Tuesday, March 4, 2014

ஸ்ரீ நாராயணீயம் - தசகம் 5

ஸ்ரீ நாராயணீயம் - தசகம் 5, ஸ்ரீ நாராயணீயம் 5வது தசகம், ஸ்ரீமந் நாராயணீயம், ஸ்ரீ நாராயணீயம், Sree Narayaneeyam, Sriman narayaneeyam,Srimad Narayaneeyam

த³ஶகம் -5
விராட் புருஷ உற்பத்தி 

व्यक्ताव्यक्तमिदं न किञ्चिदभवत्प्राक्प्राकृतप्रक्षये
मायायाम् गुणसाम्यरुद्धविकृतौ त्वय्यागतायां लयम् ।
नो मृत्युश्च तदाऽमृतं च समभून्नाह्नो न रात्रे: स्थिति-
स्तत्रैकस्त्वमशिष्यथा: किल परानन्दप्रकाशात्मना ॥१॥

வ்யக்தாவ்யக்தமித₃ம் ந கிஞ்சித₃ப₄வத்ப்ராக்ப்ராக்ருதப்ரக்ஷயே
மாயாயாம் கு₃ணஸாம்யருத்₃த₄விக்ருதௌ த்வய்யாக₃தாயாம் லயம் |
நோ ம்ருத்யுஶ்ச ததா₃(அ)ம்ருதம் ச ஸமபூ₄ந்நாஹ்நோ ந ராத்ரே: ஸ்தி₂தி-
ஸ்தத்ரைகஸ்த்வமஶிஷ்யதா₂: கில பராநந்த₃ப்ரகாஶாத்மநா || 1||

1. மகாப்ரளயம் ஏற்பட்டபோது மாயையானது தங்களிடம் மறைந்து விட்டதால்   பிரபஞ்சமும், வேறு ஒன்றும் இருக்கவில்லை. தாங்கள் ஒருவரே பரமானந்தரூபியாக தனித்து இருந்தீர்கள்.

काल: कर्म गुणाश्च जीवनिवहा विश्वं च कार्यं विभो
चिल्लीलारतिमेयुषि त्वयि तदा निर्लीनतामाययु: ।
तेषां नैव वदन्त्यसत्त्वमयि भो: शक्त्यात्मना तिष्ठतां
नो चेत् किं गगनप्रसूनसदृशां भूयो भवेत्संभव: ॥२॥

கால: கர்ம கு₃ணாஶ்ச ஜீவநிவஹா விஶ்வம் ச கார்யம் விபோ₄
சில்லீலாரதிமேயுஷி த்வயி ததா₃ நிர்லீநதாமாயயு: |
தேஷாம் நைவ வத₃ந்த்யஸத்த்வமயி போ₄: ஶக்த்யாத்மநா திஷ்ட₂தாம்
நோ சேத் கிம் க₃க₃நப்ரஸூநஸத்₃ருஶாம் பூ₄யோ ப₄வேத்ஸம்ப₄வ: || 2||

2. அப்போது தாங்கள் ஆத்ம ரூபமான லீலையில் ஈடுபட்டிருந்தீர்கள். முக்குணங்களும், ஜீவராசிகளும், அவைகளின் செயல்களும் மறைந்துவிட்டன. காரண ரூபமாக உள்ள அவை எல்லாவற்றையும் வேதங்கள் இல்லையென்று சொல்லவில்லை. இல்லாவிடில், ஆகாச புஷ்பத்தைப் போன்ற அவை மறுபடியும் உண்டாகுமா?

एवं च द्विपरार्धकालविगतावीक्षां सिसृक्षात्मिकां
बिभ्राणे त्वयि चुक्षुभे त्रिभुवनीभावाय माया स्वयम् ।
मायात: खलु कालशक्तिरखिलादृष्टं स्वभावोऽपि च
प्रादुर्भूय गुणान्विकास्य विदधुस्तस्यास्सहायक्रियाम् ॥३॥

ஏவம் ச த்₃விபரார்த₄காலவிக₃தாவீக்ஷாம் ஸிஸ்ருக்ஷாத்மிகாம்
பி₃ப்₄ராணே த்வயி சுக்ஷுபே₄ த்ரிபு₄வநீபா₄வாய மாயா ஸ்வயம் |
மாயாத: க₂லு காலஶக்திரகி₂லாத்₃ருஷ்டம் ஸ்வபா₄வோ(அ)பி ச
ப்ராது₃ர்பூ₄ய கு₃ணாந்விகாஸ்ய வித₃து₄ஸ்தஸ்யாஸ்ஸஹாயக்ரியாம் || 3||

