த³ஶகம் -72
அக்ரூரர் வருகை
कंसोऽथ नारदगिरा व्रजवासिनं त्वा-
माकर्ण्य दीर्णहृदय: स हि गान्दिनेयम् ।
आहूय कार्मुकमखच्छलतो भवन्त-
मानेतुमेनमहिनोदहिनाथशायिन् ॥१॥
கம்ஸோ(அ)த₂ நாரத₃கி₃ரா வ்ரஜவாஸிநம் த்வா-
மாகர்ண்ய தீ₃ர்ணஹ்ருத₃ய: ஸ ஹி கா₃ந்தி₃நேயம் |
ஆஹூய கார்முகமக₂ச்ச₂லதோ ப₄வந்த-
மாநேதுமேநமஹிநோத₃ஹிநாத₂ஶாயிந் || 1||
1. பாம்பணையில் பள்ளி கொண்டிருப்பவரே! நாரதர் மூலம் தாங்கள் கோகுலத்தில் வசிப்பதை அறிந்த கம்ஸன் மிகவும் பயந்தான். தனுர் யக்ஞம் என்ற வில் பூஜையில் கலந்து கொள்ள தங்களை அழைத்து வருமாறு அக்ரூரரை அனுப்பினான்.
अक्रूर एष भवदंघ्रिपरश्चिराय
त्वद्दर्शनाक्षममना: क्षितिपालभीत्या ।
तस्याज्ञयैव पुनरीक्षितुमुद्यतस्त्वा-
मानन्दभारमतिभूरितरं बभार ॥२॥
அக்ரூர ஏஷ ப₄வத₃ம்க்₄ரிபரஶ்சிராய
த்வத்₃த₃ர்ஶநாக்ஷமமநா: க்ஷிதிபாலபீ₄த்யா |
தஸ்யாஜ்ஞயைவ புநரீக்ஷிதுமுத்₃யதஸ்த்வா-
மாநந்த₃பா₄ரமதிபூ₄ரிதரம் ப₃பா₄ர || 2||
2. அக்ரூரர் தங்களிடத்தில் மிகுந்த பற்றுள்ளவர். கம்ஸனிடம் இருந்த பயத்தால் தங்களை தரிசிக்காமல் இருந்து வந்தார். கம்ஸனே தங்களை அழைத்து வரக் கட்டளையிட்டதும் மிகவும் மகிழ்ந்தார்.
सोऽयं रथेन सुकृती भवतो निवासं
गच्छन् मनोरथगणांस्त्वयि धार्यमाणान् ।
आस्वादयन् मुहुरपायभयेन दैवं
सम्प्रार्थयन् पथि न किञ्चिदपि व्यजानात् ॥३॥
ஸோ(அ)யம் ரதே₂ந ஸுக்ருதீ ப₄வதோ நிவாஸம்
க₃ச்ச₂ந் மநோரத₂க₃ணாம்ஸ்த்வயி தா₄ர்யமாணாந் |
ஆஸ்வாத₃யந் முஹுரபாயப₄யேந தை₃வம்
ஸம்ப்ரார்த₂யந் பதி₂ ந கிஞ்சித₃பி வ்யஜாநாத் || 3||
3. ரதத்தில் ஏறி, தங்கள் இருப்பிடம் நோக்கிப் புறப்பட்டார். தங்களையே நினைத்து, அந்த நினைவுகளை அனுபவித்து, தங்களை சந்திப்பதில் எந்த இடையூறும் ஏற்படக்கூடாது என்று வேண்டிக்கொண்டே சென்றார்.
द्रक्ष्यामि वेदशतगीतगतिं पुमांसं
स्प्रक्ष्यामि किंस्विदपि नाम परिष्वजेयम् ।
किं वक्ष्यते स खलु मां क्वनु वीक्षित: स्या-
दित्थं निनाय स भवन्मयमेव मार्गम् ॥४॥
த்₃ரக்ஷ்யாமி வேத₃ஶதகீ₃தக₃திம் புமாம்ஸம்
ஸ்ப்ரக்ஷ்யாமி கிம்ஸ்வித₃பி நாம பரிஷ்வஜேயம் |
கிம் வக்ஷ்யதே ஸ க₂லு மாம் க்வநு வீக்ஷித: ஸ்யா-
தி₃த்த₂ம் நிநாய ஸ ப₄வந்மயமேவ மார்க₃ம் || 4||
4. நூற்றுக்கணக்கான வேதங்கள் கூறும் வழிகளினால் அடைய வேண்டிய பரமனை நான் தரிசிப்பேனா? தொட்டுத் தழுவுவேனா? அவர் என்னுடன் பேசுவாரா? அவரை எங்கு காண்பேன்? என்று எண்ணி, தங்களையே நினைத்துக் கொண்டு வழியைக் கடந்தார்.
