த³ஶகம் -83
பௌண்ட்ரகன் முக்தி
रामेऽथ गोकुलगते प्रमदाप्रसक्ते
हूतानुपेतयमुनादमने मदान्धे ।
स्वैरं समारमति सेवकवादमूढो
दूतं न्ययुङ्क्त तव पौण्ड्रकवासुदेव: ॥१॥
ராமே(அ)த₂ கோ₃குலக₃தே ப்ரமதா₃ப்ரஸக்தே
ஹூதாநுபேதயமுநாத₃மநே மதா₃ந்தே₄ |
ஸ்வைரம் ஸமாரமதி ஸேவகவாத₃மூடோ₄
தூ₃தம் ந்யயுங்க்த தவ பௌண்ட்₃ரகவாஸுதே₃வ: || 1||
1. பலராமன் கோகுலம் சென்று அங்குள்ள பெண்களோடு விளையாடிக் கொண்டு, யமுனையின் வழியைத் திருப்பிவிட்டு, போதையில் மதிமயங்கியிருந்தார். அப்போது, பௌண்ட்ரக வாசுதேவன் என்பவன், கூடியிருந்தவர்களின் சொல்லால் தன்னையே பகவான் வாசுதேவன் என்று எண்ணிக்கொண்டு ஒரு தூதனைத் தங்களிடம் அனுப்பினான்.
नारायणोऽहमवतीर्ण इहास्मि भूमौ
धत्से किल त्वमपि मामकलक्षणानि ।
उत्सृज्य तानि शरणं व्रज मामिति त्वां
दूतो जगाद सकलैर्हसित: सभायाम् ॥२॥
நாராயணோ(அ)ஹமவதீர்ண இஹாஸ்மி பூ₄மௌ
த₄த்ஸே கில த்வமபி மாமகலக்ஷணாநி |
உத்ஸ்ருஜ்ய தாநி ஶரணம் வ்ரஜ மாமிதி த்வாம்
தூ₃தோ ஜகா₃த₃ ஸகலைர்ஹஸித: ஸபா₄யாம் || 2||
2. “நான்தான் இந்தப் பூமியில் அவதரித்துள்ள நாராயணன். நீ என்னுடைய சின்னங்களான சங்கு, சக்கரம் ஆகியவற்றைத் தாங்கிக் கொண்டிருக்கிறாய். அவைகளை விட்டுவிட்டு என்னிடம் சரணடைய வேண்டும்” என்று பௌண்ட்ரக வாசுதேவன் சொல்லியதை அந்தத் தூதன் கூற, கூடியிருந்த அனைவரும் அவனைப் பரிஹாஸம் செய்தனர்.
दूतेऽथ यातवति यादवसैनिकैस्त्वं
यातो ददर्शिथ वपु: किल पौण्ड्रकीयम् ।
तापेन वक्षसि कृताङ्कमनल्पमूल्य-
श्रीकौस्तुभं मकरकुण्डलपीतचेलम् ॥३॥
தூ₃தே(அ)த₂ யாதவதி யாத₃வஸைநிகைஸ்த்வம்
யாதோ த₃த₃ர்ஶித₂ வபு: கில பௌண்ட்₃ரகீயம் |
தாபேந வக்ஷஸி க்ருதாங்கமநல்பமூல்ய-
ஶ்ரீகௌஸ்துப₄ம் மகரகுண்ட₃லபீதசேலம் || 3||
3. தூதன் சென்றதும், யாதவப் படைகளுடன் அவன் இருப்பிடம் சென்றீர். உம்முடைய மார்பில் உள்ள ஸ்ரீவத்ஸத்தைப் போல, பௌண்ட்ரக வாசுதேவன் தன் மார்பில் சூடு போட்டுக் கொண்டிருந்தான். கௌஸ்துபம் என்ற மாலையைப் போல விலையுயர்ந்த மாலையையும், குண்டலங்களுடனும், பீதாம்பரத்தையும் தரித்துக் கொண்டிருந்தான்.