3. இவ்வாறு இரண்டு பரார்த்த காலம் முடிந்ததும் தாங்கள் படைக்கவேண்டும் என நினைத்தீர்கள். மாயை படைப்பதை நினத்து கலக்கமடைந்தது. மாயையிலிருந்து மஹாகாலமும், ஜீவன்களின் கர்மம்,அவற்றின் தன்மை முதலியன தோன்றின. அவை, முக்குணங்களையும் உண்டாக்கி, ஸ்ருஷ்டியில் மாயைக்கு உதவி புரிந்தன.

मायासन्निहितोऽप्रविष्टवपुषा साक्षीति गीतो भवान्
भेदैस्तां प्रतिबिंबतो विविशिवान् जीवोऽपि नैवापर: ।
कालादिप्रतिबोधिताऽथ भवता संचोदिता च स्वयं
माया सा खलु बुद्धितत्त्वमसृजद्योऽसौ महानुच्यते ॥४॥

மாயாஸந்நிஹிதோ(அ)ப்ரவிஷ்டவபுஷா ஸாக்ஷீதி கீ₃தோ ப₄வாந்
பே₄தை₃ஸ்தாம் ப்ரதிபி₃ம்ப₃தோ விவிஶிவாந் ஜீவோ(அ)பி நைவாபர: |
காலாதி₃ப்ரதிபோ₃தி₄தா(அ)த₂ ப₄வதா ஸம்சோதி₃தா ச ஸ்வயம்
மாயா ஸா க₂லு பு₃த்₃தி₄தத்த்வமஸ்ருஜத்₃யோ(அ)ஸௌ மஹாநுச்யதே || 4||

4. நீ மாயைக்கு அருகில் இருந்தாலும், அதன் சம்பந்தம் இல்லாததால், உன்னை சாட்சி என்று சொல்கிறார்கள். அந்த மாயையில், பல ரூபங்களுடன்
இருக்கும் ஜீவனும் நீயே. அந்த மாயை, காலம், கர்மம், அவற்றின் தன்மை ஆகியவற்றால் உணர்த்தப்பட்டும், உன்னால் ஏவப்பட்டும் புத்தி தத்வத்தை உண்டாக்கியது. இந்த புத்தி தத்வமானது, மகத்தத்வம் என்று சொல்லப்படுகிறது.

तत्रासौ त्रिगुणात्मकोऽपि च महान् सत्त्वप्रधान: स्वयं
जीवेऽस्मिन् खलु निर्विकल्पमहमित्युद्बोधनिष्पाद्क: ।
चक्रेऽस्मिन् सविकल्पबोधकमहन्तत्त्वं महान् खल्वसौ
सम्पुष्टं त्रिगुणैस्तमोऽतिबहुलं विष्णो भवत्प्रेरणात् ॥५॥

தத்ராஸௌ த்ரிகு₃ணாத்மகோ(அ)பி ச மஹாந் ஸத்த்வப்ரதா₄ந: ஸ்வயம்
ஜீவே(அ)ஸ்மிந் க₂லு நிர்விகல்பமஹமித்யுத்₃போ₃த₄நிஷ்பாத்₃க: |
சக்ரே(அ)ஸ்மிந் ஸவிகல்பபோ₃த₄கமஹந்தத்த்வம் மஹாந் க₂ல்வஸௌ
ஸம்புஷ்டம் த்ரிகு₃ணைஸ்தமோ(அ)திப₃ஹுலம் விஷ்ணோ ப₄வத்ப்ரேரணாத் || 5||

5. இந்த மகத்தத்வம் முக்குணங்களின் உருவமாக இருந்தாலும், ஸத்வ குணத்தையே பிரதானமாகக் கொண்டு ஜீவனிடத்தில் நான் என்னும் அறிவை உண்டாக்குகிறது. இதுவே, தமோ குணம் நிறைந்ததாக ஜீவனிடத்தில் நான் மனிதன் என்ற அகங்காரத்தையும் உண்டு பண்ணுகிறது.