भूय: क्रमादभिविशन् भवदंघ्रिपूतं
वृन्दावनं हरविरिञ्चसुराभिवन्द्यम् ।
आनन्दमग्न इव लग्न इव प्रमोहे
किं किं दशान्तरमवाप न पङ्कजाक्ष ॥५॥
பூ₄ய: க்ரமாத₃பி₄விஶந் ப₄வத₃ம்க்₄ரிபூதம்
வ்ருந்தா₃வநம் ஹரவிரிஞ்சஸுராபி₄வந்த்₃யம் |
ஆநந்த₃மக்₃ந இவ லக்₃ந இவ ப்ரமோஹே
கிம் கிம் த₃ஶாந்தரமவாப ந பங்கஜாக்ஷ || 5||
5. தங்கள் பாதம்பட்டுப் புனிதமானதும், சிவனும், பிரமனும், தேவர்களும் வணங்கத் தகுந்ததுமான பிருந்தாவனத்திற்குள் நுழைந்தார். எல்லையில்லா ஆனந்தத்தில் மூழ்கி, உணர்ச்சி மிகுந்த நிலைமைகளை அடைந்தார்.
पश्यन्नवन्दत भवद्विहृतिस्थलानि
पांसुष्ववेष्टत भवच्चरणाङ्कितेषु ।
किं ब्रूमहे बहुजना हि तदापि जाता
एवं तु भक्तितरला विरला: परात्मन् ॥६॥
பஶ்யந்நவந்த₃த ப₄வத்₃விஹ்ருதிஸ்த₂லாநி
பாம்ஸுஷ்வவேஷ்டத ப₄வச்சரணாங்கிதேஷு |
கிம் ப்₃ரூமஹே ப₃ஹுஜநா ஹி ததா₃பி ஜாதா
ஏவம் து ப₄க்திதரலா விரலா: பராத்மந் || 6||
6. தாங்கள் விளையாடிய இடங்களைப் பார்த்து வணங்கினார். தங்கள் பாதம் பட்ட புழுதியில் புரண்டார். அக்ரூரரைப் போன்ற பக்தர்களைக் காண்பது அக்காலத்திலேயே மிகவும் அரிது!
सायं स गोपभवनानि भवच्चरित्र-
गीतामृतप्रसृतकर्णरसायनानि ।
पश्यन् प्रमोदसरितेव किलोह्यमानो
गच्छन् भवद्भवनसन्निधिमन्वयासीत् ॥७॥
ஸாயம் ஸ கோ₃பப₄வநாநி ப₄வச்சரித்ர-
கீ₃தாம்ருதப்ரஸ்ருதகர்ணரஸாயநாநி |
பஶ்யந் ப்ரமோத₃ஸரிதேவ கிலோஹ்யமாநோ
க₃ச்ச₂ந் ப₄வத்₃ப₄வநஸந்நிதி₄மந்வயாஸீத் || 7||
7. அவர், கோபிகைகளின் வீடுகளைப் பார்த்துக் கொண்டும், அவர்கள் பாடும் தங்கள் புகழைக் கேட்டுக் கொண்டும், ஆனந்த வெள்ளத்தில் மூழ்கி, மாலையில் தங்களது வீட்டின் வாசலை அடைந்தார்.
तावद्ददर्श पशुदोहविलोकलोलं
भक्तोत्तमागतिमिव प्रतिपालयन्तम् ।
भूमन् भवन्तमयमग्रजवन्तमन्त-
र्ब्रह्मानुभूतिरससिन्धुमिवोद्वमन्तम् ॥८॥
தாவத்₃த₃த₃ர்ஶ பஶுதோ₃ஹவிலோகலோலம்
ப₄க்தோத்தமாக₃திமிவ ப்ரதிபாலயந்தம் |
பூ₄மந் ப₄வந்தமயமக்₃ரஜவந்தமந்த-
ர்ப்₃ரஹ்மாநுபூ₄திரஸஸிந்து₄மிவோத்₃வமந்தம் || 8||
8. எங்கும் நிறைந்தவரே! பசுவிடமிருந்து பால் கறப்பதைப் பார்த்துக்கொண்டிருக்கும் தங்களையும் பலராமனையும் கண்டார். பக்தனின் வருகையை எதிர்பார்ப்பவர் போல் இருக்கும் தங்களைக் கண்டார். தான் உள்ளே அனுபவித்த ப்ரும்மானந்தத்தை வெளியில் பார்ப்பதுபோல் உணர்ந்தார்.
