த³ஶகம் -82
பாணாசுர யுத்தம், ந்ருக மோக்ஷம்
प्रद्युम्नो रौक्मिणेय: स खलु तव कला शम्बरेणाहृतस्तं
हत्वा रत्या सहाप्तो निजपुरमहरद्रुक्मिकन्यां च धन्याम् ।
तत्पुत्रोऽथानिरुद्धो गुणनिधिरवहद्रोचनां रुक्मिपौत्रीं
तत्रोद्वाहे गतस्त्वं न्यवधि मुसलिना रुक्म्यपि द्यूतवैरात् ॥१॥
ப்ரத்₃யும்நோ ரௌக்மிணேய: ஸ க₂லு தவ கலா ஶம்ப₃ரேணாஹ்ருதஸ்தம்
ஹத்வா ரத்யா ஸஹாப்தோ நிஜபுரமஹரத்₃ருக்மிகந்யாம் ச த₄ந்யாம் |
தத்புத்ரோ(அ)தா₂நிருத்₃தோ₄ கு₃ணநிதி₄ரவஹத்₃ரோசநாம் ருக்மிபௌத்ரீம்
தத்ரோத்₃வாஹே க₃தஸ்த்வம் ந்யவதி₄ முஸலிநா ருக்ம்யபி த்₃யூதவைராத் || 1||
1. ருக்மிணியின் மகன் ப்ரத்யும்னன் தங்களுடைய அம்சம். ப்ரத்யும்னன் பிறந்ததும், அவனை சம்பரன் என்ற அசுரன் கடத்திச் சென்றான். ப்ரத்யும்னன் வளர்ந்த பிறகு, சம்பரனைக் கொன்று, தன் மனைவி ரதியுடன் துவாரகைக்குத் திரும்பினான். தன் மாமன் மகளும், குணவதியுமான ருக்மவதியைக் கவர்ந்து மணம் செய்து கொண்டான். ப்ரத்யும்னனின் பிள்ளை அநிருத்தன் நற்குணங்கள் நிரம்பியவனாய் இருந்தான். அநிருத்தன், ருக்மியின் பேத்தியான ரோசனையை மணந்து கொண்டான். தாங்களும் அந்தத் திருமணத்திற்குச் சென்றிருந்தீர். அந்தத் திருமணத்தில் சூதாட்டத்தின்போது நடந்த சண்டையில் பலராமர் ருக்மியைக் கொன்றார்.
बाणस्य सा बलिसुतस्य सहस्रबाहो-
र्माहेश्वरस्य महिता दुहिता किलोषा ।
त्वत्पौत्रमेनमनिरुद्धमदृष्टपूर्वं
स्वप्नेऽनुभूय भगवन् विरहातुराऽभूत् ॥२॥
பா₃ணஸ்ய ஸா ப₃லிஸுதஸ்ய ஸஹஸ்ரபா₃ஹோ-
ர்மாஹேஶ்வரஸ்ய மஹிதா து₃ஹிதா கிலோஷா |
த்வத்பௌத்ரமேநமநிருத்₃த₄மத்₃ருஷ்டபூர்வம்
ஸ்வப்நே(அ)நுபூ₄ய ப₄க₃வந் விரஹாதுரா(அ)பூ₄த் || 2||
2. மகாபலியின் மகன் பாணாசுரன், சிறந்த சிவபக்தன். அவனுக்கு ஆயிரம் கைகள். அவனுடைய பெண் உஷை. அவள் தங்கள் பேரனான அநிருத்தனை நேரில் கண்டதில்லை. ஆயினும், அவன் மீது காதல் கொண்டாள். அவனைக் கனவில் கண்டு, விழித்ததும் காணாமல் துயரம் அடைந்தாள்.
