கதைகள் (15) - இரு கண்கள், கண்ணன் கதைகள், குருவாயூரப்பன் கதைகள்,

பூந்தானம் நம்பூதிரி சிறந்த பக்தர். படிப்பறிவு இல்லாதவர். பக்தியுடன் இறைவன் பெயரில் தா மனதிற்குத் தோன்றியபடி மலையாளத்தில் சிறு சிறு கவிதைகள் எழுதுவார். ஒரு சமயம் அவர் கண்ணனைப் பற்றிய பாடல்களை எழுதி, மேல்பத்தூர் நாராயண பட்டத்திரியிடம் கொடுத்து, தயவு செய்து இதில் தவறு ஏதும் இருந்தால் திருத்தித் தாருங்கள் என்று சொன்னார். நாராயண பட்ட
த்திரி தான் சிறந்த அறிவாளியென்ற கர்வத்தில், இதில் நிறைய இலக்கணப் பிழை இருக்கிறது, படிப்பறிவு இல்லாதவன் எழுதுவது போல் இருக்கிறது” என்று ஏளனமாகக் கூறினார். பூந்தானம் மிகுந்த வருத்தத்துடன் சென்று விட்டார். அவர் மனம் கலங்கியது. அவர் வருத்தத்தை குருவாயூரப்பனால் சகிக்க முடியவில்லை. நாராயண நம்பூதிரியின் ரோகத்தின் உபத்திரவத்தை அதிகப்படுத்தினார். ரோகத்தின் அவஸ்தையில் அவர் அலறினார்.

அடுத்த நாள் நாராயண பட்டத்திரியின் வீட்டிற்கு ஒரு அழகிய இளைஞன் வந்தான். நீங்கள் இயற்றிய நாராயணீயத்தைக் கேட்பதற்காக வந்திருக்கிறேன், படியுங்கள் என்று சொன்னான். பட்டதிரியும் மகிழ்ச்சியுடன் படிக்க ஆரம்பித்தார். அவர் படிக்கப் படிக்க, பல இடங்களில் பிழை இருக்கிறது என்று அந்த இளைஞன் சொல்லிக் கொண்டே வந்தான். பட்டத்திரி, “இத்தனை தவறுகளைச் சொல்லும் நீ யார்?” என்று கேட்டார். உடனே அந்த இளைஞன் மறைந்தான். புல்லாங்குழலை ஊதிக்கொண்டு அங்கே குருவாயூரப்பன் காட்சி அளித்தார். மேலும், “நாராயண நம்பூதிரியின் பக்தியை விட பூந்தானத்தின் பக்தியின் மேல் எனக்கு விருப்பம் அதிகம், அவரது பாடல்களில் இலக்கணம் இல்லாவிட்டாலும் பக்தி இருக்கிறது, பூந்தானத்திடம் மன்னிப்பு கேள், உன்னுடைய ரோகத்தின் உபத்திரவம் குறையும்” என்று கூறி மறைந்தார். 


உடனே நாராயண பட்டத்திரி, தன்னுடைய வித்யா கர்வத்தை எண்ணி வெட்கி, பூந்தானத்திடம் மன்னிப்பு கேட்டார். மேலும், அவரால் தனக்கு அப்பனின் தரிசனம் கிடைத்ததில் மகிழ்ந்து அவருக்குத் தன் மோதிரத்தையும் பரிசாக அளித்தார். நமது இந்த நட்பின் அடையாளமாக இந்த மோதிரம் எப்போதும் உங்கள் விரலிலேயே இருக்கவேண்டும்,அந்தக் குருவாயூரப்பனே நேரில் வந்து கேட்டாலொழிய வேறொருவருக்கும் தரக் கூடாது என்று அன்புக் கட்டளையிட்டார். அதனால்தான் அந்த மோதிரத்தைக் கொள்ளையர்கள் பார்த்துவிடக் கூடாது என்றும், மாங்காட்டச்சனிடம் அதைத் தரவும் தயங்கினார் பூந்தானம். இப்போது புரிகிறதா? முந்தைய கண்ணன் கதையில் அவர் ஏன் தயங்கினார் என்று? கண்ணனுக்கு பூந்தானம் நம்பூதிரியும், நாராயண பட்டத்திரியும் இரு கண்களைப் போன்றவர்கள் என்பது  இதிலிருந்து விளங்குகிறது. பின்னாளில் “ஞானப்பான” என்ற சிறந்த காவியத்தையும் பூந்தானம் இயற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Friday, December 26, 2014

கண்ணன் கதைகள் (14) - மோதிரம்

கண்ணன் கதைகள் (14) -  மோதிரம்,கண்ணன் கதைகள், குருவாயூரப்பன் கதைகள்,

பூந்தானம் நம்பூதிரி என்பவர் சிறந்த பக்தர். அவர் தினமும் தனது ஊரிலிருந்து காட்டு வழியே தொலைதூரம் நடந்து குருவாயூருக்குச் சென்று அப்பனைத் தரிசனம் செய்வார். அவ்வாறு செல்கையில் ஒரு நாள் வழியில் சில கொள்ளைக்காரர்கள் அவரைத் தடுத்துத் தாக்கினர். அவரிடம் என்ன பொருள் இருக்கிறது என்று ஆராயத் தொடங்கினார்கள். அவர் மனமோ, தன் விரல்களில் உள்ள மோதிரத்தை அவர்கள் பார்த்துவிடக் கூடாது என்று பயந்தது. ஆபத்தினை உணர்ந்த அவர், கண்களை மூடி “குருவாயூரப்பா குருவாயூரப்பா,” என்று உரத்துக் கூறினார். சிறிது நேரத்தில் புதியதான மலரின் மணம் காற்றில் வீசியது. கண் திறந்து பார்த்தபொழுது மாங்காட்டச்சன் என்ற திவான் குதிரைமேல் வேகமாக வாளைச் சுழற்றிக் கொண்டு வந்தார். அவரைக் கண்டதும் கொள்ளையர்கள் வேகமாக அந்த இடத்தை விட்டு ஓடிவிட்டார்கள். மனம் நெகிழ்ந்த பூந்தானம் உமக்கு நான் என்ன கைம்மாறு செய்வேன் என்று வினவ, அவரும் உன்னுடைய கையில் இருக்கும் மோதிரத்தை எனக்குக் கொடு என்று கூறினார். மோதிரம் களவு போய்விடக் கூடாது என்று பயந்த பூந்தானம் இப்போது தயங்கி, திகைத்து, செய்வதறியாது அந்த மோதிரத்தை திவானுக்குப் பரிசாக அளித்தார். திவான் அவரைத் தன் குதிரையில் ஏற்றிக் கொண்டு குருவாயூர் எல்லையில் விட்டுவிட்டுச் சென்றார்.

அதே நேரம் கோவில் அர்ச்சகரின் கனவில் தோன்றிய அப்பன், “அர்ச்சகரே! என் கையில் ஒரு மோதிரம் இருக்கும், அதைப் பூந்தானத்திடம் கொடுத்துவிடுங்கள், கொள்ளையர்களிடம் இருந்து அவரைக் காப்பாற்ற மாங்காட்டச்சன் உருவில் சென்று அவரிடம் இருந்து விளையாட்டாக மோதிரத்தைப் பெற்றேன்” என்று கூறினார்.

பூந்தானம் குருவாயூர்க் கோயிலை நெருங்கும்போது, அர்ச்சகர் ஓடி வந்து பூந்தானத்தின் காலில் விழுந்தார். தன் கனவில் அப்பன் சொன்னதைக் கூறி மோதிரத்தை அவரிடம் கொடுத்தார். மோதிரத்தைப் பார்த்த பூந்தானத்திற்குப் புல்லரித்தது. முந்தைய இரவு மாங்காட்டச்சனிடம் கொடுத்த அதே மோதிரம்தான் அது!! தன்னைக் காப்பாற்ற குருவாயூரப்பனே மாங்காட்டச்சனாக வந்ததை எண்ணி ஆனந்தக் கண்ணீர் பெருக்கினார்.

அது சரி, பக்தியைத் தவிர வேறொன்றும் அறியாத, பொருட்களில் பற்றற்ற பூந்தானத்திற்கு மோதிரம் களவு போகக் கூடாது என்று 
ன் தோன்றியது? தன்னைக் காப்பாற்றியவருக்கு அதைப் பரிசளிக்க ஏன் தயங்கினார்? நாளை வரை பொறுத்திருங்கள்.

Thursday, December 25, 2014

கண்ணன் கதைகள் (13) - கயிறா? கதலியா?

கண்ணன் கதைகள் (13) -  கயிறா? கதலியா?,கண்ணன் கதைகள், குருவாயூரப்பன் கதைகள்,

ஒரு ஏழைப் பெண்மணி தென்னை மட்டையிலிருந்து கயிறு பிரித்து வியாபாரம் செய்து வந்தாள். அவளுக்கு நெடுநாட்களாகக் குழந்தைப் பேறு இல்லை. மிகவும் வருந்திய அவள் குருவாயூரப்பனிடம் தனக்குக் குழந்தை உண்டானால் கயிற்றுப் பிரியால் துலாபாரம் செய்வதாய் வேண்டிக் கொண்டாள். 

சிறிது நாட்களிலேயே அவள் கருவடைந்தாள். வியாபாரமும் செழிக்கத் தொடங்கியது. குழந்தைக்கு ஆறு மாதமானதும் பிரார்த்தனையை நிறைவேற்ற குருவாயூர் சென்றாள். இப்போது வசதியாய் இருப்பதால் கயிற்றுத் துலாபாரம் செய்தால் கேவலம், கதலித் துலாபாரம் செய்யலாம் என்று முடிவு செய்தாள். குழந்தையைத் துலாபாரத் தட்டில் கிடத்தி, மற்றொரு தட்டில் கதலிப் பழத்தை வைத்தார்கள். குழந்தையின் எடையை விட பத்து மடங்கு கதலியை வைத்தும், தட்டு சமநிலையை அடையவில்லை. கோவில் சிப்பந்தி அவளிடம், “ஏதோ தப்பு நடந்திருக்கிறது, என்ன பிரார்த்தித்தாய்?” என்று கேட்டனர். அவளும், “ஏழையாய் இருக்கும் சமயம் கயிறு வேண்டிக் கொண்டேன், இப்போது அவன் அருளால் வசதி பெருகிவிட்டது, அதனால் கயிற்றுத் துலாபாரம் செய்தால் கேவலம், கதலித் துலாபாரம் செய்யலாம் என்று செய்தேன்” என்று கூறினாள். கோவில் சிப்பந்திகள்,“ உன்னிடம் எவ்வளவு கோடி இருந்தாலும், பிரார்த்தித்த வேண்டுதலையே அப்பன் ஏற்பான்” என்று கூறினார்கள். பழங்களை இறக்கிவிட்டு கயிற்றை ஏற்றினார்கள், என்ன ஆச்சர்யம்! தராசு கீழே இறங்கியது. அப்பன் பொருட்களில் உயர்வு, தாழ்வைப் பார்ப்பதில்லை, அன்புடன் சமர்ப்பிக்கும் எதையும் ஏற்பான் என்பதற்கு இந்த லீலை உதாரணம்.

Wednesday, December 24, 2014

கண்ணன் கதைகள் (12) - நிவேதனம்

கண்ணன் கதைகள் (12) -  நிவேதனம்,கண்ணன் கதைகள், குருவாயூரப்பன் கதைகள்,

யசோதை கண்ணனை வெளியே எங்கும் போகக் கூடாது என்று சொல்லிவிட்டுத் தயிர் கடையச் சென்றுவிட்டாள். சிறிது நேரம் சாதுவாக இருந்த கண்ணன்., நண்பர்கள் விளையாடுவதைக் கண்டவுடன் மெதுவே வீட்டை விட்டு வெளியேறினான். அவனைக் கண்ட நண்பர்கள் மிக மகிழ்ந்து, “கண்ணா, வா வழக்கம்போல் வெண்ணை தின்னச் செல்லலாம்” என்று கூப்பிட்டார்கள்.

கோபிகைகள் அனைவரும் கூடிப்பேசி, கண்ணன் வெண்ணை திருட வருவான் என்பதால் உரியில் வெண்ணைப் பானையை வைத்துவிட்டு, தொட்டால் சத்தம் வரும்படியாக மணியைக் கட்டியிருந்தார்கள். பிறகு நிம்மதியாக வேலை செய்யச் சென்றுவிட்டா
ர்கள். கண்ணனும் நண்பர்களும் மெதுவே ஒரு வீட்டில் நுழைந்தனர். உரியில் வெண்ணை இருப்பதைப் பார்த்த கண்ணன், அதில் மணி கட்டியிருப்பதையும் பார்த்து விட்டான். அக்கம்பக்கம் பார்த்துவிட்டு அந்த மணியிடம்,“மணியே! நாங்கள் சாப்பிட்டு முடிக்கும் வரை அடிக்காதே” என்று சொல்ல மணியும் சம்மதித்தது. 

கண்ணன், உரியிலிருந்து ஒவ்வொரு பானையாக இறக்கி நண்பர்களிடம் கொடுத்துவிட்டு, கடைசியாக இருந்த பானையில் கை விட்டு வெண்ணையை எடுத்து வாயருகே கொண்டு சென்றான். அதுவரை சப்திக்காமல் இருந்த மணி, இப்போது கணகணவென்று ஒலிக்கத் துவங்கியது. கண்ணன் வேகமாகக் கீழே குதித்துவிட்டு மணியிடம், "ஏ மணியே! ஒலிக்க மாட்டேன் என்று சொல்லிவிட்டு இப்போது நான் உண்ணும்போது ஏன் ஒலிக்கிறாய்?" என்று கேட்டான். மணியோ,“கண்ணா, மணிவண்ணா, பலப்பல யுகங்களாக, உனக்கு நிவேதனம் செய்யும்போது நான் ஒலி எழுப்புவது வழக்கம்தானே, இன்று நீ உண்ணும்போது எப்படி ஒலிக்காமல் இருப்பேன்?” என்றது. சத்தம் கேட்டு கோபிகை வரவே அனைவரும் ஓடிச் சென்றார்கள். மெதுவே அடுத்த வீட்டில் நுழைந்தார்கள். அங்கும் உரியில் மணி கட்டியிருந்தது. இப்போது கண்ணன் ஒரு கையால் மணியின் நாக்கை ஒலிக்காதவாறு பிடித்துக் கொண்டு மறு கையால் வெண்ணை உண்டுவிட்டு ஓடினான். இடையர்கள் அனைவரும் ஓடுவதைக் கண்ட கோபிகைகள், தங்களுடைய யோசனையால் பயந்து கண்ணன் ஓடுவதாக நினைத்தனர். பிறகு உள்ளே சென்று பார்த்தபோது வெண்ணையைக் காணாமல், கண்ணனின் லீலையை நினைத்து வியந்து மகிழ்ந்தனர்.

Tuesday, December 23, 2014

கண்ணன் கதைகள் (11) - சதுரங்க விளையாட்டு

கண்ணன் கதைகள் (11) -  சதுரங்க விளையாட்டும் அம்பலப்புழா பால் பாயஸமும், கண்ணன் கதைகள், குருவாயூரப்பன் கதைகள்,

கேரளத்திலுள்ள அம்பலப்புழா, ‘தென்னகத்து துவாரகை' என்று பக்தர்களால் போற்றப்படுகிறது அம்பலப்புழா கிருஷ்ணர் கோயிலை தேவ நாராயணன் தம்புரான் என்ற மன்னன் கட்டியதாக வரலாறு. மூலவர் இங்கு குழந்தை கிருஷ்ணராகக் காட்சி தருகிறார். திப்பு சுல்தானின் படையெடுப்பின்போது குருவாயூர் உற்சவ மூர்த்தியை இங்கு வைத்திருந்ததாகச் சொல்கிறார்கள். இந்தக் கோயிலின் நைவேத்தியமான "அம்பலப்புழா பால் பாயஸம்" மிகவும் பிரசித்தி பெற்றது. குருவாயூரில் காலையில் பால் பாயசம் சாப்பிடும் கண்ணன், மதியம் அம்பலப்புழாவிற்குப் பால் பாயசம் சாப்பிட வருவதாக ஐதீகம். அம்பலப்புழா பால் பாயஸத்தைப் பற்றிய சுவையான கதை ஒன்று உண்டு.

