Friday, May 23, 2014

ஸ்ரீ நாராயணீயம் - தசகம் 84

ஸ்ரீ நாராயணீயம் - தசகம் 84, ஸ்ரீ நாராயணீயம் 84வது தசகம், ஸ்ரீமந் நாராயணீயம், ஸ்ரீ நாராயணீயம், ஸ்ரீமத் நாராயணீயம், நாராயணீயம், ஸ்ரீமன் நாராயணீயம், Narayaneeyam, Sree Narayaneeyam, Sriman narayaneeyam,Srimad Narayaneeyam

த³ஶகம் -84
ஸமந்தபஞ்சக யாத்திரை 

क्वचिदथ तपनोपरागकाले पुरि निदधत् कृतवर्मकामसूनू ।
यदुकुलमहिलावृत: सुतीर्थं समुपगतोऽसि समन्तपञ्चकाख्यम् ॥१॥

க்வசித₃த₂ தபநோபராக₃காலே புரி நித₃த₄த் க்ருதவர்மகாமஸூநூ |
யது₃குலமஹிலாவ்ருத: ஸுதீர்த₂ம் ஸமுபக₃தோ(அ)ஸி ஸமந்தபஞ்சகாக்₂யம் || 1||

1. ஒருமுறை, சூரியகிரஹணத்தன்று, க்ருதவர்மாவையும் அநிருத்தனையும் துவாரகையில் விட்டுவிட்டு, யாதவர்களுடனும், யாதவகுலப் பெண்களுடனும் ஸமந்தபஞ்சகம் என அழைக்கப்படும் புனித இடத்திற்கு சென்றீர்.

बहुतरजनताहिताय तत्र त्वमपि पुनन् विनिमज्य तीर्थतोयम् ।
द्विजगणपरिमुक्तवित्तराशि: सममिलथा: कुरुपाण्डवादिमित्रै: ॥२॥

ப₃ஹுதரஜநதாஹிதாய தத்ர த்வமபி புநந் விநிமஜ்ய தீர்த₂தோயம் |
த்₃விஜக₃ணபரிமுக்தவித்தராஶி: ஸமமிலதா₂: குருபாண்ட₃வாதி₃மித்ரை: || 2||

2. அங்கே கூடியிருந்த பல மக்களின் நன்மைக்காக, தாங்கள் நீராடி அந்தப் புண்ணிய தீர்த்தத்தைப் புனிதப்படுத்தினீர். பல அந்தணர்களுக்கு அளவற்ற பொருட்களைத் தானம் செய்தீர். அங்கு வந்திருந்த கௌரவர்கள், பாண்டவர்கள், மற்றவர்களோடு சேர்ந்து இருந்தீர்.

तव खलु दयिताजनै: समेता द्रुपदसुता त्वयि गाढभक्तिभारा ।
तदुदितभवदाहृतिप्रकारै: अतिमुमुदे सममन्यभामिनीभि: ॥३॥

தவ க₂லு த₃யிதாஜநை: ஸமேதா த்₃ருபத₃ஸுதா த்வயி கா₃ட₄ப₄க்திபா₄ரா |
தது₃தி₃தப₄வதா₃ஹ்ருதிப்ரகாரை: அதிமுமுதே₃ ஸமமந்யபா₄மிநீபி₄: || 3||

3. தங்களிடத்தில் ஆழ்ந்த பக்தி கொண்ட திரௌபதி, தங்கள் மனைவியர்களோடு பேசினாள். அவர்கள் ஒவ்வொருவரையும் தாங்கள் மணந்த முறை பற்றி அவர்களிடம் கேட்டு மகிழ்ந்தாள்.

