Sunday, March 9, 2014

ஸ்ரீ நாராயணீயம் - தசகம் 9

ஸ்ரீ நாராயணீயம் - தசகம் 9, ஸ்ரீ நாராயணீயம் 9வது தசகம், ஸ்ரீமந் நாராயணீயம், ஸ்ரீ நாராயணீயம், Narayaneeyam, Sree Narayaneeyam, Sriman narayaneeyam,Srimad Narayaneeyam

த³ஶகம்-9
ப்ரும்மாவின் தவமும் மூவுலகப் படைப்பும்

स्थितस्स कमलोद्भवस्तव हि नाभिपङ्केरुहे
कुत: स्विदिदमम्बुधावुदितमित्यनालोकयन् ।
तदीक्षणकुतूहलात् प्रतिदिशं विवृत्तानन-
श्चतुर्वदनतामगाद्विकसदष्टदृष्ट्यम्बुजाम् ॥१॥

ஸ்தி₂தஸ்ஸ கமலோத்₃ப₄வஸ்தவ ஹி நாபி₄பங்கேருஹே
குத: ஸ்விதி₃த₃மம்பு₃தா₄வுதி₃தமித்யநாலோகயந் |
ததீ₃க்ஷணகுதூஹலாத் ப்ரதிதி₃ஶம்ʼ விவ்ருத்தாநந-
ஶ்சதுர்வத₃நதாமகா₃த்₃விகஸத₃ஷ்டத்₃ருஷ்ட்யம்பு₃ஜாம் || 1||

1. தங்களுடைய நாபிக்கமலத்திலிருந்து உண்டான அந்த ப்ரும்மன், இந்தத் தாமரை எங்கிருந்து உண்டானது என்று எட்டு திசைகளிலும் தேடினார். அப்போது, தாமரை மலர் போன்ற எட்டு கண்களுடன் கூடிய நான்கு முகங்களைப் பெற்றார்.

महार्णवविघूर्णितं कमलमेव तत्केवलं
विलोक्य तदुपाश्रयं तव तनुं तु नालोकयन् ।
क एष कमलोदरे महति निस्सहायो ह्यहं
कुत: स्विदिदम्बुजं समजनीति चिन्तामगात् ॥२॥

மஹார்ணவவிகூ₄ர்ணிதம் கமலமேவ தத்கேவலம்
விலோக்ய தது₃பாஶ்ரயம் தவ தநும் து நாலோகயந் |
க ஏஷ கமலோத₃ரே மஹதி நிஸ்ஸஹாயோ ஹ்யஹம்
குத: ஸ்விதி₃த₃ம்பு₃ஜம் ஸமஜநீதி சிந்தாமகா₃த் || 2||

2. அந்தத் தாமரை சமுத்திர ஜலத்தில் அசைந்தது. அந்த மலருக்குக் காரணமான உனது அழகு உருவத்தை அவரால் காண முடியவில்லை. “இந்த தாமரையில், துணையில்லாமல் தனியாக இருக்கிறேனே, இந்தத் தாமரை எங்கிருந்து உண்டானது?” என்று யோசித்தார்.

अमुष्य हि सरोरुह: किमपि कारणं सम्भ्वे-
दिति स्म कृतनिश्चयस्स खलु नालरन्ध्राध्वना ।
स्वयोगबलविद्यया समवरूढवान् प्रौढधी -
स्त्वदीयमतिमोहनं न तु कलेवरं दृष्टवान् ॥३॥

அமுஷ்ய ஹி ஸரோருஹ: கிமபி காரணம் ஸம்ப்₄வே-
தி₃தி ஸ்ம க்ருதநிஶ்சயஸ்ஸ க₂லு நாலரந்த்₄ராத்₄வநா |
ஸ்வயோக₃ப₃லவித்₃யயா ஸமவரூட₄வாந் ப்ரௌட₄தீ₄ -
ஸ்த்வதீ₃யமதிமோஹநம் ந து கலேவரம் த்₃ருஷ்டவாந் || 3||

3. சிறந்த புத்தியுள்ள பிரமன் இந்த தாமரை உண்டான இடம் ஒன்று இருக்க வேண்டும் என்று தீர்மானித்து, தனது யோக சக்தியினால் அந்தத் தாமரைத் தண்டின் வழியே சென்று தேடினார். ஆனாலும் தங்கள் உருவத்தைக் காண முடியவில்லை. 

