Saturday, March 29, 2014

ஸ்ரீ நாராயணீயம் - தசகம் 29

ஸ்ரீ நாராயணீயம் - தசகம் 29, ஸ்ரீ நாராயணீயம் 29வது தசகம், ஸ்ரீமந் நாராயணீயம், ஸ்ரீ நாராயணீயம், ஸ்ரீமத் நாராயணீயம், நாராயணீயம், ஸ்ரீமன் நாராயணீயம் Narayaneeyam, Sree Narayaneeyam, Sriman narayaneeyam,Srimad Narayaneeyam

த³ஶகம் -29
தேவர்கள் அம்ருதம் அடைந்ததும், அசுரர்கள் வதமும்
மோஹினி அவதாரம்

उद्गच्छतस्तव करादमृतं हरत्सु
दैत्येषु तानशरणाननुनीय देवान् ।
सद्यस्तिरोदधिथ देव भवत्प्रभावा-
दुद्यत्स्वयूथ्यकलहा दितिजा बभूवु: ॥१॥

உத்₃க₃ச்ச₂தஸ்தவ கராத₃ம்ருதம் ஹரத்ஸு
தை₃த்யேஷு தாநஶரணாநநுநீய தே₃வாந் |
ஸத்₃யஸ்திரோத₃தி₄த₂ தே₃வ ப₄வத்ப்ரபா₄வா-
து₃த்₃யத்ஸ்வயூத்₂யகலஹா தி₃திஜா ப₃பூ₄வு: || 1||

1. தேவனே! தாங்கள் கையில் அம்ருத கலசத்துடன், தன்வந்தரி பகவானாக சமுத்திரத்தில் இருந்து தோன்றியதும், அசுரர்கள் அதைத் தங்களிடமிருந்து பறித்துச் சென்றனர். ஆதரவற்றவர்களாக இருந்த அந்த தேவர்களைச் சமாதானம் செய்து உடனே அங்கிருந்து மறைந்துவிட்டீர். தங்கள் மாயையினால் அசுரர்களிடையே அம்ருதத்தைப் பங்கிட்டுக்கொள்வதில் கலகம் உண்டாயிற்று.

श्यामां रुचाऽपि वयसाऽपि तनुं तदानीं
प्राप्तोऽसि तुङ्गकुचमण्डलभंगुरां त्वम् ।
पीयूषकुम्भकलहं परिमुच्य सर्वे
तृष्णाकुला: प्रतिययुस्त्वदुरोजकुम्भे ॥२॥

ஶ்யாமாம் ருசா(அ)பி வயஸா(அ)பி தநும் ததா₃நீம்
ப்ராப்தோ(அ)ஸி துங்க₃குசமண்ட₃லப₄ம்கு₃ராம் த்வம் |
பீயூஷகும்ப₄கலஹம் பரிமுச்ய ஸர்வே
த்ருஷ்ணாகுலா: ப்ரதியயுஸ்த்வது₃ரோஜகும்பே₄ || 2||

2. அப்போது தாங்கள், நீல நிறத்துடன், நல்ல யௌவனமாய், பருத்த கொங்கைகளுடன் உள்ள அழகிய பெண் வடிவத்தில் அங்கு தோன்றினீர்கள். அசுரர்கள், அம்ருதகலசத்தில் வைத்த ஆசையை விட்டுவிட்டு, தங்களுடைய கலசத்தைப் போன்ற கொங்கைகளில் ஆசை வைத்துத் தங்களிடம் வந்தார்கள்.

का त्वं मृगाक्षि विभजस्व सुधामिमामि-
त्यारूढरागविवशानभियाचतोऽमून् ।
विश्वस्यते मयि कथं कुलटाऽस्मि दैत्या
इत्यालपन्नपि सुविश्वसितानतानी: ॥३॥

கா த்வம் ம்ருகா₃க்ஷி விப₄ஜஸ்வ ஸுதா₄மிமாமி-
த்யாரூட₄ராக₃விவஶாநபி₄யாசதோ(அ)மூந் |
விஶ்வஸ்யதே மயி கத₂ம் குலடா(அ)ஸ்மி தை₃த்யா
இத்யாலபந்நபி ஸுவிஶ்வஸிதாநதாநீ: || 3||

3. “நீ யார்? இந்த அமிர்தத்தைப் பங்கிட்டுக்கொடு” என்று அசுரர்கள் வேண்டினர். காமம் கொண்ட அவர்களிடம், “நான் நல்ல நடத்தையற்றவள். என்னை எப்படி நம்புகிறீர்கள்?” என்று கேட்டீர்கள். அவ்வாறு சொன்னாலும், அவர்கள் மனதில் மோகத்தையும் நம்பிக்கையையும் உண்டாக்கினீர்கள்.

