Monday, March 24, 2014

ஸ்ரீ நாராயணீயம் - தசகம் 24

ஸ்ரீ நாராயணீயம் - தசகம் 24, ஸ்ரீ நாராயணீயம் 24வது தசகம், ஸ்ரீமந் நாராயணீயம், ஸ்ரீ நாராயணீயம், ஸ்ரீமத் நாராயணீயம், நாராயணீயம், ஸ்ரீமன் நாராயணீயம் Narayaneeyam, Sree Narayaneeyam, Sriman narayaneeyam,Srimad Narayaneeyam

த³ஶகம் -24
பிரஹ்லாத சரித்திரம்

हिरण्याक्षे पोत्रिप्रवरवपुषा देव भवता
हते शोकक्रोधग्लपितधृतिरेतस्य सहज: ।
हिरण्यप्रारम्भ: कशिपुरमरारातिसदसि
प्रतिज्ञमातेने तव किल वधार्थं मधुरिपो ॥१॥

ஹிரண்யாக்ஷே போத்ரிப்ரவரவபுஷா தே₃வ ப₄வதா
ஹதே ஶோகக்ரோத₄க்₃லபிதத்₄ருதிரேதஸ்ய ஸஹஜ: |
ஹிரண்யப்ராரம்ப₄: கஶிபுரமராராதிஸத₃ஸி
ப்ரதிஜ்ஞமாதேநே தவ கில வதா₄ர்த₂ம் மது₄ரிபோ || 1||

1. மது என்ற அசுரனைக் கொன்றவனே! தாங்கள் வராக அவதாரம் எடுத்து ஹிரண்யாக்ஷனைக் கொன்றதால் கோபமடைந்த அவனுடைய சகோதரன் ஹிரண்யகசிபு, அசுரர்களின் சபையில், தங்களைக் கொல்வதாக சபதம் செய்தான்.

विधातारं घोरं स खलु तपसित्वा नचिरत:
पुर: साक्षात्कुर्वन् सुरनरमृगाद्यैरनिधनम् ।
वरं लब्ध्वा दृप्तो जगदिह भवन्नायकमिदं
परिक्षुन्दन्निन्द्रादहरत दिवं त्वामगणयन् ॥२॥

விதா₄தாரம் கோ₄ரம் ஸ க₂லு தபஸித்வா நசிரத:
புர: ஸாக்ஷாத்குர்வந் ஸுரநரம்ருகா₃த்₃யைரநித₄நம் |
வரம் லப்₃த்₄வா த்₃ருப்தோ ஜக₃தி₃ஹ ப₄வந்நாயகமித₃ம்
பரிக்ஷுந்த₃ந்நிந்த்₃ராத₃ஹரத தி₃வம் த்வாமக₃ணயந் || 2||

2. அவன் கடுமையான தவம் புரிந்து, பிரம்மதேவனைத் தன்முன் தோன்றவைத்து, பல வரங்கள் பெற்றான். தேவர்களாலும், மனிதர்களாலும், மிருகங்களாலும் மரணமில்லாத வரத்தைப் பெற்றான். அதனால் கொழுப்படைந்து, தங்களைத் தலைவராக உடைய இந்த உலகத்தை அழித்துக்கொண்டு, இந்திரலோகத்தைக் கைப்பற்றினான். 

निहन्तुं त्वां भूयस्तव पदमवाप्तस्य च रिपो-
र्बहिर्दृष्टेरन्तर्दधिथ हृदये सूक्ष्मवपुषा ।
नदन्नुच्चैस्तत्राप्यखिलभुवनान्ते च मृगयन्
भिया यातं मत्वा स खलु जितकाशी निववृते ॥३॥

நிஹந்தும் த்வாம் பூ₄யஸ்தவ பத₃மவாப்தஸ்ய ச ரிபோ-
ர்ப₃ஹிர்த்₃ருஷ்டேரந்தர்த₃தி₄த₂ ஹ்ருத₃யே ஸூக்ஷ்மவபுஷா |
நத₃ந்நுச்சைஸ்தத்ராப்யகி₂லபு₄வநாந்தே ச ம்ருக₃யந்
பி₄யா யாதம் மத்வா ஸ க₂லு ஜிதகாஶீ நிவவ்ருதே || 3||

3. தங்களைக் கொல்வதற்காக வைகுண்டலோகத்தை அடைந்தான். தாங்கள் ஸூக்ஷ்ம ரூபத்தில் அவன் மனதினுள்ளேயே மறைந்தீர்கள். அகில உலகங்களிலும் தங்களைத் தேடினான். தாங்கள் பயந்து ஓடிப்போனதாய் நினைத்து, உரக்க சத்தமிட்டுக்கொண்டு, வெற்றி பெற்றதாய் நினைத்து, கர்வத்துடன் திரும்பினான்.

