Monday, March 31, 2014

ஸ்ரீ நாராயணீயம் - தசகம் 31

ஸ்ரீ நாராயணீயம் - தசகம் 31, ஸ்ரீ நாராயணீயம் 31வது தசகம், ஸ்ரீமந் நாராயணீயம், ஸ்ரீ நாராயணீயம், ஸ்ரீமத் நாராயணீயம், நாராயணீயம், ஸ்ரீமன் நாராயணீயம் Narayaneeyam, Sree Narayaneeyam, Sriman narayaneeyam,Srimad Narayaneeyam

த³ஶகம் -31
வாமனாவதாரம் (தொடர்ச்சி)
மகாபலியின் செருக்கை அழித்தல்


प्रीत्या दैत्यस्तव तनुमह:प्रेक्षणात् सर्वथाऽपि
त्वामाराध्यन्नजित रचयन्नञ्जलिं सञ्जगाद ।
मत्त: किं ते समभिलषितं विप्रसूनो वद त्वं
वित्तं भक्तं भवनमवनीं वाऽपि सर्वं प्रदास्ये ॥१॥

ப்ரீத்யா தை₃த்யஸ்தவ தநுமஹ:ப்ரேக்ஷணாத் ஸர்வதா₂(அ)பி
த்வாமாராத்₄யந்நஜித ரசயந்நஞ்ஜலிம் ஸஞ்ஜகா₃த₃ |
மத்த: கிம் தே ஸமபி₄லஷிதம் விப்ரஸூநோ வத₃ த்வம்
வித்தம் ப₄க்தம் ப₄வநமவநீம் வா(அ)பி ஸர்வம் ப்ரதா₃ஸ்யே || 1||

1. தங்கள் தேககாந்தியைக்கண்ட மகாபலி, மிகுந்த அன்பினால், தங்களைப் பூஜித்தான். கைகளைக் கூப்பிக்கொண்டு, “பிராம்மண குமாரரே! உமக்கு என்னிடமிருந்து என்னென்ன வேண்டுமோ பெற்றுக்கொள்ளுங்கள். உணவோ, வீடோ, பூமியோ, எல்லாவற்றையுமோ கேளுங்கள் தருகிறேன்” என்று சொன்னான்.

तामक्षीणाम् बलिगिरमुपाकर्ण्य कारुण्यपूर्णोऽ-
प्यस्योत्सेकं शमयितुमना दैत्यवंशं प्रशंसन् ।
भूमिं पादत्रयपरिमितां प्रार्थयामासिथ त्वं
सर्वं देहीति तु निगदिते कस्य हास्यं न वा स्यात् ॥२॥

தாமக்ஷீணாம் ப₃லிகி₃ரமுபாகர்ண்ய காருண்யபூர்ணோ(அ)-
ப்யஸ்யோத்ஸேகம் ஶமயிதுமநா தை₃த்யவம்ஶம் ப்ரஶம்ஸந் |
பூ₄மிம் பாத₃த்ரயபரிமிதாம் ப்ரார்த₂யாமாஸித₂ த்வம்
ஸர்வம் தே₃ஹீதி து நிக₃தி₃தே கஸ்ய ஹாஸ்யம் ந வா ஸ்யாத் || 2||

2. குறையற்ற அந்த பலியின் வார்த்தையைக் கேட்டு, கருணை நிறைந்த தாங்கள், அவனுடைய கர்வத்தை அடக்க விரும்பி, அசுர குலத்தைப் புகழ்ந்து கூறி, மூன்றடி மண் வேண்டும் என்று கேட்டீர்கள். சகலத்தையும் கொடு என்று கேட்டால் பிறர் நகைக்க மாட்டார்களா?

