த³ஶகம் -75
கம்ஸ மோக்ஷம்
प्रात: सन्त्रस्तभोजक्षितिपतिवचसा प्रस्तुते मल्लतूर्ये
सङ्घे राज्ञां च मञ्चानभिययुषि गते नन्दगोपेऽपि हर्म्यम् ।
कंसे सौधाधिरूढे त्वमपि सहबल: सानुगश्चारुवेषो
रङ्गद्वारं गतोऽभू: कुपितकुवलयापीडनागावलीढम् ॥१॥
ப்ராத: ஸந்த்ரஸ்தபோ₄ஜக்ஷிதிபதிவசஸா ப்ரஸ்துதே மல்லதூர்யே
ஸங்கே₄ ராஜ்ஞாம் ச மஞ்சாநபி₄யயுஷி க₃தே நந்த₃கோ₃பே(அ)பி ஹர்ம்யம் |
கம்ஸே ஸௌதா₄தி₄ரூடே₄ த்வமபி ஸஹப₃ல: ஸாநுக₃ஶ்சாருவேஷோ
ரங்க₃த்₃வாரம் க₃தோ(அ)பூ₄: குபிதகுவலயாபீட₃நாகா₃வலீட₄ம் || 1||
1. மறுநாள் அதிகாலையில், பயந்த கம்ஸனின் ஆணைப்படி, மல்யுத்தத்திற்கான போட்டிகள் முரசொலி செய்து அறிவிக்கப்பட்டது. அதனைக் காண, பல அரசர்கள் வந்தனர். நந்தகோபரும் உப்பரிகைக்குச் சென்றார். கம்ஸனும் உப்பரிகைக்குச் சென்றான். தாங்களும் அழகிய அலங்காரங்களுடன் பலராமனுடனும், கோபர்களுடனும் மல்யுத்த களத்தை அடைந்தீர்கள். அங்கு, குவாலயாபீடம் என்ற யானை தங்களை வழிமறித்து நின்றது.
पापिष्ठापेहि मार्गाद्द्रुतमिति वचसा निष्ठुरक्रुद्धबुद्धे-
रम्बष्ठस्य प्रणोदादधिकजवजुषा हस्तिना गृह्यमाण: ।
केलीमुक्तोऽथ गोपीकुचकलशचिरस्पर्धिनं कुम्भमस्य
व्याहत्यालीयथास्त्वं चरणभुवि पुनर्निर्गतो वल्गुहासी ॥२॥
பாபிஷ்டா₂பேஹி மார்கா₃த்₃த்₃ருதமிதி வசஸா நிஷ்டு₂ரக்ருத்₃த₄பு₃த்₃தே₄-
ரம்ப₃ஷ்ட₂ஸ்ய ப்ரணோதா₃த₃தி₄கஜவஜுஷா ஹஸ்திநா க்₃ருஹ்யமாண: |
கேலீமுக்தோ(அ)த₂ கோ₃பீகுசகலஶசிரஸ்பர்தி₄நம் கும்ப₄மஸ்ய
வ்யாஹத்யாலீயதா₂ஸ்த்வம் சரணபு₄வி புநர்நிர்க₃தோ வல்கு₃ஹாஸீ || 2||
2. வழிவிட்டுச் செல் என்று அந்த யானையைப் பணித்தீர்கள். கோபமடைந்த யானைப் பாகனான ‘அம்பஷ்டன்’, யானையைத் தங்களைத் தாக்க ஏவினான். அந்த யானை, விரைந்து உம்மைப் பிடித்தது. அதனிடமிருந்து விடுவித்துக்கொண்டு அதன் மத்தகத்தில் அடித்தீர். கோபியரின் கலசம் போன்ற கொங்கைகளுடன் போட்டியிடும் அந்த யானையின் மத்தகத்தை அடித்து, அதன் காலடியில் மறைந்து, பிறகு சிரித்துக்கொண்டு வெளியே வந்தீர்.
