Friday, March 21, 2014

ஸ்ரீ நாராயணீயம் - தசகம் 21

ஸ்ரீ நாராயணீயம் - தசகம் 21, ஸ்ரீ நாராயணீயம் 21வது தசகம், ஸ்ரீமந் நாராயணீயம், ஸ்ரீ நாராயணீயம், ஸ்ரீமத் நாராயணீயம், நாராயணீயம், ஸ்ரீமன் நாராயணீயம் Narayaneeyam, Sree Narayaneeyam, Sriman narayaneeyam,Srimad Narayaneeyam

த³ஶகம் -21
பல்வேறு கண்டங்களிலும் த்வீபங்களிலும் பகவத்வர்ணனம்

मध्योद्भवे भुव इलावृतनाम्नि वर्षे
गौरीप्रधानवनिताजनमात्रभाजि ।
शर्वेण मन्त्रनुतिभि: समुपास्यमानं
सङ्कर्षणात्मकमधीश्वर संश्रये त्वाम् ॥१॥

மத்₄யோத்₃ப₄வே பு₄வ இலாவ்ருதநாம்நி வர்ஷே
கௌ₃ரீப்ரதா₄நவநிதாஜநமாத்ரபா₄ஜி |
ஶர்வேண மந்த்ரநுதிபி₄: ஸமுபாஸ்யமாநம்
ஸங்கர்ஷணாத்மகமதீ₄ஶ்வர ஸம்ஶ்ரயே த்வாம் || 1||

1. பூமியின் மையத்தில் உள்ள இளாவ்ருதம் என்ற கண்டத்தில் பார்வதி தேவியைத் தலைவியாகக் கொண்ட பெண்கள் வசிக்கின்றனர்.  அங்கு பரமசிவனைத் தவிர வேறு புருஷனே கிடையாது. இங்கு சங்கர்ஷணரூபியாய் உள்ள தங்களை பரமசிவன் துதிக்கின்றார். அப்படிப்பட்ட தங்களை சரணடைகிறேன்.

भद्राश्वनामक इलावृतपूर्ववर्षे
भद्रश्रवोभि: ऋषिभि: परिणूयमानम् ।
कल्पान्तगूढनिगमोद्धरणप्रवीणं
ध्यायामि देव हयशीर्षतनुं भवन्तम् ॥२॥

ப₄த்₃ராஶ்வநாமக இலாவ்ருதபூர்வவர்ஷே
ப₄த்₃ரஶ்ரவோபி₄: ருஷிபி₄: பரிணூயமாநம் |
கல்பாந்தகூ₃ட₄நிக₃மோத்₃த₄ரணப்ரவீணம்
த்₄யாயாமி தே₃வ ஹயஶீர்ஷதநும் ப₄வந்தம் || 2||

2. தேவனே! இளாவ்ருதத்திற்குக் கிழக்கே உள்ளது பத்ராஸ்வம் என்ற பகுதி. இங்கு, பத்ரச்ரவஸுகள் என்ற ரிஷிகளால் தாங்கள் துதிக்கப்படுகிறீர்கள். இங்கு, பிரளய காலத்தின் முடிவில் மறைந்த வேதங்களை மீட்டு வந்த ஹயக்ரீவ வடிவம் படைத்த தங்களை தியானிக்கிறேன்.

ध्यायामि दक्षिणगते हरिवर्षवर्षे
प्रह्लादमुख्यपुरुषै: परिषेव्यमाणम् ।
उत्तुङ्गशान्तधवलाकृतिमेकशुद्ध-
ज्ञानप्रदं नरहरिं भगवन् भवन्तम् ॥३॥

த்₄யாயாமி த₃க்ஷிணக₃தே ஹரிவர்ஷவர்ஷே
ப்ரஹ்லாத₃முக்₂யபுருஷை: பரிஷேவ்யமாணம் |
உத்துங்க₃ஶாந்தத₄வலாக்ருʼதிமேகஶுத்₃த₄-
ஜ்ஞாநப்ரத₃ம் நரஹரிம் ப₄க₃வந் ப₄வந்தம் || 3||

