Tuesday, March 4, 2014

ஸ்ரீ நாராயணீயம் - தசகம் 4

ஸ்ரீமந் நாராயணீயம், ஸ்ரீ நாராயணீயம் - தசகம் 4, ஸ்ரீ நாராயணீயம், ஸ்ரீ நாராயணீயம் 4வது தசகம்

த³ஶகம் -4
அஷ்டாங்கயோகங்களும் அதன் சித்திகளும்

कल्यतां मम कुरुष्व तावतीं कल्यते भवदुपासनं यया ।

स्पष्टमष्टविधयोगचर्यया पुष्टयाशु तव तुष्टिमाप्नुयाम् ॥१॥

கல்யதாம் மம குருஷ்வ தாவதீம் கல்யதே ப₄வது₃பாஸநம் யயா |
ஸ்பஷ்டமஷ்டவித₄யோக₃சர்யயா புஷ்டயாஶு தவ துஷ்டிமாப்நுயாம் || 1||

1. உன்னை ஆராதிப்பதற்கும், தொழுவதற்கும் ஏற்ற சக்தியைக் கொடுத்தருள வேண்டும். அதனால், அஷ்டாங்க யோகத்தை அனுஷ்டித்து உன் அருளை அடைவேன்.

ब्रह्मचर्यदृढतादिभिर्यमैराप्लवादिनियमैश्च पाविता: ।
कुर्महे दृढममी सुखासनं पङ्कजाद्यमपि वा भवत्परा: ॥२॥

ப்₃ரஹ்மசர்யத்₃ருட₄தாதி₃பி₄ர்யமைராப்லவாதி₃நியமைஶ்ச பாவிதா: |
குர்மஹே த்₃ருட₄மமீ ஸுகா₂ஸநம் பங்கஜாத்₃யமபி வா ப₄வத்பரா: || 2||

2. ஸ்நானம், பிரம்மசர்யம் காப்பது போன்றவற்றால் பக்தர்களாகிய நாங்கள் தூய்மை அடைகிறோம். பத்மாஸனம், சுகாஸனம் முதலியவற்றை உறுதியாக செய்கிறோம்.

तारमन्तरनुचिन्त्य सन्ततं प्राणवायुमभियम्य निर्मला: ।
इन्द्रियाणि विषयादथापहृत्यास्महे भवदुपासनोन्मुखा: ॥३॥

தாரமந்தரநுசிந்த்ய ஸந்ததம் ப்ராணவாயுமபி₄யம்ய நிர்மலா: |
இந்த்₃ரியாணி விஷயாத₃தா₂பஹ்ருத்யாஸ்மஹே ப₄வது₃பாஸநோந்முகா₂: || 3||

3. ஓங்காரத்தை ஜபித்தும், பிராணாயாமம் செய்தும் தூய்மை அடைகிறோம். இந்திரியங்களை அடக்கித் தங்கள் உபாசனையில் ஈடுபட்டுவருகிறோம்.

अस्फुटे वपुषि ते प्रयत्नतो धारयेम धिषणां मुहुर्मुहु: ।
तेन भक्तिरसमन्तरार्द्रतामुद्वहेम भवदङ्घ्रिचिन्तका ॥४॥

அஸ்பு₂டே வபுஷி தே ப்ரயத்நதோ தா₄ரயேம தி₄ஷணாம் முஹுர்முஹு: |
தேந ப₄க்திரஸமந்தரார்த்₃ரதாமுத்₃வஹேம ப₄வத₃ங்க்₄ரிசிந்தகா || 4||

4. தங்கள் திவ்ய சரீரம் வேதங்களாலும் விளக்க முடியாதது. சாதாரணமானவர்களுக்குப் புலப்படாதது. அத்தகைய வடிவழகை மிகுந்த பிரயத்தனத்துடன் தியானித்து பக்தியைப் பெறுகிறோம்.

विस्फुटावयवभेदसुन्दरं त्वद्वपु: सुचिरशीलनावशात् ।
अश्रमं मनसि चिन्तयामहे ध्यानयोगनिरतास्त्वदाश्रयाः ॥५॥

விஸ்பு₂டாவயவபே₄த₃ஸுந்த₃ரம்ʼ த்வத்₃வபு: ஸுசிரஶீலநாவஶாத் |
அஶ்ரமம்ʼ மநஸி சிந்தயாமஹே த்₄யாநயோக₃நிரதாஸ்த்வதா₃ஶ்ரயா​: || 5||

5. உன்னையே அண்டியிருக்கும் நாங்கள், தியானத்தில் ஈடுபட்டு, பலகாலம் பயின்றதன் காரணமாய் மிக அழகிய தங்கள் வடிவழகை மனக்கண்ணில் எளிதாகக் காண்கிறோம்.

