Wednesday, March 12, 2014

ஸ்ரீ நாராயணீயம் - தசகம் 12

ஸ்ரீ நாராயணீயம் - தசகம் 12, ஸ்ரீ நாராயணீயம் 12வது தசகம், ஸ்ரீமந் நாராயணீயம், ஸ்ரீ நாராயணீயம், Narayaneeyam, Sree Narayaneeyam, Sriman narayaneeyam,Srimad Narayaneeyam

த³ஶகம் -12
வராக அவதாரம்

स्वायम्भुवो मनुरथो जनसर्गशीलो
दृष्ट्वा महीमसमये सलिले निमग्नाम् ।
स्रष्टारमाप शरणं भवदङ्घ्रिसेवा-
तुष्टाशयं मुनिजनै: सह सत्यलोके ॥१॥

ஸ்வாயம்பு₄வோ மநுரதோ₂ ஜநஸர்க₃ஶீலோ
த்₃ருஷ்ட்வா மஹீமஸமயே ஸலிலே நிமக்₃நாம் |
ஸ்ரஷ்டாரமாப ஶரணம் ப₄வத₃ங்க்₄ரிஸேவா-
துஷ்டாஶயம் முநிஜநை: ஸஹ ஸத்யலோகே || 1||

1. ஜனங்களைப் படைப்பதில் ஈடுபட்டிருந்த ஸ்வாயம்புவ மனு, அகாலத்தில் பூமி ஜலத்தில் மூழ்குவதைக் கண்டார். உடனே, மனு முனிவர்களுடன், உன் பாதசேவையில் விருப்பமுடன் இருக்கும் பிரம்மாவைக் காண ஸத்யலோகம் சென்றார். 

कष्टं प्रजा: सृजति मय्यवनिर्निमग्ना
स्थानं सरोजभव कल्पय तत् प्रजानाम् ।
इत्येवमेष कथितो मनुना स्वयंभू: -
रम्भोरुहाक्ष तव पादयुगं व्यचिन्तीत् ॥ २ ॥

கஷ்டம் ப்ரஜா: ஸ்ருஜதி மய்யவநிர்நிமக்₃நா
ஸ்தா₂நம் ஸரோஜப₄வ கல்பய தத் ப்ரஜாநாம் |
இத்யேவமேஷ கதி₂தோ மநுநா ஸ்வயம்பூ₄: -
ரம்போ₄ருஹாக்ஷ தவ பாத₃யுக₃ம் வ்யசிந்தீத் ||  2 ||

2. படைப்பின் ஆரம்பத்திலேயே பூமி நீருக்குள் மூழ்கிவிட்டது. பிரும்மதேவ! மக்களுக்கு வாழ இடம் ஏற்படுத்தும் என்று, பிரும்மாவைப் பிரார்த்தித்தார். பிரும்மாவும், இந்த ஆபத்திலிருந்து விடுபட தங்களைத் தியானித்தாராமே!

हा हा विभो जलमहं न्यपिबं पुरस्ता-
दद्यापि मज्जति मही किमहं करोमि ।
इत्थं त्वदङ्घ्रियुगलं शरणं यतोऽस्य
नासापुटात् समभव: शिशुकोलरूपी ।३॥

ஹா ஹா விபோ₄ ஜலமஹம் ந்யபிப₃ம் புரஸ்தா-
த₃த்₃யாபி மஜ்ஜதி மஹீ கிமஹம் கரோமி |
இத்த₂ம் த்வத₃ங்க்₄ரியுக₃லம் ஶரணம் யதோ(அ)ஸ்ய
நாஸாபுடாத் ஸமப₄வ: ஶிஶுகோலரூபீ | 3||

3. ப்ரபோ! நான் முதலிலேயே நீரைக் குடித்தேன். இன்னும் பூமி நீரில் மூழ்குகிறது. என்ன செய்வேன்? என்று தங்களுடைய பாதத்தாமரையை தஞ்சம் அடைந்தார். அப்போது, பிரும்மாவினுடைய மூக்கிலிருந்து பன்றிக் குட்டியின் வடிவில் தாங்கள் தோன்றினீர்!

