த³ஶகம் -95
த்யான யோகம்
आदौ हैरण्यगर्भीं तनुमविकलजीवात्मिकामास्थितस्त्वं
जीवत्वं प्राप्य मायागुणगणखचितो वर्तसे विश्वयोने ।
तत्रोद्वृद्धेन सत्त्वेन तु गुणयुगलं भक्तिभावं गतेन
छित्वा सत्त्वं च हित्वा पुनरनुपहितो वर्तिताहे त्वमेव ॥१॥
ஆதௌ₃ ஹைரண்யக₃ர்பீ₄ம் தநுமவிகலஜீவாத்மிகாமாஸ்தி₂தஸ்த்வம்
ஜீவத்வம் ப்ராப்ய மாயாகு₃ணக₃ணக₂சிதோ வர்தஸே விஶ்வயோநே |
தத்ரோத்₃வ்ருத்₃தே₄ந ஸத்த்வேந து கு₃ணயுக₃லம் ப₄க்திபா₄வம் க₃தேந
சி₂த்வா ஸத்த்வம் ச ஹித்வா புநரநுபஹிதோ வர்திதாஹே த்வமேவ || 1||
1. உலகிற்குக் காரணமானவனே! பிரளயத்திற்குப் பிறகு ஸ்ருஷ்டியின்போது, அனைத்து உயிர்களின் வடிவத்தில் ஹிரண்யகர்ப்பருடைய சரீரத்தை அடைந்தீர். பிறகு ஜீவன்களாக ஆகி, மாயையோடு சம்பந்தப்பட்டவராக இருக்கின்றீர். அப்போது பக்தியினால் உண்டான ஸத்வ குணத்தினால், ரஜோ குணம், தமோ குணம் ஆகிய இரண்டிலிருந்தும் விடுபட்டு, இறுதியில் ஸத்வகுணத்தையும் விட்டுவிட்டு, ஜீவனாகிய நான் மீண்டும் நிர்க்குணரான தாங்களாகவே இருக்க வேண்டும்.
सत्त्वोन्मेषात् कदाचित् खलु विषयरसे दोषबोधेऽपि भूमन्
भूयोऽप्येषु प्रवृत्तिस्सतमसि रजसि प्रोद्धते दुर्निवारा ।
चित्तं तावद्गुणाश्च ग्रथितमिह मिथस्तानि सर्वाणि रोद्धुं
तुर्ये त्वय्येकभक्तिश्शरणमिति भवान् हंसरूपी न्यगादीत् ॥२॥
ஸத்த்வோந்மேஷாத் கதா₃சித் க₂லு விஷயரஸே தோ₃ஷபோ₃தே₄(அ)பி பூ₄மந்
பூ₄யோ(அ)ப்யேஷு ப்ரவ்ருத்திஸ்ஸதமஸி ரஜஸி ப்ரோத்₃த₄தே து₃ர்நிவாரா |
சித்தம் தாவத்₃கு₃ணாஶ்ச க்₃ரதி₂தமிஹ மித₂ஸ்தாநி ஸர்வாணி ரோத்₃து₄ம்
துர்யே த்வய்யேகப₄க்திஶ்ஶரணமிதி ப₄வாந் ஹம்ஸரூபீ ந்யகா₃தீ₃த் || 2||
2. முழுமுதற்கடவுளே! ஸத்வ குணம் வளர்ந்தால் விஷய சுகங்களில் ஈடுபாடு குறைகிறது. தமோ குணமும், ரஜோ குணமும் வளர்ந்தால் விஷய சுகங்களில் மீண்டும் ஈடுபாடு ஏற்படுகிறது. இங்கு மனமும், விஷயங்களில் பற்றும் இணைந்து விடுகிறது. முக்தியடைய இடையூறாய் இருக்கும் இந்த மனதையும், குணங்களையும் தடுக்க பக்தி ஒன்றே துணையாய் இருக்கும் என்று ஹம்ஸ ரூபமெடுத்து நீர் உபதேசித்தீர்.
