இத்திருக்கோயில், வடசென்னையில், முத்தியாலுப்பேட்டையில், பவளக்காரத் தெருவில் உள்ளது.
சுமார் 800 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட கோயில். திருமழிசையாழ்வாரின் அபிமான ஸ்தலம் என்று சொல்லப்படுகிறது.
மூலவர் - ருக்மிணி பாமா ஸமேத ஸ்ரீ வேணுகோபாலன்.
புல்லாங்குழல் ஊதிக்கொண்டு, மிக அழகாய் காட்சி தருகிறார்.
தனி ஸன்னிதியில் ராமர், ஸ்ரீனிவாசர், ஆண்டாள், ஸுதர்சனர், ஆஞ்சநேயர் எழுந்தருளி அருள்கின்றனர். உற்சவ மூர்த்திகளும் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் அழகு.
திருமழிசையாழ்வார், இங்கு சில காலம் தங்கி, பெருமாளை மங்களாஶாஸனம் செய்திருக்கிறாராம். திருமழிசையாழ்வாரின் திருவுருவம், சில பாதுகாப்புக் காரணங்களுக்காக சில காலம் இக்கோயிலில் வைக்கப்பட்டிருந்தது என்றும் சொல்கிறார்கள். இன்றளவும் இத்திருக்கோயிலில் திருமழிசையாழ்வாரின் "வாழித்திருநாமம்' தினசரி சாற்றுமுறையில் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.
ஆலிலைக்கண்ணன் அலங்காரத்தில் பெருமாள் |
இக்கோயில் ஹிந்து சமய அறநிலையத்துறையின் நிர்வாகத்தில் உள்ளது. தற்சமயம், இத் திருக்கோயிலைச் சீரமைப்பதற்கான திருப்பணிகள் நடந்து வருகின்றன. பெருமாள், புனர் நிர்மாணப் பணிகளுக்காக பாலாலயத்தில் இருக்கிறார். இத்திருப்பணி, விரைவாக முடிந்து, ஸம்ப்ரோக்ஷணம் நடைபெற வேணுகோபாலனையே வேண்டி நம்மால் முடிந்த உதவியையும் செய்வோமே!
வைகுண்ட ஏகாதசி நன்னாளில்.அழகான சிறப்புமிக்க கோவில் பற்றிய பதிவு மனதுக்கு நிறைவு தந்தது.அங்கு இன்று சுவர்க்க வாசல் வழியாக சென்றீர்களா? படங்கள் நன்றாக உள்ளது
ReplyDeleteI landed on your blog from another blog..A very nice one..Why don't you include follow the blog widget.. It would help follow your blog ..
ReplyDeleteThank you..