த³ஶகம் -22
அஜாமிளன் மோக்ஷம் (அஜாமிளோபாக்யானம்)
अजामिलो नाम महीसुर: पुरा
चरन् विभो धर्मपथान् गृहाश्रमी ।
गुरोर्गिरा काननमेत्य दृष्टवान्
सुधृष्टशीलां कुलटां मदाकुलाम् ॥१॥
அஜாமிலோ நாம மஹீஸுர: புரா
சரந் விபோ₄ த₄ர்மபதா₂ந் க்₃ருஹாஶ்ரமீ |
கு₃ரோர்கி₃ரா காநநமேத்ய த்₃ருஷ்டவாந்
ஸுத்₄ருஷ்டஶீலாம்ʼ குலடாம் மதா₃குலாம் || 1||
1. முன்பொரு சமயம், அஜாமிளன் என்ற ஒரு பிராமணன், தர்ம நெறியில் வாழ்ந்து கொண்டிருந்தான். அவன், தந்தையின் உத்தரவுப்படி, காட்டிற்கு சுள்ளி பொறுக்கச் சென்றான். அங்கு, குடிப்பழக்கத்துடன், குணம் கெட்ட பெண் ஒருத்தியைக் கண்டான்.
स्वधर्ममुत्सृज्य तया समारमन् ।
अधर्मकारी दशमी भवन् पुन-
र्दधौ भवन्नामयुते सुते रतिम् ॥२॥
ஸ்வத: ப்ரஶாந்தோ(அ)பி ததா₃ஹ்ருதாஶய:
ஸ்வத₄ர்மமுத்ஸ்ருஜ்ய தயா ஸமாரமந் |
அத₄ர்மகாரீ த₃ஶமீ ப₄வந் புந-
ர்த₃தௌ₄ ப₄வந்நாமயுதே ஸுதே ரதிம் || 2||
2. இயற்கையாக இந்திரியங்களுக்கு வசப்படாதவனாக இருந்தபோதும், அவளுடைய மோக வலையில் வீழ்ந்து, தர்மத்தைக் கைவிட்டான். பல கெட்ட காரியங்களைச் செய்தான். கிழவனான அவன், ‘நாராயணா’ என்ற தங்கள் பெயர் கொண்ட தன் கடைசி பிள்ளையிடத்தில் அதிக ஆசை வைத்தான்.
भयङ्करांस्त्रीनभिलक्षयन् भिया ।
पुरा मनाक् त्वत्स्मृतिवासनाबलात्
जुहाव नारायणनामकं सुतम् ॥३॥
ஸ ம்ருத்யுகாலே யமராஜகிங்கராந்
ப₄யங்கராம்ஸ்த்ரீநபி₄லக்ஷயந் பி₄யா |
புரா மநாக் த்வத்ஸ்ம்ருதிவாஸநாப₃லாத்
ஜுஹாவ நாராயணநாமகம் ஸுதம் || 3||
3. மரண சமயத்தில், பயங்கரமான மூன்று யமதூதர்கள் அவன் முன்னே தோன்றியதும், பயத்தினால் தன் மகனை ‘நாராயணா’ என்று கூப்பிட்டான்.
முன்பு சிலகாலம் தங்களிடம் கொண்டிருந்த பக்தியே இதற்கு காரணம்.
दुराशयस्यापि तदात्वनिर्गत-
त्वदीयनामाक्षरमात्रवैभवात् ।
पुरोऽभिपेतुर्भवदीयपार्षदा:
चतुर्भुजा: पीतपटा मनोरमा: ॥४॥
து₃ராஶயஸ்யாபி ததா₃த்வநிர்க₃த-
த்வதீ₃யநாமாக்ஷரமாத்ரவைப₄வாத் |
புரோ(அ)பி₄பேதுர்ப₄வதீ₃யபார்ஷதா₃:
சதுர்பு₄ஜா: பீதபடா மநோரமா: || 4|
4. கெட்ட நடத்தையுள்ள அஜாமிளன் ‘நாராயணா’ என்ற தங்களுடைய நாமத்தைச் சொன்னவுடன், அந்த நாமத்தின் மகிமையால், நான்கு கரங்களுடன், மஞ்சள் பட்டுடுத்தி, திவ்ய ரூபத்துடன் விஷ்ணு தூதர்கள் அங்கு தோன்றினார்கள்.