तत: सकलनालिकाविवरमार्गगो मार्गयन्
प्रयस्य शतवत्सरं किमपि नैव संदृष्टवान् ।
निवृत्य कमलोदरे सुखनिषण्ण एकाग्रधी:
समाधिबलमादधे भवदनुग्रहैकाग्रही ॥४॥

தத: ஸகலநாலிகாவிவரமார்க₃கோ₃ மார்க₃யந்
ப்ரயஸ்ய ஶதவத்ஸரம் கிமபி நைவ ஸம்த்₃ருஷ்டவாந் |
நிவ்ருத்ய கமலோத₃ரே ஸுக₂நிஷண்ண ஏகாக்₃ரதீ₄:
ஸமாதி₄ப₃லமாத₃தே₄ ப₄வத₃நுக்₃ரஹைகாக்₃ரஹீ || 4||

4. நூறு வருடங்கள் தாமரைத் தண்டின் துவாரங்களில் தேடியும் தங்களை எங்கும் காணவில்லை. பிறகு, மனதை ஒருநிலைப்படுத்தி, தீவிர தியானத்தைச் செய்தாராமே?

शतेन परिवत्सरैर्दृढसमाधिबन्धोल्लसत्-
प्रबोधविशदीकृत: स खलु पद्मिनीसम्भव: ।
अदृष्टचरमद्भुतं तव हि रूपमन्तर्दृशा
व्यचष्ट परितुष्टधीर्भुजगभोगभागाश्रयम् ॥५॥

ஶதேந பரிவத்ஸரைர்த்₃ருட₄ஸமாதி₄ப₃ந்தோ₄ல்லஸத்-
ப்ரபோ₃த₄விஶதீ₃க்ருத: ஸ க₂லு பத்₃மிநீஸம்ப₄வ: |
அத்₃ருஷ்டசரமத்₃பு₄தம் தவ ஹி ரூபமந்தர்த்₃ருஶா
வ்யசஷ்ட பரிதுஷ்டதீ₄ர்பு₄ஜக₃போ₄க₃பா₄கா₃ஶ்ரயம் || 5||

5. அவ்வாறு நூறு வருடங்கள் தவம் செய்தார். அதனால் ஞானத்தை அடைந்தார். ஆதிசேஷனின் மேல் அமர்ந்த உன் அழகிய உருவத்தை ஞானக் கண்ணால் கண்டு ஆனந்தம் அடைந்தார்.

किरीटमुकुटोल्लसत्कटकहारकेयूरयुङ्-
मणिस्फुरितमेखलं सुपरिवीतपीताम्बरम् ।
कलायकुसुमप्रभं गलतलोल्लसत्कौस्तुभं
वपुस्तदयि भावये कमलजन्मे दर्शितम् ॥६॥

கிரீடமுகுடோல்லஸத்கடகஹாரகேயூரயுங்-
மணிஸ்பு₂ரிதமேக₂லம் ஸுபரிவீதபீதாம்ப₃ரம் |
கலாயகுஸுமப்ரப₄ம் க₃லதலோல்லஸத்கௌஸ்துப₄ம்
வபுஸ்தத₃யி பா₄வயே கமலஜந்மே த₃ர்ஶிதம் || 6||

6. கிரீடம், மகுடம் இவைகளால் பிரகாசிக்கிறதும், வளைகள், முத்து மாலைகள், தோள்வளைகள் இவற்றுடனும், சிறந்த ரத்தினங்கள் இழைத்த ஒட்டியாணத்துடனும், பீதாம்பரத்துடனும், காயாம்பூ போன்ற நீல நிறத்துடன் விளங்கும் கௌஸ்துபம் என்ற மணியுடனும் திகழும் தங்கள் அழகிய திருமேனியைக் கண்டார். அவ்வாறு, பிரும்மதேவனுக்குக் காட்சி அளித்த உனது திருமேனியை நான் தியானம் செய்கிறேன்.