கண்ணனின் சதுரங்க விளையாட்டும் அம்பலப்புழா பால் பாயஸமும்:

முன்னொரு சமயம் அம்பலப்புழையை ஆண்டு கொண்டிருந்த அரசன் முன் கிருஷ்ணர் ஒரு முனிவர் வடிவில் தோன்றினார். “இந்த நாட்டில் யாரேனும் என்னை சதுரங்கம் ஆடி ஜயிக்க முடியுமா? என்று சவால் விட்டார். அரசனுக்கு சதுரங்கத்தில் மிகுந்த ஆர்வம் இருந்ததால் மகிழ்ச்சியுடன் அரசனே சவாலை ஏற்றான்.

எந்த ஒரு சவாலிலும் பரிசு என்ன என்பதை முன்னமேயே முடிவு செய்ய வேண்டும் அல்லவா? அதனால் அரசன் முனிவரிடம், “சவாலில் நான்தான் ஜயிப்பேன், ஒரு வேளை நீர் ஜயித்தால் பரிசாக என்ன வேண்டும் என்பதை நீரே முடிவு செய்யும்” என்று சொன்னான். முனிவர், “என்னைப் போன்ற முனிவர்களுக்கு வேறென்ன தேவையாக இருக்க முடியும்? எனக்கு அரிசிதான் தேவை. ஆனால் நான் சொல்லும் முறையில் அரிசியைத் தர வேண்டும். முதல் கட்டத்தில் 1 அரிசி, இரண்டாவது கட்டத்தில் 2 அரிசி,, மூன்றாவது கட்டத்தில் 4 அரிசி, நான்காவது கட்டத்தில் 16 அரிசி என்ற ரீதியில் அரிசியைத் தர வேண்டும்” என்று சொன்னார்.

அரசனும், இவ்வளவு பெரிய ராஜ்ஜியத்தில் வெறும் அரிசியைக் கேட்கிறீர்களே, வேறு ஏதாவது கேளுங்கள் என்று சொல்ல முனிவர் வேறு எதுவும் வேண்டாம் என்று மறுத்துவிட்டார். அரசனுக்கு அந்தக் கோரிக்கையில் வருத்தம் இருப்பினும், அரிசிதானே என்று சந்தோஷமாக ஆடத் துவங்கினான். சதுரங்க விளையாட்டு துவங்கியது, கண்ணனுடைய விளையாட்டும் தான்!! அரசன் ஆட்டமிழந்தான். சொன்னபடி முனிவருக்குப் பரிசு தரும் நேரம் வந்தது. கட்டத்தில் முனிவர் சொன்னபடி அரிசியை வைக்க ஆரம்பித்த சிறிது நேரத்திலேயே அரசனுக்குத் தன் தவறு புரிந்துவிட்டது. முனிவரின் உண்மையான கோரிக்கையை உணர்ந்தான். 20-வது கட்டம் வரும்போது அரிசி அளவு 10 லட்சமாக (மில்லியன்) உயர்ந்தது. 40-வது கட்டத்தில் ஒரு மில்லியன் மில்லியனாக ஆயிற்று. இவ்வாறு ஒரு பெருக்குத் தொடர்ச்சியின்(geometric progression) வளர்ச்சியாக வளர்ந்துகொண்டே போனது. களஞ்சியத்தில் இருந்த அரிசி, நெல் அனைத்தும் தீர்ந்து, பக்கத்து ராஜ்ஜியங்களில் இருந்த நெற்குவியலையும், அரிசியையும் கொட்டியாயிற்று. இப்போது, அரசன் முனிவரின் கோரிக்கையை நிறைவேற்ற முடியாது என உணர்ந்தான். 64 கட்டங்கள் கொண்ட சதுரங்கத்தில் நிரப்ப ((2 ^ 64) - 1) அதாவது 18.446.744.073.709.551.615 டிரில்லியன் டன் கணக்கில் அரிசி தேவைப்பட்டது. அரசன் கலங்கினான். என்ன செய்வது என்று புரியவில்லை.
அரசனின் சங்கடத்தைக் கண்ட முனிவர், கிருஷ்ணர் வடிவில் அரசன் முன் தோன்றினார். அரிசியை உடனடியாகக் கொடுக்க வேண்டாம், கடன் தீரும்வரை அம்பலப்புழை கிருஷ்ணன் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அரிசியில் செய்யப்பட்ட பால் பாயஸம் செய்து கொடு என்று கூறினார். அரசனும் கர்வத்தை ஒழித்து, தனது சொத்துக்கள் அனைத்தையும் கோவிலுக்கே கொடுத்தான். இன்றளவும் கோயிலில் அரிசியால் செய்யப்பட்ட பால் பாயஸம் கிருஷ்ணனுக்கு நைவேத்தியம் செய்யப்பட்டு, வரும் பக்தர்களுக்குப் பிரஸாதமாகக் கொடுக்கப் படுகிறது.

Monday, December 22, 2014

கண்ணன் கதைகள் (10) - காசுமாலை

கண்ணன் கதைகள் (10) - காசுமாலை,கண்ணன் கதைகள், குருவாயூரப்பன் கதைகள்,

சில வருடங்களுக்கு முன்பு ஒரு  பக்தர் தனது மனைவியுடன் தரிசனத்திற்காக குருவாயூர் சென்றார். நிர்மால்ய தரிசனம் செய்ய  விருப்பம் கொண்ட அவர்கள், அதிகாலையில் குளத்தில் ஸ்நானம் செய்துவிட்டுப் படி ஏறும்போது அங்கே  கீழே  ஒரு தங்கக் காசுமாலை இருக்கக் கண்டார். சுற்றுமுற்றும் யாருமில்லை. அதனால் அம்மாலை யாருடையது என்று விசாரிக்கக் கூட முடியவில்லை.  விடிந்ததும் விசாரித்துக் கொடுத்துவிடலாம் என்று எண்ணி, தமது பையில் வைத்துக் கொண்டார். சிறிது நேரத்திலேயே அவருக்கு தலைசுற்றலும், மயக்கமும் உண்டானது. அவரது மனைவி, "என்ன ஆயிற்று?" என்று  கேட்டார். அவரும், "என்னமோ  போல் இருக்கிறது, ஒன்றும் புரியவில்லை" என்று கூறினார். "காசுமாலையை உரியவரிடம் ஒப்படைத்துவிடுங்கள்" என்று மனைவி சொன்னார். இந்த இருட்டில் யாரிடம் கொடுப்பது, விடிந்ததும் தேவஸ்தானத்தில் கொடுத்துவிடலாம்" என்று சொன்ன அவர், அதன்படியே விடிந்ததும் தேவஸ்தானத்தில் அந்தக் காசுமாலையை ஒப்படைத்து, அது குளத்துப் படியில் கிடந்ததையும் சொன்னார். உடனேயே அவரது தலைசுற்றலும், மயக்கமும் குறைந்தது. பிறகு தரிசனம் செய்தார். 

காசுமாலையைத் தொலைத்தவரும், தேவஸ்தானத்தில் முறையிடச் சென்றபோது, மாலையைப் பெற்றார். இவ்வாறு, தொலைத்தவரும் தனது பக்தரானதால், அவரது மனக்கிலேசத்தை நீக்க வேண்டி, இந்த பக்தருக்கு உபாதையை உண்டு  பண்ணி, பிறகு நீக்கி, இருவருக்கும்  சந்தோஷத்தை அளித்தார்.  

குருவாயூரப்பன், இவ்வாறு கலியுகத்திலும் பல அற்புதங்கள் செய்து, பிரத்யக்ஷ தெய்வமாக  விளங்குகிறார். 

Sunday, December 21, 2014

கண்ணன் கதைகள் (9) - உதவி சமையற்காரன்

ஒரு சமயம், ஒரு பக்தர் 100 படி அரிசி சமைத்து கோயிலில் அன்னதானம் செய்ய விரும்பினார். குருவாயூர்க் கோயிலில், வெளியாட்கள் சமைக்கவோ, சமைத்துக் கொண்டு வந்து கொடுக்கவோ முடியாது. கோயிலின் மடப்பள்ளியில் கீழ்சாந்திகள் (உதவி புரிபவர்) தான் சமைப்பார்கள். 

கோவிலில் மொத்தம் இரண்டு கீழ்சாந்திகளே இருந்தனர். அதிலும் ஒரு கீழ்சாந்தி விடுப்பில் சென்றிருந்தார். மல்லிசேரி நம்பூதிரி என்ற மற்றொரு கீழ்சாந்திதான் ஒருவனாக எவ்வாறு அவ்வளவு சமைப்பது என்று மிகுந்த கவலை கொண்டார். எப்படி அவ்வளவு ஏற்பாடுகளைச் செய்வது என்ற கவலையுடன் தூக்கமில்லாமல் இரவைக் கழித்தார். இரவு முழுவதும் நாராயண நாமத்தை உச்சரிப்பதைத் தவிர வேறு ஒன்றும் செய்யவில்லை. 

அடுத்த நாள், அதிகாலையிலேயே கோவிலுக்குச் சென்றுவிட்டார். வேலைகளைச் செய்யத் தொடங்கினார். விடுமுறையில் சென்றிருந்த கீழ்சாந்தி அவர்க்கு முன்பாகவே வந்து விருந்து தயார் செய்ய ஆரம்பித்திருந்தார். சமையல் முடியும் தருவாயில் இருந்ததைப் என்று பார்க்க நிம்மதியாக இருந்தது. சமையல் முடிந்த பிறகு அந்த கீழ்சாந்தி நாராயண சரஸில் குளித்து விட்டு வருகிறேன் என்று சொல்லிச் சென்றார். வெகு நேரமாகியும் திரும்பி வரவில்லை. விருந்தும் நல்லபடியாகவே முடிந்தது. 

அடுத்த நாளும் அவர் வரவில்லை. அவரை அழைத்து வரச் சொல்லி ஒருவரை அனுப்பினார். என்ன ஆச்சர்யம்! விடுமுறையில் சென்ற கீழ்சாந்தி சென்றது முதல் படுத்த படுக்கையாக இருப்பதாகத் தகவல் வந்தது. நம்பமுடியாததாய் இருந்தாலும் அவருக்கு உதவியாளராக வந்தது அந்தக் கண்ணனே என்பது மல்லிசேரிக்குப் புரிந்தது. குருவாயூரப்பனின் திருவிளையாடலை எண்ணி மிகவும் வியந்து மகிழ்ந்தார். நம்பியவரைக் காக்க இறைவன் எந்த உருவிலும் வருவார்!!

Saturday, December 20, 2014

கண்ணன் கதைகள் (8) - ஞானிக்கும் பக்தி அவசியம்

கண்ணன் கதைகள் (8) - ஞானிக்கும் பக்தி அவசியம், கண்ணன் கதைகள், குருவாயூரப்பன் கதைகள்,

ஆதி சங்கரர் சிறந்த ஞானி, வேதாந்தி. ஒரு சமயம், அவர் கேரளாவிலுள்ள காலடியில் இருந்து சிருங்கேரி சென்று கொண்டிருந்தார். குருவாயூர் வழியாகச் செல்ல நேரிட்டது. வழியில் நாரதர் எங்கோ வேகமாகச் செல்வதைக் கண்டு அவரிடம் , “ நாரதரே! எங்கு செல்கிறீர்கள்?” என்று கேட்டார். நாரதர், “ இன்று ஏகாதசியல்லவா, அதனால் குருவாயூரப்பனை ஸேவிக்கச் செல்கிறேன், நீங்களும் வாரும்” என்று கூறினார். ஆதிசங்கரர், “பாமரர்கள் தான் விக்ரஹ ஆராதனையும், நாம ஜபமும் செய்ய வேண்டும். ஆத்ம ஞானிகளுக்குத் தேவையில்லை” என்று சொல்லிவிட்டுத் தன் பயணத்தை ஆகாய மார்க்கமாகத் தொடர்ந்தார். குருவாயூரப்பனோ “ஞானிகளுக்கும் பக்தி தேவை” என்று அவருக்கு உணர்த்த விரும்பினார்.

அப்போது குருவாயூர்க் கோவிலில் ‘சீவேலி’ ஊர்வலம் நடந்து கொண்டிருந்தது. குருவாயூர்க் கோயிலை ஆதிசங்கரர் கடக்கும்போது, திடீரென்று வானிலிருந்து வடக்கு வாசலில் சீவேலி சென்றுகொண்டிருந்த யானையின் முன்னே கீழே விழுந்தார். அனைவரும் குழப்பமடைந்து, சீவேலி ஊர்வலத்தை நிறுத்தினர். தனது முட்டாள்தனமான செயலையும், தவற்றையும் உணர்ந்த சங்கரர் மனம் வருந்தி, அப்பனிடம் மன்னிப்பு கேட்டார். அவர் முன் தோன்றிய குருவாயூரப்பன், "ஞானிக்கும் பக்தி அவசியம்" என்று திருவாய் மலர்ந்தருளினார். பணிவுடன் “கோவிந்தாஷ்டகம்”, “பஜகோவிந்தம்” முதலியவற்றால் அப்பனை ஆராதித்தார். மேலும் சில நாட்கள் குருவாயூரிலேயே தங்கியிருந்து வழிபட்டார். 
கோவிலின் நடைமுறை விதிகளை அமைத்தார். நாராயணன் நம்பூதிரி என்ற அப்போதைய கோவிலின் தாந்த்ரீகர் அந்த விதிமுறைகளை “தாந்த்ரீக” முறைப்படி எழுதி வைத்துள்ளார் என்றும் கூறப்படுகிறது. கோவிலின் தெய்வீகத் தன்மையை அதிகரிக்க “மண்டல விளக்கு” முறையை நிறுவினார். நவம்பர்-டிசம்பர் மாதங்களில் 41 நாட்கள் இந்த பூஜை நடைபெறும். ஏகாதசியன்று நடைபெறும் “விளக்கேற்றம்” மிகவும் சிறப்பானதாகும். அன்றைய தினம் தான் கிருஷ்ணர் அர்ஜுனனுக்குக் கீதையை உபதேசித்தார் என்று சொல்லப்படுகிறது.

இன்றும் குருவாயூரப்பன் திருவீதியுலா வரும்போது ஆதிசங்கரர் வழிபட்ட இடத்தில் மேளதாளங்கள் இசைக்காமல் அமைதியாகக் கடந்து செல்வர். அப்போது குருவாயூரப்பனிடம் ஆதிசங்கரர் மன்னிப்பு கேட்பதாக ஐதீகம்.

Friday, December 19, 2014

கண்ணன் கதைகள் (7) - அம்பரீஷ சரித்திரம்

கண்ணன் கதைகள் (7) - அம்பரீஷ சரித்திரம், கண்ணன் கதைகள், குருவாயூரப்பன் கதைகள்,

ராமபிரானின் முன்னோர்களில் ஒருவரான இக்ஷ்வாகு மிகவும்  புகழ் வாய்ந்தவர். அதனால் அந்த வம்சமே 'இக்ஷ்வாகு வம்சம்' என்று  பெயர் பெற்றது. இக்ஷ்வாகுவின் தந்தை  வைவஸ்வத மனு. வைவஸ்வத மனுவுக்கு பத்து புத்திரர்கள்.  அவர்களில் ஒரு பிள்ளை நபகன். அவனுடைய பிள்ளை நாபாகன். அவனுக்கு அம்பரீஷன் என்ற மகன் பிறந்தான். 

