Sunday, March 23, 2014

ஸ்ரீ நாராயணீயம் - தசகம் 23

ஸ்ரீ நாராயணீயம் - தசகம் 23, ஸ்ரீ நாராயணீயம் 23வது தசகம், ஸ்ரீமந் நாராயணீயம், ஸ்ரீ நாராயணீயம், ஸ்ரீமத் நாராயணீயம், நாராயணீயம், ஸ்ரீமன் நாராயணீயம் Narayaneeyam, Sree Narayaneeyam, Sriman narayaneeyam,Srimad Narayaneeyam

த³ஶகம் -23
சித்ரகேதுவின் சரித்திரம்

प्राचेतसस्तु भगवन्नपरो हि दक्ष-
स्त्वत्सेवनं व्यधित सर्गविवृद्धिकाम: ।
आविर्बभूविथ तदा लसदष्टबाहु-
स्तस्मै वरं ददिथ तां च वधूमसिक्नीम् ॥१॥

ப்ராசேதஸஸ்து ப₄க₃வந்நபரோ ஹி த₃க்ஷ-
ஸ்த்வத்ஸேவநம் வ்யதி₄த ஸர்க₃விவ்ருத்₃தி₄காம: |
ஆவிர்ப₃பூ₄வித₂ ததா₃ லஸத₃ஷ்டபா₃ஹு-
ஸ்தஸ்மை வரம் த₃தி₃த₂ தாம் ச வதூ₄மஸிக்நீம் || 1||

1. குருவாயூரப்பா! தக்ஷப்ரஜாபதி அல்லாத, ப்ராசேதஸ் என்பவனுடைய மகனான வேறொரு தக்ஷன் இருந்தான். அவன் இனப் பெருக்கத்திற்காக தங்களை ஆராதித்து வந்தான். தாங்கள் அவன்முன் எட்டு கரங்களுடன் தோன்றினீர்கள். அவனுக்கு வரங்களையும், அஸிக்னீ என்ற மனைவியையும் அளித்தீர்கள்.

तस्यात्मजास्त्वयुतमीश पुनस्सहस्रं
श्रीनारदस्य वचसा तव मार्गमापु: ।
नैकत्रवासमृषये स मुमोच शापं
भक्तोत्तमस्त्वृषिरनुग्रहमेव मेने ॥२॥

தஸ்யாத்மஜாஸ்த்வயுதமீஶ புநஸ்ஸஹஸ்ரம்
ஶ்ரீநாரத₃ஸ்ய வசஸா தவ மார்க₃மாபு: |
நைகத்ரவாஸம்ருஷயே ஸ முமோச ஶாபம்
ப₄க்தோத்தமஸ்த்வ்ருஷிரநுக்₃ரஹமேவ மேநே || 2||

2. அந்த தக்ஷனுக்கு பதினாயிரம் புதல்வர்கள் இருந்தனர். நாரதரின் உபதேசத்தின்படி அவர்கள் மோக்ஷமார்க்கத்தில் ஈடுபட்டனர். கோபமடைந்த தக்ஷன், நாரதரை, “ ஓரிடத்திலும் நிலைக்காமல் சுற்றிக் கொண்டே இருப்பீராக” என்று சபித்துவிட்டான். நாரதரோ அந்த சாபத்தையும் நன்மையாகவே நினைத்து ஏற்றார்.

षष्ट्या ततो दुहितृभि: सृजत: कुलौघान्
दौहित्रसूनुरथ तस्य स विश्वरूप: ।
त्वत्स्तोत्रवर्मितमजापयदिन्द्रमाजौ
देव त्वदीयमहिमा खलु सर्वजैत्र: ॥३॥

ஷஷ்ட்யா ததோ து₃ஹித்ருபி₄: ஸ்ருஜத: குலௌகா₄ந்
தௌ₃ஹித்ரஸூநுரத₂ தஸ்ய ஸ விஶ்வரூப: |
த்வத்ஸ்தோத்ரவர்மிதமஜாபயதி₃ந்த்₃ரமாஜௌ
தே₃வ த்வதீ₃யமஹிமா க₂லு ஸர்வஜைத்ர: || 3||

3. பிறகு, அந்த தக்ஷன், தன் அறுபது பெண்களின் மூலம் வம்சத்தைப் பெருக்க நினைத்தான். அவனுடைய பெண்வயிற்றுப் பேரன் விஸ்வரூபன். அவன், தங்களுடைய ஸ்தோத்திரமான நாராயண கவசத்தை இந்திரனுக்குப் பெற்றுத் தந்தான். தேவாசுர யுத்தத்தில் இந்திரனை வெற்றி பெறச் செய்தான். தேவனே! தங்கள் சக்தியானது எல்லாரையும் வெல்லக்கூடியதல்லவா?