ध्यायतां सकलमूर्तिमीदृशीमुन्मिषन्मधुरताहृतात्मनाम् ।
सान्द्रमोदरसरूपमान्तरं ब्रह्म रूपमयि तेऽवभासते ॥६॥

த்₄யாயதாம் ஸகலமூர்திமீத்₃ருஶீமுந்மிஷந்மது₄ரதாஹ்ருதாத்மநாம் |
ஸாந்த்₃ரமோத₃ரஸரூபமாந்தரம் ப்₃ரஹ்ம ரூபமயி தே(அ)வபா₄ஸதே || 6||

6. ஓ குருவாயூரப்பா, இப்படிப்பட்ட உன் பூர்ணமான அழகு ரூபத்தை த்யானிப்பதால் ஆனந்தமான மனதை உடையவர்களாக இருக்கின்றோம். அதனால், உன் ரூபம், ஆனந்த ரூபமான பரப்ரம்மமாக எங்கள் மனதில் விளங்குகிறது.

तत्समास्वदनरूपिणीं स्थितिं त्वत्समाधिमयि विश्वनायक ।
आश्रिता: पुनरत: परिच्युतावारभेमहि च धारणादिकम् ॥७॥

தத்ஸமாஸ்வத₃நரூபிணீம் ஸ்தி₂திம் த்வத்ஸமாதி₄மயி விஶ்வநாயக |
ஆஶ்ரிதா: புநரத: பரிச்யுதாவாரபே₄மஹி ச தா₄ரணாதி₃கம் || 7||

7. ஜகன்னாதா! உன் வடிவழகில் லயித்த நாங்கள் தன்னை மறந்த நிலையான சமாதியை அடைந்துள்ளோம். இதிலிருந்து நழுவினால், மறுபடியும் தாரணை முதலியவற்றைத் தொடங்குவோம்.

इत्थमभ्यसननिर्भरोल्लसत्त्वत्परात्मसुखकल्पितोत्सवा: ।
मुक्तभक्तकुलमौलितां गता: सञ्चरेम शुकनारदादिवत् ॥८॥

இத்த₂மப்₄யஸநநிர்ப₄ரோல்லஸத்த்வத்பராத்மஸுக₂கல்பிதோத்ஸவா: |
முக்தப₄க்தகுலமௌலிதாம் க₃தா: ஸஞ்சரேம ஶுகநாரதா₃தி₃வத் || 8||

8. இப்படிச் செய்வதால், எங்களுக்கு உன் அழகு ரூபம் அதிகம் தெரியத் தொடங்குகிறது. அந்த பரப்ரம்ம அனுபவத்தால் பக்தர்களுள் சிறந்தவர்களாக ஆவோம். ஜீவன் முக்தர்களான சுகர், நாரதர் போல் நாங்களும் சஞ்சரிப்போம்.

त्वत्समाधिविजये तु य: पुनर्मङ्क्षु मोक्षरसिक: क्रमेण वा ।
योगवश्यमनिलं षडाश्रयैरुन्नयत्यज सुषुम्नया शनै: ॥९॥

த்வத்ஸமாதி₄விஜயே து ய: புநர்மங்க்ஷு மோக்ஷரஸிக: க்ரமேண வா |
யோக₃வஶ்யமநிலம் ஷடா₃ஶ்ரயைருந்நயத்யஜ ஸுஷும்நயா ஶநை: || 9||

9.பிறப்பு இல்லாதவனே! கிரம முக்தியையும், சமாதியையும் அடைய விரும்பும் யோகி, பிராணனை பிராணாயாமத்தால் அடக்குகிறான். பிறகு, மூலாதாரம் முதலிய ஆறு ஸ்தானங்களால், அப்பிராணவாயுவை மேலே கொண்டு செல்கிறான்.

लिङ्गदेहमपि सन्त्यजन्नथो लीयते त्वयि परे निराग्रह: ।
ऊर्ध्वलोककुतुकी तु मूर्धत: सार्धमेव करणैर्निरीयते ॥१०॥

லிங்க₃தே₃ஹமபி ஸந்த்யஜந்நதோ₂ லீயதே த்வயி பரே நிராக்₃ரஹ: |
ஊர்த்₄வலோககுதுகீ து மூர்த₄த: ஸார்த₄மேவ கரணைர்நிரீயதே || 10||

10. பிறகு அவன், பூத உடலை விட்டு, ஸூக்ஷ்ம சரீரத்தை அடைந்து தங்களிடத்தில் மறந்து விடுகிறான். க்ரம முக்தி (படிப்படியாக) அடைய விரும்புபவன், ஐந்து பிராணன்கள், மனம், புத்தி, பஞ்ச இந்திரியங்களுடன் தலை வழியாக உயரக் கிளம்புகிறான்.