அம்பரீஷன் சிறந்த  பக்திமான். அவன் ஏழு கடல்களால் சூழப்பட்ட பூமிக்குத் தலைவனாக இருந்தான். இருப்பினும், விஷ்ணுவிடத்திலும், அவரது பக்தர்களிடத்திலும் அன்பு கொண்டு வாழ்ந்து வந்தான்.விரதங்களை மிகுந்த சிரத்தையுடனும் பக்தியுடனும் அனுஷ்டித்து வந்தான். விஷ்ணுவிடத்தில் கொண்ட பக்தியால், அனைத்து கர்மங்களையும் ஒன்றுவிடாமல் செய்து வந்தான். அவன் கேட்காமலேயே, அவனையும் அவன் நாட்டையும் காப்பதற்கு, ஆயிரக்கணக்கான முனைகளையுடைய சக்ராயுதத்தை விஷ்ணு அளித்தார்.  

மகாவிஷ்ணுவிற்கு உகந்த  நாளான ஏகாதசிக்கு நிகரான விரதம் இல்லை என்பதை நன்கு அறிந்த அவன், ஏகாதசி விரதத்தை விவரம் தெரிந்த  நாள் முதல் கடைப்பிடித்து வந்தான். ஏகாதசிக்கு முதல் நாளான தசமியன்று இரவு முதல் உண்ணாமல் இருந்து, மறுநாள் ஏகாதசி முழுவதும் உபவாசமிருந்து விஷ்ணுவைப் பூஜித்து, அதற்கு அடுத்த  நாள் துவாதசியன்று அதிதிகளுக்கு உணவளித்து,  பின் பாரணை செய்வது (உணவு உண்பது) என்ற நியதி மாறாமல் பின்பற்றி வந்தான். 

ஒரு முறை அம்பரீஷன், யமுனைக் கரையில் உள்ள மதுவனத்தில், நற்குணங்கள் கொண்ட தன் மனைவியுடன், தியானம் செய்ய வந்தான். அறுபது கோடிப் பசுக்களை வேதமறிந்தவர்களுக்குத் தானம் செய்தான். ஒரு வருட காலம் துவாதசி விரதத்தை அனுஷ்டித்துத் தங்களைப் பூஜித்து வந்தான். விரதம் முடிந்து பாரணை செய்ய வேண்டிய நாளில் துர்வாசர் அம்பரீஷனின் மதுவனத்திற்கு வந்தார். அம்பரீஷன் அவரிடம் போஜனம் செய்ய வேண்டினான். விரைவில் கோபம் கொள்ளும் அவரும் சம்மதித்து, மெதுவே யமுனை நதிக்கு நீராடச் சென்றார். வெகு நேரமாகியும் நீராடச் சென்ற  முனிவர் வரவில்லை. துவாதசி திதி முடிவடையும் நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது. அதற்குள் பாரணையை முடிக்கவேண்டும் இல்லையேல் ஏகாதசி விரதம் தவறிவிடும். அதிதி போஜனமும் ஆகவில்லை. செய்வதறியாமல்  திகைத்த அவன் கற்றறிந்தவர்களிடம் ஆலோசனை கேட்டான்.   அவர்களும், "துர்வாசர் வராமல் பாரணை செய்வது தவறு. துவாதசி திதி முடிய சிறிது நேரமே உள்ளது.  அந்த நேரத்திற்குள் சிறிது துளசி தீர்த்தம் உட்கொண்டால் பாரணை செய்த மாதிரியாகிவிடும். முனிவர் வந்தபின் அவருக்கு போஜனம் செய்வித்துப் பிறகு உண்ணலாம்" என்று கூறினர். அம்பரீஷன், வேறு வழியின்றி துளசி தீர்த்தம் பருகி விரதத்தை முடித்துக் கொண்டான்.  முனிவருக்காகக் காத்திருந்தான்.  

அரசனான அம்பரீஷன், பாரணை செய்யவேண்டிய திதி முடியப்போகிறதே என்ற கவலையில் தீர்த்தத்தைக் குடித்துப் பாரணையை முடித்தான். ஞான திருஷ்டியால் அதை அறிந்த முனிவர், கோபத்துடன் கடுஞ்சொற்களால் அம்பரீஷனைத் தூஷித்து, " என்னை நீ அவமதித்து விட்டாய்" என்று கூறி, தன்னுடைய ஜடையைப் பிய்த்து எறிந்து, அதிலிருந்து ‘க்ருத்யை’ என்ற துர்தேவதையை உண்டாக்கி, "அம்பரீஷனை அழித்துவிட்டு வா" என்று ஏவினார். கையில் கத்தியுடன், உலகங்களை எரிக்கும் அந்த துர்தேவதையை நேரில் கண்ட அம்பரீஷன் சிறிதும் நகராமல் இருந்தான். சுதர்சன சக்கரமானது, அவனுக்கு நேர்ந்த தீங்கைப் பார்த்து அந்த க்ருத்யையை அழித்து, துர்வாசரைப் பின்தொடர்ந்து சென்றது. பயத்தினால் முனிவர் எல்லா உலகங்களுக்கும் ஓடினார். எல்லா இடத்திற்கும் சக்ராயுதம் பின்தொடர்ந்ததைக் கண்டு பிரமனை சரணடைந்தார். காலச்சக்கரத்தை யாரால் எதிர்க்க முடியும் என்று பிரம்மதேவர் முனிவரை அனுப்பிவிட்டார். பிறகு, பரமசிவனிடம் சென்றார். அவரும் தங்களை சரணடைய உபதேசம் செய்தார். கடைசியாக முனிவர் வைகுண்டத்தை அடைந்து, எங்கும் நிறைந்த மகாவிஷ்ணுவை சரணடைந்தார். விஷ்ணுவோ,"முனிவரே! நான் பக்தர்களுக்கு அடியவன். அறிவும், தவமும் அகங்காரமில்லாமல் இருக்க வேண்டும். நீங்கள் அம்பரீஷனையே சரணடையுங்கள்" என்று சொல்லிவிட்டார். முனிவரும் அம்பரீஷனின் கால்களைப் பற்றினார். அவன் விலகி, சக்ராயுதத்தைத் துதிக்க, அது திரும்பிச் சென்றது. இதற்குள் ஒரு வருடம் ஆகிவிட்டது. அம்பரீஷனும். ஒரு வருடம் துர்வாசரை எதிர்பார்த்து, உண்ணாமல் விரதமிருந்து, அவர் வந்ததும் அவருக்கு உணவளித்து, வழியனுப்பி, பிறகு பாரணை செய்தான். துர்வாசரும், அம்பரீஷனின் பக்தியையும், தீங்கு செய்தவர்களுக்கும் நன்மை செய்யும் குணத்தையும் மெச்சி அவனை ஆசீர்வதித்தார்.

அம்பரீஷன், முன்பு இருந்ததைவிட அதிகமாய் மகாவிஷ்ணுவிடம் பக்தி கொண்டு முக்தி அடைந்தான். 

நாமும் ஏகாதசியன்று விரதமிருந்து மகாவிஷ்ணுவைத் தியானிப்போம். துவாதசி பாரணை தளிகை பற்றி அறிய இங்கே சொடுக்கவும். http://shanthisthaligai.blogspot.in/2012/01/dwadasi-paaranai.html

Thursday, December 18, 2014

கண்ணன் கதைகள் (6) - சிவப்புக் கௌபீனம்

கண்ணன் கதைகள் (6) - சிவப்புக் கௌபீனம்,கண்ணன் கதைகள், குருவாயூரப்பன் கதைகள்,

முந்தைய பதிவான “கண்ணன் கதைகள் (5)” -ல் சிவப்புக் கௌபீனம் பற்றிப் படித்திருப்பீர்கள். அதென்ன சிவப்புக் கௌபீனம்? குருவாயூரப்பனின் லீலைகளில் அதுவும் ஒன்றாகும். 

முன்னொரு சமயம் ஒரு வயதான மூதாட்டி இருந்தாள். அவள் குருவாயூர்க் கண்ணனின் தீவிர பக்தை. அவள், ஒவ்வொரு நாளும் காலையிலும் மாலையிலும் குருவாயூரப்பனின் ஸன்னிதிக்குச் சென்று தரிசனம் செய்து, மனமுருக வழிபடுவது வழக்கம். ஒரு நாள் “சீவேலி” தரிசனம் முடிந்து வீட்டுக்குச் செல்லும்போது பெருங்காற்றுடன் கனமழை பெய்தது. அந்த நாட்களில் சாலை விளக்குகள் கிடையாது. இருட்டில் வழி தவறிவிட்டது. மிகுந்த கவலையோடு, குருவாயூரப்பனின் நாமங்களைச் சொல்லிக்கொண்டே சென்று கொண்டிருந்தாள். அப்போது, ஒரு சிறிய பையன் அவள் முன் தோன்றி, “ பாட்டி, கவலைப் படாதீர்கள். உங்களை நான் வீட்டில் கொண்டு விடுகிறேன்” என்று சொன்னான். மழையில் இருவரும் தெப்பமாக நனைந்து விட்டனர். பேசிக் கொண்டே பாட்டியின் வீட்டை அடைந்தார்கள்.

வீட்டை அடைந்ததும் அந்த சிறுவனுக்கு நன்றி சொல்லி, “உன் பெயர் என்ன?” என்று கேட்டாள். அதற்கு அவன் ‘கோபாலன்’ என்று சொன்னான். மூதாட்டி, “ நீ செய்திருக்கும் உதவிக்கு உனக்கு ஏதாவது நான் தர வேண்டும், என்ன வேண்டும்? கேள்” என்று சொன்னாள். அவனும், “ மழையில் என் துணி நனைந்துவிட்டது. எனக்கு உம்முடைய புடவையிலிருந்து ஒரு கௌபீனம் தாருங்கள் போதும்” என்று கூறினான். அவள் சுற்றிப் பார்த்த பொழுது ஒரு சிவப்பு
ப் புடவை இருந்தது. அதிலிருந்து ஒரு சிறு பகுதியைக் கிழித்து அவனிடம் கொடுத்தாள். அவனும் பெற்றுக் கொண்டு சென்றான்.

அடுத்த நாள் காலை, நிர்மால்ய தரிசனத்திற்காக ஸன்னிதியின் கதவைத் திறந்தபோது, மூர்த்திக்கு சிவப்பு வர்ணக் கௌபீனம் கட்டியிருப்பதைக் கண்டு அனைவரும் அதிசயித்தனர். முதல் நாள்  நன்கு அலங்காரம் செய்யப்பட்ட கண்ணன் இப்போது எப்படி கௌபீனத்தோடு காட்சி அளிக்கிறான்? என்று ஆச்சர்யமடைந்தனர்.. கண்ணனின் திவ்ய மேனி அனைவரையும் மயக்கும் வண்ணம் இருந்தது.

வழக்கம்போல் தரிசனத்திற்காக வந்திருந்த மூதாட்டியும் மகிழ்ந்து அனைவரிடமும் முந்தைய நாள் நடந்தவற்றைச் சொன்னாள். தன்னுடைய சிறிது கிழிந்த புடவையையும் காண்பித்தாள். அதன் கிழிந்த பகுதி, குருவாயூரப்பனின் கௌபீனமாக இருப்பதைக் கண்ட அனைவரும் வியந்தனர். மூதாட்டி, இந்த தெய்வீக நாடகத்தையும், குருவாயூரப்பன் தனக்கு அனுக்ரஹம் செய்ததையும் எண்ணியெண்ணி ஆனந்தித்தாள். அன்று முதல் ஸ்ரீ குருவாயூரப்பனுக்கு இரவில் சிவப்புக் கௌபீனம் சாற்றுவது வழக்கமாக இருந்து வருகிறது.

Tuesday, December 16, 2014

கண்ணன் கதைகள் (5) - குசேலரின் கதை

கண்ணன் கதைகள் (5) -  குசேலரின் கதை, கண்ணன் கதைகள், குருவாயூரப்பன் கதைகள்,

குசேலோபாக்யானம்

இன்று மார்கழி மாதம் முதல் புதன்கிழமை. மார்கழி மாத முதல் புதன்கிழமை "குசேலர் தினம்" என்று கொண்டாடப்படுகிறது.


ஸாந்தீபனி முனிவரிடம் கண்ணனும், சுதாமா (குசேலர்) என்ற பிராமணரும் ஒன்றாக குருகுலம் பயின்றார்கள். கிருஹஸ்தனான அவர் கண்ணனிடத்தில் மிகுந்த பக்தி பூண்டிருந்ததால், செல்வங்களில் பற்றற்றவராய்ப் புலன்களை அடக்கி, தன்னுடைய நாட்களைக் கழித்தார். அவருடைய மனைவியும் அவரைப் போன்ற குணங்கள் உள்ளவளாய் இருந்தாள். வறுமையில் குழந்தைகளைப் பேண முடியாததால், ஒரு நாள் அவள் தன் கணவரிடம், லக்ஷ்மீபதியான கிருஷ்ணர் உங்கள் நண்பரல்லவா? வாழ்வதற்குப் பொருளைப் பெற ஏன் அவரை அணுகக்கூடாது? என்று கேட்டாள். பசியின் துன்பத்தாலேயே அவள் அவ்வாறு கூறினாள். செல்வம் கர்வத்தை உண்டாக்கி வாழ்க்கையைக் குலைக்கும் என்று அவர் உணர்ந்திருந்தாலும், கண்ணனைப் பார்க்க வேண்டும் என்ற ஆவலால், தனது வஸ்திரத்தின் நுனியில் மூன்று பிடி அவலை முடிந்துகொண்டு, காணிக்கையாய் எடுத்துச் சென்றார்.

கிருஷ்ணர் இருக்கும் துவாரகா நகரத்தை அடைந்தார். கிருஷ்ணனுடைய மாளிகைக்குள் நுழைந்ததும் வைகுண்டத்தில் இருப்பது போன்ற ஆனந்தத்தை அடைந்தார். பகவான் கிருஷ்ண
ர், அவரை வரவேற்று உபசரித்ததும் விளக்கமுடியாத ஆனந்தமடைந்தார். கிருஷ்ணர், அவருடைய கைகளைப் பற்றிக் கொண்டு குருகுலத்தில் நடந்த பழைய சம்பவங்களை நினைவு கூர்ந்தார். குருபத்தினிக்கு விறகு கொண்டு வர காட்டுக்குச் சென்றபோது மழையில் நனைந்ததைப் பற்றிப் பேசினார்..

கொண்டு வந்த அவலைக் கொடுக்க வெட்கப்பட்டுத் தயங்கிய குசேலரிடமிருந்து கட்டாயப்படுத்தி அவலை வாங்கி ஒரு பிடியை உண்டார். இரண்டாவது பிடியை எடுத்ததும், “போதும், போதும்” என்று மகாலக்ஷ்மியான ருக்மிணி கிருஷ்ணருடைய கையைப் பிடித்துத் தடுத்தாள். (இதற்குமேல் உண்டால் கொடுப்பதற்குப் பொருள் ஒன்றும் இல்லை என்று அர்த்தம்). பக்தர்களுக்கு அடியவனான கிருஷ்ணர், குசேலரை மிகவும் உபசரித்தார். குசேலர், மிகவும் மகிழ்ச்சியுடன் அன்று இரவு கிருஷ்ணருடன் தங்கினார். மறுநாள் பொருள் எதுவும் பெறாமல் தன்னுடைய ஊருக்குத் திரும்பினார்.

" பொருள் வேண்டும் என்று கேட்டிருந்தால் கிருஷ்ணன்  கொடுத்திருப்பார். மனைவியிடம் எவ்வாறு சொல்வது?" என்று வழிநெடுக யோசித்துக் கொண்டே சென்றார். அவரது மனம் முழுக்க பகவான் கிருஷ்ணருடைய புன்னகையும், பேச்சுக்களும் நிறைந்திருந்தது. 


