இதனால் நண்பர்களிடையே சண்டை உண்டானது. காய் முற்றிப் பழுத்த பிறகும் கூட, குலை எந்தப் பக்கமும் சாயாமல் நின்றது. இருவரும் செய்வதறியாது கலங்கினர். ஒரு நாள் இரவு, முருகன் தனது பக்தனது கனவில் தோன்றி, “ பக்தனே! நீ பழத்தை குருவாயூரப்பனுக்கே ஸமர்ப்பித்துவிடு. அதுவே எனக்கு சந்தோஷத்தைக் கொடுக்கும். நாங்கள் இருவரும் நண்பர்கள்தான். நீயும் உன் நண்பனுடன் பிரியமாகப் பழகு” என்று கூறி மறைந்தார். உடனே விழித்த அவன், சொப்பனத்தைத் தன் நண்பனிடம் சொன்னான். இருவரும் கதளிப்பழத்தை குருவாயூரப்பனுக்கு ஸமர்ப்பித்தனர்.
இன்றும் குருவாயூரில், துலாபாரத்தின் போது எடைக்கு எடை கதளிப்பழத்தை வேண்டுதலாக ஸமர்ப்பிக்கும் வழக்கம் இருக்கிறது.
It's super
ReplyDelete