Sunday, March 2, 2014

ஸ்ரீ நாராயணீயம் - தசகம் 2

ஸ்ரீமந் நாராயணீயம், ஸ்ரீ நாராயணீயம் - தசகம் 2, ஸ்ரீ நாராயணீயம், ஸ்ரீ நாராயணீயம் 2வது தசகம்

த³ஶகம் - 2 
பகவத் ஸ்வரூபம் வர்ணனை 
பகவான் திருமேனி வர்ணனை 


सूर्यस्पर्धिकिरीटमूर्ध्वतिलकप्रोद्भासिफालान्तरं
कारुण्याकुलनेत्रमार्द्रहसितोल्लासं सुनासापुटम्।
गण्डोद्यन्मकराभकुण्डलयुगं कण्ठोज्वलत्कौस्तुभं
त्वद्रूपं वनमाल्यहारपटलश्रीवत्सदीप्रं भजे॥१॥

ஸூர்யஸ்பர்தி₄கிரீடமூர்த்₄வதிலகப்ரோத்₃பா₄ஸிபா₂லாந்தரம்
காருண்யாகுலநேத்ரமார்த்₃ரஹஸிதோல்லாஸம் ஸுநாஸாபுடம்|
க₃ண்டோ₃த்₃யந்மகராப₄குண்ட₃லயுக₃ம் கண்டோ₂ஜ்வலத்கௌஸ்துப₄ம்
த்வத்₃ரூபம் வநமால்யஹாரபடலஶ்ரீவத்ஸதீ₃ப்ரம் ப₄ஜே|| 1||

1.சூர்யனை விடப் பிரகாசமானதாய் உனது கிரீடம் விளங்குகிறது. மேல் நோக்கியுள்ள திலகத்தால் உனது நெற்றி மிக அழகாய் விளங்குகிறது. கருணை பொங்கும் கண்கள், புன்சிரிப்புடன் கூடிய செவ்வாய், மீனைப் போன்ற நாசி, கன்னங்களில் ஒளி வீசும் மகர குண்டலங்கள், மார்பை அலங்கரிக்கும் கௌஸ்துப மணி, வனமாலை, முத்துமாலை, ஸ்ரீவத்ஸம் இவற்றால் அழகியதாக விளங்கும் தங்கள் திருமேனியைத் தினமும் தொழுகிறேன்.

केयूराङ्गदकङ्कणोत्तममहारत्नाङ्गुलीयाङ्कित-
श्रीमद्बाहुचतुष्कसङ्गतगदाशङ्खारिपङ्केरुहाम् ।
काञ्चित् काञ्चनकाञ्चिलाञ्च्छितलसत्पीताम्बरालम्बिनी-
मालम्बे विमलाम्बुजद्युतिपदां मूर्तिं तवार्तिच्छिदम् ॥२॥

மனக்கவலையைப் போக்கும் ஸ்லோகம்:

கேயூராங்க₃த₃கங்கணோத்தமமஹாரத்நாங்கு₃லீயாங்கித-
ஶ்ரீமத்₃பா₃ஹுசதுஷ்கஸங்க₃தக₃தா₃ஶங்கா₂ரிபங்கேருஹாம் |
காஞ்சித் காஞ்சநகாஞ்சிலாஞ்ச்சி₂தலஸத்பீதாம்ப₃ராலம்பி₃நீ-
மாலம்பே₃ விமலாம்பு₃ஜத்₃யுதிபதா₃ம் மூர்திம் தவார்திச்சி₂த₃ம் || 2||

2. தங்கள் நான்கு கரங்களில் தோள்வளைகள், கங்கணம், சிறந்த ரத்னங்களால் இழைத்த மோதிரம் முதலியவை பிரகாசிக்கின்றது. மேலும், அவை சங்கம், சக்ரம், கதை, தாமரை இவற்றால் விளங்குகிறது. இடுப்பில் பொன் அரைஞாணும், பீதாம்பரமும் அலங்கரிக்கின்றன. திருவடிகள் தாமரை மலரை ஒத்ததாய் இருக்கின்றது. தங்கள் அழகிய திருமேனி பக்தர்களின் துன்பங்களையும், பீடைகளையும் போக்கக்கூடியது. இப்படிப்பட்ட தங்கள் திருமேனியை சரணடைகிறேன்.

