Wednesday, March 5, 2014

ஸ்ரீ நாராயணீயம் - தசகம் 6

ஸ்ரீ நாராயணீயம் - தசகம் 6, ஸ்ரீ நாராயணீயம் 6வது தசகம், ஸ்ரீமந் நாராயணீயம், ஸ்ரீ நாராயணீயம், Sree Narayaneeyam, Sriman narayaneeyam,Srimad Narayaneeyam

த³ஶகம் -6
விராட் ஸ்வரூப வர்ணனை

एवं चतुर्दशजगन्मयतां गतस्य
पातालमीश तव पादतलं वदन्ति ।
पादोर्ध्वदेशमपि देव रसातलं ते
गुल्फद्वयं खलु महातलमद्भुतात्मन् ॥१॥

ஏவம் சதுர்த₃ஶஜக₃ந்மயதாம் க₃தஸ்ய
பாதாலமீஶ தவ பாத₃தலம் வத₃ந்தி |
பாதோ₃ர்த்₄வதே₃ஶமபி தே₃வ ரஸாதலம் தே
கு₃ல்ப₂த்₃வயம் க₂லு மஹாதலமத்₃பு₄தாத்மந் || 1||

1. குருவாயூரப்பா! நீ ஈரேழு உலக வடிவமான விராட் ரூபத்தைத் தரித்தாய். உன்னுடைய பாதங்களைப் பாதாளம் என்றும், மேல் பாதங்களை ரஸாதலம் என்றும், இரு கணுக்கால்களை மஹாதலம் என்று முனிவர்கள் கூறுகின்றனர்.

जङ्घे तलातलमथो सुतलं च जानू
किञ्चोरुभागयुगलं वितलातले द्वे ।
क्षोणीतलं जघनमम्बरमङ्ग नाभि-
र्वक्षश्च शक्रनिलयस्तव चक्रपाणे ॥२॥

ஜங்கே₄ தலாதலமதோ₂ ஸுதலம் ச ஜாநூ
கிஞ்சோருபா₄க₃யுக₃லம் விதலாதலே த்₃வே |
க்ஷோணீதலம் ஜக₄நமம்ப₃ரமங்க₃ நாபி₄-
ர்வக்ஷஶ்ச ஶக்ரநிலயஸ்தவ சக்ரபாணே || 2||

2. ப்ரபோ! சக்ரத்தைத் தரித்தவனே! உன் முழங்கால்கள் தலாதலம் என்றும், துடைகள் ஸூதல லோகமாகவும், இரு துடைகளின் கீழ்ப் பகுதி விதலம், அதலம் என்ற இரு உலகங்களாகவும், இடுப்பு பூலோகமாகவும், நாபி ஆகாசமாகவும், மார்பு இந்திர லோகமாகவும் கூறுகின்றனர்.

ग्रीवा महस्तव मुखं च जनस्तपस्तु
फालं शिरस्तव समस्तमयस्य सत्यम् ।
एवं जगन्मयतनो जगदाश्रितैर-
प्यन्यैर्निबद्धवपुषे भगवन्नमस्ते ॥३॥

க்₃ரீவா மஹஸ்தவ முக₂ம் ச ஜநஸ்தபஸ்து
பா₂லம் ஶிரஸ்தவ ஸமஸ்தமயஸ்ய ஸத்யம் |
ஏவம் ஜக₃ந்மயதநோ ஜக₃தா₃ஶ்ரிதைர-
ப்யந்யைர்நிப₃த்₃த₄வபுஷே ப₄க₃வந்நமஸ்தே || 3||

3. கழுத்து மஹர்லோகம், முகம் ஜனோலோகம், நெற்றி தபோலோகம், தலை பிரம்மலோகம் என்று கூறுகின்றனர். இப்படி உலகமாகவும், உலகப் பொருட்களாகவும் சரீரத்தைக் கொண்ட உனக்கு நமஸ்காரம்.