அப்போது அவர் பிரகாசம் மிக்க ரத்தினங்களால் விளங்கும் ஒரு மாளிகையை அடைந்தார். க்ஷணநேரம் வழி தவறி வந்து விட்டோமோ என்று திகைத்து, பின்னர் வீட்டினுள் நுழைந்தார். உள்ளே தோழிகள் சூழ, ரத்தினங்களாலும், தங்கத்தினாலும் ஆன ஆபரணங்கள் அணிந்திருக்கும் தன் மனைவியைக் கண்டார். கிருஷ்ணனுடைய கருணை மிக அற்புதமானது, ஆச்சர்யமானது என்று அறிந்தார்.

ரத்னமயமான மாளிகையில் வசித்துக் கொண்டு இருந்தாலும் அவர் கண்ணனிடமே மனதைச் செலுத்தி மிகுந்த பக்தி உடையவராய் இருந்தார். இறுதியில் மோக்ஷத்தையும் அடைந்தார்.

பகவான் கிருஷ்ணரை சந்திக்க குசேலர் அவலை எடுத்துச் சென்றது ஒரு மார்கழி மாத முதல் புதன்கிழமை. அதனால், மார்கழி மாத முதல் புதன்கிழமை "குசேலர் தினம்" என்று கொண்டாடப்படுகிறது. குருவாயூர் கோவிலில் பக்தர்கள் அன்றைய தினம் குருவாயூரப்பனான உன்னிக்கண்ணனுக்கு அவல் ஸமர்ப்பித்து வழிபடுவர். மார்கழி மாத முதல் புதன்கிழமையன்று கண்ணனுக்கு அவல் நிவேதனம் செய்து வழிபட்டால் வீட்டில் செல்வம் செழிக்கும் என்பது நம்பிக்கை. வீடுகளில் அன்றைய தினம் "குசேலோபாக்யானம்" (குசேலரின் கதை) பாராயணம் செய்வார்கள். கையகலத்திற்கு ஒரு சிறிய சிவப்பு வஸ்திரம் (கண்ணனின் கௌபீனம் என்று ஐதீகம்) மடித்து வைத்து , அவல், வெல்லம் வைத்து வழிபடுவார்கள். பிறகு அந்த அவலை சிறு சிறு  கிழியாகக் (சிறிய மூட்டையைப் போல்) கட்டி அனைவருக்கும் விநியோகம் செய்வார்கள்.

இந்த கதையைப்  படித்து, அவலும் வெல்லமும் நைவேத்யம் செய்து கண்ணனை வழிபடலாம். பக்தர்களுடைய விருப்பத்தை குருவாயூரப்பன் நிச்சயம் நிறைவேற்றுவான். அது சரி, அதென்ன  சிவப்பு வஸ்திரம்? அதுவும் கண்ணனின்  கௌபீனமா? அடுத்த  கதைக்குப் பொறுத்திருங்கள். 

கண்ணன் கதைகள் (4) - கண்ணனும் முருகனும் நண்பர்கள்

கண்ணன் கதைகள், குருவாயூரப்பன் கதைகள்,கண்ணன் கதைகள் (4) - கண்ணனும் முருகனும் நண்பர்கள்

கேரளத்தில் இரண்டு நண்பர்கள் ஒன்றாக வசித்து வந்தனர். ஒருவனுக்கு குருவாயூரப்பன் இஷ்ட தெய்வம். மற்றொருவனுக்கு முருகன் இஷ்ட தெய்வம். இருவரும் சேர்ந்து அவர்களது வீட்டில் ஒரு கதளி வாழை மரத்தை நட்டனர். முதல் நண்பன், வாழை மரம் கிழக்குப் பக்கம் குலை தள்ளினால் குருவாயூரப்பனுக்கு ஸமர்ப்பிப்பதாக வேண்டிக் கொண்டான். முருக பக்தனோ மேற்குப் பக்கம் குலை தள்ளினால் முருகனுக்கு ஸமர்ப்பிப்பதாக வேண்டிக்கொண்டான். இருவரும் வாழை மரத்தை நன்கு பாதுகாத்து வந்தனர். வாழை குலை தள்ளும் பருவமும் வந்தது. அது ஆகாயத்தை நோக்கிக் குலை தள்ளியது.

இதனால் நண்பர்களிடையே சண்டை உண்டானது. காய் முற்றி
ப் பழுத்த பிறகும் கூட, குலை எந்தப் பக்கமும் சாயாமல் நின்றது. இருவரும் செய்வதறியாது கலங்கினர். ஒரு நாள் இரவு, முருகன் தனது பக்தனது கனவில் தோன்றி, “ பக்தனே! நீ பழத்தை குருவாயூரப்பனுக்கே ஸமர்ப்பித்துவிடு. அதுவே எனக்கு சந்தோஷத்தைக் கொடுக்கும். நாங்கள் இருவரும் நண்பர்கள்தான். நீயும் உன் நண்பனுடன் பிரியமாகப் பழகு” என்று கூறி மறைந்தார். உடனே விழித்த அவன், சொப்பனத்தைத் தன் நண்பனிடம் சொன்னான். இருவரும் கதளிப்பழத்தை குருவாயூரப்பனுக்கு ஸமர்ப்பித்தனர்.

இன்றும் குருவாயூரில், துலாபாரத்தின் போது எடைக்கு எடை கதளிப்பழத்தை வேண்டுதலாக ஸமர்ப்பிக்கும் வழக்கம் இருக்கிறது.

Monday, December 15, 2014

கண்ணன் கதைகள் (3) - கொம்பு முளைத்த தேங்காய்

கண்ணன் கதைகள் (3) - கொம்பு முளைத்த தேங்காய்,கண்ணன் கதைகள், குருவாயூரப்பன் கதைகள்,

ஒரு கிராமவாசி பல தென்னங்கன்றுகளை நட்டான். தனது தென்னை மரங்களில் இருந்து காய்க்கும் முதல் தேங்காய்களை குருவாயூரப்பனுக்குக் காணிக்கை அளிப்பதாய் வேண்டிக்கொண்டான். மரங்கள் காய்க்கத் தொடங்கிய போது, அவன் மரங்களில் இருந்து முதல் தேங்காய்களைச் சேகரித்து, கோணியில் கட்டிக் கொண்டு குருவாயூர் கோவிலுக்குப் பயணித்தான். 

போகும் வழியில் ஒரு கொள்ளைக்காரன் வழிமறித்து “கோணிப் பையில் உள்ளதைக் கொடுத்துவிடு” என்று மிரட்டினான். கிராமவாசியோ, “இதில் தேங்காய்கள் உள்ளன. அவை குருவாயூரப்பனுக்குச் சொந்தமானவை” என்று கூறி தர மறுத்தான். கொள்ளைக்காரன் அலட்சியமாக, “ குருவாயூரப்பனின் தேங்காய் என்று ஏதாவது இருக்கிறதா? அதற்குக் கொம்புகள் இருக்கிறதா என்ன ? என்று கூறிக் கொண்டே கிராமவாசியின் கைகளில் இருந்து கோணியைப் பற்றி இழுத்தான். தேங்காய்கள் வெளியே சிதறின. அதிசயப்படும்படியாக ஒவ்வொரு தேங்காய்க்கும் கொம்பு முளைத்திருந்தது! திருடன் மனம் திருந்தி, குருவாயூரப்பனிடம் மன்னிப்பு கேட்டு, அந்த கிராமவாசியைப் போக விட்டான். கிராமவாசியும் தான் வேண்டிக்கொண்டபடியே தேங்காய்களைக் கோயிலில் காணிக்கையாகக் கொடுத்தான். இன்று கூட பக்தர்கள், கொம்புகள் உள்ள அந்தத் தேங்காய்களை, குருவாயூர்க் கோயிலின் முன் மண்டபத்தில் கட்டப்பட்டிருப்பதைப் பார்க்கலாம்.

Sunday, December 14, 2014

கண்ணன் கதைகள் (2) - மஞ்சுளாவின் மலர்மாலை

கண்ணன் கதைகள், குருவாயூரப்பன் கதைகள், கண்ணன் கதைகள் (2) - மஞ்சுளாவின் மலர்மாலை

கிழக்கே இருந்து குருவாயூருக்குள் நுழையும் போது முதலில் தென்படுவது அடிப்பகுதியில் பிரம்மாண்டமான கருடனுடன் கூடிய ஒரு பெரிய ஆலமரம். இது “மஞ்சுளால்”, அதாவது மஞ்சுளாவின் ஆலமரம் என்று அழைக்கப்படுகிறது.

வாரியார் வகுப்பைச் சேர்ந்த மஞ்சுளா, மனப்பூர்வமான பக்தியுள்ள பெண். ஒவ்வொரு இரவும், அவள் மலர் மாலைகளைக் கட்டி, குருவாயூர் கோயிலில் கொண்டு கொடுப்பாள். மேல்சாந்தி அம்மாலையை அப்பனுக்கு ஸமர்ப்பிப்பார். ஒரு நாள் அவள் தாமதமாக வந்ததால், கிழக்கு நடையில் உள்ள ஆலமரத்தின் அருகே வரும்போதே கோவில் மூடப்பட்டு விட்டது. கண்களில் நீர் வழிய, மிகுந்த மன வேதனையுடன் அம்மரத்தின் அருகே அவள் நிற்பதைக் கோவிலில் இருந்து திரும்பிக் கொண்டிருந்த பூந்தானம் நம்பூதிரி கண்டார். அவர், அவளுக்கு ஆறுதல் கூறி, “ இறைவன் எல்லா இடத்திலும் உள்ளார். அதனால் நீ மாலையை ஆலமரத்தின் அடியில் உள்ள கல்லில் வைத்து விடு, அவர் அதை ஏற்றுக் கொள்வார்” என்று கூறினார். அவளும் நம்பிக்கையுடன் அந்த மாலையை மரத்தின் அடியில் வைத்துவிட்டு மனநிம்மதியுடன் வீடு சென்றாள்.

அடுத்த நாள் ஒரு அதிசயத்துடன் விடிந்தது. நிர்மால்ய தரிசனத்திற்குப் பிறகு, மேல்சாந்தி விக்ரகத்தின் மீதிருந்த முந்தைய நாள் மாலைகளை அகற்றினார். மிகவும் முயற்சித்தும் ஒரு மாலை மட்டும் அகற்ற முடியாமல் சிக்கிக்கொண்டு இருந்தது. நிர்மால்ய தரிசனத்திற்கு வந்திருந்த அனைவரும் வியந்தனர். அப்போது அங்கிருந்த பூந்தானம் நம்பூதிரிக்கு முதல் நாள் இரவு நடந்த சம்பவம் நினைவுக்கு வந்தது. “அது மஞ்சுளாவின் மாலையென்றால் அதுவும் வரட்டும்” என்று உரக்கக் கூவினார். உடனே அப்பனிடம் சிக்கிக் கொண்டிருந்த மாலை நழுவி, கீழே விழுந்தது. அனைவரும் ‘ஹரே கிருஷ்ணா’ என்று கோஷமிட்டுக் கொண்டே மஞ்சுளாவின் மாலையிலிருந்த பூக்களை எடுத்துக் கொண்டனர். ஆலமரத்தை நோக்கி அதனை வழிபட விரைந்தனர். அது முதல் அந்த மரம் “மஞ்சுளால்/மஞ்சுளா ஆல்” என்று அழைக்கப்படுகிறது.

உற்சவத்தின் முதல் நாள் நடத்தப்படும் ‘ஆனையோட்டம்’ (யானைப் பந்தயம்), கிழக்கு நடையில் உள்ள இந்த ‘மஞ்சுளால்’ என்ற மரத்தில் இருந்துதான் தொடங்குகிறது.

Saturday, December 13, 2014

கண்ணன் கதைகள் (1) - பக்தர்கள் விரும்பும் வடிவத்தில் பகவானைப் பார்க்க முடியும்

கண்ணன் கதைகள், குருவாயூரப்பன் கதைகள், கண்ணன் கதைகள் (1) -  பக்தர்கள் விரும்பும் வடிவத்தில் பகவானைப் பார்க்க முடியும்

முன்னொரு சமயம் வில்வமங்கலம் ஸ்வாமிகளிடம் வாரியர் என்ற பக்தன் வேலை செய்து வந்தான். அவனுக்கு முறைப்படி பூஜை செய்யவோ, தியானம் செய்யவோ தெரியாது. அவன் ஒரு நாள் ஸ்வாமிகளிடம், “நான் குருவாயூரப்பனை எவ்வாறு தியானம் செய்ய வேண்டும்? அருள் கூர்ந்து எனக்கு சொல்லுங்கள்” என்று வேண்டினான். அவரோ அலட்சியமாக, “ஒரு பெரிய கொம்புள்ள எருமை போல் நினைத்து பூஜிக்க வேண்டும்” என்று சொன்னார். அவனும் அதை உண்மையென நம்பி அவ்வாறே பூஜித்து வந்தான்.

ஒரு நாள் ஸ்வாமிகளுடன் அவன் கோயிலுக்கு சென்றிருந்தான். அப்போது “ஸ்ரீவேலி” பூஜைக்காக உற்சவ விக்ரஹத்தை நம்பூதிரி எடுத்துக் கொண்டு வெளியில் வர முயற்சித்தார். வாசற்படியைத் தாண்ட முடியவில்லை. தாண்டும்போது ஏதோ இடிக்கும் சத்தம் மட்டும் கேட்கிறது. எது இடிக்கிறது என்று தெரியவில்லை, தாண்டவும் முடியவில்லை. ஸேவிக்க வந்த அனைவரும் கவலையுற்றனர். அங்கு இருந்த ஸ்வாமிகளிடம் அது பற்றிக் கேட்டனர். அவருக்கும் ஒன்றும் புரியவில்லை. அப்பொழுது, வேலையாளான பக்தன் நம்பூதிரியிடம், “நிதானமாக எடுத்து வாருங்கள், கொம்பு இடிக்கிறது, சற்று சாய்த்து எடுத்து வாருங்கள்” என்று சொன்னான். அதன்படி செய்ததும் விக்ரஹத்தை எடுத்து வர முடிந்தது. வில்வமங்கலம் ஸ்வாமிகள், “என்ன பிதற்றுகிறாய்”? என்று அவனைக் கடிந்து கொண்டார். அவனோ, “ஸ்வாமி, எருமையின் கொம்பு இடித்ததால் சொன்னேன் என்று பணிவுடன் கூறினான். உடனே வில்வமங்கலத்திற்குத் தான் முன்பு சொன்னது நினைவுக்கு வந்தது. கண்களை மூடித் தியானித்தபோது அவரது மனக்கண்ணில், சங்கு, சக்கரம், கதை, பத்மத்துடன் ஒரு தெய்வீக எருமை தெரிந்தது !!!! 

உடனே, அவர் அந்த பக்தனிடம், என்னை மன்னிக்க வேண்டும் என்று வேண்டினார். அவனும், நான் எவ்வாறு பூஜிக்க வேண்டும் என்று  எனக்குச் சொல்லித் தாருங்கள் என்று கூற, அவர் சந்தோஷத்துடன், “ஸ்ரீ குருவாயூரப்பனை சூர்யனை விடப் பிரகாசமான கிரீடம், மேல் நோக்கியுள்ள திலகத்தால் அழகிய கருணை பொங்கும் கண்கள், புன்சிரிப்புடன் கூடிய செவ்வாய், மீனைப் போன்ற நாசி, கன்னங்களில் ஒளி வீசும் மகர குண்டலங்கள், மார்பை அலங்கரிக்கும் கௌஸ்துப மணி, வனமாலை, முத்துமாலை, ஸ்ரீவத்ஸம், நான்கு கரங்களில் தோள்வளைகள், கங்கணம், சிறந்த ரத்னங்களால் இழைத்த மோதிரம், மேலும், கரங்களில் சங்கம், சக்ரம், கதை, தாமரை, இடுப்பில் பொன் அரைஞாண், பீதாம்பரம், தாமரை மலரை ஒத்த திருவடி கொண்ட அழகிய திருமேனியுடன் தியானம் செய்து பூஜை செய்ய வேண்டும் என்று கூறினார். அந்த பக்தனும் அவ்வாறே தியானம் செய்து பூஜைகளை அனுஷ்டித்து நற்கதி அடைந்தான். இதிலிருந்து, “ பக்தர்கள் விரும்பும் வடிவத்தில் பகவானைப் பார்க்க முடியும் என்பதையும், பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் மனிதனின் தர்க்கத்திற்கும், கற்பனைக்கும் அப்பாற்பட்டவர்” என்பதையும் நாம் அறியலாம்.

