Friday, May 30, 2014

ஸ்ரீ நாராயணீயம் - தசகம் 91

ஸ்ரீ நாராயணீயம் - தசகம் 91, ஸ்ரீ நாராயணீயம் 91வது தசகம், ஸ்ரீமந் நாராயணீயம், ஸ்ரீ நாராயணீயம், ஸ்ரீமத் நாராயணீயம், நாராயணீயம், ஸ்ரீமன் நாராயணீயம், Narayaneeyam, Sree Narayaneeyam, Sriman narayaneeyam,Srimad Narayaneeyam

த³ஶகம் -91
பக்தி மார்க்கம்

இந்த தசகத்தைப் படிப்பதால் அனைத்து பாபங்களும் விலகி, வைராக்யமும் திடமான பக்தியும் உண்டாகும்.


श्रीकृष्ण त्वत्पदोपासनमभयतमं बद्धमिथ्यार्थदृष्टे-
र्मर्त्यस्यार्तस्य मन्ये व्यपसरति भयं येन सर्वात्मनैव ।
यत्तावत् त्वत्प्रणीतानिह भजनविधीनास्थितो मोहमार्गे
धावन्नप्यावृताक्ष: स्खलति न कुहचिद्देवदेवाखिलात्मन् ॥१॥

ஶ்ரீக்ருஷ்ண த்வத்பதோ₃பாஸநமப₄யதமம் ப₃த்₃த₄மித்₂யார்த₂த்₃ருஷ்டே-
ர்மர்த்யஸ்யார்தஸ்ய மந்யே வ்யபஸரதி ப₄யம் யேந ஸர்வாத்மநைவ |
யத்தாவத் த்வத்ப்ரணீதாநிஹ ப₄ஜநவிதீ₄நாஸ்தி₂தோ மோஹமார்கே₃
தா₄வந்நப்யாவ்ருதாக்ஷ: ஸ்க₂லதி ந குஹசித்₃தே₃வதே₃வாகி₂லாத்மந் || 1||

1. தேவதேவனே! அனைத்து உயிரினங்களின் உயிரே! கிருஷ்ணா! பொய்யான இந்த சரீரத்தில் ஆசை வைத்து அல்லல்பட்டு மரண பயத்தை அடையும் ஒருவனுக்கு, உமது திருவடிகளை அடைக்கலம் அடைந்து பணி செய்வதே பயத்தைப் போக்கக் கூடியது என்று நம்புகிறேன். தாங்கள் உபதேசித்த முறைகளில் வழிபடுபவன், கண்ணை மூடியபடி சென்றாலும், அவன் பக்தி நிலையில் தவறுவதில்லை.

भूमन् कायेन वाचा मुहुरपि मनसा त्वद्बलप्रेरितात्मा
यद्यत् कुर्वे समस्तं तदिह परतरे त्वय्यसावर्पयामि ।
जात्यापीह श्वपाकस्त्वयि निहितमन:कर्मवागिन्द्रियार्थ-
प्राणो विश्वं पुनीते न तु विमुखमनास्त्वत्पदाद्विप्रवर्य: ॥२॥

பூ₄மந் காயேந வாசா முஹுரபி மநஸா த்வத்₃ப₃லப்ரேரிதாத்மா
யத்₃யத் குர்வே ஸமஸ்தம் ததி₃ஹ பரதரே த்வய்யஸாவர்பயாமி |
ஜாத்யாபீஹ ஶ்வபாகஸ்த்வயி நிஹிதமந:கர்மவாகி₃ந்த்₃ரியார்த₂-
ப்ராணோ விஶ்வம் புநீதே ந து விமுக₂மநாஸ்த்வத்பதா₃த்₃விப்ரவர்ய: || 2||

2. எங்கும் நிறைந்த பரம்பொருளே! உமது சக்தியினால் என் மனம் தூண்டப்படுகிறது. என் உடல், வாக்கு, மனம் இவைகளால் செய்யும் அனைத்தையும் உம்மிடம் அர்ப்பணிக்கிறேன். உம்மிடத்தில் தனது செயல், வாக்கு, இந்திரியங்கள், பிராணன், மனம் ஆகியவற்றை அர்ப்பணம் செய்தவன், பிறப்பால் நீசனாக இருந்தாலும் உலகத்தையே புனிதப்படுத்துகிறான். தங்கள் திருவடிகளில் பக்தி இல்லாதவன் அந்தணனாக இருந்தாலும் உலகைப் புனிதப்படுத்துவதில்லை.