कालायसं निजसुदर्शनमस्यतोऽस्य
कालानलोत्करकिरेण सुदर्शनेन ।
शीर्षं चकर्तिथ ममर्दिथ चास्य सेनां
तन्मित्रकाशिपशिरोऽपि चकर्थ काश्याम् ॥४॥
காலாயஸம் நிஜஸுத₃ர்ஶநமஸ்யதோ(அ)ஸ்ய
காலாநலோத்கரகிரேண ஸுத₃ர்ஶநேந |
ஶீர்ஷம் சகர்தித₂ மமர்தி₃த₂ சாஸ்ய ஸேநாம்
தந்மித்ரகாஶிபஶிரோ(அ)பி சகர்த₂ காஶ்யாம் || 4||
4. பௌண்ட்ரக வாசுதேவன் தன்னுடைய இரும்பினாலான சக்கரத்தைத் தங்கள் மீது எறிந்தான். உடனே நெருப்புப் பொறிகளைக் கக்குகிற தங்களுடைய சக்ராயுதத்தால் அவனுடைய தலையைத் துண்டித்தீர். அவனுடைய படைகளையும் அழித்தீர். அவனுடைய நண்பனான காசிநாட்டு அரசன் காசிராஜனின் தலையையும் வெட்டி, காசியில் விழச் செய்தீர்.
जाल्येन बालकगिराऽपि किलाहमेव
श्रीवासुदेव इति रूढमतिश्चिरं स: ।
सायुज्यमेव भवदैक्यधिया गतोऽभूत्
को नाम कस्य सुकृतं कथमित्यवेयात् ॥५॥
ஜால்யேந பா₃லககி₃ரா(அ)பி கிலாஹமேவ
ஶ்ரீவாஸுதே₃வ இதி ரூட₄மதிஶ்சிரம் ஸ: |
ஸாயுஜ்யமேவ ப₄வதை₃க்யதி₄யா க₃தோ(அ)பூ₄த்
கோ நாம கஸ்ய ஸுக்ருதம் கத₂மித்யவேயாத் || 5||
5. முட்டாள்தனத்தினாலும், சிறுவர்களின் பேச்சுக்களாலும், அவன் தன்னையே ஸ்ரீ வாசுதேவன் என்று வெகுநாட்களாய் எண்ணிக் கொண்டிருந்தான். எப்போதும் தங்களையே நினைத்துக் கொண்டிருந்ததால் மோக்ஷத்தை அடைந்தான். யாருடைய நல்ல செயல்கள் என்ன பலன் தரும் என்று யாருக்குத் தெரியும்?
काशीश्वरस्य तनयोऽथ सुदक्षिणाख्य:
शर्वं प्रपूज्य भवते विहिताभिचार: ।
कृत्यानलं कमपि बाण्ररणातिभीतै-
र्भूतै: कथञ्चन वृतै: सममभ्यमुञ्चत् ॥६॥
காஶீஶ்வரஸ்ய தநயோ(அ)த₂ ஸுத₃க்ஷிணாக்₂ய:
ஶர்வம் ப்ரபூஜ்ய ப₄வதே விஹிதாபி₄சார: |
க்ருத்யாநலம் கமபி பா₃ணரணாதிபீ₄தை-
ர்பூ₄தை: கத₂ஞ்சந வ்ருதை: ஸமமப்₄யமுஞ்சத் || 6||
6. காசி நாட்டு அரசனின் மகன் சுதக்ஷிணன், தன் தந்தையின் மரணத்தால் கோபம் கொண்டான். அவன் பரமசிவனைப் பூஜித்து பலம் பெற்றான். பாணாசுர யுத்தத்தின்போது ஓடிப் போன பூதகணங்களை நிர்ப்பந்தித்து அழைத்து வந்தான். உம்மை அழிக்க ஆபிசார அக்னியை ஏவினான்.
तालप्रमाणचरणामखिलं दहन्तीं
कृत्यां विलोक्य चकितै: कथितोऽपि पौरै: ।
द्यूतोत्सवे किमपि नो चलितो विभो त्वं
पार्श्वस्थमाशु विससर्जिथ कालचक्रम् ॥७॥
தாலப்ரமாணசரணாமகி₂லம் த₃ஹந்தீம்
க்ருத்யாம் விலோக்ய சகிதை: கதி₂தோ(அ)பி பௌரை: |
த்₃யூதோத்ஸவே கிமபி நோ சலிதோ விபோ₄ த்வம்
பார்ஶ்வஸ்த₂மாஶு விஸஸர்ஜித₂ காலசக்ரம் || 7||
7. ஆபிசார அக்னியில் இருந்து தோன்றிய ‘க்ருத்யை’ என்ற பிசாசு, பனைமரம் போன்ற உயர்ந்த கால்களுடன் வழியில் தென்பட்ட எல்லாவற்றையும் எரித்தது. அதைக் கண்ட நகர மக்கள் பயந்து தங்களிடம் கூறினார்கள். பகடை விளையாட்டில் ஈடுபட்டிருந்த நீர், சிறிதும் கலங்காமல், அருகிலிருந்த சுதர்சன சக்கரத்தை ஏவினீர்.
