Thursday, March 13, 2014

ஸ்ரீ நாராயணீயம் - தசகம் 13

ஸ்ரீ நாராயணீயம் - தசகம் 13, ஸ்ரீ நாராயணீயம் 13வது தசகம், ஸ்ரீமந் நாராயணீயம், ஸ்ரீ நாராயணீயம், ஸ்ரீமத் நாராயணீயம், நாராயணீயம், ஸ்ரீமன் நாராயணீயம் Narayaneeyam, Sree Narayaneeyam, Sriman narayaneeyam,Srimad Narayaneeyam

த³ஶகம் - 13
ஹிரண்யாக்ஷன் வதம்

हिरण्याक्षं तावद्वरद भवदन्वेषणपरं
चरन्तं सांवर्ते पयसि निजजङ्घापरिमिते ।
भवद्भक्तो गत्वा कपटपटुधीर्नारदमुनि:
शनैरूचे नन्दन् दनुजमपि निन्दंस्तव बलम् ॥१॥

ஹிரண்யாக்ஷம் தாவத்₃வரத₃ ப₄வத₃ந்வேஷணபரம்
சரந்தம் ஸாம்வர்தே பயஸி நிஜஜங்கா₄பரிமிதே |
ப₄வத்₃ப₄க்தோ க₃த்வா கபடபடுதீ₄ர்நாரத₃முநி:
ஶநைரூசே நந்த₃ந் த₃நுஜமபி நிந்த₃ம்ஸ்தவ ப₃லம் || 1||

1. அப்போது, தனது முழங்கால் அளவுள்ள கடலில் தங்களைத் தேடிக்கொண்டிருந்த ஹிரண்யாக்ஷனிடம், தங்கள் பக்தரான நாரதர், அசுரனைக் கொண்டாடியும், தங்களை நிந்தித்தும் சொல்ல ஆரம்பித்தார். 

स मायावी विष्णुर्हरति भवदीयां वसुमतीं
प्रभो कष्टं कष्टं किमिदमिति तेनाभिगदित: ।
नदन् क्वासौ क्वासविति स मुनिना दर्शितपथो
भवन्तं सम्प्रापद्धरणिधरमुद्यन्तमुदकात् ॥२॥

ஸ மாயாவீ விஷ்ணுர்ஹரதி ப₄வதீ₃யாம் வஸுமதீம்
ப்ரபோ₄ கஷ்டம் கஷ்டம் கிமித₃மிதி தேநாபி₄க₃தி₃த: |
நத₃ந் க்வாஸௌ க்வாஸவிதி ஸ முநிநா த₃ர்ஶிதபதோ₂
ப₄வந்தம் ஸம்ப்ராபத்₃த₄ரணித₄ரமுத்₃யந்தமுத₃காத் || 2||

2. அந்த மஹாவிஷ்ணு, உன்னுடைய பூமியைக் கவர்ந்து செல்கிறார் என்று நாரதர் சொன்னார். உடனே ஹிரண்யாக்ஷன், “விஷ்ணு எங்கே? எங்கே?” என்று கூச்சலிட்டான். நாரதர் காட்டிய வழியில், பூமியைத் தாங்கிக்கொண்டு ஜலத்திலிருந்து வெளியே வரும் தங்களை நோக்கி வந்தான்.

अहो आरण्योऽयं मृग इति हसन्तं बहुतरै-
र्दुरुक्तैर्विध्यन्तं दितिसुतमवज्ञाय भगवन् ।
महीं दृष्ट्वा दंष्ट्राशिरसि चकितां स्वेन महसा
पयोधावाधाय प्रसभमुदयुङ्क्था मृधविधौ ॥३॥

அஹோ ஆரண்யோ(அ)யம் ம்ருக₃ இதி ஹஸந்தம் ப₃ஹுதரை-
ர்து₃ருக்தைர்வித்₄யந்தம் தி₃திஸுதமவஜ்ஞாய ப₄க₃வந் |
மஹீம் த்₃ருஷ்ட்வா த₃ம்ஷ்ட்ராஶிரஸி சகிதாம் ஸ்வேந மஹஸா
பயோதா₄வாதா₄ய ப்ரஸப₄முத₃யுங்க்தா₂ ம்ருத₄விதௌ₄ || 3||

3. இது காட்டு மிருகம் என்று பரிகாசமாகவும், கெட்ட வார்த்தையாலும் பேசிய ஹிரண்யாக்ஷனை லட்சியம் செய்யாமல், தாங்கள், அசுரனைப் பார்த்து பயந்த அந்த பூமாதேவியை கோரைப்பற்களில் இருந்து விடுவித்து, தங்களுடைய யோகத்தால் கடலில் வைத்து, சண்டையிடுவதற்கு தயாரானீர்

