த³ஶகம் -74
மதுரா நகரப்ரவேசம்
सम्प्राप्तो मथुरां दिनार्धविगमे तत्रान्तरस्मिन् वस-
न्नारामे विहिताशन: सखिजनैर्यात: पुरीमीक्षितुम् ।
प्रापो राजपथं चिरश्रुतिधृतव्यालोककौतूहल-
स्त्रीपुंसोद्यदगण्यपुण्यनिगलैराकृष्यमाणो नु किम् ॥१॥
ஸம்ப்ராப்தோ மது₂ராம் தி₃நார்த₄விக₃மே தத்ராந்தரஸ்மிந் வஸ-
ந்நாராமே விஹிதாஶந: ஸகி₂ஜநைர்யாத: புரீமீக்ஷிதும் |
ப்ராபோ ராஜபத₂ம் சிரஶ்ருதித்₄ருதவ்யாலோககௌதூஹல-
ஸ்த்ரீபும்ஸோத்₃யத₃க₃ண்யபுண்யநிக₃லைராக்ருஷ்யமாணோ நு கிம் || 1||
1. நண்பகலில் மதுராநகரம் அடைந்து, அருகிலுள்ள தோட்டத்தில் உணவுண்டு, நண்பர்களுடன் நகரைச் சுற்றிப் பார்க்க முடிவு செய்தீர். அந்த நகரிலுள்ளவர்கள் தங்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருந்ததால், தங்களை நேரில் காண ஆவல் கொண்டனர். அவர்களுடைய புண்ணியங்கள் என்கிற கயிற்றால் கட்டி இழுக்கப்பட்டவர் போல் ராஜவீதியை அடைந்தீர்கள்.
त्वत्पादद्युतिवत् सरागसुभगा: त्वन्मूर्तिवद्योषित:
सम्प्राप्ता विलसत्पयोधररुचो लोला भवत् दृष्टिवत् ।
हारिण्यस्त्वदुर:स्थलीवदयि ते मन्दस्मितप्रौढिव-
न्नैर्मल्योल्लसिता: कचौघरुचिवद्राजत्कलापाश्रिता: ॥२॥
த்வத்பாத₃த்₃யுதிவத் ஸராக₃ஸுப₄கா₃: த்வந்மூர்திவத்₃யோஷித:
ஸம்ப்ராப்தா விலஸத்பயோத₄ரருசோ லோலா ப₄வத் த்₃ருஷ்டிவத் |
ஹாரிண்யஸ்த்வது₃ர:ஸ்த₂லீவத₃யி தே மந்த₃ஸ்மிதப்ரௌடி₄வ-
ந்நைர்மல்யோல்லஸிதா: கசௌக₄ருசிவத்₃ராஜத்கலாபாஶ்ரிதா: || 2||
2. உம்மைக் காண வந்த பெண்கள், எப்பொழுதும் தங்களையே நினைத்துக் கொண்டிருந்ததால், தங்களையே பல விதத்திலும் ஒத்திருந்தார்கள். தங்கள் தாமரைப் பாதங்களின் சிவந்த நிறம்போல் அவர்கள் மேனி அன்பினால் சிவந்திருந்தது. கருமேகங்கள் போன்ற தங்கள் மேனியின் நிறத்தில் அவர்கள் ஸ்தனங்கள் இருந்தன. அசைகின்ற தங்கள் விழிகளைப் போல், இங்குமங்கும் தங்களைக் காண ஓடிக் கொண்டிருந்தார்கள். மனதைக் கவரும் மலர்மாலைகளை அணிந்து கொண்டு கள்ளமற்ற புன்முறுவலுடன் இருக்கும் தங்களைப் போல், கள்ளமில்லாத தூய்மை படைத்தவர்களாய் இருந்தார்கள். மயில்பீலி அணிந்த தங்கள் கொண்டைபோல், அவர்களும் ஆபரணங்களை அணிந்திருந்தார்கள்.