योगिन्यतीव कुशला खलु चित्रलेखा
तस्या: सखी विलिखती तरुणानशेषान् ।
तत्रानिरुद्धमुषया विदितं निशाया-
मानेष्ट योगबलतो भवतो निकेतात् ॥३॥
யோகி₃ந்யதீவ குஶலா க₂லு சித்ரலேகா₂
தஸ்யா: ஸகீ₂ விலிக₂தீ தருணாநஶேஷாந் |
தத்ராநிருத்₃த₄முஷயா விதி₃தம் நிஶாயா-
மாநேஷ்ட யோக₃ப₃லதோ ப₄வதோ நிகேதாத் || 3||
3. அவளுடைய தோழி சித்ரலேகா என்பவள், யோகத்திலும், சித்திரம் வரைவதிலும் தேர்ச்சி பெற்றவள். அவள் பல இளைஞர்களின் ஓவியங்களை வரைந்தாள். அநிருத்தனை சித்திரமாக வரைந்ததும், உஷை அடையாளம் கண்டு கொண்டாள். சித்ரலேகா, தனது யோக சக்தியால், அன்றிரவே அநிருத்தனை தங்கள் அரண்மனையிலிருந்து அழைத்துச் சென்றாள்.
कन्यापुरे दयितया सुखमारमन्तं
चैनं कथञ्चन बबन्धुषि शर्वबन्धौ ।
श्रीनारदोक्ततदुदन्तदुरन्तरोषै-
स्त्वं तस्य शोणितपुरं यदुभिर्न्यरुन्धा: ॥४॥
கந்யாபுரே த₃யிதயா ஸுக₂மாரமந்தம்
சைநம் கத₂ஞ்சந ப₃ப₃ந்து₄ஷி ஶர்வப₃ந்தௌ₄ |
ஶ்ரீநாரதோ₃க்ததது₃த₃ந்தது₃ரந்தரோஷை-
ஸ்த்வம் தஸ்ய ஶோணிதபுரம் யது₃பி₄ர்ந்யருந்தா₄: || 4||
4. அநிருத்தன் உஷையோடு அந்தப்புரத்தில் சுகமாய் வாழ்ந்து வந்தான். அவனை, பாணாசுரன் கயிற்றால் கட்டிச் சிறையிலிட்டான். நாரதர் மூலம் அச்செய்தியை அறிந்த நீர், மிகுந்த கோபத்துடன், யாதவர்களோடு சென்று, பாணாசுரனின் சோணிதபுரத்தை முற்றுகையிட்டீர்.
पुरीपालश्शैलप्रियदुहितृनाथोऽस्य भगवान्
समं भूतव्रातैर्यदुबलमशङ्कं निरुरुधे ।
महाप्राणो बाणो झटिति युयुधानेनयुयुधे
गुह: प्रद्युम्नेन त्वमपि पुरहन्त्रा जघटिषे ॥५॥
புரீபாலஶ்ஶைலப்ரியது₃ஹித்ருநாதோ₂(அ)ஸ்ய ப₄க₃வாந்
ஸமம் பூ₄தவ்ராதைர்யது₃ப₃லமஶங்கம் நிருருதே₄ |
மஹாப்ராணோ பா₃ணோ ஜ₂டிதி யுயுதா₄நேநயுயுதே₄
கு₃ஹ: ப்ரத்₃யும்நேந த்வமபி புரஹந்த்ரா ஜக₄டிஷே || 5||
5. பாணாசுரனின் நகரத்தை மலைமகளின் கணவரான பரமசிவன் பாதுகாத்து வந்தார். அவர், பூதகணங்களோடு யாதவப் படைகளை பயமில்லாமல் தடுத்தார். பாணாசுரன் யுயுதானனோடும், குகன் ப்ரத்யும்னனோடும், தாங்கள் சிவபெருமானோடும் யுத்தம் செய்தீர்கள்.
