த³ஶகம் -77
உபஶ்லோக உற்பத்தி, ஜராஸந்த யுத்தம்
सैरन्ध्र्यास्तदनु चिरं स्मरातुराया
यातोऽभू: सुललितमुद्धवेन सार्धम् ।
आवासं त्वदुपगमोत्सवं सदैव
ध्यायन्त्या: प्रतिदिनवाससज्जिकाया: ॥१॥
ஸைரந்த்₄ர்யாஸ்தத₃நு சிரம் ஸ்மராதுராயா
யாதோ(அ)பூ₄: ஸுலலிதமுத்₃த₄வேந ஸார்த₄ம் |
ஆவாஸம் த்வது₃பக₃மோத்ஸவம் ஸதை₃வ
த்₄யாயந்த்யா: ப்ரதிதி₃நவாஸஸஜ்ஜிகாயா: || 1||
1. ஸைரந்திரி உம்மைப் பற்றியே நினைத்துக்கொண்டு, ஒவ்வொரு நாளும் தங்கள் வருகையை எதிர்பார்த்துக் காத்திருந்தாள். தன் இல்லத்தையும், தன்னையும் நன்கு அலங்கரித்துக் கொண்டு காத்திருந்தாள். தாங்கள் உத்தவருடன் அவளது இல்லத்திற்குச் சென்றீர்.
उपगते त्वयि पूर्णमनोरथां प्रमदसम्भ्रमकम्प्रपयोधराम् ।
विविधमाननमादधतीं मुदा रहसि तां रमयाञ्चकृषे सुखम् ॥२॥
உபக₃தே த்வயி பூர்ணமநோரதா₂ம் ப்ரமத₃ஸம்ப்₄ரமகம்ப்ரபயோத₄ராம் |
விவித₄மாநநமாத₃த₄தீம் முதா₃ ரஹஸி தாம் ரமயாஞ்சக்ருஷே ஸுக₂ம் || 2||
2. தாங்கள் வந்ததால் அவளது நீண்டநாள் எண்ணம் நிறைவேறியது. அதனால் மிகவும் மகிழ்ச்சியடைந்த அவள், பூரித்து அசையும் ஸ்தனங்களுடன், தங்களைப் பலவிதமாகப் பூஜித்தாள். தனிமையில் அவளை ஆனந்திக்கச் செய்தீர்கள்.
पृष्टा वरं पुनरसाववृणोद्वराकी
भूयस्त्वया सुरतमेव निशान्तरेषु ।
सायुज्यमस्त्विति वदेत् बुध एव कामं
सामीप्यमस्त्वनिशमित्यपि नाब्रवीत् किम् ॥३॥
ப்ருஷ்டா வரம் புநரஸாவவ்ருணோத்₃வராகீ
பூ₄யஸ்த்வயா ஸுரதமேவ நிஶாந்தரேஷு |
ஸாயுஜ்யமஸ்த்விதி வதே₃த் பு₃த₄ ஏவ காமம்
ஸாமீப்யமஸ்த்வநிஶமித்யபி நாப்₃ரவீத் கிம் || 3||
3. தாங்கள் அவளிடம் வேண்டிய வரம் கேள் என்று கூறினீர்கள். அவளும், பல இரவுகள் உம்மோடு கழிக்கும் விஷய சுகத்தையே வரமாக வேண்டினாள். ஞானம் உடையவளாய் இருந்தால் மோக்ஷத்தைக் கேட்டிருப்பாள். எப்போதும் தங்கள் அருகிலேயே இருக்கும் வரத்தைக் கூட அவள் கேட்கவில்லை. அனைத்தும் நீர் சங்கல்பித்தபடி தானே நடக்கும்?!
ततो भवान् देव निशासु कासुचिन्मृगीदृशं तां निभृतं विनोदयन् ।
अदादुपश्लोक इति श्रुतं सुतं स नारदात् सात्त्वततन्त्रविद्बबभौ ॥४॥
ததோ ப₄வாந் தே₃வ நிஶாஸு காஸுசிந்ம்ருகீ₃த்₃ருஶம் தாம் நிப்₄ருதம் விநோத₃யந் |
அதா₃து₃பஶ்லோக இதி ஶ்ருதம் ஸுதம் ஸ நாரதா₃த் ஸாத்த்வததந்த்ரவித்₃ப₃ப₃பௌ₄ || 4||
4. பிறகு, சில இரவுகள் அவளுடன் தங்கி அவளுக்கு ஆனந்தத்தை அளித்தீர்கள். அவளுக்கு உபஶ்லோகன் என்ற புத்திரனையும் அளித்தீர்கள். அவன் நாரத முனிவரிடம் இருந்து பாஞ்சராத்ர ஆகமத்தை உபதேசம் பெற்று அதில் பிரசித்தனாக விளங்கினான்.