हस्तप्राप्योऽप्यगम्यो झटिति मुनिजनस्येव धावन् गजेन्द्रं
क्रीडन्नापात्य भूमौ पुनरपिपततस्तस्य दन्तं सजीवम् ।
मूलादुन्मूल्य तन्मूलगमहितमहामौक्तिकान्यात्ममित्रे
प्रादास्त्वं हारमेभिर्ललितविरचितं राधिकायै दिशेति ॥३॥
ஹஸ்தப்ராப்யோ(அ)ப்யக₃ம்யோ ஜ₂டிதி முநிஜநஸ்யேவ தா₄வந் க₃ஜேந்த்₃ரம்
க்ரீட₃ந்நாபாத்ய பூ₄மௌ புநரபிபததஸ்தஸ்ய த₃ந்தம் ஸஜீவம் |
மூலாது₃ந்மூல்ய தந்மூலக₃மஹிதமஹாமௌக்திகாந்யாத்மமித்ரே
ப்ராதா₃ஸ்த்வம் ஹாரமேபி₄ர்லலிதவிரசிதம் ராதி₄காயை தி₃ஶேதி || 3||
3. யானைக்கு அருகில் இருந்தாலும், அதன் பிடியில் அகப்படாமல் நழுவி, வெகுதூரம் ஓடி, விளையாட்டாய் விழுவது போல் கீழே விழுந்தீர். உடனே அந்த யானையும் தங்களைத் தாக்க எதிரே வந்தது. அதன் தந்தங்களை வேருடன் பிடுங்கி எறிந்தீர். தந்தத்தின் அடிப்பகுதியிலுள்ள உயர்ந்த முத்துக்களை எடுத்து, இவற்றை அழகிய முத்து மாலையாகச் செய்து ராதையிடம் கொடு என்று தங்கள் நண்பர் ஸ்ரீதாமனிடம் கூறினீர்.
गृह्णानं दन्तमंसे युतमथ हलिना रङ्गमङ्गाविशन्तं
त्वां मङ्गल्याङ्गभङ्गीरभसहृतमनोलोचना वीक्ष्य लोका: ।
हंहो धन्यो हि नन्दो नहि नहि पशुपालाङ्गना नो यशोदा
नो नो धन्येक्षणा: स्मस्त्रिजगति वयमेवेति सर्वे शशंसु: ॥४॥
க்₃ருஹ்ணாநம் த₃ந்தமம்ஸே யுதமத₂ ஹலிநா ரங்க₃மங்கா₃விஶந்தம்
த்வாம் மங்க₃ல்யாங்க₃ப₄ங்கீ₃ரப₄ஸஹ்ருதமநோலோசநா வீக்ஷ்ய லோகா: |
ஹம்ஹோ த₄ந்யோ ஹி நந்தோ₃ நஹி நஹி பஶுபாலாங்க₃நா நோ யஶோதா₃
நோ நோ த₄ந்யேக்ஷணா: ஸ்மஸ்த்ரிஜக₃தி வயமேவேதி ஸர்வே ஶஶம்ஸு: || 4||
4. மக்களின் மனம் தங்கள் தேககாந்தியால் அபகரிக்கப்பட்டது. யானையின் தந்தத்தைத் தோளில் சுமந்துகொண்டு பலராமனுடன் மல்யுத்த களத்திற்குச் செல்லும் தங்களைக் கண்ட மக்கள், ஆச்சர்யம்! என்றும், நந்தகோபன் மஹாபாக்கியசாலி என்றும், சிலர் யசோதை பாக்கியசாலி என்றும், வேறு சிலர், இல்லை இந்த நகரத்து மக்களாகிய நாம்தான் பாக்கியம் செய்தவர்கள், என்றும் உவகையுடன் கூவினார்கள்.
पूर्णं ब्रह्मैव साक्षान्निरवधि परमानन्दसान्द्रप्रकाशं
गोपेशु त्वं व्यलासीर्न खलु बहुजनैस्तावदावेदितोऽभू: ।
दृष्ट्वऽथ त्वां तदेदंप्रथममुपगते पुण्यकाले जनौघा:
पूर्णानन्दा विपापा: सरसमभिजगुस्त्वत्कृतानि स्मृतानि ॥५॥
பூர்ணம் ப்₃ரஹ்மைவ ஸாக்ஷாந்நிரவதி₄ பரமாநந்த₃ஸாந்த்₃ரப்ரகாஶம்
கோ₃பேஶு த்வம் வ்யலாஸீர்ந க₂லு ப₃ஹுஜநைஸ்தாவதா₃வேதி₃தோ(அ)பூ₄: |
த்₃ருஷ்ட்வ(அ)த₂ த்வாம் ததே₃த₃ம்ப்ரத₂மமுபக₃தே புண்யகாலே ஜநௌகா₄:
பூர்ணாநந்தா₃ விபாபா: ஸரஸமபி₄ஜகு₃ஸ்த்வத்க்ருதாநி ஸ்ம்ருதாநி || 5||
5. பூர்ண ஸ்வரூபமான தாங்கள், கோபிகைகளுக்கு நேரில் காணத் தகுந்தவராய் விளங்கினீர்கள். ஆனால், அந்நகர மக்களோ தங்களைப் பரப்ரம்மமாக அறியவில்லை. முதன்முதலாய் தங்களைப் பார்த்த அவர்கள், உடனேயே பாபம் நீங்கியவர்களாய் ஆனார்கள். தங்களுடைய செய்கைகளைப் பற்றிப் போற்றிப் பாடினார்கள்.
