Thursday, May 8, 2014

ஸ்ரீ நாராயணீயம் - தசகம் 69

ஸ்ரீ நாராயணீயம் - தசகம் 69, ஸ்ரீ நாராயணீயம் 69வது தசகம், ஸ்ரீமந் நாராயணீயம், ஸ்ரீ நாராயணீயம், ஸ்ரீமத் நாராயணீயம், நாராயணீயம், ஸ்ரீமன் நாராயணீயம், Narayaneeyam, Sree Narayaneeyam, Sriman narayaneeyam,Srimad Narayaneeyam

த³ஶகம் -69
ராஸக்ரீடை

केशपाशधृतपिञ्छिकाविततिसञ्चलन्मकरकुण्डलं
हारजालवनमालिकाललितमङ्गरागघनसौरभम् ।
पीतचेलधृतकाञ्चिकाञ्चितमुदञ्चदंशुमणिनूपुरं
रासकेलिपरिभूषितं तव हि रूपमीश कलयामहे ॥१॥

கேஶபாஶத்₄ருதபிஞ்சி₂காவிததிஸஞ்சலந்மகரகுண்ட₃லம்
ஹாரஜாலவநமாலிகாலலிதமங்க₃ராக₃க₄நஸௌரப₄ம் |
பீதசேலத்₄ருதகாஞ்சிகாஞ்சிதமுத₃ஞ்சத₃ம்ஶுமணிநூபுரம்
ராஸகேலிபரிபூ₄ஷிதம் தவ ஹி ரூபமீஶ கலயாமஹே || 1||

1. தலையில் மயில் பீலியுடனும், காதுகளில் மீன் குண்டலங்களும், கழுத்தில் முத்து மாலைகளும், வனமாலையும் அசைய, பீதாம்பரமும், ஒட்டியாணமும், ரத்தினங்கள் இழைக்கப்பட்ட கொலுசுகளும் அணிந்து, வாசனைப் பொடிகள் முதலியவற்றால் மணம் வீசும் சரீரத்துடன், ராஸக்ரீடைக்காக அலங்கரிக்கப்பட்ட தங்கள் திருமேனியைத் தியானிக்கிறேன்.

तावदेव कृतमण्डने कलितकञ्चुलीककुचमण्डले
गण्डलोलमणिकुण्डले युवतिमण्डलेऽथ परिमण्डले ।
अन्तरा सकलसुन्दरीयुगलमिन्दिरारमण सञ्चरन्
मञ्जुलां तदनु रासकेलिमयि कञ्जनाभ समुपादधा: ॥२॥

தாவதே₃வ க்ருதமண்ட₃நே கலிதகஞ்சுலீககுசமண்ட₃லே
க₃ண்ட₃லோலமணிகுண்ட₃லே யுவதிமண்ட₃லே(அ)த₂ பரிமண்ட₃லே |
அந்தரா ஸகலஸுந்த₃ரீயுக₃லமிந்தி₃ராரமண ஸஞ்சரந்
மஞ்ஜுலாம் தத₃நு ராஸகேலிமயி கஞ்ஜநாப₄ ஸமுபாத₃தா₄: || 2||

2. அப்போதே, மார்புக்கச்சைகளை இறுக்கிக் கட்டிக்கொண்டு, தங்களை அணிகலன்களால் அலங்கரித்துக்கொண்டு கோபியர்கள் உம்மைச் சுற்றி வட்டமாய் நின்றார்கள். தாங்களும் அப்பெண்களுக்கிடையில், (இரு கோபிகைகளுக்கிடையில் ஒரு கிருஷ்ணன், இரு கிருஷ்ணனுக்கு இடையில் ஒரு கோபிகை) நின்று கொண்டு, நர்த்தனம் செய்துகொண்டு, ராஸக்ரீடையை ஆரம்பித்தீர்கள்.

