Wednesday, March 19, 2014

ஸ்ரீ நாராயணீயம் - தசகம் 19

ஸ்ரீ நாராயணீயம் - தசகம் 19, ஸ்ரீ நாராயணீயம் 19வது தசகம், ஸ்ரீமந் நாராயணீயம், ஸ்ரீ நாராயணீயம், ஸ்ரீமத் நாராயணீயம், நாராயணீயம், ஸ்ரீமன் நாராயணீயம் Narayaneeyam, Sree Narayaneeyam, Sriman narayaneeyam,Srimad Narayaneeyam

த³ஶகம் 19
ப்ரசேதஸ் சரித்திரம்

पृथोस्तु नप्ता पृथुधर्मकर्मठ:
प्राचीनबर्हिर्युवतौ शतद्रुतौ ।
प्रचेतसो नाम सुचेतस: सुता-
नजीजनत्त्वत्करुणाङ्कुरानिव ॥१॥

ப்ருதோ₂ஸ்து நப்தா ப்ருது₂த₄ர்மகர்மட₂:
ப்ராசீநப₃ர்ஹிர்யுவதௌ ஶதத்₃ருதௌ | 
ப்ரசேதஸோ நாம ஸுசேதஸ: ஸுதா-
நஜீஜநத்த்வத்கருணாங்குராநிவ || 1|| 

1. பிருதுவின் கொள்ளுப்பேரன் ப்ராசீனபர்ஹிஸ் என்ற அரசன்.  அவன் தர்மத்தை விடாது அனுஷ்டித்து வந்தான். அவனுக்கு சதத்ருதி என்ற மனைவியிடத்தில், தங்கள் கருணையால் ப்ரசேதஸ் என்ற பெயருள்ள பத்து புதல்வர்கள் பிறந்தனர்.

पितु: सिसृक्षानिरतस्य शासनाद्-
भवत्तपस्याभिरता दशापि ते
पयोनिधिं पश्चिममेत्य तत्तटे
सरोवरं सन्ददृशुर्मनोहरम् ॥२॥

பிது: ஸிஸ்ருக்ஷாநிரதஸ்ய ஶாஸநாத்₃-
ப₄வத்தபஸ்யாபி₄ரதா த₃ஶாபி தே
பயோநிதி₄ம் பஶ்சிமமேத்ய தத்தடே
ஸரோவரம் ஸந்த₃த்₃ருஶுர்மநோஹரம் || 2|| 

2. உலக ஸ்ருஷ்டியில் ஈடுபடவேண்டும் என்ற தந்தையின் உத்தரவுப்படி, அவர்கள் தங்களைக் குறித்து தவம் செய்ய மேற்கு சமுத்திரக் கரையை அடைந்தனர். அங்கு அழகிய குளத்தைக் கண்டனர்.

तदा भवत्तीर्थमिदं समागतो
भवो भवत्सेवकदर्शनादृत: ।
प्रकाशमासाद्य पुर: प्रचेतसा-
मुपादिशत् भक्ततमस्तव स्तवम् ॥३॥

ததா₃ ப₄வத்தீர்த₂மித₃ம் ஸமாக₃தோ
ப₄வோ ப₄வத்ஸேவகத₃ர்ஶநாத்₃ருத: | 
ப்ரகாஶமாஸாத்₃ய புர: ப்ரசேதஸா-
முபாதி₃ஶத் ப₄க்ததமஸ்தவ ஸ்தவம் || 3|| 

3. தங்கள் பக்தர்களான ப்ரசேதஸுகளைக் காண ஆவல் கொண்ட பரமேஸ்வரன் அந்த குளத்திற்கு வந்தார். .தங்கள் பக்தர்களுள் சிறந்தவரான பரமேஸ்வரன் தங்களுடைய மந்திரத்தை அவர்களுக்கு உபதேசித்தார்.