अङ्गुष्ठमात्रवपुरुत्पतित: पुरस्तात्
भोयोऽथ कुम्भिसदृश: समजृम्भथास्त्वम् ।
अभ्रे तथाविधमुदीक्ष्य भवन्तमुच्चै -
र्विस्मेरतां विधिरगात् सह सूनुभि: स्वै: ॥४॥

அங்கு₃ஷ்ட₂மாத்ரவபுருத்பதித: புரஸ்தாத்
போ₄யோ(அ)த₂ கும்பி₄ஸத்₃ருஶ: ஸமஜ்ரும்ப₄தா₂ஸ்த்வம் |
அப்₄ரே ததா₂வித₄முதீ₃க்ஷ்ய ப₄வந்தமுச்சை -
ர்விஸ்மேரதாம் விதி₄ரகா₃த் ஸஹ ஸூநுபி₄: ஸ்வை: || 4||

4. முதலில் கட்டை விரல் அளவே இருந்த தாங்கள், விரைவில் யானையின் அளவு வளர்ந்துவிட்டீர். வான் உயரத்திற்கு வளர்ந்த தங்களைப் பார்த்த பிரும்மா, மனு மற்றும் முனிவர்கள் வியந்தனர்.

कोऽसावचिन्त्यमहिमा किटिरुत्थितो मे
नासापुटात् किमु भवेदजितस्य माया ।
इत्थं विचिन्तयति धातरि शैलमात्र:
सद्यो भवन् किल जगर्जिथ घोरघोरम् ॥५॥

கோ(அ)ஸாவசிந்த்யமஹிமா கிடிருத்தி₂தோ மே
நாஸாபுடாத் கிமு ப₄வேத₃ஜிதஸ்ய மாயா |
இத்த₂ம் விசிந்தயதி தா₄தரி ஶைலமாத்ர:
ஸத்₃யோ ப₄வந் கில ஜக₃ர்ஜித₂ கோ₄ரகோ₄ரம் || 5||

5. என் மூக்கிலிருந்து வெளிவந்த அளவிடமுடியாத மகிமை உடைய இந்தப் பன்றி, யாராக இருக்கும்? பகவானுடைய மாயையாக இருக்குமோ என்று பிரும்மன் யோசித்தார். அப்போது, மலையைப் போல் தோன்றிய நீர் பயங்கரமாக கர்ஜித்தீர்.

तं ते निनादमुपकर्ण्य जनस्तप:स्था:
सत्यस्थिताश्च मुनयो नुनुवुर्भवन्तम् ।
तत्स्तोत्रहर्षुलमना: परिणद्य भूय-
स्तोयाशयं विपुलमूर्तिरवातरस्त्वम् ॥६॥

தம் தே நிநாத₃முபகர்ண்ய ஜநஸ்தப:ஸ்தா₂:
ஸத்யஸ்தி₂தாஶ்ச முநயோ நுநுவுர்ப₄வந்தம் |
தத்ஸ்தோத்ரஹர்ஷுலமநா: பரிணத்₃ய பூ₄ய-
ஸ்தோயாஶயம் விபுலமூர்திரவாதரஸ்த்வம் || 6||

6. தங்கள் கர்ஜனையைக் கேட்டு, ஜனோலோகம், தபோலோகம்,ஸத்யலோகம் ஆகியவற்றில் உள்ள முனிவர்கள் தங்களைத் துதித்தனர். அதைக் கேட்டு சந்தோஷமடைந்த தாங்கள் சமுத்திரத்திற்குள் பிரவேசித்தீர்கள்

ऊर्ध्वप्रसारिपरिधूम्रविधूतरोमा
प्रोत्क्षिप्तवालधिरवाङ्मुखघोरघोण: ।
तूर्णप्रदीर्णजलद: परिघूर्णदक्ष्णा
स्तोतृन् मुनीन् शिशिरयन्नवतेरिथ त्वम् ॥७॥