वासुदेव तव भासमानमिह रासकेलिरससौरभं
दूरतोऽपि खलु नारदागदितमाकलय्य कुतुकाकुला ।
वेषभूषणविलासपेशलविलासिनीशतसमावृता
नाकतो युगपदागता वियति वेगतोऽथ सुरमण्डली ॥३॥

வாஸுதே₃வ தவ பா₄ஸமாநமிஹ ராஸகேலிரஸஸௌரப₄ம்
தூ₃ரதோ(அ)பி க₂லு நாரதா₃க₃தி₃தமாகலய்ய குதுகாகுலா |
வேஷபூ₄ஷணவிலாஸபேஶலவிலாஸிநீஶதஸமாவ்ருதா
நாகதோ யுக₃பதா₃க₃தா வியதி வேக₃தோ(அ)த₂ ஸுரமண்ட₃லீ || 3||

3. வசுதேவரின் புத்திரனே! நாரதர் தங்கள் ராஸக்ரீடையின் அழகைக் கூறினார். அதைக்கேட்டு சந்தோஷப்பட்ட தேவர்கள், அழகு, ஆபரணம் இவற்றால் சிறந்த தேவ மங்கையருடன், வேகமாய் வந்து ஆகாயத்தில் சூழ்ந்து நின்றனர்.

वेणुनादकृततानदानकलगानरागगतियोजना-
लोभनीयमृदुपादपातकृततालमेलनमनोहरम् ।
पाणिसंक्वणितकङ्कणं च मुहुरंसलम्बितकराम्बुजं
श्रोणिबिम्बचलदम्बरं भजत रासकेलिरसडम्बरम् ॥४॥

வேணுநாத₃க்ருததாநதா₃நகலகா₃நராக₃க₃தியோஜநா-
லோப₄நீயம்ருது₃பாத₃பாதக்ருததாலமேலநமநோஹரம் |
பாணிஸம்க்வணிதகங்கணம் ச முஹுரம்ஸலம்பி₃தகராம்பு₃ஜம்
ஶ்ரோணிபி₃ம்ப₃சலத₃ம்ப₃ரம் ப₄ஜத ராஸகேலிரஸட₃ம்ப₃ரம் || 4||

4. உமது புல்லாங்குழலிலிருந்து இனிய ஓசை உண்டானது. அழகிய ஸ்வரங்களுடன், சிறப்பான ராகங்களுடன், மனோகரமான ஆலாபனங்களுடன் இனிமையான இசை உண்டானது. இசைக்கு ஏற்றவாறு கால்கள் தாளமிட்டன. கைவளைகள் ஒலியெழுப்பின. இடுப்பிலுள்ள ஆடைகள் அசைய, தாமரை போன்ற கைகளைத் தோளில் வைத்துக் கொண்டிருக்கும் இந்த ராஸக்ரீடையின் காட்சியை மனதில் இருத்தி ஸேவியுங்கள். (என்று பட்டத்ரி கூறுகிறார்)

स्पर्धया विरचितानुगानकृततारतारमधुरस्वरे
नर्तनेऽथ ललिताङ्गहारलुलिताङ्गहारमणिभूषणे ।
सम्मदेन कृतपुष्पवर्षमलमुन्मिषद्दिविषदां कुलं
चिन्मये त्वयि निलीयमानमिव सम्मुमोह सवधूकुलम् ॥५॥

ஸ்பர்த₄யா விரசிதாநுகா₃நக்ருததாரதாரமது₄ரஸ்வரே
நர்தநே(அ)த₂ லலிதாங்க₃ஹாரலுலிதாங்க₃ஹாரமணிபூ₄ஷணே |
ஸம்மதே₃ந க்ருதபுஷ்பவர்ஷமலமுந்மிஷத்₃தி₃விஷதா₃ம் குலம்
சிந்மயே த்வயி நிலீயமாநமிவ ஸம்முமோஹ ஸவதூ₄குலம் || 5||

5. இனிமையான இசையை மேல் ஸ்தாயியில் பாடிக்கொண்டு, பின்னணிக் கொத்து என்ற நடனம் ஆரம்பித்தது. நடனத்தின் அசைவின்போது, அனைவரும் அணிந்திருந்த ஆபரணங்கள் இடம் மாறி நகர்ந்து மிக அழகாய் இருந்தது. தேவர்கள் பூமாரி பொழிந்து, மனம் மயங்கினர். தேவமங்கையரும் மனம் மயங்கினர்.

