Tuesday, May 6, 2014

ஸ்ரீ நாராயணீயம் - தசகம் 67

ஸ்ரீ நாராயணீயம் - தசகம் 67, ஸ்ரீ நாராயணீயம் 67வது தசகம், ஸ்ரீமந் நாராயணீயம், ஸ்ரீ நாராயணீயம், ஸ்ரீமத் நாராயணீயம், நாராயணீயம், ஸ்ரீமன் நாராயணீயம், Narayaneeyam, Sree Narayaneeyam, Sriman narayaneeyam,Srimad Narayaneeyam

த³ஶகம் -67
கோபியரின் கர்வபங்கம்

स्फुरत्परानन्दरसात्मकेन त्वया समासादितभोगलीला: ।
असीममानन्दभरं प्रपन्ना महान्तमापुर्मदमम्बुजाक्ष्य: ॥१॥

ஸ்பு₂ரத்பராநந்த₃ரஸாத்மகேந த்வயா ஸமாஸாதி₃தபோ₄க₃லீலா: |
அஸீமமாநந்த₃ப₄ரம் ப்ரபந்நா மஹாந்தமாபுர்மத₃மம்பு₃ஜாக்ஷ்ய: || 1||

1. பரமானந்த ரூபியான தங்களுடன் காதல் லீலைகளில் மூழ்கியிருந்த கோபியர்கள், அளவற்ற ஆனந்தம் அடைந்ததால், மிகுந்த கர்வம் கொண்டார்கள்.

निलीयतेऽसौ मयि मय्यमायं रमापतिर्विश्वमनोभिराम: ।
इति स्म सर्वा: कलिताभिमाना निरीक्ष्य गोविन्द् तिरोहितोऽभू: ॥२॥

நிலீயதே(அ)ஸௌ மயி மய்யமாயம் ரமாபதிர்விஶ்வமநோபி₄ராம: |
இதி ஸ்ம ஸர்வா: கலிதாபி₄மாநா நிரீக்ஷ்ய கோ₃விந்த்₃ திரோஹிதோ(அ)பூ₄: || 2||

2. உலகிலேயே அழகனான கண்ணன், என்னிடத்தில் மட்டும் அன்பு கொண்டிருக்கிறான் என்று ஒவ்வொரு கோபியரும் நினைத்தார்கள். அதனால் மிகுந்த கர்வம் கொண்டவர்களா ஆனார்கள். அதையறிந்த கோவிந்தனான தாங்கள், அந்த நொடியிலேயே மறைந்து போனீர்கள். 

राधाभिधां तावदजातगर्वामतिप्रियां गोपवधूं मुरारे ।
भवानुपादाय गतो विदूरं तया सह स्वैरविहारकारी ॥३॥

ராதா₄பி₄தா₄ம் தாவத₃ஜாதக₃ர்வாமதிப்ரியாம் கோ₃பவதூ₄ம் முராரே |
ப₄வாநுபாதா₃ய க₃தோ விதூ₃ரம் தயா ஸஹ ஸ்வைரவிஹாரகாரீ || 3||

3. ராதையென்ற கோபிகை மட்டும் கர்வமில்லாமல், தங்களிடம் மிகுந்த அன்பு கொண்டாள். அவளை அழைத்துக்கொண்டு வெகுதூரம் சென்று, அவளுடன் விளையாடினீர்.

तिरोहितेऽथ त्वयि जाततापा: समं समेता: कमलायताक्ष्य: ।
वने वने त्वां परिमार्गयन्त्यो विषादमापुर्भगवन्नपारम् ॥४॥

திரோஹிதே(அ)த₂ த்வயி ஜாததாபா: ஸமம் ஸமேதா: கமலாயதாக்ஷ்ய: |
வநே வநே த்வாம் பரிமார்க₃யந்த்யோ விஷாத₃மாபுர்ப₄க₃வந்நபாரம் || 4||

4. தாங்கள் மறைந்ததால், கோபியர் மிகுந்த துயரம் அடைந்தனர். அனைவரும் ஒன்றுகூடி கானகம் முழுவதும் தங்களைத் தேடினார்கள். தாங்கள் கிடைக்காததால் வருத்தம் அடைந்தனர்.

हा चूत हा चम्पक कर्णिकार हा मल्लिके मालति बालवल्य: ।
किं वीक्षितो नो हृदयैकचोर: इत्यादि तास्त्वत्प्रवणा विलेपु: ॥५॥

ஹா சூத ஹா சம்பக கர்ணிகார ஹா மல்லிகே மாலதி பா₃லவல்ய: |
கிம் வீக்ஷிதோ நோ ஹ்ருத₃யைகசோர: இத்யாதி₃ தாஸ்த்வத்ப்ரவணா விலேபு: || 5||

5. மாமரமே, சம்பகமரமே, கர்ணிகார மரமே, மல்லிகைக் கொடியே, மாலதியே! எங்கள் கண்ணனைக் கண்டீர்களா? என்று மரங்களையும், கொடிகளையும் கேட்டு, கவலையுடன் புலம்பினார்கள்.