अमुं च संपाश्य विकर्षतो भटान्
विमुञ्चतेत्यारुरुधुर्बलादमी ।
निवारितास्ते च भवज्जनैस्तदा
तदीयपापं निखिलं न्यवेदयन् ॥५॥
அமும் ச ஸம்பாஶ்ய விகர்ஷதோ ப₄டாந்
விமுஞ்சதேத்யாருருது₄ர்ப₃லாத₃மீ |
நிவாரிதாஸ்தே ச ப₄வஜ்ஜநைஸ்ததா₃
ததீ₃யபாபம் நிகி₂லம் ந்யவேத₃யந் || 5||
5. பாசக் கயிற்றால் அஜாமிளனைக் கட்டி இழுக்கின்ற யமதூதர்களைப் பார்த்து, அவனை விட்டு விடுமாறு கூறி, பலாத்காரமாய்த் தடுத்தார்கள். அப்போது அந்த யமதூதர்கள், அஜாமிளன் செய்த பாபங்களையெல்லாம் கூறினார்கள்.
भवन्तु पापानि कथं तु निष्कृते
कृतेऽपि भो दण्डनमस्ति पण्डिता: ।
न निष्कृति: किं विदिता भवादृशा-
मिति प्रभो त्वत्पुरुषा बभाषिरे ॥६॥
ப₄வந்து பாபாநி கத₂ம்ஷ்க்ருதே
க்ருதே(அ)பி போ₄ த₃ண்ட₃நமஸ்தி பண்டி₃தா: |
ந நிஷ்க்ருதி: கிம் விதி₃தா ப₄வாத்₃ருஶா-
மிதி ப்ரபோ₄ த்வத்புருஷா ப₃பா₄ஷிரே || 6||
6. தங்களுடைய தூதர்கள் “தர்மம் அறிந்தவர்களே! பாபத்திற்கான பிராயச்சித்தமானது செய்த பிறகு எப்படி தண்டிக்க முடியும்? பாபத்திற்கான பரிகாரம் உங்களுக்குத் தெரியாதா?” என்று கேட்டனர்.
पुनन्ति पापं न लुनन्ति वासनाम् ।
अनन्तसेवा तु निकृन्तति द्वयी-
मिति प्रभो त्वत्पुरुषा बभाषिरे ॥७॥
ஶ்ருதிஸ்ம்ருதிப்₄யாம் விஹிதா வ்ரதாத₃ய:
புநந்தி பாபம் ந லுநந்தி வாஸநாம் |
அநந்தஸேவா து நிக்ருந்ததி த்₃வயீ-
மிதி ப்ரபோ₄ த்வத்புருஷா ப₃பா₄ஷிரே || 7||
7. வேதங்களிலும், ஸ்ம்ருதிகளிலும் சொல்லப்பட்டிருக்கும் பிராயச்சித்தங்கள் பாபங்களைப் போக்குகின்றது. ஆனால், பாபம் செய்யத்தூண்டும் வாசனையை போக்காது. பகவத் பக்தியானது, பாபங்களையும், அவற்றைச் செய்யத் தூண்டும் வாசனையையும் போக்கிவிடும் என்று விஷ்ணுதூதர்கள் கூறினர்.
अनेन भो जन्मसहस्रकोटिभि:
कृतेषु पापेष्वपि निष्कृति: कृता ।
यदग्रहीन्नाम भयाकुलो हरे-
रिति प्रभो त्वत्पुरुषा बभाषिरे ॥८॥
அநேந போ₄ ஜந்மஸஹஸ்ரகோடிபி₄:
க்ருதேஷு பாபேஷ்வபி நிஷ்க்ருதி: க்ருதா |
யத₃க்₃ரஹீந்நாம ப₄யாகுலோ ஹரே-
ரிதி ப்ரபோ₄ த்வத்புருஷா ப₃பா₄ஷிரே || 8||
8. மேலும் அவர்கள், ‘இந்த அஜாமிளன் பயத்தினால், முடியாத நிலையிலும்கூட ஹரிநாமத்தைச் சொன்னான். அதனால், அவன் ஆயிரம் கோடி ஜன்மங்களில் செய்த பாபங்கள் விலகி விட்டது’ என்று சொன்னார்கள்.