प्राक्शूरसेनविषये किल चित्रकेतु:
पुत्राग्रही नृपतिरङ्गिरस: प्रभावात् ।
लब्ध्वैकपुत्रमथ तत्र हते सपत्नी-
सङ्घैरमुह्यदवशस्तव माययासौ ॥४॥

ப்ராக்ஶூரஸேநவிஷயே கில சித்ரகேது:
புத்ராக்₃ரஹீ ந்ருபதிரங்கி₃ரஸ: ப்ரபா₄வாத் |
லப்₃த்₄வைகபுத்ரமத₂ தத்ர ஹதே ஸபத்நீ-
ஸங்கை₄ரமுஹ்யத₃வஶஸ்தவ மாயயாஸௌ || 4||

4. சித்ரகேது என்ற அரசன் சூரசேன நாட்டை ஆண்டு வந்தான். ஆங்கிரஸ முனிவரின் ஆசியால் ஒரு ஆண்மகனை அடைந்தான். அந்தக் குழந்தையை அரசனின் மற்ற மனைவியர்கள் கொன்று விட்டனர். தங்களுடைய மாயையால், அரசனும் மயங்கினான்.

तं नारदस्तु सममङ्गिरसा दयालु:
सम्प्राप्य तावदुपदर्श्य सुतस्य जीवम् ।
कस्यास्मि पुत्र इति तस्य गिरा विमोहं
त्यक्त्वा त्वदर्चनविधौ नृपतिं न्ययुङ्क्त ॥५॥

தம் நாரத₃ஸ்து ஸமமங்கி₃ரஸா த₃யாலு:
ஸம்ப்ராப்ய தாவது₃பத₃ர்ஶ்ய ஸுதஸ்ய ஜீவம் |
கஸ்யாஸ்மி புத்ர இதி தஸ்ய கி₃ரா விமோஹம்
த்யக்த்வா த்வத₃ர்சநவிதௌ₄ ந்ருபதிம் ந்யயுங்க்த || 5||

5. இரக்கமுள்ள நாரதர், ஆங்கிரஸ முனிவரோடு அரசனை அடைந்தார்.  யோக பலத்தால் இறந்த மகனின் ஆத்மாவை அரசனிடம் காட்டினர்.  அந்த ஆத்மா, 
"எந்த ஜன்மத்தில் இவர்கள் என் பெற்றோர்கள்? நான் ஒவ்வொரு ஜன்மத்திலும் வெவ்வேறு பெற்றோரை அடைந்துள்ளேன்" என்று கூறியது. அரசனுடைய அக்ஞானத்தை விலக்கி, தங்களை பூஜிப்பதில் அவனை முனிவர் ஈடுபடுத்தினார்.

स्तोत्रं च मन्त्रमपि नारदतोऽथ लब्ध्वा
तोषाय शेषवपुषो ननु ते तपस्यन् ।
विद्याधराधिपतितां स हि सप्तरात्रे
लब्ध्वाप्यकुण्ठमतिरन्वभजद्भवन्तम् ॥६॥

ஸ்தோத்ரம் ச மந்த்ரமபி நாரத₃தோ(அ)த₂ லப்₃த்₄வா
தோஷாய ஶேஷவபுஷோ நநு தே தபஸ்யந் |
வித்₃யாத₄ராதி₄பதிதாம் ஸ ஹி ஸப்தராத்ரே
லப்₃த்₄வாப்யகுண்ட₂மதிரந்வப₄ஜத்₃ப₄வந்தம் || 6||

6. நாரதர், ஆதிசேஷ வடிவில் உள்ள தங்களைத் துதிக்க வேண்டிய ஸ்தோத்திரத்தையும், மந்திரங்களையும் அரசனுக்கு உபதேசித்தார். அரசன் தங்களைத் தியானித்து தவம் செய்து, ஏழு நாட்களில் வித்யாதரர்களுக்குத்
தலைவனானான். தொடர்ந்து தங்களை பஜித்து வந்தான்.

तस्मै मृणालधवलेन सहस्रशीर्ष्णा
रूपेण बद्धनुतिसिद्धगणावृतेन ।
प्रादुर्भवन्नचिरतो नुतिभि: प्रसन्नो
दत्वाऽऽत्मतत्त्वमनुगृह्य तिरोदधाथ ॥७॥

தஸ்மை ம்ருணாலத₄வலேந ஸஹஸ்ரஶீர்ஷ்ணா
ரூபேண ப₃த்₃த₄நுதிஸித்₃த₄க₃ணாவ்ருதேந |
ப்ராது₃ர்ப₄வந்நசிரதோ நுதிபி₄: ப்ரஸந்நோ
த₃த்வா(அ)(அ)த்மதத்த்வமநுக்₃ருஹ்ய திரோத₃தா₄த₂ || 7||

7. அதனால் சந்தோஷமடைந்த தாங்கள், தாமரைத் தண்டு போல் வெளுத்த உடலுடனும், ஆயிரம் தலைகளுடனும், சித்தர்கள் கூட்டம் சூழ, ஆதிசேஷ ரூபத்தில் அரசன் முன் தோன்றி, அவனுக்கு ஆத்ம தத்துவத்தை உபதேசித்து மறைந்தீர்கள்.

