த³ஶகம் -93
இருபத்து நான்கு குருக்கள்
बन्धुस्नेहं विजह्यां तव हि करुणया त्वय्युपावेशितात्मा
सर्वं त्यक्त्वा चरेयं सकलमपि जगद्वीक्ष्य मायाविलासम् ।
नानात्वाद्भ्रान्तिजन्यात् सति खलु गुणदोषावबोधे विधिर्वा
व्यासेधो वा कथं तौ त्वयि निहितमतेर्वीतवैषम्यबुद्धे: ॥१॥
ப₃ந்து₄ஸ்நேஹம் விஜஹ்யாம் தவ ஹி கருணயா த்வய்யுபாவேஶிதாத்மா
ஸர்வம் த்யக்த்வா சரேயம் ஸகலமபி ஜக₃த்₃வீக்ஷ்ய மாயாவிலாஸம் |
நாநாத்வாத்₃ப்₄ராந்திஜந்யாத் ஸதி க₂லு கு₃ணதோ₃ஷாவபோ₃தே₄ விதி₄ர்வா
வ்யாஸேதோ₄ வா கத₂ம் தௌ த்வயி நிஹிதமதேர்வீதவைஷம்யபு₃த்₃தே₄: || 1||
1. உமது கருணையினால் உறவினர்களிடம் உள்ள பாசத்தை நான் விடவேண்டும். இவ்வுலகம் மாயை என்று உணர்ந்து, எல்லாவற்றையும் விலக்கி, உம்மிடத்திலேயே மனதை நிலைநிறுத்தவேண்டும். தவறான புரிதலினால் பேதங்கள் ஏற்படுகிறது. நல்லவை, கெட்டவை என்ற ஞானத்தால் விதி அல்லது விதிவிலக்கு தோன்றுகிறது. தங்களிடத்தில் மனதை நிலைநிறுத்தியவனுக்கு விதி, விதிவிலக்கு என்ற வேறுபாடு எவ்வாறு தோன்றும்?
क्षुत्तृष्णालोपमात्रे सततकृतधियो जन्तव: सन्त्यनन्ता-
स्तेभ्यो विज्ञानवत्त्वात् पुरुष इह वरस्तज्जनिर्दुर्लभैव ।
तत्राप्यात्मात्मन: स्यात्सुहृदपि च रिपुर्यस्त्वयि न्यस्तचेता-
स्तापोच्छित्तेरुपायं स्मरति स हि सुहृत् स्वात्मवैरी ततोऽन्य: ॥२॥
க்ஷுத்த்ருஷ்ணாலோபமாத்ரே ஸததக்ருததி₄யோ ஜந்தவ: ஸந்த்யநந்தா-
ஸ்தேப்₄யோ விஜ்ஞாநவத்த்வாத் புருஷ இஹ வரஸ்தஜ்ஜநிர்து₃ர்லபை₄வ |
தத்ராப்யாத்மாத்மந: ஸ்யாத்ஸுஹ்ருத₃பி ச ரிபுர்யஸ்த்வயி ந்யஸ்தசேதா-
ஸ்தாபோச்சி₂த்தேருபாயம் ஸ்மரதி ஸ ஹி ஸுஹ்ருத் ஸ்வாத்மவைரீ ததோ(அ)ந்ய: || 2||
2. இவ்வுலகில் பசி, தாகம் இவற்றைத் தீர்த்துக்கொள்ள மட்டுமே பல பிராணிகள் வாழ்கின்றன. பகுத்தறிவுள்ள மனிதன் அவைகளைவிட உயர்ந்தவனாகிறான். மனித பிறப்பு உண்மையில் அரிது. மனிதன் தனக்குத்தானே நண்பனாகவும், பகைவனாகவும் இருக்கிறான். உம்மிடத்தில் பக்தி கொண்டு தனது துன்பத்தைப் போக்கிக் கொள்ளும் வழியை அறிபவன் தனக்குத்தானே நண்பனாகவும், அவ்வாறு இல்லாதவன் தனக்குத்தானே பகைவனாகவும் ஆகிறான்.