मोदात् सुधाकलशमेषु ददत्सु सा त्वं
दुश्चेष्टितं मम सहध्वमिति ब्रुवाणा ।
पङ्क्तिप्रभेदविनिवेशितदेवदैत्या
लीलाविलासगतिभि: समदा: सुधां ताम् ॥४॥

மோதா₃த் ஸுதா₄கலஶமேஷு த₃த₃த்ஸு ஸா த்வம்
து₃ஶ்சேஷ்டிதம் மம ஸஹத்₄வமிதி ப்₃ருவாணா |
பங்க்திப்ரபே₄த₃விநிவேஶிததே₃வதை₃த்யா
லீலாவிலாஸக₃திபி₄: ஸமதா₃: ஸுதா₄ம் தாம் || 4||

4. அசுரர்கள் அம்ருதகலசத்தைத் தங்களிடம் கொடுத்தனர். மோகினி ரூபத்தில் இருந்த தாங்கள், என் கெட்ட செய்கையைப் பொறுத்துக்கொள்ளவேண்டும் என்று சொல்லிக்கொண்டே, தேவர்களை ஒரு வரிசையிலும், அசுரர்களை ஒரு வரிசையிலும் அமர வைத்தீர்கள். சிருங்கார நடையாலும், விளையாட்டுப் பேச்சுக்களாலும் அசுரர்களை மயக்கி, தேவர்களுக்கு அமிர்தத்தைக் கொடுத்தீர்கள்.

अस्मास्वियं प्रणयिणीत्यसुरेषु तेषु
जोषं स्थितेष्वथ समाप्य सुधां सुरेषु ।
त्वं भक्तलोकवशगो निजरूपमेत्य
स्वर्भानुमर्धपरिपीतसुधं व्यलावी: ॥५॥

அஸ்மாஸ்வியம் ப்ரணயிணீத்யஸுரேஷு தேஷு
ஜோஷம் ஸ்தி₂தேஷ்வத₂ ஸமாப்ய ஸுதா₄ம் ஸுரேஷு |
த்வம் ப₄க்தலோகவஶகோ₃ நிஜரூபமேத்ய
ஸ்வர்பா₄நுமர்த₄பரிபீதஸுத₄ம் வ்யலாவீ: || 5||

5. அசுரர்கள் மன மயக்கத்தில் பேசாமல் இருந்தனர். பக்தர்களுக்கு அருள் புரியும் தாங்கள், அமிர்தத்தை தேவர்களுக்குப் பங்கிட்டு முடித்தீர்கள். பிறகு உம்முடைய பகவத்ரூபத்தை எடுத்துக் கொண்டு, தேவர்களுடன் அமர்ந்து கொஞ்சம் அமிர்தம் உண்டுவிட்ட ராகுவின் தலையை வெட்டினீர்கள்.

त्वत्त: सुधाहरणयोग्यफलं परेषु
दत्वा गते त्वयि सुरै: खलु ते व्यगृह्णन् ।
घोरेऽथ मूर्छति रणे बलिदैत्यमाया-
व्यामोहिते सुरगणे त्वमिहाविरासी: ॥६॥

த்வத்த: ஸுதா₄ஹரணயோக்₃யப₂லம் பரேஷு
த₃த்வா க₃தே த்வயி ஸுரை: க₂லு தே வ்யக்₃ருஹ்ணந் |
கோ₄ரே(அ)த₂ மூர்ச₂தி ரணே ப₃லிதை₃த்யமாயா-
வ்யாமோஹிதே ஸுரக₃ணே த்வமிஹாவிராஸீ: || 6||

6. தங்களிடமிருந்து அமிர்தகலசத்தைப் பறித்த அசுரர்களுக்குத் தகுந்த பலனைத் தந்துவிட்டு மறைந்துவிட்டீர்கள். உடனே, அசுரர்கள் தேவர்களுடன் சண்டையிட்டனர். பலி என்ற அசுரனின் மாயையால் தேவர்கள் திகைத்தனர். அப்போது, தாங்கள் மறுபடியும் அங்கு தோன்றினீர்கள்.

