Tuesday, May 27, 2014

ஸ்ரீ நாராயணீயம் - தசகம் 88

ஸ்ரீ நாராயணீயம் - தசகம் 88, ஸ்ரீ நாராயணீயம் 88வது தசகம், ஸ்ரீமந் நாராயணீயம், ஸ்ரீ நாராயணீயம், ஸ்ரீமத் நாராயணீயம், நாராயணீயம், ஸ்ரீமன் நாராயணீயம், Narayaneeyam, Sree Narayaneeyam, Sriman narayaneeyam,Srimad Narayaneeyam

த³ஶகம் -88
ஸந்தானகோபாலம்

प्रागेवाचार्यपुत्राहृतिनिशमनया स्वीयषट्सूनुवीक्षां
काङ्क्षन्त्या मातुरुक्त्या सुतलभुवि बलिं प्राप्य तेनार्चितस्त्वम् ।
धातु: शापाद्धिरण्यान्वितकशिपुभवान् शौरिजान् कंसभग्ना-
नानीयैनान् प्रदर्श्य स्वपदमनयथा: पूर्वपुत्रान् मरीचे: ॥१॥

ப்ராகே₃வாசார்யபுத்ராஹ்ருதிநிஶமநயா ஸ்வீயஷட்ஸூநுவீக்ஷாம்
காங்க்ஷந்த்யா மாதுருக்த்யா ஸுதலபு₄வி ப₃லிம் ப்ராப்ய தேநார்சிதஸ்த்வம் |
தா₄து: ஶாபாத்₃தி₄ரண்யாந்விதகஶிபுப₄வாந் ஶௌரிஜாந் கம்ஸப₄க்₃நா-
நாநீயைநாந் ப்ரத₃ர்ஶ்ய ஸ்வபத₃மநயதா₂: பூர்வபுத்ராந் மரீசே: || 1||

1. தங்கள் குரு சாந்தீபனியின் இறந்த குழந்தைகளைப் பிழைக்கச் செய்து குருதக்ஷிணையாகத் தாங்கள் கொடுத்ததைக் கேட்ட தேவகி, தன்னுடைய இறந்த ஆறு குழந்தைகளையும் பார்க்க விரும்பினாள். அதைக்கேட்ட தாங்கள் ஸுதலலோகத்திற்குச் சென்றீர். மகாபலி தங்களை வரவேற்றுப் பூஜித்தான். மரீசியின் பிள்ளைகள், பிரும்மதேவரின் சாபத்தால், ஹிரண்யகசிபுவிற்குப் பிள்ளைகளாகப் பிறந்தார்கள். அவர்களே வசுதேவரின் மூலம் தேவகிக்கு பிள்ளைகளாகப் பிறந்தபோது கம்ஸன் அவர்களைக் கொன்றான். அவர்களை ஸுதலலோகத்திலிருந்து அழைத்து வந்து தேவகியிடம் காட்டிப் பின்னர் வைகுண்டத்திற்கு அனுப்பினீர்.

श्रुतदेव इति श्रुतं द्विजेन्द्रं
बहुलाश्वं नृपतिं च भक्तिपूर्णम् ।
युगपत्त्वमनुग्रहीतुकामो
मिथिलां प्रापिथं तापसै: समेत: ॥२॥

ஶ்ருததே₃வ இதி ஶ்ருதம் த்₃விஜேந்த்₃ரம்
ப₃ஹுலாஶ்வம் ந்ருபதிம் ச ப₄க்திபூர்ணம் |
யுக₃பத்த்வமநுக்₃ரஹீதுகாமோ
மிதி₂லாம் ப்ராபித₂ம் தாபஸை: ஸமேத: || 2||

2. பக்தியில் சிறந்த ஸ்ருததேவன் என்ற அந்தணரையும், பஹுலாஸ்வன் என்ற அரசனையும் ஒரே சமயத்தில் அனுக்ரஹம் செய்ய விரும்பி, முனிவர்களுடன் மிதிலைக்குச் சென்றீர்.