भीतिर्नाम द्वितीयाद्भवति ननु मन:कल्पितं च द्वितीयं
तेनैक्याभ्यासशीलो हृदयमिह यथाशक्ति बुद्ध्या निरुन्ध्याम् ।
मायाविद्धे तु तस्मिन् पुनरपि न तथा भाति मायाधिनाथं
तं त्वां भक्त्या महत्या सततमनुभजनीश भीतिं विजह्याम् ॥३॥

பீ₄திர்நாம த்₃விதீயாத்₃ப₄வதி நநு மந:கல்பிதம் ச த்₃விதீயம்
தேநைக்யாப்₄யாஸஶீலோ ஹ்ருத₃யமிஹ யதா₂ஶக்தி பு₃த்₃த்₄யா நிருந்த்₄யாம் |
மாயாவித்₃தே₄ து தஸ்மிந் புநரபி ந ததா₂ பா₄தி மாயாதி₄நாத₂ம்
தம் த்வாம் ப₄க்த்யா மஹத்யா ஸததமநுப₄ஜநீஶ பீ₄திம் விஜஹ்யாம் || 3||

3. பயமானது தன்னிடத்திலிருந்து விலகியுள்ள மற்றொரு இடத்திலிருந்து உண்டாகிறது. அந்த மற்றொரு இடமும் மனதின் கற்பனையே ஆகும். காரியம், காரணம் இரண்டும் ஒன்றே என்பதை மனதில் நிறுத்தி, நிச்சய புத்தியுடன் சிந்திப்பேன். ஒருமுறை மாயையால் கவரப்பட்டவன், மனதைக் கட்டுப்படுத்தினாலும் முன்போல் சிந்திப்பதில்லை. எனவே, ஈசனே! மாயைக்கு அதிபதியான உம்மை எப்பொழுதும் பக்தியுடன் வணங்கி, என் அனைத்து பயங்களையும் விடுவேன்.

भक्तेरुत्पत्तिवृद्धी तव चरणजुषां सङ्गमेनैव पुंसा-
मासाद्ये पुण्यभाजां श्रिय इव जगति श्रीमतां सङ्गमेन ।
तत्सङ्गो देव भूयान्मम खलु सततं तन्मुखादुन्मिषद्भि-
स्त्वन्माहात्म्यप्रकारैर्भवति च सुदृढा भक्तिरुद्धूतपापा ॥४॥

ப₄க்தேருத்பத்திவ்ருத்₃தீ₄ தவ சரணஜுஷாம் ஸங்க₃மேநைவ பும்ஸா-
மாஸாத்₃யே புண்யபா₄ஜாம் ஶ்ரிய இவ ஜக₃தி ஶ்ரீமதாம் ஸங்க₃மேந |
தத்ஸங்கோ₃ தே₃வ பூ₄யாந்மம க₂லு ஸததம் தந்முகா₂து₃ந்மிஷத்₃பி₄-
ஸ்த்வந்மாஹாத்ம்யப்ரகாரைர்ப₄வதி ச ஸுத்₃ருடா₄ ப₄க்திருத்₃தூ₄தபாபா || 4||

4. இந்த உலகில் செல்வம் உள்ளவனோடு சேர்ந்தால் செல்வம் பெருகுவதைப்போல், தங்கள் திருவடிகளை வணங்குபவரோடு சேர்ந்தால் பக்தி பெருகுகிறது. தேவனே! அடியேனுக்கும் உமது அடியவர்களின் சேர்க்கை கிடைக்கவேண்டும். அவர்கள் கூறும் உமது மகிமைகளால், அனைத்து பாபங்களையும் போக்கக் கூடிய உறுதியான பக்தி எனக்கு உண்டாக வேண்டும்.