ஊர்த்₄வப்ரஸாரிபரிதூ₄ம்ரவிதூ₄தரோமா
ப்ரோத்க்ஷிப்தவாலதி₄ரவாங்முக₂கோ₄ரகோ₄ண: |
தூர்ணப்ரதீ₃ர்ணஜலத₃: பரிகூ₄ர்ணத₃க்ஷ்ணா
ஸ்தோத்ருந் முநீந் ஶிஶிரயந்நவதேரித₂ த்வம் || 7||

7. உயரத் தூக்கிய வாலுடனும், கடினமான ரோமங்கள் உள்ள தோளுடனும் கோரைப்பற்களுடனும், கீழ் நோக்கிய மூக்குடனும், சுழலும் கண்களுடனும் தாங்கள் சமுத்திரத்திற்குள் பிரவேசித்தீர்கள்.

अन्तर्जलं तदनुसंकुलनक्रचक्रं
भ्राम्यत्तिमिङ्गिलकुलं कलुषोर्मिमालम् ।
आविश्य भीषणरवेण रसातलस्था -
नाकम्पयन् वसुमतीमगवेषयस्त्वम् ॥८॥

அந்தர்ஜலம் தத₃நுஸம்குலநக்ரசக்ரம்
ப்₄ராம்யத்திமிங்கி₃லகுலம் கலுஷோர்மிமாலம் |
ஆவிஶ்ய பீ₄ஷணரவேண ரஸாதலஸ்தா₂ -
நாகம்பயந் வஸுமதீமக₃வேஷயஸ்த்வம் || 8||

8. தாங்கள் பிரவேசித்தபொழுது, கலங்கிய அலைகளால், முதலைகளும் திமிங்கலங்களும் சுழன்றன. பாதாள லோகத்திலுள்ளவர்களை நடுங்கச் செய்துகொண்டு தாங்கள் பூமியைத் தேடினீரல்லவா?

दृष्ट्वाऽथ दैत्यहतकेन रसातलान्ते
संवेशितां झटिति कूटकिटिर्विभो त्वम् ।
आपातुकानविगणय्य सुरारिखेटान्
दंष्ट्राङ्कुरेण वसुधामदधा: सलीलम् ॥९॥

த்₃ருஷ்ட்வா(அ)த₂ தை₃த்யஹதகேந ரஸாதலாந்தே
ஸம்வேஶிதாம் ஜ₂டிதி கூடகிடிர்விபோ₄ த்வம் |
ஆபாதுகாநவிக₃ணய்ய ஸுராரிகே₂டாந்
த₃ம்ஷ்ட்ராங்குரேண வஸுதா₄மத₃தா₄: ஸலீலம் || 9||

9. ப்ரபோ! அப்போது, ரஸாதல(பாதாள)லோகத்தின் நடுவில் வைக்கப்பட்டிருந்த பூமியைக் கண்டீர். எதிர்த்த அசுரர்களைப் பொருட்படுத்தாமல், பூமியைத் தித்திப்பற்களின் முனையால் தூக்கினீர்.

अभ्युद्धरन्नथ धरां दशनाग्रलग्न
मुस्ताङ्कुराङ्कित इवाधिकपीवरात्मा ।
उद्धूतघोरसलिलाज्जलधेरुदञ्चन्
क्रीडावराहवपुरीश्वर पाहि रोगात् ॥१०॥

அப்₄யுத்₃த₄ரந்நத₂ த₄ராம் த₃ஶநாக்₃ரலக்₃ந
முஸ்தாங்குராங்கித இவாதி₄கபீவராத்மா |
உத்₃தூ₄தகோ₄ரஸலிலாஜ்ஜலதே₄ருத₃ஞ்சந்
க்ரீடா₃வராஹவபுரீஶ்வர பாஹி ரோகா₃த் || 10||

10. குருவாயூரப்பா! விளையாட்டாக வராக அவதாரம் எடுத்தவனே! தங்கள் கோரைப் பல்லின் நுனியில் இருந்த பூமியானது முளை வந்த கோரைக் கிழங்கைப்போல் தோற்றமளித்தது. மிகப் பெரிய ரூபத்துடன், கலங்கிய சமுத்திரத்திலிருந்து மேலே வருகின்ற தாங்கள் ரோகத்திலிருந்து காக்க வேண்டும்.

No comments:

Post a Comment