गच्छन् द्विमूर्तिरुभयोर्युगपन्निकेत-
मेकेन भूरिविभवैर्विहितोपचार: ।
अन्येन तद्दिनभृतैश्च फलौदनाद्यै-
स्तुल्यं प्रसेदिथ ददथ च मुक्तिमाभ्याम् ॥३॥

க₃ச்ச₂ந் த்₃விமூர்திருப₄யோர்யுக₃பந்நிகேத-
மேகேந பூ₄ரிவிப₄வைர்விஹிதோபசார: |
அந்யேந தத்₃தி₃நப்₄ருதைஶ்ச ப₂லௌத₃நாத்₃யை-
ஸ்துல்யம் ப்ரஸேதி₃த₂ த₃த₃த₂ ச முக்திமாப்₄யாம் || 3||

3. ஒரே மாதிரியான இரண்டு உருவங்கள் எடுத்துக்கொண்டு ஒரே சமயத்தில் அவர்கள் இருவர் வீட்டிற்கும் சென்றீர். அரசன் விலையுயர்ந்த பொருட்களாலும், அந்தணன் அன்றைய தினம் பெறப்பட்ட பழங்கள், அன்னம் முதலியவற்றாலும் பூஜித்தனர். இரண்டையும் சமமாக ஏற்றுக்கொண்டு அவர்களுக்கு மோக்ஷம் அளித்தீர்கள்.

भूयोऽथ द्वारवत्यां द्विजतनयमृतिं तत्प्रलापानपि त्वम्
को वा दैवं निरुन्ध्यादिति किल कथयन् विश्ववोढाप्यसोढा: ।
जिष्णोर्गर्वं विनेतुं त्वयि मनुजधिया कुण्ठितां चास्य बुद्धिं
तत्त्वारूढां विधातुं परमतमपदप्रेक्षणेनेति मन्ये ॥४॥

பூ₄யோ(அ)த₂ த்₃வாரவத்யாம் த்₃விஜதநயம்ருதிம் தத்ப்ரலாபாநபி த்வம்
கோ வா தை₃வம் நிருந்த்₄யாதி₃தி கில கத₂யந் விஶ்வவோடா₄ப்யஸோடா₄: |
ஜிஷ்ணோர்க₃ர்வம் விநேதும் த்வயி மநுஜதி₄யா குண்டி₂தாம் சாஸ்ய பு₃த்₃தி₄ம்
தத்த்வாரூடா₄ம் விதா₄தும் பரமதமபத₃ப்ரேக்ஷணேநேதி மந்யே || 4||

4. துவாரகையில் ஒரு பிராமணனுக்குக் குழந்தைகள் பிறந்து பின் இறந்தன. அழுது புலம்பிய தந்தையிடம் விதியை யாராலும் தடுக்க முடியாது என்று உலகத்திற்கே நாயகனான நீர் கூறினீர். அர்ஜுனனுடைய கர்வத்தையும், உம்மை சாதாரண மனிதன் என்று நினைத்த அவனது எண்ணத்தையும் போக்கவே அவ்வாறு செய்தீர். அவனுக்குத் தங்கள் ஸ்தானமான வைகுண்டத்தைக் காட்டி, தாங்கள் பரமாத்ம ஸ்வரூபம் என்ற எண்ணத்தை அவனுக்கு அளித்தீர்.

नष्टा अष्टास्य पुत्रा: पुनरपि तव तूपेक्षया कष्टवाद:
स्पष्टो जातो जनानामथ तदवसरे द्वारकामाप पार्थ: ।
मैत्र्या तत्रोषितोऽसौ नवमसुतमृतौ विप्रवर्यप्ररोदं
श्रुत्वा चक्रे प्रतिज्ञामनुपहृतसुत: सन्निवेक्ष्ये कृशानुम् ॥५॥

நஷ்டா அஷ்டாஸ்ய புத்ரா: புநரபி தவ தூபேக்ஷயா கஷ்டவாத₃:
ஸ்பஷ்டோ ஜாதோ ஜநாநாமத₂ தத₃வஸரே த்₃வாரகாமாப பார்த₂: |
மைத்ர்யா தத்ரோஷிதோ(அ)ஸௌ நவமஸுதம்ருதௌ விப்ரவர்யப்ரரோத₃ம்
ஶ்ருத்வா சக்ரே ப்ரதிஜ்ஞாமநுபஹ்ருதஸுத: ஸந்நிவேக்ஷ்யே க்ருஶாநும் || 5||

5. இவ்வாறு அந்த பிராமணனுக்கு எட்டுக் குழந்தைகள் இறந்தும் தாங்கள் எந்த உதவியும் செய்யவில்லை என்று மக்கள் பேசினார்கள். அப்போது துவாரகைக்கு அர்ஜுனன் வந்தான். அந்நேரத்தில், அந்த பிராமணனுக்கு ஒன்பதாவது குழந்தையும் பிறந்து இறந்ததால் அவன் அழுது அரற்றினான். அதைக்கேட்ட அர்ஜுனன், “இறந்த குழந்தைகளை மீட்டு வருவேன், இல்லாவிடில் தீயில் விழுந்து உயிர் துறப்பேன்” என்று சபதம் செய்தான்.