तासामाकलयन्नपाङ्गवलनैर्मोदं प्रहर्षाद्भुत-
व्यालोलेषु जनेषु तत्र रजकं कञ्चित् पटीं प्रार्थयन् ।
कस्ते दास्यति राजकीयवसनं याहीति तेनोदित:
सद्यस्तस्य करेण शीर्षमहृथा: सोऽप्याप पुण्यां गतिम् ॥३॥
தாஸாமாகலயந்நபாங்க₃வலநைர்மோத₃ம் ப்ரஹர்ஷாத்₃பு₄த-
வ்யாலோலேஷு ஜநேஷு தத்ர ரஜகம் கஞ்சித் படீம்ʼ ப்ரார்த₂யந் |
கஸ்தே தா₃ஸ்யதி ராஜகீயவஸநம் யாஹீதி தேநோதி₃த:
ஸத்₃யஸ்தஸ்ய கரேண ஶீர்ஷமஹ்ருதா₂: ஸோ(அ)ப்யாப புண்யாம் க₃திம் || 3||
3. கடைக்கண் பார்வையால் அப்பெண்களை ஆனந்திக்கச் செய்தீர்கள். மக்களும் மகிழ்ச்சியுடன் தங்களைக் காணக் கூடினார்கள். அப்போது எதிரே வந்த ஒரு வண்ணானிடம் உடைகள் வேண்டும் எனக் கேட்டீர்கள். அவன், ராஜாவின் உடைகளை உனக்கு எவன் கொடுப்பான்? தள்ளிப்போ என்று கேலியாகக் கூறினான். உடனே அவன் தலையைக் கிள்ளி எறிந்தீர்கள். அவனும் நற்கதியை அடைந்தான்.
भूयो वायकमेकमायतमतिं तोषेण वेषोचितं
दाश्वांसं स्वपदं निनेथ सुकृतं को वेद जीवात्मनाम् ।
मालाभि: स्तबकै: स्तवैरपि पुनर्मालाकृता मानितो
भक्तिं तेन वृतां दिदेशिथ परां लक्ष्मीं च लक्ष्मीपते ॥४॥
பூ₄யோ வாயகமேகமாயதமதிம் தோஷேண வேஷோசிதம்
தா₃ஶ்வாம்ஸம் ஸ்வபத₃ம் நிநேத₂ ஸுக்ருதம் கோ வேத₃ ஜீவாத்மநாம் |
மாலாபி₄: ஸ்தப₃கை: ஸ்தவைரபி புநர்மாலாக்ருதா மாநிதோ
ப₄க்திம் தேந வ்ருதாம் தி₃தே₃ஶித₂ பராம் லக்ஷ்மீம் ச லக்ஷ்மீபதே || 4||
4. அப்போது, ஒரு துணி நெய்பவன் உமக்குப் பொருத்தமான ஆடைகளைக் கொண்டு வந்து கொடுத்தான். அவனுக்குத் தங்கள் இருப்பிடமான வைகுண்டத்தை அளித்தீர்கள். ஜீவன்களுடைய புண்ணியத்தை உம்மைத் தவிர வேறு யார் அறிய முடியும்? மாலை கட்டும் ஒருவன், தங்களுக்கு மலர் மாலைகளை அணிவித்துப் போற்றித் துதித்தான். அவனுக்கு அவன் விரும்பிய பக்தியையும், அளவற்ற செல்வத்தையும் அளித்தீர்கள்.
कुब्जामब्जविलोचनां पथिपुनर्दृष्ट्वाऽङ्गरागे तया
दत्ते साधु किलाङ्गरागमददास्तस्या महान्तं हृदि ।
चित्तस्थामृजुतामथ प्रथयितुं गात्रेऽपि तस्या: स्फुटं
गृह्णन् मञ्जु करेण तामुदनयस्तावज्जगत्सुन्दरीम् ॥५॥
குப்₃ஜாமப்₃ஜவிலோசநாம் பதி₂புநர்த்₃ருஷ்ட்வா(அ)ங்க₃ராகே₃ தயா
த₃த்தே ஸாது₄ கிலாங்க₃ராக₃மத₃தா₃ஸ்தஸ்யா மஹாந்தம் ஹ்ருதி₃ |
சித்தஸ்தா₂ம்ருஜுதாமத₂ ப்ரத₂யிதும் கா₃த்ரே(அ)பி தஸ்யா: ஸ்பு₂டம்
க்₃ருஹ்ணந் மஞ்ஜு கரேண தாமுத₃நயஸ்தாவஜ்ஜக₃த்ஸுந்த₃ரீம் || 5||
5. வழியில், அழகான கண்களை உடையவளும், முதுகில் கூன் உடையவளுமான ஒரு பெண்ணைக் கண்டீர்கள். அவள் தங்களுக்கு சிறந்த சந்தனத்தைப் பூசினாள். அவளிடம் அன்பு கொண்டு, அவள் உள்ளத்தில் உள்ள நேர்மையை அவள் உடலிலும் வெளிக்காட்டும் வண்ணம், அவளைக் கையினால் மெதுவாகப் பிடித்து அவள் கூனை நிமிர்த்தினீர்கள். உலகிலேயே அழகானவளாக அவளை ஆக்கினீர்கள்.