अक्रूरमन्दिरमितोऽथ बलोद्धवाभ्या-
मभ्यर्चितो बहु नुतो मुदितेन तेन ।
एनं विसृज्य विपिनागतपाण्डवेय-
वृत्तं विवेदिथ तथा धृतराष्ट्र्चेष्टाम् ॥५॥
அக்ரூரமந்தி₃ரமிதோ(அ)த₂ ப₃லோத்₃த₄வாப்₄யா-
மப்₄யர்சிதோ ப₃ஹு நுதோ முதி₃தேந தேந |
ஏநம் விஸ்ருஜ்ய விபிநாக₃தபாண்ட₃வேய-
வ்ருத்தம் விவேதி₃த₂ ததா₂ த்₄ருதராஷ்ட்ர்சேஷ்டாம் || 5||
5. பின்னர், தாங்கள் பலராமருடனும், உத்தவரோடும் அக்ரூரரின் வீட்டை அடைந்தீர்கள். தங்கள் வரவால் மிகவும் மகிழ்ந்த அக்ரூரர், தங்கள் அனைவரையும் நன்கு வரவேற்று உபசரித்து, பூஜித்துத் துதித்தார். அவரை நகரத்திற்கு அனுப்பி, குந்தியின் புத்திரர்களான பாண்டவர்கள் காட்டிலிருந்து நகருக்குத் திரும்பி வந்ததைப் பற்றியும், திருதராஷ்ட்ரனின் கெட்ட செயல்களைப் பற்றியும் அறிந்தீர்கள்.
विघाताज्जामातु: परमसुहृदो भोजनृपते-
र्जरासन्धे रुन्धत्यनवधिरुषान्धेऽथ मथुराम् ।
रथाद्यैर्द्योर्लब्धै: कतिपयबलस्त्वं बलयुत-
स्त्रयोविंशत्यक्षौहिणि तदुपनीतं समहृथा: ॥६॥
விகா₄தாஜ்ஜாமாது: பரமஸுஹ்ருதோ₃ போ₄ஜந்ருபதே-
ர்ஜராஸந்தே₄ ருந்த₄த்யநவதி₄ருஷாந்தே₄(அ)த₂ மது₂ராம் |
ரதா₂த்₃யைர்த்₃யோர்லப்₃தை₄: கதிபயப₃லஸ்த்வம் ப₃லயுத-
ஸ்த்ரயோவிம்ஶத்யக்ஷௌஹிணி தது₃பநீதம் ஸமஹ்ருதா₂: || 6||
6. ஜராஸந்தன் என்பவன், தன் நண்பனும், மாப்பிள்ளையுமான கம்ஸனின் வதம் பற்றிக் கேள்விப்பட்டு, மிகுந்த கோபம் கொண்டு, மதுராநகரத்தை அழித்தான். சிறிய படையையுடைய தாங்கள், தேவலோகத்திலிருந்து பலராமனுக்குக் கிடைத்த தேர் முதலியவற்றால், அவனது இருபத்திமூன்று அக்ஷௌஹிணிப் படைகளை முறியடித்தீர்கள்.
बद्धं बलादथ बलेन बलोत्तरं त्वं
भूयो बलोद्यमरसेन मुमोचिथैनम् ।
निश्शेषदिग्जयसमाहृतविश्वसैन्यात्
कोऽन्यस्ततो हि बलपौरुषवांस्तदानीम् ॥७॥
ப₃த்₃த₄ம் ப₃லாத₃த₂ ப₃லேந ப₃லோத்தரம் த்வம்
பூ₄யோ ப₃லோத்₃யமரஸேந முமோசிதை₂நம் |
நிஶ்ஶேஷதி₃க்₃ஜயஸமாஹ்ருதவிஶ்வஸைந்யாத்
கோ(அ)ந்யஸ்ததோ ஹி ப₃லபௌருஷவாம்ஸ்ததா₃நீம் || 7||
7. பலராமன் ஜராஸந்தனைக் கட்டி வைத்தார். அவனோடு யுத்தம் செய்ய ஆசைகொண்டு அவனை விடுவித்தீர். ஏனெனில், அனைத்து அரசர்களையும் வென்று, அவர்களது சேனைகளையும் அடைந்த ஜராஸந்தனைப் போன்ற வீரன் அப்போது யாரும் இல்லை.