Sunday, June 8, 2014

ஸ்ரீ நாராயணீயம் - தசகம் 100

ஸ்ரீ நாராயணீயம் - தசகம் 100, ஸ்ரீ நாராயணீயம் 100வது தசகம், ஸ்ரீமந் நாராயணீயம், ஸ்ரீ நாராயணீயம், ஸ்ரீமத் நாராயணீயம், நாராயணீயம், ஸ்ரீமன் நாராயணீயம், Narayaneeyam, Sree Narayaneeyam, Sriman narayaneeyam, Srimad Narayaneeyam

த³ஶகம் -100
கேசாதிபாத வர்ணனை

பட்டத்ரி இந்த அத்தியாயத்தை எழுதியபோது அவர் கண் முன்னால் குருவாயூரப்பனைப் பார்த்தபடி விவரிக்கிறார். ஸ்ரீ நாராயணீயம் "நீண்ட ஆயுள், ஆரோக்கியம், மகிழ்ச்சி" ஆகியவற்றை அளிக்கிறது. 


अग्रे पश्यामि तेजो निबिडतरकलायावलीलोभनीयं
पीयूषाप्लावितोऽहं तदनु तदुदरे दिव्यकैशोरवेषम् ।
तारुण्यारम्भरम्यं परमसुखरसास्वादरोमाञ्चिताङ्गै-
रावीतं नारदाद्यैर्विलसदुपनिषत्सुन्दरीमण्डलैश्च ॥१॥

அக்₃ரே பஶ்யாமி தேஜோ நிபி₃ட₃தரகலாயாவலீலோப₄நீயம்
பீயூஷாப்லாவிதோ(அ)ஹம் தத₃நு தது₃த₃ரே தி₃வ்யகைஶோரவேஷம் |
தாருண்யாரம்ப₄ரம்யம் பரமஸுக₂ரஸாஸ்வாத₃ரோமாஞ்சிதாங்கை₃-
ராவீதம் நாரதா₃த்₃யைர்விலஸது₃பநிஷத்ஸுந்த₃ரீமண்ட₃லைஶ்ச || 1||

1. காயாம்பூக் கொத்துபோல் அழகிய நீலநிற ஒளியை நான் எதிரில் காண்கின்றேன். அதனால் அம்ருத மழையால் நனைந்தவனாய் உணர்கின்றேன். அந்த ஒளியின் நடுவே அழகிய தெய்வீக பாலனின் உருவில், வாலிபத்தினால் மிக்க வசீகரமாய் இருக்கின்ற ஒரு வடிவத்தைப் பார்க்கின்றேன். பேரின்பப் பரவசத்தால் மெய்சிலிர்த்து நிற்கும் நாரதர் முதலியவர்களாலும், அழகிய பெண்களாக உருவம் கொண்டு நிற்கும் உபநிஷத்துக்களாலும் சூழப்பட்டு இருக்கும் தங்களை நான் நேரில் காண்கின்றேன்.

नीलाभं कुञ्चिताग्रं घनममलतरं संयतं चारुभङ्ग्या
रत्नोत्तंसाभिरामं वलयितमुदयच्चन्द्रकै: पिञ्छजालै: ।
मन्दारस्रङ्निवीतं तव पृथुकबरीभारमालोकयेऽहं
स्निग्धश्वेतोर्ध्वपुण्ड्रामपि च सुललितां फालबालेन्दुवीथीम् ॥२||

நீலாப₄ம் குஞ்சிதாக்₃ரம் க₄நமமலதரம் ஸம்யதம் சாருப₄ங்க்₃யா
ரத்நோத்தம்ஸாபி₄ராமம் வலயிதமுத₃யச்சந்த்₃ரகை: பிஞ்ச₂ஜாலை: |
மந்தா₃ரஸ்ரங்நிவீதம் தவ ப்ருது₂கப₃ரீபா₄ரமாலோகயே(அ)ஹம்
ஸ்நிக்₃த₄ஶ்வேதோர்த்₄வபுண்ட்₃ராமபி ச ஸுலலிதாம் பா₂லபா₃லேந்து₃வீதீ₂ம் || 2 ||

2. உமது தலைமுடி கருத்த நிறத்துடன், சுருண்டு, நெருக்கமாகவும், தூய்மையாகவும் விளங்குகின்றது. அழகான முறையில் கட்டப்பட்டிருக்கும் கொண்டையுடன் விளங்குகின்றது. ரத்தினங்களாலும், கண்கள் கொண்ட மயில் தோகைகளாலும் அலங்கரிக்கப்பட்டு, மந்தார புஷ்ப மாலை சுற்றப்பட்டிருக்கும் உமது கேசங்களைக் காண்கின்றேன். வெண்மையான, மேல்நோக்கி இடப்பட்ட அழகிய திலகத்தோடு கூடிய, பிறை நிலாவினைப் போன்ற, மனதிற்கு ரம்மியமான தங்கள் நெற்றியை நான் காண்கின்றேன்.

हृद्यं पूर्णानुकम्पार्णवमृदुलहरीचञ्चलभ्रूविलासै-
रानीलस्निग्धपक्ष्मावलिपरिलसितं नेत्रयुग्मं विभो ते ।
सान्द्रच्छायं विशालारुणकमलदलाकारमामुग्धतारं
कारुण्यालोकलीलाशिशिरितभुवनं क्षिप्यतां मय्यनाथे ॥३॥

ஹ்ருத்₃யம் பூர்ணாநுகம்பார்ணவம்ருது₃லஹரீசஞ்சலப்₄ரூவிலாஸை-
ராநீலஸ்நிக்₃த₄பக்ஷ்மாவலிபரிலஸிதம் நேத்ரயுக்₃மம் விபோ₄ தே |
ஸாந்த்₃ரச்சா₂யம் விஶாலாருணகமலத₃லாகாரமாமுக்₃த₄தாரம்
காருண்யாலோகலீலாஶிஶிரிதபு₄வநம் க்ஷிப்யதாம் மய்யநாதே₂ || 3||

3. உமது கண்கள், கடலின் அலைகளைப் போல் அசைகின்ற புருவங்களால் மனதைக் கவர்வதாய் இருக்கின்றது. இமை மயிர்கள் கருத்து அழகாய் விளங்குகின்றது. நீண்ட சிவந்த தாமரை மலரின் இதழ் போன்ற கருவிழிகளை உடைய தங்கள் பிரகாசிக்கும் இரு கண்கள், தன் கருணை நிரம்பிய பார்வையால் அகில உலகங்களையும் குளிரச் செய்கின்றது. அத்தகைய தங்கள் பார்வை ஆதரவற்ற என்மேல் விழ வேண்டும்.

उत्तुङ्गोल्लासिनासं हरिमणिमुकुरप्रोल्लसद्गण्डपाली-
व्यालोलत्कर्णपाशाञ्चितमकरमणीकुण्डलद्वन्द्वदीप्रम् ।
उन्मीलद्दन्तपङ्क्तिस्फुरदरुणतरच्छायबिम्बाधरान्त:-
प्रीतिप्रस्यन्दिमन्दस्मितमधुरतरं वक्त्रमुद्भासतां मे ॥४॥

உத்துங்கோ₃ல்லாஸிநாஸம் ஹரிமணிமுகுரப்ரோல்லஸத்₃க₃ண்ட₃பாலீ-
வ்யாலோலத்கர்ணபாஶாஞ்சிதமகரமணீகுண்ட₃லத்₃வந்த்₃வதீ₃ப்ரம் |
உந்மீலத்₃த₃ந்தபங்க்திஸ்பு₂ரத₃ருணதரச்சா₂யபி₃ம்பா₃த₄ராந்த:-
ப்ரீதிப்ரஸ்யந்தி₃மந்த₃ஸ்மிதமது₄ரதரம் வக்த்ரமுத்₃பா₄ஸதாம் மே || 4||

4. தங்கள் நாசி எடுப்பாக விளங்குகின்றது. தங்கள் காதுகளை ரத்னமயமான இரு மகர குண்டலங்கள் அலங்கரிக்கின்றது. அவை அசைந்து கன்னங்களில் பிரதிபலிப்பதால், கன்னங்கள் பச்சை மணியால் செய்யப்பட்ட கண்ணாடி போல் விளங்குகின்றது. சிவப்பான கோவைப்பழம் போல் இரு உதடுகள் பிரகாசிக்கின்றது. புன்முறுவல் பூத்த உதடுகளின் இடையே தெரியும் அழகிய வரிசையான பற்கள் மனதைக் கவர்கின்றது. அத்தகைய இனிமையான தங்கள் திருமுகம் என் உள்ளத்தில் தெளிவாகத் தோன்ற வேண்டும்.

बाहुद्वन्द्वेन रत्नोज्ज्वलवलयभृता शोणपाणिप्रवाले-
नोपात्तां वेणुनाली प्रसृतनखमयूखाङ्गुलीसङ्गशाराम् ।
कृत्वा वक्त्रारविन्दे सुमधुरविकसद्रागमुद्भाव्यमानै:
शब्दब्रह्मामृतैस्त्वं शिशिरितभुवनै: सिञ्च मे कर्णवीथीम् ॥५॥

பா₃ஹுத்₃வந்த்₃வேந ரத்நோஜ்ஜ்வலவலயப்₄ருதா ஶோணபாணிப்ரவாலே-
நோபாத்தாம் வேணுநாலீ ப்ரஸ்ருதநக₂மயூகா₂ங்கு₃லீஸங்க₃ஶாராம் |
க்ருத்வா வக்த்ராரவிந்தே₃ ஸுமது₄ரவிகஸத்₃ராக₃முத்₃பா₄வ்யமாநை:
ஶப்₃த₃ப்₃ரஹ்மாம்ருதைஸ்த்வம் ஶிஶிரிதபு₄வநை: ஸிஞ்ச மே கர்ணவீதீ₂ம் || 5||

5. உமது இரு திருக்கரங்களை ரத்தினங்கள் இழைத்த வளையல்கள் அலங்கரிக்கின்றன. உள்ளங்கைகள் சிவந்த தளிர் போன்று காட்சி அளிக்கின்றன. ஒளி வீசும் நகங்களை உடைய விரல்களால் புல்லாங்குழலை எடுத்து, தாமரை போன்ற தங்கள் முகத்தில் வைத்து, இனிமையான நாதத்தால் உலகம் முழுவதையும் குளிரச் செய்கின்றீர்கள். அந்த நாதமாகின்ற அம்ருதத்தால் என் காதுகளை நனைக்க வேண்டும்.

उत्सर्पत्कौस्तुभश्रीततिभिररुणितं कोमलं कण्ठदेशं
वक्ष: श्रीवत्सरम्यं तरलतरसमुद्दीप्रहारप्रतानम् ।
नानावर्णप्रसूनावलिकिसलयिनीं वन्यमालां विलोल-
ल्लोलम्बां लम्बमानामुरसि तव तथा भावये रत्नमालाम् ॥६॥

உத்ஸர்பத்கௌஸ்துப₄ஶ்ரீததிபி₄ரருணிதம் கோமலம் கண்ட₂தே₃ஶம்
வக்ஷ: ஶ்ரீவத்ஸரம்யம் தரலதரஸமுத்₃தீ₃ப்ரஹாரப்ரதாநம் |
நாநாவர்ணப்ரஸூநாவலிகிஸலயிநீம் வந்யமாலாம் விலோல-
ல்லோலம்பா₃ம் லம்ப₃மாநாமுரஸி தவ ததா₂ பா₄வயே ரத்நமாலாம் || 6||

6. மேல் நோக்கி வீசும் கௌஸ்துபம் என்ற மணியின் ஒளியால் உமது கழுத்து சிவந்த நிறத்துடன் அழகாக விளங்குகின்றது. மார்பில், அசையும் முத்து மாலைகளும், ஸ்ரீவத்ஸம் என்னும் மருவும் அழகாகப் பிரகாசிக்கின்றன. வண்டுகள் ரீங்காரம் செய்யும் பல்வகையான பூக்களும், தளிர்களும் கொண்டு கட்டப்பட்ட வனமாலையும், ரத்தின மாலைகளும் அலங்கரிக்கின்றன.

अङ्गे पञ्चाङ्गरागैरतिशयविकसत्सौरभाकृष्टलोकं
लीनानेकत्रिलोकीविततिमपि कृशां बिभ्रतं मध्यवल्लीम् ।
शक्राश्मन्यस्ततप्तोज्ज्वलकनकनिभं पीतचेलं दधानं
ध्यायामो दीप्तरश्मिस्फुटमणिरशनाकिङ्किणीमण्डितं त्वां ॥७॥

அங்கே₃ பஞ்சாங்க₃ராகை₃ரதிஶயவிகஸத்ஸௌரபா₄க்ருஷ்டலோகம்
லீநாநேகத்ரிலோகீவிததிமபி க்ருஶாம் பி₃ப்₄ரதம் மத்₄யவல்லீம் |
ஶக்ராஶ்மந்யஸ்ததப்தோஜ்ஜ்வலகநகநிப₄ம் பீதசேலம் த₃தா₄நம்
த்₄யாயாமோ தீ₃ப்தரஶ்மிஸ்பு₂டமணிரஶநாகிங்கிணீமண்டி₃தம் த்வாம் || 7||

7. உமது திருமேனியில் பூசப்பட்டுள்ள ஐந்து விதமான சந்தனப் பூச்சுக்களால் மக்களை ஈர்க்கின்றீர்கள். அண்டங்கள் யாவற்றையும் உள்ளடக்கி இருந்தாலும், தங்கள் இடை கொடிபோல் மெல்லியதாக இருக்கின்றது. இந்திர நீலக்கல்லைப் போன்ற தங்கள் மேனியில், உருக்கிய தங்கம் போன்ற பீதாம்பரம் ஒளிர்கின்றது. ஒளி வீசும் ரத்தினங்கள் பதித்த ஒட்டியாணத்தாலும், சிறிய மணிகளாலான அரைஞாணாலும் அலங்கரிக்கப்பட்ட தங்களை நாங்கள் தியானம் செய்கின்றோம்.

ऊरू चारू तवोरू घनमसृणरुचौ चित्तचोरौ रमाया:
विश्वक्षोभं विशङ्क्य ध्रुवमनिशमुभौ पीतचेलावृताङ्गौ ।
आनम्राणां पुरस्तान्न्यसनधृतसमस्तार्थपालीसमुद्ग-
च्छायं जानुद्वयं च क्रमपृथुलमनोज्ञे च जङ्घे निषेवे ॥८॥

ஊரூ சாரூ தவோரூ க₄நமஸ்ருணருசௌ சித்தசோரௌ ரமாயா:
விஶ்வக்ஷோப₄ம் விஶங்க்ய த்₄ருவமநிஶமுபௌ₄ பீதசேலாவ்ருதாங்கௌ₃ |
ஆநம்ராணாம் புரஸ்தாந்ந்யஸநத்₄ருதஸமஸ்தார்த₂பாலீஸமுத்₃க₃-
ச்சா₂யம் ஜாநுத்₃வயம் ச க்ரமப்ருது₂லமநோஜ்ஞே ச ஜங்கே₄ நிஷேவே || 8||

8. உமது தொடைகள் பருத்து, திடமாக, அலைமகளின் மனம் கவர்பவையாக, மினுமினுப்பாய் இருக்கின்றன. அதன் அழகினால் உலகம் கலங்கி விடுமோவென்று பீதாம்பரத்தால் மறைக்கப்பட்டவையாய் இருக்கின்றன. முழங்கால்கள், உமது பக்தர்களுக்குத் தேவையான பொருட்களை வைக்கும் சம்புடம் போன்று இருக்கின்றன. அதற்கேற்றாற்போல் பருத்த சதைப் பற்றுடன் கணைக்கால்கள் அழகாய் விளங்குகின்றன. அவற்றை நான் தியானிக்கிறேன்.