गदापाणौ दैत्ये त्वमपि हि गृहीतोन्नतगदो
नियुद्धेन क्रीडन् घटघटरवोद्घुष्टवियता ।
रणालोकौत्सुक्यान्मिलति सुरसङ्घे द्रुतममुं
निरुन्ध्या: सन्ध्यात: प्रथममिति धात्रा जगदिषे ॥४॥

க₃தா₃பாணௌ தை₃த்யே த்வமபி ஹி க்₃ருஹீதோந்நதக₃தோ₃
நியுத்₃தே₄ந க்ரீட₃ந் க₄டக₄டரவோத்₃கு₄ஷ்டவியதா |
ரணாலோகௌத்ஸுக்யாந்மிலதி ஸுரஸங்கே₄ த்₃ருதமமும்
நிருந்த்₄யா: ஸந்த்₄யாத: ப்ரத₂மமிதி தா₄த்ரா ஜக₃தி₃ஷே || 4||

4. அசுரன் கதையை எடுத்துக் கொண்டு போர் புரிய வந்தான். தாங்களும் கதை ஏந்தி போர் புரிய ஆரம்பித்தீர். விண்ணதிரும்படியான அந்த யுத்தத்தைப் பார்க்க தேவர்கள் கூடினர். அப்போது பிரும்மா “பொழுது சாயும் முன்னர் இவனைக் கொன்று விடுங்கள்” என்று சொன்னார்.

गदोन्मर्दे तस्मिंस्तव खलु गदायां दितिभुवो
गदाघाताद्भूमौ झटिति पतितायामहह! भो: ।
मृदुस्मेरास्यस्त्वं दनुजकुलनिर्मूलनचणं
महाचक्रं स्मृत्वा करभुवि दधानो रुरुचिषे ॥५॥

க₃தோ₃ந்மர்தே₃ தஸ்மிம்ஸ்தவ க₂லு க₃தா₃யாம் தி₃திபு₄வோ
க₃தா₃கா₄தாத்₃பூ₄மௌ ஜ₂டிதி பதிதாயாமஹஹ! போ₄: |
ம்ருது₃ஸ்மேராஸ்யஸ்த்வம் த₃நுஜகுலநிர்மூலநசணம்
மஹாசக்ரம் ஸ்ம்ருத்வா கரபு₄வி த₃தா₄நோ ருருசிஷே || 5||

5. அந்த யுத்தத்தில், அசுரனுடைய கதையின் அடியால் தங்களுடைய கதை கீழே விழுந்தது. ஆச்சர்யம்! தாங்கள் புன்சிரிப்புடன், அசுர குலத்தை அழிப்பதற்காக, தங்களுடைய சக்ராயுதத்தைத் தரித்தீர்.

तत: शूलं कालप्रतिमरुषि दैत्ये विसृजति
त्वयि छिन्दत्येनत् करकलितचक्रप्रहरणात् ।
समारुष्टो मुष्ट्या स खलु वितुदंस्त्वां समतनोत्
गलन्माये मायास्त्वयि किल जगन्मोहनकरी: ॥६॥

தத: ஶூலம் காலப்ரதிமருஷி தை₃த்யே விஸ்ருஜதி
த்வயி சி₂ந்த₃த்யேநத் கரகலிதசக்ரப்ரஹரணாத் |
ஸமாருஷ்டோ முஷ்ட்யா ஸ க₂லு விதுத₃ம்ஸ்த்வாம் ஸமதநோத்
க₃லந்மாயே மாயாஸ்த்வயி கில ஜக₃ந்மோஹநகரீ: || 6||

6. உடனே, அசுரன் சூலத்தை ஏவினான்,  சக்ராயுதம் அதைத் தகர்த்தது. அசுரன் தங்களை முஷ்டியால் அடித்தான்., மாயா சம்பந்தமற்ற தங்களிடம் பல மாயைகளை ஏவினான். 

भवच्चक्रज्योतिष्कणलवनिपातेन विधुते
ततो मायाचक्रे विततघनरोषान्धमनसम् ।
गरिष्ठाभिर्मुष्टिप्रहृतिभिरभिघ्नन्तमसुरं
स्वपादाङ्गुष्ठेन श्रवणपदमूले निरवधी: ॥७॥

ப₄வச்சக்ரஜ்யோதிஷ்கணலவநிபாதேந விது₄தே
ததோ மாயாசக்ரே விததக₄நரோஷாந்த₄மநஸம் |
க₃ரிஷ்டா₂பி₄ர்முஷ்டிப்ரஹ்ருதிபி₄ரபி₄க்₄நந்தமஸுரம்
ஸ்வபாதா₃ங்கு₃ஷ்டே₂ந ஶ்ரவணபத₃மூலே நிரவதீ₄: || 7||

7. அந்த மாயை யாவையும் சக்ராயுதத்தின் ஜோதியால் தூளாகின. அதிக கோபத்துடன் அவன் தங்களை முஷ்டியால் குத்தினான். தாங்கள், கையின் நுனியால் அவனது காதின் அடிப்பாகத்தில் அடித்து அவனை வதம் செய்தீர்.

