த³ஶகம் -64
கோவிந்த பட்டாபிஷேகம்
आलोक्य शैलोद्धरणादिरूपं प्रभावमुच्चैस्तव गोपलोका: ।
विश्वेश्वरं त्वामभिमत्य विश्वे नन्दं भवज्जातकमन्वपृच्छन् ॥१॥
ஆலோக்ய ஶைலோத்₃த₄ரணாதி₃ரூபம் ப்ரபா₄வமுச்சைஸ்தவ கோ₃பலோகா: |
விஶ்வேஶ்வரம் த்வாமபி₄மத்ய விஶ்வே நந்த₃ம் ப₄வஜ்ஜாதகமந்வப்ருச்ச₂ந் || 1||
1. மலையைத் தூக்கியது முதலிய தங்கள் மகிமைகளைப் பார்த்த கோபர்கள், தங்களை உலகிற்கெல்லாம் நாயகன் என்று உணர்ந்தனர். நந்தகோபனிடம் தங்கள் ஜாதகத்தின் பலனைக் கேட்டார்கள்.
1. மலையைத் தூக்கியது முதலிய தங்கள் மகிமைகளைப் பார்த்த கோபர்கள், தங்களை உலகிற்கெல்லாம் நாயகன் என்று உணர்ந்தனர். நந்தகோபனிடம் தங்கள் ஜாதகத்தின் பலனைக் கேட்டார்கள்.
गर्गोदितो निर्गदितो निजाय वर्गाय तातेन तव प्रभाव: ।
पूर्वाधिकस्त्वय्यनुराग एषामैधिष्ट तावत् बहुमानभार: ॥२॥
க₃ர்கோ₃தி₃தோ நிர்க₃தி₃தோ நிஜாய வர்கா₃ய தாதேந தவ ப்ரபா₄வ: |
பூர்வாதி₄கஸ்த்வய்யநுராக₃ ஏஷாமைதி₄ஷ்ட தாவத் ப₃ஹுமாநபா₄ர: || 2||
2. அவர்களிடம் நந்தகோபர், முன்பு கர்க்க முனிவர் கூறியவற்றைச் சொன்னார். அவர்கள் தங்கள் மேல் அதிக அன்பும் பாசமும் கொண்டனர்.
2. அவர்களிடம் நந்தகோபர், முன்பு கர்க்க முனிவர் கூறியவற்றைச் சொன்னார். அவர்கள் தங்கள் மேல் அதிக அன்பும் பாசமும் கொண்டனர்.
ततोऽवमानोदिततत्त्वबोध: सुराधिराज: सह दिव्यगव्या।
उपेत्य तुष्टाव स नष्टगर्व: स्पृष्ट्वा पदाब्जं मणिमौलिना ते ॥३॥
ததோ(அ)வமாநோதி₃ததத்த்வபோ₃த₄: ஸுராதி₄ராஜ: ஸஹ தி₃வ்யக₃வ்யா|
உபேத்ய துஷ்டாவ ஸ நஷ்டக₃ர்வ: ஸ்ப்ருஷ்ட்வா பதா₃ப்₃ஜம் மணிமௌலிநா தே || 3||
3. தோல்வி அடைந்த இந்திரன், கர்வத்தை விட்டு, தங்களைப் புகழ்ந்து துதித்து, காமதேனுவைத் தங்களுக்குப் பரிசாக அளித்தான். தங்கள் தாமரைப் பாதங்களில் தலை வைத்து வணங்கினான்.
3. தோல்வி அடைந்த இந்திரன், கர்வத்தை விட்டு, தங்களைப் புகழ்ந்து துதித்து, காமதேனுவைத் தங்களுக்குப் பரிசாக அளித்தான். தங்கள் தாமரைப் பாதங்களில் தலை வைத்து வணங்கினான்.