श्रेयोमार्गेषु भक्तावधिकबहुमतिर्जन्मकर्माणि भूयो
गायन् क्षेमाणि नामान्यपि तदुभयत: प्रद्रुतं प्रद्रुतात्मा ।
उद्यद्धास: कदाचित् कुहचिदपि रुदन् क्वापि गर्जन् प्रगाय-
न्नुन्मादीव प्रनृत्यन्नयि कुरु करुणां लोकबाह्यश्चरेयम् ॥५॥

ஶ்ரேயோமார்கே₃ஷு ப₄க்தாவதி₄கப₃ஹுமதிர்ஜந்மகர்மாணி பூ₄யோ
கா₃யந் க்ஷேமாணி நாமாந்யபி தது₃ப₄யத: ப்ரத்₃ருதம் ப்ரத்₃ருதாத்மா |
உத்₃யத்₃தா₄ஸ: கதா₃சித் குஹசித₃பி ருத₃ந் க்வாபி க₃ர்ஜந் ப்ரகா₃ய-
ந்நுந்மாதீ₃வ ப்ரந்ருத்யந்நயி குரு கருணாம் லோகபா₃ஹ்யஶ்சரேயம் || 5||

5. மோக்ஷத்தை அடையும் வழிகளில் பக்தி மார்க்கத்தில் மிகவும் விருப்பமுடையவனாக நான் ஆக வேண்டும். உமது லீலைகளையும், நாமங்களையும் ஆர்வத்துடன் பாடி மனம் உருக வேண்டும். பாடிக் கொண்டும், சிரித்துக்கொண்டும், பைத்தியம் பிடித்தவன் போல் ஆடிக்கொண்டும் பற்றற்று நான் இருக்கக் கருணை புரிய வேண்டும்.

भूतान्येतानि भूतात्मकमपि सकलं पक्षिमत्स्यान् मृगादीन्
मर्त्यान् मित्राणि शत्रूनपि यमितमतिस्त्वन्मयान्यानमानि ।
त्वत्सेवायां हि सिद्ध्येन्मम तव कृपया भक्तिदार्ढ्यं विराग-
स्त्वत्तत्त्वस्यावबोधोऽपि च भुवनपते यत्नभेदं विनैव ॥६॥

பூ₄தாந்யேதாநி பூ₄தாத்மகமபி ஸகலம் பக்ஷிமத்ஸ்யாந் ம்ருகா₃தீ₃ந்
மர்த்யாந் மித்ராணி ஶத்ரூநபி யமிதமதிஸ்த்வந்மயாந்யாநமாநி |
த்வத்ஸேவாயாம் ஹி ஸித்₃த்₄யேந்மம தவ க்ருபயா ப₄க்திதா₃ர்ட்₄யம் விராக₃-
ஸ்த்வத்தத்த்வஸ்யாவபோ₃தோ₄(அ)பி ச பு₄வநபதே யத்நபே₄த₃ம் விநைவ || 6||

6. பஞ்சபூதங்களையும், அவைகளாலான உலகங்களையும், அவற்றில் வசிக்கும் பறவைகள், மீன்கள், விலங்குகள், மனிதர்கள் முதலியவற்றையும், நண்பர்களையும், பகைவர்களையும் உமது வடிவமென்று நான் வணங்க வேண்டும். லோகநாயகா! எப்போதும் உம்மை வணங்குவதால், உம்முடைய கருணையினால், எனக்கு உறுதியான பக்தி, வைராக்கியம், உண்மை அறிவு முதலியவை வேறு முயற்சிகள் இல்லாமலேயே கிடைக்கிறது.