सन्ति श्रेयांसि भूयांस्यपि रुचिभिदया कर्मिणां निर्मितानि
क्षुद्रानन्दाश्च सान्ता बहुविधगतय: कृष्ण तेभ्यो भवेयु: ।
त्वं चाचख्याथ सख्ये ननु महिततमां श्रेयसां भक्तिमेकां
त्वद्भक्त्यानन्दतुल्य: खलु विषयजुषां सम्मद: केन वा स्यात् ॥३॥
ஸந்தி ஶ்ரேயாம்ஸி பூ₄யாம்ஸ்யபி ருசிபி₄த₃யா கர்மிணாம் நிர்மிதாநி
க்ஷுத்₃ராநந்தா₃ஶ்ச ஸாந்தா ப₃ஹுவித₄க₃தய: க்ருஷ்ண தேப்₄யோ ப₄வேயு: |
த்வம் சாசக்₂யாத₂ ஸக்₂யே நநு மஹிததமாம் ஶ்ரேயஸாம் ப₄க்திமேகாம்
த்வத்₃ப₄க்த்யாநந்த₃துல்ய: க₂லு விஷயஜுஷாம் ஸம்மத₃: கேந வா ஸ்யாத் || 3||
3. கர்மங்களைச் செய்ய அவரவர்களுக்கேற்பப் பல வழிகள் கூறப் பட்டிருக்கிறது. அவை நிலையில்லாத அற்ப சுகங்களை அளிக்கிறது. உயர்ந்ததான போற்றத் தகுந்த வழி பக்தி ஒன்றே என்று தாங்கள் உத்தவரிடம் கூறினீர்கள். பக்தியால் அடையும் ஆனந்தத்தை, விஷய சுகங்களில் ஈடுபடுவோர் எவ்வாறு அடைய முடியும்?
त्वत्भक्त्या तुष्टबुद्धे: सुखमिह चरतो विच्युताशस्य चाशा:
सर्वा: स्यु: सौख्यमय्य: सलिलकुहरगस्येव तोयैकमय्य: ।
सोऽयं खल्विन्द्रलोकं कमलजभवनं योगसिद्धीश्च हृद्या:
नाकाङ्क्षत्येतदास्तां स्वयमनुपतिते मोक्षसौख्येऽप्यनीह: ॥४॥
த்வத்ப₄க்த்யா துஷ்டபு₃த்₃தே₄: ஸுக₂மிஹ சரதோ விச்யுதாஶஸ்ய சாஶா:
ஸர்வா: ஸ்யு: ஸௌக்₂யமய்ய: ஸலிலகுஹரக₃ஸ்யேவ தோயைகமய்ய: |
ஸோ(அ)யம் க₂ல்விந்த்₃ரலோகம் கமலஜப₄வநம் யோக₃ஸித்₃தீ₄ஶ்ச ஹ்ருத்₃யா:
நாகாங்க்ஷத்யேததா₃ஸ்தாம் ஸ்வயமநுபதிதே மோக்ஷஸௌக்₂யே(அ)ப்யநீஹ: || 4||
4. உம்மிடம் கொண்ட பக்தியால் ஆனந்தித்திருப்பவன், உலகில் உள்ள எல்லா ஆசைகளையும் விட்டு சுகமாக இருக்கிறான். எல்லாத் திசைகளும் அவனுக்குச் சுகமானதாக இருக்கும். நீரில் மூழ்கிய குடத்தின் உள்ளேயும் வெளியேயும் நீர் இருப்பதுபோல், அவன் எங்கும், எதிலும் சந்தோஷமடைந்தவனாக இருக்கின்றான். அவன் இந்திரலோகத்தையோ, ஸத்யலோகத்தையோ, சித்திகளையோ விரும்புவதில்லை. அது மட்டுமில்லாமல், தானாகவே மோக்ஷம் கிடைத்தாலும் கூட அவன் விரும்புவதில்லை.