स्विन्नसन्नतनुवल्लरी तदनु कापि नाम पशुपाङ्गना
कान्तमंसमवलम्बते स्म तव तान्तिभारमुकुलेक्षणा ॥
काचिदाचलितकुन्तला नवपटीरसारघनसौरभं
वञ्चनेन तव सञ्चुचुम्ब भुजमञ्चितोरुपुलकाङ्कुरा ॥६॥

ஸ்விந்நஸந்நதநுவல்லரீ தத₃நு காபி நாம பஶுபாங்க₃நா
காந்தமம்ஸமவலம்ப₃தே ஸ்ம தவ தாந்திபா₄ரமுகுலேக்ஷணா ||
காசிதா₃சலிதகுந்தலா நவபடீரஸாரக₄நஸௌரப₄ம்
வஞ்சநேந தவ ஸஞ்சுசும்ப₃ பு₄ஜமஞ்சிதோருபுலகாங்குரா || 6||

6. வியர்த்துக் களைத்த அழகான கோபிகை ஒருத்தி, சோர்வுடன் நடனம் செய்ய முடியாமல், உமது தோளைப் பிடித்துக் கொண்டு தொங்கினாள். முன் நெற்றிக்குழல்கள் கலைந்த ஒரு கோபிகை மயிர்க்கூச்சலுடன், சந்தன மணம் வீசும் தங்கள் கைகளை முத்தமிட்டாள்.

कापि गण्डभुवि सन्निधाय निजगण्डमाकुलितकुण्डलं
पुण्यपूरनिधिरन्ववाप तव पूगचर्वितरसामृतम् ।
इन्दिराविहृतिमन्दिरं भुवनसुन्दरं हि नटनान्तरे
त्वामवाप्य दधुरङ्गना: किमु न सम्मदोन्मददशान्तरम् ॥७॥

காபி க₃ண்ட₃பு₄வி ஸந்நிதா₄ய நிஜக₃ண்ட₃மாகுலிதகுண்ட₃லம்
புண்யபூரநிதி₄ரந்வவாப தவ பூக₃சர்விதரஸாம்ருதம் |
இந்தி₃ராவிஹ்ருதிமந்தி₃ரம் பு₄வநஸுந்த₃ரம் ஹி நடநாந்தரே
த்வாமவாப்ய த₃து₄ரங்க₃நா: கிமு ந ஸம்மதோ₃ந்மத₃த₃ஶாந்தரம் || 7||

7. அதிர்ஷ்டசாலியான ஒரு கோபிகை, குண்டலங்கள் ஆடும் தன்னுடைய கன்னத்தை, உம்முடைய கன்னங்களுடன் இணைத்து, உமது வாயிலிருந்து தாம்பூலத்தைப் பெற்று, அதை உறிந்து சுவைத்தாள். உலகிலேயே அழகானவனும், மகாலக்ஷ்மி விளையாடும் மார்பை உடையவனுமான தங்களை அடைந்த அப்பெண்கள், நர்த்தனத்தின் போது, பல வித சுகமான நிலைகளை அடைந்தார்கள்.

गानमीश विरतं क्रमेण किल वाद्यमेलनमुपारतं
ब्रह्मसम्मदरसाकुला: सदसि केवलं ननृतुरङ्गना: ।
नाविदन्नपि च नीविकां किमपि कुन्तलीमपि च कञ्चुलीं
ज्योतिषामपि कदम्बकं दिवि विलम्बितं किमपरं ब्रुवे ॥८॥

கா₃நமீஶ விரதம் க்ரமேண கில வாத்₃யமேலநமுபாரதம்
ப்₃ரஹ்மஸம்மத₃ரஸாகுலா: ஸத₃ஸி கேவலம் நந்ருதுரங்க₃நா: |
நாவித₃ந்நபி ச நீவிகாம் கிமபி குந்தலீமபி ச கஞ்சுலீம்
ஜ்யோதிஷாமபி கத₃ம்ப₃கம் தி₃வி விலம்பி₃தம் கிமபரம் ப்₃ருவே || 8||

8. பாட்டு நின்றது. வாத்தியங்களும் ஓய்ந்தன. பிரும்மானந்த ரஸத்தில் மூழ்கிய கோபிகைகள் மட்டும் ஆடிக்கொண்டிருந்தனர். அவர்கள், மேலாடை கலைந்ததையோ, ரவிக்கை அவிழ்வதையோ, கச்சத்தின் முடிச்சு அவிழ்வதையோ அறியவில்லை. வானில் நட்சத்திரக் கூட்டமும் நின்று விட்டன. என்ன சொல்வேன்?!