ततोऽस्य प्रह्लाद: समजनि सुतो गर्भवसतौ
मुनेर्वीणापाणेरधिगतभवद्भक्तिमहिमा ।
स वै जात्या दैत्य: शिशुरपि समेत्य त्वयि रतिं
गतस्त्वद्भक्तानां वरद परमोदाहरणताम् ॥४॥

ததோ(அ)ஸ்ய ப்ரஹ்லாத₃: ஸமஜநி ஸுதோ க₃ர்ப₄வஸதௌ
முநேர்வீணாபாணேரதி₄க₃தப₄வத்₃ப₄க்திமஹிமா |
ஸ வை ஜாத்யா தை₃த்ய: ஶிஶுரபி ஸமேத்ய த்வயி ரதிம்
க₃தஸ்த்வத்₃ப₄க்தாநாம் வரத₃ பரமோதா₃ஹரணதாம் || 4||

4. அவனுக்கு பிரஹ்லாதன் என்ற மகன் பிறந்தான். அவன், கர்ப்பத்தில் இருக்கும்போதே நாரதரிடமிருந்து தங்களுடைய மகிமையை உபதேசமாக அடைந்திருந்தான். பிறப்பால் அசுரனாயிருந்தாலும், தங்களிடம் மிகுந்த பக்தி கொண்டிருந்தான். தங்கள் பக்தர்களுக்கு எல்லாம் சிறந்த உதாரணமாயிருந்தான்.

सुरारीणां हास्यं तव चरणदास्यं निजसुते
स दृष्ट्वा दुष्टात्मा गुरुभिरशिशिक्षच्चिरममुम् ।
गुरुप्रोक्तं चासाविदमिदमभद्राय दृढमि-
त्यपाकुर्वन् सर्वं तव चरणभक्त्यैव ववृधे ॥ ५ ॥

ஸுராரீணாம் ஹாஸ்யம் தவ சரணதா₃ஸ்யம் நிஜஸுதே
ஸ த்₃ருஷ்ட்வா து₃ஷ்டாத்மா கு₃ருபி₄ரஶிஶிக்ஷச்சிரமமும் |
கு₃ருப்ரோக்தம் சாஸாவித₃மித₃மப₄த்₃ராய த்₃ருட₄மி-
த்யபாகுர்வந் ஸர்வம் தவ சரணப₄க்த்யைவ வவ்ருதே₄ ||  5 ||

5. தன் பிள்ளை, தங்களிடம் பக்தி கொண்டிருப்பதால், ஹிரண்யகசிபு அசுரர்களின் கேலிக்கு ஆளானான். அதனால் ஆசிரியர்களை அவனுக்கு உபதேசிக்கச் சொன்னான். அவர்கள் உபதேசித்த ராஜநீதி முதலியவை, பிறப்பு இறப்புக்குக் காரணமானவை என்று எல்லாவற்றையும் விட்டு, பிரஹ்லாதன், தங்களிடம் பக்தி செய்து வந்தான்.

अधीतेषु श्रेष्ठं किमिति परिपृष्टेऽथ तनये
भवद्भक्तिं वर्यामभिगदति पर्याकुलधृति: ।
गुरुभ्यो रोषित्वा सहजमतिरस्येत्यभिविदन्
वधोपायानस्मिन् व्यतनुत भवत्पादशरणे ॥६॥

அதீ₄தேஷு ஶ்ரேஷ்ட₂ம் கிமிதி பரிப்ருஷ்டே(அ)த₂ தநயே
ப₄வத்₃ப₄க்திம் வர்யாமபி₄க₃த₃தி பர்யாகுலத்₄ருதி: |
கு₃ருப்₄யோ ரோஷித்வா ஸஹஜமதிரஸ்யேத்யபி₄வித₃ந்
வதோ₄பாயாநஸ்மிந் வ்யதநுத ப₄வத்பாத₃ஶரணே || 6||

6. ”நீ படித்த பாடங்களுள் சிறந்தது எது?” என்று ஹிரண்யகசிபு கேட்க, பிரஹ்லாதன், தங்களிடத்தில் கொண்ட பக்தியே சிறந்தது எனக் கூறினான். அதனால், ஹிரண்யகசிபு ஆசிரியர்களைக் கோபித்துக்கொண்டான். அவர்கள், இந்த பக்தி, அவனுடைய முன்ஜன்மத்திலேயே உண்டானது என்று சொன்னார்கள். அதனால், தங்கள் பக்தர்களில் சிறந்த இந்தப் பிரஹ்லாதனைக் கொல்ல திட்டங்கள் செய்தான்.

स शूलैराविद्ध: सुबहु मथितो दिग्गजगणै-
र्महासर्पैर्दष्टोऽप्यनशनगराहारविधुत: ।
गिरीन्द्रवक्षिप्तोऽप्यहह! परमात्मन्नयि विभो
त्वयि न्यस्तात्मत्वात् किमपि न निपीडामभजत ॥७॥

ஸ ஶூலைராவித்₃த₄: ஸுப₃ஹு மதி₂தோ தி₃க்₃க₃ஜக₃ணை-
ர்மஹாஸர்பைர்த₃ஷ்டோ(அ)ப்யநஶநக₃ராஹாரவிது₄த: |
கி₃ரீந்த்₃ரவக்ஷிப்தோ(அ)ப்யஹஹ! பரமாத்மந்நயி விபோ₄
த்வயி ந்யஸ்தாத்மத்வாத் கிமபி ந நிபீடா₃மப₄ஜத || 7||

7. எங்கும் நிறைந்தவனே! சூலத்தால் குத்தப்பட்டும், யானைகளால் மிதிக்கப்பட்டும், பாம்புகளால் கடிக்கப்பட்டும், பட்டினி போடப்படும், விஷம் கொடுக்கப்பட்டும், பிரஹ்லாதன் துன்புறுத்தப்பட்டான். தங்களிடத்தில் மனதை வைத்ததால், எவற்றாலும் பிரஹ்லாதன் துன்பம் அடையவில்லை. ஆச்சர்யம்!