यत्त्त्रैलोक्यमहीयसोऽपि महितं सम्मोहनं मोहनात्
कान्तं कान्तिनिधानतोऽपि मधुरं माधुर्यधुर्यादपि ।
सौन्दर्योत्तरतोऽपि सुन्दरतरं त्वद्रूपमाश्चर्यतोऽ-
प्याश्चर्यं भुवने न कस्य कुतुकं पुष्णाति विष्णो विभो ॥३॥

அழகு முதலிய லாபங்கள் கிட்டும்:

யத்த்த்ரைலோக்யமஹீயஸோ(அ)பி மஹிதம் ஸம்மோஹநம் மோஹநாத்
காந்தம் காந்திநிதா₄நதோ(அ)பி மது₄ரம் மாது₄ர்யது₄ர்யாத₃பி |
ஸௌந்த₃ர்யோத்தரதோ(அ)பி ஸுந்த₃ரதரம் த்வத்₃ரூபமாஶ்சர்யதோ(அ)-
ப்யாஶ்சர்யம் பு₄வநே ந கஸ்ய குதுகம் புஷ்ணாதி விஷ்ணோ விபோ₄ || 3||

3. பிரபுவே! மூவுலகத்திலும் சிறந்த பொருட்கள் யாவற்றையும் விட சிறந்ததாய் தங்கள் ரூபம் விளங்குகிறது. மனங்கவர்ந்த பொருட்கள் அனைத்தையும் விட மனம் கவர்ந்தது. இனியவையான அனைத்தையும் விட இனியவன். அழகுமிக்க பொருட்கள் எல்லாவற்றையும் விட அழகு வாய்ந்தவன். ஆச்சர்யம் மிக்க பொருட்கள் அனைத்தையும் விட ஆச்சர்யம் மிக்கவன். தங்கள் திவ்ய ரூபம் யாருக்குத்தான் மகிழ்ச்சியை உண்டு பண்ணாது?!!

तत्तादृङ्मधुरात्मकं तव वपु: सम्प्राप्य सम्पन्मयी
सा देवी परमोत्सुका चिरतरं नास्ते स्वभक्तेष्वपि ।
तेनास्या बत कष्टमच्युत विभो त्वद्रूपमानोज्ञक -
प्रेमस्थैर्यमयादचापलबलाच्चापल्यवार्तोदभूत् ॥४॥

தத்தாத்₃ருங்மது₄ராத்மகம் தவ வபு: ஸம்ப்ராப்ய ஸம்பந்மயீ
ஸா தே₃வீ பரமோத்ஸுகா சிரதரம் நாஸ்தே ஸ்வப₄க்தேஷ்வபி |
தேநாஸ்யா ப₃த கஷ்டமச்யுத விபோ₄ த்வத்₃ரூபமாநோஜ்ஞக -
ப்ரேமஸ்தை₂ர்யமயாத₃சாபலப₃லாச்சாபல்யவார்தோத₃பூ₄த் || 4||

4. ஓ குருவாயூரப்பா! ஸகல செல்வத்திற்கும் இருப்பிடமான மகாலக்ஷ்மி தங்கள் திருமேனியில் பற்று கொண்டு தங்களிடத்திலேயே நிலைத்து விட்டாள். அதனால் அவள் தனது பக்தர்களிடத்தில் தங்குவதில்லை. தங்கள் திருமேனியில் கொண்ட பற்றினால் அவளுக்கு “நிலையற்றவள்” என்ற அவப்பெயர் ஏற்பட்டது. (திருமகள் தனது தலைவனான திருமாலிடம் அதிகப்பற்று வைத்திருக்கிறாள் எனக் கொள்ள வேண்டும்).

लक्ष्मीस्तावकरामणीयकहृतैवेयं परेष्वस्थिरे-
त्यस्मिन्नन्यदपि प्रमाणमधुना वक्ष्यामि लक्ष्मीपते ।
ये त्वद्ध्यानगुणानुकीर्तनरसासक्ता हि भक्ता जना-
स्तेष्वेषा वसति स्थिरैव दयितप्रस्तावदत्तादरा ॥५॥

லக்ஷ்மீஸ்தாவகராமணீயகஹ்ருதைவேயம் பரேஷ்வஸ்தி₂ரே-
த்யஸ்மிந்நந்யத₃பி ப்ரமாணமது₄நா வக்ஷ்யாமி லக்ஷ்மீபதே |
யே த்வத்₃த்₄யாநகு₃ணாநுகீர்தநரஸாஸக்தா ஹி ப₄க்தா ஜநா-
ஸ்தேஷ்வேஷா வஸதி ஸ்தி₂ரைவ த₃யிதப்ரஸ்தாவத₃த்தாத₃ரா || 5||

5. உன் அழகில் ஈடுபட்டு மகாலக்ஷ்மியானவள் மற்றவரிடம் நிலைத்து நிற்பதில்லை. தங்களைப் பற்றிய சிந்தையிலும், நாம சங்கீர்த்தனத்தாலும்,
தங்கள் புகழ் பாடும் பக்தர்களிடத்தில் நித்யவாஸம் செய்கிறாள் அல்லவா? அதாவது, பகவானிடத்திலும், பகவத் விஷயங்களைப் பாடும் பக்தர்களிடத்திலும் நிலைத்து இருக்கிறாள், மற்றவர்களிடத்தில் நிலைத்திருப்பதில்லை எனக் கருத்து.

एवंभूतमनोज्ञतानवसुधानिष्यन्दसन्दोहनं
त्वद्रूपं परचिद्रसायनमयं चेतोहरं शृण्वताम् ।
सद्य: प्रेरयते मतिं मदयते रोमाञ्चयत्यङ्गकं
व्यासिञ्चत्यपि शीतवाष्पविसरैरानन्दमूर्छोद्भवै: ॥६॥

ஏவம் பூ₄தமநோஜ்ஞதாநவஸுதா₄நிஷ்யந்த₃ஸந்தோ₃ஹநம்
த்வத்₃ரூபம் பரசித்₃ரஸாயநமயம் சேதோஹரம் ஶ்ருண்வதாம் |
ஸத்₃ய: ப்ரேரயதே மதிம் மத₃யதே ரோமாஞ்சயத்யங்க₃கம்
வ்யாஸிஞ்சத்யபி ஶீதவாஷ்பவிஸரைராநந்த₃மூர்சோ₂த்₃ப₄வை: || 6||

6. உன் உருவம், ஸௌந்தர்யமான அமுதத்தைச் சொரிகிறது. ஆனந்தமாகவும், மனம் கவர்வதாகவும் உள்ளது. கேட்கும்போது, மறுபடி மறுபடி கேட்க வேண்டும் என்ற ஆசையை உண்டாக்குகிறது. ஆனந்தப் பரவசத்தில் உடல் புல்லரிக்கிறது. கண்களில் நீர் பெருகி உடலையே நனைத்து விடுகிறது. 

एवंभूततया हि भक्त्यभिहितो योगस्स योगद्वयात्
कर्मज्ञानमयात् भृशोत्तमतरो योगीश्वरैर्गीयते ।
सौन्दर्यैकरसात्मके त्वयि खलु प्रेमप्रकर्षात्मिका
भक्तिर्निश्रममेव विश्वपुरुषैर्लभ्या रमावल्लभ ॥७॥

ஏவம் பூ₄ததயா ஹி ப₄க்த்யபி₄ஹிதோ யோக₃ஸ்ஸ யோக₃த்₃வயாத்
கர்மஜ்ஞாநமயாத் ப்₄ருஶோத்தமதரோ யோகீ₃ஶ்வரைர்கீ₃யதே |
ஸௌந்த₃ர்யைகரஸாத்மகே த்வயி க₂லு ப்ரேமப்ரகர்ஷாத்மிகா
ப₄க்திர்நிஶ்ரமமேவ விஶ்வபுருஷைர்லப்₄யா ரமாவல்லப₄ || 7||

7. யோகங்களில் சிறந்தது பக்தி யோகம். கர்ம-ஞான யோகங்களை விட பக்தி யோகமே சிறந்தது என யோகிகள் கூறுகின்றனர். அத்தகைய பக்தி யோகம், அழகுருவான உம்மிடத்தில் எளிதாக அடையக்கூடியதாய் இருக்கின்றது. 

निष्कामं नियतस्वधर्मचरणं यत् कर्मयोगाभिधं
तद्दूरेत्यफलं यदौपनिषदज्ञानोपलभ्यं पुन: ।
तत्त्वव्यक्ततया सुदुर्गमतरं चित्तस्य तस्माद्विभो
त्वत्प्रेमात्मकभक्तिरेव सततं स्वादीयसी श्रेयसी ॥८॥

நிஷ்காமம் நியதஸ்வத₄ர்மசரணம் யத் கர்மயோகா₃பி₄த₄ம்
தத்₃தூ₃ரேத்யப₂லம் யதௌ₃பநிஷத₃ஜ்ஞாநோபலப்₄யம் புந: |
தத்த்வவ்யக்ததயா ஸுது₃ர்க₃மதரம் சித்தஸ்ய தஸ்மாத்₃விபோ₄
த்வத்ப்ரேமாத்மகப₄க்திரேவ ஸததம் ஸ்வாதீ₃யஸீ ஶ்ரேயஸீ || 8||

8. செய்யவேண்டிய கர்மாக்களை பற்றற்று செய்வதும், அதனால் உண்டாகும் ஞானமும் கர்ம-ஞான யோகமாகும். இது காலம் கடந்தே பலனளிக்கும். ஞானத்தால் உண்டாகும் பலனோவெனில் இந்திரியங்களுக்குப் புலப்படாதது. சுலபத்தில் மனதிற்கு எட்டாதது. உன்னிடத்தில் செலுத்தும் பக்தியே நிரந்தரமான இன்பத்தை அளிப்பதாக இருக்கிறது.

अत्यायासकराणि कर्मपटलान्याचर्य निर्यन्मला
बोधे भक्तिपथेऽथवाऽप्युचिततामायान्ति किं तावता ।
क्लिष्ट्वा तर्कपथे परं तव वपुर्ब्रह्माख्यमन्ये पुन-
श्चित्तार्द्रत्वमृते विचिन्त्य बहुभिस्सिद्ध्यन्ति जन्मान्तरै: ॥९॥

அத்யாயாஸகராணி கர்மபடலாந்யாசர்ய நிர்யந்மலா
போ₃தே₄ ப₄க்திபதே₂(அ)த₂வா(அ)ப்யுசிததாமாயாந்தி கிம் தாவதா |
க்லிஷ்ட்வா தர்கபதே₂ பரம் தவ வபுர்ப்₃ரஹ்மாக்₂யமந்யே புந-
ஶ்சித்தார்த்₃ரத்வம்ருதே விசிந்த்ய ப₃ஹுபி₄ஸ்ஸித்₃த்₄யந்தி ஜந்மாந்தரை: || 9||

9. மிகவும் சிரமப்பட்டு கர்மாக்களைச் செய்து அதனால் வைராக்கியம் பெற்றால் ஞானயோகத்திலும், இல்லையேல் பக்தி யோகத்திலும் மக்கள் செல்கிறார்கள். அதனால் என்ன பயன்? மற்ற சிலரோ வேதாந்தமார்க்கத்தில் மிகவும் சிரமப்பட்டு, “பிரம்மம்” என்ற உன்னைத் தியானித்து, பல ஜன்மங்களுக்குப்பின் முக்தி அடைகிறார்கள்.

त्वद्भक्तिस्तु कथारसामृतझरीनिर्मज्जनेन स्वयं
सिद्ध्यन्ती विमलप्रबोधपदवीमक्लेशतस्तन्वती ।
सद्यस्सिद्धिकरी जयत्ययि विभो सैवास्तु मे त्वत्पद-
प्रेमप्रौढिरसार्द्रता द्रुततरं वातालयाधीश्वर ॥१०॥

த்வத்₃ப₄க்திஸ்து கதா₂ரஸாம்ருதஜ₂ரீநிர்மஜ்ஜநேந ஸ்வயம்
ஸித்₃த்₄யந்தீ விமலப்ரபோ₃த₄பத₃வீமக்லேஶதஸ்தந்வதீ |
ஸத்₃யஸ்ஸித்₃தி₄கரீ ஜயத்யயி விபோ₄ ஸைவாஸ்து மே த்வத்பத₃-
ப்ரேமப்ரௌடி₄ரஸார்த்₃ரதா த்₃ருததரம் வாதாலயாதீ₄ஶ்வர || 10||

10. பிரபுவே! உன்னிடம் கொண்ட பக்தியோவேனில், உன் கதைகளில் பெருகும் அம்ருத வெள்ளத்தில் மூழ்குவதால் தானாகவே மோக்ஷத்தை அளிக்கவல்லது. உடனேயே பலனைத் தருகிறது. சிரமமின்றி பிரம்ம ஞானத்தை அளிக்கிறது. உன் திருப்பாதங்களில் ஏற்பட்ட அன்பினால், இடைவிடாமல் உன்னிடம் பக்தி செய்ய எனக்கு அருள வேண்டும். 

4 comments:

  1. Wow,i think i can read this straight way,i dont need to carry away the big book with me,the tamil explanation is very crisp and short..

    ReplyDelete
  2. Hi Shanthi, could you give explanation in English also..as it will be helpful for ppl like me who don't know to read tamil :) Good Effort..Please continue.

    ReplyDelete
  3. Prema prowdi means.. murattu thanamana bakti enaku vendum endru battathri guruvayurappan idam Kettu kolgirar.

    ReplyDelete