த³ஶகம் -65
கிருஷ்ணனுடன் கோபியரின் நெருங்கிய தொடர்பு
गोपीजनाय कथितं नियमावसाने
मारोत्सवं त्वमथ साधयितुं प्रवृत्त: ।
सान्द्रेण चान्द्रमहसा शिशिरीकृताशे
प्रापूरयो मुरलिकां यमुनावनान्ते ॥१॥
கோ₃பீஜநாய கதி₂தம் நியமாவஸாநே
மாரோத்ஸவம் த்வமத₂ ஸாத₄யிதும் ப்ரவ்ருத்த: |
ஸாந்த்₃ரேண சாந்த்₃ரமஹஸா ஶிஶிரீக்ருதாஶே
ப்ராபூரயோ முரலிகாம் யமுநாவநாந்தே || 1||
1. காத்யாயனீ பூஜையின் முடிவில், தாங்கள் முன்பே கோபியரிடம் கூறியபடி, நிலவொளியில், யமுனைக்கரையில் குழலூதினீர்கள்.
सम्मूर्छनाभिरुदितस्वरमण्डलाभि:
सम्मूर्छयन्तमखिलं भुवनान्तरालम् ।
त्वद्वेणुनादमुपकर्ण्य विभो तरुण्य-
स्तत्तादृशं कमपि चित्तविमोहमापु: ॥२॥
ஸம்மூர்ச₂நாபி₄ருதி₃தஸ்வரமண்ட₃லாபி₄:
ஸம்மூர்ச₂யந்தமகி₂லம் பு₄வநாந்தராலம் |
த்வத்₃வேணுநாத₃முபகர்ண்ய விபோ₄ தருண்ய-
ஸ்தத்தாத்₃ருஶம் கமபி சித்தவிமோஹமாபு: || 2||
2. தங்கள் புல்லாங்குழலில் இருந்து கிளம்பிய ஏழு ஸ்வரங்களால் உண்டான நாதம், உலகம் முழுவதையும் மயங்கச் செய்தது. அதைக் கேட்ட கோபியர்களும் சொல்லமுடியாத மதிமயக்கம் கொண்டனர்.
ता गेहकृत्यनिरतास्तनयप्रसक्ता:
कान्तोपसेवनपराश्च सरोरुहाक्ष्य: ।
सर्वं विसृज्य मुरलीरवमोहितास्ते
कान्तारदेशमयि कान्ततनो समेता: ॥३॥
தா கே₃ஹக்ருத்யநிரதாஸ்தநயப்ரஸக்தா:
காந்தோபஸேவநபராஶ்ச ஸரோருஹாக்ஷ்ய: |
ஸர்வம் விஸ்ருஜ்ய முரலீரவமோஹிதாஸ்தே
காந்தாரதே₃ஶமயி காந்ததநோ ஸமேதா: || 3||
3. வீட்டு வேலையில் ஈடுபட்டுக் கொண்டும், குழந்தைகளை கவனித்துக் கொண்டும், கணவனுக்குப் பணிவிடை செய்து கொண்டும் இருந்த கோபியர்கள், தங்கள் குழலோசையைக் கேட்டதும், மனம் மயங்கி, எல்லாவற்றையும் விட்டுவிட்டு உம்மைத் தேடி ஓடி வந்தார்கள்.
काश्चिन्निजाङ्गपरिभूषणमादधाना
वेणुप्रणादमुपकर्ण्य कृतार्धभूषा: ।
त्वामागता ननु तथैव विभूषिताभ्य-
स्ता एव संरुरुचिरे तव लोचनाय ॥४॥
காஶ்சிந்நிஜாங்க₃பரிபூ₄ஷணமாத₃தா₄நா
வேணுப்ரணாத₃முபகர்ண்ய க்ருதார்த₄பூ₄ஷா: |
த்வாமாக₃தா நநு ததை₂வ விபூ₄ஷிதாப்₄ய-
ஸ்தா ஏவ ஸம்ருருசிரே தவ லோசநாய || 4||
4. சில கோபியர்கள் பாதி நகைகளைப் போட்டுக் கொண்டும், பாதி அலங்கரித்துக் கொண்டும் ஓடி வந்தார்கள். நன்கு அலங்கரித்துக் கொண்டவர்களைவிட, பாதி அலங்கரித்துக்கொண்டவர்களே தங்களுக்கு மிக அழகாகத் தெரிந்தனர்.
हारं नितम्बभुवि काचन धारयन्ती
काञ्चीं च कण्ठभुवि देव समागता त्वाम् ।
हारित्वमात्मजघनस्य मुकुन्द तुभ्यं
व्यक्तं बभाष इव मुग्धमुखी विशेषात् ॥५॥
ஹாரம் நிதம்ப₃பு₄வி காசந தா₄ரயந்தீ
காஞ்சீம் ச கண்ட₂பு₄வி தே₃வ ஸமாக₃தா த்வாம் |
ஹாரித்வமாத்மஜக₄நஸ்ய முகுந்த₃ துப்₄யம்
வ்யக்தம் ப₃பா₄ஷ இவ முக்₃த₄முகீ₂ விஶேஷாத் || 5||
5. ஒரு பெண் தன் கழுத்தில் ஒட்டியாணத்தையும், இடுப்பில் ஹாரத்தையும் மாற்றி அணிந்துகொண்டு வந்தாள். அவள் தங்களோடு பேசியது, மனதை மயக்கும் தன் இடையழகைக் கூறுவது போலத் தோன்றியது.
