Thursday, March 6, 2014

ஸ்ரீ நாராயணீயம் - தசகம் 7

ஸ்ரீ நாராயணீயம் - தசகம் 7, ஸ்ரீ நாராயணீயம் 7வது தசகம், ஸ்ரீமந் நாராயணீயம், ஸ்ரீ நாராயணீயம், Sree Narayaneeyam, Sriman narayaneeyam,Srimad Narayaneeyam

த³ஶகம்-7
பிரம்மாவின் தவமும் வைகுண்ட தரிசனமும்

एवं देव चतुर्दशात्मकजगद्रूपेण जात: पुन-
स्तस्योर्ध्वं खलु सत्यलोकनिलये जातोऽसि धाता स्वयम् ।
यं शंसन्ति हिरण्यगर्भमखिलत्रैलोक्यजीवात्मकं
योऽभूत् स्फीतरजोविकारविकसन्नानासिसृक्षारस: ॥१॥

ஏவம் தே₃வ சதுர்த₃ஶாத்மகஜக₃த்₃ரூபேண ஜாத: புந-
ஸ்தஸ்யோர்த்₄வம் க₂லு ஸத்யலோகநிலயே ஜாதோ(அ)ஸி தா₄தா ஸ்வயம்|
யம் ஶம்ஸந்தி ஹிரண்யக₃ர்ப₄மகி₂லத்ரைலோக்யஜீவாத்மகம்
யோ(அ)பூ₄த் ஸ்பீ₂தரஜோவிகாரவிகஸந்நாநாஸிஸ்ருக்ஷாரஸ: || 1||

1. தேவா! பதினான்கு உலகங்களாகத் தோன்றிய நீ, மறுபடியும் அந்தப் பதினான்கு உலகங்களுக்கு மேல் உள்ள ஸத்ய லோகத்தில் பிரம்மதேவனாகத் தோன்றினாய். ரஜோகுணத்தின் விகாரத்தால் தோன்றியவனும், பூமி,ஸ்வர்க்கம்,பாதாளம் என்ற மூன்று உலகங்களுக்கும் ஜீவ ஸ்வரூபமாயுள்ள உன்னை ஹிரண்யகர்பன் என்று முனிவர்கள் கூறுவார்கள்.

सोऽयं विश्वविसर्गदत्तहृदय: सम्पश्यमान: स्वयं
बोधं खल्वनवाप्य विश्वविषयं चिन्ताकुलस्तस्थिवान् ।
तावत्त्वं जगतां पते तप तपेत्येवं हि वैहायसीं
वाणीमेनमशिश्रव: श्रुतिसुखां कुर्वंस्तप:प्रेरणाम् ॥२॥

ஸோ(அ)யம் விஶ்வவிஸர்க₃த₃த்தஹ்ருத₃ய: ஸம்பஶ்யமாந: ஸ்வயம்
போ₃த₄ம் க₂ல்வநவாப்ய விஶ்வவிஷயம் சிந்தாகுலஸ்தஸ்தி₂வாந் |
தாவத்த்வம் ஜக₃தாம் பதே தப தபேத்யேவம் ஹி வைஹாயஸீம்
வாணீமேநமஶிஶ்ரவ: ஶ்ருதிஸுகா₂ம் குர்வம்ஸ்தப:ப்ரேரணாம் || 2||

2. அப்படிப்பட்ட, இந்த பிரம்மதேவர், உலகைப் படைக்க நினத்தார். படைப்பதைப் பற்றிய ஞானம் அடையாமல் கவலை அடைந்தார். அப்போது, தவம் செய், தவம் செய் என்று இனிமையான தங்கள் அசரீரி வாக்கைக் கேட்டார்.