त्वद्भक्तमौलिरथ सोऽपि च लक्षलक्षं
वर्षाणि हर्षुलमना भुवनेषु कामम् ।
सङ्गापयन् गुणगणं तव सुन्दरीभि:
सङ्गातिरेकरहितो ललितं चचार ॥८॥

த்வத்₃ப₄க்தமௌலிரத₂ ஸோ(அ)பி ச லக்ஷலக்ஷம்
வர்ஷாணி ஹர்ஷுலமநா பு₄வநேஷு காமம் |
ஸங்கா₃பயந் கு₃ணக₃ணம் தவ ஸுந்த₃ரீபி₄:
ஸங்கா₃திரேகரஹிதோ லலிதம் சசார || 8||

8. பிறகு, பக்தனான சித்ரகேது, வித்யாதரப் பெண்களைக்கொண்டு, தங்கள் குணங்களைப் பாடச்செய்து,  பல லட்சம் வருடங்கள் ஆனந்தமாய் இருந்தான்.

अत्यन्तसङ्गविलयाय भवत्प्रणुन्नो
नूनं स रूप्यगिरिमाप्य महत्समाजे ।
निश्शङ्कमङ्ककृतवल्लभमङ्गजारिं
तं शङ्करं परिहसन्नुमयाभिशेपे ॥९॥

அத்யந்தஸங்க₃விலயாய ப₄வத்ப்ரணுந்நோ
நூநம் ஸ ரூப்யகி₃ரிமாப்ய மஹத்ஸமாஜே |
நிஶ்ஶங்கமங்கக்ருதவல்லப₄மங்க₃ஜாரிம்
தம் ஶங்கரம் பரிஹஸந்நுமயாபி₄ஶேபே || 9||

9. அரசனுக்கு விஷயப்பற்று விலக வேண்டி, தாங்கள் அவனை கைலாச மலைக்குச் செல்ல ஆணையிட்டீர்கள். அங்கு மகான்கள் புடைசூழ, சிவபெருமான் பார்வதிதேவியைத் தன் மடியில் வைத்திருப்பதைப் பார்த்த சித்ரகேது, கேலி செய்தான். அதனால் பார்வதிதேவியால் சபிக்கப்பட்டான்.

निस्सम्भ्रमस्त्वयमयाचितशापमोक्षो
वृत्रासुरत्वमुपगम्य सुरेन्द्रयोधी ।
भक्त्यात्मतत्त्वकथनै: समरे विचित्रं
शत्रोरपि भ्रममपास्य गत: पदं ते ॥१०॥

நிஸ்ஸம்ப்₄ரமஸ்த்வயமயாசிதஶாபமோக்ஷோ
வ்ருத்ராஸுரத்வமுபக₃ம்ய ஸுரேந்த்₃ரயோதீ₄ |
ப₄க்த்யாத்மதத்த்வகத₂நை: ஸமரே விசித்ரம்
ஶத்ரோரபி ப்₄ரமமபாஸ்ய க₃த: பத₃ம் தே || 10||

10. சாபத்தைப் பற்றிக் கவலைப்படாமல், சாபத்திலிருந்து, விடுதலையை வேண்டாமல், வ்ருத்ரன் என்ற அசுரப் பிறவியை அடைந்தான். இந்திரனுடன் போர் புரிந்தான். அப்போது, தங்களுடைய பக்தியால், ஆத்ம தத்துவங்களை எதிரிக்குக் கூறி அவனுடைய அக்ஞானத்தையும் விலக்கினான். பிறகு தங்கள் இருப்பிடமான வைகுண்டத்தை அடைந்தான். ஆச்சர்யம்!

त्वत्सेवनेन दितिरिन्द्रवधोद्यताऽपि
तान्प्रत्युतेन्द्रसुहृदो मरुतोऽभिलेभे ।
दुष्टाशयेऽपि शुभदैव भवन्निषेवा
तत्तादृशस्त्वमव मां पवनालयेश ॥११॥

த்வத்ஸேவநேந தி₃திரிந்த்₃ரவதோ₄த்₃யதா(அ)பி
தாந்ப்ரத்யுதேந்த்₃ரஸுஹ்ருதோ₃ மருதோ(அ)பி₄லேபே₄ |
து₃ஷ்டாஶயே(அ)பி ஶுப₄தை₃வ ப₄வந்நிஷேவா
தத்தாத்₃ருஶஸ்த்வமவ மாம் பவநாலயேஶ || 11||

11. அசுரர்களின் தாயான திதி, இந்திரனை வெல்ல ஒரு பிள்ளையை வேண்டினாள். கெட்ட எண்ணமுள்ள அவளிடத்திலும் தங்களை அவள் ஆராதித்ததால், அவளுக்குப் பிறந்த சப்த மருத்துக்கள், இந்திரனுக்கு நண்பர்களாக ஆகிவிட்டனர். தாங்கள் என்னைக் காக்க வேண்டும்.

No comments:

Post a Comment