अग्निवासरवलर्क्षपक्षगैरुत्तरायणजुषा च दैवतै: ।
प्रापितो रविपदं भवत्परो मोदवान् ध्रुवपदान्तमीयते ॥११॥

அக்₃நிவாஸரவலர்க்ஷபக்ஷகை₃ருத்தராயணஜுஷா ச தை₃வதை: |
ப்ராபிதோ ரவிபத₃ம் ப₄வத்பரோ மோத₃வாந் த்₄ருவபதா₃ந்தமீயதே || 11||

11. உன் பக்தன், அக்னி, பகல், சுக்லபக்ஷம் இவற்றுக்குரிய தேவதைகளாலும், உத்தராயண தேவதையாலும் ஸூர்ய லோகம் செல்கிறான். மிகவும் ஸந்தோஷமானவனாக த்ருவ ஸ்தானத்தையும் அடைகிறான்.

आस्थितोऽथ महरालये यदा शेषवक्त्रदहनोष्मणार्द्यते ।
ईयते भवदुपाश्रयस्तदा वेधस: पदमत: पुरैव वा ॥१२॥

ஆஸ்தி₂தோ(அ)த₂ மஹராலயே யதா₃ ஶேஷவக்த்ரத₃ஹநோஷ்மணார்த்₃யதே |
ஈயதே ப₄வது₃பாஶ்ரயஸ்ததா₃ வேத₄ஸ: பத₃மத: புரைவ வா || 12||

12. பிறகு, மஹர்லோகத்தை அடைகிறான். தான் புண்யத்தால், ஆதிசேஷன் மூச்சுக்காற்றின் உஷ்ணம் தாக்குவதற்கு முன்பே, பிரம்மலோகத்தை அடைகிறான்.

तत्र वा तव पदेऽथवा वसन् प्राकृतप्रलय एति मुक्तताम् ।
स्वेच्छया खलु पुरा विमुच्यते संविभिद्य जगदण्डमोजसा ॥१३॥

தத்ர வா தவ பதே₃(அ)த₂வா வஸந் ப்ராக்ருதப்ரலய ஏதி முக்ததாம் |
ஸ்வேச்ச₂யா க₂லு புரா விமுச்யதே ஸம்விபி₄த்₃ய ஜக₃த₃ண்ட₃மோஜஸா || 13||

13. அந்த பிரம்மலோகத்தில் அல்லது தங்களுடைய லோகத்தில் வாழ்ந்துகொண்டு, பிரளயத்தின்போது மோக்ஷம் அடைகிறான். தனது யோகபலத்தால் பிரம்மலோகத்தை விட்டு வெளியேறி ஜீவன் முக்தனாகிறான்.

तस्य च क्षितिपयोमहोऽनिलद्योमहत्प्रकृतिसप्तकावृती: ।
तत्तदात्मकतया विशन् सुखी याति ते पदमनावृतं विभो ॥१४॥

தஸ்ய ச க்ஷிதிபயோமஹோ(அ)நிலத்₃யோமஹத்ப்ரக்ருதிஸப்தகாவ்ருதீ: |
தத்ததா₃த்மகதயா விஶந் ஸுகீ₂ யாதி தே பத₃மநாவ்ருதம் விபோ₄ || 14||

14. ப்ரபோ! பூமி, நீர், நெருப்பு, காற்று, ஆகாசம், மகத்தத்வம், மாயை ஆகிய ஏழும்பிரம்மாண்டத்தை மறைத்துக்கொண்டிருக்கின்றன. உன் பக்தன் அவை ஒவ்வொன்றுக்கு உள்ளும் அந்தந்த உருவமாகவே ப்ரவேசிக்கிறான். ஸௌக்யமாய் தங்களுடைய ஸ்தானத்தை அடைகிறான்.

अर्चिरादिगतिमीदृशीं व्रजन् विच्युतिं न भजते जगत्पते ।
सच्चिदात्मक भवत् गुणोदयानुच्चरन्तमनिलेश पाहि माम् ॥१५॥

அர்சிராதி₃க₃திமீத்₃ருஶீம் வ்ரஜந் விச்யுதிம் ந ப₄ஜதே ஜக₃த்பதே |
ஸச்சிதா₃த்மக ப₄வத் கு₃ணோத₃யாநுச்சரந்தமநிலேஶ பாஹி மாம் || 15||

15. லோகநாயகா! இவ்வாறு அர்ச்சிராதி மார்க்கத்தை அடையும் அவன், மீண்டும் இவ்வுலகில் பிறப்பதில்லை. உன் மென்மையான புகழைப் பாடும் என்னை ரோகங்களிருந்து ரக்ஷிக்க வேண்டும்.

No comments:

Post a Comment