निरुद्धाशेषास्त्रे मुमुहुषि तवास्त्रेण गिरिशे
द्रुता भूता भीता: प्रमथकुलवीरा: प्रमथिता: ।
परास्कन्द्त् स्कन्द: कुसुमशरबाणैश्च सचिव:
स कुम्भाण्डो भाण्डं नवमिव बलेनाशु बिभिदे ॥६॥
நிருத்₃தா₄ஶேஷாஸ்த்ரே முமுஹுஷி தவாஸ்த்ரேண கி₃ரிஶே
த்₃ருதா பூ₄தா பீ₄தா: ப்ரமத₂குலவீரா: ப்ரமதி₂தா: |
பராஸ்கந்த்₃த் ஸ்கந்த₃: குஸுமஶரபா₃ணைஶ்ச ஸசிவ:
ஸ கும்பா₄ண்டோ₃ பா₄ண்ட₃ம் நவமிவ ப₃லேநாஶு பி₃பி₄தே₃ || 6||
6. சிவனின் எல்லா பாணங்களையும் தடுத்த தாங்கள், மோகனாஸ்திரத்தைத் தொடுத்து அவரை மயங்கச் செய்தீர்கள். அதைக் கண்ட பூதகணங்கள் பயந்து ஓடின. குகனும் ப்ரத்யும்னன் எறிந்த மன்மத அம்பால் தோல்வியடைந்தார். கும்பாண்டன் என்ற பாணாசுரனின் மந்திரியை, பலராமர் அடித்துக் கொன்றார்.
चापानां पञ्चशत्या प्रसभमुपगते छिन्नचापेऽथ बाणे
व्यर्थे याते समेतो ज्वरपतिरशनैरज्वरि त्वज्ज्वरेण ।
ज्ञानी स्तुत्वाऽथ दत्वा तव चरितजुषां विज्वरं स ज्वरोऽगात्
प्रायोऽन्तर्ज्ञानवन्तोऽपि च बहुतमसा रौद्रचेष्टा हि रौद्रा: ॥७॥
இந்த ஸ்லோகத்தைப் படிப்பதால் ஜ்வரபீடை நீங்கும்.
சாபாநாம் பஞ்சஶத்யா ப்ரஸப₄முபக₃தே சி₂ந்நசாபே(அ)த₂ பா₃ணே
வ்யர்தே₂ யாதே ஸமேதோ ஜ்வரபதிரஶநைரஜ்வரி த்வஜ்ஜ்வரேண |
ஜ்ஞாநீ ஸ்துத்வா(அ)த₂ த₃த்வா தவ சரிதஜுஷாம் விஜ்வரம் ஸ ஜ்வரோ(அ)கா₃த்
ப்ராயோ(அ)ந்தர்ஜ்ஞாநவந்தோ(அ)பி ச ப₃ஹுதமஸா ரௌத்₃ரசேஷ்டா ஹி ரௌத்₃ரா: || 7||
7. பாணாசுரன் தன் ஆயிரம் கைகளிலும் ஐந்நூறு விற்களையும் அம்புகளையும் எடுத்துக் கொண்டு போருக்கு வந்தான். தாங்கள் அவனுடைய ஆயுதங்கள் யாவற்றையும் நொறுக்கினீர். அதனால் அவன் பின்வாங்கித் திரும்பினான். சைவ ஜ்வரம் முன்னே வந்தது. வைஷ்ணவ ஜ்வரம் அதை முறியடித்தது. உமது மகிமையை அறிந்த பிறகு, அந்த சைவப் படையானது தங்களைப் போற்றிப் புகழ்ந்தது. உமது சரித்திரத்தைப் படிப்பவர்களுக்கோ, கேட்பவர்களுக்கோ ஜ்வரபீடை நீங்கவேண்டும் என்று வேண்டிக்கொண்டு திரும்பிச் சென்றது. சிவனுடைய அடியார்கள் ஞானம் நிறைந்தவர்களாக இருந்தாலும், தமோ குணத்தால் மூர்க்கமான செய்கைகளில் ஈடுபடுகிறார்கள்.