मञ्जीरं मञ्जुनादैरिव पदभजनं श्रेय इत्यालपन्तं
पादाग्रं भ्रान्तिमज्जत्प्रणतजनमनोमन्दरोद्धारकूर्मम् ।
उत्तुङ्गाताम्रराजन्नखरहिमकरज्योत्स्नया चाऽश्रितानां
सन्तापध्वान्तहन्त्रीं ततिमनुकलये मङ्गलामङ्गुलीनाम् ॥९॥

மஞ்ஜீரம் மஞ்ஜுநாதை₃ரிவ பத₃ப₄ஜநம் ஶ்ரேய இத்யாலபந்தம்
பாதா₃க்₃ரம் ப்₄ராந்திமஜ்ஜத்ப்ரணதஜநமநோமந்த₃ரோத்₃தா₄ரகூர்மம் |
உத்துங்கா₃தாம்ரராஜந்நக₂ரஹி மகரஜ்யோத்ஸ்நயா சா(அ)ஶ்ரிதாநாம்
ஸந்தாபத்₄வாந்தஹந்த்ரீம் ததிமநுகலயே மங்க₃லாமங்கு₃லீநாம் || 9||

9. உமது திருவடிகளை வணங்குவதே சிறந்த நன்மை பயக்கும் வழி என்று தன் சப்தங்களால் கூறுவது போன்ற கொலுசை நான் தியானிக்கிறேன். ஆசையென்னும் கடலில் மூழ்கிய பக்தர்களின் மனமாகிய மந்தர மலையைத் தூக்கிக் கரையேற்றும் ஆமையைப் போல உமது பாதத்தின் மேல்பாகம் இருக்கின்றது. சற்றே உயர்ந்து சிவந்திருக்கும் நகங்களுடன் கூடிய உமது கால்விரல்கள், நிலவொளி இருட்டைப் போக்குவது போல, உமது பக்தர்களின் துன்பங்களைப் போக்குகின்றன. அவற்றை நான் தியானிக்கிறேன்.

योगीन्द्राणां त्वदङ्गेष्वधिकसुमधुरं मुक्तिभाजां निवासो
भक्तानां कामवर्षद्युतरुकिसलयं नाथ ते पादमूलम् ।
नित्यं चित्तस्थितं मे पवनपुरपते कृष्ण कारुण्यसिन्धो
हृत्वा निश्शेषतापान् प्रदिशतु परमानन्दसन्दोहलक्ष्मीम् ॥१०॥

யோகீ₃ந்த்₃ராணாம் த்வத₃ங்கே₃ஷ்வதி₄கஸுமது₄ரம் முக்திபா₄ஜாம் நிவாஸோ
ப₄க்தாநாம் காமவர்ஷத்₃யுதருகிஸலயம் நாத₂ தே பாத₃மூலம் |
நித்யம் சித்தஸ்தி₂தம் மே பவநபுரபதே க்ருஷ்ண காருண்யஸிந்தோ₄
ஹ்ருத்வா நிஶ்ஶேஷதாபாந் ப்ரதி₃ஶது பரமாநந்த₃ஸந்தோ₃ஹலக்ஷ்மீம் || 10||

10. நாதா! குருவாயூரப்பா! உமது அங்கங்களுள், உம்முடைய பாதங்களே யோகிகளுக்கு மனோகரமானதாய் விளங்குகின்றது. மோக்ஷத்தை அடைந்தவர்களுக்கு இருப்பிடமாய் உள்ளது. பக்தர்களுக்கு வேண்டிய அனைத்தையும் அளிக்கும் கற்பக விருட்சத்தின் தளிர் போன்று அவை இருக்கின்றன. அவை எப்போதும் என் உள்ளத்தில் இருக்க வேண்டும். கருணைக் கடலே! கிருஷ்ணா! அந்தப் பாதங்களானது என் எல்லாத் தாபங்களையும் போக்கி, பேரின்ப வெள்ளமாகிற மோக்ஷத்தை அளிக்க வேண்டும்.

अज्ञात्वा ते महत्वं यदिह निगदितं विश्वनाथ क्षमेथा:
स्तोत्रं चैतत्सहस्रोत्तरमधिकतरं त्वत्प्रसादाय भूयात् ।
द्वेधा नारायणीयं श्रुतिषु च जनुषा स्तुत्यतावर्णनेन
स्फीतं लीलावतारैरिदमिह कुरुतामायुरारोग्यसौख्यम् ॥११॥

அஜ்ஞாத்வா தே மஹத்வம் யதி₃ஹ நிக₃தி₃தம் விஶ்வநாத₂ க்ஷமேதா₂:
ஸ்தோத்ரம் சைதத்ஸஹஸ்ரோத்தரமதி₄கதரம் த்வத்ப்ரஸாதா₃ய பூ₄யாத் |
த்₃வேதா₄ நாராயணீயம் ஶ்ருதிஷு ச ஜநுஷா ஸ்துத்யதாவர்ணநேந
ஸ்பீ₂தம் லீலாவதாரைரித₃மிஹ குருதாமாயுராரோக்₃யஸௌக்₂யம் || 11||

11. உலகிற்கு நாயகனே! உமது மகிமையை அறியாமல் இதில் கூறியவற்றைப் பொறுத்தருள வேண்டும். ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்த ஸ்தோத்திரங்கள் உமது அருளை அளிப்பவையாக இருக்க வேண்டும். ஸ்ரீமன் நாராயணனைப் போற்றிப் பாடியிருப்பதாலும், நாராயணன் என்பவரால் எழுதப்பட்டதாலும், இந்த ஸ்தோத்திரத்திற்கு நாராயணீயம் என்று பெயர். வேதங்களில் கூறப்பட்ட உமது அவதாரங்களையும், லீலைகளையும் வர்ணிக்கின்றது. இந்த ஸ்தோத்திரத்தைப் படிப்பவர்களுக்கும், கேட்பவர்களுக்கும், நீண்ட ஆயுளையும், ஆரோக்கியத்தையும், மகிழ்ச்சியையும் அளிக்க வேண்டும் என்று நம்பூதிரி வேண்ட ஸ்ரீ குருவாயூரப்பனும் தலையை ஆட்டி அங்கீகரித்தார்.


சுபமஸ்து.
ஸ்ரீ குருவாயூரப்பா ரணம்.
ஓம் நமோ நாராயணாய.

Saturday, June 7, 2014

ஸ்ரீ நாராயணீயம் - தசகம் 99

ஸ்ரீ நாராயணீயம் - தசகம் 99, ஸ்ரீ நாராயணீயம் 99வது தசகம், ஸ்ரீமந் நாராயணீயம், ஸ்ரீ நாராயணீயம், ஸ்ரீமத் நாராயணீயம், நாராயணீயம், ஸ்ரீமன் நாராயணீயம், Narayaneeyam, Sree Narayaneeyam, Sriman narayaneeyam, Srimad Narayaneeyam

த³ஶகம் -99
வேத ஸ்துதி 

विष्णोर्वीर्याणि को वा कथयतु धरणे: कश्च रेणून्मिमीते
यस्यैवाङ्घ्रित्रयेण त्रिजगदभिमितं मोदते पूर्णसम्पत्
योसौ विश्वानि धत्ते प्रियमिह परमं धाम तस्याभियायां
त्वद्भक्ता यत्र माद्यन्त्यमृतरसमरन्दस्य यत्र प्रवाह: ॥१॥

விஷ்ணோர்வீர்யாணி கோ வா கத₂யது த₄ரணே: கஶ்ச ரேணூந்மிமீதே
யஸ்யைவாங்க்₄ரித்ரயேண த்ரிஜக₃த₃பி₄மிதம் மோத₃தே பூர்ணஸம்பத்
யோஸௌ விஶ்வாநி த₄த்தே ப்ரியமிஹ பரமம் தா₄ம தஸ்யாபி₄யாயாம்
த்வத்₃ப₄க்தா யத்ர மாத்₃யந்த்யம்ருதரஸமரந்த₃ஸ்ய யத்ர ப்ரவாஹ: || 1||

1. மூவுலகங்களையும் மூன்றடிகளால் அளந்தீர். அதனால் அவை ஐஸ்வர்யங்கள் நிறைந்து விளங்குகின்றது. உலகங்களைத் தாங்கும் விஷ்ணுவான உமது பெருமையை யாரால் விவரிக்க முடியும்? பூமியில் உள்ள மணல் துகள்களை எண்ண முடியுமா? அம்ருத வெள்ளம் ஓடும் உமது இருப்பிடமான வைகுண்டத்தில், உம்முடைய பக்தர்கள் மிகுந்த இன்பத்துடன் வாழ்கிறார்கள். அந்த வைகுண்டத்தை நான் இந்த ஜன்மத்திலேயே அடைய வேண்டும்.

आद्यायाशेषकर्त्रे प्रतिनिमिषनवीनाय भर्त्रे विभूते-
र्भक्तात्मा विष्णवे य: प्रदिशति हविरादीनि यज्ञार्चनादौ ।
कृष्णाद्यं जन्म यो वा महदिह महतो वर्णयेत्सोऽयमेव
प्रीत: पूर्णो यशोभिस्त्वरितमभिसरेत् प्राप्यमन्ते पदं ते ॥२॥

ஆத்₃யாயாஶேஷகர்த்ரே ப்ரதிநிமிஷநவீநாய ப₄ர்த்ரே விபூ₄தே-
ர்ப₄க்தாத்மா விஷ்ணவே ய: ப்ரதி₃ஶதி ஹவிராதீ₃நி யஜ்ஞார்சநாதௌ₃ |
க்ருஷ்ணாத்₃யம் ஜந்ம யோ வா மஹதி₃ஹ மஹதோ வர்ணயேத்ஸோ(அ)யமேவ
ப்ரீத: பூர்ணோ யஶோபி₄ஸ்த்வரிதமபி₄ஸரேத் ப்ராப்யமந்தே பத₃ம் தே || 2||

2. விஷ்ணுவே! தாங்கள் எல்லாவற்றிற்கும் முதலானவர். படைப்பிற்குக் காரணமாய் இருப்பவர். ஒவ்வொரு நொடியும் புதிது புதிதாகத் தோற்றம் அளிப்பவர். யாகங்கள் மற்றும் பூஜைகளில் ஹவிஸ் முதலியவற்றை பக்தியுடன் அளிப்பவர்களும், உமது கிருஷ்ணாவதாரம் போன்ற அவதாரங்களை வர்ணிப்பவர்களும் விரைவிலேயே மகிழ்ச்சியையும், புகழையும் அடைகின்றார்கள். இறுதியில் உம்முடைய இருப்பிடமான வைகுண்டத்தையும் அடைகின்றனர்.

हे स्तोतार: कवीन्द्रास्तमिह खलु यथा चेतयध्वे तथैव
व्यक्तं वेदस्य सारं प्रणुवत जननोपात्तलीलाकथाभि: ।
जानन्तश्चास्य नामान्यखिलसुखकराणीति सङ्कीर्तयध्वं
हे विष्णो कीर्तनाद्यैस्तव खलु महतस्तत्त्वबोधं भजेयम् ॥३॥

ஹே ஸ்தோதார: கவீந்த்₃ராஸ்தமிஹ க₂லு யதா₂ சேதயத்₄வே ததை₂வ
வ்யக்தம் வேத₃ஸ்ய ஸாரம் ப்ரணுவத ஜநநோபாத்தலீலாகதா₂பி₄: |
ஜாநந்தஶ்சாஸ்ய நாமாந்யகி₂லஸுக₂கராணீதி ஸங்கீர்தயத்₄வம்
ஹே விஷ்ணோ கீர்தநாத்₃யைஸ்தவ க₂லு மஹதஸ்தத்த்வபோ₃த₄ம் ப₄ஜேயம் || 3||

3. கவிஞர்களே! நீங்கள் பகவானை எவ்வாறு அறிவீர்களோ, அதுபோல் வேதத்தின் சாரமாய் இருக்கும் அவரையும், பல்வேறு அவதாரங்களில் அவரது லீலைகளையும் போற்றித் துதியுங்கள். அறிஞர்களே! அனைத்து சுகங்ளையும் அளிக்கும் அவரது திருநாமங்களைப் பாடுங்கள். விஷ்ணுவே! நான் உம்மைப் போற்றிப் பாடி மெய்ஞ்ஞானத்தை அடைய வேண்டும்.

विष्णो: कर्माणि सम्पश्यत मनसि सदा यै: स धर्मानबध्नाद्
यानीन्द्रस्यैष भृत्य: प्रियसख इव च व्यातनोत् क्षेमकारी ।
वीक्षन्ते योगसिद्धा: परपदमनिशं यस्य सम्यक्प्रकाशं
विप्रेन्द्रा जागरूका: कृतबहुनुतयो यच्च निर्भासयन्ते ॥४॥

விஷ்ணோ: கர்மாணி ஸம்பஶ்யத மநஸி ஸதா₃ யை: ஸ த₄ர்மாநப₃த்₄நாத்₃
யாநீந்த்₃ரஸ்யைஷ ப்₄ருத்ய: ப்ரியஸக₂ இவ ச வ்யாதநோத் க்ஷேமகாரீ |
வீக்ஷந்தே யோக₃ஸித்₃தா₄: பரபத₃மநிஶம் யஸ்ய ஸம்யக்ப்ரகாஶம்
விப்ரேந்த்₃ரா ஜாக₃ரூகா: க்ருதப₃ஹுநுதயோ யச்ச நிர்பா₄ஸயந்தே || 4||

4. அந்த விஷ்ணுவானவர், தர்மங்களை நிறுவியவர். நண்பரைப் போல உபதேசம் செய்தும், வேலையாள் போல துஷ்டர்களை அழித்தும் இந்திரனுக்குப் பல நன்மைகளைச் செய்தவர். அவரது ஒளிவீசும் பரமபதமான வைகுண்டத்தை யோகசித்தி பெற்றவர்களால் காணமுடியும். சிறந்த பிராம்மணர்கள் பலவிதமாகப் போற்றிப் பாடித் துதித்து அவரது ஸ்தானமான வைகுண்டத்தை விளக்குகின்றனர். அந்த விஷ்ணுவினுடைய பெருமைகளை எப்போதும் மனதில் இருத்தித் தியானியுங்கள்.

नो जातो जायमानोऽपि च समधिगतस्त्वन्महिम्नोऽवसानं
देव श्रेयांसि विद्वान् प्रतिमुहुरपि ते नाम शंसामि विष्णो ।
तं त्वां संस्तौमि नानाविधनुतिवचनैरस्य लोकत्रयस्या-
प्यूर्ध्वं विभ्राजमाने विरचितवसतिं तत्र वैकुण्ठलोके ॥५॥

நோ ஜாதோ ஜாயமாநோ(அ)பி ச ஸமதி₄க₃தஸ்த்வந்மஹிம்நோ(அ)வஸாநம்
தே₃வ ஶ்ரேயாம்ஸி வித்₃வாந் ப்ரதிமுஹுரபி தே நாம ஶம்ஸாமி விஷ்ணோ |
தம் த்வாம் ஸம்ஸ்தௌமி நாநாவித₄நுதிவசநைரஸ்ய லோகத்ரயஸ்யா-
ப்யூர்த்₄வம் விப்₄ராஜமாநே விரசிதவஸதிம் தத்ர வைகுண்ட₂லோகே || 5||

5. தேவனே! வரம்பற்ற உமது மகிமையை அறிந்தவன் பிறந்ததுமில்லை. பிறக்கப் போவதுமில்லை. விஷ்ணுவே! உமது திருநாமங்கள் நன்மையை அளிக்கவல்லது என்றறிந்து அடிக்கடி உமது நாமங்களைச் சொல்லுவேன். மூவுலகிற்கும் மேலுள்ள வைகுண்டத்தில் வசிக்கும் உம்மைப் பலவிதமாகப் போற்றிப் பாடுகின்றேன்.