3. இளாவ்ருதத்திற்குத் தெற்கே உள்ள ஹரிவர்ஷம் என்ற கண்டத்தில் பிரஹ்லாதனை முக்கியமாகக் கொண்ட புருஷர்களால் சேவிக்கப்படுகிறீர்கள். இங்கு வெண்மையாகவும், சாந்தமாகவும் உள்ள வடிவத்தில் இருக்கும் நரசிம்ம மூர்த்தியான தங்களைத் தியானிக்கிறேன்.

वर्षे प्रतीचि ललितात्मनि केतुमाले
लीलाविशेषललितस्मितशोभनाङ्गम् ।
लक्ष्म्या प्रजापतिसुतैश्च निषेव्यमाणं
तस्या: प्रियाय धृतकामतनुं भजे त्वाम् ॥४॥

வர்ஷே ப்ரதீசி லலிதாத்மநி கேதுமாலே
லீலாவிஶேஷலலிதஸ்மிதஶோப₄நாங்க₃ம் |
லக்ஷ்ம்யா ப்ரஜாபதிஸுதைஶ்ச நிஷேவ்யமாணம்
தஸ்யா: ப்ரியாய த்₄ருதகாமதநும் ப₄ஜே த்வாம் || 4||

4. இளாவ்ருதத்திற்கு மேற்கே உள்ள கேதுமாலம் என்ற கண்டத்தில் அழகிய புன்சிரிப்புடன் உள்ள தாங்கள் மகாலக்ஷ்மியாலும் பிரும்ம புத்ரர்களாலும் சேவிக்கப்படுகிறீர்கள். இங்கு காமதேவன் வடிவத்தில் உள்ள தங்களை வணங்குகிறேன்.

रम्ये ह्युदीचि खलु रम्यकनाम्नि वर्षे
तद्वर्षनाथमनुवर्यसपर्यमाणम् ।
भक्तैकवत्सलममत्सरहृत्सु भान्तं
मत्स्याकृतिं भुवननाथ भजे भवन्तम् ॥५॥

ரம்யே ஹ்யுதீ₃சி க₂லு ரம்யகநாம்நி வர்ஷே
தத்₃வர்ஷநாத₂மநுவர்யஸபர்யமாணம் |
ப₄க்தைகவத்ஸலமமத்ஸரஹ்ருத்ஸு பா₄ந்தம்
மத்ஸ்யாக்ருதிம் பு₄வநநாத₂ ப₄ஜே ப₄வந்தம் || 5||

5. இளாவ்ருதத்திற்கு வடக்கே ரம்யகம் என்ற பெயருள்ள கண்டத்தில் மனு தங்களைப் பூஜித்து வருகிறார். பக்தர்களுக்குப் பிரியமானவரும், நல்ல மனம் படைத்தவர்களால் வணங்கப்படவேண்டும் என்றும் தாங்கள் அங்கு மத்ஸ்ய ரூபத்தில் விளங்குகின்றீர்கள்.

वर्षं हिरण्मयसमाह्वयमौत्तराह-
मासीनमद्रिधृतिकर्मठकामठाङ्गम् ।
संसेवते पितृगणप्रवरोऽर्यमा यं
तं त्वां भजामि भगवन् परचिन्मयात्मन् ॥६॥

வர்ஷம் ஹிரண்மயஸமாஹ்வயமௌத்தராஹ-
மாஸீநமத்₃ரித்₄ருதிகர்மட₂காமடா₂ங்க₃ம் |
ஸம்ஸேவதே பித்ருக₃ணப்ரவரோ(அ)ர்யமா யம்
தம்த்வாம் ப₄ஜாமி ப₄க₃வந் பரசிந்மயாத்மந் || 6||

6. ரம்யகத்திற்கு வடக்கே ஹிரண்மயம் என்ற வர்ஷம் உள்ளது. அங்கு தாங்கள் ஆமை வடிவத்தில் காட்சி அளிக்கிறீர்கள். பித்ருக்களுக்குத் தலைவரான அர்யமா என்பவர் இங்கு தங்களை ஸேவிக்கிறார். அப்படிப்பட்ட தங்களை வணங்குகிறேன்.