कोऽसौ मामवदत् पुमानिति जलापूर्णे जगन्मण्डले
दिक्षूद्वीक्ष्य किमप्यनीक्षितवता वाक्यार्थमुत्पश्यता ।
दिव्यं वर्षसहस्रमात्ततपसा तेन त्वमाराधित -
स्तस्मै दर्शितवानसि स्वनिलयं वैकुण्ठमेकाद्भुतम् ॥३॥

கோ(அ)ஸௌ மாமவத₃த் புமாநிதி ஜலாபூர்ணே ஜக₃ந்மண்ட₃லே
தி₃க்ஷூத்₃வீக்ஷ்ய கிமப்யநீக்ஷிதவதா வாக்யார்த₂முத்பஶ்யதா |
தி₃வ்யம் வர்ஷஸஹஸ்ரமாத்ததபஸா தேந த்வமாராதி₄த -
ஸ்தஸ்மை த₃ர்ஶிதவாநஸி ஸ்வநிலயம் வைகுண்ட₂மேகாத்₃பு₄தம் || 3||

3. பூமியானது நீரில் மூழ்கியிருக்கும்போது, யார் இவ்வாறு சொல்கிறார்கள் என்று பிரம்மதேவன் எல்லா திக்குகளிலும் தேடியும், ஒன்றும் புலப்படவில்லை. உடனே, அவர் ஆயிரம் தேவ வருஷங்கள் தவம் செய்யத் தொடங்கினார். அப்போது, பிரம்மதேவனுக்கு நீர் உம்முடைய இருப்பிடமான வைகுண்ட லோகத்தைக் காட்டினீர்களல்லவா? 

माया यत्र कदापि नो विकुरुते भाते जगद्भ्यो बहि:
शोकक्रोधविमोहसाध्वसमुखा भावास्तु दूरं गता: ।
सान्द्रानन्दझरी च यत्र परमज्योति:प्रकाशात्मके
तत्ते धाम विभावितं विजयते वैकुण्ठरूपं विभो ॥४॥

மாயா யத்ர கதா₃பி நோ விகுருதே பா₄தே ஜக₃த்₃ப்₄யோ ப₃ஹி:
ஶோகக்ரோத₄விமோஹஸாத்₄வஸமுகா₂ பா₄வாஸ்து தூ₃ரம்ʼ க₃தா: |
ஸாந்த்₃ராநந்த₃ஜ₂ரீ ச யத்ர பரமஜ்யோதி:ப்ரகாஶாத்மகே
தத்தே தா₄ம விபா₄விதம்ʼ விஜயதே வைகுண்ட₂ரூபம் விபோ₄ || 4||

4. எங்கும் நிறைந்தவனே! ஈரேழு உலகங்களிலும் பிரகாசிக்கின்றதும், துக்கம், கோபம், அக்ஞானம், பயம் முதலிய உணர்ச்சிகள் அற்றதும், மாயையற்றதும், பரமானந்த வெள்ளத்தில் மூழ்கி இருப்பதுமான உம்முடைய லோகமான வைகுண்ட லோகத்தை பிரம்மனுக்குக் காட்டினீர்.

यस्मिन्नाम चतुर्भुजा हरिमणिश्यामावदातत्विषो
नानाभूषणरत्नदीपितदिशो राजद्विमानालया: ।
भक्तिप्राप्ततथाविधोन्नतपदा दीव्यन्ति दिव्या जना-
तत्ते धाम निरस्तसर्वशमलं वैकुण्ठरूपं जयेत् ॥५॥

யஸ்மிந்நாம சதுர்பு₄ஜா ஹரிமணிஶ்யாமாவதா₃தத்விஷோ
நாநாபூ₄ஷணரத்நதீ₃பிததி₃ஶோ ராஜத்₃விமாநாலயா: |
ப₄க்திப்ராப்தததா₂விதோ₄ந்நதபதா₃ தீ₃வ்யந்தி தி₃வ்யா ஜநா-
தத்தே தா₄ம நிரஸ்தஸர்வஶமலம் வைகுண்ட₂ரூபம் ஜயேத் || 5||

5. உம்முடைய வைகுண்டத்தில், ஜனங்கள், பக்தியினால் கிடைத்த உயர்ந்த
ஸ்தானத்தினால், நான்கு கைகளுடனும், இந்த்ரநீலக்கல் போன்ற நீல நிறத்துடனும், பல ரத்னங்களால் அலங்கரிக்கப்பட்டும், திவ்ய விமானங்களில் வசித்தும் வருகின்றனர். அப்படிப்பட்ட, பாபங்கள் அற்ற உம்முடைய வைகுண்ட லோகமானது சிறந்து விளங்கட்டும்.


