Thursday, March 27, 2014

ஸ்ரீ நாராயணீயம் - தசகம் 27

ஸ்ரீ நாராயணீயம் - தசகம் 27, ஸ்ரீ நாராயணீயம் 27வது தசகம், ஸ்ரீமந் நாராயணீயம், ஸ்ரீ நாராயணீயம், ஸ்ரீமத் நாராயணீயம், நாராயணீயம், ஸ்ரீமன் நாராயணீயம் Narayaneeyam, Sree Narayaneeyam, Sriman narayaneeyam,Srimad Narayaneeyam

த³ஶகம் -27
கூர்மாவதாரம்

दुर्वासास्सुरवनिताप्तदिव्यमाल्यं
शक्राय स्वयमुपदाय तत्र भूय: ।
नागेन्द्रप्रतिमृदिते शशाप शक्रं
का क्षान्तिस्त्वदितरदेवतांशजानाम् ॥१॥

து₃ர்வாஸாஸ்ஸுரவநிதாப்ததி₃வ்யமால்யம்
ஶக்ராய ஸ்வயமுபதா₃ய தத்ர பூ₄ய: | 
நாகே₃ந்த்₃ரப்ரதிம்ருதி₃தே ஶஶாப ஶக்ரம்
கா க்ஷாந்திஸ்த்வதி₃தரதே₃வதாம்ஶஜாநாம் || 1|| 

1. தேவலோக மங்கையால் தனக்குக் கிடைத்த மலர் மாலையை, துர்வாச முனிவர் இந்திரனுக்குக் கொடுத்தார். அந்த மாலை, இந்திரனுடைய ஐராவதம் என்ற யானையால் மிதிக்கப்பட்டது. அதனால், முனிவர் கோபம் கொண்டு இந்திரனைச் சபித்தார். தங்களிடமிருந்து தோன்றியவர்களைத் தவிர வேறு எவருக்கும் பொறுமை இருப்பதில்லை.

शापेन प्रथितजरेऽथ निर्जरेन्द्रे
देवेष्वप्यसुरजितेषु निष्प्रभेषु ।
शर्वाद्या: कमलजमेत्य सर्वदेवा
निर्वाणप्रभव समं भवन्तमापु: ॥२॥

ஶாபேந ப்ரதி₂தஜரே(அ)த₂ நிர்ஜரேந்த்₃ரே
தே₃வேஷ்வப்யஸுரஜிதேஷு நிஷ்ப்ரபே₄ஷு | 
ஶர்வாத்₃யா: கமலஜமேத்ய ஸர்வதே₃வா
நிர்வாணப்ரப₄வ ஸமம் ப₄வந்தமாபு: || 2|| 

2. பிறகு, இந்திரன் சக்தி குறைந்தவனாக ஆனான். தேவர்களும் சக்தியை இழந்து அசுரர்களால் ஜயிக்கப்பட்டார்கள். பரமசிவனும், மற்ற தேவர்களும், பிரம்மாவுடன் தங்களை சரணடைந்தனர்.

ब्रह्माद्यै: स्तुतमहिमा चिरं तदानीं
प्रादुष्षन् वरद पुर: परेण धाम्ना ।
हे देवा दितिजकुलैर्विधाय सन्धिं
पीयूषं परिमथतेति पर्यशास्त्वम् ॥३॥

ப்₃ரஹ்மாத்₃யை: ஸ்துதமஹிமா சிரம் ததா₃நீம்
ப்ராது₃ஷ்ஷந் வரத₃ புர: பரேண தா₄ம்நா | 
ஹே தே₃வா தி₃திஜகுலைர்விதா₄ய ஸந்தி₄ம்
பீயூஷம் பரிமத₂தேதி பர்யஶாஸ்த்வம் || 3|| 

3. வரதனே! அவர்களால் ஸ்தோத்திரம் செய்யப்பட்ட தாங்கள், அவர்கள் முன்னால் தோன்றினீர்கள். “தேவர்களே! அசுரர்களோடு சமாதானம் செய்துகொண்டு பாற்கடலில் அம்ருதத்தைக் கடையுங்கள்” என்று கட்டளையிட்டீர்கள்.