त्वत्कारुण्ये प्रवृत्ते क इव नहि गुरुर्लोकवृत्तेऽपि भूमन्
सर्वाक्रान्तापि भूमिर्नहि चलति ततस्सत्क्षमां शिक्षयेयम् ।
गृह्णीयामीश तत्तद्विषयपरिचयेऽप्यप्रसक्तिं समीरात्
व्याप्तत्वञ्चात्मनो मे गगनगुरुवशाद्भातु निर्लेपता च ॥३॥
த்வத்காருண்யே ப்ரவ்ருத்தே க இவ நஹி கு₃ருர்லோகவ்ருத்தே(அ)பி பூ₄மந்
ஸர்வாக்ராந்தாபி பூ₄மிர்நஹி சலதி ததஸ்ஸத்க்ஷமாம் ஶிக்ஷயேயம் |
க்₃ருஹ்ணீயாமீஶ தத்தத்₃விஷயபரிசயே(அ)ப்யப்ரஸக்திம் ஸமீராத்
வ்யாப்தத்வஞ்சாத்மநோ மே க₃க₃நகு₃ருவஶாத்₃பா₄து நிர்லேபதா ச || 3||
3. பரமனே! உம்முடைய அருள் கிடைத்தால் உலகில் உள்ள எதுதான் குருவாக ஆகமுடியாது? அனைத்தையும் தாங்கி நிற்கும் இந்தப் பூமி பொறுமையாக இருக்கிறது. அந்தப் பொறுமையை நான் பூமாதேவியிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டும். ஈசனே! வாயுபகவானுக்கு அனைத்து பொருட்களுடன் தொடர்பு ஏற்பட்டாலும் பற்றற்று விளங்குகிறார். அவரிடமிருந்து பற்றற்ற தன்மையைக் கற்க வேண்டும். எங்கும் பரவியிருந்தும் பாதிக்கப்படாமல் இருக்கும் ஆத்மாவைப் பற்றிய தன்மையை ஆகாயம் என்ற குருவிடமிருந்து கற்க வேண்டும்.
स्वच्छ: स्यां पावनोऽहं मधुर उदकवद्वह्निवन्मा स्म गृह्णां
सर्वान्नीनोऽपि दोषं तरुषु तमिव मां सर्वभूतेष्ववेयाम् ।
पुष्टिर्नष्टि: कलानां शशिन इव तनोर्नात्मनोऽस्तीति विद्यां
तोयादिव्यस्तमार्ताण्डवदपि च तनुष्वेकतां त्वत्प्रसादात् ॥४॥
ஸ்வச்ச₂: ஸ்யாம் பாவநோ(அ)ஹம் மது₄ர உத₃கவத்₃வஹ்நிவந்மா ஸ்ம க்₃ருஹ்ணாம்
ஸர்வாந்நீநோ(அ)பி தோ₃ஷம் தருஷு தமிவ மாம் ஸர்வபூ₄தேஷ்வவேயாம் |
புஷ்டிர்நஷ்டி: கலாநாம் ஶஶிந இவ தநோர்நாத்மநோ(அ)ஸ்தீதி வித்₃யாம்
தோயாதி₃வ்யஸ்தமார்தாண்ட₃வத₃பி ச தநுஷ்வேகதாம் த்வத்ப்ரஸாதா₃த் || 4||
4. தண்ணீரைப்போல் தெளிவாகவும், தூய்மையாகவும், இனிமையாகவும் நான் இருக்க வேண்டும். அக்னி எல்லாவற்றையும் ஏற்றுக்கொண்டு களங்கமில்லாமல் இருப்பதைப் போல் நானும் இருக்க வேண்டும். மரங்களில் அக்னி இருப்பதைப் போன்று எல்லா உயிர்களிலும் நான் இருப்பதாக அறிய வேண்டும். சந்திரனின் கலைகள் வளர்ந்து தேய்வதைப் போல், வளர்ச்சியும், தேய்வும் சரீரத்திற்கே, ஆத்மாவிற்கு இல்லை என்று அறிய வேண்டும். ஒரே சூரியன் தண்ணீரில் வெவ்வேறாகத் தோன்றுவதுபோல், ஒரே ஆத்மா சரீரங்களில் வெவ்வேறாகத் தோன்றுகிறது என்று உணர வேண்டும்.