त्वद्ब्रह्मरन्ध्रपदमीश्वर विश्वकन्द
छन्दांसि केशव घनास्तव केशपाशा: ।
उल्लासिचिल्लियुगलं द्रुहिणस्य गेहं
पक्ष्माणि रात्रिदिवसौ सविता च नेत्रै ॥४॥

த்வத்₃ப்₃ரஹ்மரந்த்₄ரபத₃மீஶ்வர விஶ்வகந்த₃
ச₂ந்தா₃ம்ஸி கேஶவ க₄நாஸ்தவ கேஶபாஶா: |
உல்லாஸிசில்லியுக₃லம் த்₃ருஹிணஸ்ய கே₃ஹம்
பக்ஷ்மாணி ராத்ரிதி₃வஸௌ ஸவிதா ச நேத்ரை || 4||

4. உலகிற்குக் காரணமானவனே! உன் தலையில் உள்ள ப்ரம்மரந்த்ர ஸ்தானமான தொறை வேதங்கள், கேசங்கள் மேகங்கள், அழகிய இரு புருவங்கள் பிரம்மாவினுடைய வீடு, இமைகள் இரவு பகல், கண்கள் ஸூர்யன்.

निश्शेषविश्वरचना च कटाक्षमोक्ष:
कर्णौ दिशोऽश्वियुगलं तव नासिके द्वे ।
लोभत्रपे च भगवन्नधरोत्तरोष्ठौ
तारागणाश्च दशना: शमनश्च दंष्ट्रा ॥५॥

நிஶ்ஶேஷவிஶ்வரசநா ச கடாக்ஷமோக்ஷ:
கர்ணௌ தி₃ஶோ(அ)ஶ்வியுக₃லம் தவ நாஸிகே த்₃வே |
லோப₄த்ரபே ச ப₄க₃வந்நத₄ரோத்தரோஷ்டௌ₂
தாராக₃ணாஶ்ச த₃ஶநா: ஶமநஶ்ச த₃ம்ஷ்ட்ரா || 5||

5. பகவானே! உன் கடைக்கண் பார்வையில் அனைத்து உலகங்களும் உண்டாகின்றன. காதுகள் திக்குகள், மூக்கு அஸ்வினீ தேவர்கள், கீழ் மேல் உதடுகள் ஆசையும் வெட்கமும், பற்கள் நட்சத்திரங்கள், கோரைப்பல் யமன்.

माया विलासहसितं श्वसितं समीरो
जिह्वा जलं वचनमीश शकुन्तपङ्क्ति: ।
सिद्धादय: स्वरगणा मुखरन्ध्रमग्नि-
र्देवा भुजा: स्तनयुगं तव धर्मदेव: ॥६॥

மாயா விலாஸஹஸிதம் ஶ்வஸிதம் ஸமீரோ
ஜிஹ்வா ஜலம் வசநமீஶ ஶகுந்தபங்க்தி: |
ஸித்₃தா₄த₃ய: ஸ்வரக₃ணா முக₂ரந்த்₄ரமக்₃நி-
ர்தே₃வா பு₄ஜா: ஸ்தநயுக₃ம் தவ த₄ர்மதே₃வ: || 6||

6. ஈசனே! உன் புன்சிரிப்பு மாயை, உன் மூச்சு காற்று, நாக்கு தண்ணீர், வாக்கு பறவைக் கூட்டம், ஸ்வரக் கூட்டம் சித்தர் முதலியோர், வாய் நெருப்பு, கைகள் தேவர்கள், இரு ஸ்தனங்களும் தர்மதேவதை.

पृष्ठं त्वधर्म इह देव मन: सुधांशु -
रव्यक्तमेव हृदयंबुजमम्बुजाक्ष ।
कुक्षि: समुद्रनिवहा वसनं तु सन्ध्ये
शेफ: प्रजापतिरसौ वृषणौ च मित्र: ॥७॥

ப்ருஷ்ட₂ம் த்வத₄ர்ம இஹ தே₃வ மந: ஸுதா₄ம்ஶு -
ரவ்யக்தமேவ ஹ்ருத₃யம்பு₃ஜமம்பு₃ஜாக்ஷ |
குக்ஷி: ஸமுத்₃ரநிவஹா வஸநம் து ஸந்த்₄யே
ஶேப₂: ப்ரஜாபதிரஸௌ வ்ருஷணௌ ச மித்ர: || 7||

7. தேவா! உன் பின்புறம் அதர்மம், மனம் சந்திரன், இருதயத்தாமரையானது பிரக்ருதி, வயது ஏழு கடல்கள், வஸ்த்ரம் காலை, மாலை, ஸந்தி, ஆண்குறி பிரஜாபதி, இரு அண்டங்கள் மித்திரன்.

