Wednesday, March 26, 2014

ஸ்ரீ நாராயணீயம் - தசகம் 26

ஸ்ரீ நாராயணீயம் - தசகம் 26, ஸ்ரீ நாராயணீயம் 26வது தசகம், ஸ்ரீமந் நாராயணீயம், ஸ்ரீ நாராயணீயம், ஸ்ரீமத் நாராயணீயம், நாராயணீயம், ஸ்ரீமன் நாராயணீயம் Narayaneeyam, Sree Narayaneeyam, Sriman narayaneeyam,Srimad Narayaneeyam

த³ஶகம் -26
கஜேந்திர மோக்ஷம்

इन्द्रद्युम्न: पाण्ड्यखण्डाधिराज-
स्त्वद्भक्तात्मा चन्दनाद्रौ कदाचित् ।
त्वत् सेवायां मग्नधीरालुलोके
नैवागस्त्यं प्राप्तमातिथ्यकामम् ॥१॥

இந்த்₃ரத்₃யும்ந: பாண்ட்₃யக₂ண்டா₃தி₄ராஜ-
ஸ்த்வத்₃ப₄க்தாத்மா சந்த₃நாத்₃ரௌ கதா₃சித் |
த்வத் ஸேவாயாம் மக்₃நதீ₄ராலுலோகே
நைவாக₃ஸ்த்யம் ப்ராப்தமாதித்₂யகாமம் || 1||

1. பாண்டிய நாட்டின் முதல் அரசன் இந்த்ரத்யும்னன். தங்களிடத்தில் மிகுந்த பக்தி கொண்ட அவன், மலய மலையில் தங்களை ஆழ்ந்து தியானித்துக்கொண்டிருந்தான். அதனால், அவனுடைய அதிதியாக இருக்க வேண்டும் என்று விரும்பி வந்த அகத்திய முனிவரை அவன் ஏறெடுத்துப் பார்க்கவில்லை.

कुम्भोद्भूति: संभृतक्रोधभार:
स्तब्धात्मा त्वं हस्तिभूयं भजेति ।
शप्त्वाऽथैनं प्रत्यगात् सोऽपि लेभे
हस्तीन्द्रत्वं त्वत्स्मृतिव्यक्तिधन्यम् ॥२॥

கும்போ₄த்₃பூ₄தி: ஸம்ப்₄ருதக்ரோத₄பா₄ர:
ஸ்தப்₃தா₄த்மா த்வம் ஹஸ்திபூ₄யம் ப₄ஜேதி |
ஶப்த்வா(அ)தை₂நம் ப்ரத்யகா₃த் ஸோ(அ)பி லேபே₄
ஹஸ்தீந்த்₃ரத்வம் த்வத்ஸ்ம்ருதிவ்யக்தித₄ந்யம் || 2||

2. கோபம் அடைந்த அகத்திய முனிவர், “வினயமற்ற நீ யானையாகக் கடவது” என்று அவனைச் சபித்தார். அவன் யானை வடிவெடுத்து, தங்களை பஜித்ததால், யானைகளின் அரசனானான். அப்போதும்கூட, அவன் தங்கள் பக்தியிலேயே மூழ்கியிருந்தான்.

दग्धाम्भोधेर्मध्यभाजि त्रिकूटे
क्रीडञ्छैले यूथपोऽयं वशाभि: ।
सर्वान् जन्तूनत्यवर्तिष्ट शक्त्या
त्वद्भक्तानां कुत्र नोत्कर्षलाभ: ॥३॥


த₃க்₃தா₄ம்போ₄தே₄ர்மத்₄யபா₄ஜி த்ரிகூடே
க்ரீட₃ஞ்சை₂லே யூத₂போ(அ)யம் வஶாபி₄: |
ஸர்வாந் ஜந்தூநத்யவர்திஷ்ட ஶக்த்யா
த்வத்₃ப₄க்தாநாம் குத்ர நோத்கர்ஷலாப₄: || 3||

3. பாற்கடலின் நடுவில் உள்ள திரிகூட மலையில் அவன் யானைகளின் தலைவனாக, பெண் யானைகளுடன், எல்லா மிருகங்களையும் தன் பலத்தினால் வென்றுகொண்டு மேன்மையுடன் விளங்கினான். உன் பக்தர்களுக்கு எங்குதான் பெருமை கிடைக்காது?