मोदसीम्नि भुवनं विलाप्य विहृतिं समाप्य च ततो विभो
केलिसम्मृदितनिर्मलाङ्गनवघर्मलेशसुभगात्मनाम् ।
मन्मथासहनचेतसां पशुपयोषितां सुकृतचोदित-
स्तावदाकलितमूर्तिरादधिथ मारवीरपरमोत्सवान् ॥९॥

மோத₃ஸீம்நி பு₄வநம் விலாப்ய விஹ்ருதிம் ஸமாப்ய ச ததோ விபோ₄
கேலிஸம்ம்ருதி₃தநிர்மலாங்க₃நவக₄ர்மலேஶஸுப₄கா₃த்மநாம் |
மந்மதா₂ஸஹநசேதஸாம் பஶுபயோஷிதாம் ஸுக்ருதசோதி₃த-
ஸ்தாவதா₃கலிதமூர்திராத₃தி₄த₂ மாரவீரபரமோத்ஸவாந் || 9||

9. அகில உலகங்களையும் பிரும்மானந்த ரஸத்தில் மூழ்கச் செய்து, விளையாட்டையும் முடித்தீர்கள். நடனமாடியதால் உண்டான வியர்வைத் துளிகளுடன் கோபிகைகள் மனம் மயங்கினர். அங்கு, எத்தனை கோபிகைகள் இருந்தார்களோ அத்தனை கிருஷ்ணனாக வந்து அவர்களைக் களிக்கச் செய்தீர்கள்.

केलिभेदपरिलोलिताभिरतिलालिताभिरबलालिभि:
स्वैरमीश ननु सूरजापयसि चारुनाम विहृतिं व्यधा: ।
काननेऽपि च विसारिशीतलकिशोरमारुतमनोहरे
सूनसौरभमये विलेसिथ विलासिनीशतविमोहनम् ॥१०॥

கேலிபே₄த₃பரிலோலிதாபி₄ரதிலாலிதாபி₄ரப₃லாலிபி₄:
ஸ்வைரமீஶ நநு ஸூரஜாபயஸி சாருநாம விஹ்ருதிம் வ்யதா₄: |
காநநே(அ)பி ச விஸாரிஶீதலகிஶோரமாருதமநோஹரே
ஸூநஸௌரப₄மயே விலேஸித₂ விலாஸிநீஶதவிமோஹநம் || 10||

10. மிகவும் அழகான சரீரமுள்ளவர்களும், சோர்வை அடைந்தவர்களுமான அப்பெண்களோடு தாங்கள் விளையாடினீர்கள். அக்காட்டில், மந்தமாருதம் வீசும் போது வந்த பூக்களின் வாசனையால் அப்பெண்களை மயக்கினீர்கள்.

कामिनीरिति हि यामिनीषु खलु कामनीयकनिधे भवान्
पूर्णसम्मदरसार्णवं कमपि योगिगम्यमनुभावयन् ।
ब्रह्मशङ्करमुखानपीह पशुपाङ्गनासु बहुमानयन्
भक्तलोकगमनीयरूप कमनीय कृष्ण परिपाहि माम् ॥११॥

காமிநீரிதி ஹி யாமிநீஷு க₂லு காமநீயகநிதே₄ ப₄வாந்
பூர்ணஸம்மத₃ரஸார்ணவம் கமபி யோகி₃க₃ம்யமநுபா₄வயந் |
ப்₃ரஹ்மஶங்கரமுகா₂நபீஹ பஶுபாங்க₃நாஸு ப₃ஹுமாநயந்
ப₄க்தலோகக₃மநீயரூப கமநீய க்ருஷ்ண பரிபாஹி மாம் || 11||

11. யோகிகள் மட்டுமே அடையக்கூடிய பரமானந்த வெள்ளத்தில் அப்பெண்களை மூழ்கச் செய்தீர்கள். பிரும்மா, பரமசிவன், மற்ற தேவர்கள் யாவரும் கோபிகைகளை வெகுமதிக்கும்படி செய்தீர்கள். பக்தர்கள் மட்டுமே அடையக்கூடிய அழகான கிருஷ்ணா! நோயிலிருந்து என்னைக் காக்க வேண்டும்.

No comments:

Post a Comment