सोऽहं च त्रिगुणक्रमात् त्रिविधतामासाद्य वैकारिको
भूयस्तैजसतामसाविति भवन्नाद्येन सत्त्वात्मना
देवानिन्द्रियमानिनोऽकृत दिशावातार्कपाश्यश्विनो
वह्नीन्द्राच्युतमित्रकान् विधुविधिश्रीरुद्रशारीरकान् ॥६॥

ஸோ(அ)ஹம் ச த்ரிகு₃ணக்ரமாத் த்ரிவித₄தாமாஸாத்₃ய வைகாரிகோ
பூ₄யஸ்தைஜஸதாமஸாவிதி ப₄வந்நாத்₃யேந ஸத்த்வாத்மநா
தே₃வாநிந்த்₃ரியமாநிநோ(அ)க்ருத தி₃ஶாவாதார்கபாஶ்யஶ்விநோ
வஹ்நீந்த்₃ராச்யுதமித்ரகாந் விது₄விதி₄ஶ்ரீருத்₃ரஶாரீரகாந் || 6||

6. இந்த அகங்காரம் தோன்றிய உடனேயே, ஸத்வம், ராஜஸம், தாமஸம் என்ற மூன்று தன்மைகளை அடைகிறது. முதலாவதான ஸத்வம் என்ற அகங்காரமானது, திசைகள், வாயு, ஸூர்யன், வருணன், அஸ்வினீதேவர்கள், அக்னி, இந்திரன், மித்ரன், பிரஜாபதி, சந்திரன், பிரம்மா, ருத்ரன், முதலியவர்களைப் படைத்தது.

भूमन् मानसबुद्ध्यहंकृतिमिलच्चित्ताख्यवृत्त्यन्वितं
तच्चान्त:करणं विभो तव बलात् सत्त्वांश एवासृजत् ।
जातस्तैजसतो दशेन्द्रियगणस्तत्तामसांशात्पुन-
स्तन्मात्रं नभसो मरुत्पुरपते शब्दोऽजनि त्वद्बलात् ॥७॥

பூ₄மந் மாநஸபு₃த்₃த்₄யஹம் க்ருதிமிலச்சித்தாக்₂யவ்ருத்த்யந்விதம்
தச்சாந்த:கரணம் விபோ₄ தவ ப₃லாத் ஸத்த்வாம்ஶ ஏவாஸ்ருஜத் |
ஜாதஸ்தைஜஸதோ த₃ஶேந்த்₃ரியக₃ணஸ்தத்தாமஸாம்ஶாத்புந-
ஸ்தந்மாத்ரம் நப₄ஸோ மருத்புரபதே ஶப்₃தோ₃(அ)ஜநி த்வத்₃ப₃லாத் || 7||

7. உலகெங்கும் நிறைந்தவனே! உன்னுடைய வலிமையால் ஸத்வ குணமானது, மனது, புத்தி, அகங்காரம் இவைகளுடன் கூடிய சித்தம் என்ற ஸாத்வீக அகங்காரத்தை உண்டாக்கியது. ரஜோ குணமானது, பத்து இந்திரியங்களை உண்டாக்கியது. தமோ குணமானது ஆகாயத்தின் ஸூக்ஷ்ம சப்தத்தை உண்டாக்கியது.

श्ब्दाद्व्योम तत: ससर्जिथ विभो स्पर्शं ततो मारुतं
तस्माद्रूपमतो महोऽथ च रसं तोयं च गन्धं महीम् ।
एवं माधव पूर्वपूर्वकलनादाद्याद्यधर्मान्वितं
भूतग्राममिमं त्वमेव भगवन् प्राकाशयस्तामसात् ॥८॥

ஶப்₃தா₃த்₃வ்யோம தத: ஸஸர்ஜித₂ விபோ₄ ஸ்பர்ஶம் ததோ மாருதம்
தஸ்மாத்₃ரூபமதோ மஹோ(அ)த₂ ச ரஸம் தோயம் ச க₃ந்த₄ம் மஹீம் |
ஏவம் மாத₄வ பூர்வபூர்வகலநாதா₃த்₃யாத்₃யத₄ர்மாந்விதம்
பூ₄தக்₃ராமமிமம் த்வமேவ ப₄க₃வந் ப்ராகாஶயஸ்தாமஸாத் || 8||

8. குருவாயூரப்பா! தாங்கள் தாமஸ அகங்காரத்தின் அம்சத்தால், சப்தத்திலிருந்து ஆகாசத்தையும், ஆகாயத்திலிருந்து ஸ்பரிசம், ஸ்பரிசத்திலிருந்து காற்று, காற்றிலிருந்து ரூபம், ரூபத்திலிருந்து தேஜஸ், தேஜஸிலிருந்து சுவை, சுவையிலிருந்து நீர், நீரிலிருந்து மணம், மணத்திலிருந்து பூமி ஆகியவற்றைப் படைத்தீர்கள். இப்படி உண்டானவைகளின் சேர்க்கையால் அவற்றின் தன்மைகள் கொண்ட பஞ்சபூதங்களையும் படைத்தீர்கள்.