त्वं कालनेमिमथ मालिमुखाञ्जघन्थ
शक्रो जघान बलिजम्भवलान् सपाकान् ।
शुष्कार्द्रदुष्करवधे नमुचौ च लूने
फेनेन नारदगिरा न्यरुणो रणं त्वं ॥७॥

த்வம் காலநேமிமத₂ மாலிமுகா₂ஞ்ஜக₄ந்த₂
ஶக்ரோ ஜகா₄ந ப₃லிஜம்ப₄வலாந் ஸபாகாந் |
ஶுஷ்கார்த்₃ரது₃ஷ்கரவதே₄ நமுசௌ ச லூநே
பே₂நேந நாரத₃கி₃ரா ந்யருணோ ரணம் த்வம் || 7||

7. காலநேமி, மாலி முதலிய பல அசுரர்களை அழித்தீர்கள். பாகன், பலி, ஜம்பன், வலன் என்ற அசுரர்களை இந்திரன் கொன்றான். காய்ந்ததாலும், நனைந்ததாலும் அழிக்கப்பட முடியாத நமுசியை, நுரையினால் அழித்தான். பிறகு, நாரதர் சொன்னதன்பேரில் போர் நிறுத்தப்பட்டது.

योषावपुर्दनुजमोहनमाहितं ते
श्रुत्वा विलोकनकुतूहलवान् महेश: ।
भूतैस्समं गिरिजया च गत: पदं ते
स्तुत्वाऽब्रवीदभिमतं त्वमथो तिरोधा: ॥८॥

யோஷாவபுர்த₃நுஜமோஹநமாஹிதம் தே
ஶ்ருத்வா விலோகநகுதூஹலவாந் மஹேஶ: |
பூ₄தைஸ்ஸமம் கி₃ரிஜயா ச க₃த: பத₃ம் தே
ஸ்துத்வா(அ)ப்₃ரவீத₃பி₄மதம் த்வமதோ₂ திரோதா₄: || 8||

8. அசுரர்களை மயக்கத் தாங்கள் மோகினி ரூபம் எடுத்ததைக் கேட்ட சிவன், தங்களை அவ்வடிவத்தில் காண ஆசை கொண்டு, பார்வதியுடனும், பூதகணங்களுடனும், தங்கள் இருப்பிடமான வைகுண்டத்தை அடைந்தார். தங்களைத் துதித்து, தன் விருப்பத்தைச் சொன்னார். அப்பொழுதே தாங்கள் அங்கிருந்து மறைந்தீர்கள்.

आरामसीमनि च कन्दुकघातलीला-
लोलायमाननयनां कमनीं मनोज्ञाम् ।
त्वामेष वीक्ष्य विगलद्वसनां मनोभू-
वेगादनङ्गरिपुरङ्ग समालिलिङ्ग ॥९॥

ஆராமஸீமநி ச கந்து₃ககா₄தலீலா-
லோலாயமாநநயநாம் கமநீம் மநோஜ்ஞாம் |
த்வாமேஷ வீக்ஷ்ய விக₃லத்₃வஸநாம் மநோபூ₄-
வேகா₃த₃நங்க₃ரிபுரங்க₃ ஸமாலிலிங்க₃ || 9||

9. அங்கு ஒரு தோட்டத்தில் பந்தாடிக்கொண்டு, அழகிய பெண் வடிவில் தோன்றினீர்கள். அழகிய அசையும் கண்களுடன், காற்றினால் மேலாடை நழுவ, மோகத்தைக் கொடுக்கும்படி விளையாடிக்கொண்டிருந்தீர்கள். மன்மதனை வென்ற பரமசிவனே அதைப் பார்த்து மயங்கி, தங்களைத் தழுவ முயன்றார்.

भूयोऽपि विद्रुतवतीमुपधाव्य देवो
वीर्यप्रमोक्षविकसत्परमार्थबोध: ।
त्वन्मानितस्तव महत्त्वमुवाच देव्यै
तत्तादृशस्त्वमव वातनिकेतनाथ ॥१०॥

பூ₄யோ(அ)பி வித்₃ருதவதீமுபதா₄வ்ய தே₃வோ
வீர்யப்ரமோக்ஷவிகஸத்பரமார்த₂போ₃த₄: |
த்வந்மாநிதஸ்தவ மஹத்த்வமுவாச தே₃வ்யை
தத்தாத்₃ருஶஸ்த்வமவ வாதநிகேதநாத₂ || 10||

10. நழுவி ஓடிய மோகினியைப் பின்தொடர்ந்து ஓடிய பரமசிவனின் வீர்யம் நழுவியது. உடனே தெளிவுபெற்றார். தாங்களும் பரமசிவனைப் போற்றினீர்கள். சிவனும் பார்வதியிடமும், மற்றவர்களிடமும் தங்கள் பெருமையை எடுத்துரைத்தார். அப்படிப்பட்ட பெருமை வாய்ந்த குருவாயூரப்பா! காக்கவேண்டும்.

No comments:

Post a Comment