निरीक्षितोऽयं सखि पङ्कजाक्ष: पुरो ममेत्याकुलमालपन्ती ।
त्वां भावनाचक्षुषि वीक्ष्य काचित्तापं सखीनां द्विगुणीचकार ॥६॥

நிரீக்ஷிதோ(அ)யம் ஸகி₂ பங்கஜாக்ஷ: புரோ மமேத்யாகுலமாலபந்தீ |
த்வாம் பா₄வநாசக்ஷுஷி வீக்ஷ்ய காசித்தாபம் ஸகீ₂நாம் த்₃விகு₃ணீசகார || 6||

6. கோபிகை ஒருத்தி, கற்பனையில் தங்களைக் கண்டு, மற்ற கோபியரிடம், கண்ணனை என் எதிரில் பார்த்தேன் என்று கூறினாள். அதைக் கேட்ட மற்றவர்களுடைய துன்பம் அதிகரித்தது.

त्वदात्मिकास्ता यमुनातटान्ते तवानुचक्रु: किल चेष्टितानि ।
विचित्य भूयोऽपि तथैव मानात्त्वया विमुक्तां ददृशुश्च राधाम् ॥७॥

த்வதா₃த்மிகாஸ்தா யமுநாதடாந்தே தவாநுசக்ரு: கில சேஷ்டிதாநி |
விசித்ய பூ₄யோ(அ)பி ததை₂வ மாநாத்த்வயா விமுக்தாம் த₃த்₃ருஶுஶ்ச ராதா₄ம் || 7||

7. அவர்கள் எல்லாரும் தங்களையே எப்போதும் நினைத்து, தங்கள் செய்கைகளைப் பற்றியே பேசி வந்தார்கள். அப்போது, ராதையைத் தனியே  கண்டனர். அவளும் கர்வம் கொண்டதால், அவளையும் விட்டு மாயமாய் மறைந்தீர்கள்.

तत: समं ता विपिने समन्तात्तमोवतारावधि मार्गयन्त्य: ।
पुनर्विमिश्रा यमुनातटान्ते भृशं विलेपुश्च जगुर्गुणांस्ते ॥८॥

தத: ஸமம் தா விபிநே ஸமந்தாத்தமோவதாராவதி₄ மார்க₃யந்த்ய: |
புநர்விமிஶ்ரா யமுநாதடாந்தே ப்₄ருஶம் விலேபுஶ்ச ஜகு₃ர்கு₃ணாம்ஸ்தே || 8||

8. அனைவரும், ராதையுடன் கூட, இருட்டும்வரை கானகத்தில் தேடினார்கள். மனம் கலங்கி மீண்டும் யமுனைக் கரைக்கு வந்து புலம்பினார்கள். தங்களுடைய கல்யாண குணங்களைப் பாடினார்கள்.

तथा व्यथासङ्कुलमानसानां व्रजाङ्गनानां करुणैकसिन्धो ।
जगत्त्रयीमोहनमोहनात्मा त्वं प्रादुरासीरयि मन्दहासी ॥९॥

ததா₂ வ்யதா₂ஸங்குலமாநஸாநாம் வ்ரஜாங்க₃நாநாம் கருணைகஸிந்தோ₄ |
ஜக₃த்த்ரயீமோஹநமோஹநாத்மா த்வம் ப்ராது₃ராஸீரயி மந்த₃ஹாஸீ || 9||

9. கருணைக் கடலே! துன்பமடைந்த மனத்தையுடைய கோபியரின் முன், மன்மதனையும் மயங்கச் செய்யும் அழகுடன், மூவுலகங்களையும் மயக்கும் புன்சிரிப்புடன், தாங்கள் தோன்றினீர்கள்.

सन्दिग्धसन्दर्शनमात्मकान्तं त्वां वीक्ष्य तन्व्य: सहसा तदानीम् ।
किं किं न चक्रु: प्रमदातिभारात् स त्वं गदात् पालय मारुतेश ॥१०॥

ஸந்தி₃க்₃த₄ஸந்த₃ர்ஶநமாத்மகாந்தம் த்வாம் வீக்ஷ்ய தந்வ்ய: ஸஹஸா ததா₃நீம் |
கிம் கிம் ந சக்ரு: ப்ரமதா₃திபா₄ராத் ஸ த்வம் க₃தா₃த் பாலய மாருதேஶ || 10||

10. தங்களை நேரில் கண்ட அப்பெண்கள், மகிழ்ச்சியை விதவிதமாக வெளிப்படுத்தினார்கள். குருவாயூரப்பா! நோயிலிருந்து எங்களைக் காப்பாற்ற வேண்டும்.

No comments:

Post a Comment