आप: सृष्ट्यादिजन्या: प्रथममयि विभो गर्भदेशे दधुस्त्वां
यत्र त्वय्येव जीवा जलशयन हरे सङ्गता ऐक्यमापन् ।
तस्याजस्य प्रभो ते विनिहितमभवत् पद्ममेकं हि नाभौ
दिक्पत्रं यत् किलाहु: कनकधरणिभृत् कर्णिकं लोकरूपम् ॥६॥

ஆப: ஸ்ருஷ்ட்யாதி₃ஜந்யா: ப்ரத₂மமயி விபோ₄ க₃ர்ப₄தே₃ஶே த₃து₄ஸ்த்வாம்
யத்ர த்வய்யேவ ஜீவா ஜலஶயந ஹரே ஸங்க₃தா ஐக்யமாபந் |
தஸ்யாஜஸ்ய ப்ரபோ₄ தே விநிஹிதமப₄வத் பத்₃மமேகம் ஹி நாபௌ₄
தி₃க்பத்ரம் யத் கிலாஹு: கநகத₄ரணிப்₄ருʼத் கர்ணிகம் லோகரூபம் || 6||

6. பிரபுவே! எல்லாவற்றிக்கும் முன்பு படைக்கப்பட்ட ஜலமானது, உம்மைத் தன்னுள் தாங்கிக் கொண்டது. பாற்கடலில் பள்ளி கொண்ட கிருஷ்ணா! நீரில் படுத்திருந்த தங்களிடம் எல்லா ஜீவன்களும் இணைந்தன. பிரபுவே! பிறப்பற்ற தங்களது நாபியிலிருந்து ஒரு தாமரை மலர் தோன்றியது. அந்தத் தாமரை மலரே உலகம், அந்த மலரின் இதழ்கள் திக்குகள், மொட்டு மேருமலை என்று முனிவர்கள் கூறுகின்றனர்.

हे लोका विष्णुरेतद्भुवनमजनयत्तन्न जानीथ यूयं
युष्माकं ह्यन्तरस्थं किमपि तदपरं विद्यते विष्णुरूपम् ।
नीहारप्रख्यमायापरिवृतमनसो मोहिता नामरूपै:
प्राणप्रीत्येकतृप्ताश्चरथ मखपरा हन्त नेच्छा मुकुन्दे ॥७॥

ஹே லோகா விஷ்ணுரேதத்₃பு₄வநமஜநயத்தந்ந ஜாநீத₂ யூயம்
யுஷ்மாகம் ஹ்யந்தரஸ்த₂ம் கிமபி தத₃பரம் வித்₃யதே விஷ்ணுரூபம் |
நீஹாரப்ரக்₂யமாயாபரிவ்ருதமநஸோ மோஹிதா நாமரூபை:
ப்ராணப்ரீத்யேகத்ருப்தாஶ்சரத₂ மக₂பரா ஹந்த நேச்சா₂ முகுந்தே₃ || 7||

7. ஜனங்களே! உலகைப் படைத்தது விஷ்ணு என்று நீங்கள் அறியவில்லை. விவரிக்க முடியாத, ஜீவனைக் காட்டிலும் வேறான விஷ்ணுவின் ரூபம் உங்கள் உள்ளத்தில் இருப்பதையும் நீங்கள் அறியவில்லை. மூடுபனி போன்ற மாயையால் மறைக்கப்பட்ட மனதுடன், பெயர்களாலும், உருவங்களாலும் மயங்கி, புலன்களை மகிழ்விக்க மட்டுமே செயல்களைச் செய்கிறீர்கள். அந்தோ! முகுந்தனான கிருஷ்ணனிடத்தில் நாட்டம் இருப்பதில்லை.

मूर्ध्नामक्ष्णां पदानां वहसि खलु सहस्राणि सम्पूर्य विश्वं
तत्प्रोत्क्रम्यापि तिष्ठन् परिमितविवरे भासि चित्तान्तरेऽपि ।
भूतं भव्यं च सर्वं परपुरुष भवान् किञ्च देहेन्द्रियादि-
ष्वाविष्टोऽप्युद्गतत्वादमृतसुखरसं चानुभुङ्क्षे त्वमेव ॥८॥

மூர்த்₄நாமக்ஷ்ணாம் பதா₃நாம் வஹஸி க₂லு ஸஹஸ்ராணி ஸம்பூர்ய விஶ்வம்
தத்ப்ரோத்க்ரம்யாபி திஷ்ட₂ந் பரிமிதவிவரே பா₄ஸி சித்தாந்தரே(அ)பி |
பூ₄தம் ப₄வ்யம் ச ஸர்வம் பரபுருஷ ப₄வாந் கிஞ்ச தே₃ஹேந்த்₃ரியாதி₃-
ஷ்வாவிஷ்டோ(அ)ப்யுத்₃க₃தத்வாத₃ம்ருதஸுக₂ரஸம் சாநுபு₄ங்க்ஷே த்வமேவ || 8||

8. பரமபுருஷா! தாங்கள் ஆயிரக்கணக்கான தலைகளையும், கண்களையும், பாதங்களையும் உடையவர். உலகம் முழுவதையும், அதைத் தாண்டியும் வியாபித்திருப்பவர். ஆனாலும், மிகச் சிறியதான மனதிற்குள்ளேயும் வசிக்கிறீர்கள். முன்பு இருந்தது, இப்போது இருப்பது, இருக்கப் போவது அனைத்தும் தாங்களே. உடல், புலன்கள் ஆகியவற்றில் பிரவேசித்தவராய் இருந்தாலும், அவற்றிலிருந்து விடுபட்டு, ஆனந்தமான பேரின்பத்தையும் தாங்களே அனுபவிக்கின்றீர்.

यत्तु त्रैलोक्यरूपं दधदपि च ततो निर्गतोऽनन्तशुद्ध-
ज्ञानात्मा वर्तसे त्वं तव खलु महिमा सोऽपि तावान् किमन्यत् ।
स्तोकस्ते भाग एवाखिलभुवनतया दृश्यते त्र्यंशकल्पं
भूयिष्ठं सान्द्रमोदात्मकमुपरि ततो भाति तस्मै नमस्ते ॥९॥

யத்து த்ரைலோக்யரூபம் த₃த₄த₃பி ச ததோ நிர்க₃தோ(அ)நந்தஶுத்₃த₄-
ஜ்ஞாநாத்மா வர்தஸே த்வம் தவ க₂லு மஹிமா ஸோ(அ)பி தாவாந் கிமந்யத் |
ஸ்தோகஸ்தே பா₄க₃ ஏவாகி₂லபு₄வநதயா த்₃ருஶ்யதே த்ர்யம்ஶகல்பம்
பூ₄யிஷ்ட₂ம் ஸாந்த்₃ரமோதா₃த்மகமுபரி ததோ பா₄தி தஸ்மை நமஸ்தே || 9||

9. தாங்கள் மூவுலங்களின் வடிவமாக இருக்கின்றீர். ஆயினும், அவற்றைக் கடந்து, தூய்மையான ஞானரூபியாய் விளங்குகின்றீர். உமது மகத்துவம் அளவற்றது. உம்முடைய வடிவத்தில் நான்கில் ஒரு பாகமே எல்லா உலகங்களாகவும் இருக்கின்றன. மற்ற மூன்று பாகங்களும் பேரின்பமயமாக ஜொலிக்கின்றது. அத்தகைய தங்களை நமஸ்கரிக்கின்றேன்.

अव्यक्तं ते स्वरूपं दुरधिगमतमं तत्तु शुद्धैकसत्त्वं
व्यक्तं चाप्येतदेव स्फुटममृतरसाम्भोधिकल्लोलतुल्यम् ।
सर्वोत्कृष्टामभीष्टां तदिह गुणरसेनैव चित्तं हरन्तीं
मूर्तिं ते संश्रयेऽहं पवनपुरपते पाहि मां कृष्ण रोगात् ॥१०॥

அவ்யக்தம் தே ஸ்வரூபம் து₃ரதி₄க₃மதமம் தத்து ஶுத்₃தை₄கஸத்த்வம்
வ்யக்தம் சாப்யேததே₃வ ஸ்பு₂டமம்ருதரஸாம்போ₄தி₄கல்லோலதுல்யம் |
ஸர்வோத்க்ருஷ்டாமபீ₄ஷ்டாம் ததி₃ஹ கு₃ணரஸேநைவ சித்தம் ஹரந்தீம்
மூர்திம் தே ஸம்ஶ்ரயே(அ)ஹம் பவநபுரபதே பாஹி மாம் க்ருஷ்ண ரோகா₃த் || 10||

10. கிருஷ்ணா! குணங்களற்ற தங்கள் வடிவமானது, அடைய முடியாததாய் இருக்கிறது. தூய்மையான இந்த ஸகுண (ஸத்வகுண) ரூபமானது தெளிவாகக் காணக் கூடியதாய் இருக்கிறது. கிருஷ்ணன் முதலிய இந்த ஸகுண ரூபமானது, பேரின்பக் கடலின் அலைகளுக்கு ஒப்பாக இருக்கிறது. எல்லாவற்றிலும் சிறந்ததாய் இருக்கிறது. கல்யாண குணங்களால் மனதைக் கவர்கின்றதாய் இருக்கும் அந்த மூர்த்தியையே நான் நாடி வணங்குகிறேன். குருவாயூரப்பா! அனைத்து நோய்களிலிருந்தும் என்னைக் காப்பாற்ற வேண்டுகிறேன்.

Friday, June 6, 2014

ஸ்ரீ நாராயணீயம் - தசகம் 98

ஸ்ரீ நாராயணீயம் - தசகம் 98, ஸ்ரீ நாராயணீயம் 98வது தசகம், ஸ்ரீமந் நாராயணீயம், ஸ்ரீ நாராயணீயம், ஸ்ரீமத் நாராயணீயம், நாராயணீயம், ஸ்ரீமன் நாராயணீயம், Narayaneeyam, Sree Narayaneeyam, Sriman narayaneeyam, Srimad Narayaneeyam

த³ஶகம் -98
நிஷ்கள பிரம்ம வழிபாடு

यस्मिन्नेतद्विभातं यत इदमभवद्येन चेदं य एत-
द्योऽस्मादुत्तीर्णरूप: खलु सकलमिदं भासितं यस्य भासा ।
यो वाचां दूरदूरे पुनरपि मनसां यस्य देवा मुनीन्द्रा:
नो विद्युस्तत्त्वरूपं किमु पुनरपरे कृष्ण तस्मै नमस्ते ॥१॥

யஸ்மிந்நேதத்₃விபா₄தம் யத இத₃மப₄வத்₃யேந சேத₃ம் ய ஏத-
த்₃யோ(அ)ஸ்மாது₃த்தீர்ணரூப: க₂லு ஸகலமித₃ம் பா₄ஸிதம் யஸ்ய பா₄ஸா |
யோ வாசாம் தூ₃ரதூ₃ரே புநரபி மநஸாம் யஸ்ய தே₃வா முநீந்த்₃ரா:
நோ வித்₃யுஸ்தத்த்வரூபம் கிமு புநரபரே க்ருஷ்ண தஸ்மை நமஸ்தே || 1||

1. இந்த உலகமானது உம்மிடத்திலிருந்து தோன்றி, உம்மால் காக்கப்படுகிறது. தாங்களே உலகவடிவாக இருக்கின்றீர். உம்முடைய ஒளியால் இந்த உலகம் பிரகாசிக்கிறது. மனதிற்கும், வாக்குக்கும் எட்டாத தூரத்தில் இருக்கின்றீர். உம்முடைய உண்மையான வடிவத்தைத் தேவர்களும், முனிவர்களும் கூட அறிய முடியவில்லை. மற்றவர்களால் எப்படி முடியும்? அத்தகைய சிறப்பு வாய்ந்த கிருஷ்ணா! உம்மை நான் நமஸ்கரிக்கிறேன்.

जन्माथो कर्म नाम स्फुटमिह गुणदोषादिकं वा न यस्मिन्
लोकानामूतये य: स्वयमनुभजते तानि मायानुसारी ।
विभ्रच्छक्तीररूपोऽपि च बहुतररूपोऽवभात्यद्भुतात्मा
तस्मै कैवल्यधाम्ने पररसपरिपूर्णाय विष्णो नमस्ते ॥२॥

ஜந்மாதோ₂ கர்ம நாம ஸ்பு₂டமிஹ கு₃ணதோ₃ஷாதி₃கம் வா ந யஸ்மிந்
லோகாநாமூதயே ய: ஸ்வயமநுப₄ஜதே தாநி மாயாநுஸாரீ |
விப்₄ரச்ச₂க்தீரரூபோ(அ)பி ச ப₃ஹுதரரூபோ(அ)வபா₄த்யத்₃பு₄தாத்மா
தஸ்மை கைவல்யதா₄ம்நே பரரஸபரிபூர்ணாய விஷ்ணோ நமஸ்தே || 2||

2. விஷ்ணுவே! உமக்கு பிறப்பு, பெயர், புண்ணியம், பாபம், ஆகிய கர்மங்கள் இல்லை. முக்குணங்கள் என்று ஒன்றும் இல்லை. உலகத்தைக் காக்க மாயையை ஏற்கின்றீர். நிற்குணராய் இருந்தும் வித்யை, அவித்யை முதலிய சக்திகளை உள்ளடக்கிக் கொண்டு, பல உருவங்களோடு விளங்குகின்றீர். ஆச்சர்யமான ரூபத்துடன் விளங்குகின்றீர். பேரின்பம் தரும் பூரணனே! உம்மை நமஸ்கரிக்கிறேன்.

नो तिर्यञ्चन्न मर्त्यं न च सुरमसुरं न स्त्रियं नो पुंमांसं
न द्रव्यं कर्म जातिं गुणमपि सदसद्वापि ते रूपमाहु: ।
शिष्टं यत् स्यान्निषेधे सति निगमशतैर्लक्षणावृत्तितस्तत्
कृच्छ्रेणावेद्यमानं परमसुखमयं भाति तस्मै नमस्ते ॥३॥

நோ திர்யஞ்சந்ந மர்த்யம் ந ச ஸுரமஸுரம் ந ஸ்த்ரியம் நோ பும்மாம்ஸம்
ந த்₃ரவ்யம் கர்ம ஜாதிம் கு₃ணமபி ஸத₃ஸத்₃வாபி தே ரூபமாஹு: |
ஶிஷ்டம் யத் ஸ்யாந்நிஷேதே₄ ஸதி நிக₃மஶதைர்லக்ஷணாவ்ருத்திதஸ்தத்
க்ருச்ச்₂ரேணாவேத்₃யமாநம் பரமஸுக₂மயம் பா₄தி தஸ்மை நமஸ்தே || 3||

3. பறவை, மிருகம், பசு, மனிதன், தேவன், அசுரன், பெண், ஆண், பஞ்சபூதங்கள், புண்ணிய பாபங்கள், ஜாதி, முக்குணங்கள், சேதனம், அசேதனம் ஆகிய இவை எதுவும் தங்கள் ரூபமில்லை என்று அறிந்தோர் கூறுகின்றனர். இவைகளைக் காட்டிலும் எஞ்சி இருக்கின்றீர். உபநிஷத்துக்கள் மிகுந்த சிரமத்துடன் உம்மைத் தெரிவிக்க முயற்சி செய்கின்றது. உம்மைப் பேரின்ப வடிவமாக விளக்குகிறது. அத்தகைய உம்மை நமஸ்காரம் செய்கிறேன்.