स्तवं जपन्तस्तममी जलान्तरे
भवन्तमासेविषतायुतं समा: ।
भवत्सुखास्वादरसादमीष्वियान्
बभूव कालो ध्रुववन्न शीघ्रता ॥४॥

ஸ்தவம் ஜபந்தஸ்தமமீ ஜலாந்தரே
ப₄வந்தமாஸேவிஷதாயுதம் ஸமா: | 
ப₄வத்ஸுகா₂ஸ்வாத₃ரஸாத₃மீஷ்வியாந்
ப₃பூ₄வ காலோ த்₄ருவவந்ந ஶீக்₄ரதா || 4|| 

4. அந்த மந்திரத்தை, அவர்கள் தண்ணீரின் நடுவில் இருந்து கொண்டு ஆயிரம் வருடங்கள் ஜபித்தனர். பதினாயிரம் வருடங்கள் தங்களை சேவித்தனர். சீக்கிரமாகப் பலனையடைந்த துருவனைப் போல் இல்லாமல் இவர்கள் தங்களை அனுபவித்து அறிவதற்காக நீண்ட காலம் தவம் செய்தனர்.

तपोभिरेषामतिमात्रवर्धिभि:
स यज्ञहिंसानिरतोऽपि पावित: ।
पिताऽपि तेषां गृहयातनारद-
प्रदर्शितात्मा भवदात्मतां ययौ ॥५॥

தபோபி₄ரேஷாமதிமாத்ரவர்தி₄பி₄:
ஸ யஜ்ஞஹிம்ஸாநிரதோ(அ)பி பாவித: | 
பிதா(அ)பி தேஷாம் க்₃ருஹயாதநாரத₃-
ப்ரத₃ர்ஶிதாத்மா ப₄வதா₃த்மதாம் யயௌ || 5|| 

5. அவர்களுடைய இந்த தவத்தால் அந்த வேனன் பவித்ரானாக்கப்பட்டான். அவர்களுடைய தந்தை ப்ராசீனபர்ஹிஸும், நாரதரால் ஆத்மஞானம் உபதேசிக்கப்பட்டு, தங்களை அடைந்தார்.

कृपाबलेनैव पुर: प्रचेतसां
प्रकाशमागा: पतगेन्द्रवाहन: ।
विराजि चक्रादिवरायुधांशुभि-
र्भुजाभिरष्टाभिरुदञ्चितद्युति: ॥६॥

க்ருபாப₃லேநைவ புர: ப்ரசேதஸாம்
ப்ரகாஶமாகா₃: பதகே₃ந்த்₃ரவாஹந: | 
விராஜி சக்ராதி₃வராயுதா₄ம்ஶுபி₄-
ர்பு₄ஜாபி₄ரஷ்டாபி₄ருத₃ஞ்சிதத்₃யுதி: || 6|| 

6. பிறகு, மிகுந்த கருணையால், தாங்கள் கருட வாகனத்தில், எட்டு கைகளுடனும், திவ்ய ஆயுதங்களுடனும் ப்ரசேதஸுகளுக்கு காட்சி அளித்தீர்கள்.

प्रचेतसां तावदयाचतामपि
त्वमेव कारुण्यभराद्वरानदा: ।
भवद्विचिन्ताऽपि शिवाय देहिनां
भवत्वसौ रुद्रनुतिश्च कामदा ॥७॥

ப்ரசேதஸாம் தாவத₃யாசதாமபி
த்வமேவ காருண்யப₄ராத்₃வராநதா₃: | 
ப₄வத்₃விசிந்தா(அ)பி ஶிவாய தே₃ஹிநாம்
ப₄வத்வஸௌ ருத்₃ரநுதிஶ்ச காமதா₃ || 7|| 

7. அவர்கள் வேண்டாமலேயே அவர்களுக்கு வரங்களைக் கொடுத்தீர்கள். மேலும் “ பக்தர்களான உங்களை நினைப்பதே சகல மங்களங்களையும் கொடுக்கும். பரமேஸ்வரனால் உங்களுக்கு உபதேசிக்கப்பட்ட இந்த ருத்ரகீதமும், ஜபிப்பவர்களுக்கு வேண்டிய பொருள்களைக் கொடுக்கும்” என்ற வரங்களைக் கொடுத்தீர்கள்.