तावन्निश्चितवैभवास्तव विभो नात्यन्तपापा जना
यत्किञ्चिद्ददते स्म शक्त्यनुगुणं ताम्बूलमाल्यादिकम् ।
गृह्णान: कुसुमादि किञ्चन तदा मार्गे निबद्धाञ्जलि-
र्नातिष्ठं बत हा यतोऽद्य विपुलामार्तिं व्रजामि प्रभो ॥६॥
தாவந்நிஶ்சிதவைப₄வாஸ்தவ விபோ₄ நாத்யந்தபாபா ஜநா
யத்கிஞ்சித்₃த₃த₃தே ஸ்ம ஶக்த்யநுகு₃ணம் தாம்பூ₃லமால்யாதி₃கம் |
க்₃ருஹ்ணாந: குஸுமாதி₃ கிஞ்சந ததா₃ மார்கே₃ நிப₃த்₃தா₄ஞ்ஜலி-
ர்நாதிஷ்ட₂ம் ப₃த ஹா யதோ(அ)த்₃ய விபுலாமார்திம் வ்ரஜாமி ப்ரபோ₄ || 6||
6. பரிசுத்தமான, பாபமற்ற அந்நகர மக்கள், தாங்கள் வரும் வழியில் நின்றுகொண்டு, பூமாலை, தாம்பூலம் முதலிய தமது சக்திக்குத் தகுந்த ஏதாவது ஒரு பொருளைத் தங்களிடம் கொடுத்தார்கள். அந்த வழியில் கைகூப்பிக் கொண்டு, பூ முதலிய எதையாவது எடுத்துக் கொண்டு நிற்கும் பாக்யம், பாவியான எனக்குக் கிடைக்கவில்லையே. கஷ்டம். அதனால்தான் இப்பிறவியில் துன்பத்தை அனுபவிக்கிறேன்.
एष्यामीति विमुक्तयाऽपि भगवन्नालेपदात्र्या तया
दूरात् कातरया निरीक्षितगतिस्त्वं प्राविशो गोपुरम् ।
आघोषानुमितत्वदागममहाहर्षोल्ललद्देवकी-
वक्षोजप्रगलत्पयोरसमिषात्त्वत्कीर्तिरन्तर्गता ॥७॥
ஏஷ்யாமீதி விமுக்தயா(அ)பி ப₄க₃வந்நாலேபதா₃த்ர்யா தயா
தூ₃ராத் காதரயா நிரீக்ஷிதக₃திஸ்த்வம் ப்ராவிஶோ கோ₃புரம் |
ஆகோ₄ஷாநுமிதத்வதா₃க₃மமஹாஹர்ஷோல்லலத்₃தே₃வகீ-
வக்ஷோஜப்ரக₃லத்பயோரஸமிஷாத்த்வத்கீர்திரந்தர்க₃தா || 7||
7. தங்களுக்கு சந்தனம் பூசிய கூனியிடம், பிறகு வருகிறேன் என்று கூறிவிட்டு, கோட்டைவாயிலில் நுழைந்தீர்கள். அவளும் நீங்கள் செல்வதை வெகுதூரத்திலிருந்து பார்த்துக் கொண்டிருந்தாள். மக்களின் ஆரவாரத்தினால் தங்கள் வருகையை அறிந்த உமது தாயார் தேவகி, மிகுந்த குதூகலம் அடைந்தாள். அவளது ஸ்தனங்களிலிருந்து பால் சுரந்தது. அது, கீர்த்தியுடைய தங்களது மதுரா நகர வருகையைப் போல் இருந்தது.