श्रुतिप्रकरदर्शितप्रचुरवैभव श्रीपते
हरे जय जय प्रभो पदमुपैषि दिष्ट्या दृशो: ।
कुरुष्व धियमाशु मे भुवननिर्मितौ कर्मठा-
मिति द्रुहिणवर्णितस्वगुणबंहिमा पाहि माम् ॥७॥

ஶ்ருதிப்ரகரத₃ர்ஶிதப்ரசுரவைப₄வ ஶ்ரீபதே
ஹரே ஜய ஜய ப்ரபோ₄ பத₃முபைஷி தி₃ஷ்ட்யா த்₃ருஶோ: |
குருஷ்வ தி₄யமாஶு மே பு₄வநநிர்மிதௌ கர்மடா₂-
மிதி த்₃ருஹிணவர்ணிதஸ்வகு₃ணப₃ம்ஹிமா பாஹி மாம் || 7||

7. ஓ விஷ்ணுவே! தங்கள் பெருமைகளை வேதங்கள் கூறுகின்றன. நான் செய்த பாக்யத்தால் தங்களைக் கண்டேன். உலகைப் படைக்கும் செயலில் எனக்கு நல்ல திறமையைத் தாங்கள் தர வேண்டும் என்று பிரமன் துதித்தார். இப்படித் துதிக்கப்பட்ட கல்யாணகுணங்களை உடைய தாங்கள் என்னைக் காக்க வேண்டும்.

लभस्व भुवनत्रयीरचनदक्षतामक्षतां
गृहाण मदनुग्रहं कुरु तपश्च भूयो विधे ।
भवत्वखिलसाधनी मयि च भक्तिरत्युत्कटे-
त्युदीर्य गिरमादधा मुदितचेतसं वेधसम् ॥८॥

லப₄ஸ்வ பு₄வநத்ரயீரசநத₃க்ஷதாமக்ஷதாம்
க்₃ருஹாண மத₃நுக்₃ரஹம் குரு தபஶ்ச பூ₄யோ விதே₄ |
ப₄வத்வகி₂லஸாத₄நீ மயி ச ப₄க்திரத்யுத்கடே-
த்யுதீ₃ர்ய கி₃ரமாத₃தா₄ முதி₃தசேதஸம் வேத₄ஸம் || 8||

8. மூன்று உலகையும் படைக்கும் திறமையை அடைந்து, என் அருளையும் பெறுவாய். மீண்டும் தவம் செய்து, என்னிடத்தில் சிறந்த பக்தியையும் பெறுவாய் என்று அனுக்ரஹித்தீர்கள்.

शतं कृततपास्तत: स खलु दिव्यसंवत्सरा-
नवाप्य च तपोबलं मतिबलं च पूर्वाधिकम् ।
उदीक्ष्य किल कम्पितं पयसि पङ्कजं वायुना
भवद्बलविजृम्भित: पवनपाथसी पीतवान् ॥९॥

ஶதம் க்ருததபாஸ்தத: ஸ க₂லு தி₃வ்யஸம்வத்ஸரா-
நவாப்ய ச தபோப₃லம் மதிப₃லம் ச பூர்வாதி₄கம் |
உதீ₃க்ஷ்ய கில கம்பிதம் பயஸி பங்கஜம் வாயுநா
ப₄வத்₃ப₃லவிஜ்ரும்பி₄த: பவநபாத₂ஸீ பீதவாந் || 9||

9. ப்ரும்மதேவர், நூறு தேவ வருடங்கள் தவம் செய்து, தவவலிமையையும், அதிகமான அறிவையும் பெற்றார். தான் அமர்ந்திருந்த தாமரை காற்றினால் அசைவதைக் கண்டார். உன் பலத்தால் அந்த காற்றையும், நீரையும் பருகினார்.

तवैव कृपया पुनस्सरसिजेन तेनैव स:
प्रकल्प्य भुवनत्रयीं प्रववृते प्रजानिर्मितौ ।
तथाविधकृपाभरो गुरुमरुत्पुराधीश्वर
त्वमाशु परिपाहि मां गुरुदयोक्षितैरीक्षितै: ॥१०॥

தவைவ க்ருபயா புநஸ்ஸரஸிஜேந தேநைவ ஸ:
ப்ரகல்ப்ய பு₄வநத்ரயீம் ப்ரவவ்ருதே ப்ரஜாநிர்மிதௌ |
ததா₂வித₄க்ருபாப₄ரோ கு₃ருமருத்புராதீ₄ஶ்வர
த்வமாஶு பரிபாஹி மாம் கு₃ருத₃யோக்ஷிதைரீக்ஷிதை: || 10||

10. தங்கள் கருணையால் ப்ரும்மன் மூன்று உலகங்களையும் படைத்தார். அப்பேர்க்கொத்த ஓ குருவாயூரப்பா! தங்கள் கருணையான கடைக்கண் பார்வையால் என்னை ரக்ஷிக்க வேண்டும்.

No comments:

Post a Comment