Monday, March 10, 2014

ஸ்ரீ நாராயணீயம் - தசகம் 10

ஸ்ரீ நாராயணீயம் - தசகம் 10, ஸ்ரீ நாராயணீயம் 10வது தசகம், ஸ்ரீமந் நாராயணீயம், ஸ்ரீ நாராயணீயம், Narayaneeyam, Sree Narayaneeyam, Sriman narayaneeyam,Srimad Narayaneeyam

த³ஶகம்-10
படைப்புகளின் வர்ணனை

वैकुण्ठ वर्धितबलोऽथ भवत्प्रसादा-
दम्भोजयोनिरसृजत् किल जीवदेहान् ।
स्थास्नूनि भूरुहमयानि तथा तिरश्चां
जातिं मनुष्यनिवहानपि देवभेदान् ॥१॥

வைகுண்ட₂ வர்தி₄தப₃லோ(அ)த₂ ப₄வத்ப்ரஸாதா₃-
த₃ம்போ₄ஜயோநிரஸ்ருஜத் கில ஜீவதே₃ஹாந் |
ஸ்தா₂ஸ்நூநி பூ₄ருஹமயாநி ததா₂ திரஶ்சாம்
ஜாதிம் மநுஷ்யநிவஹாநபி தே₃வபே₄தா₃ந் || 1||

1. வைகுண்டநாதா! உன் அருளால் பிரும்மன் மிகுந்த சக்தியை அடைந்து, பல ஜீவராசிகளையும், மரம், செடி, கொடி, பறவை, மிருகம் முதலியவற்றையும், மனிதர்களையும், தேவர்களையும் படைத்தாராமே?

मिथ्याग्रहास्मिमतिरागविकोपभीति-
रज्ञानवृत्तिमिति पञ्चविधां स सृष्ट्वा ।
उद्दामतामसपदार्थविधानदून -
स्तेने त्वदीयचरणस्मरणं विशुद्ध्यै ॥२॥

மித்₂யாக்₃ரஹாஸ்மிமதிராக₃விகோபபீ₄தி-
ரஜ்ஞாநவ்ருத்திமிதி பஞ்சவிதா₄ம் ஸ ஸ்ருஷ்ட்வா |
உத்₃தா₃மதாமஸபதா₃ர்த₂விதா₄நதூ₃ந -
ஸ்தேநே த்வதீ₃யசரணஸ்மரணம் விஶுத்₃த்₄யை || 2||

2. அறிவு மயக்கம், அகங்கார மமகாரம், ஆசை, கோபம், பயம் முதலிய ஐந்து அஞ்ஞான காரியங்களை உண்டு பண்ணினார். தமோகுணமான கார்யங்களைப் படைத்ததால் துயரத்தை அடைந்தார். அத்துயரம் விலக உன் திருவடிகளைத் தியானம் செய்தாராமே.

तावत् ससर्ज मनसा सनकं सनन्दं
भूय: सनातनमुनिं च सनत्कुमारम् ।
ते सृष्टिकर्मणि तु तेन नियुज्यमाना-
स्त्वत्पादभक्तिरसिका जगृहुर्न वाणीम् ॥३॥

தாவத் ஸஸர்ஜ மநஸா ஸநகம் ஸநந்த₃ம்
பூ₄ய: ஸநாதநமுநிம் ச ஸநத்குமாரம் |
தே ஸ்ருஷ்டிகர்மணி து தேந நியுஜ்யமாநா-
ஸ்த்வத்பாத₃ப₄க்திரஸிகா ஜக்₃ருஹுர்ந வாணீம் || 3||

3. ஸனகர், ஸனந்தர், ஸனாதனர், ஸனத்குமாரர் ஆகியோரை மனதினால் படைத்தார். ஸ்ருஷ்டியில் ஈடுபடும்படி அவர்களுக்கு ஆணையிட்டார். ஆனால் அவர்கள், தங்கள் சேவையில் நாட்டம் கொண்டு பிரும்மனுடைய வாக்கை ஏற்கவில்லை.