स्वेन स्थेम्ना दिव्यदेशत्वशक्त्या
सोऽयं खेदानप्रजानन् कदाचित् ।
शैलप्रान्ते घर्मतान्त: सरस्यां
यूथैस्सार्धं त्वत्प्रणुन्नोऽभिरेमे ॥४॥

ஸ்வேந ஸ்தே₂ம்நா தி₃வ்யதே₃ஶத்வஶக்த்யா
ஸோ(அ)யம் கே₂தா₃நப்ரஜாநந் கதா₃சித் |
ஶைலப்ராந்தே க₄ர்மதாந்த: ஸரஸ்யாம்
யூதை₂ஸ்ஸார்த₄ம் த்வத்ப்ரணுந்நோ(அ)பி₄ரேமே || 4||

4. தன் பலத்தினாலும், தன் தேகசக்தியாலும், அவன் துன்பம் அறியாதவனாயிருந்தான். ஒரு நாள், வெய்யிலால் வாட்டமுற்று , தன் கூட்டத்துடன் திரிகூட மலையில் உள்ள ஒரு குளத்தில் விளையாடிக் கொண்டிருந்தான். தங்களுடைய ஏவுதலினாலேயே அப்படி விளையாடினான்.

हूहूस्तावद्देवलस्यापि शापात्
ग्राहीभूतस्तज्जले बर्तमान: ।
जग्राहैनं हस्तिनं पाददेशे
शान्त्यर्थं हि श्रान्तिदोऽसि स्वकानाम् ॥५॥

ஹூஹூஸ்தாவத்₃தே₃வலஸ்யாபி ஶாபாத்
க்₃ராஹீபூ₄தஸ்தஜ்ஜலே ப₃ர்தமாந: |
ஜக்₃ராஹைநம் ஹஸ்திநம் பாத₃தே₃ஶே
ஶாந்த்யர்த₂ம் ஹி ஶ்ராந்திதோ₃(அ)ஸி ஸ்வகாநாம் || 5||

5. அந்தக் குளத்தில், தேவலர் என்ற முனிவரின் சாபத்தால், ஹூஹூ என்ற கந்தர்வன் முதலையின் வடிவெடுத்து வசித்து வந்தான். அவன், இந்த கஜேந்திரனின் காலைக் கவ்விக்கொண்டான். தங்கள் பக்தர்களுக்கு ஞானம் ஏற்படுவதற்காகவே துன்பங்களைத் தருகிறீர்கள் அல்லவா?

त्वत्सेवाया वैभवात् दुर्निरोधं
युध्यन्तं तं वत्सराणां सहस्रम् ।
प्राप्ते काले त्वत्पदैकाग्र्यसिध्यै
नक्राक्रान्तं हस्तिवर्यं व्यधास्त्वम् ॥६॥

த்வத்ஸேவாயா வைப₄வாத் து₃ர்நிரோத₄ம்
யுத்₄யந்தம் தம் வத்ஸராணாம் ஸஹஸ்ரம் |
ப்ராப்தே காலே த்வத்பதை₃காக்₃ர்யஸித்₄யை
நக்ராக்ராந்தம் ஹஸ்திவர்யம் வ்யதா₄ஸ்த்வம் || 6||

6. தங்களைப் பூஜித்ததின் பயனால், கஜேந்திரன் ஆயிரம் வருடங்கள் முதலையுடன் போராடினான். அவனுடைய கர்ம வினைகளை நீக்கி, அவனுக்குத் தங்கள் ஸ்தானமான வைகுண்டத்தில் இடமளிக்க வேண்டி, அவனை முதலையிடம் தோற்றுப்போகும்படி செய்தீர்கள் அல்லவா?

आर्तिव्यक्तप्राक्तनज्ञानभक्ति:
शुण्डोत्क्षिप्तै: पुण्डरीकै: समर्चन् ।
पूर्वाभ्यस्तं निर्विशेषात्मनिष्ठं
स्तोत्रं श्रेष्ठं सोऽन्वगादीत् परात्मन् ॥७॥

ஆர்திவ்யக்தப்ராக்தநஜ்ஞாநப₄க்தி:
ஶுண்டோ₃த்க்ஷிப்தை: புண்ட₃ரீகை: ஸமர்சந் |
பூர்வாப்₄யஸ்தம் நிர்விஶேஷாத்மநிஷ்ட₂ம்
ஸ்தோத்ரம் ஶ்ரேஷ்ட₂ம் ஸோ(அ)ந்வகா₃தீ₃த் பராத்மந் || 7||

7. முழுமுதல் தெய்வமே! மிகுந்த துன்பமடைந்த அந்த கஜேந்திரன், பூர்வ ஜன்ம ஞானத்தாலும், பக்தியாலும், தன் துதிக்கையால் தாமரை மலரைப் பறித்து, தங்களை அர்ச்சித்தான். முன் ஜன்மத்தில் ஏற்பட்ட பக்தியால், நிர்குணமான தங்களை ஸ்தோத்திரம் செய்தான்.