नानादिव्यवधूजनैरभिवृता विद्युल्लतातुल्यया
विश्वोन्मादनहृद्यगात्रलतया विद्योतिताशान्तरा ।
त्वत्पादांबुजसौरभैककुतुकाल्लक्ष्मी: स्वयं लक्ष्यते
यस्मिन् विस्मयनीयदिव्यविभवं तत्ते पदं देहि मे ॥६॥

நாநாதி₃வ்யவதூ₄ஜநைரபி₄வ்ருதா வித்₃யுல்லதாதுல்யயா
விஶ்வோந்மாத₃நஹ்ருத்₃யகா₃த்ரலதயா வித்₃யோதிதாஶாந்தரா |
த்வத்பாதா₃ம்பு₃ஜஸௌரபை₄ககுதுகால்லக்ஷ்மீ: ஸ்வயம் லக்ஷ்யதே
யஸ்மிந் விஸ்மயநீயதி₃வ்யவிப₄வம் தத்தே பத₃ம் தே₃ஹி மே || 6||

6. அந்த வைகுண்டத்தில், ஸ்ரீ மகாலக்ஷ்மியானவள், தேவப்பெண்களால் சூழப்பட்டு, மின்னல் கொடி போன்ற அழகிய கொடி போன்ற உடலால் திக்குகளைப் பிரகாசிக்கச் செய்கிறாள். தங்கள் பாதத் தாமரையின் வாசனையை முகர்வதில் உள்ள ஆசையினால் அங்கு  எப்போதும்  காணப்படுகிறாள். அத்தகைய தங்கள் ஸ்தானமான வைகுந்தத்தை எனக்குத் தந்தருள வேண்டும்.

तत्रैवं प्रतिदर्शिते निजपदे रत्नासनाध्यासितं
भास्वत्कोटिलसत्किरीटकटकाद्याकल्पदीप्राकृति ।
श्रीवत्साङ्कितमात्तकौस्तुभमणिच्छायारुणं कारणं
विश्वेषां तव रूपमैक्षत विधिस्तत्ते विभो भातु मे ॥७॥

தத்ரைவம் ப்ரதித₃ர்ஶிதே நிஜபதே₃ ரத்நாஸநாத்₄யாஸிதம்
பா₄ஸ்வத்கோடிலஸத்கிரீடகடகாத்₃யாகல்பதீ₃ப்ராக்ருதி |
ஶ்ரீவத்ஸாங்கிதமாத்தகௌஸ்துப₄மணிச்சா₂யாருணம் காரணம்
விஶ்வேஷாம் தவ ரூபமைக்ஷத விதி₄ஸ்தத்தே விபோ₄ பா₄து மே || 7||

7. அந்த வைகுண்டத்தில், பிரம்மதேவன், ரத்னமாயமான இருக்கையில், கோடி சூர்ய ஒளியோடு பிரகாசிக்கும் கிரீடம், தோள்வளை முதலிய ஆபரணங்களாலும், கௌஸ்துபமணியின் காந்தியாலும், ஸ்ரீவத்ஸம் என்ற மச்சத்துடனும் உள்ள தங்களைக்கண்டார். தங்களுடைய அந்த ரூபத்தை எனக்குக் காட்டி அருள வேண்டும்.

कालांभोदकलायकोमलरुचीचक्रेण चक्रं दिशा -
मावृण्वानमुदारमन्दहसितस्यन्दप्रसन्नाननम् ।
राजत्कम्बुगदारिपङ्कजधरश्रीमद्भुजामण्डलं
स्रष्टुस्तुष्टिकरं वपुस्तव विभो मद्रोगमुद्वासयेत् ॥८॥

காலாம்போ₄த₃கலாயகோமலருசீசக்ரேண சக்ரம் தி₃ஶா -
மாவ்ருண்வாநமுதா₃ரமந்த₃ஹஸிதஸ்யந்த₃ப்ரஸந்நாநநம் |
ராஜத்கம்பு₃க₃தா₃ரிபங்கஜத₄ரஶ்ரீமத்₃பு₄ஜாமண்ட₃லம்
ஸ்ரஷ்டுஸ்துஷ்டிகரம் வபுஸ்தவ விபோ₄ மத்₃ரோக₃முத்₃வாஸயேத் || 8||