तावत् प्रकोपमुदितं प्रतिरुन्धतोऽस्य
भ्रूमध्यतोऽजनि मृडो भवदेकदेश: ।
नामानि मे कुरु पदानि च हा विरिञ्चे-
त्यादौ रुरोद किल तेन स रुद्रनामा ॥४॥

தாவத் ப்ரகோபமுதி₃தம் ப்ரதிருந்த₄தோ(அ)ஸ்ய
ப்₄ரூமத்₄யதோ(அ)ஜநி ம்ருடோ₃ ப₄வதே₃கதே₃ஶ: |
நாமாநி மே குரு பதா₃நி ச ஹா விரிஞ்சே-
த்யாதௌ₃ ருரோத₃ கில தேந ஸ ருத்₃ரநாமா || 4||

4. அப்போது பிரும்மாவிற்குக் கோபம் உண்டாயிற்று. அதை அடக்கினார். அப்போது, அவருடைய புருவங்களின் நடுவிலிருந்து ஸ்ரீ ருத்ரன் தோன்றினார்.  அவர், பிரும்மனிடம் தனக்குப் பெயர்களையும், இருப்பிடங்களையும் வேண்டினார்.

एकादशाह्वयतया च विभिन्नरूपं
रुद्रं विधाय दयिता वनिताश्च दत्वा ।
तावन्त्यदत्त च पदानि भवत्प्रणुन्न:
प्राह प्रजाविरचनाय च सादरं तम् ॥५॥

ஏகாத₃ஶாஹ்வயதயா ச விபி₄ந்நரூபம்
ருத்₃ரம் விதா₄ய த₃யிதா வநிதாஶ்ச த₃த்வா |
தாவந்த்யத₃த்த ச பதா₃நி ப₄வத்ப்ரணுந்ந:
ப்ராஹ ப்ரஜாவிரசநாய ச ஸாத₃ரம் தம் || 5||

5. உன்னால் ஏவப்பட்டபடி, அந்த பிரும்மதேவன், ருத்ரனுக்கு பதினொரு பெயர்களையும், பதினொரு மனைவிகளையும், தனித்தனி இருப்பிடங்களையும் அளித்தார். பிறகு, உயிர்களைப் படைக்கும்படி அன்புடன் கட்டளையிட்டார்

रुद्राभिसृष्टभयदाकृतिरुद्रसंघ-
सम्पूर्यमाणभुवनत्रयभीतचेता: ।
मा मा प्रजा: सृज तपश्चर मङ्गलाये-
त्याचष्ट तं कमलभूर्भवदीरितात्मा ॥६॥

ருத்₃ராபி₄ஸ்ருஷ்டப₄யதா₃க்ருதிருத்₃ரஸம்க₄-
ஸம்பூர்யமாணபு₄வநத்ரயபீ₄தசேதா: |
மா மா ப்ரஜா: ஸ்ருஜ தபஶ்சர மங்க₃லாயே-
த்யாசஷ்ட தம் கமலபூ₄ர்ப₄வதீ₃ரிதாத்மா || 6||

6. ருத்ரனால் படைக்கப்பட்டவர்கள் பயங்கரமான உருவங்களுடன் மூவுலகிலும் நிரம்பியதைக் கண்டு பயந்தார். பிறகு, ருத்ரனைப் “படைக்க வேண்டாம், உலக நலத்திற்காக தவம் செய்” எனச் சொன்னார்.

तस्याथ सर्गरसिकस्य मरीचिरत्रि-
स्तत्राङिगरा: क्रतुमुनि: पुलह: पुलस्त्य: ।
अङ्गादजायत भृगुश्च वसिष्ठदक्षौ
श्रीनारदश्च भगवन् भवदंघ्रिदास: ॥७॥

தஸ்யாத₂ ஸர்க₃ரஸிகஸ்ய மரீசிரத்ரி-
ஸ்தத்ராஙிக₃ரா: க்ரதுமுநி: புலஹ: புலஸ்த்ய: |
அங்கா₃த₃ஜாயத ப்₄ருகு₃ஶ்ச வஸிஷ்ட₂த₃க்ஷௌ
ஶ்ரீநாரத₃ஶ்ச ப₄க₃வந் ப₄வத₃ம்க்₄ரிதா₃ஸ: || 7||

7. பிரமன் தனது ஸ்ருஷ்டியில் ஈடுபட்டார். அப்போது, அவருடைய உடலில் இருந்து, ஒன்பது ப்ரஜாபதிகளும், உனது திருவடிகளில் பற்றுடைய நாரதரும் உண்டானார்கள்.