मानी स त्वामपृष्ट्वा द्विजनिलयगतो बाणजालैर्महास्त्रै
रुन्धान: सूतिगेहं पुनरपि सहसा दृष्टनष्टे कुमारे ।
याम्यामैन्द्रीं तथाऽन्या: सुरवरनगरीर्विद्ययाऽऽसाद्य सद्यो
मोघोद्योग: पतिष्यन् हुतभुजि भवता सस्मितं वारितोऽभूत् ॥६॥

மாநீ ஸ த்வாமப்ருஷ்ட்வா த்₃விஜநிலயக₃தோ பா₃ணஜாலைர்மஹாஸ்த்ரை
ருந்தா₄ந: ஸூதிகே₃ஹம் புநரபி ஸஹஸா த்₃ருஷ்டநஷ்டே குமாரே |
யாம்யாமைந்த்₃ரீம் ததா₂(அ)ந்யா: ஸுரவரநக₃ரீர்வித்₃யயா(அ)(அ)ஸாத்₃ய ஸத்₃யோ
மோகோ₄த்₃யோக₃: பதிஷ்யந் ஹுதபு₄ஜி ப₄வதா ஸஸ்மிதம் வாரிதோ(அ)பூ₄த் || 6||

6. அந்த பிராமணனுக்குப் பத்தாவது குழந்தை பிறக்க இருக்கும் சமயம், அர்ஜுனன் தங்களிடம் ஏதும் சொல்லாமல், அந்த பிராமணனுடைய வீட்டிற்குச் சென்று, பிரசவ அறையைச் சுற்றி பெரிய அஸ்திரங்களாலும், அம்புகளாலும் பாதுகாப்புச் சுவர் எழுப்பினான். ஆனால் குழந்தை பிறந்து இறந்ததுமில்லாமல் அதனுடைய உடலும் காணாமல் போனது. தனது யோக சக்தியால் அர்ஜுனன், யமலோகம், இந்திரலோகம், தேவலோகம் ஆகிய எல்லா உலகங்களிலும் தேடியும் அக்குழந்தை கிடைக்கவில்லை. அதனால் சபதம் செய்தபடி தீயில் விழ முற்பட்டபோது, தாங்கள் புன்முறுவலுடன் அவனைத் தடுத்தீர்.

सार्धं तेन प्रतीचीं दिशमतिजविना स्यन्दनेनाभियातो
लोकालोकं व्यतीतस्तिमिरभरमथो चक्रधाम्ना निरुन्धन् ।
चक्रांशुक्लिष्टदृष्टिं स्थितमथ विजयं पश्य पश्येति वारां
पारे त्वं प्राददर्श: किमपि हि तमसां दूरदूरं पदं ते ॥७॥

ஸார்த₄ம் தேந ப்ரதீசீம் தி₃ஶமதிஜவிநா ஸ்யந்த₃நேநாபி₄யாதோ
லோகாலோகம் வ்யதீதஸ்திமிரப₄ரமதோ₂ சக்ரதா₄ம்நா நிருந்த₄ந் |
சக்ராம்ஶுக்லிஷ்டத்₃ருஷ்டிம் ஸ்தி₂தமத₂ விஜயம் பஶ்ய பஶ்யேதி வாராம்
பாரே த்வம் ப்ராத₃த₃ர்ஶ: கிமபி ஹி தமஸாம் தூ₃ரதூ₃ரம் பத₃ம் தே || 7||

7. தேரில் ஏறி அர்ஜுனனுடன் வேகமாய் மேற்கு திசையை நோக்கிச் சென்றீர். லோகாலோகம் என்ற மலையைத் தாண்டி இருளாக இருந்தது. சக்ராயுதத்தின் ஒளியால் அந்த இருளைப் போக்கினீர். அந்த ஒளியைப் பார்க்க முடியாத அர்ஜுனனுக்கு, காரண ஜலத்திற்கப்பால், அக்ஞானம் என்னும் இருளால் பாதிக்கப்படாததும், விவரிக்கமுடியாததுமான தங்கள் இருப்பிடமான வைகுண்டத்தைக் காட்டினீர்.

