Friday, March 28, 2014

ஸ்ரீ நாராயணீயம் - தசகம் 28


ஸ்ரீ நாராயணீயம் - தசகம் 28, ஸ்ரீ நாராயணீயம் 28வது தசகம், ஸ்ரீமந் நாராயணீயம், ஸ்ரீ நாராயணீயம், ஸ்ரீமத் நாராயணீயம், நாராயணீயம், ஸ்ரீமன் நாராயணீயம் Narayaneeyam, Sree Narayaneeyam, Sriman narayaneeyam,Srimad Narayaneeyam

த³ஶகம் -28
லக்ஷ்மி ஸ்வயம்வரம்
அம்ருதமதன வர்ணனம் 

गरलं तरलानलं पुरस्ता-
ज्जलधेरुद्विजगाल कालकूटम् ।
अमरस्तुतिवादमोदनिघ्नो
गिरिशस्तन्निपपौ भवत्प्रियार्थम् ॥१॥

க₃ரலம் தரலாநலம் புரஸ்தா-
ஜ்ஜலதே₄ருத்₃விஜகா₃ல காலகூடம் |
அமரஸ்துதிவாத₃மோத₃நிக்₄நோ
கி₃ரிஶஸ்தந்நிபபௌ ப₄வத்ப்ரியார்த₂ம் || 1||

1. முதலில் காலகூடம் என்ற விஷம் சமுத்திரத்திலிருந்து உண்டானது. தேவர்கள் துதிக்க, தங்களிடமுள்ள பிரியத்தினால், சிவன் அந்த விஷத்தை உண்டார்.

विमथत्सु सुरासुरेषु जाता
सुरभिस्तामृषिषु न्यधास्त्रिधामन् ।
हयरत्नमभूदथेभरत्नं
द्युतरुश्चाप्सरस: सुरेषु तानि ॥२॥

விமத₂த்ஸு ஸுராஸுரேஷு ஜாதா
ஸுரபி₄ஸ்தாம்ருʼஷிஷு ந்யதா₄ஸ்த்ரிதா₄மந் |
ஹயரத்நமபூ₄த₃தே₂ப₄ரத்நம்
த்₃யுதருஶ்சாப்ஸரஸ: ஸுரேஷு தாநி || 2||

2. மீண்டும் தேவர்களும் அசுரர்களும் கடையும்போது, காமதேனு என்ற பசு உண்டானது. அதை முனிவர்களிடம் கொடுத்தீர்கள். உயர்ந்த உச்சைஸ்ரவஸ் என்ற குதிரையும், சிறந்த ஐராவதம் என்ற யானையும், கல்பவ்ருக்ஷம் என்ற மரமும், அப்சரஸ் என்ற தேவப்பெண்களும் தோன்றினார்கள். அவற்றை தேவர்களிடம் கொடுத்தீர்கள்.

जगदीश भवत्परा तदानीं
कमनीया कमला बभूव देवी ।
अमलामवलोक्य यां विलोल:
सकलोऽपि स्पृहयाम्बभूव लोक: ॥३॥

ஜக₃தீ₃ஶ ப₄வத்பரா ததா₃நீம்
கமநீயா கமலா ப₃பூ₄வ தே₃வீ |
அமலாமவலோக்ய யாம் விலோல:
ஸகலோ(அ)பி ஸ்ப்ருஹயாம்ப₃பூ₄வ லோக: || 3||

3. உலகங்களின் அதிபதியே! பிறகு, தங்களிடம் அளவுகடந்த அன்பு கொண்ட ஸ்ரீ மகாலக்ஷ்மி தோன்றினாள். களங்கமற்ற அவளை அனைவரும் விரும்பினார்கள்.

त्वयि दत्तहृदे तदैव देव्यै
त्रिदशेन्द्रो मणिपीठिकां व्यतारीत् ।
सकलोपहृताभिषेचनीयै:
ऋषयस्तां श्रुतिगीर्भिरभ्यषिञ्चन् ॥४॥

த்வயி த₃த்தஹ்ருதே₃ ததை₃வ தே₃வ்யை
த்ரித₃ஶேந்த்₃ரோ மணிபீடி₂காம் வ்யதாரீத் |
ஸகலோபஹ்ருதாபி₄ஷேசநீயை:
ருஷயஸ்தாம் ஶ்ருதிகீ₃ர்பி₄ரப்₄யஷிஞ்சந் || 4||

4. ஸ்ரீ மகாலக்ஷ்மியானவள் தங்களிடம் மனதைக் கொடுத்தாள். அப்பொழுதே, இந்திரன் அவளுக்கு ரத்னங்களால் ஆன சிம்மாசனத்தைக் கொடுத்தான். முனிவர்கள், வேத மந்திரங்களுடன், புனித தீர்த்தங்களால் அந்த மகாலக்ஷ்மியை அபிஷேகம் செய்தனர்.

अभिषेकजलानुपातिमुग्ध-
त्वदपाङ्गैरवभूषिताङ्गवल्लीम् ।
मणिकुण्डलपीतचेलहार-
प्रमुखैस्ताममरादयोऽन्वभूषन् ॥५॥

அபி₄ஷேகஜலாநுபாதிமுக்₃த₄-
த்வத₃பாங்கை₃ரவபூ₄ஷிதாங்க₃வல்லீம் |
மணிகுண்ட₃லபீதசேலஹார-
ப்ரமுகை₂ஸ்தாமமராத₃யோ(அ)ந்வபூ₄ஷந் || 5||

5. அபிஷேகம் செய்யும்போது, தங்கள் அழகிய கடைக்கண் பார்வையால் ஸ்ரீதேவியைப் பார்த்தீர்கள். கொடிபோன்ற உடல் உடைய மஹாலக்ஷ்மியை, தேவர்கள் முதலியோர், சிறந்த ஆபரணங்களால் அலங்கரித்தனர்.