एते भूतगणास्तथेन्द्रियगणा देवाश्च जाता: पृथङ्-
नो शेकुर्भुवनाण्डनिर्मितिविधौ देवैरमीभिस्तदा ।
त्वं नानाविधसूक्तिभिर्नुतगुणस्तत्त्वान्यमून्याविशं-
श्चेष्टाशक्तिमुदीर्य तानि घटयन् हैरण्यमण्डं व्यधा: ॥९॥

ஏதே பூ₄தக₃ணாஸ்ததே₂ந்த்₃ரியக₃ணா தே₃வாஶ்ச ஜாதா: ப்ருத₂ங்-
நோ ஶேகுர்பு₄வநாண்ட₃நிர்மிதிவிதௌ₄ தே₃வைரமீபி₄ஸ்ததா₃ |
த்வம் நாநாவித₄ஸூக்திபி₄ர்நுதகு₃ணஸ்தத்த்வாந்யமூந்யாவிஶம்-
ஶ்சேஷ்டாஶக்திமுதீ₃ர்ய தாநி க₄டயந் ஹைரண்யமண்ட₃ம் வ்யதா₄: || 9||

9. இப்படித் தோன்றிய பஞ்ச பூதங்களும், பஞ்ச இந்திரியங்களும் தனித்தனியே இருந்ததால் அவற்றால் பிரம்மாண்டத்தைப் படைக்கும் சக்தி இல்லை. அப்போது தேவர்கள் உம்மைத் துதித்தார்கள். உடன் நீர் அந்த மகத்தத்வங்களுக்குள் பிரவேசித்து அவற்றுக்கு க்ரியா சக்தியை அளித்தீர்கள், பிறகு பிரம்மாண்டத்தைப் படைத்தீர்கள்.

अण्डं तत्खलु पूर्वसृष्टसलिलेऽतिष्ठत् सहस्रं समा:
निर्भिन्दन्नकृथाश्चतुर्दशजगद्रूपं विराडाह्वयम् ।
साहस्रै: करपादमूर्धनिवहैर्निश्शेषजीवात्मको
निर्भातोऽसि मरुत्पुराधिप स मां त्रायस्व सर्वामयात् ॥१०॥

அண்ட₃ம் தத்க₂லு பூர்வஸ்ருஷ்டஸலிலே(அ)திஷ்ட₂த் ஸஹஸ்ரம் ஸமா:
நிர்பி₄ந்த₃ந்நக்ருதா₂ஶ்சதுர்த₃ஶஜக₃த்₃ரூபம் விராடா₃ஹ்வயம் |
ஸாஹஸ்ரை: கரபாத₃மூர்த₄நிவஹைர்நிஶ்ஶேஷஜீவாத்மகோ
நிர்பா₄தோ(அ)ஸி மருத்புராதி₄ப ஸ மாம் த்ராயஸ்வ ஸர்வாமயாத் || 10||

10. குருவாயூரப்பா, நீங்கள் முதலில் ஜலத்தை உண்டாக்கினீர்கள். பிரம்மாண்டம் அந்த நீரில் ஆயிரம் வருஷங்கள் மூழ்கி இருந்தது. தாங்கள் அதைப் பிளந்து கொண்டு ஈரேழு லோக ரூபமான விராட் ரூபத்தைத் தரித்தீர்கள். ஆயிரக்கணக்கான கைகள், கால்கள், தலைகளுடன் சகலவிதமான ஜீவராசிகளின் வடிவமாகத் தோன்றினீர்கள். அத்தகைய தாங்கள் என்னை சகல விதமான ரோகங்களில் இருந்தும் காக்க வேண்டும் என்று நம்பூதிரி வேண்ட அப்பனும் “அப்படியே ஆகட்டும்” என்று தம் தலையை அசைத்து அங்கீகரித்தார்.

No comments:

Post a Comment