सन्धानं कृतवति दानवै: सुरौघे
मन्थानं नयति मदेन मन्दराद्रिम् ।
भ्रष्टेऽस्मिन् बदरमिवोद्वहन् खगेन्द्रे
सद्यस्त्वं विनिहितवान् पय:पयोधौ ॥४॥

ஸந்தா₄நம் க்ருதவதி தா₃நவை: ஸுரௌகே₄
மந்தா₂நம் நயதி மதே₃ந மந்த₃ராத்₃ரிம் |
ப்₄ரஷ்டே(அ)ஸ்மிந் ப₃த₃ரமிவோத்₃வஹந் க₂கே₃ந்த்₃ரே
ஸத்₃யஸ்த்வம் விநிஹிதவாந் பய:பயோதௌ₄ || 4||

4. தேவர்களும், அசுரர்களும் சமாதானம் செய்து கொண்டனர். பிறகு, கர்வத்தோடு மந்தர.மலையைக் கொண்டு வந்தனர். அப்போது மலை கீழே நழுவியது. அப்போது, தாங்கள் அம்மலையைக் கருடன்மீது, இலந்தையைப் போலத் தூக்கி ஏற்றி, பாற்கடலில் வைத்தீர்கள்.


आधाय द्रुतमथ वासुकिं वरत्रां
पाथोधौ विनिहितसर्वबीजजाले ।
प्रारब्धे मथनविधौ सुरासुरैस्तै-
र्व्याजात्त्वं भुजगमुखेऽकरोस्सुरारीन् ॥५॥

ஆதா₄ய த்₃ருதமத₂ வாஸுகிம் வரத்ராம்
பாதோ₂தௌ₄ விநிஹிதஸர்வபீ₃ஜஜாலே | 
ப்ராரப்₃தே₄ மத₂நவிதௌ₄ ஸுராஸுரைஸ்தை-
ர்வ்யாஜாத்த்வம் பு₄ஜக₃முகே₂(அ)கரோஸ்ஸுராரீந் || 5||

5. வாசுகி என்ற பாம்பைக் கடைவதற்கான கயிராக்கி, தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைய ஆரம்பித்தனர். அப்போது தாங்கள் கபடமாக அசுரர்களை வாசுகியின் தலைப்பக்கம் பிடிக்கச் செய்தீர்கள்.

क्षुब्धाद्रौ क्षुभितजलोदरे तदानीं
दुग्धाब्धौ गुरुतरभारतो निमग्ने ।
देवेषु व्यथिततमेषु तत्प्रियैषी
प्राणैषी: कमठतनुं कठोरपृष्ठाम् ॥६॥

க்ஷுப்₃தா₄த்₃ரௌ க்ஷுபி₄தஜலோத₃ரே ததா₃நீம்
து₃க்₃தா₄ப்₃தௌ₄ கு₃ருதரபா₄ரதோ நிமக்₃நே | 
தே₃வேஷு வ்யதி₂ததமேஷு தத்ப்ரியைஷீ
ப்ராணைஷீ: கமட₂தநும் கடோ₂ரப்ருஷ்டா₂ம் || 6|| 

6. கடையும்போது சுழன்ற அந்த மந்தரமலையானது, அதிக கனத்தால் கடலில் மூழ்கியது. தேவர்கள் துயரம் அடைந்தனர். அவர்களின் நன்மையைக் கருதி, தாங்கள் கடினமான முதுகை உடைய ஆமையின் வடிவம் எடுத்துக்கொண்டீர்கள்.

वज्रातिस्थिरतरकर्परेण विष्णो
विस्तारात्परिगतलक्षयोजनेन ।
अम्भोधे: कुहरगतेन वर्ष्मणा त्वं
निर्मग्नं क्षितिधरनाथमुन्निनेथ ॥७॥

வஜ்ராதிஸ்தி₂ரதரகர்பரேண விஷ்ணோ
விஸ்தாராத்பரிக₃தலக்ஷயோஜநேந |
அம்போ₄தே₄: குஹரக₃தேந வர்ஷ்மணா த்வம்
நிர்மக்₃நம் க்ஷிதித₄ரநாத₂முந்நிநேத₂ || 7||

7. தாங்கள், லக்ஷ யோஜனை அகலம் கொண்ட சரீரத்துடன், வஜ்ராயுதத்தை விடக் கடினமான முதுகால், மூழ்கிய மந்தரமலையை மேலே தூக்கினீர்கள்.