विश्वेशं मां त्रिपदमिह किं याचसे बालिशस्त्वं
सर्वां भूमिं वृणु किममुनेत्यालपत्त्वां स दृप्यन् ।
यस्माद्दर्पात् त्रिपदपरिपूर्त्यक्षम: क्षेपवादान्
बन्धं चासावगमदतदर्होऽपि गाढोपशान्त्यै ॥३॥

விஶ்வேஶம்மாம் த்ரிபத₃மிஹ கிம் யாசஸே பா₃லிஶஸ்த்வம்
ஸர்வாம் பூ₄மிம் வ்ருணு கிமமுநேத்யாலபத்த்வாம் ஸ த்₃ருப்யந் |
யஸ்மாத்₃த₃ர்பாத் த்ரிபத₃பரிபூர்த்யக்ஷம: க்ஷேபவாதா₃ந்
ப₃ந்த₄ம் சாஸாவக₃மத₃தத₃ர்ஹோ(அ)பி கா₃டோ₄பஶாந்த்யை || 3||

3. “உலகங்களுக்கெல்லாம் தலைவனான என்னிடம் வெறும் மூன்றடி மண் வேண்டும் என்று யாசிக்கிறாயே! முட்டாளே! மூன்றடியால் என்ன பயன்? எல்லா பூமியையும் கேளுங்கள், தருகிறேன்” என்று பலி செருக்கோடு சொன்னான். கர்வத்தினாலேயே, அந்த மூன்றடி மண்ணைக் கொடுக்க முடியாமல், அவச்சொற்களைப் பெற்று, வருணபாசத்தாலும் கட்டுண்டான். அதற்கு அவன் தகுதியற்றவன். ஆயினும், அவன் வைராக்கியத்தை அடைவதற்காக அவ்வாறு செய்தீர்கள்.

पादत्रय्या यदि न मुदितो विष्टपैर्नापि तुष्ये-
दित्युक्तेऽस्मिन् वरद भवते दातुकामेऽथ तोयम् ।
दैत्याचार्यस्तव खलु परीक्षार्थिन: प्रेरणात्तं
मा मा देयं हरिरयमिति व्यक्तमेवाबभाषे ॥४॥

பாத₃த்ரய்யா யதி₃ ந முதி₃தோ விஷ்டபைர்நாபி துஷ்யே-
தி₃த்யுக்தே(அ)ஸ்மிந் வரத₃ ப₄வதே தா₃துகாமே(அ)த₂ தோயம் |
தை₃த்யாசார்யஸ்தவ க₂லு பரீக்ஷார்தி₂ந: ப்ரேரணாத்தம்
மா மா தே₃யம் ஹரிரயமிதி வ்யக்தமேவாப₃பா₄ஷே || 4||

4. மூன்றடி மண்ணால் சந்தோஷம் அடையாதவன்,உலகத்தையே கொடுத்தாலும் திருப்தி அடைய மாட்டான் என்று தாங்கள் சொன்னீர்கள். பலி, தானம் செய்ய நீர்வார்க்கும்போது, அசுரகுருவான சுக்ராச்சார்யார், “தானம் கொடுக்காதே, இவர் மகாவிஷ்ணு” என்று எச்சரித்தார். அப்படி அவர் சொன்னதும் தங்களுடைய தூண்டுதலினால்தான்.

याचत्येवं यदि स भगवान् पूर्णकामोऽस्मि सोऽहं
दास्याम्येव स्थिरमिति वदन् काव्यशप्तोऽपि दैत्य: ।
विन्ध्यावल्या निजदयितया दत्तपाद्याय तुभ्यं
चित्रं चित्रं सकलमपि स प्रार्पयत्तोयपूर्वम् ॥५॥

யாசத்யேவம் யதி₃ ஸ ப₄க₃வாந் பூர்ணகாமோ(அ)ஸ்மி ஸோ(அ)ஹம்
தா₃ஸ்யாம்யேவ ஸ்தி₂ரமிதி வத₃ந் காவ்யஶப்தோ(அ)பி தை₃த்ய: |
விந்த்₄யாவல்யா நிஜத₃யிதயா த₃த்தபாத்₃யாய துப்₄யம்
சித்ரம் சித்ரம் ஸகலமபி ஸ ப்ரார்பயத்தோயபூர்வம் || 5||

5. “அந்த பகவானே என்னிடத்தில் யாசகம் கேட்கும் பட்சத்தில், அவர் கேட்டதை நான் மறுக்காமல் கொடுப்பேன்” என்று சொன்ன மகாபலியை சுக்ராச்சார்யார் சபித்தார். இருப்பினும், தன் மனைவி விந்தியாவளியுடன் தீர்த்தத்தை விட்டு தன்னிடமுள்ள எல்லாவற்றையும் உமக்கு தானம் செய்தான். ஆச்சர்யம்!