तत्रासीनं भुजङ्गाधिपशयनतले दिव्यभूषायुधाद्यै-
रावीतं पीतचेलं प्रतिनवजलदश्यामलं श्रीमदङ्गम् ।
मूर्तीनामीशितारं परमिह तिसृणामेकमर्थं श्रुतीनां
त्वामेव त्वं परात्मन् प्रियसखसहितो नेमिथ क्षेमरूपम् ॥८॥

தத்ராஸீநம் பு₄ஜங்கா₃தி₄பஶயநதலே தி₃வ்யபூ₄ஷாயுதா₄த்₃யை-
ராவீதம் பீதசேலம் ப்ரதிநவஜலத₃ஶ்யாமலம் ஶ்ரீமத₃ங்க₃ம் |
மூர்தீநாமீஶிதாரம் பரமிஹ திஸ்ருணாமேகமர்த₂ம் ஶ்ருதீநாம்
த்வாமேவ த்வம் பராத்மந் ப்ரியஸக₂ஸஹிதோ நேமித₂ க்ஷேமரூபம் || 8||

8. ஆதிசேஷன் மேல் அமர்ந்திருப்பவரும், தெய்வீகமான ஆபரணங்கள் அணிந்தவரும், தெய்வீகமான ஆயுதங்கள் ஏந்தியவரும், மஞ்சள் பட்டாடை அணிந்தவரும், மகாலக்ஷ்மியைத் தன் மார்பில் தாங்கியிருப்பவரும், கார்மேகம் போன்ற நீல வண்ணத்துடன் காட்சி அளிப்பவரும், மும்மூர்த்திகளுக்கும் மேலானவரும், வேதங்களின் ஸாரமாகவும், பரமபுருஷனாகவும் இருக்கும் தங்களையே அங்கு கண்டு, நண்பனான அர்ஜுனனுடன் சேர்ந்து தாங்களும் நமஸ்காரம் செய்தீர்.

युवां मामेव द्वावधिकविवृतान्तर्हिततया
विभिन्नौ सन्द्रष्टुं स्वयमहमहार्षं द्विजसुतान् ।
नयेतं द्रागेतानिति खलु वितीर्णान् पुनरमून्
द्विजायादायादा: प्रणुतमहिमा पाण्डुजनुषा ॥९॥

யுவாம் மாமேவ த்₃வாவதி₄கவிவ்ருதாந்தர்ஹிததயா
விபி₄ந்நௌ ஸந்த்₃ரஷ்டும் ஸ்வயமஹமஹார்ஷம் த்₃விஜஸுதாந் |
நயேதம் த்₃ராகே₃தாநிதி க₂லு விதீர்ணாந் புநரமூந்
த்₃விஜாயாதா₃யாதா₃: ப்ரணுதமஹிமா பாண்டு₃ஜநுஷா || 9||

9. “ஆற்றல் மிக்க ஒன்றாகவும், அதனுள்ளே மறைந்திருக்கும் மற்றொன்றாகவும் (பரமாத்மாவாகவும், ஜீவாத்மாவாகவும்) இரண்டாகப் பிரிந்து இருவேறு உருவங்களுடன் இருக்கும் உங்கள் இருவரையும் ஒன்றாகக் காண வேண்டும் என்பதற்காக நானே பிராமணக் குழந்தைகளை எடுத்துக் கொண்டேன். அவர்களை எடுத்துச் செல்லுங்கள்” என்று வைகுண்டத்தில் காணப்பட்ட பகவான் கூறினார். உடனே அர்ஜுனன் உமது மகிமையைப் புகழ்ந்து பாடினான். பிறகு, அக்குழந்தைகளையும் எடுத்து வந்து பிராமணரிடம் கொடுத்தீர்.

एवं नानाविहारैर्जगदभिरमयन् वृष्णिवंशं प्रपुष्ण-
न्नीजानो यज्ञभेदैरतुलविहृतिभि: प्रीणयन्नेणनेत्रा: ।
भूभारक्षेपदम्भात् पदकमलजुषां मोक्षणायावतीर्ण:
पूर्णं ब्रह्मैव साक्षाद्यदुषु मनुजतारूषितस्त्वं व्यलासी: ॥१०॥

ஏவம் நாநாவிஹாரைர்ஜக₃த₃பி₄ரமயந் வ்ருஷ்ணிவம்ஶம் ப்ரபுஷ்ண-
ந்நீஜாநோ யஜ்ஞபே₄தை₃ரதுலவிஹ்ருதிபி₄: ப்ரீணயந்நேணநேத்ரா: |
பூ₄பா₄ரக்ஷேபத₃ம்பா₄த் பத₃கமலஜுஷாம் மோக்ஷணாயாவதீர்ண:
பூர்ணம் ப்₃ரஹ்மைவ ஸாக்ஷாத்₃யது₃ஷு மநுஜதாரூஷிதஸ்த்வம் வ்யலாஸீ: || 10||