अवाप्य कान्तां तनयां महीरुहां
तया रमध्वं दशलक्षवत्सरीम् ।
सुतोऽस्तु दक्षो ननु तत्क्षणाच्च मां
प्रयास्यथेति न्यगदो मुदैव तान् ॥८॥

அவாப்ய காந்தாம் தநயாம் மஹீருஹாம்
தயா ரமத்₄வம் த₃ஶலக்ஷவத்ஸரீம் | 
ஸுதோ(அ)ஸ்து த₃க்ஷோ நநு தத்க்ஷணாச்ச மாம்
ப்ரயாஸ்யதே₂தி ந்யக₃தோ₃ முதை₃வ தாந் || 8||

8. மேலும், “மரங்களின் பெண்ணான வார்க்ஷி என்பவளை மனைவியாக அடைந்து, அவளோடு பத்து லட்சம் வருடங்கள் இல்லறம் நடத்துங்கள். தக்ஷன் என்ற புத்திரனை அடைந்து, பிறகு என்னை வந்து அடைவீர்களாக” என்று அனுக்ரஹித்தீர்கள்.

ततश्च ते भूतलरोधिनस्तरून्
क्रुधा दहन्तो द्रुहिणेन वारिता: ।
द्रुमैश्च दत्तां तनयामवाप्य तां
त्वदुक्तकालं सुखिनोऽभिरेमिरे ॥९॥

ததஶ்ச தே பூ₄தலரோதி₄நஸ்தரூந்
க்ருதா₄ த₃ஹந்தோ த்₃ருஹிணேந வாரிதா: | 
த்₃ருமைஶ்ச த₃த்தாம் தநயாமவாப்ய தாம்
த்வது₃க்தகாலம் ஸுகி₂நோ(அ)பி₄ரேமிரே || 9|| 

9. பிறகு, ப்ரசேதஸுகள் பூமி முழுவதும் மரங்கள் வளர்ந்து மறைத்துக்கொண்டிருந்ததைக் கண்டு கோபம் கொண்டு மரங்களை எரிக்கத் தொடங்கிர். அப்போது பிரும்மா அதைத் தடுத்தார். அந்த மரங்கள் தமது பெண்ணான வார்க்ஷியை அவர்களுக்கு மணம் செய்து கொடுத்தன. பிறகு, தங்களால் சொல்லப்பட்ட காலம் வரை அவர்கள் சுகமாக வாழ்ந்தனர்.

अवाप्य दक्षं च सुतं कृताध्वरा:
प्रचेतसो नारदलब्धया धिया ।
अवापुरानन्दपदं तथाविध-
स्त्वमीश वातालयनाथ पाहि माम् ॥१०॥

அவாப்ய த₃க்ஷம் ச ஸுதம் க்ருʼதாத்₄வரா:
ப்ரசேதஸோ நாரத₃லப்₃த₄யா தி₄யா | 
அவாபுராநந்த₃பத₃ம் ததா₂வித₄-
ஸ்த்வமீஶ வாதாலயநாத₂ பாஹி மாம் || 10||

10. ப்ரசேதஸுகள், தக்ஷனைப் புத்ரனாக அடைந்து, பல யாகங்களைச் செய்து, நாரதரால் ஆத்மஞானம் உபதேசிக்கப்பட்டு, தங்கள் ஸ்தானத்தை அடைந்தனர். குருவாயூரப்பா! அத்தகைய மகிமை வாய்ந்த தாங்கள் என்னைக் காத்து அருள வேண்டும்.


No comments:

Post a Comment