नृणामबुद्ध्यापि मुकुन्दकीर्तनं
दहत्यघौघान् महिमास्य तादृश: ।
यथाग्निरेधांसि यथौषधं गदा -
निति प्रभो त्वत्पुरुषा बभाषिरे ॥९॥
ந்ருணாமபு₃த்₃த்₄யாபி முகுந்த₃கீர்தநம்
த₃ஹத்யகௌ₄கா₄ந் மஹிமாஸ்ய தாத்₃ருஶ: |
யதா₂க்₃நிரேதா₄ம்ஸி யதௌ₂ஷத₄ம் க₃தா₃ -
நிதி ப்ரபோ₄ த்வத்புருஷா ப₃பா₄ஷிரே || 9||
9. நெருப்பு எவ்வாறு விறகுகளை எரிக்கிறதோ, மருந்து எவ்வாறு வியாதியை குணப்படுத்துகிறதோ, அதுபோல் அறியாமல் சொன்னாலும், தங்களுடைய நாமம் மனிதர்களுடைய சகல பாபங்களையும் சாம்பலாக்கிவிடும். பகவன் நாமம் அத்தகைய சக்தி வாய்ந்தது என்று விஷ்ணு தூதர்கள் சொன்னார்கள்.
इतीरितैर्याम्यभटैरपासृते
भवद्भटानां च गणे तिरोहिते ।
भवत्स्मृतिं कंचन कालमाचरन्
भवत्पदं प्रापि भवद्भटैरसौ ॥१०॥
இதீரிதைர்யாம்யப₄டைரபாஸ்ருதே
ப₄வத்₃ப₄டாநாம் ச க₃ணே திரோஹிதே |
ப₄வத்ஸ்ம்ருதிம் கம்சந காலமாசரந்
ப₄வத்பத₃ம் ப்ராபி ப₄வத்₃ப₄டைரஸௌ || 10||
10. இவ்வாறு சொன்னதும் யமதூதர்கள் சென்றுவிட்டனர். தங்கள் தூதர்களும் சென்றனர். அஜாமிளன் எஞ்சிய காலத்தைத் தங்களைத் தொழுது, தங்கள் நாமங்களைச் சொல்லிக்கொண்டு கழித்தான். பிறகு, விஷ்ணு தூதர்கள் அவனை தங்கள் இருப்பிடமான வைகுண்டத்திற்கு அழைத்துச் சென்றனர்.
स्वकिङ्करावेदनशङ्कितो यम-
स्त्वदंघ्रिभक्तेषु न गम्यतामिति ।
स्वकीयभृत्यानशिशिक्षदुच्चकै:
स देव वातालयनाथ पाहि माम् ॥११॥
ஸ்வகிங்கராவேத₃நஶங்கிதோ யம-
ஸ்த்வத₃ம்க்₄ரிப₄க்தேஷு ந க₃ம்யதாமிதி |
ஸ்வகீயப்₄ருத்யாநஶிஶிக்ஷது₃ச்சகை:
ஸ தே₃வ வாதாலயநாத₂ பாஹி மாம் || 11||
ப₄வத்₃ப₄டாநாம் ச க₃ணே திரோஹிதே |
ப₄வத்ஸ்ம்ருதிம் கம்சந காலமாசரந்
ப₄வத்பத₃ம் ப்ராபி ப₄வத்₃ப₄டைரஸௌ || 10||
10. இவ்வாறு சொன்னதும் யமதூதர்கள் சென்றுவிட்டனர். தங்கள் தூதர்களும் சென்றனர். அஜாமிளன் எஞ்சிய காலத்தைத் தங்களைத் தொழுது, தங்கள் நாமங்களைச் சொல்லிக்கொண்டு கழித்தான். பிறகு, விஷ்ணு தூதர்கள் அவனை தங்கள் இருப்பிடமான வைகுண்டத்திற்கு அழைத்துச் சென்றனர்.
स्वकिङ्करावेदनशङ्कितो यम-
स्त्वदंघ्रिभक्तेषु न गम्यतामिति ।
स्वकीयभृत्यानशिशिक्षदुच्चकै:
स देव वातालयनाथ पाहि माम् ॥११॥
ஸ்த்வத₃ம்க்₄ரிப₄க்தேஷு ந க₃ம்யதாமிதி |
ஸ்வகீயப்₄ருத்யாநஶிஶிக்ஷது₃ச்சகை:
ஸ தே₃வ வாதாலயநாத₂ பாஹி மாம் || 11||
11. தனது தூதர்கள் சொன்னதைக் கேட்ட எமன், தங்களிடம் பக்தி செய்பவர்களை நெருங்கக்கூடாது என்று கட்டளையிட்டான். வாதங்களைப் போக்குபவரே! தாங்கள் என்னைக் காப்பாற்றவேண்டும்.
No comments:
Post a Comment