Tuesday, March 18, 2014

ஸ்ரீ நாராயணீயம் - தசகம் 18

ஸ்ரீ நாராயணீயம் - தசகம் 18, ஸ்ரீ நாராயணீயம் 18வது தசகம், ஸ்ரீமந் நாராயணீயம், ஸ்ரீ நாராயணீயம், ஸ்ரீமத் நாராயணீயம், நாராயணீயம், ஸ்ரீமன் நாராயணீயம் Narayaneeyam, Sree Narayaneeyam, Sriman narayaneeyam,Srimad Narayaneeyam

த³ஶகம் -18
பிருது சரித்திரம் 

जातस्य ध्रुवकुल एव तुङ्गकीर्ते-
रङ्गस्य व्यजनि सुत: स वेननामा ।
यद्दोषव्यथितमति: स राजवर्य-
स्त्वत्पादे निहितमना वनं गतोऽभूत् ॥१॥

ஜாதஸ்ய த்₄ருவகுல ஏவ துங்க₃கீர்தே-
ரங்க₃ஸ்ய வ்யஜநி ஸுத: ஸ வேநநாமா |
யத்₃தோ₃ஷவ்யதி₂தமதி: ஸ ராஜவர்ய-
ஸ்த்வத்பாதே₃ நிஹிதமநா வநம் க₃தோ(அ)பூ₄த் || 1||

1. துருவன் வம்சத்தில் பிறந்த புகழ்பெற்ற அரசன் அங்கன். அவனுக்கு வேனன் என்றொரு மகன் இருந்தான். வேனனுடைய தீய குணங்களினால் மனம் நொந்த அங்கன், தங்களின் பாதத்தைத் தியானிக்கக் காடு சென்றான்.

पापोऽपि क्षितितलपालनाय वेन:
पौराद्यैरुपनिहित: कठोरवीर्य: ।
सर्वेभ्यो निजबलमेव सम्प्रशंसन्
भूचक्रे तव यजनान्ययं न्यरौत्सीत् ॥२॥

பாபோ(அ)பி க்ஷிதிதலபாலநாய வேந:
பௌராத்₃யைருபநிஹித: கடோ₂ரவீர்ய: |
ஸர்வேப்₄யோ நிஜப₃லமேவ ஸம்ப்ரஶம்ஸந்
பூ₄சக்ரே தவ யஜநாந்யயம் ந்யரௌத்ஸீத் || 2||

2. வேனன் தீயவனாய் இருந்தபோதிலும், பராக்ரமத்தை உடைய அவனை நாட்டிலுள்ள பெரியோர் அரசனாக்கினர். அவனும் தன்னைப் பற்றியே தற்பெருமை பேசி வந்தான். தங்களுக்காக செய்யப்படும் யாகங்களைத் தடுத்தான்.

सम्प्राप्ते हितकथनाय तापसौघे
मत्तोऽन्यो भुवनपतिर्न कश्चनेति ।
त्वन्निन्दावचनपरो मुनीश्वरैस्तै:
शापाग्नौ शलभदशामनायि वेन: ॥३॥

ஸம்ப்ராப்தே ஹிதகத₂நாய தாபஸௌகே₄
மத்தோ(அ)ந்யோ பு₄வநபதிர்ந கஶ்சநேதி |
த்வந்நிந்தா₃வசநபரோ முநீஶ்வரைஸ்தை:
ஶாபாக்₃நௌ ஶலப₄த₃ஶாமநாயி வேந: || 3||

3. முனிவர்கள் அவனுக்கு நன்மைகளைச் சொல்லி அறிவுறுத்தச் சென்றனர். அவன், தங்களை நிந்தனை செய்து, “என்னைத் தவிர இவ்வுலகில் வேறு தெய்வம் இல்லை” என்று சொன்னான். அதனால் முனிவர்கள் கோபம் கொண்டு அவனை சபித்தனர். அந்த சாபக்கனலில் அவன் விட்டில் பூச்சியின் நிலைமையை அடைந்தான்.

