Thursday, August 12, 2010

ஸ்ரீ பக்ஷிராஜன் பதிகம்


கவிக்கொண்டல் நரசிம்ஹாச்சாரியார் அந்தாதி போன்ற பிரபந்தங்கள் இயற்றுவதில் வல்லவர். அவர் இயற்றிய இந்தப்பதிகம் ( செய்யுள் வடிவம்) பக்ஷிராஜன் பெருமையைப் பற்றிக் கூறும் எளிய செய்யுட்கள் . " மனத்திற் *கவலை மகிழ்ந்தே யகற்ற விரும்பு" , "அகங்கொள் *கவலை யகற்று" என்பதன் பொருள்: *ஒருவர்க்குக் கவலை உண்டாவது கல்வியின்மை, செல்வம் இன்மை, பொருள் இன்மை, மக்கட்பேறின்மை, தன்நோய், சுற்றத்துநோய், தந்த பொருள் வாராமை, வழக்கு முதலியவைகளால் ஆகும் . அவைகளில் எது வந்திடினும் அகற்றாய் என்பதாம். அனைவரும் படித்து பயன் பெறுக. இன்புறுக.

ஸ்ரீ
பக்ஷிராஜன் பதிகம்
(
காப்பு நேரிசை வெண்பா)

மனதால்
நினைக்கவொணா மாவேகம் கொண்டாய்
வினதைதன்
மைந்த விமலா - உனதாம்
அரும்புகழைப்
பாட அருள்வாயே காப்பாய்
வருவழுக்க
ளின்றி வர.

(
அவைடக்கம்)

ஆழிநீர்
தன்னை அளப்பான் முயலுதல்போல்
தாழ்
மதியன் சற்றும் தயங்காமல் - ஏழ்பாரும்
போற்று
மிறையா மெழிற்பக்ஷி ராஜன்சீர்
தூற்ற
முயன்றேன் துணிந்து.

நூல்

1. சீரார் நறையூர் திகழ்புள் ளதிபதியே

பேரார் சுகமே பெருமா - ஓரா

மனத்திற் *கவலை மகிழ்ந்தே யகற்ற

வினதை சுதனே விரும்பு.


2. வினதை சுதனே விமலா வெளியேன்

மனதிற்குடிகொள் மகிபா- உனதாம்

அருளைத்தருவாய் அமலா புகழ்சேர்

பொருளே கருணை புரிந்து.


3. திருவார் திருமால் திகழ்வா கனமே

ஒருவா ஒளிசேர் உயர்வே -தருவாய்

மனதின் விருப்பை மகிழ்ந்தே விரைவில்

வினதா சுதனே மிக.


4. திருமாலமருந் திகழ்வா கனமே

ஒருமா முதலே உனதாம் - அருளைத்

தருவாயெனக்குத் தயை செய் வினதை

திருமா மகனே தினம்.


5. விககா விமலா மிகு வேகமுளாய்

சுகமே கவலை களிப்பாய் -தகவே

ஒழிப்பாய் எனதுள்ளுறைவாய் மனமே

கொழிக்கக் குதுகலம் யான் கொண்டு.


6. விகங்க அரசே விமலா எனதாம்

அகங்கொள் கவலை அகற்றாய் - மிகவே

தொழுதேன் உனையே துயர் தீர் எனக்கிப்

பொழுதே எனதன்பு பூண்டு.


7. அப்பனே புள்ளின் அரசனே உன்றனக்கே

தப்பாது சென்னிதனைத் தாழ்த்தினேன் - ஒப்பில்

விகங்கம மாலே வினதா சுதனே

அகங்கொள் *கவலை யகற்று.


8. பொற்சிறகார் வேகமிகு புள்ளரசே ஞாலத்தோர்

கற்கின்ற நாமக் ககமாலே - எற்கு

நலந்தருவா யென்றும் நவின்றிடுவேன்
உன்பேர்
வலந்தருவாய் என்பக்கல் வந்து.

9. பன்னக வைரி பலமார் சிறைகொண்ட

மின்வேக மேவும் விமலனே - பன்னு
பதத்திரி மாலே பரமா களிக்க
இதத்தினைச் செய்யின் றெனக்கு.


10. வலமார் சிறைகொண்ட மாலே யமுதக்

கலசம் கொணர்ந்த சுகமே - சலசம்
உறைதேவி மார்பன் உவக்கும் ஒருவா
குறை தவிர்ப்பாய் என்துதியைக் கொண்டு.


(நூற்பயன்)

பன்னு பக்ஷிராஜன் துதி பாடுவார் பக்தியுடன்
இன்னிலத்தில் நன்றே இருந்திடுவர்:- மன்னும்
உயர்செல்வம் பெற்றிடுவர் ஓங்குபுகழ் வாய்ந்தே
அயர்வில் அமரருமாவார்.

6 comments:

 1. Thank you so very much Shanthi..I do not have this. Copied it down and hope to get reading.

  ReplyDelete
 2. மிகவும் அருமையான ப்ளாக் உங்களுடையது.

  ReplyDelete
 3. hi....thanx for ur comment on my blog.....nice blog ....my mom's translating it for me 'cause i am slow in reading tamizh....she luves ur blog!!!:-)

  ReplyDelete
 4. could you post in english pls

  ReplyDelete
 5. பெரியதிருவடியை எனக்கு ரொம்ம்ம்ம்ப பிடிக்கும், ஏன்னா அவர் ஒரு அம்மா பிள்ளை, அவரோட அம்மாவை சித்தியோட கொடுமைலேந்து வெளில கொண்டு வரத்தானே அமிர்தம் எடுக்க போனார். இவரோட கர்மச்ரத்தையை பாத்துட்டு பெருமாளே நேர்ல வந்து எனக்கு வாஹனமா இருக்கியா கோந்தை?னு கேட்டாராம். கருட பஞ்சகம் அடிக்கடி கேப்பேன். Good post mami!

  ReplyDelete
 6. nice blog, if u pls post in english it'll be fine..
  thanks, this is just my suggestion..
  Please visit my blog..

  Lyrics Mantra
  Ghost Matter
  Download Free Music
  Music Bol

  ReplyDelete