Tuesday, March 11, 2014

ஸ்ரீ நாராயணீயம் - தசகம் 11

ஸ்ரீ நாராயணீயம் - தசகம் 11, ஸ்ரீ நாராயணீயம் 11வது தசகம், ஸ்ரீமந் நாராயணீயம், ஸ்ரீ நாராயணீயம், Narayaneeyam, Sree Narayaneeyam, Sriman narayaneeyam,Srimad Narayaneeyam

த³ஶகம் 11
ஹிரண்யாக்ஷன், ஹிரண்யகசிபு உற்பத்தி

क्रमेण सर्गे परिवर्धमाने
कदापि दिव्या: सनकादयस्ते ।
भवद्विलोकाय विकुण्ठलोकं
प्रपेदिरे मारुतमन्दिरेश ॥१॥

க்ரமேண ஸர்கே₃ பரிவர்த₄மாநே
கதா₃பி தி₃வ்யா: ஸநகாத₃யஸ்தே |
ப₄வத்₃விலோகாய விகுண்ட₂லோகம்
ப்ரபேதி₃ரே மாருதமந்தி₃ரேஶ || 1||

1. ஹே குருவாயூரப்பா! படைப்புத் தொழில் நன்கு பெருகி வரும்பொழுது, ஸனகாதிகள் தங்களைத் தரிசிப்பதற்காக வைகுண்டலோகத்தை அடைந்தார்களாமே.

मनोज्ञनैश्रेयसकाननाद्यै-
रनेकवापीमणिमन्दिरैश्च ।
अनोपमं तं भवतो निकेतं
मुनीश्वरा: प्रापुरतीतकक्ष्या: ॥२॥

மநோஜ்ஞநைஶ்ரேயஸகாநநாத்₃யை-
ரநேகவாபீமணிமந்தி₃ரைஶ்ச |
அநோபமம் தம் ப₄வதோ நிகேதம்
முநீஶ்வரா: ப்ராபுரதீதகக்ஷ்யா: || 2||

2. ஆறு கோட்டை வாசல்களைக் கடந்து, அழகிய தோட்டங்கள், குளங்கள், ரத்னமயமான வீடுகள் முதலியவைகளால் ஒப்பற்று விளங்கிய தங்களுடைய வைகுந்தத்தை அடைந்தனர்.

भवद्दिद्दृक्षून्भवनं विविक्षून्
द्वा:स्थौ जयस्तान् विजयोऽप्यरुन्धाम् ।
तेषां च चित्ते पदमाप कोप:
सर्वं भवत्प्रेरणयैव भूमन् ॥३॥

ப₄வத்₃தி₃த்₃த்₃ருக்ஷூந்ப₄வநம் விவிக்ஷூந்
த்₃வா:ஸ்தௌ₂ ஜயஸ்தாந் விஜயோ(அ)ப்யருந்தா₄ம் |
தேஷாம் ச சித்தே பத₃மாப கோப:
ஸர்வம் ப₄வத்ப்ரேரணயைவ பூ₄மந் || 3||

3. உன்னைத் தரிசிக்க விரும்பிய அந்த ஸனகாதிகளை, ஜயன், விஜயன் என்ற வாயிற்காப்போர்கள் தடுத்து நிறுத்தினார்கள். ஸனகாதிகளுடைய மனதில் கோபம் உண்டானது. அவ்வாறு நடந்ததும் உன் செயலே!

वैकुण्ठलोकानुचितप्रचेष्टौ
कष्टौ युवां दैत्यगतिं भजेतम् ।
इति प्रशप्तौ भवदाश्रयौ तौ
हरिस्मृतिर्नोऽस्त्विति नेमतुस्तान् ॥४॥

வைகுண்ட₂லோகாநுசிதப்ரசேஷ்டௌ
கஷ்டௌ யுவாம் தை₃த்யக₃திம் ப₄ஜேதம் |
இதி ப்ரஶப்தௌ ப₄வதா₃ஶ்ரயௌ தௌ
ஹரிஸ்ம்ருதிர்நோ(அ)ஸ்த்விதி நேமதுஸ்தாந் || 4||

4. "வைகுண்டத்திற்குத் தகாத செயல்களைச் செய்த நீங்கள் இருவரும் அசுரப் பிறவியை அடையுங்கள்" என்று சபிக்கப்பட்டார்கள். உடனே, அவ்விருவரும் ஸனகாதிகளை வணங்கி அசுர ஜன்மாவிலும் ஸ்ரீஹரியின் நினைவு எங்களை விட்டு நீங்காதிருக்க வேண்டும் என்று வேண்டினார்கள்.

तदेतदाज्ञाय भवानवाप्त:
सहैव लक्ष्म्या बहिरम्बुजाक्ष ।
खगेश्वरांसार्पितचारुबाहु-
रानन्दयंस्तानभिराममूर्त्या ॥५॥

ததே₃ததா₃ஜ்ஞாய ப₄வாநவாப்த:
ஸஹைவ லக்ஷ்ம்யா ப₃ஹிரம்பு₃ஜாக்ஷ |
க₂கே₃ஶ்வராம்ஸார்பிதசாருபா₃ஹு-
ராநந்த₃யம்ஸ்தாநபி₄ராமமூர்த்யா || 5||

5. தாமரைக் கண்ணனே! நடந்ததை அறிந்த தாங்கள், மகாலக்ஷ்மியுடன் கூட, கருடனின் தோளில் தங்கள் கைகளை வைத்துக்கொண்டு, அழகிய திருவுருவத்துடன், ஸனகாதிகளை ஆனந்தப்படுத்துபவராக வைகுண்டவாசலை அடைந்தீர்.