अभ्यापतत्यमितधाम्नि भवन्महास्त्रे
हा हेति विद्रुतवती खलु घोरकृत्या।
रोषात् सुदक्षिणमदक्षिणचेष्टितं तं
पुप्लोष चक्रमपि काशिपुरीमधाक्षीत् ॥८॥
அப்₄யாபதத்யமிததா₄ம்நி ப₄வந்மஹாஸ்த்ரே
ஹா ஹேதி வித்₃ருதவதீ க₂லு கோ₄ரக்ருத்யா|
ரோஷாத் ஸுத₃க்ஷிணமத₃க்ஷிணசேஷ்டிதம் தம்
புப்லோஷ சக்ரமபி காஶிபுரீமதா₄க்ஷீத் || 8||
8. சுதர்சன சக்கரம் ஒளிவீசிக் கொண்டு எதிர்த்து வருவதைக் கண்ட அந்தக் கொடிய தேவதை, கோபமாக சப்தமிட்டுக் கொண்டு, தன்னை ஏவிய சுதக்ஷிணனையே எரித்தது. தங்கள் சக்ராயுதம் காசி நகரையே எரித்தது.
स खलु विविदो रक्षोघाते कृतोपकृति: पुरा
तव तु कलया मृत्युं प्राप्तुं तदा खलतां गत: ।
नरकसचिवो देशक्लेशं सृजन् नगरान्तिके
झटिति हलिना युध्यन्नद्धा पपात तलाहत: ॥९॥
ஸ க₂லு விவிதோ₃ ரக்ஷோகா₄தே க்ருதோபக்ருதி: புரா
தவ து கலயா ம்ருத்யும் ப்ராப்தும் ததா₃ க₂லதாம் க₃த: |
நரகஸசிவோ தே₃ஶக்லேஶம் ஸ்ருஜந் நக₃ராந்திகே
ஜ₂டிதி ஹலிநா யுத்₄யந்நத்₃தா₄ பபாத தலாஹத: || 9||
9. திரேதா யுகத்தில், ராமாவதாரத்தின்போது, ராவண வதத்தில் உதவி செய்த விவிதன் என்ற வானரம், கிருஷ்ணாவதாரத்தின்போது பலராமனால் கொல்லப்படவேண்டும் என்று விரும்பியது. நரகாசுரனுக்கு மந்திரியாய் இருந்துகொண்டு, துவாரகைக்கு அருகே பல தீமைகளைச் செய்து கொண்டிருந்தான். பலராமன் அவனோடு போர் புரிந்து, கைகளால் அடித்து எளிதாக அவனைக் கொன்றார்.
साम्बं कौरव्यपुत्रीहरणनियमितं सान्त्वनार्थी कुरूणां
यातस्तद्वाक्यरोषोद्धृतकरिनगरो मोचयामास राम: ।
ते घात्या: पाण्डवेयैरिति यदुपृतनां नामुचस्त्वं तदानीं
तं त्वां दुर्बोधलीलं पवनपुरपते तापशान्त्यै निषेवे ॥१०॥
ஸாம்ப₃ம் கௌரவ்யபுத்ரீஹரணநியமிதம் ஸாந்த்வநார்தீ₂ குரூணாம்
யாதஸ்தத்₃வாக்யரோஷோத்₃த்₄ருதகரிநக₃ரோ மோசயாமாஸ ராம: |
தே கா₄த்யா: பாண்ட₃வேயைரிதி யது₃ப்ருதநாம் நாமுசஸ்த்வம் ததா₃நீம்
தம் த்வாம் து₃ர்போ₃த₄லீலம் பவநபுரபதே தாபஶாந்த்யை நிஷேவே || 10||
10. துரியோதனனின் பெண்ணான லக்ஷ்மணையைக் கவர்ந்த சாம்பன் என்றவனைக் கௌரவர்கள் சிறைப்படுத்தினர். அதையறிந்த பலராமன் சமாதானம் செய்ய அங்கு சென்றார். கௌரவர்களின் பேச்சால் கோபமடைந்த பலராமர், ஹஸ்தினாபுரத்தை கலப்பையால் மேலே கிளப்பி, சாம்பனை விடுவித்தார். கௌரவர்கள் பாண்டவர்களால் கொல்லப் படவேண்டும் என்பதால், தாங்கள் யாதவப் படையை அங்கு அனுப்பவில்லை. உம்முடைய லீலைகளை யாரால் அறிய முடியும்? குருவாயூரப்பா! பிணிகளால் உண்டான என்னுடைய தாபம் நீங்குவதற்காக உம்மை நான் வணங்குகிறேன்.
No comments:
Post a Comment