नो मुह्यन् क्षुत्तृडाद्यैर्भवसरणिभवैस्त्वन्निलीनाशयत्वा-
च्चिन्तासातत्यशाली निमिषलवमपि त्वत्पदादप्रकम्प: ।
इष्टानिष्टेषु तुष्टिव्यसनविरहितो मायिकत्वावबोधा-
ज्ज्योत्स्नाभिस्त्वन्नखेन्दोरधिकशिशिरितेनात्मना सञ्चरेयम् ॥७॥

நோ முஹ்யந் க்ஷுத்த்ருடா₃த்₃யைர்ப₄வஸரணிப₄வைஸ்த்வந்நிலீநாஶயத்வா-
ச்சிந்தாஸாதத்யஶாலீ நிமிஷலவமபி த்வத்பதா₃த₃ப்ரகம்ப: |
இஷ்டாநிஷ்டேஷு துஷ்டிவ்யஸநவிரஹிதோ மாயிகத்வாவபோ₃தா₄-
ஜ்ஜ்யோத்ஸ்நாபி₄ஸ்த்வந்நகே₂ந்தோ₃ரதி₄கஶிஶிரிதேநாத்மநா ஸஞ்சரேயம் || 7||

7. என் மனம் எப்போதும் உம்மிடம் மூழ்கியிருப்பதால், பசி, தாகம் இவற்றால் பாதிக்கப்படாமல், உமது திருவடியையே தியானித்துக் கொண்டு, பற்றற்று, விருப்பு, வெறுப்பு, இல்லாதவனாக இருக்க அருள வேண்டும். மாயையின் விளைவு என்னும் அறிவினால், சந்தோஷமும், துக்கமும் அற்றவனாக இருக்க அருள வேண்டும். உமது கால் நகங்களாகிற குளிர் நிலவின் ஒளியால் நானும் அமைதியான, குளிர்ந்த மனத்துடன் இருக்க வேண்டும்.

भूतेष्वेषु त्वदैक्यस्मृतिसमधिगतौ नाधिकारोऽधुना चे-
त्त्वत्प्रेम त्वत्कमैत्री जडमतिषु कृपा द्विट्सु भूयादुपेक्षा ।
अर्चायां वा समर्चाकुतुकमुरुतरश्रद्धया वर्धतां मे
त्वत्संसेवी तथापि द्रुतमुपलभते भक्तलोकोत्तमत्वम् ॥८॥

பூ₄தேஷ்வேஷு த்வதை₃க்யஸ்ம்ருதிஸமதி₄க₃தௌ நாதி₄காரோ(அ)து₄நா சே-
த்த்வத்ப்ரேம த்வத்கமைத்ரீ ஜட₃மதிஷு க்ருபா த்₃விட்ஸு பூ₄யாது₃பேக்ஷா |
அர்சாயாம் வா ஸமர்சாகுதுகமுருதரஶ்ரத்₃த₄யா வர்த₄தாம் மே
த்வத்ஸம்ஸேவீ ததா₂பி த்₃ருதமுபலப₄தே ப₄க்தலோகோத்தமத்வம் || 8||

8. உலகிலுள்ள அனைத்து உயிர்களிடத்தும் தாங்கள் ஐக்கியமாகி இருக்கிறீர் என்ற அறிவும், தகுதியும் எனக்கு இல்லையெனில், உமது அடியார்களிடத்தில் நேசமும், உம்மை அறியாதவர்களிடத்தில் கருணையும், பகைவர்களிடத்தில் வெறுப்பும் எனக்கு உண்டாக வேண்டும். அதற்கும் தகுதி இல்லாவிடில், தங்களது விக்ரகத்தைப் பூஜை செய்ய ஆர்வம் உண்டாக வேண்டும். அவ்வாறு செய்வதால் பக்தர்களில் சிறந்தவனாக விளங்கும் பேறு தாமதமில்லாமல் கிடைக்கிறது.