स्नेहाद्व्याधात्तपुत्रप्रणयमृतकपोतायितो मा स्म भूवं
प्राप्तं प्राश्नन् सहेय क्षुधमपि शयुवत् सिन्धुवत्स्यामगाध: ।
मा पप्तं योषिदादौ शिखिनि शलभवत् भृङ्गवत्सारभागी
भूयासं किन्तु तद्वद्धनचयनवशान्माहमीश प्रणेशम् ॥५॥
ஸ்நேஹாத்₃வ்யாதா₄த்தபுத்ரப்ரணயம்ருதகபோதாயிதோ மா ஸ்ம பூ₄வம்
ப்ராப்தம் ப்ராஶ்நந் ஸஹேய க்ஷுத₄மபி ஶயுவத் ஸிந்து₄வத்ஸ்யாமகா₃த₄: |
மா பப்தம் யோஷிதா₃தௌ₃ ஶிகி₂நி ஶலப₄வத் ப்₄ருங்க₃வத்ஸாரபா₄கீ₃
பூ₄யாஸம் கிந்து தத்₃வத்₃த₄நசயநவஶாந்மாஹமீஶ ப்ரணேஶம் || 5||
5. வேடனால் கொல்லப்பட்ட தன் மனைவியையும், குஞ்சுகளையும் நினைத்து சோகத்தினால் இறந்த மாடப் புறாவைப் போல் நான் ஆகக் கூடாது. மலைப்பாம்பைப் போல் கிடைத்ததை உண்டு பசியைப் பொறுத்துக் கொள்ள வேண்டும். கடலைப் போல் கம்பீரமாக இருக்க வேண்டும். தீயில் தானாகவே விழும் வீட்டில் பூச்சியைப் போல் பெண் மோகம் முதலிய அற்ப சுகங்களில் விழாமலிருக்க வேண்டும். பூக்களிலிருந்து தேனை மட்டும் சேகரிக்கும் வண்டைப் போல் விஷயங்களின் சாரத்தை மட்டும் சேர்ப்பவனாக இருக்க வேண்டும். ஆனால் அவ்வண்டைப் போல் செல்வத்தை சேகரித்து அழியாமல் இருக்க வேண்டும்.
मा बद्ध्यासं तरुण्या गज इव वशया नार्जयेयं धनौघं
हर्तान्यस्तं हि माध्वीहर इव मृगवन्मा मुहं ग्राम्यगीतै: ।
नात्यासज्जेय भोज्ये झष इव बलिशे पिङ्गलावन्निराश:
सुप्यां भर्तव्ययोगात् कुरर इव विभो सामिषोऽन्यैर्न हन्यै ॥६॥
மா ப₃த்₃த்₄யாஸம் தருண்யா க₃ஜ இவ வஶயா நார்ஜயேயம் த₄நௌக₄ம்
ஹர்தாந்யஸ்தம் ஹி மாத்₄வீஹர இவ ம்ருக₃வந்மா முஹம் க்₃ராம்யகீ₃தை: |
நாத்யாஸஜ்ஜேய போ₄ஜ்யே ஜ₂ஷ இவ ப₃லிஶே பிங்க₃லாவந்நிராஶ:
ஸுப்யாம் ப₄ர்தவ்யயோகா₃த் குரர இவ விபோ₄ ஸாமிஷோ(அ)ந்யைர்ந ஹந்யை || 6||
6. ஈசனே! ஆண் யானை பெண் யானைக்குக் கட்டுப்படுவதுபோல் பெண்களைக் கண்டு மோகமடையாமல் இருக்க வேண்டும். தேனீக்கள் தேனைச் சேர்த்து வைப்பதுபோல் அதிகமான பொருளைச் சேர்த்து வைக்காமல் இருக்க வேண்டும். ஏனெனில், தேனீ சேர்த்து வைத்த தேனை, தேன் எடுப்பவன் கவர்ந்து செல்வதுபோல், சேமித்து வைத்த அப்பொருளை யாராவது கவர்ந்து செல்வார்கள். கீழ்த்தரமான பாட்டுக்களில் மயங்கும் மானைப் போல நான் மயங்காமல் இருக்க வேண்டும். உணவின் மீது உள்ள ஆசையால் தூண்டிலில் அகப்படும் மீனைப் போல உணவில் அதிக நாட்டம் கொள்ளாமல் இருக்க வேண்டும். பிங்களை என்பவளைப் போல் ஆசையில்லாமல் தூங்க வேண்டும். குரரம் என்ற பறவை மூக்கில் இறைச்சியை வைத்துக் கொண்டிருந்ததால் மற்ற பறவைகளால் கொல்லப்பட்டது. அதைப் போல் பொருட்களில் ஆசை வைத்து நான் துன்பப்படாமல் இருக்க வேண்டும்.