स्नेहस्नुतैस्त्वां सुरभि: पयोभिर्गोविन्दनामाङ्कितमभ्यषिञ्चत् ।
ऐरावतोपाहृतदिव्यगङ्गापाथोभिरिन्द्रोऽपि च जातहर्ष: ॥४॥
ஸ்நேஹஸ்நுதைஸ்த்வாம் ஸுரபி₄: பயோபி₄ர்கோ₃விந்த₃நாமாங்கிதமப்₄யஷிஞ்சத் |
ஐராவதோபாஹ்ருததி₃வ்யக₃ங்கா₃பாதோ₂பி₄ரிந்த்₃ரோ(அ)பி ச ஜாதஹர்ஷ: || 4||
4. காமதேனு என்ற அந்தப் பசு, பாலைச் சுரந்து தங்களுக்குக் கோவிந்தன் எனப் பெயரிட்டு அபிஷேகம் செய்தது. இந்திரனும் ஐராவதம் கொண்டு வந்த கங்கை ஜலத்தால் அபிஷேகம் செய்தான்
4. காமதேனு என்ற அந்தப் பசு, பாலைச் சுரந்து தங்களுக்குக் கோவிந்தன் எனப் பெயரிட்டு அபிஷேகம் செய்தது. இந்திரனும் ஐராவதம் கொண்டு வந்த கங்கை ஜலத்தால் அபிஷேகம் செய்தான்
जगत्त्रयेशे त्वयि गोकुलेशे तथाऽभिषिक्ते सति गोपवाट: ।
नाकेऽपि वैकुण्ठपदेऽप्यलभ्यां श्रियं प्रपेदे भवत: प्रभावात् ॥५॥
ஜக₃த்த்ரயேஶே த்வயி கோ₃குலேஶே ததா₂(அ)பி₄ஷிக்தே ஸதி கோ₃பவாட: |
நாகே(அ)பி வைகுண்ட₂பதே₃(அ)ப்யலப்₄யாம் ஶ்ரியம் ப்ரபேதே₃ ப₄வத: ப்ரபா₄வாத் || 5||
5. தங்களுக்குக் கோவிந்தன் என்று பட்டாபிஷேகம் செய்ததும், ஆயர்பாடியில், வைகுண்டத்திலும், ஸ்வர்க்கத்திலும் கிடைக்காத ஐஸ்வர்யம் நிறைந்தது.
5. தங்களுக்குக் கோவிந்தன் என்று பட்டாபிஷேகம் செய்ததும், ஆயர்பாடியில், வைகுண்டத்திலும், ஸ்வர்க்கத்திலும் கிடைக்காத ஐஸ்வர்யம் நிறைந்தது.
कदाचिदन्तर्यमुनं प्रभाते स्नायन् पिता वारुणपूरुषेण ।
नीतस्तमानेतुमगा: पुरीं त्वं तां वारुणीं कारणमर्त्यरूप: ॥६॥
கதா₃சித₃ந்தர்யமுநம் ப்ரபா₄தே ஸ்நாயந் பிதா வாருணபூருஷேண |
நீதஸ்தமாநேதுமகா₃: புரீம் த்வம் தாம் வாருணீம் காரணமர்த்யரூப: || 6||
6. ஒரு நாள் தங்கள் தந்தை ஏகாதசி விரதமிருந்து, துவாதசி விடியற்காலை என்று நினைத்து இரவில் யமுனையில் நீராடினார். வருணனின் வேலையாளான ஒரு அசுரன் அவரை இழுத்துச் சென்றான். உலக நன்மைக்காக அவதாரம் செய்த தாங்கள் உடனே வருணலோகம் சென்றீர்.

ससम्भ्रमं तेन जलाधिपेन प्रपूजितस्त्वं प्रतिगृह्य तातम् ।
उपागतस्तत्क्षणमात्मगेहं पिताऽवदत्तच्चरितं निजेभ्य: ॥७॥
ஸஸம்ப்₄ரமம் தேந ஜலாதி₄பேந ப்ரபூஜிதஸ்த்வம் ப்ரதிக்₃ருஹ்ய தாதம் |
உபாக₃தஸ்தத்க்ஷணமாத்மகே₃ஹம் பிதா(அ)வத₃த்தச்சரிதம் நிஜேப்₄ய: || 7||
7. தங்களைக் கண்ட வருணன் பக்தியுடன் தொழுது தங்களுக்குப் பூஜை செய்தான். அதே நொடியில் தாங்கள் நந்தகோபரை அழைத்துக் கொண்டு வீட்டிற்குச் சென்றீர்கள். நந்தகோபரும் தான் சுற்றத்தாரிடம் அதைப் பற்றிக் கூறினார்.
