Friday, January 2, 2015

கண்ணன் கதைகள் (21) - பிரதக்ஷிணம்

கண்ணன் கதைகள் (21) - பிரதக்ஷிணம்,கண்ணன் கதைகள், குருவாயூரப்பன் கதைகள்,

ஒரு முறை ஒரு ஏழை சிறுவன், பசியின் கொடுமை தாங்காமல் ஒரு பழக்கடையில் இருந்து வாழைப்பழம் ஒன்றைத் திருடினான். குருவாயூரப்பனிடம் பக்தி கொண்ட அவன், கோவிலுக்குச் சென்று, தான் திருடிய பழத்தில் பாதியை உண்டியலில் போட்டுவிட்டு, மற்றொரு பாதியைத் தின்றான். 

அப்போது, கடைக்காரர் அவனைக் கையும் களவுமாகப் பிடித்தார். அவனும் பசியினால் திருடியதாக ஒப்புக் கொண்டான். கடைக்காரருக்கு அந்த சிறுவனைத் தண்டிக்க மனமில்லாவிட்டாலும், அவனுக்குப் பாடம்  கற்பிக்க நினைத்தார்.  அவர் அவனிடம், " நீ இவ்வாறு தவறு செய்ததால், கோவிலை 108 தடவை பிரதக்ஷிணமாகச் சுற்றி வா" என்று கட்டளையிட்டார். 

அந்த சிறுவனும் பிரதக்ஷிணம் செய்ய ஆரம்பித்தான். அப்போது கடைக்காரர் ஸ்ரீ  குருவாயூரப்பனும் அந்தப் பையனைத் தொடர்ந்து  பிரதக்ஷிணம் செய்து கொண்டிருப்பதைக் கண்டார். ஒன்றும் புரியாமல் வீடு திரும்பினார். அன்றிரவு கடைக்காரரின் கனவில் தோன்றிய அப்பன், " பழத்தில் பாதியை சிறுவன் எனக்கு ஸமர்ப்பித்தான். பாதியைத்தான் அவன் உண்டான். அதனால் எனக்கும் தண்டனையில் பங்கு உண்டு. நானும் கோவிலைச் சுற்றினேன்" என்று கூறினார். இதிலிருந்து  ஸ்ரீ அப்பன்,  அப்பாவி  மக்களின் எளிமையையும், அன்பையும் நேசிக்கிறான் என்று அறியலாம். 

1 comment:

  1. தெரிந்த சம்பவம் ஆனால் ரொம்ப .பிடித்தது

    ReplyDelete