किञ्चोत्तरेषु कुरुषु प्रियया धरण्या
संसेवितो महितमन्त्रनुतिप्रभेदै: ।
दंष्ट्राग्रघृष्टघनपृष्ठगरिष्ठवर्ष्मा
त्वं पाहि बिज्ञनुत यज्ञवराहमूर्ते ॥७॥

கிஞ்சோத்தரேஷு குருஷு ப்ரியயா த₄ரண்யா
ஸம்ஸேவிதோ மஹிதமந்த்ரநுதிப்ரபே₄தை₃: |
த₃ம்ஷ்ட்ராக்₃ரக்₄ருஷ்டக₄நப்ருஷ்ட₂க₃ரிஷ்ட₂வர்ஷ்மா
த்வம் பாஹி பி₃ஜ்ஞநுத யஜ்ஞவராஹமூர்தே || 7||

7. உத்தரகுரு என்ற தேசத்தில் தாங்கள் யக்ஞவராஹ மூர்த்தியாய் காட்சி அளிக்கிறீர்கள். இங்கு பூமிதேவி தங்களை உயர்ந்த மந்திரங்களால் துதிக்கிறாள். தித்திப்பற்களால், மேகங்களைத் தொடும் அளவுக்குப் பெரிய சரீரத்தை உடைய தாங்கள் காக்க வேண்டும்.

याम्यां दिशं भजति किंपुरुषाख्यवर्षे
संसेवितो हनुमता दृढभक्तिभाजा ।
सीताभिरामपरमाद्भुतरूपशाली
रामात्मक: परिलसन् परिपाहि विष्णो ॥८॥

யாம்யாம் தி₃ஶம் ப₄ஜதி கிம்புருஷாக்₂யவர்ஷே
ஸம்ஸேவிதோ ஹநுமதா த்₃ருட₄ப₄க்திபா₄ஜா |
ஸீதாபி₄ராமபரமாத்₃பு₄தரூபஶாலீ
ராமாத்மக: பரிலஸந் பரிபாஹி விஷ்ணோ || 8||

8. விஷ்ணுவே! இளாவ்ருதத்திற்குத் தெற்கே உள்ள கிம்புருஷ கண்டத்தில்,சீதாதேவியுடன் கூடிய ஸ்ரீராமனாக விளங்குகின்றீர். அங்கு ஆஞ்சநேயரால் சேவிக்கப்படுகிறீர்கள். தாங்கள் என்னை நன்கு காக்க வேண்டும்.

श्रीनारदेन सह भारतखण्डमुख्यै-
स्त्वं साङ्ख्ययोगनुतिभि: समुपास्यमान: ।
आकल्पकालमिह साधुजनाभिरक्षी
नारायणो नरसख: परिपाहि भूमन् ॥९॥

ஶ்ரீநாரதே₃ந ஸஹ பா₄ரதக₂ண்ட₃முக்₂யை-
ஸ்த்வம் ஸாங்க்₂யயோக₃நுதிபி₄: ஸமுபாஸ்யமாந: |
ஆகல்பகாலமிஹ ஸாது₄ஜநாபி₄ரக்ஷீ
நாராயணோ நரஸக₂: பரிபாஹி பூ₄மந் || 9||

9. எங்கும் நிறைந்திருப்பவரே! உலகம் முடியும்வரையில், பாரத கண்டத்தில் ஞானத்தினாலும், யோகங்களாலும் நாரதரால் துதிக்கப்பட்டு வரும் நரநாராயணரான தாங்கள், என்னைக் காக்க வேண்டும்.

