Friday, March 14, 2014

ஸ்ரீ நாராயணீயம் - தசகம் 14

ஸ்ரீ நாராயணீயம் - தசகம் 14, ஸ்ரீ நாராயணீயம் 14வது தசகம், ஸ்ரீமந் நாராயணீயம், ஸ்ரீ நாராயணீயம், ஸ்ரீமத் நாராயணீயம், நாராயணீயம், ஸ்ரீமன் நாராயணீயம் Narayaneeyam, Sree Narayaneeyam, Sriman narayaneeyam,Srimad Narayaneeyam

த³ஶகம் -14
கபில அவதாரம் 

समनुस्मृततावकाङ्घ्रियुग्म:
स मनु: पङ्कजसम्भवाङ्गजन्मा ।
निजमन्तरमन्तरायहीनं
चरितं ते कथयन् सुखं निनाय ॥१॥

ஸமநுஸ்ம்ருததாவகாங்க்₄ரியுக்₃ம:
ஸ மநு: பங்கஜஸம்ப₄வாங்க₃ஜந்மா | 
நிஜமந்தரமந்தராயஹீநம்
சரிதம் தே கத₂யந் ஸுக₂ம் நிநாய || 1|| 

1. பிரும்மாவின் புத்ரரான ஸ்வாயம்புவ மனு, தங்களுடைய சரித்திரத்தைச் சொல்லிக் கொண்டு தன்னுடைய மன்வந்தர காலத்தைக் கழித்தார்.

समये खलु तत्र कर्दमाख्यो
द्रुहिणच्छायभवस्तदीयवाचा ।
धृतसर्गरसो निसर्गरम्यं
भगवंस्त्वामयुतं समा: सिषेवे ॥२॥

ஸமயே க₂லு தத்ர கர்த₃மாக்₂யோ
த்₃ருஹிணச்சா₂யப₄வஸ்ததீ₃யவாசா | 
த்₄ருதஸர்க₃ரஸோ நிஸர்க₃ரம்யம்
ப₄க₃வம்ஸ்த்வாமயுதம் ஸமா: ஸிஷேவே || 2|| 

2. பிரும்மாவின் நிழலில் இருந்து உண்டான கர்தமர் என்பவர் பிரும்மனின் உத்தரவுப்படி சிருஷ்டி செய்ய விரும்பி, தங்கள் அனுக்ரஹத்தை வேண்டி பதினாயிரம் வருஷங்கள் தவம் செய்தார்.

गरुडोपरि कालमेघकम्रं
विलसत्केलिसरोजपाणिपद्मम् ।
हसितोल्लसिताननं विभो त्वं
वपुराविष्कुरुषे स्म कर्दमाय ॥३॥

க₃ருடோ₃பரி காளமேக₄கம்ரம்
விலஸத்கேலிஸரோஜபாணிபத்₃மம் | 
ஹஸிதோல்லஸிதாநநம் விபோ₄ த்வம்
வபுராவிஷ்குருஷே ஸ்ம கர்த₃மாய || 3|| 

3. தாங்கள் கருடன் மேல் கருத்த மேகத்தைப் போன்ற சரீரத்துடனும், கையில் தாமரையுடனும், அழகிய புன்சிரிப்புடனும் தோன்றி கர்தமருக்குக் காட்சி அளித்தீர்கள்.

स्तुवते पुलकावृताय तस्मै
मनुपुत्रीं दयितां नवापि पुत्री: ।
कपिलं च सुतं स्वमेव पश्चात्
स्वगतिं चाप्यनुगृह्य निर्गतोऽभू: ॥४॥

ஸ்துவதே புலகாவ்ருதாய தஸ்மை
மநுபுத்ரீம் த₃யிதாம் நவாபி புத்ரீ: | 
கபிலம் ச ஸுதம் ஸ்வமேவ பஶ்சாத்
ஸ்வக₃திம் சாப்யநுக்₃ருஹ்ய நிர்க₃தோ(அ)பூ₄: || 4|| 

4. பக்தியால் மயிர்க்கூச்சல் எடுத்தவராய் கர்தமர் தங்களைத் துதித்தார். கர்தமரிடம், “மனுவின் பெண்ணான தேவஹூதியை மனைவியாகவும், அவள் மூலம் ஒன்பது பெண்களையும், பத்தாவது பிள்ளையாக, தங்களுடைய அம்சமாக கபிலர் என்ற பிள்ளையையும், பிறகு மோக்ஷத்தையும் அடைவாய்” என்று அருளினீர்கள்.

स मनु: शतरूपया महिष्या
गुणवत्या सुतया च देवहूत्या ।
भवदीरितनारदोपदिष्ट:
समगात् कर्दममागतिप्रतीक्षम् ॥५॥

ஸ மநு: ஶதரூபயா மஹிஷ்யா
கு₃ணவத்யா ஸுதயா ச தே₃வஹூத்யா | 
ப₄வதீ₃ரிதநாரதோ₃பதி₃ஷ்ட:
ஸமகா₃த் கர்த₃மமாக₃திப்ரதீக்ஷம் || 5|| 

5. தாங்கள் கட்டளையிட்டபடி நாரதர் மனுவிற்கு உபதேசம் செய்தார். பிறகு, மனு தன் மனைவியான சதரூபையோடும், குணவதியான தன் மகள் தேவஹூதியோடும் அவரது வரவை எதிர்பார்த்துக் கொண்டு காத்திருந்த கர்தமரிடம் சென்றார்.