श्रोणीस्थलं मृगगणा: पदयोर्नखास्ते
हस्त्युष्ट्रसैन्धवमुखा गमनं तु काल: ।
विप्रादिवर्णभवनं वदनाब्जबाहु-
चारूरुयुग्मचरणं करुणांबुधे ते ॥८॥

ஶ்ரோணீஸ்த₂லம் ம்ருக₃க₃ணா: பத₃யோர்நகா₂ஸ்தே
ஹஸ்த்யுஷ்ட்ரஸைந்த₄வமுகா₂ க₃மநம் து கால: |
விப்ராதி₃வர்ணப₄வநம் வத₃நாப்₃ஜபா₃ஹு-
சாரூருயுக்₃மசரணம் கருணாம்பு₃தே₄ தே || 8||

8. கருணைக் கடலே! உன் இடுப்பு மிருகக்கூட்டங்கள், கால் நகங்கள் யானை, ஒட்டகம்,குதிரை முதலியவை, நடை காலம். உன் திருமுகம், கை, தொடை கால்களிலிருந்து நான்கு வர்ணங்களும் உண்டாயிற்று.

संसारचक्रमयि चक्रधर क्रियास्ते
वीर्यं महासुरगणोऽस्थिकुलानि शैला: ।
नाड्यस्सरित्समुदयस्तरवश्च रोम
जीयादिदं वपुरनिर्वचनीयमीश ॥९॥

ஸம்ஸாரசக்ரமயி சக்ரத₄ர க்ரியாஸ்தே
வீர்யம் மஹாஸுரக₃ணோ(அ)ஸ்தி₂குலாநி ஶைலா: |
நாட்₃யஸ்ஸரித்ஸமுத₃யஸ்தரவஶ்ச ரோம
ஜீயாதி₃த₃ம் வபுரநிர்வசநீயமீஶ || 9||

9. சக்ரம் ஏந்தியவனே! உன் செயல்கள் சக்ரம் போல் சுழலும் ஜனன மரணங்கள், பராக்ரமம் அசுரர்களின் கூட்டம், எலும்புகள் மலைகள், ரத்தக்குழாய்கள் நதிகள், ரோமம் மரங்கள். இப்படிப்பட்ட, விவரிக்கமுடியாத இந்த விராட்ரூபமானது என்றென்றும் சிறப்பாக விளங்கட்டும்.

ईदृग्जगन्मयवपुस्तव कर्मभाजां
कर्मावसानसमये स्मरणीयमाहु: ।
तस्यान्तरात्मवपुषे विमलात्मने ते
वातालयाधिप नमोऽस्तु निरुन्धि रोगान् ॥१०॥

ஈத்₃ருக்₃ஜக₃ந்மயவபுஸ்தவ கர்மபா₄ஜாம்
கர்மாவஸாநஸமயே ஸ்மரணீயமாஹு: |
தஸ்யாந்தராத்மவபுஷே விமலாத்மநே தே
வாதாலயாதி₄ப நமோ(அ)ஸ்து நிருந்தி₄ ரோகா₃ந் || 10||

10. இத்தகைய உலக ரூபமான உன் சரீரம், கர்ம வழியில் செல்பவர்களுக்கு , அந்த கர்மங்களின் முடிவில் தியானிக்கத் தகுந்தது என்று சொல்லுகிறார்கள். அந்த பிரபஞ்சத்திற்கு நிர்மலமான நீயே உயிர். உனக்கு என் நமஸ்காரம். ரோகங்களை நீயே போக்க வேண்டும்.


No comments:

Post a Comment