प्लाक्षेऽर्करूपमयि शाल्मल इन्दुरूपं
द्वीपे भजन्ति कुशनामनि वह्निरूपम् ।
क्रौञ्चेऽम्बुरूपमथ वायुमयं च शाके
त्वां ब्रह्मरूपमपि पुष्करनाम्नि लोका: ॥१०॥

ப்லாக்ஷே(அ)ர்கரூபமயி ஶால்மல இந்து₃ரூபம்
த்₃வீபே ப₄ஜந்தி குஶநாமநி வஹ்நிரூபம் |
க்ரௌஞ்சே(அ)ம்பு₃ரூபமத₂ வாயுமயம் ச ஶாகே
த்வாம் ப்₃ரஹ்மரூபமபி புஷ்கரநாம்நி லோகா: || 10||

10. ஓ குருவாயூரப்பா! தங்களை, ப்லக்ஷ த்வீபத்தில் சூர்யனாகவும், இந்து த்வீபத்தில் சந்திரனாகவும், குச த்வீபத்தில் அக்னியாகவும், கிரௌஞ்ச த்வீபத்தில் நீராகவும், சாக த்வீபத்தில் வாயுவாகவும், புஷ்கர த்வீபத்தில் பிரம்மமாகவும் ஜனங்கள் ஸேவித்து வருகிறார்கள்.

सर्वैर्ध्रुवादिभिरुडुप्रकरैर्ग्रहैश्च
पुच्छादिकेष्ववयवेष्वभिकल्प्यमानै: ।
त्वं शिंशुमारवपुषा महतामुपास्य:
सन्ध्यासु रुन्धि नरकं मम सिन्धुशायिन् ॥११॥

ஸர்வைர்த்₄ருவாதி₃பி₄ருடு₃ப்ரகரைர்க்₃ரஹைஶ்ச
புச்சா₂தி₃கேஷ்வவயவேஷ்வபி₄கல்ப்யமாநை: |
த்வம் ஶிம்ஶுமாரவபுஷா மஹதாமுபாஸ்ய:
ஸந்த்₄யாஸு ருந்தி₄ நரகம் மம ஸிந்து₄ஶாயிந் || 11||

11. சமுத்திரத்தில் படுத்திருப்பவனே! சிம்சுமார உருவத்தில், காலங்களின் ரூபமாய் விளங்கும் தங்களைத் தியானிக்கிறேன். இந்த உருவத்தில் கிரகங்களும், நக்ஷத்ரங்களும் இருக்கின்றன. தாங்கள் நரகத்துக்கு ஒப்பான என்னுடைய ரோகத்தைப் போக்க வேண்டும்.

पातालमूलभुवि शेषतनुं भवन्तं
लोलैककुण्डलविराजिसहस्रशीर्षम् ।
नीलाम्बरं धृतहलं भुजगाङ्गनाभि-
र्जुष्टं भजे हर गदान् गुरुगेहनाथ ॥१२॥

பாதாலமூலபு₄வி ஶேஷதநும் ப₄வந்தம்
லோலைககுண்ட₃லவிராஜிஸஹஸ்ரஶீர்ஷம் |
நீலாம்ப₃ரம் த்₄ருதஹலம் பு₄ஜகா₃ங்க₃நாபி₄-
ர்ஜுஷ்டம் ப₄ஜே ஹர க₃தா₃ந் கு₃ருகே₃ஹநாத₂ || 12||

12. குருவாயூரப்பா! நீல நிற உடையணிந்து, ஆயிரம் தலைகளுடன், பாதாளத்தில் ஆதிசேஷனாக அவதரித்த தங்களை வணங்குகிறேன். நாகலோக கன்னியர்களால் தொழப்படும் தங்களை நான் போற்றுகிறேன். ரோகங்களைப் போக்க வேண்டும். 

1 comment:

  1. Great effort but as there is no copy and paste option am not using this website as like in some websites.

    ReplyDelete