த³ஶகம் -32
மச்சாவதாரம்
(இதைப் படிப்பதால் நினைத்த காரியங்கள் யாவும் கைகூடும் என்று சுகர் கூறுகிறார்.)
पुरा हयग्रीवमहासुरेण षष्ठान्तरान्तोद्यदकाण्डकल्पे ।
निद्रोन्मुखब्रह्ममुखात् हृतेषु वेदेष्वधित्स: किल मत्स्यरूपम् ॥१॥
புரா ஹயக்₃ரீவமஹாஸுரேண ஷஷ்டா₂ந்தராந்தோத்₃யத₃காண்ட₃கல்பே |
நித்₃ரோந்முக₂ப்₃ரஹ்மமுகா₂த் ஹ்ருதேஷு வேதே₃ஷ்வதி₄த்ஸ: கில மத்ஸ்யரூபம் || 1||
1. ஆறாவது மன்வந்தரத்தின் முடிவில் பிரளயம் ஏற்பட்டது. அப்போது, தூங்கிக் கொண்டிருந்த பிரம்மதேவனுடைய முகத்திலிருந்து, ஹயக்ரீவன் என்ற அசுரன், வேதங்களைத் திருடிச் சென்றான். அப்போது, மீனாக அவதாரம் செய்ய விரும்பினீர்கள் அல்லவா?
सत्यव्रतस्य द्रमिलाधिभर्तुर्नदीजले तर्पयतस्तदानीम् ।
कराञ्जलौ सञ्ज्वलिताकृतिस्त्वमदृश्यथा: कश्चन बालमीन: ॥२॥
ஸத்யவ்ரதஸ்ய த்₃ரமிலாதி₄ப₄ர்துர்நதீ₃ஜலே தர்பயதஸ்ததா₃நீம் |
கராஞ்ஜலௌ ஸஞ்ஜ்வலிதாக்ருதிஸ்த்வமத்₃ருஶ்யதா₂: கஶ்சந பா₃லமீந: || 2||
2. தமிழ்நாட்டில், கிருதமாலை என்ற நதியில், ஸத்யவ்ரதன் என்ற அரசன் தர்ப்பணம் செய்துகொண்டிருக்கும்போது, கூப்பிய அவனுடைய கைகளில் தாங்கள் மீன் குஞ்சாகக் தோன்றினீர்கள்.
क्षिप्तं जले त्वां चकितं विलोक्य निन्येऽम्बुपात्रेण मुनि: स्वगेहम् ।
स्वल्पैरहोभि: कलशीं च कूपं वापीं सरश्चानशिषे विभो त्वम् ॥३॥
க்ஷிப்தம் ஜலே த்வாம் சகிதம் விலோக்ய நிந்யே(அ)ம்பு₃பாத்ரேண முநி: ஸ்வகே₃ஹம் |
ஸ்வல்பைரஹோபி₄: கலஶீம் ச கூபம் வாபீம் ஸரஶ்சாநஶிஷே விபோ₄ த்வம் || 3||
3. உடனே தங்களை நீரில் விட்டான். பயந்த உம்மைத் தன் தீர்த்த பாத்திரத்தில் விட்டு, தன் வீட்டிற்குக் கொண்டு சென்றான். எங்கும் நிறைந்தவனே! சில நாட்களிலேயே தாங்கள் தீர்த்த பாத்திரத்தையும், கிணற்றையும், குளத்தையும், ஏரியையும் விட பெரிதாக வளர்ந்துவிட்டீர்கள்.
योगप्रभावाद्भवदाज्ञयैव नीतस्ततस्त्वं मुनिना पयोधिम् ।
पृष्टोऽमुना कल्पदिदृक्षुमेनं सप्ताहमास्वेति वदन्नयासी: ॥४॥
யோக₃ப்ரபா₄வாத்₃ப₄வதா₃ஜ்ஞயைவ நீதஸ்ததஸ்த்வம் முநிநா பயோதி₄ம் |
ப்ருஷ்டோ(அ)முநா கல்பதி₃த்₃ருக்ஷுமேநம் ஸப்தாஹமாஸ்வேதி வத₃ந்நயாஸீ: || 4||
4. பிறகு, தங்களுடைய கட்டளைப்படி, ஸத்யவ்ரதன், தன் யோக மகிமையினால் மீனான தங்களைக் கடலில் கொண்டு சேர்த்தான். அவன், பிரளயத்தைக் காண விரும்புகிறேன் என்று தங்களிடம் சொல்ல, “ஏழு நாட்கள் பொறுத்திரு” என்று கூறி மறைந்தீர்கள்.
प्राप्ते त्वदुक्तेऽहनि वारिधारापरिप्लुते भूमितले मुनीन्द्र: ।
सप्तर्षिभि: सार्धमपारवारिण्युद्घूर्णमान: शरणं ययौ त्वाम् ॥५॥
ப்ராப்தே த்வது₃க்தே(அ)ஹநி வாரிதா₄ராபரிப்லுதே பூ₄மிதலே முநீந்த்₃ர: |
ஸப்தர்ஷிபி₄: ஸார்த₄மபாரவாரிண்யுத்₃கூ₄ர்ணமாந: ஶரணம் யயௌ த்வாம் || 5||
5. தாங்கள் குறிப்பிட்ட நாளும் வந்தது. மழை பெய்து, பூமி முழுவதும் நீரில் மூழ்கியது. ஸத்யவ்ரதன், ஸப்தரிஷிகளுடன் நீரில் சுழன்றுகொண்டு, தங்களைச் சரணடைந்தான்.