तन्नाशात् खलजनभीरुकैर्मुनीन्द्रै-
स्तन्मात्रा चिरपरिरक्षिते तदङ्गे ।
त्यक्ताघे परिमथितादथोरुदण्डा-
द्दोर्दण्डे परिमथिते त्वमाविरासी: ॥४॥

தந்நாஶாத் க₂லஜநபீ₄ருகைர்முநீந்த்₃ரை-
ஸ்தந்மாத்ரா சிரபரிரக்ஷிதே தத₃ங்கே₃ |
த்யக்தாகே₄ பரிமதி₂தாத₃தோ₂ருத₃ண்டா₃-
த்₃தோ₃ர்த₃ண்டே₃ பரிமதி₂தே த்வமாவிராஸீ: || 4||

4. வேனன் இறந்ததால், நாடு துஷ்டர்களின் வசப்பட்டது. இதனால் பயந்த முனிவர்கள், வேனனுடைய தாயால் பாதுகாக்கப்பட்ட வேனனுடைய உடலைப் பெற்று, தொடைகளைக் கடைந்து அந்த உடலைப் பாவமற்றதாக செய்தனர். கையைக் கடைந்தபொழுது, பிருதுவான தாங்கள் தோன்றினீர்கள்.

विख्यात: पृथुरिति तापसोपदिष्टै:
सूताद्यै: परिणुतभाविभूरिवीर्य: ।
वेनार्त्या कबलितसम्पदं धरित्री-
माक्रान्तां निजधनुषा समामकार्षी: ॥५॥

விக்₂யாத: ப்ருது₂ரிதி தாபஸோபதி₃ஷ்டை:
ஸூதாத்₃யை: பரிணுதபா₄விபூ₄ரிவீர்ய: |
வேநார்த்யா கப₃லிதஸம்பத₃ம் த₄ரித்ரீ-
மாக்ராந்தாம் நிஜத₄நுஷா ஸமாமகார்ஷீ: || 5||

5. முனிவர்கள், தங்களை பிருது என்ற கீர்த்தி வாய்ந்த அரசன் என்று கொண்டாடினார்கள். கந்தர்வர்கள் கானம் செய்தனர். வேனனுடைய பாபங்களாலும், கொடுமைகளாலும் பூமி எல்லாவித பொருட்களையும் தன்னுள் மறைத்துக்கொண்டு விட்டது. அதனால் தாங்கள் கோபம் கொண்டு, தங்கள் வில்லுடன் பூமியைத் துரத்தி, பூமியை சமப்படுத்தினீர்கள். 

भूयस्तां निजकुलमुख्यवत्सयुक्त्यै-
र्देवाद्यै: समुचितचारुभाजनेषु ।
अन्नादीन्यभिलषितानि यानि तानि
स्वच्छन्दं सुरभितनूमदूदुहस्त्वम् ॥६॥

பூ₄யஸ்தாம் நிஜகுலமுக்₂யவத்ஸயுக்த்யை-
ர்தே₃வாத்₃யை: ஸமுசிதசாருபா₄ஜநேஷு |
அந்நாதீ₃ந்யபி₄லஷிதாநி யாநி தாநி
ஸ்வச்ச₂ந்த₃ம் ஸுரபி₄தநூமதூ₃து₃ஹஸ்த்வம் || 6||

6. பிறகு, காமதேனு என்ற பசுவின் வடிவில் இருந்த பூமியை, தேவர்களையும், மற்றவர்களையும் கன்றாக இருந்து அழகிய பாத்திரங்களில், அவரவர்களுக்குத் தேவையானவற்றை கறந்து கொள்ளச் செய்தீர்கள்.

आत्मानं यजति मखैस्त्वयि त्रिधाम-
न्नारब्धे शततमवाजिमेधयागे ।
स्पर्धालु: शतमख एत्य नीचवेषो
हृत्वाऽश्वं तव तनयात् पराजितोऽभूत् ॥७॥

ஆத்மாநம் யஜதி மகை₂ஸ்த்வயி த்ரிதா₄ம-
ந்நாரப்₃தே₄ ஶததமவாஜிமேத₄யாகே₃ |
ஸ்பர்தா₄லு: ஶதமக₂ ஏத்ய நீசவேஷோ
ஹ்ருத்வா(அ)ஶ்வம் தவ தநயாத் பராஜிதோ(அ)பூ₄த் || 7||

7. விஷ்ணுவே! தாங்கள் தங்களையே பூஜித்து நூறு அஸ்வமேத யாகங்கள் நடத்தி வந்தீர்கள். நூறாவது அஸ்வமேத யாகத்தின் போது, இந்திரன் பொறாமை கொண்டு, நாஸ்திக வேஷம் பூண்டு, யாகக் குதிரையை அபகரிக்க முயன்றான். தங்கள் புத்ரனான விஜிதாஸ்வனால் தோல்வியுற்றான்.