तदनु च भगवन् निरीक्ष्य गोपानतिकुतुकादुपगम्य मानयित्वा।
चिरतरविरहातुराङ्गरेखा: पशुपवधू: सरसं त्वमन्वयासी: ॥४॥

தத₃நு ச ப₄க₃வந் நிரீக்ஷ்ய கோ₃பாநதிகுதுகாது₃பக₃ம்ய மாநயித்வா|
சிரதரவிரஹாதுராங்க₃ரேகா₂: பஶுபவதூ₄: ஸரஸம் த்வமந்வயாஸீ: || 4||

4. பின்னர், கோபர்களைப் பார்த்து, மகிழ்ச்சியுடன் அவர்களை அணுகி, அவர்களிடம் உரையாடினீர். வெகு நாட்களாகத் தங்களைப் பிரிந்ததால் துயரமடைந்து இளைத்த கோபியர்களிடமும் அன்புடன் சென்றீர்.

सपदि च भवदीक्षणोत्सवेन प्रमुषितमानहृदां नितम्बिनीनाम् ।
अतिरसपरिमुक्तकञ्चुलीके परिचयहृद्यतरे कुचे न्यलैषी: ॥५॥

ஸபதி₃ ச ப₄வதீ₃க்ஷணோத்ஸவேந ப்ரமுஷிதமாநஹ்ருதா₃ம் நிதம்பி₃நீநாம் |
அதிரஸபரிமுக்தகஞ்சுலீகே பரிசயஹ்ருத்₃யதரே குசே ந்யலைஷீ: || 5||

5. தங்களைக் கண்டதும் கோபியர்கள் சந்தோஷமடைந்து, வருத்தத்தை மறந்தனர். அதிக அன்பினால் அவர்கள் மார்புக் கச்சைகள் அவிழ்ந்தது. பொங்கி எழுந்து, மனதைக் கவரும் அவர்களது கொங்கைகளை ஆசையுடன் அணைத்தீர்.

रिपुजनकलहै: पुन: पुनर्मे समुपगतैरियती विलम्बनाऽभूत् ।
इति कृतपरिरम्भणेत्वयि द्राक् अतिविवशा खलु राधिका निलिल्ये ॥६॥

ரிபுஜநகலஹை: புந: புநர்மே ஸமுபக₃தைரியதீ விலம்ப₃நா(அ)பூ₄த் |
இதி க்ருதபரிரம்ப₄ணேத்வயி த்₃ராக் அதிவிவஶா க₂லு ராதி₄கா நிலில்யே || 6||

6. அடிக்கடி எதிரிகளுடன் போர் புரிந்ததால் தாமதம் ஆனது என்று கூறிக்கொண்டே ராதையைத் தழுவினீர். அவளும் மிகுந்த பரவசமடைந்து உம்முடன் ஒன்றிவிட்டாள்.

अपगतविरहव्यथास्तदा ता रहसि विधाय ददाथ तत्त्वबोधम् ।
परमसुखचिदात्मकोऽहमात्मेत्युदयतु व: स्फुटमेव चेतसीति ॥७॥

அபக₃தவிரஹவ்யதா₂ஸ்ததா₃ தா ரஹஸி விதா₄ய த₃தா₃த₂ தத்த்வபோ₃த₄ம் |
பரமஸுக₂சிதா₃த்மகோ(அ)ஹமாத்மேத்யுத₃யது வ: ஸ்பு₂டமேவ சேதஸீதி || 7||

7. தனிமையில் கோபிகைகளின் காதல் வேதனையைப் போக்கினீர். தாங்கள் பேரின்பமான பரமாத்மா என்பதை அவர்கள் அறியும்படி செய்தீர். அவர்கள் மனதில் உம்மைப் பற்றிய உண்மையை உணரும்படி செய்து, தத்துவ ஞானம் அளித்தீர்.