भग्न: स लग्नहृदयोऽपि नृपै: प्रणुन्नो
युद्धं त्वया व्यधित षोडशकृत्व एवम् ।
अक्षौहिणी: शिव शिवास्य जघन्थ विष्णो
सम्भूय सैकनवतित्रिशतं तदानीम् ॥८॥
ப₄க்₃ந: ஸ லக்₃நஹ்ருத₃யோ(அ)பி ந்ருபை: ப்ரணுந்நோ
யுத்₃த₄ம் த்வயா வ்யதி₄த ஷோட₃ஶக்ருத்வ ஏவம் |
அக்ஷௌஹிணீ: ஶிவ ஶிவாஸ்ய ஜக₄ந்த₂ விஷ்ணோ
ஸம்பூ₄ய ஸைகநவதித்ரிஶதம் ததா₃நீம் || 8||
8. தோல்வியடைந்த ஜராஸந்தன், மற்ற அரசர்களின் உதவியுடன் பதினாறு முறை உம்மோடு யுத்தம் செய்தான். விஷ்ணுவே! அவனது முன்னூற்று தொண்ணூற்று ஒன்று அக்ஷௌஹிணிப் படைகளை அடித்துக் கொன்றீர்கள். என்னே உன் மகிமை!
अष्टादशेऽस्य समरे समुपेयुषि त्वं
दृष्ट्वा पुरोऽथ यवनं यवनत्रिकोट्या ।
त्वष्ट्रा विधाप्य पुरमाशु पयोधिमध्ये
तत्राऽथ योगबलत: स्वजनाननैषी: ॥९॥
அஷ்டாத₃ஶே(அ)ஸ்ய ஸமரே ஸமுபேயுஷி த்வம்
த்₃ருஷ்ட்வா புரோ(அ)த₂ யவநம் யவநத்ரிகோட்யா |
த்வஷ்ட்ரா விதா₄ப்ய புரமாஶு பயோதி₄மத்₄யே
தத்ரா(அ)த₂ யோக₃ப₃லத: ஸ்வஜநாநநைஷீ: || 9||
9. அவனுடன் பதினெட்டாவது முறை யுத்தம் ஆரம்பிக்கும்முன், மூன்று கோடி யவனர்களுடன் ஒரு யவனன் படையெடுத்து வருவதை அறிந்தீர்கள். உடனே, விஸ்வகர்மாவைக் கடலின் நடுவில் ஒரு நகரை உருவாக்கச் சொல்லி, அதில் மக்கள் அனைவரையும் குடியேறச் செய்தீர்கள்.
पदभ्यां त्वां पद्ममाली चकित इव पुरान्निर्गतो धावमानो
म्लेच्छेशेनानुयातो वधसुकृतविहीनेन शैले न्यलैषी: ।
सुप्तेनांघ्र्याहतेन द्रुतमथ मुचुकुन्देन भस्मीकृतेऽस्मिन्
भूपायास्मै गुहान्ते सुललितवपुषा तस्थिषे भक्तिभाजे ॥१०॥
பத₃ப்₄யாம் த்வாம் பத்₃மமாலீ சகித இவ புராந்நிர்க₃தோ தா₄வமாநோ
ம்லேச்சே₂ஶேநாநுயாதோ வத₄ஸுக்ருதவிஹீநேந ஶைலே ந்யலைஷீ: |
ஸுப்தேநாம்க்₄ர்யாஹதேந த்₃ருதமத₂ முசுகுந்தே₃ந ப₄ஸ்மீக்ருதே(அ)ஸ்மிந்
பூ₄பாயாஸ்மை கு₃ஹாந்தே ஸுலலிதவபுஷா தஸ்தி₂ஷே ப₄க்திபா₄ஜே || 10||
10. தாமரை மாலையணிந்து, நகரத்திலிருந்து வெளியே வந்தீர்கள். யவனர்களின் தலைவன் பின்தொடர்ந்து வந்தான். உடனே தாங்கள் ஒரு மலைக்குகையில் மறைந்தீர்கள். தொடர்ந்து வந்த யவனன், தாங்கள் என்று நினைத்து, குகையில் தூங்கிக் கொண்டிருந்த முசுகுந்தன் என்ற அரசனைக் காலால் உதைத்தான். விழித்த முசுகுந்தன், தங்கள் கையால் வதம் பெறப் புண்ணியமற்ற அந்த யவனனை, தன் பார்வையால் சாம்பலாக்கினான். அப்போது குகையில், பக்தனான முசுகுந்தனின் எதிரில் அழகாகக் காட்சியளித்தீர்கள்.