श्रुत्वा स्तोत्रं निर्गुणस्थं समस्तं
ब्रह्मेशाद्यैर्नाहमित्यप्रयाते ।
सर्वात्मा त्वं भूरिकारुण्यवेगात्
तार्क्ष्यारूढ: प्रेक्षितोऽभू: पुरस्तात् ॥८॥

ஶ்ருத்வா ஸ்தோத்ரம் நிர்கு₃ணஸ்த₂ம் ஸமஸ்தம்
ப்₃ரஹ்மேஶாத்₃யைர்நாஹமித்யப்ரயாதே |
ஸர்வாத்மா த்வம் பூ₄ரிகாருண்யவேகா₃த்
தார்க்ஷ்யாரூட₄: ப்ரேக்ஷிதோ(அ)பூ₄: புரஸ்தாத் || 8||

8. நிர்குண விஷயமான அவன் ஸ்தோத்திரத்தைக் கேட்ட பிரும்மா, சிவன் முதலியோர், அவர்களைப் பற்றிய விஷயமல்லாததால், அங்கு வரவில்லை. எல்லா உயிர்களிடத்தும் உறையும் தாங்கள், அளவற்ற கருணையுடன், கருடன்மீது ஏறிக்கொண்டு கஜேந்திரன் முன்னால் தோன்றினீர்.

हस्तीन्द्रं तं हस्तपद्मेन धृत्वा
चक्रेण त्वं नक्रवर्यं व्यदारी: ।
गन्धर्वेऽस्मिन् मुक्तशापे स हस्ती
त्वत्सारूप्यं प्राप्य देदीप्यते स्म ॥९॥

ஹஸ்தீந்த்₃ரம் தம் ஹஸ்தபத்₃மேந த்₄ருத்வா
சக்ரேண த்வம் நக்ரவர்யம் வ்யதா₃ரீ: |
க₃ந்த₄ர்வே(அ)ஸ்மிந் முக்தஶாபே ஸ ஹஸ்தீ
த்வத்ஸாரூப்யம் ப்ராப்ய தே₃தீ₃ப்யதே ஸ்ம || 9||

9. தங்கள் சக்ராயுதத்தால் முதலையைக் கொன்று, தங்கள் தாமரைக் கரங்களால் கஜேந்திரனைப் பிடித்துக்கொண்டீர்கள். முதலையும் தேவல முனிவரின் சாபத்திலிருந்து விடுபட்டு கந்தர்வ ரூபம் அடைந்தது. கஜேந்திரனும், மிகவும் பிரகாசத்துடன் தங்கள் ஸாரூப்யத்தை அடைந்தான்.

एतद्वृत्तं त्वां च मां च प्रगे यो
गायेत्सोऽयं भूयसे श्रेयसे स्यात् ।
इत्युक्त्वैनं तेन सार्धं गतस्त्वं
धिष्ण्यं विष्णो पाहि वातालयेश ॥१०॥

ஏதத்₃வ்ருத்தம் த்வாம் ச மாம் ச ப்ரகே₃ யோ
கா₃யேத்ஸோ(அ)யம் பூ₄யஸே ஶ்ரேயஸே ஸ்யாத் |
இத்யுக்த்வைநம் தேந ஸார்த₄ம் க₃தஸ்த்வம்
தி₄ஷ்ண்யம் விஷ்ணோ பாஹி வாதாலயேஶ || 10||

10. பலஸ்ருதி: எங்கும் நிறைந்திருப்பவரே! தாங்கள், “இந்த கஜேந்திர மோக்ஷ சரித்திரத்தையும், உன்னையும், எம்மையும், அதிகாலையில் ஸ்தோத்திரம் செய்பவர்கள், அளவற்ற க்ஷேமத்தை அடைவார்கள்” என்று கூறி, அந்த கஜேந்திரனுடன் கூட  ஸ்ரீ வைகுண்டத்தை அடைந்த குருவாயூரப்பா, தாங்கள் காப்பாற்றவேண்டும். 

No comments:

Post a Comment