त्वद्भक्तो बाध्यमानोऽपि च विषयरसैरिन्द्रियाशान्तिहेतो-
र्भक्त्यैवाक्रम्यमाणै: पुनरपि खलु तैर्दुर्बलैर्नाभिजय्य: ।
सप्तार्चिर्दीपितार्चिर्दहति किल यथा भूरिदारुप्रपञ्चं
त्वद्भक्त्योघे तथैव प्रदहति दुरितं दुर्मद: क्वेन्द्रियाणाम् ॥५॥
த்வத்₃ப₄க்தோ பா₃த்₄யமாநோ(அ)பி ச விஷயரஸைரிந்த்₃ரியாஶாந்திஹேதோ-
ர்ப₄க்த்யைவாக்ரம்யமாணை: புநரபி க₂லு தைர்து₃ர்ப₃லைர்நாபி₄ஜய்ய: |
ஸப்தார்சிர்தீ₃பிதார்சிர்த₃ஹதி கில யதா₂ பூ₄ரிதா₃ருப்ரபஞ்சம்
த்வத்₃ப₄க்த்யோகே₄ ததை₂வ ப்ரத₃ஹதி து₃ரிதம் து₃ர்மத₃: க்வேந்த்₃ரியாணாம் || 5||
5. உம்முடைய பக்தன் புலன்களை முழுமையாகக் கட்டுப்படுத்த முடியாமல் துன்பப்படுகிறான். ஆயினும் அவனுடைய பக்தியால் இந்திரியங்களை அவன் வெல்கிறான். கொழுந்து விட்டு எரியும் நெருப்பு அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் மரக்கட்டைகளை எவ்வாறு எரிக்கிறதோ, அதே போலத் தங்களிடம் வைத்த பக்தியானது பாபங்கள் அனைத்தையும் அழிக்கிறது. அப்போது புலன்கள் கட்டுப்பட்டு அடங்குகிறது.
चित्तार्द्रीभावमुच्चैर्वपुषि च पुलकं हर्षवाष्पं च हित्वा
चित्तं शुद्ध्येत्कथं वा किमु बहुतपसा विद्यया वीतभक्ते: ।
त्वद्गाथास्वादसिद्धाञ्जनसततमरीमृज्यमानोऽयमात्मा
चक्षुर्वत्तत्त्वसूक्ष्मं भजति न तु तथाऽभ्यस्तया तर्ककोट्या॥६॥
சித்தார்த்₃ரீபா₄வமுச்சைர்வபுஷி ச புலகம் ஹர்ஷவாஷ்பம் ச ஹித்வா
சித்தம் ஶுத்₃த்₄யேத்கத₂ம் வா கிமு ப₃ஹுதபஸா வித்₃யயா வீதப₄க்தே: |
த்வத்₃கா₃தா₂ஸ்வாத₃ஸித்₃தா₄ஞ்ஜநஸததமரீம்ருஜ்யமாநோ(அ)யமாத்மா
சக்ஷுர்வத்தத்த்வஸூக்ஷ்மம் ப₄ஜதி ந து ததா₂(அ)ப்₄யஸ்தயா தர்ககோட்யா|| 6||
6. உள்ளத்தில் அன்பும், உடலில் மயிர்க்கூச்சலும், கண்களில் ஆனந்தக் கண்ணீரும் இல்லாவிட்டால் மனத்தூய்மை எவ்வாறு ஏற்படும்? பக்தியில்லாதவனுக்குத் தவத்தாலும், ஞானத்தாலும் பயனில்லை. உம்முடைய சரித்திரங்களைக் கேட்டு அனுபவிப்பதால், மனம் பரிசுத்தம் அடைந்து, உண்மையான தத்வக்ஞானத்தை அடைகிறது. தர்க்க வாதங்களைப் படிப்பதால் தத்வக்ஞானத்தை அடைய முடிவதில்லை.