8. எங்கும் நிறைந்திருப்பவனே! கார்மேகம், காயாம்பூ போன்ற நிறத்துடனும், திருமுகத்தில் அழகிய புன்சிரிப்புடன், நான்கு கரங்களில் சங்கும் சக்ரம்,கதை, தாமரை இவற்றுடன் பிரம்மதேவருக்கு காட்சி கொடுத்து, மகிழ்ச்சி அளித்த தங்கள் ரூபம் என்னுடைய ரோகத்தைப் போக்கவேண்டும்.

दृष्ट्वा सम्भृतसम्भ्रम: कमलभूस्त्वत्पादपाथोरुहे
हर्षावेशवशंवदो निपतित: प्रीत्या कृतार्थीभवन् ।
जानास्येव मनीषितं मम विभो ज्ञानं तदापादय
द्वैताद्वैतभवत्स्वरूपपरमित्याचष्ट तं त्वां भजे ॥९॥

த்₃ருஷ்ட்வா ஸம்ப்₄ருதஸம்ப்₄ரம: கமலபூ₄ஸ்த்வத்பாத₃பாதோ₂ருஹே
ஹர்ஷாவேஶவஶம்வதோ₃ நிபதித: ப்ரீத்யா க்ருதார்தீ₂ப₄வந் |
ஜாநாஸ்யேவ மநீஷிதம் மம விபோ₄ ஜ்ஞாநம் ததா₃பாத₃ய
த்₃வைதாத்₃வைதப₄வத்ஸ்வரூபபரமித்யாசஷ்ட தம் த்வாம்ப₄ஜே || 9||

9. பிரம்மதேவன், தங்கள் வடிவழகைக் கண்டு அளவற்ற மகிழ்ச்சி அடைந்து, தங்கள் பாதக்கமலங்களில் விழுந்து வணங்கி தன் கடமைகளை நிறைவேற்றினார். என்னுடைய இஷ்டத்தை அறிந்து, த்வைதம், அத்வைதம் என்ற தங்கள் ஸ்வரூப ஞானத்தை எனக்கு அளிக்க வேண்டும் என்று பிரார்த்தித்தார். அத்தகைய தங்களை நான் பஜிக்கிறேன்.

आताम्रे चरणे विनम्रमथ तं हस्तेन हस्ते स्पृशन्
बोधस्ते भविता न सर्गविधिभिर्बन्धोऽपि सञ्जायते ।
इत्याभाष्य गिरं प्रतोष्य नितरां तच्चित्तगूढ: स्वयं
सृष्टौ तं समुदैरय: स भगवन्नुल्लासयोल्लाघताम् ॥१०॥

ஆதாம்ரே சரணே விநம்ரமத₂ தம் ஹஸ்தேந ஹஸ்தே ஸ்ப்ருஶந்
போ₃த₄ஸ்தே ப₄விதா ந ஸர்க₃விதி₄பி₄ர்ப₃ந்தோ₄(அ)பி ஸஞ்ஜாயதே |
இத்யாபா₄ஷ்ய கி₃ரம் ப்ரதோஷ்ய நிதராம் தச்சித்தகூ₃ட₄: ஸ்வயம்
ஸ்ருஷ்டௌ தம் ஸமுதை₃ரய: ஸ ப₄க₃வந்நுல்லாஸயோல்லாக₄தாம் || 10||

10. பிறகு, தங்கள் சிவந்த பாதங்களில் பணிந்த அந்த பிரம்மதேவனை, தாங்கள் கையால் தொட்டு, “ உமக்கு ஞானம் தோன்றப் போகிறது, எந்த பந்தமும் இல்லாமல் படைக்கும் காரியத்தைச் செய்வாயாக” என்று அவருடைய மனதில் இருந்து தூண்டினீர். அத்தகைய பகவானே! ஆரோக்யத்தைத் தர வேண்டும்.

No comments:

Post a Comment