10. இவ்வாறு பலவிதமான லீலைகளால் உலகத்தை மகிழ்வித்தும், வ்ருஷ்ணி வம்சத்தைப் பேணிக் காத்தும், பல யாகங்களைச் செய்து கொண்டும், நிகரேதும் இல்லாத விளையாட்டுக்களால் பெண்களை மகிழ்வித்துக் கொண்டும் விளங்கினீர். பூர்ணப்ரம்மமாகிய தாங்கள், பூபாரத்தைப் போக்கும் காரியத்தில், தங்களுடைய தாமரை போன்ற பாதங்களை அண்டியவர்களுக்கு முக்தி அளித்து, யாதவர்களிடையே மனித வடிவில் தோன்றிப் பிரகாசித்தீர்.

प्रायेण द्वारवत्यामवृतदयि तदा नारदस्त्वद्रसार्द्र-
स्तस्माल्लेभे कदाचित्खलु सुकृतनिधिस्त्वत्पिता तत्त्वबोधम् ।
भक्तानामग्रयायी स च खलु मतिमानुद्धवस्त्वत्त एव
प्राप्तो विज्ञानसारं स किल जनहितायाधुनाऽऽस्ते बदर्याम् ॥११॥

ப்ராயேண த்₃வாரவத்யாமவ்ருதத₃யி ததா₃ நாரத₃ஸ்த்வத்₃ரஸார்த்₃ர-
ஸ்தஸ்மால்லேபே₄ கதா₃சித்க₂லு ஸுக்ருதநிதி₄ஸ்த்வத்பிதா தத்த்வபோ₃த₄ம் |
ப₄க்தாநாமக்₃ரயாயீ ஸ ச க₂லு மதிமாநுத்₃த₄வஸ்த்வத்த ஏவ
ப்ராப்தோ விஜ்ஞாநஸாரம் ஸ கில ஜநஹிதாயாது₄நா(அ)(அ)ஸ்தே ப₃த₃ர்யாம் || 11||

11. உமது வழிபாட்டில் மூழ்கிய நாரதர் பெரும்பாலும் துவாரகையிலேயே தங்கியிருந்தார். அப்போது, பெருமைக்குரிய உமது தந்தை வசுதேவர், அவரிடமிருந்து ஆத்ம ஞானத்தைப் பெற்றார். அறிவில் சிறந்தவரும், பக்தர்களுக்குள் முதன்மையானவருமான உத்தவர் உம்மிடமிருந்து தத்துவ ஞானத்தைப் பெற்றார். உலகநன்மைக்காக இன்றும் உத்தவர் பத்ரியில் வசிக்கிறார் என்று நம்பப்படுகிறது.

सोऽयं कृष्णावतारो जयति तव विभो यत्र सौहार्दभीति-
स्नेहद्वेषानुरागप्रभृतिभिरतुलैरश्रमैर्योगभेदै: ।
आर्तिं तीर्त्वा समस्ताममृतपदमगुस्सर्वत: सर्वलोका:
स त्वं विश्वार्तिशान्त्यै पवनपुरपते भक्तिपूर्त्यै च भूया: ॥१२॥

ஸோ(அ)யம் க்ருஷ்ணாவதாரோ ஜயதி தவ விபோ₄ யத்ர ஸௌஹார்த₃பீ₄தி-
ஸ்நேஹத்₃வேஷாநுராக₃ப்ரப்₄ருதிபி₄ரதுலைரஶ்ரமைர்யோக₃பே₄தை₃: |
ஆர்திம் தீர்த்வா ஸமஸ்தாமம்ருதபத₃மகு₃ஸ்ஸர்வத: ஸர்வலோகா:
ஸ த்வம் விஶ்வார்திஶாந்த்யை பவநபுரபதே ப₄க்திபூர்த்யை ச பூ₄யா: || 12||

12. மேன்மை மிகுந்த இந்த கிருஷ்ணாவதாரம் தனித்தன்மையுடன் விளங்குகிறது. நட்பு, பயம், அன்பு, காதல், வெறுப்பு, இணைப்பு போன்ற பல வழிவகைகள் மூலம் மக்கள் எல்லா துக்கங்களையும் போக்கிக்கொண்டு உலக பந்தங்களிலிருந்து விடுவிக்கப்பட்டார்கள். குருவாயூரப்பா! உலகின் கவலைகளை நீக்கி, அடியேனும் முழு பக்தி பெற வகை செய்தருளிக் காக்க வேண்டும்.

No comments:

Post a Comment