ध्यानं ते शीलयेयं समतनुसुखबद्धासनो नासिकाग्र-
न्यस्ताक्ष: पूरकाद्यैर्जितपवनपथश्चित्तपद्मं त्ववाञ्चम्।
ऊर्ध्वाग्रं भावयित्वा रविविधुशिखिन: संविचिन्त्योपरिष्टात्
तत्रस्थं भावये त्वां सजलजलधरश्यामलं कोमलाङ्गम् ॥७॥
த்₄யாநம் தே ஶீலயேயம் ஸமதநுஸுக₂ப₃த்₃தா₄ஸநோ நாஸிகாக்₃ர-
ந்யஸ்தாக்ஷ: பூரகாத்₃யைர்ஜிதபவநபத₂ஶ்சித்தபத்₃மம் த்வவாஞ்சம்|
ஊர்த்₄வாக்₃ரம் பா₄வயித்வா ரவிவிது₄ஶிகி₂ந: ஸம்விசிந்த்யோபரிஷ்டாத்
தத்ரஸ்த₂ம் பா₄வயே த்வாம் ஸஜலஜலத₄ரஶ்யாமலம் கோமலாங்க₃ம் || 7||
7. உம்மைத் தியானம் செய்யும் முறையைக் கற்க வேண்டும். உடல் வளையாமல் நிமிர்ந்து, சுகாசனத்தில் அமர்ந்து, புருவங்களின் மத்தியில் உள்ள மூக்கின் நுனியைப் பார்த்துக் கொண்டு, பூரகம் முதலியவற்றால் மூச்சைக் கட்டுப்படுத்தி, கீழ்நோக்கிய இதயத்தாமரையை மேல்நோக்கி இருப்பதாய்ப் பாவித்து, அதன் மேல் சூரியன், சந்திரன், அக்னி மண்டலங்களை வரிசையாய்க் கற்பனை செய்து தியானிப்பேன். கடைசியில், அக்னி மண்டலத்தின்மேல் நீருண்ட மேகம் போல் ஸ்யாமள வர்ணனாய், மிக்க அழகிய வடிவத்தை உடையவராகத் தங்களைத் தியானிப்பேன்.
आनीलश्लक्ष्णकेशं ज्वलितमकरसत्कुण्डलं मन्दहास-
स्यन्दार्द्रं कौस्तुभश्रीपरिगतवनमालोरुहाराभिरामम् ।
श्रीवत्साङ्कं सुबाहुं मृदुलसदुदरं काञ्चनच्छायचेलं
चारुस्निग्धोरुमम्भोरुहललितपदं भावयेऽहं भवन्तम् ॥८॥
ஆநீலஶ்லக்ஷ்ணகேஶம் ஜ்வலிதமகரஸத்குண்ட₃லம் மந்த₃ஹாஸ-
ஸ்யந்தா₃ர்த்₃ரம் கௌஸ்துப₄ஶ்ரீபரிக₃தவநமாலோருஹாராபி₄ராமம் |
ஶ்ரீவத்ஸாங்கம் ஸுபா₃ஹும் ம்ருது₃லஸது₃த₃ரம் காஞ்சநச்சா₂யசேலம்
சாருஸ்நிக்₃தோ₄ருமம்போ₄ருஹலலிதபத₃ம் பா₄வயே(அ)ஹம் ப₄வந்தம் || 8||
8. கருத்த மிருதுவான கேசங்கள், காதுகளில் பிரகாசிக்கும் மீன்வடிவ குண்டலங்கள், அழகிய புன்முறுவல், பிரகாசிக்கும் கௌஸ்துபமென்ற மணி, வனமாலை, முத்துமாலை இவைகளால் மிகுந்த மனோகரமாய் இருக்கும் தங்களைத் தியானிக்கிறேன். ஸ்ரீவத்ஸம் என்னும் மரு, அழகிய திருக்கரங்கள், மிருதுவான வயிறு, தங்கத்தைப் போல் பிரகாசிக்கும் பீதாம்பரம், வனப்பான இரு தொடைகள், தாமரை போன்ற பாதங்கள் இவைகளுடன் விளங்கும் தங்களுடைய ரூபத்தைத் தியானிக்கிறேன்.