ऐक्ष्वाकोऽहं विरक्तोऽस्म्यखिलनृपसुखे त्वत्प्रसादैककाङ्क्षी
हा देवेति स्तुवन्तं वरविततिषु तं निस्पृहं वीक्ष्य हृष्यन् ।
मुक्तेस्तुल्यां च भक्तिं धुतसकलमलां मोक्षमप्याशु दत्वा
कार्यं हिंसाविशुद्ध्यै तप इति च तदा प्रात्थ लोकप्रतीत्यै ॥११॥
ஐக்ஷ்வாகோ(அ)ஹம் விரக்தோ(அ)ஸ்ம்யகி₂லந்ருபஸுகே₂ த்வத்ப்ரஸாதை₃ககாங்க்ஷீ
ஹா தே₃வேதி ஸ்துவந்தம் வரவிததிஷு தம் நிஸ்ப்ருஹம் வீக்ஷ்ய ஹ்ருஷ்யந் |
முக்தேஸ்துல்யாம் ச ப₄க்திம் து₄தஸகலமலாம் மோக்ஷமப்யாஶு த₃த்வா
கார்யம் ஹிம்ஸாவிஶுத்₃த்₄யை தப இதி ச ததா₃ ப்ராத்த₂ லோகப்ரதீத்யை || 11||
11. இக்ஷ்வாகு வம்சத்தில் பிறந்த எனக்கு அரச வாழ்வில் விருப்பம் இல்லை. தங்கள் அனுக்ரஹம் ஒன்றே வேண்டுகிறேன் என்று முசுகுந்தன் தங்களைத் துதித்தான். அதைக் கேட்ட தாங்கள் மகிழ்ந்து, எல்லா துக்கங்களையும் போக்கும் பக்தியையும், அதன்பின் முக்தியையும் அவனுக்கு வரமாக அளித்தீர்கள். வேட்டையாடி உயிரினங்களைக் கொன்ற தோஷம் நீங்க அவனைத் தவம் செய்யச் சொன்னீர்கள்.
तदनु मथुरां गत्वा हत्वा चमूं यवनाहृतां
मगधपतिना मार्गे सैन्यै: पुरेव निवारित: ।
चरमविजयं दर्पायास्मै प्रदाय पलायितो
जलधिनगरीं यातो वातालयेश्वर पाहि माम् ॥१२॥
தத₃நு மது₂ராம் க₃த்வா ஹத்வா சமூம் யவநாஹ்ருதாம்
மக₃த₄பதிநா மார்கே₃ ஸைந்யை: புரேவ நிவாரித: |
சரமவிஜயம் த₃ர்பாயாஸ்மை ப்ரதா₃ய பலாயிதோ
ஜலதி₄நக₃ரீம் யாதோ வாதாலயேஶ்வர பாஹி மாம் || 12||
12. பின் மதுராநகரம் சென்றீர்கள். யவனன் அழைத்து வந்த சேனைகளை அழித்தீர்கள். வழியில், ஜராஸந்தன் தடுத்தான். அவனுக்கு மமதை ஏறுவதற்காக, அவனுக்குக் கடைசியான வெற்றியைக் கொடுத்து, கடலின் நடுவே உள்ள துவாரகா நகருக்குச் சென்று ஓடி ஒளிந்து கொள்வதுபோல் பாவனை செய்தீர்கள். குருவாயூரப்பா! என்னைக் காத்து அருள் புரிய வேண்டும்.
No comments:
Post a Comment