चाणूरो मल्लवीरस्तदनु नृपगिरा मुष्टिको मुष्टिशाली
त्वां रामं चाभिपेदे झटझटिति मिथो मुष्टिपातातिरूक्षम् ।
उत्पातापातनाकर्षणविविधरणान्यासतां तत्र चित्रं
मृत्यो: प्रागेव मल्लप्रभुरगमदयं भूरिशो बन्धमोक्षान् ॥६॥
சாணூரோ மல்லவீரஸ்தத₃நு ந்ருபகி₃ரா முஷ்டிகோ முஷ்டிஶாலீ
த்வாம் ராமம் சாபி₄பேதே₃ ஜ₂டஜ₂டிதி மிதோ₂ முஷ்டிபாதாதிரூக்ஷம் |
உத்பாதாபாதநாகர்ஷணவிவித₄ரணாந்யாஸதாம் தத்ர சித்ரம்
ம்ருத்யோ: ப்ராகே₃வ மல்லப்ரபு₄ரக₃மத₃யம் பூ₄ரிஶோ ப₃ந்த₄மோக்ஷாந் || 6||
6. கம்ஸனுடைய ஆணையின்படி, மல்யுத்தத்தில் சிறந்த சாணூரன் என்ற மல்லன் தங்களையும், முஷ்டி யுத்தத்தில் சிறந்த முஷ்டிகன் என்பவன் பலராமனையும் சவாலுக்கு அழைத்தார்கள். பலவிதமான தாக்குதல்களுடன் யுத்தம் தொடங்கியது. சாணூரனுக்கு மரணத்திற்கு முன்பே பந்தமோக்ஷங்களிலிருந்து விடுதலை கிடைத்தது. அதாவது, தங்களிடம் பிடிபடுதலும், அதிலிருந்து விடுதலையும் கிடைத்தது. என்ன ஆச்சர்யம்!
हा धिक् कष्टं कुमारौ सुललितवपुषौ मल्लवीरौ कठोरौ
न द्रक्ष्यामो व्रजामस्त्वरितमिति जने भाषमाणे तदानीम् ।
चाणूरं तं करोद्भ्रामणविगलदसुं पोथयामासिथोर्व्यां
पिष्टोऽभून्मुष्टिकोऽपि द्रुतमथ हलिना नष्टशिष्टैर्दधावे ॥७॥
ஹா தி₄க் கஷ்டம் குமாரௌ ஸுலலிதவபுஷௌ மல்லவீரௌ கடோ₂ரௌ
ந த்₃ரக்ஷ்யாமோ வ்ரஜாமஸ்த்வரிதமிதி ஜநே பா₄ஷமாணே ததா₃நீம் |
சாணூரம் தம் கரோத்₃ப்₄ராமணவிக₃லத₃ஸும் போத₂யாமாஸிதோ₂ர்வ்யாம்
பிஷ்டோ(அ)பூ₄ந்முஷ்டிகோ(அ)பி த்₃ருதமத₂ ஹலிநா நஷ்டஶிஷ்டைர்த₃தா₄வே || 7||
7. இது என்ன போட்டி? ஒரு புறம் அழகான சிறுவர்கள். மல்லர்களோ கடினமானவர்கள். இந்த யுத்தத்தை நாம் பார்க்க வேண்டாம், போய்விடுவோம் என்று மக்கள் பேசிக் கொண்டார்கள். அப்போது சாணூரனைத் தூக்கிச் சுற்றி உயிரிழக்கச் செய்தீர்கள். உயிரிழந்த அவனை பூமியிலே ஓங்கி அடித்தீர்கள். பலராமனும் முஷ்டிகனை அடித்துக் கொன்றார். மீதமிருந்த மல்லர்கள் அங்கிருந்து ஓடினர்.
कंस संवार्य तूर्यं खलमतिरविदन् कार्यमार्यान् पितृंस्ता-
नाहन्तुं व्याप्तमूर्तेस्तव च समशिषद्दूरमुत्सारणाय ।
रुष्टो दुष्टोक्तिभिस्त्वं गरुड इव गिरिं मञ्चमञ्चन्नुदञ्चत्-
खड्गव्यावल्गदुस्संग्रहमपि च हठात् प्राग्रहीरौग्रसेनिम् ॥८॥
கம்ஸ ஸம்வார்ய தூர்யம் க₂லமதிரவித₃ந் கார்யமார்யாந் பித்ரும்ஸ்தா-
நாஹந்தும் வ்யாப்தமூர்தேஸ்தவ ச ஸமஶிஷத்₃தூ₃ரமுத்ஸாரணாய |
ருஷ்டோ து₃ஷ்டோக்திபி₄ஸ்த்வம் க₃ருட₃ இவ கி₃ரிம் மஞ்சமஞ்சந்நுத₃ஞ்சத்-
க₂ட்₃க₃வ்யாவல்க₃து₃ஸ்ஸம்க்₃ரஹமபி ச ஹடா₂த் ப்ராக்₃ரஹீரௌக்₃ரஸேநிம் || 8||
8. திகைத்த கம்ஸன், முரசுகளையும், வாத்தியங்களையும் முழங்க விடாமல் தடுத்தான். உக்ரசேனன், நந்தகோபன், வசுதேவன் ஆகியோரைக் கொல்லும்படியும், தங்களை வெகுதூரத்திற்கப்பால் விரட்டும்படியும் உத்தரவிட்டான். இதைக் கேட்டுக் கோபமடைந்த தாங்கள், கருடன் மலைக்குச் செல்வதைப்போல், உப்பரிகையில் வீற்றிருந்த கம்ஸனை நோக்கிப் பாய்ந்தீர். கம்ஸன் வாளெடுத்துச் சுழற்றினான். அவனைப் வலுவாகப் பிடித்தீர்கள்.