मनुनोपहृतां च देवहूतिं
तरुणीरत्नमवाप्य कर्दमोऽसौ ।
भवदर्चननिवृतोऽपि तस्यां
दृढशुश्रूषणया दधौ प्रसादम् ॥६॥

மநுநோபஹ்ருதாம் ச தே₃வஹூதிம்
தருணீரத்நமவாப்ய கர்த₃மோ(அ)ஸௌ | 
ப₄வத₃ர்சநநிவ்ருதோ(அ)பி தஸ்யாம்
த்₃ருட₄ஶுஶ்ரூஷணயா த₃தௌ₄ ப்ரஸாத₃ம் || 6|| 

6. கர்த்தமரும் தேவஹூதியை மனைவியாக அடைந்தார். தங்களிடம் மிகுந்த பக்தி கொண்டிருந்த அவர், தேவஹூதியின் சிறந்த பணிவிடையால் அவளை அனுக்ரஹித்தார்.

स पुनस्त्वदुपासनप्रभावा-
द्दयिताकामकृते कृते विमाने ।
वनिताकुलसङ्कुलो नवात्मा
व्यहरद्देवपथेषु देवहूत्या ॥७॥

ஸ புநஸ்த்வது₃பாஸநப்ரபா₄வா-
த்₃த₃யிதாகாமக்ருதே க்ருʼதே விமாநே | 
வநிதாகுலஸங்குலோ நவாத்மா
வ்யஹரத்₃தே₃வபதே₂ஷு தே₃வஹூத்யா || 7|| 

7. தங்களிடம் கொண்ட பக்தியின் மகிமையால், தன் மனைவிக்கு நினைத்தபடி செல்லும் விமானத்தை உண்டாக்கினார். அதில், அவளுக்குப் பணிவிடை செய்ய நிறைய பெண்கள் இருந்தனர். அவரும் அழகிய வடிவமெடுத்து, தேவஹூதியுடன் போகங்கள் அனுபவித்தார்.

शतवर्षमथ व्यतीत्य सोऽयं
नव कन्या: समवाप्य धन्यरूपा: ।
वनयानसमुद्यतोऽपि कान्ता-
हितकृत्त्वज्जननोत्सुको न्यवात्सीत् ॥८॥

ஶதவர்ஷமத₂ வ்யதீத்ய ஸோ(அ)யம்
நவ கந்யா: ஸமவாப்ய த₄ந்யரூபா: | 
வநயாநஸமுத்₃யதோ(அ)பி காந்தா-
ஹிதக்ருத்த்வஜ்ஜநநோத்ஸுகோ ந்யவாத்ஸீத் || 8|| 

8. இவ்வாறு நூறு வருடங்கள் கழிந்ததும், ஒன்பது பெண்களைப் பெற்று சன்யாசத்தை மேற்கொள்ள விரும்பினார். ஆயினும், தம் மனைவியின் விருப்பதிற்காக, தங்களை மகனாக அடைய வேண்டி இல்லறத்தில் இருந்தார்.

निजभर्तृगिरा भवन्निषेवा-
निरतायामथ देव देवहूत्याम् ।
कपिलस्त्वमजायथा जनानां
प्रथयिष्यन् परमात्मतत्त्वविद्याम् ॥९॥

நிஜப₄ர்த்ருகி₃ரா ப₄வந்நிஷேவா-
நிரதாயாமத₂ தே₃வ தே₃வஹூத்யாம் | 
கபிலஸ்த்வமஜாயதா₂ ஜநாநாம்
ப்ரத₂யிஷ்யந் பரமாத்மதத்த்வவித்₃யாம் || 9|| 

9. தன் கணவரின் வார்த்தைப்படி, தங்கள் பக்தியில் ஈடுபட்ட அந்த தேவஹூதியினிடத்தில், ஜனங்களுக்கு ஆத்ம ஞானத்தை உபதேசிப்பதற்காக தாங்கள் கபிலராக அவதாரம் செய்தீர்.

वनमेयुषि कर्दमे प्रसन्ने
मतसर्वस्वमुपादिशन् जनन्यै ।
कपिलात्मक वायुमन्दिरेश
त्वरितं त्वं परिपाहि मां गदौघात् ॥१०॥

வநமேயுஷி கர்த₃மே ப்ரஸந்நே
மதஸர்வஸ்வமுபாதி₃ஶந் ஜநந்யை | 
கபிலாத்மக வாயுமந்தி₃ரேஶ
த்வரிதம் த்வம் பரிபாஹி மாம் க₃தௌ₃கா₄த் || 10|| 

10. ஹே குருவாயூரப்பா! உம்முடைய தந்தையான கர்தமர், மனம் தெளிந்து காட்டிற்குச் சென்றார். தாய்க்கு ஆத்ம ஞானத்தை உபதேசித்தீர். நோய்க் கூட்டத்திலிருந்து என்னை நன்கு காக்க வேண்டும்.

No comments:

Post a Comment