सायन्तनाप्लवविशेषविविक्तगात्रौ
द्वौ पीतनीलरुचिराम्बरलोभनीयौ ।
नातिप्रपञ्चधृतभूषणचारुवेषौ
मन्दस्मितार्द्रवदनौ स युवां ददर्श ॥९॥
ஸாயந்தநாப்லவவிஶேஷவிவிக்தகா₃த்ரௌ
த்₃வௌ பீதநீலருசிராம்ப₃ரலோப₄நீயௌ |
நாதிப்ரபஞ்சத்₄ருதபூ₄ஷணசாருவேஷௌ
மந்த₃ஸ்மிதார்த்₃ரவத₃நௌ ஸ யுவாம் த₃த₃ர்ஶ || 9||
9. நீராடிவிட்டுப் பீதாம்பரம், நீலாம்பரம் இவற்றை அணிந்து மிக அழகுடன் விளங்கும் தங்கள் இருவரையும் கண்டார். சில ஆபரணங்களை மட்டுமே அணிந்து, புன்சிரிப்பு தவழும் முகத்துடன் இருக்கும் தங்கள் இருவரையும் கண்டார்.
दूराद्रथात्समवरुह्य नमन्तमेन-
मुत्थाप्य भक्तकुलमौलिमथोपगूहन् ।
हर्षान्मिताक्षरगिरा कुशलानुयोगी
पाणिं प्रगृह्य सबलोऽथ गृहं निनेथ ॥१०॥
தூ₃ராத்₃ரதா₂த்ஸமவருஹ்ய நமந்தமேந-
முத்தா₂ப்ய ப₄க்தகுலமௌலிமதோ₂பகூ₃ஹந் |
ஹர்ஷாந்மிதாக்ஷரகி₃ரா குஶலாநுயோகீ₃
பாணிம் ப்ரக்₃ருஹ்ய ஸப₃லோ(அ)த₂ க்₃ருஹம் நிநேத₂ || 10||
10. தங்களைக் கண்டவுடன், வெகு தூரத்திலேயே ரதத்தை நிறுத்திவிட்டு இறங்கி, தரையில் விழுந்து வணங்கினார். அவரை எழுப்பித் தழுவிக் கொண்டீர்கள். நலன்களைப் பற்றி விசாரித்து, கையைப் பிடித்துக் கொண்டு பலராமனுடன் வீட்டிற்குள் அழைத்துச் சென்றீர்கள்.
नन्देन साकममितादरमर्चयित्वा
तं यादवं तदुदितां निशमय्य वार्ताम् ।
गोपेषु भूपतिनिदेशकथां निवेद्य
नानाकथाभिरिह तेन निशामनैषी: ॥११॥
நந்தே₃ந ஸாகமமிதாத₃ரமர்சயித்வா
தம் யாத₃வம் தது₃தி₃தாம் நிஶமய்ய வார்தாம் |
கோ₃பேஷு பூ₄பதிநிதே₃ஶகதா₂ம் நிவேத்₃ய
நாநாகதா₂பி₄ரிஹ தேந நிஶாமநைஷீ: || 11||
11. யதுகுலத்தில் பிறந்த அக்ரூரரை, நந்தகோபருடன் நன்கு உபசரித்தீர்கள். கம்ஸனுடைய அழைப்பைப் பற்றி அக்ரூரர் தெரிவித்தார். அதைக் கேட்ட தாங்கள், கோபர்களிடம் அதை அறிவித்தீர்கள். இரவு முழுவதும் அக்ரூரருடன் பல கதைகளைப் பேசிக்கொண்டு கழித்தீர்கள்.
चन्द्रागृहे किमुत चन्द्रभगागृहे नु
राधागृहे नु भवने किमु मैत्रविन्दे ।
धूर्तो विलम्बत इति प्रमदाभिरुच्चै-
राशङ्कितो निशि मरुत्पुरनाथ पाया: ॥१२॥
சந்த்₃ராக்₃ருஹே கிமுத சந்த்₃ரப₄கா₃க்₃ருஹே நு
ராதா₄க்₃ருஹே நு ப₄வநே கிமு மைத்ரவிந்தே₃ |
தூ₄ர்தோ விலம்ப₃த இதி ப்ரமதா₃பி₄ருச்சை-
ராஶங்கிதோ நிஶி மருத்புரநாத₂ பாயா: || 12||
12. இன்று கிருஷ்ணன் சந்திரை, சந்திரபாகை, ராதை அல்லது மித்திரவிந்தையின் வீட்டில் தங்கியிருக்கிறான் என்று கோபிகைகள் தங்களை சந்தேகித்தார்கள். அத்தகைய குருவாயூரப்பா! தாங்கள் காக்க வேண்டும்.
No comments:
Post a Comment