धर्मादिकानभिसृजन्नथ कर्दमं च
वाणीं विधाय विधिरङ्गजसंकुलोऽभूत् ।
त्वद्बोधितैस्सनकदक्षमुखैस्तनूजै-
रुद्बोधितश्च विरराम तमो विमुञ्चन् ॥८॥

த₄ர்மாதி₃காநபி₄ஸ்ருஜந்நத₂ கர்த₃மம் ச
வாணீம் விதா₄ய விதி₄ரங்க₃ஜஸம்குலோ(அ)பூ₄த் |
த்வத்₃போ₃தி₄தைஸ்ஸநகத₃க்ஷமுகை₂ஸ்தநூஜை-
ருத்₃போ₃தி₄தஶ்ச விரராம தமோ விமுஞ்சந் || 8||

8. பிறகு, பிரும்மதேவர், தர்மம் முதலியவைகளையும், கர்தமரையும் படைத்தார். சரஸ்வதியைப் படைத்து காமத்தை அடைந்தார். தாங்கள் ஸனகாதிகளை ஏவி அறிவுரை கூறச் செய்தீர். அதனால் பிரமனின் அஞ்ஞானம் விலகியது.

वेदान् पुराणनिवहानपि सर्वविद्या:
कुर्वन् निजाननगणाच्चतुराननोऽसौ ।
पुत्रेषु तेषु विनिधाय स सर्गवृद्धि-
मप्राप्नुवंस्तव पदाम्बुजमाश्रितोभूत् ॥९॥

வேதா₃ந் புராணநிவஹாநபி ஸர்வவித்₃யா:
குர்வந் நிஜாநநக₃ணாச்சதுராநநோ(அ)ஸௌ |
புத்ரேஷு தேஷு விநிதா₄ய ஸ ஸர்க₃வ்ருத்₃தி₄-
மப்ராப்நுவம் ஸ்தவ பதா₃ம்பு₃ஜமாஶ்ரிதோபூ₄த் || 9||

9. பிறகு அவர், நான்கு வேதங்களையும், வேதங்களின் அங்கங்களையும், புராணங்களையும், வித்யைகளையும், எல்லாக் கலைகளையும் படைத்து அந்த வித்யைகளை தன் புத்ரர்களுக்கு உபதேசம் செய்தார். ஆனாலும், ஸ்ருஷ்டி வளர்ச்சி அடையவில்லை. அதனால், தங்களுடைய பாதத் தாமரைகளில் அடைக்கலம் அடைந்தார்.

जानन्नुपायमथ देहमजो विभज्य
स्रीपुंसभावमभजन्मनुतद्वधूभ्याम् ।
ताभ्यां च मानुषकुलानि विवर्धयंस्त्वं
गोविन्द मारुतपुरेश निरुन्धि रोगान् ॥१०॥

ஜாநந்நுபாயமத₂ தே₃ஹமஜோ விப₄ஜ்ய
ஸ்ரீபும்ஸபா₄வமப₄ஜந்மநுதத்₃வதூ₄ப்₄யாம் |
தாப்₄யாம் ச மாநுஷகுலாநி விவர்த₄யம்ஸ்த்வம்
கோ₃விந்த₃ மாருதபுரேஶ நிருந்தி₄ ரோகா₃ந் || 10||

10. அதன் பிறகு அவர் படைப்பதற்கு வழியைக் கண்டார். தனது சரீரத்தைப் பிரித்துக் கொண்டு, மனு மற்றும் ஸதரூபையைப் படைத்தார். அந்தத் தம்பதிகள் மூலம் ஸ்ருஷ்டியைப் பெருகச் செய்த தாங்கள் ரோகங்களைப் போக்க வேண்டும் என நம்பூதிரி வேண்ட ஸ்ரீ அப்பனும் அங்கீகரித்தார்.

No comments:

Post a Comment