वर्तेय त्यक्तमान: सुखमतिशिशुवन्निस्सहायश्चरेयं
कन्याया एकशेषो वलय इव विभो वर्जितान्योन्यघोष: ।
त्वच्चित्तो नावबुध्यै परमिषुकृदिव क्ष्माभृदायानघोषं
गेहेष्वन्यप्रणीतेष्वहिरिव निवसान्युन्दुरोर्मन्दिरेषु ॥७॥
வர்தேய த்யக்தமாந: ஸுக₂மதிஶிஶுவந்நிஸ்ஸஹாயஶ்சரேயம்
கந்யாயா ஏகஶேஷோ வலய இவ விபோ₄ வர்ஜிதாந்யோந்யகோ₄ஷ: |
த்வச்சித்தோ நாவபு₃த்₄யை பரமிஷுக்ருதி₃வ க்ஷ்மாப்₄ருதா₃யாநகோ₄ஷம்
கே₃ஹேஷ்வந்யப்ரணீதேஷ்வஹிரிவ நிவஸாந்யுந்து₃ரோர்மந்தி₃ரேஷு || 7||
7. சிறு குழந்தை, மரியாதை மற்றும் அவமதிப்பு உணர்வு இல்லாமல் இருப்பது போல் இருக்க வேண்டும். கன்னிப் பெண்ணின் கையில் உள்ள ஒற்றை வளையல் போல வீண் பேச்சுக்களின் தொடர்பு இல்லாமல் தனித்தன்மையுடன் இருக்க வேண்டும். அம்பு தயாரிப்பவன், அரசன் வரும் அறிவிப்பை அறியாததுபோல உம்மையே நினைத்து வேறு ஒன்றையும் நினைக்காதிருக்க வேண்டும். எலிவளையில் பாம்பு குடியிருப்பதுபோல, எந்த வீட்டிலும் ஆசை வைக்காமல், பிறர் இல்லத்தில் வாழ வேண்டும்.
त्वय्येव त्वत्कृतं त्वं क्षपयसि जगदित्यूर्णनाभात् प्रतीयां
त्वच्चिन्ता त्वत्स्वरूपं कुरुत इति दृढं शिक्षये पेशकारात् ।
विड्भस्मात्मा च देहो भवति गुरुवरो यो विवेकं विरक्तिं
धत्ते सञ्चिन्त्यमानो मम तु बहुरुजापीडितोऽयं विशेषात् ॥८॥
த்வய்யேவ த்வத்க்ருதம் த்வம் க்ஷபயஸி ஜக₃தி₃த்யூர்ணநாபா₄த் ப்ரதீயாம்
த்வச்சிந்தா த்வத்ஸ்வரூபம் குருத இதி த்₃ருட₄ம் ஶிக்ஷயே பேஶகாராத் |
விட்₃ப₄ஸ்மாத்மா ச தே₃ஹோ ப₄வதி கு₃ருவரோ யோ விவேகம் விரக்திம்
த₄த்தே ஸஞ்சிந்த்யமாநோ மம து ப₃ஹுருஜாபீடி₃தோ(அ)யம் விஶேஷாத் || 8||
8. உம்மால் படைக்கப்பட்ட உலகம் உம்மிடத்திலேயே அடங்கி விடுகிறது என்பதை சிலந்திப் பூச்சியிடமிருந்து அறிந்து கொள்வேன். உம்மையே நினைத்திருப்பது உம்முடைய வடிவத்தை அளிக்கிறது என்ற உறுதியான பாடத்தைக் குளவியிடமிருந்து கற்றுக் கொள்வேன். புழுக்களாகவும், சாம்பலாகவும் ஆகும் இந்த உடல் ஒரு சிறந்த குருவாக விளங்குகிறது. கவனமாக சிந்தனை செய்தால் இந்த உடல் ஞானத்தையும், வைராக்கியத்தையும் அளிக்கும். அதிலும் பல நோய்களால் பாதிக்கப்பட்ட என் உடலே எனக்குக் குருவாய் விரைவிலேயே வைராக்கியத்தை அளிக்கிறது.