महाकाय: सो॓ऽयं तव चरणपातप्रमथितो
गलद्रक्तो वक्त्रादपतदृषिभि: श्लाघितहति: ।
तदा त्वामुद्दामप्रमदभरविद्योतिहृदया
मुनीन्द्रा: सान्द्राभि: स्तुतिभिरनुवन्नध्वरतनुम् ॥८॥

மஹாகாய: ஸோ(அ)யம் தவ சரணபாதப்ரமதி₂தோ
க₃லத்₃ரக்தோ வக்த்ராத₃பதத்₃ருஷிபி₄: ஶ்லாகி₄தஹதி: |
ததா₃ த்வாமுத்₃தா₃மப்ரமத₃ப₄ரவித்₃யோதிஹ்ருத₃யா
முநீந்த்₃ரா: ஸாந்த்₃ராபி₄: ஸ்துதிபி₄ரநுவந்நத்₄வரதநும் || 8||

8. தாமரை போன்ற தங்களது கைகளால் அடிக்கப்பட்ட அந்த ஹிரண்யாக்ஷன், ரத்தம் வழிய கீழே விழுந்து மாண்டான். அதைக் கண்ட முனிவர்கள், யக்ஞவராகமூர்த்தியான தங்களை உரத்த குரலில் துதித்தனர். 

त्वचि छन्दो रोमस्वपि कुशगणश्चक्षुषि घृतं
चतुर्होतारोऽङ्घ्रौ स्रुगपि वदने चोदर इडा ।
ग्रहा जिह्वायां ते परपुरुष कर्णे च चमसा
विभो सोमो वीर्यं वरद गलदेशेऽप्युपसद: ॥९॥

த்வசி ச₂ந்தோ₃ ரோமஸ்வபி குஶக₃ணஶ்சக்ஷுஷி க்₄ருதம்
சதுர்ஹோதாரோ(அ)ங்க்₄ரௌ ஸ்ருக₃பி வத₃நே சோத₃ர இடா₃ |
க்₃ரஹா ஜிஹ்வாயாம் தே பரபுருஷ கர்ணே ச சமஸா
விபோ₄ ஸோமோ வீர்யம் வரத₃ க₃லதே₃ஶே(அ)ப்யுபஸத₃: || 9||

9. தங்கள் தோளில் காயத்ரீ முதலிய சந்தஸ்ஸுகளும், ரோமங்களில் குசம் என்கிற நாணல்கூட்டமும், கண்களில் நெய்யும், நான்கு கால்களில் நான்கு ரித்விக்குகளும், முகத்தில் ஜூஹு என்ற ஹோமத்திற்கான பாத்திரமும், வயிற்றில் இடை என்ற பாத்திரமும், நாக்கில் உரல் போன்ற உருவமுள்ள கிருஹமென்ற பாத்திரங்களும், காதுகளில் மரத்தட்டுக்களும், தங்கள் வீர்யம் சோமரசமாகவும், கழுத்தில் இஷ்டிகளும் கொண்டு யக்ஞத்தின் உருவமாகக் காட்சி அளித்தீர். இவ்வாறு, யக்ஞவராகமூர்த்தியாய் பிரும்மாதி தேவர்களுக்கும், முனிவர்களுக்கும் தரிசனமளித்தீர்கள்.

मुनीन्द्रैरित्यादिस्तवनमुखरैर्मोदितमना
महीयस्या मूर्त्या विमलतरकीर्त्या च विलसन् ।
स्वधिष्ण्यं सम्प्राप्त: सुखरसविहारी मधुरिपो
निरुन्ध्या रोगं मे सकलमपि वातालयपते ॥१०॥

முநீந்த்₃ரைரித்யாதி₃ஸ்தவநமுக₂ரைர்மோதி₃தமநா
மஹீயஸ்யா மூர்த்யா விமலதரகீர்த்யா ச விலஸந் |
ஸ்வதி₄ஷ்ண்யம் ஸம்ப்ராப்த: ஸுக₂ரஸவிஹாரீ மது₄ரிபோ
நிருந்த்₄யா ரோக₃ம் மே ஸகலமபி வாதாலயபதே || 10||

10. ஓ குருவாயூரப்பா! இவ்வாறு முனிவர்களின் துதிகளால் திருப்தி அடைந்த மனம் உடையவனே! இப்படிப் பெருமை வாய்ந்த வடிவத்துடனும், ஆனந்தத்துடனும், புகழோடும் வைகுண்டத்தை அடைந்தவனே! மது என்ற அசுரனைக் கொன்றவனே! என்னுடைய அனைத்து ரோகங்களையும் போக்கவேண்டும்.


No comments:

Post a Comment