काचित् कुचे पुनरसज्जितकञ्चुलीका
व्यामोहत: परवधूभिरलक्ष्यमाणा ।
त्वामाययौ निरुपमप्रणयातिभार-
राज्याभिषेकविधये कलशीधरेव ॥६॥
காசித் குசே புநரஸஜ்ஜிதகஞ்சுலீகா
வ்யாமோஹத: பரவதூ₄பி₄ரலக்ஷ்யமாணா |
த்வாமாயயௌ நிருபமப்ரணயாதிபா₄ர-
ராஜ்யாபி₄ஷேகவித₄யே கலஶீத₄ரேவ || 6||
6. மற்றொரு பெண், அதிக அன்பினால், ரவிக்கை அணிய மறந்து, மற்றவர்களுக்குத் தெரியாமல் ஓடி வந்தாள். அவள் ஓடி வந்தது, தங்களுக்கு அன்பாகிற பாரத்தை அபிஷேகம் செய்ய இரு குடங்களை எடுத்து வந்தது போலத் தோன்றியது.
काश्चित् गृहात् किल निरेतुमपारयन्त्य-
स्त्वामेव देव हृदये सुदृढं विभाव्य ।
देहं विधूय परचित्सुखरूपमेकं
त्वामाविशन् परमिमा ननु धन्यधन्या: ॥७॥
காஶ்சித் க்₃ருஹாத் கில நிரேதுமபாரயந்த்ய-
ஸ்த்வாமேவ தே₃வ ஹ்ருத₃யே ஸுத்₃ருட₄ம் விபா₄வ்ய |
தே₃ஹம் விதூ₄ய பரசித்ஸுக₂ரூபமேகம்
த்வாமாவிஶந் பரமிமா நநு த₄ந்யத₄ந்யா: || 7||
7. கணவர்களாலும் வீட்டிலுள்ளவர்களாலும் தடுக்கப்பட்ட சில பெண்கள், தங்களை மனதால் தியானம் செய்தார்கள். அவர்கள் உடலைவிட்டு ஆனந்த வடிவமான உம்மை அடைந்தனர். அவர்கள் மிகவும் புண்ணியம் செய்தவர்கள் ஆனார்கள்.
जारात्मना न परमात्मतया स्मरन्त्यो
नार्यो गता: परमहंसगतिं क्षणेन ।
तं त्वां प्रकाशपरमात्मतनुं कथञ्चि-
च्चित्ते वहन्नमृतमश्रममश्नुवीय ॥८॥
ஜாராத்மநா ந பரமாத்மதயா ஸ்மரந்த்யோ
நார்யோ க₃தா: பரமஹம்ஸக₃திம் க்ஷணேந |
தம் த்வாம் ப்ரகாஶபரமாத்மதநும் கத₂ஞ்சி-
ச்சித்தே வஹந்நம்ருதமஶ்ரமமஶ்நுவீய || 8||
8. அந்தப் பெண்கள் எவரும் தங்களைப் பரமாத்மா என நினைத்து வரவில்லை. காதலனாகவே நினைத்து வந்தனர். ஆயினும் நொடியில் துறவிகள் அடையக்கூடிய முக்தியை அடைந்தனர். நானும் அதுபோல, பரமாத்ம ஸ்வரூபமான தங்களை, மனதில் தியானம் செய்து மோக்ஷத்தை அடைவேனா?
अभ्यागताभिरभितो व्रजसुन्दरीभि-
र्मुग्धस्मितार्द्रवदन: करुणावलोकी ।
निस्सीमकान्तिजलधिस्त्वमवेक्ष्यमाणो
विश्वैकहृद्य हर मे पवनेश रोगान् ॥९॥
அப்₄யாக₃தாபி₄ரபி₄தோ வ்ரஜஸுந்த₃ரீபி₄-
ர்முக்₃த₄ஸ்மிதார்த்₃ரவத₃ந: கருணாவலோகீ |
நிஸ்ஸீமகாந்திஜலதி₄ஸ்த்வமவேக்ஷ்யமாணோ
விஶ்வைகஹ்ருத்₃ய ஹர மே பவநேஶ ரோகா₃ந் || 9||
9. கருணையான பார்வையாலும், புன்சிரிப்பினாலும் அழகாய் விளங்குகின்ற தங்களைக் கோபியர்கள் பார்த்துக் கொண்டிருந்தார்கள். உலகத்தோரின் மனதைக் கவரும் தாங்கள், கொடுமை செய்யும் என் வியாதியைப் போக்கி அருள் புரிய வேண்டும்.
No comments:
Post a Comment