वरणस्रजमात्तभृङ्गनादां
दधती सा कुचकुम्भमन्दयाना ।
पदशिञ्जितमञ्जुनूपुरा त्वां
कलितव्रीलविलासमाससाद ॥६॥

வரணஸ்ரஜமாத்தப்₄ருங்க₃நாதா₃ம்
த₃த₄தீ ஸா குசகும்ப₄மந்த₃யாநா |
பத₃ஶிஞ்ஜிதமஞ்ஜுநூபுரா த்வாம்
கலிதவ்ரீலவிலாஸமாஸஸாத₃ || 6||

6. வண்டுகள் ரீங்காரம் செய்யும் மாலையைக் கையில் ஏந்தி, அந்த மகாலக்ஷ்மியானவள், கலசம் போன்ற ஸ்தனங்களுடன், கால்களில் அழகிய சலங்கை ஒலிக்க, மெதுவாக, வெட்கத்துடன், தங்களை அடைந்தாள். 

गिरिशद्रुहिणादिसर्वदेवान्
गुणभाजोऽप्यविमुक्तदोषलेशान् ।
अवमृश्य सदैव सर्वरम्ये
निहिता त्वय्यनयाऽपि दिव्यमाला ॥७॥

கி₃ரிஶத்₃ருஹிணாதி₃ஸர்வதே₃வாந்
கு₃ணபா₄ஜோ(அ)ப்யவிமுக்ததோ₃ஷலேஶாந் |
அவம்ருஶ்ய ஸதை₃வ ஸர்வரம்யே
நிஹிதா த்வய்யநயா(அ)பி தி₃வ்யமாலா || 7||

7. சிவன், பிரமன் மற்றும் தேவர்களிடம் சிறிது தோஷங்கள் இருப்பதை தனது சிறந்த புத்தியால் அறிந்தாள். தங்களிடம் அனைத்து கல்யாண குணங்களும் இருப்பதை உணர்ந்து, தங்களுக்கே மணமாலையிட்டாள்.

उरसा तरसा ममानिथैनां
भुवनानां जननीमनन्यभावाम् ।
त्वदुरोविलसत्तदीक्षणश्री-
परिवृष्ट्या परिपुष्टमास विश्वम् ॥८॥

உரஸா தரஸா மமாநிதை₂நாம்
பு₄வநாநாம் ஜநநீமநந்யபா₄வாம் |
த்வது₃ரோவிலஸத்ததீ₃க்ஷணஶ்ரீ-
பரிவ்ருஷ்ட்யா பரிபுஷ்டமாஸ விஶ்வம் || 8||

8. உலகங்களுக்குத் தாயானவளும், தங்களைத் தவிர பிறரிடத்தில் பற்றற்றவளும் ஆன மகாலக்ஷ்மிக்குத் தங்கள் மார்பை இருப்பிடமாக அளித்து ஏற்றீர்கள். அந்த தேவியின் கடைக்கண் பார்வை எனும் மழையால் உலகம் வளம் பெறுகிறது.

अतिमोहनविभ्रमा तदानीं
मदयन्ती खलु वारुणी निरागात् ।
तमस: पदवीमदास्त्वमेना-
मतिसम्माननया महासुरेभ्य: ॥९॥

அதிமோஹநவிப்₄ரமா ததா₃நீம்
மத₃யந்தீ க₂லு வாருணீ நிராகா₃த் |
தமஸ: பத₃வீமதா₃ஸ்த்வமேநா-
மதிஸம்மாநநயா மஹாஸுரேப்₄ய: || 9||

9. பிறகு, மயக்கத்தைக் கொடுப்பவளும், மோகத்தை அளிப்பவளுமான வாருணீதேவி தோன்றினாள். தாங்கள் அவளை, மிகுந்த மரியாதையுடன் அசுரர்களுக்குக் கொடுத்தீர்கள்.

तरुणाम्बुदसुन्दरस्तदा त्वं
ननु धन्वन्तरिरुत्थितोऽम्बुराशे: ।
अमृतं कलशे वहन् कराभ्या-
मखिलार्तिं हर मारुतालयेश ॥१०॥

இந்த ஸ்லோகத்தைப் படிப்பதால் எல்லா நோய்களும், மனக்கவலையும் நீங்கும்:
தருணாம்பு₃த₃ஸுந்த₃ரஸ்ததா₃ த்வம்
நநு த₄ந்வந்தரிருத்தி₂தோ(அ)ம்பு₃ராஶே: |
அம்ருதம் கலஶே வஹந் கராப்₄யா-
மகி₂லார்திம் ஹர மாருதாலயேஶ || 10||

10. அப்பொழுது, தாங்கள் நீருண்ட மேகம் போல் அழகுடன், கையில் அம்ருத கலசத்துடன், தன்வந்தரி பகவானாக சமுத்திரத்தில் இருந்து தோன்றினீர்கள். குருவாயூரப்பா! என்னுடைய சகல விதமான பிணிகளையும், பீடைகளையும் போக்க வேண்டுகிறேன்.

1 comment:

  1. Excellent. Need to know your other works on All 100 Dasakams of Narayaniyam. Link please?

    ReplyDelete