ही ही मे देहमोहं त्यज पवनपुराधीश यत्प्रेमहेतो-
र्गेहे वित्ते कलत्रादिषु च विवशितास्त्वत्पदं विस्मरन्ति ।
सोऽयं वह्नेश्शुनो वा परमिह परत: साम्प्रतञ्चाक्षिकर्ण-
त्वग्जिह्वाद्या विकर्षन्त्यवशमत इत: कोऽपि न त्वत्पदाब्जे ॥९॥
ஹீ ஹீ மே தே₃ஹமோஹம் த்யஜ பவநபுராதீ₄ஶ யத்ப்ரேமஹேதோ-
ர்கே₃ஹே வித்தே கலத்ராதி₃ஷு ச விவஶிதாஸ்த்வத்பத₃ம் விஸ்மரந்தி |
ஸோ(அ)யம் வஹ்நேஶ்ஶுநோ வா பரமிஹ பரத: ஸாம்ப்ரதஞ்சாக்ஷிகர்ண-
த்வக்₃ஜிஹ்வாத்₃யா விகர்ஷந்த்யவஶமத இத: கோ(அ)பி ந த்வத்பதா₃ப்₃ஜே || 9||
9. குருவாயூரப்பனே! இந்த உடல் மீது கொண்ட ஆசையால் வீடு, பொருள், மனைவி ஆகியவற்றில் மக்கள் பற்று வைத்து உம்மை மறக்கிறார்கள். அந்த உடல் இறுதியில் அக்னிக்கும், நாய்க்கும் இரையாகிறது. வாழும்போது கண், காது, தோல், நாக்கு போன்ற இந்திரியங்களால் அலைக்கழிக்கப்படுகிறது. அந்தோ! உன் தாமரைப் பாதங்களை உடலின் ஒரு இந்திரியமாவது நாடுவதில்லை.
दुर्वारो देहमोहो यदि पुनरधुना तर्हि निश्शेषरोगान्
हृत्वा भक्तिं द्रढिष्ठां कुरु तव पदपङ्केरुहे पङ्कजाक्ष ।
नूनं नानाभवान्ते समधिगतममुं मुक्तिदं विप्रदेहं
क्षुद्रे हा हन्त मा मा क्षिप विषयरसे पाहि मां मारुतेश ॥१०॥
து₃ர்வாரோ தே₃ஹமோஹோ யதி₃ புநரது₄நா தர்ஹி நிஶ்ஶேஷரோகா₃ந்
ஹ்ருத்வா ப₄க்திம் த்₃ரடி₄ஷ்டா₂ம் குரு தவ பத₃பங்கேருஹே பங்கஜாக்ஷ |
நூநம் நாநாப₄வாந்தே ஸமதி₄க₃தமமும் முக்தித₃ம் விப்ரதே₃ஹம்
க்ஷுத்₃ரே ஹா ஹந்த மா மா க்ஷிப விஷயரஸே பாஹி மாம் மாருதேஶ || 10||
10. தாமரைக் கண்ணனே! இந்த உடலில் வைத்த ஆசையைத் தவிர்க்க முடியாதெனில், என் வியாதிகளைப் போக்கி உம்முடைய திருவடித் தாமரையில் அசைக்க முடியாத உறுதியான பக்தியை அளிக்க வேண்டும். பல பிறவிகளுக்குப் பிறகு அடைந்த இந்த பிராம்மண சரீரத்தைக் கீழ்த்தரமான இந்திரிய சந்தோஷத்திற்குள் தள்ள வேண்டாம். குருவாயூரப்பா! என்னைக் காப்பாற்ற வேண்டும்.
No comments:
Post a Comment