मायायां बिम्बितस्त्वं सृजसि महदहङ्कारतन्मात्रभेदै-
र्भूतग्रामेन्द्रियाद्यैरपि सकलजगत्स्वप्नसङ्कल्पकल्पम् ।
भूय: संहृत्य सर्वं कमठ इव पदान्यात्मना कालशक्त्या
गम्भीरे जायमाने तमसि वितिमिरो भासि तस्मै नमस्ते ॥४॥

மாயாயாம் பி₃ம்பி₃தஸ்த்வம் ஸ்ருஜஸி மஹத₃ஹங்காரதந்மாத்ரபே₄தை₃-
ர்பூ₄தக்₃ராமேந்த்₃ரியாத்₃யைரபி ஸகலஜக₃த்ஸ்வப்நஸங்கல்பகல்பம் |
பூ₄ய: ஸம்ஹ்ருத்ய ஸர்வம் கமட₂ இவ பதா₃ந்யாத்மநா காலஶக்த்யா
க₃ம்பீ₄ரே ஜாயமாநே தமஸி விதிமிரோ பா₄ஸி தஸ்மை நமஸ்தே || 4||

4. தாங்கள் மாயையின் பிரதிபலிப்பாய் இருக்கிறீர்கள். மகத், அகங்காரம், ஐந்து தன்மாத்திரைகள், பஞ்சபூதங்கள், பஞ்சேந்திரியங்கள் ஆகியவற்றைக் கொண்டு உலகங்களைப் படைத்தீர்கள். ஆமை தன் கைகால்களை ஓட்டிற்குள் இழுத்துக் கொள்வதுபோல், காலசக்தியால் அந்த உலகங்களை உம்முள்ளே அடக்கிக் கொள்கிறீர்கள். அளவற்ற இருள் உண்டாகும்போது அந்த இருளால் பாதிக்கப்படாமல் பிரகாசிக்கிறீர். அத்தகைய உமக்கு நமஸ்காரம்.

शब्दब्रह्मेति कर्मेत्यणुरिति भगवन् काल इत्यालपन्ति
त्वामेकं विश्वहेतुं सकलमयतया सर्वथा कल्प्यमानम् ।
वेदान्तैर्यत्तु गीतं पुरुषपरचिदात्माभिधं तत्तु तत्त्वं
प्रेक्षामात्रेण मूलप्रकृतिविकृतिकृत् कृष्ण तस्मै नमस्ते ॥५॥

ஶப்₃த₃ப்₃ரஹ்மேதி கர்மேத்யணுரிதி ப₄க₃வந் கால இத்யாலபந்தி
த்வாமேகம் விஶ்வஹேதும் ஸகலமயதயா ஸர்வதா₂ கல்ப்யமாநம் |
வேதா₃ந்தைர்யத்து கீ₃தம் புருஷபரசிதா₃த்மாபி₄த₄ம் தத்து தத்த்வம்
ப்ரேக்ஷாமாத்ரேண மூலப்ரக்ருதிவிக்ருதிக்ருத் க்ருஷ்ண தஸ்மை நமஸ்தே || 5||

5. பிரபஞ்சத்திற்குக் காரணம் நாதம் என்று சிலரும், கர்மம் என்று சிலரும், அணு என்று சிலரும் கூறுகின்றனர். தாங்கள் யாவுமாகி இருப்பதால் அவ்வாறு கூறுகின்றனர். வேதாந்தம், தத்வரூபமான தங்களை, புருஷன் என்றும், பரன் என்றும், சித் என்றும், அசித் என்றும் கூறுகின்றது. அந்த தத்வத்தின் பார்வையே மாயையை உண்டாக்கி, பிரபஞ்சத்தையும் உண்டாக்குகிறது. அத்தகைய உம்மை நமஸ்கரிக்கிறேன்.

सत्त्वेनासत्तया वा न च खलु सदसत्त्वेन निर्वाच्यरूपा
धत्ते यासावविद्या गुणफणिमतिवद्विश्वदृश्यावभासम् ।
विद्यात्वं सैव याता श्रुतिवचनलवैर्यत्कृपास्यन्दलाभे
संसारारण्यसद्यस्त्रुटनपरशुतामेति तस्मै नमस्ते ॥६॥

ஸத்த்வேநாஸத்தயா வா ந ச க₂லு ஸத₃ஸத்த்வேந நிர்வாச்யரூபா
த₄த்தே யாஸாவவித்₃யா கு₃ணப₂ணிமதிவத்₃விஶ்வத்₃ருஶ்யாவபா₄ஸம் |
வித்₃யாத்வம் ஸைவ யாதா ஶ்ருதிவசநலவைர்யத்க்ருபாஸ்யந்த₃லாபே₄
ஸம்ஸாராரண்யஸத்₃யஸ்த்ருடநபரஶுதாமேதி தஸ்மை நமஸ்தே || 6||

6. இருப்பது என்றோ, இல்லாதது என்றோ, அவ்விரண்டும் சேர்ந்தது என்றோ விவரிக்க முடியாத மாயத்தோற்றம் உலகில் காணப்படும் எல்லா பொருட்களிலும் உள்ளது. அது, கயிற்றைப் பாம்பு என்று எண்ணுவது போன்ற அறியாமையே ஆகும். உம்முடைய கருணைப்ரவாகம் கிடைத்ததும், அந்த அறியாமையானது, உபநிஷத்துக்களின் வாக்கியங்களால் தெளிவை அடைந்து, சம்சாரம் என்னும் காட்டை அழிக்கும் கோடரியாக ஆகிறது. அத்தகைய கருணாநிதியான உமக்கு நமஸ்காரம்.

भूषासु स्वर्णवद्वा जगति घटशरावादिके मृत्तिकाव-
त्तत्त्वे सञ्चिन्त्यमाने स्फुरति तदधुनाप्यद्वितीयं वपुस्ते ।
स्वप्नद्रष्टु: प्रबोधे तिमिरलयविधौ जीर्णरज्जोश्च यद्व-
द्विद्यालाभे तथैव स्फुटमपि विकसेत् कृष्ण तस्मै नमस्ते ॥७॥

பூ₄ஷாஸு ஸ்வர்ணவத்₃வா ஜக₃தி க₄டஶராவாதி₃கே ம்ருத்திகாவ-
த்தத்த்வே ஸஞ்சிந்த்யமாநே ஸ்பு₂ரதி தத₃து₄நாப்யத்₃விதீயம் வபுஸ்தே |
ஸ்வப்நத்₃ரஷ்டு: ப்ரபோ₃தே₄ திமிரலயவிதௌ₄ ஜீர்ணரஜ்ஜோஶ்ச யத்₃வ-
த்₃வித்₃யாலாபே₄ ததை₂வ ஸ்பு₂டமபி விகஸேத் க்ருஷ்ண தஸ்மை நமஸ்தே || 7||

7. ஆபரணங்களில் தங்கம் இருப்பதுபோல், பானை, மடக்கு ஆகியவற்றில் மண் இருப்பதுபோல், உண்மை ரூபத்தைப் பற்றி நினைக்கும்போது உம்முடைய இரண்டற்ற ரூபமே விளங்குகிறது. எவ்வாறு கனவில் காணும் பொருட்களை விழித்ததும் காணமுடியாதோ, இருளில் பாம்பாகத் தோன்றியது வெளிச்சத்தில் கயிராய் இருக்கிறதோ, அதேபோல், ஞானம் ஏற்பட்டதும் தங்கள் ரூபம் தெளிவாய் விளங்குகிறது. அத்தகைய தங்களை நமஸ்கரிக்கிறேன்.

यद्भीत्योदेति सूर्यो दहति च दहनो वाति वायुस्तथान्ये
यद्भीता: पद्मजाद्या: पुनरुचितबलीनाहरन्तेऽनुकालम् ।
येनैवारोपिता: प्राङ्निजपदमपि ते च्यावितारश्च पश्चात्
तस्मै विश्वं नियन्त्रे वयमपि भवते कृष्ण कुर्म: प्रणामम् ॥८॥

யத்₃பீ₄த்யோதே₃தி ஸூர்யோ த₃ஹதி ச த₃ஹநோ வாதி வாயுஸ்ததா₂ந்யே
யத்₃பீ₄தா: பத்₃மஜாத்₃யா: புநருசிதப₃லீநாஹரந்தே(அ)நுகாலம் |
யேநைவாரோபிதா: ப்ராங்நிஜபத₃மபி தே ச்யாவிதாரஶ்ச பஶ்சாத்
தஸ்மை விஶ்வம் நியந்த்ரே வயமபி ப₄வதே க்ருஷ்ண குர்ம: ப்ரணாமம் || 8||

8. சூரியன், அக்னி, வாயு ஆகியவை உம்மிடம் பயந்து செயல்படுகின்றன. உம்முடைய அருளால், பிரமன் முதலிய தேவர்கள் சரியான நேரத்தில் ஹவிர்பாகம் பெறுகிறார்கள். மேலும் அவர்கள், படைப்பின் துவக்கத்தில் பதவிகளைப் பெற்று, தமது இருப்பிடங்களை அடைந்து, பின் நீக்கப்படுகிறார்கள். உலகங்களை அடக்குபவரே! கிருஷ்ணா! உம்மை நாங்கள் நமஸ்கரிக்கின்றோம்.

त्रैलोक्यं भावयन्तं त्रिगुणमयमिदं त्र्यक्षरस्यैकवाच्यं
त्रीशानामैक्यरूपं त्रिभिरपि निगमैर्गीयमानस्वरूपम् ।
तिस्रोवस्था विदन्तं त्रियुगजनिजुषं त्रिक्रमाक्रान्तविश्वं
त्रैकाल्ये भेदहीनं त्रिभिरहमनिशं योगभेदैर्भजे त्वाम् ॥९॥

த்ரைலோக்யம் பா₄வயந்தம் த்ரிகு₃ணமயமித₃ம் த்ர்யக்ஷரஸ்யைகவாச்யம்
த்ரீஶாநாமைக்யரூபம் த்ரிபி₄ரபி நிக₃மைர்கீ₃யமாநஸ்வரூபம் |
திஸ்ரோவஸ்தா₂ வித₃ந்தம் த்ரியுக₃ஜநிஜுஷம் த்ரிக்ரமாக்ராந்தவிஶ்வம்
த்ரைகால்யே பே₄த₃ஹீநம் த்ரிபி₄ரஹமநிஶம் யோக₃பே₄தை₃ர்ப₄ஜே த்வாம் || 9||

9. தாங்கள், ஸத்வம், ராஜஸம், தாமஸம் என்ற மூன்று குணங்களால் மூவுலகங்களையும் படைத்தீர்கள். மூன்று அக்ஷரங்களால் (அ,உ,ம)ஆன பிரணவத்தின் (ஓம்) பொருளாய் உள்ளீர். பிரம்மா, விஷ்ணு, சிவன் என்ற மும்மூர்த்திகளின் ஒன்றுபட்ட உருவமாக இருக்கின்றீர். உம்மை ரிக், யஜுர், சாமம் என்ற மூன்று வேதங்களும் புகழ்ந்து போற்றுகின்றன. விழிப்பு, கனவு, தூக்கம் என்ற மூன்று நிலைகளை அறிந்தவர். மூன்று யுகங்களிலும் அவதாரம் செய்தவர். மூன்று அடிகளால் அனைத்து உலகங்களையும் அளந்தவர். இறந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் என்ற மூன்று காலங்களிலும் மாறுதல் இல்லாமல் இருப்பவர். அத்தகைய தங்களை நான் கர்மம், ஞானம், பக்தி என்ற மூன்று யோகங்களால் எப்பொழுதும் வணங்குகின்றேன்.

सत्यं शुद्धं विबुद्धं जयति तव वपुर्नित्यमुक्तं निरीहं
निर्द्वन्द्वं निर्विकारं निखिलगुणगणव्यञ्जनाधारभूतम् ।
निर्मूलं निर्मलं तन्निरवधिमहिमोल्लासि निर्लीनमन्त-
र्निस्सङ्गानां मुनीनां निरुपमपरमानन्दसान्द्रप्रकाशम् ॥१०॥

ஸத்யம் ஶுத்₃த₄ம் விபு₃த்₃த₄ம் ஜயதி தவ வபுர்நித்யமுக்தம் நிரீஹம்
நிர்த்₃வந்த்₃வம் நிர்விகாரம் நிகி₂லகு₃ணக₃ணவ்யஞ்ஜநாதா₄ரபூ₄தம் |
நிர்மூலம் நிர்மலம் தந்நிரவதி₄மஹிமோல்லாஸி நிர்லீநமந்த-
ர்நிஸ்ஸங்கா₃நாம் முநீநாம் நிருபமபரமாநந்த₃ஸாந்த்₃ரப்ரகாஶம் || 10||

10.  தங்களுடைய ரூபமானது ஸத்வமயமானது. பந்தங்களும், செய்கைகளும், மாற்றங்களும், விகாரங்களும் இல்லாதது. எல்லா குணங்களுக்கும் மூலமாகவும், காரணமற்றதாகவும், தோஷமற்றதாகவும் அளவற்ற மகிமையுடன் விளங்குகிறது. பற்றற்ற முனிவர்களின் மனதில் உறைந்திருக்கிறது. ஒப்பற்ற பேரின்ப ஒளியால் சிறப்புடன் பிரகாசிக்கிறது.

दुर्वारं द्वादशारं त्रिशतपरिमिलत्षष्टिपर्वाभिवीतं
सम्भ्राम्यत् क्रूरवेगं क्षणमनु जगदाच्छिद्य सन्धावमानम् ।
चक्रं ते कालरूपं व्यथयतु न तु मां त्वत्पदैकावलम्बं
विष्णो कारुण्यसिन्धो पवनपुरपते पाहि सर्वामयौघात् ॥११॥

(இந்த ஸ்லோகத்தைப் படிப்பதால் துக்கம் நீங்கி ஆயுள் வளரும்)
து₃ர்வாரம் த்₃வாத₃ஶாரம் த்ரிஶதபரிமிலத்ஷஷ்டிபர்வாபி₄வீதம்
ஸம்ப்₄ராம்யத் க்ரூரவேக₃ம் க்ஷணமநு ஜக₃தா₃ச்சி₂த்₃ய ஸந்தா₄வமாநம் |
சக்ரம் தே காலரூபம் வ்யத₂யது ந து மாம் த்வத்பதை₃காவலம்ப₃ம்
விஷ்ணோ காருண்யஸிந்தோ₄ பவநபுரபதே பாஹி ஸர்வாமயௌகா₄த் || 11||

11. விஷ்ணுவே! உம்முடைய கால வடிவமான சக்கரம் ஒருவராலும் தடுக்க முடியாதது. பன்னிரண்டு மாதங்கள் என்ற ஆரக்கால்கள் கொண்டது. முன்னூற்று அறுபது நாட்கள் என்ற கூரிய வட்டாக்களை(முனைகள்) உடையது. கடுமையான வேகத்தில் எப்பொழுதும் சுழல்கின்றது. நொடிப்பொழுதில் உலகத்தைக் குறைத்து, மிக வேகமாக ஓடுகிறது. அந்த சக்கரமானது, உமது பாதத்தையே நம்பியிருக்கும் என்னைத் துன்புறுத்தாமல் இருக்கவேண்டும். கருணைக் கடலே! கிருஷ்ணா! எல்லா நோய்களிலிருந்தும் என்னை காக்க வேண்டும்.