सद्यो निष्पिष्टसन्धिं भुवि नरपतिमापात्य तस्योपरिस्टा-
त्त्वय्यापात्ये तदैव त्वदुपरि पतिता नाकिनां पुष्पवृष्टि: ।
किं किं ब्रूमस्तदानीं सततमपि भिया त्वद्गतात्मा स भेजे
सायुज्यं त्वद्वधोत्था परम परमियं वासना कालनेमे: ॥९॥
ஸத்₃யோ நிஷ்பிஷ்டஸந்தி₄ம் பு₄வி நரபதிமாபாத்ய தஸ்யோபரிஸ்டா-
த்த்வய்யாபாத்யே ததை₃வ த்வது₃பரி பதிதா நாகிநாம் புஷ்பவ்ருஷ்டி: |
கிம் கிம் ப்₃ரூமஸ்ததா₃நீம் ஸததமபி பி₄யா த்வத்₃க₃தாத்மா ஸ பே₄ஜே
ஸாயுஜ்யம் த்வத்₃வதோ₄த்தா₂ பரம பரமியம் வாஸநா காலநேமே: || 9||
9. அவனுடைய அங்கங்களை நொறுக்கி, பூமியில் தள்ளி, அவன் மேல் பாய்ந்து குதித்தீர். தேவர்கள் பூமாரி பொழிந்தனர். கம்ஸன் எப்போதும் தங்களையே மனதில் நினைத்திருந்தபடியால் மோக்ஷத்தை அடைந்தான். பூர்வ ஜன்மத்தில் காலநேமி என்ற அசுரனாக இருந்தபோது தாங்கள் அவனைக் கொன்றீர்கள். கம்ஸனாகப் பிறந்த பின்னும் எப்போதும் தங்களையே நினைத்துக் கொண்டிருந்ததாலேயே, இவ்வாறு முக்தி அடைந்தான்.
तद्भ्रातृनष्ट पिष्ट्वा द्रुतमथ पितरौ सन्नमन्नुग्रसेनं
कृत्वा राजानमुच्चैर्यदुकुलमखिलं मोदयन् कामदानै: ।
भक्तानामुत्तमं चोद्धवममरगुरोराप्तनीतिं सखायं
लब्ध्वा तुष्टो नगर्यां पवनपुरपते रुन्धि मे सर्वरोगान् ॥१०॥
தத்₃ப்₄ராத்ருநஷ்ட பிஷ்ட்வா த்₃ருதமத₂ பிதரௌ ஸந்நமந்நுக்₃ரஸேநம்
க்ருத்வா ராஜாநமுச்சைர்யது₃குலமகி₂லம் மோத₃யந் காமதா₃நை: |
ப₄க்தாநாமுத்தமம் சோத்₃த₄வமமரகு₃ரோராப்தநீதிம் ஸகா₂யம்
லப்₃த்₄வா துஷ்டோ நக₃ர்யாம் பவநபுரபதே ருந்தி₄ மே ஸர்வரோகா₃ந் || 10||
10. பிறகு, தாங்கள் கம்ஸனுடைய எட்டு சகோதரர்களையும் கொன்றீர்கள். தங்கள் பெற்றோரான வசுதேவரையும், தேவகியையும் சிறையிலிருந்து மீட்டு, அவர்களை நமஸ்கரித்தீர்கள். கம்ஸனின் தந்தையான உக்ரசேனனை அந்த நாட்டிற்கு அரசனாக ஆக்கினீர்கள். யாதவ குலத்தினர் மிக்க மகிழ்ந்தார்கள். தேவர்களின் குருவான பிருகஸ்பதியிடமிருந்து வித்தைகளைக் கற்ற உத்தவரை நண்பராக ஏற்றுக் கொண்டீர்கள். மிக்க மகிழ்ச்சியுடன் மதுரா நகரில் வசித்து வந்த தாங்கள் என் எல்லா நோய்களையும் போக்கி அருள வேண்டும்.
No comments:
Post a Comment