7. தங்களைக் கண்ட வருணன் பக்தியுடன் தொழுது தங்களுக்குப் பூஜை செய்தான். அதே நொடியில் தாங்கள் நந்தகோபரை அழைத்துக் கொண்டு வீட்டிற்குச் சென்றீர்கள். நந்தகோபரும் தான் சுற்றத்தாரிடம் அதைப் பற்றிக் கூறினார்.
हरिं विनिश्चित्य भवन्तमेतान् भवत्पदालोकनबद्धतृष्णान् ॥
निरीक्ष्य विष्णो परमं पदं तद्दुरापमन्यैस्त्वमदीदृशस्तान् ॥८॥
ஹரிம் விநிஶ்சித்ய ப₄வந்தமேதாந் ப₄வத்பதா₃லோகநப₃த்₃த₄த்ருஷ்ணாந் ||
நிரீக்ஷ்ய விஷ்ணோ பரமம் பத₃ம் தத்₃து₃ராபமந்யைஸ்த்வமதீ₃த்₃ருஶஸ்தாந் || 8||
8. ஆயர்கள் தாங்கள் ஸ்ரீஹரி என்று நிச்சயித்து, தங்கள் இருப்பிடமான வைகுண்டத்தைக் காண விரும்பினார்கள். எங்கும் நிறைந்திருக்கும் தாங்கள் அவர்களுக்கு வைகுண்டத்தைக் காண்பித்தீர்கள்.
8. ஆயர்கள் தாங்கள் ஸ்ரீஹரி என்று நிச்சயித்து, தங்கள் இருப்பிடமான வைகுண்டத்தைக் காண விரும்பினார்கள். எங்கும் நிறைந்திருக்கும் தாங்கள் அவர்களுக்கு வைகுண்டத்தைக் காண்பித்தீர்கள்.
स्फुरत्परानन्दरसप्रवाहप्रपूर्णकैवल्यमहापयोधौ ।
चिरं निमग्ना: खलु गोपसङ्घास्त्वयैव भूमन् पुनरुद्धृतास्ते ॥९॥
ஸ்பு₂ரத்பராநந்த₃ரஸப்ரவாஹப்ரபூர்ணகைவல்யமஹாபயோதௌ₄ |
சிரம் நிமக்₃நா: க₂லு கோ₃பஸங்கா₄ஸ்த்வயைவ பூ₄மந் புநருத்₃த்₄ருதாஸ்தே || 9||
9. வைகுண்டத்தைக் கண்ட கோபர்கள், ஆனந்த நிலையை அடைந்து, கைவல்யம் (மோக்ஷம்) என்ற சமுத்திரத்தில் மூழ்கினார்கள். அவர்களை மீண்டும் உலக உணர்வுக்கு அழைத்து வந்தீர்கள்.
9. வைகுண்டத்தைக் கண்ட கோபர்கள், ஆனந்த நிலையை அடைந்து, கைவல்யம் (மோக்ஷம்) என்ற சமுத்திரத்தில் மூழ்கினார்கள். அவர்களை மீண்டும் உலக உணர்வுக்கு அழைத்து வந்தீர்கள்.
करबदरवदेवं देव कुत्रावतारे
निजपदमनवाप्यं दर्शितं भक्तिभाजाम् ।
तदिह पशुपरूपी त्वं हि साक्षात् परात्मा
पवनपुरनिवासिन् पाहि मामामयेभ्य: ॥१०॥
கரப₃த₃ரவதே₃வம் தே₃வ குத்ராவதாரே
நிஜபத₃மநவாப்யம் த₃ர்ஶிதம் ப₄க்திபா₄ஜாம் |
ததி₃ஹ பஶுபரூபீ த்வம் ஹி ஸாக்ஷாத் பராத்மா
பவநபுரநிவாஸிந் பாஹி மாமாமயேப்₄ய: || 10||
10. யாராலும் அடைய முடியாத வைகுண்டலோகத்தை உள்ளங்கை நெல்லிக்கனி போலக் காட்டினீர்கள். எந்த அவதாரத்திலும் இல்லாமல், இடையனாக வேடம் கொண்ட இந்த அவதாரத்தில் பிரத்யக்ஷமாக எடுத்துக் காட்டினீர்கள். குருவாயூரப்பா! நோய்களிலிருந்து என்னைக் காக்க வேண்டும்.

No comments:
Post a Comment