सुखरसपरिमिश्रितो वियोग: किमपि पुराऽभवदुद्धवोपदेशै: ।
समभवदमुत: परं तु तासां परमसुखैक्यमयी भवद्विचिन्ता ॥८॥

ஸுக₂ரஸபரிமிஶ்ரிதோ வியோக₃: கிமபி புரா(அ)ப₄வது₃த்₃த₄வோபதே₃ஶை: |
ஸமப₄வத₃முத: பரம் து தாஸாம் பரமஸுகை₂க்யமயீ ப₄வத்₃விசிந்தா || 8||

8. முன்பு கோபிகைகள் காதல் பிரிவால் துயரமடைந்திருந்தபோது, உத்தவர் அளித்த உபதேசத்தால் ஆனந்தமடைந்தனர். இப்போது தாங்கள் உபதேசித்தவுடன், உம்மைப் பற்றிய சிந்தனையானது, பேரின்பத்துடன் ஒன்றியிருக்கும் சுகமாக ஆனது.

मुनिवरनिवहैस्तवाथ पित्रा दुरितशमाय शुभानि पृच्छ्यमानै: ।
त्वयि सति किमिदं शुभान्तरै: रित्युरुहसितैरपि याजितस्तदाऽसौ ॥९॥

முநிவரநிவஹைஸ்தவாத₂ பித்ரா து₃ரிதஶமாய ஶுபா₄நி ப்ருச்ச்₂யமாநை: |
த்வயி ஸதி கிமித₃ம் ஶுபா₄ந்தரை: ரித்யுருஹஸிதைரபி யாஜிதஸ்ததா₃(அ)ஸௌ || 9||

9. தங்களது தந்தை வசுதேவர், பாவங்கள் விலக என்ன நற்காரியங்கள் செய்ய வேண்டும் என முனிவர்களிடம் கேட்டார். அதைக் கேட்ட அவர்கள், பகவானான தாங்கள் அருகில் இருக்கும்போது, வேறு நற்காரியங்கள் எதற்கு என்று கூறிச் சிரித்தார்கள். ஆயினும், வசுதேவர் வேண்டிக் கொண்டதன்பேரில் யாகம் செய்து வைத்தார்கள்.

सुमहति यजने वितायमाने प्रमुदितमित्रजने सहैव गोपा: ।
यदुजनमहितास्त्रिमासमात्रं भवदनुषङ्गरसं पुरेव भेजु : ॥१०॥

ஸுமஹதி யஜநே விதாயமாநே ப்ரமுதி₃தமித்ரஜநே ஸஹைவ கோ₃பா: |
யது₃ஜநமஹிதாஸ்த்ரிமாஸமாத்ரம் ப₄வத₃நுஷங்க₃ரஸம் புரேவ பே₄ஜு : || 10||

10. அந்த யாகம் நடைபெற்றபோது, பல நண்பர்கள் வந்திருந்தார்கள். யாதவர்கள் கோபர்களை உபசரித்தார்கள். இவ்வாறு யாகம் நடந்த மூன்று மாதங்களும், தங்கள் சேர்க்கையால் முன்பு போல சுகமடைந்தார்கள்.

व्यपगमसमये समेत्य राधां दृढमुपगूह्य निरीक्ष्य वीतखेदाम् ।
प्रमुदितहृदय: पुरं प्रयात: पवनपुरेश्वर पाहि मां गदेभ्य: ॥११॥

வ்யபக₃மஸமயே ஸமேத்ய ராதா₄ம் த்₃ருட₄முபகூ₃ஹ்ய நிரீக்ஷ்ய வீதகே₂தா₃ம் |
ப்ரமுதி₃தஹ்ருத₃ய: புரம் ப்ரயாத: பவநபுரேஶ்வர பாஹி மாம் க₃தே₃ப்₄ய: || 11||

11. யாகம் முடிந்து திரும்பிச் செல்லும்போது, ராதையிடம் சென்று அவளை இறுகத் தழுவினீர். அவள் துக்கமற்று இருப்பதைக் கண்டு மிக்க மகிழ்வுடன் துவாரகை திரும்பிய குருவாயூரப்பனே! வியாதிகளிலிருந்து என்னைக் காப்பாற்றி அருள வேண்டும்.

No comments:

Post a Comment