आविष्टो नगरीं महोत्सववतीं कोदण्डशालां व्रजन्
माधुर्येण नु तेजसा नु पुरुषैर्दूरेण दत्तान्तर: ।
स्रग्भिर्भूषितमर्चितं वरधनुर्मा मेति वादात् पुर:
प्रागृह्णा: समरोपय: किल समाक्राक्षीरभाङ्क्षीरपि ॥८॥
ஆவிஷ்டோ நக₃ரீம் மஹோத்ஸவவதீம் கோத₃ண்ட₃ஶாலாம் வ்ரஜந்
மாது₄ர்யேண நு தேஜஸா நு புருஷைர்தூ₃ரேண த₃த்தாந்தர: |
ஸ்ரக்₃பி₄ர்பூ₄ஷிதமர்சிதம் வரத₄நுர்மா மேதி வாதா₃த் புர:
ப்ராக்₃ருஹ்ணா: ஸமரோபய: கில ஸமாக்ராக்ஷீரபா₄ங்க்ஷீரபி || 8||
8. தாங்கள் நகருக்குள் பிரவேசித்தபோது காவலர்களும், மக்களும் தங்களுடைய அழகைக் கண்டு மயங்கி, தங்களுக்கு வழி விட்டார்கள். மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு, பூஜைகள் செய்யப்பட்டு வைக்கப்பட்டிருந்த அந்த வில் வைத்திருந்த அறைக்குள் பிரவேசித்தீர்கள். அவர்கள் வேண்டாம் என்று சொல்லித் தடுக்க நினைக்கும் முன் அந்த வில்லை எடுத்து நாணேற்றி முறித்தீர்கள்.
श्व: कंसक्षपणोत्सवस्य पुरत: प्रारम्भतूर्योपम-
श्चापध्वंसमहाध्वनिस्तव विभो देवानरोमाञ्चयत् ।
कंसस्यापि च वेपथुस्तदुदित: कोदण्डखण्डद्वयी-
चण्डाभ्याहतरक्षिपूरुषरवैरुत्कूलितोऽभूत् त्वया ॥९॥
ஶ்வ: கம்ஸக்ஷபணோத்ஸவஸ்ய புரத: ப்ராரம்ப₄தூர்யோபம-
ஶ்சாபத்₄வம்ஸமஹாத்₄வநிஸ்தவ விபோ₄ தே₃வாநரோமாஞ்சயத் |
கம்ஸஸ்யாபி ச வேபது₂ஸ்தது₃தி₃த: கோத₃ண்ட₃க₂ண்ட₃த்₃வயீ-
சண்டா₃ப்₄யாஹதரக்ஷிபூருஷரவைருத்கூலிதோ(அ)பூ₄த் த்வயா || 9||
9. கம்ஸ வதத்திற்கு முன் வாசிக்கப்படும் மங்கள வாத்தியம் போல், வில் முறிந்த பெரிய ஒலியைக் கேட்டு தேவர்கள் மெய்சிலிர்த்தனர். அந்த ஓசையைக் கேட்ட கம்ஸனுக்கும் நடுக்கம் ஏற்பட்டது. முறிந்த வில்லினால் அடிபட்ட காவலர்களின் கூக்குரல் கம்ஸனுடைய பயத்தை அதிகரித்தது.
शिष्टैर्दुष्टजनैश्च दृष्टमहिमा प्रीत्या च भीत्या तत:
सम्पश्यन् पुरसम्पदं प्रविचरन् सायं गतो वाटिकाम् ।
श्रीदाम्ना सह राधिकाविरहजं खेदं वदन् प्रस्वप-
न्नानन्दन्नवतारकार्यघटनाद्वातेश संरक्ष माम् ॥१०॥
ஶிஷ்டைர்து₃ஷ்டஜநைஶ்ச த்₃ருஷ்டமஹிமா ப்ரீத்யா ச பீ₄த்யா தத:
ஸம்பஶ்யந் புரஸம்பத₃ம் ப்ரவிசரந் ஸாயம் க₃தோ வாடிகாம் |
ஶ்ரீதா₃ம்நா ஸஹ ராதி₄காவிரஹஜம் கே₂த₃ம் வத₃ந் ப்ரஸ்வப-
ந்நாநந்த₃ந்நவதாரகார்யக₄டநாத்₃வாதேஶ ஸம்ரக்ஷ மாம் || 10||
10. சிஷ்டர்களைப் பரிபாலனம் செய்தும், துஷ்டர்களை நிக்ரஹம் செய்தும் உமது மகிமைகளை உணர்த்தும் பகவானே! நகரத்தின் அழகைப் பார்த்துக் கொண்டே மாலையில், பூந்தோட்டத்தில் உள்ள கூடாரத்தை அடைந்தீர்கள். தங்கள் நெருங்கிய நண்பரான ஸ்ரீதாமாவிடம், ராதையின் பிரிவால் ஏற்பட்ட துயரத்தைக் கூறிக் கொண்டு, அவதார நோக்கம் நிறைவேறும் நேரம் வந்துவிட்டதை அறிந்து ஆனந்தம் கொண்டு அங்கு தங்கினீர்கள். குருவாயூரப்பனே! என்னைக் காத்து அருள வேண்டும்.
No comments:
Post a Comment