आवृत्य त्वत्स्वरूपं क्षितिजलमरुदाद्यात्मना विक्षिपन्ती
जीवान् भूयिष्ठकर्मावलिविवशगतीन् दु:खजाले क्षिपन्ती ।
त्वन्माया माभिभून्मामयि भुवनपते कल्पते तत्प्रशान्त्यै
त्वत्पादे भक्तिरेवेत्यवददयि विभो सिद्धयोगी प्रबुद्ध: ॥९॥

ஆவ்ருத்ய த்வத்ஸ்வரூபம் க்ஷிதிஜலமருதா₃த்₃யாத்மநா விக்ஷிபந்தீ
ஜீவாந் பூ₄யிஷ்ட₂கர்மாவலிவிவஶக₃தீந் து₃:க₂ஜாலே க்ஷிபந்தீ |
த்வந்மாயா மாபி₄பூ₄ந்மாமயி பு₄வநபதே கல்பதே தத்ப்ரஶாந்த்யை
த்வத்பாதே₃ ப₄க்திரேவேத்யவத₃த₃யி விபோ₄ ஸித்₃த₄யோகீ₃ ப்ரபு₃த்₃த₄: || 9||

9. ஜகன்னாதா! உமது மாயை, உம்முடைய உண்மையான உருவத்தை மறைத்து, பூமி, நீர், காற்று என்று மாறித் தோன்றும்படி செய்கிறது. வினைப்பயனால் ஜீவாத்மாக்களைத் துன்பமென்னும் வலையில் தள்ளுகிறது. அந்த மாயை என்னைக் கீழ்ப்படுத்தாமல் இருக்க வேண்டும். உமது திருவடிகளில் பக்தியுடன் இருப்பதால் மட்டுமே அந்த மாயையை அழிக்க முடியுமென்று பிரபுத்தன் என்ற யோகி விதேக மன்னனிடம் கூறியுள்ளார்.

दु:खान्यालोक्य जन्तुष्वलमुदितविवेकोऽहमाचार्यवर्या-
ल्लब्ध्वा त्वद्रूपतत्त्वं गुणचरितकथाद्युद्भवद्भक्तिभूमा ।
मायामेनां तरित्वा परमसुखमये त्वत्पदे मोदिताहे
तस्यायं पूर्वरङ्ग: पवनपुरपते नाशयाशेषरोगान् ॥१०॥

து₃:கா₂ந்யாலோக்ய ஜந்துஷ்வலமுதி₃தவிவேகோ(அ)ஹமாசார்யவர்யா-
ல்லப்₃த்₄வா த்வத்₃ரூபதத்த்வம் கு₃ணசரிதகதா₂த்₃யுத்₃ப₄வத்₃ப₄க்திபூ₄மா |
மாயாமேநாம் தரித்வா பரமஸுக₂மயே த்வத்பதே₃ மோதி₃தாஹே
தஸ்யாயம் பூர்வரங்க₃: பவநபுரபதே நாஶயாஶேஷரோகா₃ந் || 10||

10. உயிர்களுக்கு உண்டாகும் துன்பத்தைக் கண்டு எனக்கு விவேகம் ஏற்பட
வேண்டும். அதனால் சிறந்த குருவை அடைந்து, அவர் மூலம் உமது உண்மை வடிவத்தை அறிந்துகொள்ள வேண்டும். உமது கல்யாண குணங்களையும், சரித்திரங்களையும் பாடி, பக்தி பெருகி, மாயையைக் கடக்க வேண்டும். உமது திருவடியில் சரணடைந்து வணங்கி ஆனந்தமடைய வேண்டும். இதுவே, அம்மாயையை வெல்லும் முயற்சியின் ஆரம்பமாகும். குருவாயூரப்பா! என்னுடைய நோய்களைப் போக்கியருள வேண்டும். 

No comments:

Post a Comment