निस्सन्देहं दितिकुलपतौ त्वय्यशेषार्पणं तद्-
व्यातन्वाने मुमुचु:-ऋषय: सामरा: पुष्पवर्षम् ।
दिव्यं रूपं तव च तदिदं पश्यतां विश्वभाजा-
मुच्चैरुच्चैरवृधदवधीकृत्य विश्वाण्डभाण्डम् ॥६॥

நிஸ்ஸந்தே₃ஹம் தி₃திகுலபதௌ த்வய்யஶேஷார்பணம் தத்₃-
வ்யாதந்வாநே முமுசு:-ருஷய: ஸாமரா: புஷ்பவர்ஷம் |
தி₃வ்யம் ரூபம் தவ ச ததி₃த₃ம் பஶ்யதாம் விஶ்வபா₄ஜா-
முச்சைருச்சைரவ்ருத₄த₃வதீ₄க்ருத்ய விஶ்வாண்ட₃பா₄ண்ட₃ம் || 6||

6. அசுர குலத்தில் சிறந்தவனான அந்த மகாபலி, சந்தேகமில்லாமல் தன்னிடமுள்ள அனைத்தையும் உம்மிடத்தில் கொடுத்துவிட்டான். அதைக்கண்ட தேவர்களும், முனிவர்களும் பூமாரி பொழிந்தனர். அனைவரும் பார்த்துக்கொண்டிருக்கும்போதே உம்முடைய உருவம் மிகப் பெரியதாய், அண்டங்களைத் தாண்டி வளர்ந்தது. பூமியை ஒரு திருவடியாலும், மேலுலகங்களை இன்னொரு திருவடியாலும் அளந்தீர்கள்.

त्वत्पादाग्रं निजपदगतं पुण्डरीकोद्भवोऽसौ
कुण्डीतोयैरसिचदपुनाद्यज्जलं विश्वलोकान् ।
हर्षोत्कर्षात् सुबहु ननृते खेचरैरुत्सवेऽस्मिन्
भेरीं निघ्नन् भुवनमचरज्जाम्बवान् भक्तिशाली ॥७॥

த்வத்பாதா₃க்₃ரம் நிஜபத₃க₃தம் புண்ட₃ரீகோத்₃ப₄வோ(அ)ஸௌ
குண்டீ₃தோயைரஸிசத₃புநாத்₃யஜ்ஜலம் விஶ்வலோகாந் |
ஹர்ஷோத்கர்ஷாத் ஸுப₃ஹு நந்ருதே கே₂சரைருத்ஸவே(அ)ஸ்மிந்
பே₄ரீம் நிக்₄நந் பு₄வநமசரஜ்ஜாம்ப₃வாந் ப₄க்திஶாலீ || 7||

7. ஸத்யலோகத்தை அடைந்த தங்களது பாதத்தை, பிரமன் தன் கமண்டல ஜலத்தால் அபிஷேகம் செய்தார். அந்த ஜலம், உலகங்கள் அனைத்தையும் பரிசுத்தமாக்கியது. தேவர்கள் சந்தோஷத்தால் நடனம் செய்தனர். பக்தராகிய ஜாம்பவான், தனது பேரிகையை முழக்கிக்கொண்டு பூமியை வலம் வந்தார்.

तावद्दैत्यास्त्वनुमतिमृते भर्तुरारब्धयुद्धा
देवोपेतैर्भवदनुचरैस्सङ्गता भङ्गमापन् ।
कालात्माऽयं वसति पुरतो यद्वशात् प्राग्जिता: स्म:
किं वो युद्धैरिति बलिगिरा तेऽथ पातालमापु: ॥८॥

தாவத்₃தை₃த்யாஸ்த்வநுமதிம்ருதே ப₄ர்துராரப்₃த₄யுத்₃தா₄
தே₃வோபேதைர்ப₄வத₃நுசரைஸ்ஸங்க₃தா ப₄ங்க₃மாபந் |
காலாத்மா(அ)யம் வஸதி புரதோ யத்₃வஶாத் ப்ராக்₃ஜிதா: ஸ்ம:
கிம் வோ யுத்₃தை₄ரிதி ப₃லிகி₃ரா தே(அ)த₂ பாதாலமாபு: || 8||