धरां त्वदादेशकरीमवाप्तां नौरूपिणीमारुरुहुस्तदा ते
तत्कम्पकम्प्रेषु च तेषु भूयस्त्वमम्बुधेराविरभूर्महीयान् ॥६॥
த₄ராம் த்வதா₃தே₃ஶகரீமவாப்தாம் நௌரூபிணீமாருருஹுஸ்ததா₃ தே
தத்கம்பகம்ப்ரேஷு ச தேஷு பூ₄யஸ்த்வமம்பு₃தே₄ராவிரபூ₄ர்மஹீயாந் || 6||
6. தங்களுடைய கட்டளைப்படி பூமி தோணியாக வந்தது. அவர்கள் அனைவரும் அதில் ஏறினார்கள். தோணி ஆடியதால் நடுங்கினார்கள். அப்பொழுது, தாங்கள் மறுபடியும் கடலிலிருந்து மிகப் பெரிய மீனாகத் தோன்றினீர்கள்.
झषाकृतिं योजनलक्षदीर्घां दधानमुच्चैस्तरतेजसं त्वाम् ।
निरीक्ष्य तुष्टा मुनयस्त्वदुक्त्या त्वत्तुङ्गशृङ्गे तरणिं बबन्धु: ॥७॥
ஜ₂ஷாக்ருதிம் யோஜநலக்ஷதீ₃ர்கா₄ம் த₃தா₄நமுச்சைஸ்தரதேஜஸம் த்வாம் |
நிரீக்ஷ்ய துஷ்டா முநயஸ்த்வது₃க்த்யா த்வத்துங்க₃ஶ்ருங்கே₃ தரணிம் ப₃ப₃ந்து₄: || 7||
7. லக்ஷயோஜனை நீளமுள்ள மீன் உருவத்தில் மிகப் பிரகாசமாய் விளங்கினீர்கள். அதைக் கண்டு மகிழ்ந்த அவர்கள், தங்கள் சொல்படி, அந்தத் தோணியை, மிகப் பெரிய தங்கள் கொம்பின் நுனியில் கட்டினார்கள்.
आकृष्टनौको मुनिमण्डलाय प्रदर्शयन् विश्वजगद्विभागान् ।
संस्तूयमानो नृवरेण तेन ज्ञानं परं चोपदिशन्नचारी: ॥८॥
ஆக்ருஷ்டநௌகோ முநிமண்ட₃லாய ப்ரத₃ர்ஶயந் விஶ்வஜக₃த்₃விபா₄கா₃ந் |
ஸம்ஸ்தூயமாநோ ந்ருʼவரேண தேந ஜ்ஞாநம் பரம் சோபதி₃ஶந்நசாரீ: || 8||
8. ஓடத்தை இழுத்துக்கொண்டு, அவர்களுக்கு உலகின் பல்வேறு பிரிவுகளைக் காண்பித்தீர்கள். அரசனும் தங்களைத் துதித்தான். அவனுக்கு ஆத்ம தத்துவத்தை உபதேசித்தீர்கள்.
कल्पावधौ सप्तमुनीन् पुरोवत् प्रस्थाप्य सत्यव्रतभूमिपं तम् ।
वैवस्वताख्यं मनुमादधान: क्रोधाद् हयग्रीवमभिद्रुतोऽभू: ॥९॥
கல்பாவதௌ₄ ஸப்தமுநீந் புரோவத் ப்ரஸ்தா₂ப்ய ஸத்யவ்ரதபூ₄மிபம் தம் |
வைவஸ்வதாக்₂யம் மநுமாத₃தா₄ந: க்ரோதா₄த்₃ ஹயக்₃ரீவமபி₄த்₃ருதோ(அ)பூ₄: || 9||
9. பிரளயத்தின் முடிவில், அந்த ரிஷிகளை, முன்பு போலவே ஸப்தரிஷிகளின் ஸ்தானத்தில் இருக்கச் செய்து, ஸத்யவ்ரதனை வைவஸ்வத மனுவாக ஆக்கினீர்கள். பிறகு, மிகுந்த கோபத்துடன், ஹயக்ரீவன் என்ற அசுரனைத் தொடர்ந்து சென்றீர்கள்.
स्वतुङ्गशृङ्गक्षतवक्षसं तं निपात्य दैत्यं निगमान् गृहीत्वा ।
विरिञ्चये प्रीतहृदे ददान: प्रभञ्जनागारपते प्रपाया: ॥१०॥
ஸ்வதுங்க₃ஶ்ருங்க₃க்ஷதவக்ஷஸம் தம் நிபாத்ய தை₃த்யம் நிக₃மாந் க்₃ருஹீத்வா |
விரிஞ்சயே ப்ரீதஹ்ருதே₃ த₃தா₃ந: ப்ரப₄ஞ்ஜநாகா₃ரபதே ப்ரபாயா: || 10||
10. குருவாயூரப்பா! தங்களுடைய மிகப் பெரிய கொம்பால், அந்த அசுரனுடைய மார்பைப் பிளந்து சாய்த்து, வேதங்களை மீட்டுவந்து பிரமனிடம் கொடுத்த தாங்கள் காக்க வேண்டும்.
No comments:
Post a Comment