तत: शङ्काविष्ट: स पुनरतिदुष्टोऽस्य जनको
गुरूक्त्या तद्गेहे किल वरुणपाशैस्तमरुणत् ।
गुरोश्चासान्निध्ये स पुनरनुगान् दैत्यतनयान्
भवद्भक्तेस्तत्त्वं परममपि विज्ञानमशिषत् ॥८॥

தத: ஶங்காவிஷ்ட: ஸ புநரதிது₃ஷ்டோ(அ)ஸ்ய ஜநகோ
கு₃ரூக்த்யா தத்₃கே₃ஹே கில வருணபாஶைஸ்தமருணத் |
கு₃ரோஶ்சாஸாந்நித்₄யே ஸ புநரநுகா₃ந் தை₃த்யதநயாந்
ப₄வத்₃ப₄க்தேஸ்தத்த்வம் பரமமபி விஜ்ஞாநமஶிஷத் || 8||

8. கவலையடைந்த, கொடியவனான ஹிரண்யகசிபு, ஆசிரியர்களின் வீட்டில் பிரஹ்லாதனை வருணபாசத்தால் கட்டி, அடைத்து வைத்தான். ஆசிரியர்கள் இல்லாதபோது, பிரஹ்லாதன், அசுரக் குழந்தைகளுக்கு தங்கள் பக்தியைப் பற்றியும், பக்தியின் தத்துவத்தைப் பற்றியும் உபதேசித்தார். 

पिता शृण्वन् बालप्रकरमखिलं त्वत्स्तुतिपरं
रुषान्ध: प्राहैनं कुलहतक कस्ते बलमिति ।
बलं मे वैकुण्ठस्तव च जगतां चापि स बलं
स एव त्रैलोक्यं सकलमिति धीरोऽयमगदीत् ॥९॥

பிதா ஶ்ருண்வந் பா₃லப்ரகரமகி₂லம் த்வத்ஸ்துதிபரம்
ருஷாந்த₄: ப்ராஹைநம் குலஹதக கஸ்தே ப₃லமிதி |
ப₃லம் மே வைகுண்ட₂ஸ்தவ ச ஜக₃தாம் சாபி ஸ ப₃லம்
ஸ ஏவ த்ரைலோக்யம் ஸகலமிதி தீ₄ரோ(அ)யமக₃தீ₃த் || 9||

9. எல்லா அசுரக் குழந்தைகளும் தங்களையே துதிப்பதைக் கேட்ட ஹிரண்யகசிபு, கோபத்துடன் பிரஹ்லாதனிடம் “உனக்கு எவன் உதவி செய்கிறான்?” எனக் கேட்டான். பிரஹ்லாதனும், தைரியமாக, “ அந்த நாராயணனே எனக்கும், தங்களுக்கும், உலகங்களுக்கும் துணை. மூவுலகங்களும் அவனே” என்று சொன்னார்.

अरे क्वासौ क्वासौ सकलजगदात्मा हरिरिति
प्रभिन्ते स्म स्तंभं चलितकरवालो दितिसुत: ।
अत: पश्चाद्विष्णो न हि वदितुमीशोऽस्मि सहसा
कृपात्मन् विश्वात्मन् पवनपुरवासिन् मृडय माम् ॥१०॥

அரே க்வாஸௌ க்வாஸௌ ஸகலஜக₃தா₃த்மா ஹரிரிதி
ப்ரபி₄ந்தே ஸ்ம ஸ்தம்ப₄ம் சலிதகரவாலோ தி₃திஸுத: |
அத: பஶ்சாத்₃விஷ்ணோ ந ஹி வதி₃துமீஶோ(அ)ஸ்மி ஸஹஸா
க்ருபாத்மந் விஶ்வாத்மந் பவநபுரவாஸிந் ம்ருட₃ய மாம் || 10||

10. அடே பிரஹ்லாதா! சகல உலகங்கள் என்று உன்னால் சொல்லப்படும் அந்த நாராயணன் எங்கே? என்று வாளை வீசிக்கொண்டு அங்கு இருந்த ஒரு தூணை அடித்தான். எங்கும் நிறைந்த நாராயணா! அதன்பின் நடந்ததை சொல்வதற்கு எனக்கு சக்தி இல்லை. கருணையுள்ளவனே! உலகமாக இருப்பவரே! குருவாயூரப்பா! என்னை குணப்படுத்தவேண்டும்.

No comments:

Post a Comment