सर्वाङ्गेष्वङ्ग रङ्गत्कुतुकमिति मुहुर्धारयन्नीश चित्तं
तत्राप्येकत्र युञ्जे वदनसरसिजे सुन्दरे मन्दहासे
तत्रालीनं तु चेत: परमसुखचिदद्वैतरूपे वितन्व-
न्नन्यन्नो चिन्तयेयं मुहुरिति समुपारूढयोगो भवेयम् ॥९॥
ஸர்வாங்கே₃ஷ்வங்க₃ ரங்க₃த்குதுகமிதி முஹுர்தா₄ரயந்நீஶ சித்தம்
தத்ராப்யேகத்ர யுஞ்ஜே வத₃நஸரஸிஜே ஸுந்த₃ரே மந்த₃ஹாஸே
தத்ராலீநம் து சேத: பரமஸுக₂சித₃த்₃வைதரூபே விதந்வ-
ந்நந்யந்நோ சிந்தயேயம் முஹுரிதி ஸமுபாரூட₄யோகோ₃ ப₄வேயம் || 9||
9. ஈசனே! தங்களுடைய எல்லா அங்கங்களிலும் மீண்டும் மீண்டும் என் மனதைச் செலுத்துவேன். புன்முறுவலுடன் கூடிய அழகிய தாமரையைப் போன்ற தங்கள் முகத்தில் என் மனதை லயிக்கச் செய்வேன். அவ்வாறு ஒன்றிய மனதை பரமானந்தமான, சச்சிதானந்த வடிவத்தில் நிலைநிறுத்தி வேறு ஒன்றையும் நினைக்காமல் இருப்பேன். இவ்வாறு அடிக்கடி செய்து தியான யோகத்தில் முன்னேறுவேன்.
इत्थं त्वद्ध्यानयोगे सति पुनरणिमाद्यष्टसंसिद्धयस्ता:
दूरश्रुत्यादयोऽपि ह्यहमहमिकया सम्पतेयुर्मुरारे ।
त्वत्सम्प्राप्तौ विलम्बावहमखिलमिदं नाद्रिये कामयेऽहं
त्वामेवानन्दपूर्णं पवनपुरपते पाहि मां सर्वतापात् ॥१०॥
இத்த₂ம் த்வத்₃த்₄யாநயோகே₃ ஸதி புநரணிமாத்₃யஷ்டஸம்ஸித்₃த₄யஸ்தா:
தூ₃ரஶ்ருத்யாத₃யோ(அ)பி ஹ்யஹமஹமிகயா ஸம்பதேயுர்முராரே |
த்வத்ஸம்ப்ராப்தௌ விலம்பா₃வஹமகி₂லமித₃ம் நாத்₃ரியே காமயே(அ)ஹம்
த்வாமேவாநந்த₃பூர்ணம் பவநபுரபதே பாஹி மாம் ஸர்வதாபாத் || 10||
10. முரனைக் கொன்றவனே! இவ்வாறு செய்யும்போது அஷ்டசித்திகளும், வெகு தொலைவில் பேசுவதைக் கேட்கும் சக்தி, வெகு தொலைவில் நடப்பதைப் பார்க்கும் சக்தி ஆகிய சித்திகளும் ஒன்றையொன்று முந்திக்கொண்டு என்னை அடையும். தங்களை அடைவதற்கு அவை இடையூறாக இருப்பதால் அவற்றை நான் விரும்பமாட்டேன். ஆனந்தமயமான தங்களையே விரும்புகிறேன். குருவாயூரப்பா! அனைத்துத் துன்பங்களிலிருந்தும் என்னைக் காக்க வேண்டும்.
No comments:
Post a Comment