बाणं नानायुधोग्रं पुनरभिपतितं दर्पदोषाद्वितन्वन्
निर्लूनाशेषदोषं सपदि बुबुधुषा शङ्करेणोपगीत: ।
तद्वाचा शिष्टबाहुद्वितयमुभयतो निर्भयं तत्प्रियं तं
मुक्त्वा तद्दत्तमानो निजपुरमगम: सानिरुद्ध: सहोष: ॥८॥
பா₃ணம் நாநாயுதோ₄க்₃ரம் புநரபி₄பதிதம் த₃ர்பதோ₃ஷாத்₃விதந்வந்
நிர்லூநாஶேஷதோ₃ஷம் ஸபதி₃ பு₃பு₃து₄ஷா ஶங்கரேணோபகீ₃த: |
தத்₃வாசா ஶிஷ்டபா₃ஹுத்₃விதயமுப₄யதோ நிர்ப₄யம் தத்ப்ரியம் தம்
முக்த்வா தத்₃த₃த்தமாநோ நிஜபுரமக₃ம: ஸாநிருத்₃த₄: ஸஹோஷ: || 8||
8. ஆணவத்துடன் பாணாசுரன், மீண்டும் பல ஆயுதங்களுடன் வந்து தங்களை எதிர்த்தான். அவனுடைய எல்லாக் கைகளையும் அறுத்து எறிந்தீர். தங்களைப் பற்றி அறிந்த பரமசிவன் தங்களைத் துதித்தார். அவர் வேண்டிக்கொண்டதன் பேரில் பாணாசுரனுக்கு இரு பக்கத்திலும் இரண்டு கைகளை மட்டும் மீதமாக வைத்து சிவபக்தனான அவனை விடுவித்தீர். அவன் அன்புடன் அளித்த பொருட்களையும், உஷையுடன் அநிருத்தனையும் அழைத்துக் கொண்டு துவாரகைக்குச் சென்றீர்.
मुहुस्तावच्छक्रं वरुणमजयो नन्दहरणे
यमं बालानीतौ दवदहनपानेऽनिलसखम् ।
विधिं वत्सस्तेये गिरिशमिह बाणस्य समरे
विभो विश्वोत्कर्षी तदयमवतारो जयति ते ॥९॥
முஹுஸ்தாவச்ச₂க்ரம் வருணமஜயோ நந்த₃ஹரணே
யமம் பா₃லாநீதௌ த₃வத₃ஹநபாநே(அ)நிலஸக₂ம் |
விதி₄ம் வத்ஸஸ்தேயே கி₃ரிஶமிஹ பா₃ணஸ்ய ஸமரே
விபோ₄ விஶ்வோத்கர்ஷீ தத₃யமவதாரோ ஜயதி தே || 9||
9. தாங்கள் பல முறை இந்திரனை வென்றீர். நந்தனைக் கவர்ந்து சென்ற வருணனை ஜயித்தீர். குருவின் மகனை மீட்டு வந்து யமனை ஜயித்தீர். காட்டுத் தீயைக் குடித்து அக்னியை வென்றீர். கன்றுகளைக் கவர்ந்த பிரமனை வென்றீர். பாணாசுர யுத்தத்தில் சிவனையும் ஜயித்தீர். பிரபுவே! தங்களுடைய இந்த அவதாரம், எல்லா அவதாரங்களையும் விட சிறந்ததாக விளங்குகிறது.
द्विजरुषा कृकलासवपुर्धरं नृगनृपं त्रिदिवालयमापयन् ।
निजजने द्विजभक्तिमनुत्तमामुपदिशन् पवनेश्वर् पाहि माम् ॥१०॥
த்₃விஜருஷா க்ருகலாஸவபுர்த₄ரம் ந்ருக₃ந்ருபம் த்ரிதி₃வாலயமாபயந் |
நிஜஜநே த்₃விஜப₄க்திமநுத்தமாமுபதி₃ஶந் பவநேஶ்வர பாஹி மாம் || 10||
10. ந்ருகன் என்ற அரசன் பிராம்மண கோபத்தால் பச்சோந்தி உருவமடைந்தான். அவனது சாபத்தைப் போக்கி, அவனைத் தூய்மைப்படுத்தி ஸ்வர்க்கத்திற்கு அனுப்பினீர். புனிதமான தங்கள் மக்களிடம், பிராம்மணர்களிடம் வைக்க வேண்டிய மரியாதையை உபதேசம் செய்தீர்கள். குருவாயூரப்பனே! என்னைக் காப்பாற்ற வேண்டும்.
No comments:
Post a Comment