प्रसाद्य गीर्भि: स्तुवतो मुनीन्द्रा-
ननन्यनाथावथ पार्षदौ तौ ।
संरम्भयोगेन भवैस्त्रिभिर्मा-
मुपेतमित्यात्तकृपं न्यगादी: ॥६॥

ப்ரஸாத்₃ய கீ₃ர்பி₄: ஸ்துவதோ முநீந்த்₃ரா-
நநந்யநாதா₂வத₂ பார்ஷதௌ₃ தௌ |
ஸம்ரம்ப₄யோகே₃ந ப₄வைஸ்த்ரிபி₄ர்மா-
முபேதமித்யாத்தக்ருபம் ந்யகா₃தீ₃: || 6||

6. உம்மைக் கண்டதும் ஸனகாதிகள் ஆனந்தம் அடைந்து, பல ஸ்லோகங்களால் துதித்தார்கள். அவர்களுக்கு அனுக்ரஹம் செய்தீர்கள். பிறகு, ஜயவிஜயர்களைப் பார்த்து, “என்னைத் தவிர வேறு கதியற்ற நீங்கள் மூன்று பிறவி எடுத்து முடிவில் என்னை வந்து அடையுங்கள்” என்று கூறினீர்.

त्वदीयभृत्यावथ काश्यपात्तौ
सुरारिवीरावुदितौ दितौ द्वौ ।
सन्ध्यासमुत्पादनकष्टचेष्टौ
यमौ च लोकस्य यमाविवान्यौ ॥७॥

த்வதீ₃யப்₄ருத்யாவத₂ காஶ்யபாத்தௌ
ஸுராரிவீராவுதி₃தௌ தி₃தௌ த்₃வௌ |
ஸந்த்₄யாஸமுத்பாத₃நகஷ்டசேஷ்டௌ
யமௌ ச லோகஸ்ய யமாவிவாந்யௌ || 7||

7. அதன் பிறகு அவர்கள் கச்யபருக்கும், திதிக்கும் பிள்ளைகளாக, அசுரர்களாகப் பிறந்தார்கள். ஸந்த்யா காலத்தில் அவர்கள் பிறப்பிற்குறிய புணர்ச்சி நடந்ததால் அவர்கள் க்ரூரர்களாகவும், மூன்று உலகங்களையும் அச்சுறுத்துபவர்களாகவும், உலகிற்கு மற்றொரு யமன் போலவும் இருந்தனர்.

हिरण्यपूर्व: कशिपु: किलैक:
परो हिरण्याक्ष इति प्रतीत: ।
उभौ भवन्नाथमशेषलोकं
रुषा न्यरुन्धां निजवासनान्धौ ॥८॥

ஹிரண்யபூர்வ: கஶிபு: கிலைக:
பரோ ஹிரண்யாக்ஷ இதி ப்ரதீத: |
உபௌ₄ ப₄வந்நாத₂மஶேஷலோகம்
ருஷா ந்யருந்தா₄ம் நிஜவாஸநாந்தௌ₄ || 8||

8. ஹிரண்யகசிபு, ஹிரண்யாக்ஷன் என்ற பெயருடன், அசுர நடத்தையால், உன்னையே தலைவனாகக் கொண்ட எல்லா உலகங்களையும் கொடுமைப் படுத்தினார்கள்.

तयोर्हिरण्याक्षमहासुरेन्द्रो
रणाय धावन्ननवाप्तवैरी ।
भवत्प्रियां क्ष्मां सलिले निमज्य
चचार गर्वाद्विनदन् गदावान् ॥९॥

தயோர்ஹிரண்யாக்ஷமஹாஸுரேந்த்₃ரோ
ரணாய தா₄வந்நநவாப்தவைரீ |
ப₄வத்ப்ரியாம் க்ஷ்மாம் ஸலிலே நிமஜ்ய
சசார க₃ர்வாத்₃விநத₃ந் க₃தா₃வாந் || 9||

9.அவர்களுள், ஹிரண்யாக்ஷன் என்பவன் , கையில் கதையுடன், தன்னை எதிர்த்து சண்டையிட உலகில் எவரும் இல்லை என்ற கர்வத்தில்,  பூமிதேவியை நீருக்கு அடியில் கொண்டு வைத்தான்.

ततो जलेशात् सदृशं भवन्तं
निशम्य बभ्राम गवेषयंस्त्वाम् ।
भक्तैकदृश्य: स कृपानिधे त्वं
निरुन्धि रोगान् मरुदालयेश ॥१०

ததோ ஜலேஶாத் ஸத்₃ருஶம் ப₄வந்தம்
நிஶம்ய ப₃ப்₄ராம க₃வேஷயம்ஸ்த்வாம் |
ப₄க்தைகத்₃ருஶ்ய: ஸ க்ருபாநிதே₄ த்வம்
நிருந்தி₄ ரோகா₃ந் மருதா₃லயேஶ || 10 ||

10. அவன், “உனக்கு சமமானவர் அந்த நாராயணன்” என்று வருணன் சொன்னதைக் கேட்டு, தங்களைத் தேடி அலைந்தான். குருவாயூரப்பா! பக்தர்களாலேயே அடையத் தகுந்த தாங்கள் வியாதிகளைப் போக்க வேண்டும்.

No comments:

Post a Comment