उन्मग्ने झटिति तदा धराधरेन्द्रे
निर्मेथुर्दृढमिह सम्मदेन सर्वे ।
आविश्य द्वितयगणेऽपि सर्पराजे
वैवश्यं परिशमयन्नवीवृधस्तान् ॥८॥

உந்மக்₃நே ஜ₂டிதி ததா₃ த₄ராத₄ரேந்த்₃ரே
நிர்மேது₂ர்த்₃ருட₄மிஹ ஸம்மதே₃ந ஸர்வே | 
ஆவிஶ்ய த்₃விதயக₃ணே(அ)பி ஸர்பராஜே
வைவஶ்யம் பரிஶமயந்நவீவ்ருத₄ஸ்தாந் || 8|| 

8. மந்தரமலை மேலே வந்ததும், அனைவரும் சந்தோஷத்துடனும், பலத்துடனும் கடைந்தனர். தேவர்களுக்குள்ளும், அசுரர்களுக்குள்ளும், வாசுகியிடத்திலும் தாங்கள் பிரவேசித்து, அவர்களது களைப்பைப் போக்கி பலமடையச் செய்தீர்கள்.

उद्दामभ्रमणजवोन्नमद्गिरीन्द्र-
न्यस्तैकस्थिरतरहस्तपङ्कजं त्वाम् ।
अभ्रान्ते विधिगिरिशादय: प्रमोदा-
दुद्भ्रान्ता नुनुवुरुपात्तपुष्पवर्षा: ॥९॥

உத்₃தா₃மப்₄ரமணஜவோந்நமத்₃கி₃ரீந்த்₃ர-
ந்யஸ்தைகஸ்தி₂ரதரஹஸ்தபங்கஜம் த்வாம் | 
அப்₄ராந்தே விதி₄கி₃ரிஶாத₃ய: ப்ரமோதா₃-
து₃த்₃ப்₄ராந்தா நுநுவுருபாத்தபுஷ்பவர்ஷா: || 9|| 

9. மிக வேகமாகச் சுழற்றப்பட்ட மந்தரமலை, மேலே எழும்பியது. அப்போது, தங்கள் கெட்டியான தாமரைக் கைகளை அம்மலைமேல் வைத்து மேலே கிளம்பாதவாறு செய்தீர்கள். இதைக்கண்ட பிரம்மா, சிவன், முனிவர்கள் முதலியோர் பரவசமாகி வானிலிருந்து பூமாரி பொழிந்து, தங்களை வாழ்த்தினர்.

दैत्यौघे भुजगमुखानिलेन तप्ते
तेनैव त्रिदशकुलेऽपि किञ्चिदार्ते ।
कारुण्यात्तव किल देव वारिवाहा:
प्रावर्षन्नमरगणान्न दैत्यसङ्घान् ॥१०॥

தை₃த்யௌகே₄ பு₄ஜக₃முகா₂நிலேந தப்தே
தேநைவ த்ரித₃ஶகுலே(அ)பி கிஞ்சிதா₃ர்தே | 
காருண்யாத்தவ கில தே₃வ வாரிவாஹா:
ப்ராவர்ஷந்நமரக₃ணாந்ந தை₃த்யஸங்கா₄ந் || 10||

10. தேவனே! அசுரர்கள் வாசுகியின் மூச்சுக்காற்றால் தாபத்தை அடைந்தனர். தேவர்களும் கொஞ்சம் தாபமடைந்தனர். தாங்கள் கருணையுடன், மேகத்தைக் குவித்து, தேவர்களை நோக்கி மழை பொழியச் செய்தீர்கள். அசுரர்களுக்குப் பொழியவில்லை.

उद्भ्राम्यद्बहुतिमिनक्रचक्रवाले
तत्राब्धौ चिरमथितेऽपि निर्विकारे ।
एकस्त्वं करयुगकृष्टसर्पराज:
संराजन् पवनपुरेश पाहि रोगात् ॥११॥

உத்₃ப்₄ராம்யத்₃ப₃ஹுதிமிநக்ரசக்ரவாலே
தத்ராப்₃தௌ₄ சிரமதி₂தே(அ)பி நிர்விகாரே | 
ஏகஸ்த்வம் கரயுக₃க்ருஷ்டஸர்பராஜ:
ஸம்ராஜந் பவநபுரேஶ பாஹி ரோகா₃த் || 11||

11. வெகுகாலம் கடைந்தும், சமுத்திரத்தில் உள்ள உயிரினங்கள் வெளியே வந்தனவேயன்றி, வேறு எதுவும் கிடைக்கவில்லை. அப்போது, தாங்கள் ஒருவராகவே, அந்தப் பாம்பை, தங்கள் இரு கரங்களாலும் இழுக்கத் தொடங்கினீர்கள். குருவாயூரப்பா! நோய்களிலிருந்து என்னைக் காப்பாற்றுங்கள்.

1 comment: