த³ஶகம்- 15
கபில உபதேசம்
मतिरिह गुणसक्ता बन्धकृत्तेष्वसक्ता
त्वमृतकृदुपरुन्धे भक्तियोगस्तु सक्तिम् ।
महदनुगमलभ्या भक्तिरेवात्र साध्या
कपिलतनुरिति त्वं देवहूत्यै न्यगादी: ॥१॥
மதிரிஹ கு₃ணஸக்தா ப₃ந்த₄க்ருத்தேஷ்வஸக்தா
த்வம்ருதக்ருது₃பருந்தே₄ ப₄க்தியோக₃ஸ்து ஸக்திம் |
மஹத₃நுக₃மலப்₄யா ப₄க்திரேவாத்ர ஸாத்₄யா
கபிலதநுரிதி த்வம் தே₃வஹூத்யை ந்யகா₃தீ₃: || 1||
1. உன் தாயான தேவஹூதி, மீண்டும் மீண்டும் பிறப்பு வருவதற்கு என்ன காரணம் என்று உம்மிடம் கேட்டாள். இவ்வுலகிலுள்ள பொருட்களின் மேல் உள்ள பற்றில் அகப்பட்ட மனம், ஜன்மாவைக் கொடுக்கிறது. அந்தப் பொருட்களில் பற்றற்ற மனம் மோக்ஷத்தைக் கொடுக்கிறது. பகவானிடம் கொண்ட பக்தி பற்றுதலைத் தடுக்கிறது. மகான்களை அண்டி அவர்களை ஸேவிப்பதாலும் பக்தியை அடையலாம். இவ்வுலகில்தான் அந்த பக்தி கிடைக்கும் என்று உபதேசித்தீர்.
प्रकृतिमहदहङ्काराश्च मात्राश्च भूता-
न्यपि हृदपि दशाक्षी पूरुष: पञ्चविंश: ।
इति विदितविभागो मुच्यतेऽसौ प्रकृत्या
कपिलतनुरिति त्वं देवहूत्यै न्यगादी: ॥२॥
ப்ரக்ருதிமஹத₃ஹங்காராஶ்ச மாத்ராஶ்ச பூ₄தா-
ந்யபி ஹ்ருத₃பி த₃ஶாக்ஷீ பூருஷ: பஞ்சவிம்ஶ: |
இதி விதி₃தவிபா₄கோ₃ முச்யதே(அ)ஸௌ ப்ரக்ருத்யா
கபிலதநுரிதி த்வம் தே₃வஹூத்யை ந்யகா₃தீ₃: || 2||
2. ப்ரக்ருதி, மாயை, மகத்தத்வம், அகங்காரம், ஐந்து தன்மாத்திரைகள், பஞ்சபூதங்கள், ஐந்து கர்மேந்திரியங்கள், ஐந்து ஞானேந்திரியங்கள், ஜீவன் என்ற இவை இருபத்தி ஐந்து தத்துவங்களாகும். இவைகளில் இருந்து ஆத்மாவை பிரித்து உணரும்போது விடுபடுகிறான் என்று தாய்க்கு உபதேசித்தீராமே!
प्रकृतिगतगुणौघैर्नाज्यते पूरुषोऽयं
यदि तु सजति तस्यां तत् गुणास्तं भजेरन् ।
मदनुभजनतत्त्वालोचनै: साऽप्यपेयात्
कपिलतनुरिति त्वं देवहूत्यै न्यगादी: ॥३॥
ப்ரக்ருதிக₃தகு₃ணௌகை₄ர்நாஜ்யதே பூருஷோ(அ)யம்
யதி₃ து ஸஜதி தஸ்யாம் தத் கு₃ணாஸ்தம் ப₄ஜேரந் |
மத₃நுப₄ஜநதத்த்வாலோசநை: ஸா(அ)ப்யபேயாத்
கபிலதநுரிதி த்வம் தே₃வஹூத்யை ந்யகா₃தீ₃: || 3||
3. “இந்த ஆத்மா, சரீரம் முதலியவற்றின் குணங்களுடன் சம்பந்தத்தை அடைவதில்லை. ஆத்மாவானது, சரீரத்தில் பற்று கொண்டால். அந்த தேகத்தின் குணங்கள் ஆத்மாவை அடைந்துவிடும். என்னை பஜிப்பதாலும், வேதாந்த தத்வங்களை மகான்களிடத்தில் ச்ரவணம் செய்தாலோ, ப்ரக்ருதியிலிருந்து விடுபடுகிறான்” என்று உபதேசித்தீர்களாமே!
विमलमतिरुपात्तैरासनाद्यैर्मदङ्गं
गरुडसमधिरूढं दिव्यभूषायुधाङ्कम् ।
रुचितुलिततमालं शीलयेतानुवेलं
कपिलतनुरिति त्वं देवहूत्यै न्यगादी: ॥४॥
விமலமதிருபாத்தைராஸநாத்₃யைர்மத₃ங்க₃ம்
க₃ருட₃ஸமதி₄ரூட₄ம் தி₃வ்யபூ₄ஷாயுதா₄ங்கம் |
ருசிதுலிததமாலம் ஶீலயேதாநுவேலம்
கபிலதநுரிதி த்வம் தே₃வஹூத்யை ந்யகா₃தீ₃: || 4||
4. ஆசனம், யோகம் முதலியவைகளால் மனம் தெளிந்ததும், கருடன் மீது எழுந்தருளியிருக்கும் எனது திருவுருவத்தை நன்கு தியானிக்க வேண்டும். அழகிய ஆபரணங்கள், ஆயுதங்கள் இவற்றை உடையதாகவும் நன்கு தியானிக்கவேண்டும் என்று உபதேசித்தீர்கள்.
मम गुणगणलीलाकर्णनै: कीर्तनाद्यै-
र्मयि सुरसरिदोघप्रख्यचित्तानुवृत्ति: ।
भवति परमभक्ति: सा हि मृत्योर्विजेत्री
कपिलतनुरिति त्वं देवहूत्यै न्यगादी: ॥५॥
மம கு₃ணக₃ணலீலாகர்ணநை: கீர்தநாத்₃யை-
ர்மயி ஸுரஸரிதோ₃க₄ப்ரக்₂யசித்தாநுவ்ருத்தி: |
ப₄வதி பரமப₄க்தி: ஸா ஹி ம்ருத்யோர்விஜேத்ரீ
கபிலதநுரிதி த்வம் தே₃வஹூத்யை ந்யகா₃தீ₃: || 5||
5. என்னுடைய கல்யாண குணங்களையும், சரித்திரங்களையும் கேட்பதாலும், உரக்கச் சொல்வதாலும் என்னிடத்தில் பரம பக்தி உண்டாகிறது. அந்த பக்தியால் ஜனனம், மரணம் என்ற ஸம்ஸார பந்தத்தை கடந்துவிடலாம் என்று அருளினீர்கள்.
अहह बहुलहिंसासञ्चितार्थै: कुटुम्बं
प्रतिदिनमनुपुष्णन् स्त्रीजितो बाललाली ।
विशति हि गृहसक्तो यातनां मय्यभक्त:
कपिलतनुरितित्वं देवहूत्यै न्यगादी: ॥६॥
அஹஹ ப₃ஹுலஹிம்ஸாஸஞ்சிதார்தை₂: குடும்ப₃ம்
ப்ரதிதி₃நமநுபுஷ்ணந் ஸ்த்ரீஜிதோ பா₃லலாலீ |
விஶதி ஹி க்₃ருஹஸக்தோ யாதநாம் மய்யப₄க்த:
கபிலதநுரிதித்வம் தே₃வஹூத்யை ந்யகா₃தீ₃: || 6||
6. மனிதன், பொருளையும், அந்தப் பொருளால் கிடைக்கும் சுகத்தையும் நம்பி, அவற்றை சம்பாதிக்கத் தானும் கஷ்டப்பட்டு, பிறரையும் துன்புறுத்தி, மனைவி மக்களைக் காப்பாற்றுவதிலேயே வாழ்நாளைக் கழித்துவிடுகிறான். பொருட்களில் பற்று கொண்டு, என்னிடத்தில் பக்தி செய்வதில்லை. இது அவனை நரகத்தில் தள்ளுகிறது என்று தேவஹூதிக்கு உபதேசித்தீர்கள்.
युवतिजठरखिन्नो जातबोधोऽप्यकाण्डे
प्रसवगलितबोध: पीडयोल्लङ्घ्य बाल्यम् ।
पुनरपि बत मुह्यत्येव तारुण्यकाले
कपिलतनुरिति त्वं देवहूत्यै न्यगादी: ॥७॥
யுவதிஜட₂ரகி₂ந்நோ ஜாதபோ₃தோ₄(அ)ப்யகாண்டே₃
ப்ரஸவக₃லிதபோ₃த₄: பீட₃யோல்லங்க்₄ய பா₃ல்யம் |
புநரபி ப₃த முஹ்யத்யேவ தாருண்யகாலே
கபிலதநுரிதி த்வம் தே₃வஹூத்யை ந்யகா₃தீ₃: || 7||
7. ஜீவன் தாயின் கர்ப்பத்திலிருக்கும்போதே பல கஷ்டங்களை அடைகிறான். அப்போது ஞானத்தை அடைந்து பகவானை ஸ்தோத்திரம் செய்கிறான். பிறந்த பின், ஈஸ்வரனை மறந்துவிடுகிறான், குழந்தைப் பருவத்திலும், யௌவனப் பருவத்திலும் மோகத்தை அடைகிறான். கஷ்டம் என்று தாங்கள் தாய்க்கு உபதேசித்தீர்.
पितृसुरगणयाजी धार्मिको यो गृहस्थ:
स च निपतति काले दक्षिणाध्वोपगामी ।
मयि निहितमकामं कर्म तूदक्पथार्थं
कपिल्तनुरिति त्वं देवहूत्यै न्यगादी: ॥८॥
பித்ரு ஸுரக₃ணயாஜீ தா₄ர்மிகோ யோ க்₃ருஹஸ்த₂:
ஸ ச நிபததி காலே த₃க்ஷிணாத்₄வோபகா₃மீ |
மயி நிஹிதமகாமம் கர்ம தூத₃க்பதா₂ர்த₂ம்
கபில்தநுரிதி த்வம் தே₃வஹூத்யை ந்யகா₃தீ₃: || 8||
8. பித்ருக்களுக்கும், தேவர்களுக்கும் தன் கடமையைச் செய்பவன், தக்ஷிணாயன மார்க்கமாக ஸ்வர்க்கம் சென்று, அங்கு அவர்களது பலனை அனுபவித்துவிட்டு, மறுபடி பூமியில் பிறக்கிறார்கள். பலனை எதிர்பார்க்காமல் என்னிடம் தங்கள் கடமைகளை அர்ப்பணம் செய்பவர்கள் உத்தராயண மார்க்கமாக சென்று மறுபிறப்பில்லாத மோக்ஷத்தை அடைகின்றனர் என்று தாயான தேவஹூதிக்கு விளக்கினீர்கள்.
इति सुविदितवेद्यां देव हे देवहूतिं
कृतनुतिमनुगृह्य त्वं गतो योगिसङ्घै: ।
विमलमतिरथाऽसौ भक्तियोगेन मुक्ता
त्वमपि जनहितार्थं वर्तसे प्रागुदीच्याम् ॥९॥
இதி ஸுவிதி₃தவேத்₃யாம் தே₃வ ஹே தே₃வஹூதிம்
க்ருதநுதிமநுக்₃ருஹ்ய த்வம் க₃தோ யோகி₃ஸங்கை₄: |
விமலமதிரதா₂(அ)ஸௌ ப₄க்தியோகே₃ந முக்தா
த்வமபி ஜநஹிதார்த₂ம் வர்தஸே ப்ராகு₃தீ₃ச்யாம் || 9||.
9. இவ்வாறு அறிய வேண்டியவற்றை நன்கு அறிந்து கொண்ட தங்கள் தாயான தேவஹூதி, தங்களைத் துதித்தாள். அவளை அனுக்ரகித்து, முனிவர்களுடன் சென்றீர். தேவஹூதியும் தெளிந்த மனத்துடன் முக்தியை அடைந்தாள். தாங்கள், ஜனங்களுக்கு நன்மையை உண்டு பண்ணுவதற்காக வடக்கு திசையில் வசித்து வருகிறீர். “வசித்து வருகிறீர்” என்று நம்பூதிரி சொன்னதிலிருந்து, இக்கலியில், இன்றும் வசித்து வருகிறார் என்று தெரிகின்றது.
परम किमु बहूक्त्या त्वत्पदाम्भोजभक्तिं
सकलभयविनेत्रीं सर्वकामोपनेत्रीम् ।
वदसि खलु दृढं त्वं तद्विधूयामयान् मे
गुरुपवनपुरेश त्वय्युपाधत्स्व भक्तिम् ॥१०॥
பரம கிமு ப₃ஹூக்த்யா த்வத்பதா₃ம்போ₄ஜப₄க்திம்
ஸகலப₄யவிநேத்ரீம் ஸர்வகாமோபநேத்ரீம் |
வத₃ஸி க₂லு த்₃ருட₄ம் த்வம் தத்₃விதூ₄யாமயாந் மே
கு₃ருபவநபுரேஶ த்வய்யுபாத₄த்ஸ்வ ப₄க்திம் || 10||
10. பரமனே! அதிகம் சொல்வதால் என்ன பயன்? தங்களுடைய பாதத்தாமரையில் செய்யும் பக்தியே அனைத்து பயங்களையும் போக்கி, வேண்டிய எல்லாவற்றையும் கொடுக்கும் என்று சொல்லியிருக்கிறீர்கள். என்னுடைய நோய்களைப் போக்கி உம்மிடத்தில் அன்புடன் இருக்க அருள வேண்டும்.
No comments:
Post a Comment