8. தேவனே! பலியினுடைய சம்மதமின்றி அசுரர்கள் போர் புரிய ஆரம்பித்தனர். தங்களுடன் வந்திருந்தவர்களால் தோல்வி அடைந்தனர். “காலரூபியான பகவானின் அருளால் நாம் வெற்றி அடைந்தவர்களாக இருந்தோம். அந்த பகவானே நம்முன் எதிர்க்கும்போது போரினால் பயன் இல்லை” என்று மகாபலி அசுரர்களிடம் சொன்னான். அதனைக் கேட்ட அவர்கள் தங்கள் உலகமான பாதாள உலகத்திற்குச் சென்றனர்.

पाशैर्बद्धं पतगपतिना दैत्यमुच्चैरवादी-
स्तार्त्तीयीकं दिश मम पदं किं न विश्वेश्वरोऽसि ।
पादं मूर्ध्नि प्रणय भगवन्नित्यकम्पं वदन्तं
प्रह्लाद्स्तं स्वयमुपगतो मानयन्नस्तवीत्त्वाम् ॥९॥

பாஶைர்ப₃த்₃த₄ம் பதக₃பதிநா தை₃த்யமுச்சைரவாதீ₃-
ஸ்தார்த்தீயீகம் தி₃ஶ மம பத₃ம் கிம் ந விஶ்வேஶ்வரோ(அ)ஸி |
பாத₃ம் மூர்த்₄நி ப்ரணய ப₄க₃வந்நித்யகம்பம் வத₃ந்தம்
ப்ரஹ்லாத்₃ஸ்தம் ஸ்வயமுபக₃தோ மாநயந்நஸ்தவீத்த்வாம் || 9||

9. கருடன், வருணபாசத்தால் மகாபலியைக் கட்டினான். “ எனக்கு மூன்றாவது அடி மண்ணைக் கொடு. நீ உலகங்களுக்கெல்லாம் தலைவனல்லவா” என்று உரக்கக் கேட்டீர்கள். மகாபலி சிறிதும் நிதானத்தை இழக்காமல், “பகவானே! மூன்றாவது அடியை என் தலையின்மேல் வைத்து தங்களுடையதாக்கிக் கொள்ளுங்கள்” என்று சொன்னான். அப்போது, பிரஹ்லாதன் பலியைப் புகழ்ந்து, தங்களைத் துதித்தான்.

दर्पोच्छित्त्यै विहितमखिलं दैत्य सिद्धोऽसि पुण्यै-
र्लोकस्तेऽस्तु त्रिदिवविजयी वासवत्वं च पश्चात् ।
मत्सायुज्यं भज च पुनरित्यन्वगृह्णा बलिं तं
विप्रैस्सन्तानितमखवर: पाहि वातालयेश ॥१०॥

த₃ர்போச்சி₂த்த்யை விஹிதமகி₂லம் தை₃த்ய ஸித்₃தோ₄(அ)ஸி புண்யை-
ர்லோகஸ்தே(அ)ஸ்து த்ரிதி₃வவிஜயீ வாஸவத்வம் ச பஶ்சாத் |
மத்ஸாயுஜ்யம் ப₄ஜ ச புநரித்யந்வக்₃ருஹ்ணா ப₃லிம் தம்
விப்ரைஸ்ஸந்தாநிதமக₂வர: பாஹி வாதாலயேஶ || 10||

10. திதியின் வயிற்றில் பிறந்தவனே! உன்னுடைய அகங்காரத்தை அழிக்கவே இவ்வாறெல்லாம் நடந்தது. புண்ணியங்கள் பல செய்த உனக்கு சொர்க்கத்தைவிட உயர்ந்ததான சுதலம் என்ற உலகம் கிடைக்கும். பிறகு, இந்திர பதவியை அடைந்து, பிறகு எனது saaயுஜ்யத்தை அடைவாய் என்று மகாபலிக்கு அருள் புரிந்தீர்கள். ஹே குருவாயூரப்பா! காப்பாற்றுங்கள்.

No comments:

Post a Comment