देवेन्द्रं मुहुरिति वाजिनं हरन्तं
वह्नौ तं मुनिवरमण्डले जुहूषौ ।
रुन्धाने कमलभवे क्रतो: समाप्तौ
साक्षात्त्वं मधुरिपुमैक्षथा: स्वयं स्वम् ॥८॥

தே₃வேந்த்₃ரம் முஹுரிதி வாஜிநம் ஹரந்தம்
வஹ்நௌ தம் முநிவரமண்ட₃லே ஜுஹூஷௌ |
ருந்தா₄நே கமலப₄வே க்ரதோ: ஸமாப்தௌ
ஸாக்ஷாத்த்வம் மது₄ரிபுமைக்ஷதா₂: ஸ்வயம் ஸ்வம் || 8||

8. இவ்வாறு இந்திரன் அடிக்கடி யாகக்குதிரையைத் திருட முயல்வதைக் கண்ட முனிவர்கள், அந்த இந்திரனையே அக்னியில் அர்ப்பணம் செய்ய முற்பட்டனர். பிரும்மதேவன் அதை தடுத்தார். யாகத்தின் முடிவில், பிருதுவின் வடிவில் இருந்த தாங்கள், தங்கள் அம்சமான மகாவிஷ்ணுவை பிரத்யக்ஷமாகப் பார்த்தீர்கள்.

तद्दत्तं वरमुपलभ्य भक्तिमेकां
गङ्गान्ते विहितपद: कदापि देव ।
सत्रस्थं मुनिनिवहं हितानि शंस-
न्नैक्षिष्ठा: सनकमुखान् मुनीन् पुरस्तात् ॥९॥

தத்₃த₃த்தம் வரமுபலப்₄ய ப₄க்திமேகாம்
க₃ங்கா₃ந்தே விஹிதபத₃: கதா₃பி தே₃வ |
ஸத்ரஸ்த₂ம் முநிநிவஹம் ஹிதாநி ஶம்ஸ-
ந்நைக்ஷிஷ்டா₂: ஸநகமுகா₂ந் முநீந் புரஸ்தாத் || 9||

9. தேவனே! மகாவிஷ்ணுவிடமிருந்து பக்தி ஒன்றையே வரமாகப் பெற்றீர்கள். ஒரு சமயம் ஸத்ரயாகம் நடந்தது. அப்போது, முனிவர்களிடம் தர்மங்களை உபதேசித்துக்கொண்டிருந்த தாங்கள், ஸனகாதியர்களை தங்கள் முன் கண்டீர்கள்.

विज्ञानं सनकमुखोदितं दधान:
स्वात्मानं स्वयमगमो वनान्तसेवी ।
तत्तादृक्पृथुवपुरीश सत्वरं मे
रोगौघं प्रशमय वातगेहवासिन् ॥१०॥

விஜ்ஞாநம் ஸநகமுகோ₂தி₃தம் த₃தா₄ந:
ஸ்வாத்மாநம் ஸ்வயமக₃மோ வநாந்தஸேவீ |
தத்தாத்₃ருக்ப்ருது₂வபுரீஶ ஸத்வரம் மே
ரோகௌ₃க₄ம் ப்ரஶமய வாதகே₃ஹவாஸிந் || 10||

10. ஸனத்குமாரரால் பிரம்மஞானம் பற்றி நன்கு அறிந்த தாங்கள், காட்டில் வசித்து பரப்ரம்மத்தை அனுபவித்தீர்கள். பிருதுவாக அவதரித்த குருவாயூரப்பா, என்னுடைய ரோகங்களை சீக்கிரமாகப் போக்கி அருளுங்கள்.
  

No comments:

Post a Comment